Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை கோரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதே பகுதியில் 100 மெகாவாட் காற்றாலை திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை அடுத்து மேற்படி ஒப்பந்தம் கோரப்படவுள்ளது.

புதிய காற்றாலை 50 மெகாவாட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

download-5.jpg

காற்றாலை தவிர, மொத்தம் 165 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான டெண்டர்களையும் அமைச்சு கோரியுள்ளது. நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. டெண்டர்களைப் பாதுகாக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்களால் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.

https://thinakkural.lk/article/292678

  • கருத்துக்கள உறவுகள்

காற்றாலைகள் மன்னர் ஊடாக பூநகரி மற்றும் அம்பந்தோடடை பிரதேசங்களில் அமைப்பதட்கான சூழ்நிலைகள் காணப்படுகின்றன. அரசாங்கம் சுற்று சூழல்களை கவனத்தில் கொண்டு அமைப்பதில் எவருக்குமே பிரச்சினை இருக்காது.

இருந்தாலும் மின்சார கடடனம் குறையுமா என்பதுதான் பிரச்சினை. இங்கும்கூட தனி நபர் (முதலீடு செய்பவர்) தான் விலையை தீர்மானிக்க போகின்றார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் தீவில் அரசு காற்றாலைத் திட்டத்தை கைவிடாதபோதும் தொடர்ந்து நாம் போராடுவோம் - மன்னார் ஆயர்

Published By: VISHNU   27 FEB, 2024 | 08:03 PM

image

தமிழர் தாயகத்தில் இன்று எற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றது. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்தால் ஏற்படும் ஆபத்தை தெரிவித்தும் அரசு கவனிக்காது வருகின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லய்னல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வருடந்தோறும் மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட இறை மக்களுக்கு தவக்காலத்தில்  விடுக்கும் செய்தியில் தெரிவித்திருப்பதாவது

திருச்சபையின் திருவழிப்பாட்டு ஆண்டில் மீண்டும் ஒரு தவக்காலத்தில் கத்தோலிக்க மக்களாகிய நாம் காலடி பதித்துள்ளோம்.

இத்தவக்காலம் அருளின் காலமாகவும் , மனமாற்றத்தின் காலமாகவும் . ஊனியல்புக்குரிய பழைய பாவ இயல்புகளை களைந்துவிட்டு செபம் , தவம் . தானதருமம் வழியாக இறைவனோடும் தன்னோடும் அயல்வர்களோடும் ஒப்புரவாக வேண்டிய காலமாக  இந்த தவக்காலம் அமைந்துள்ளது.

இன்றைய நாட்டின் அரசியல் தொடர்பாக ஆயர் அவர்கள் இம்மடலில் தெரிவிக்கையில் தமிழர் தாயகத்தில் இன்று எற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன.

தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையே தொடர்ந்தும் இழுபறி நிலையே தொடர்கின்றது. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றது.

இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியில் உள்ளவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு காய்நகர்த்தல்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகவே இந்நிலையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவும் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவும் தொடர்ந்து நாம் செபிப்போம்.

மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்போக நெல் அறுவடை நடைபெறும் இக்காலத்தில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாத சூழ்நிலையில் விவசாயிகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர்.

வறுமைக் கோட்டுக்குக்குகீழ் வாழும் குடும்பங்கள் நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் பாவனையின் தாக்கத்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது.

மன்னார் தீவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள 250 மெகாவாட் காற்றாலை சக்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முனைப்போடு செயல்படுகின்றது.

இத்திட்டத்தால் மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் குறித்து எம்மாலும் பொது அமைப்புக்களாலும் பல சந்தர்ப்பங்களில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

ஆயினும் அரசாங்கம் இத்திட்டத்தை கைவிடுவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் தொடர்ந்தும் நாம் நமது எதிர்ப்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவோமாக என இவ்வாறு மன்னார் மாவட்ட இறை மக்களுக்கு மன்னார் ஆயர் தனது தவக்கால மடலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177453

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

மன்னார் தீவில் அரசு காற்றாலைத் திட்டத்தை கைவிடாதபோதும் தொடர்ந்து நாம் போராடுவோம் - மன்னார் ஆயர்

Published By: VISHNU   27 FEB, 2024 | 08:03 PM

 

தமிழர் தாயகத்தில் இன்று எற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றது. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்தால் ஏற்படும் ஆபத்தை தெரிவித்தும் அரசு கவனிக்காது வருகின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லய்னல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

உட்கட்சி முரண்பாடுகள் இருக்கட்டும். செல்வம்  MP இட்கும் அந்த  கட்சிக்கும் சம்பந்தம் இல்லைதானே. உங்களிடம் ஆசீர்வாதம் பெறுவதட்கு வருகிறார்த்தனே. அவரிடம் மன்னர் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதட்கு என்ன நடவடிக்கை எடுத்தீர் என்று கேட்கலாம் அல்லவா?

மற்றைய உறுப்பினர் மன்னர் மாவட்த்தை சேர்ந்திராதபடியால் அதிக கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே ஒரு எச்சரிக்கையை செல்வத்துக்கு நீங்கள் விட வேண்டும். இல்லாவிட்ட்தால் மக்களிடம் கூறி அடுத்த முறை அவரை அகற்றி விட வேண்டும். இல்லாவிடடாள் இது தொடர் கதைதான். 

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் மக்கள் நலன் கருதி செய்யும் எந்த திட்டத்தையும் மதகுருமார்,மக்கள் பிரதிநிதிகள் போன்றோர்களின் சொல்லை கேட்டு நிறுத்த கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, putthan said:

அரசாங்கம் மக்கள் நலன் கருதி செய்யும் எந்த திட்டத்தையும் மதகுருமார்,மக்கள் பிரதிநிதிகள் போன்றோர்களின் சொல்லை கேட்டு நிறுத்த கூடாது 

நிச்சயமாக. மக்கள் நலன் என்று வரும்பொழுது அதனை ஆதரிக்க வேண்டும். மதகுருமார் என்ன எவருக்கும் அஞ்ச தேவை இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2024 at 10:53, ஏராளன் said:

இத்திட்டத்தால் மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் குறித்து எம்மாலும் பொது அமைப்புக்களாலும் பல சந்தர்ப்பங்களில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

என்ன பாதிப்புக்கள் ஏற்படப்போகிறது?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/2/2024 at 07:31, nunavilan said:

என்ன பாதிப்புக்கள் ஏற்படப்போகிறது?? 

மன்னார் காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழல், பொருளாதார சமநிலைக்கு பாரிய பாதிப்பு - இலங்கை வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை!

01 MAR, 2024 | 04:20 PM
image

(சரண்யா பிரதாப்)

அதானி கிரீன் எனர்ஜி ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட 205 மெகாவாட் மன்னார் காற்றாலை திட்டம், சுற்றுச்சூழல், பொருளாதார சமநிலை ஆகியவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படும் என இலங்கை வன விலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (‍பெப். 27) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தினால் மன்னார் மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற நேரடி, மறைமுக பாதிப்புகள் குறித்து அக்கறை செலுத்தப்படவில்லை எனவும் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் ஆண்டுதோறும் 250 இனங்களைச் சேர்ந்த சுமார் 15 மில்லியன் இடம்பெயரும் பறவைகள் விரும்பும் முக்கிய  இடமாக, மத்திய ஆசியா (பறவைகள்) பறக்கும் பாதையின் (CAF) தெற்கு பகுதியிலுள்ள இலங்கை விளங்குகிறது.

குறிப்பாக, மன்னார், 150 இனங்களை உள்ளடக்கிய சுமார் ஒரு மில்லியன் பறவைகளுக்கு ஒரு முக்கியமான குளிர்கால நிலமாக காணப்படுகிறது. மேலும், இப்பகுதி 26 வகையான அச்சுறுத்தலுக்கு உள்ளான பறவைகளுக்கு இனப்பெருக்க வாழ்விடங்களை வழங்குகிறது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் CAF srilanka Waterbird Tracking Projectஇன் அறிவியல் சான்றுகளின்படி, புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு முக்கியமான நுழைவு மற்றும் வெளியேறும் இடமாகவும் மன்னார் விளங்குகிறது.

131.JPG

மன்னாரின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்துவமிக்க பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (அடம்ஸ் பாலம் தேசிய பூங்கா, வங்காலை சரணாலயம் (ஒரு ரம்சா ஈரநிலம்) மற்றும் விடத்தல் தீவு இயற்கை காப்பகம்) மற்றும் இடம்பெயரும் உயிரினங்களின் மாநாடு (CMS) உயிரியல் பன்முகத்தன்மை மாநாடு மற்றும் ரம்சா மாநாடு (CBD) போன்ற சர்வதேச மாநாடுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட 250 மெகாவாட் மன்னார் காற்றாலை மின் திட்டம் (கட்டம்) சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சமநிலை ஆகிய இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது. இது யாலா தேசிய பூங்கா, சிங்கராஜா உயிர்க்கோளக் காப்பகம் மற்றும்  ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா போன்ற மன்னாரின் எல்லைகளுக்கு அப்பாலும் பாதிக்கப்படும்.

பசுமை ஆற்றல் எதிர்காலத்துக்கு முக்கியமானது. பசுமை ஆற்றல் திட்டங்களின் அபிவிருத்திக்கு இலங்கைக்கு சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார இழப்புகளைத் தணிக்க மூலோபாய சூழலியல் மதிப்பீடுகள் (SEA) தேவை. avistep போன்ற கருவிகளை பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை பாதுகாக்கும் அதேவேளை ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.

296.jpg

இது தொடர்பில் வழக்கறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகத் குணவர்தன கூறுகையில்,

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கீழ் சுற்றாடலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அபிவிருத்தி தொடர்பில் மதிப்பீடு செய்ய மூன்று சட்டங்கள் உள்ளன.

அவை, தேசிய சுற்றாடல் சட்டம், கரையோர பாதுகாப்பு சட்டம், தாவர மற்றும் விலங்கியல் (திருத்தச்) சட்டம் ஆகியவையாகும்.

மன்னார் காற்றாலை திட்டம் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வருகிறது. எனவே, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியை இந்த திட்டம் பெறவேண்டும்.

கடந்த காலம் போல் அல்லாமல் சுற்றாடல் அதிகார சபை சுற்றுச்சூழலை மதிப்பிடும் நிறுவனம் கண்டிப்புடன் செயற்படுகிறது.

இந்த அறிக்கையை மத்திய சுற்றாடல் அதிகார சபை மதிப்பீடு செய்யவுள்ளது.

இதற்கு எழுத்து மூலம், வாய்மூலம் கருத்துக்களை சமர்பிக்க முடியும். அக்கறையுள்ள பொதுமக்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து குறித்து கருத்து தெரிவிக்கலாம். அது மார்ச் 6ஆம் திகதி வரை பொதுக்கருத்துக்கு திறந்திருக்கும். கருத்துக்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் நாயகத்திற்கு CEA dg@cea.lk என்ற மின் அஞ்சலுக்கு அனுப்ப முடியும் என்றார்.

மன்னார் காற்றாலை திட்டத்தின்  சில முக்கிய குறைப்பாடுகள்

* இலங்கை சட்டங்களை மீறி முழுமையடையாத குறிப்பு விதிமுறைகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது.

* வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் நிபுணத்துவம் வாய்ந்த முக்கிய பங்குதாரர்களின்  ஆலோசனை மற்றும் மேற்பார்வை இல்லாமை.

* பறவைகள் தொடர்பான ஆய்வு முறை (Avifaunal) போன்றவற்றில் சிக்கல்கள்.

பறவை கண்காணிப்புகளின் நேரம் மற்றும் பருவம் போதுமானதாக இல்லை. முக்கியமாக இடம்பெயர்ந்த காலங்களை கவனிக்கவில்லை.

* மோதல் இடர் மதிப்பீட்டு முறைமை வலுவானதாக இல்லை.

*காலாவதியான முறைகள் மற்றும் மன்னாருக்கு கிடைக்கக்கூடிய மேம்பட்ட கண்காணிப்புத் தரவுகளின் பயன்பாடு இல்லாமை.

*பறவைகளின் நடமாட்டம் பற்றிய சர்வதேச மரபுகள் மற்றும் அறிவியல் இலக்கியங்களின் அலட்சியம்

*மன்னார் மக்களின் நேரடி மற்றும் மறைமுக பாதிப்புக்கள் குறித்து போதிய கவனம் செலுத்தாமை.

*வெள்ளப் பாதிப்புகள் மற்றும் தணிப்பு பற்றி போதியளவு கருத்தில் கொள்ளப்படவில்லை.

* திட்ட இருப்பிடத் தளங்கள் ஒன்றுடன் ஒன்று சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் இணைப்பைத் தடுக்கின்றன.

*குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சிகள் தொடர்பாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்துடன்  ஆலோசனைகளை நடத்த தவறியது.

*குறைந்த சூழலியல் தாக்கம் கொண்ட மாற்றுத் தளங்களின் போதிய அங்கீகாரம் இல்லாமை. போன்றவை காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் சம்பத் எஸ்.செனவிரத்ன தெரிவிக்கையில்,

மத்திய ஆசியா வழியாக இலங்கைக்கு பில்லியன் கணக்கான பறவைகள் ஒவ்வொரு வருடமும் வருகை தருகின்றன.

உலகிலுள்ள  பறவைகள் இடம்பெயரும் 8 பாதையூடாக, ஒவ்வொரு வருடமும் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் பில்லியன் கணக்கான பறவைகள் இடம்பெயர்கின்றன.

இவ்வாறு தெற்கிற்கு இடம்பெயரும் பறவைகள் 6 மாதங்கள் தங்கிவிட்டு வடக்கிற்கு செல்லும். இவ்வாறு பறவைகள் இடம்பெயரும் பாதைகளில் இலங்கையும் ஒன்றாகும்.

தலைமன்னார், பேசாலை, வங்காலை, உடுமலை, விடத்தல் தீவு, மன்னார் நகர் ஆகிய பகுதிகளுக்கு பறவைகள் வருகை தருகின்றன.

இவை அனைத்தும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையால் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான ஈரநிலங்கள் ஆகும்.

இவ்வாறு இடம்பெயரும் பறவைகள் 22,000 அடி உயரம் வரை பறக்கும். இப்பறவைகள் ஒவ்வொரு வருடமும் 25,000 கிலோ மீற்றர் வரை தனது பயணத்தை மேற்கொள்கின்றன என்றார்.bird-3.jpg

மத்திய ஆசியா (பறவைகள்) பறக்கும் பாதையில் (CAF) தெற்குப் பகுதியான 30 நாடுகளில் இருந்து 250 இனங்களைச் சேர்ந்த 15 மில்லியன்  பறவைகள் இடம்பெயர்ந்து இலங்கைக்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றன.

இவற்றில், 150 இனங்களைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த பறவைகள் மன்னாரிக்கு வருகை தருகின்றன, இது ஒரு முக்கியமான குளிர்கால நிலமாக செயல்படுகிறது, மேலும் 26 இனங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது.

மன்னார் வழித்தடத்தில் வரவிருக்கும் உத்தேச 50 காற்று விசையாழி மின் திட்டத்தால் அந்த பறவைகள் அனைத்தும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும். உத்தேச 250 மெகாவாட் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சமநிலைக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தும்

உயிர் பல்வகைமை விஞ்ஞானி மற்றும் பொதுக் கொள்கை வழக்கறிஞர் கலாநிதி ரொஹான் பெத்தியகொடை தெரிவிக்கையில்,

மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான முன்மொழிவுகள் மார்ச் 6 ஆம் திகதிக்கு முன்னதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்படும்.

தாம் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் தாக்க மதிப்பீடு (EIA) தொடர்பான முன்மொழிவுகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நிராகரிக்கப்பட்டால், அந்த திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177692

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் காற்றாலை மின் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஆராய நடவடிக்கை – வனஜீவராசிகள் அமைச்சர்

மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரதேவி வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உத்தேச காற்றாலை மின் திட்டம் மன்னாரில் உள்ள பறவைகள் வழித்தடத்தை தடை செய்யக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

காற்றாலை மின் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து எச்சரித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சம்பத் செனவிரத்னவுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

காற்றாலை மின் திட்டம் அமைக்கப்படும் பகுதியில் பறவைகள் வழித்தடம் உள்ளதா என தெரியவில்லை. விடயம் தொடர்பில் பேராசிரியருடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காற்றாலை மின் திட்டம் அமைக்கப்படும் இடத்தை மாற்ற வேண்டும்,.இதன் மூலம் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காப்பாற்றப்படும் என சஜித் பிரேமதாச முன்னர் தெரிவித்திருந்தார்.

https://thinakkural.lk/article/294875

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

காற்றாலை மின் திட்டம் அமைக்கப்படும் இடத்தை மாற்ற வேண்டும்,.இதன் மூலம் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காப்பாற்றப்படும் என சஜித் பிரேமதாச முன்னர் தெரிவித்திருந்தார்.

சக மனிதர்கள் கொல்லப்படும் பொழுது கிறிபத் ....வாழும் உரிமை ,அதிகார பரவலாக்கல் கேட்டா பயங்கரவதிகள் ..என சொல்பவர்கள் இன்று பறவை அழிந்துவிடுமாம் என ஆராச்சி செய்யினம்...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாாில் காற்றாலை மின்சார திட்டம் – கொழும்பில் அதானி நிறுவனத்துடன் பேச்சு

March 16, 2024

9 மன்னாாில் காற்றாலை மின்சார திட்டம் - கொழும்பில் அதானி நிறுவனத்துடன் பேச்சு

 

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனத்துக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம செயல்பாட்டு அதிகாரியுமான அனில் சர்தானா ஆகியோர் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்துள்ளனர்.

மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவாட் காற்றாலை ஆற்றல் மின் உற்பத்தி திட்டத்துக்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக அதானி கிரீன் எனர்ஜியின் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜே சேகர குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் மன்னாரில் 250 மெகாவாட் மின்சாரமும், பூநகரியில் 234 மெகாவாட் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/மன்னாாில்-காற்றாலை-மின்ச/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் பாரிய சூழல் பாதிப்பு - திட்டத்தை இடைநிறுத்தவேண்டும் என்கிறது சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம்

17 MAR, 2024 | 10:24 AM
image

(நா.தனுஜா)

இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் மன்னாரில் முன்னெடுக்கப்படவிருக்கும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் அச்சூழலுக்கும், மக்களுக்கும் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்படும் எனவும், ஆகவே இத்திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் எனவும் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அதானி கிரீன் எனேர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாகர் அதானி மற்றும் அதானி எனேர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான அனில் சர்தானா ஆகியோருடன் மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவோற் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவரது எக்ஸ் தளப்பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் பல்வேறு சூழலியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரும் எனவும், ஆகவே இதனை உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி மன்னார் மாவட்டத்தை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்துடன் இணைந்து கடந்த 5ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் வெனுர பெர்னாண்டோவிடம் கடிதமொன்றைக் கையளித்தனர். 

அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பில் அவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு அளித்தனர்.

சுமார் 43,000 குடும்பங்களைக் கொண்டிருக்கும் மன்னாரில் 250 மெகாவோற் காற்றாலை மின் உற்பத்திக்கென 52 டேர்பைன்களைப் (விசைப்பொறி / விசையாழி) பொருத்துவதால் பறவைகளின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு, அவை வேறு பகுதிகளுக்கு இடம்பெயரல், பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பாதிப்படைதல், பனை மரங்கள் சேதமடைதல், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படல் போன்ற பல்வேறு சூழலியல் மற்றும் அது சார்ந்த சமூக பிரச்சினைகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை பறவைகளின் இடப்பெயர்வு, வெள்ளப்பெருக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்பை அதிகப்படுத்தல், கடற்சூழல் பாதிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக இக்காற்றாலைத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புக்களை சுட்டிக்காட்டியிருக்கும் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம், இத்திட்டத்தின் விளைவுகள் தொடர்பில் முறையான சூழலியல் மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி இத்திட்டமானது உள்நாட்டு வலுசக்தி உற்பத்தி இயலுமையை கேள்விக்குள்ளாக்கும் என சுட்டிக்காட்டியிருக்கும் அந்நிலையம், பிரேரிக்கப்பட்டுள்ள காற்றாலையானது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைவானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே நேர்மறையான விளைவுகளை விட சூழலுக்கும், மன்னார் மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய இந்தத் திட்டத்தை தாம் முழுமையாக எதிர்ப்பதாக சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/178915

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி?

March 18, 2024
 

birds மன்னார் காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி?மன்னாரில் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி என்ற கருத்து நிலவுவதாக இந்தியாவின் பிரபல நாளிதழான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் அதானி கிறீன்ஸ் நிறுவனத்தினால் இலங்கையின் வடபகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளது. கரையோர பகுதிகளிலும் வாழ்வாதாரத்திற்கும் இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சூழலியாளர்களும் உள்ளுர் மக்களும் கரிசனையும் கவலையும் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் வடபகுதியில் காற்றுவளம் அதிகமாக உள்ள இரண்டு பகுதிகளில் 4.2 கோடி டொலரில் இரண்டு காற்றாலை மின்னுற்பத்தி திட்டததை முன்னெடுப்பதற்கு கடந்த வருடம் இலங்கையின் முதலீட்டு சபை அனுமதி வழங்கியிருந்தது.

இலங்கையின் அதிகரிக்கும் எரிசக்தி தேவைகளை எதிர்கொள்வதற்காக 2030ஆண்டுக்குள் இந்த எரிசக்திதேவையின் 70 வீதத்தை மீள்புதுப்பிக்கத்த சக்திவளங்கள் மூலம் பெறுவதற்காக அரசாங்கம் இந்தத் திட்டங்களை முன்னெடுக்கின்றது.

இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு 11.5 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுகின்றது. மீள்புதுப்பித்தக்க சக்திவளங்கள் என்ற விடயத்தில் இலங்கையுடன் நெருங்கிய ஒத்துழைப்பை பேணுவதற்கு இந்தியா இணங்கியுள்ளது. மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளங்கள் தொடர்பான இருநாடுகளிற்கும் இடையிலான செயல்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 11ஆம் திகதி நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை உருவாக்குவதற்காக இந்தியா 11 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதேவேளை, அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தால் பிரதேசத்தின் பல்லுயிர்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கரையோர சூழலுடன் பின்னிப்பிணைந்துள்ள அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சூழலியாளர்களும் பொது மக்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்த பொருளாதார மீட்சி திட்டங்கள் தோல்வியடைந்த நிலையில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கில் பெருமளவு குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

பறவைகள் குறித்த ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்களின் தகவலின் படி மன்னார் மத்திய ஆசியாவின் பறவைகள் பறக்கும் பாதையின் ஒரு முக்கிய பகுதியாகும். உலகின் உள்ள பல நீர்பறவை இனங்களின் முக்கியமான இடம்பெயர் பாதையாக இது காணப்படுகின்றது. இந்த காற்றாலை மின் திட்டம் பறவைகளிற்கு ஒரு மரணப் பொறி என கவலை வெளியிட்டார் கொழும்பு பல்கலைகழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞான பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் சம்பத் செனிவிரட்ன.

 

https://www.ilakku.org/மன்னார்-காற்றாலை-மின்-தி/

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாதிரி தமிழர் பகுதியில் வருவதை தடுப்பதில் நல்ல தீவிரம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் கோட்டாவுடன் இணைந்திருத்த தற்போது சஜித்துடன் சேர்ந்து செயற்படும் ஒருவரே மன்னார் காற்றாலை மின் திட்டத்தை எதிர்க்கின்றார் - காஞ்சன

20 MAR, 2024 | 03:01 PM
image
 

முன்னர் கோட்டாபயவின் வியத்மக குழுவில் இடம்பெற்றிருந்த தற்போது சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்படும் பேராசிரியர் ஒருவரே அதானிகுழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தினை முன்னெடுப்பதை குழப்ப முயல்கின்றார் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வியத்மகவின் முன்னாள் உறுப்பினரான ரொகான்பெத்தியாகொட அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டத்திற்கு  எதிராக வெளிப்படையாக குரல்கொடுத்துள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பெத்தியாகொட தற்போது எதிர்கட்சி தலைவரின் ஆலோசகராக செயற்படுகின்றார் எனவும் காஞ்சனவிஜயசேகர தெரிவித்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின் திட்டத்தினால் சூழலிற்கு பாதிப்பு என தெரிவித்து வரும் சிலரில்  பேராசிரியர் பெத்தியாகொடவும் ஒருவர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179230

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.