Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3    21 FEB, 2024 | 05:17 PM

image

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையின் காரணமாக சூரிய ஒளியில் அதிகமாக இருப்பதை தவிர்க்குமாறும், அடிக்கடி  நீராகாரங்களை எடுத்து கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளதாவது, 

செயற்கை குளிர்பானங்களை பருகுவதை தவிர்த்து, நீர், இளநீர் போன்ற இயற்கை குளிர்பானங்களை பருகுவதன் மூலம் உடலில் நீர்வற்றிப் போகாமல் பாதுகாக்கலாம்.

அதிகம் வெப்பத்தினால் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உடலில் நீர்வற்றும் அபாயத்தில் உள்ளனர்.

எனவே, இவர்கள் அதிக வெப்பம் உள்ள நேரங்களில் முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் உடலில் நீர்வற்றிப் போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.  ஆகையால் 2.5 லீற்றர் தண்ணீரை பருக வேண்டும்.

இதேவேளை, பாடசாலை சிறுவர்கள் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். 

அத்தோடு, சிறுவர்கள் வீட்டிற்குள்  அல்லது நிழலில் விளையாட இடமளிக்க வேண்டும். சிறிய பிள்ளைகள் வெளியில் செல்லும்போது பாதுகாப்பிற்காக தொப்பிகளை அணிய ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176948

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக வெப்பம்; நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய அபாயம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம், மனித உடலில் உணரப்படக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகளவில் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல்மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இவ்வாறு வெப்பநிலை பதிவாகக்கூடும். அதிக வெப்பம் காரணமாக நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்தும் தண்ணீர் அருந்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/294098

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நிலவும் கடும் வெப்பத்தால் மனநலம் பாதிக்கும் அபாயம்!

too-much-hot-300x200.jpg

வெப்பமான காலநிலை காரணமாக மனநலமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நாட்களில் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மனநல கற்கைகள் பிரிவின் தலைவர் சிந்தக சந்திரகுமார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலை மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/294989

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக வெப்பம் : கண் நோய்கள் ஏற்படும் சாத்தியம்!

too-much-hot-1.jpg

அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக கண் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன், விழிப்புலன் இழக்கப்படலாமென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர், கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெப்பம் காரணமாக கண் வறட்சி ஏற்படும் என்பதினால், தேவையான நீராகாரங்களை உட்கொள்வது அவசியம். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

கணினி பாவனை அதிகம் உள்ள நபர்கள் மற்றும் ஏற்கனவே கண் நோய் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்கக் கூடுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இன்று அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வாறு அதிக வெப்பநிலை பதிவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/295082

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

அத்துடன், வெப்பம் காரணமாக கண் வறட்சி ஏற்படும் என்பதினால், தேவையான நீராகாரங்களை உட்கொள்வது அவசியம். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

கோடைகால விடுமுறைக்கு இலங்கை போக திட்டம் போட்டவர்கள் நிறைய யோசிக்க போகினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உஷ்ணத்தின் அளவு தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படும்!

too-much-heat-300x200.jpg

நாட்டின் பல பகுதிகளிலும் உஷ்ணத்தின் அளவு தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் உஷ்ணத்தின் அளவு உயர்வடைந்து காணப்படுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பணியிடங்களில் தொழில்புரிவோர் போதுமான அளவு நீரை அருந்த வேண்டுமெனவும் முடிந்தவரை நிழலான இடங்களில் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வீடுகளிலிருக்கும் வயதானவர்கள் மற்றும் நோயாளர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டுமெனவும் வாகனங்களுக்குள் சிறுவர்களை தனியே விட்டுச்செல்ல வேண்டாமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதிக களைப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மட்டுப்படுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/295262

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான வெப்பம் காரணமாக பிள்ளைகள் பல்வேறு நோய்களுக்கு  உள்ளாகலாம்! - வைத்தியர் சன்ன டி சில்வா 

Published By: VISHNU   12 MAR, 2024 | 06:13 PM

image

நிலவும் வெப்பம் காரணமாக பிள்ளைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகலாம் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா கூறுகிறார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிலைமை அதிகரித்தால் அது வெப்ப அதிர்ச்சி, வெப்ப பக்கவாதம் அல்லது துரதிர்ஷ்டவசமாக மரணத்துக்கு வழிவகுக்கும் என்று நிபுணர் சுட்டிக்காட்டினார்.

எனவே, பிள்ளைகளை வெளிநடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாயின் காலை 11.00 மணிக்கு முன்னதாகவே அவர்களது நடவடிக்கையை முடிக்க வேண்டும்.

பாடசாலைகளில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதனால், பிள்ளைகள்  அதிகமாக வெளியில் உள்ளனர்.  இவ்வாறான  நிலையில்  சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரிப்பதால்  அவர்களுக்கு  சோர்வு அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178557

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.