Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை

Pathivu Toolbar ©2005thamizmanam.com

உலக நாடுகளில் நடைபெறும் தீவிரவாதத்தை நிர்ணயிக்கும் ஏகபோக உரிமையை யாரும் கொடுக்காமலேயே அமெரிக்கா அடாவடியாக எடுத்துக் கொண்டுள்ளது. சர்வ வல்லமை கொண்ட ஒருநாடு தீவிரவாதத்திற்கு எதிராக தலை தாங்கினால் என்ன தவறு? என அப்பாவியாகக் கேட்பவர்கள் கவனிக்க:

அமெரிக்கா, பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த 1945 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 216 தடவை வெளிநாட்டு விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 1945 முதல் தன்னுடைய சுயநலத்திற்காக இருபதுக்கும் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்துள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பிரச்னைகளில் 100க்கு மேல் தலையிட்டு, தன்னுடைய அதிகாரத் திணிப்பை அங்கு நடத்தியுள்ளது.

செப்டம்பர் 2000ல் இஸ்ரேலிய இராணுவம் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை பாலஸ்தீனர்கள் மீது நடத்தியது. இதில் 600 பேர் கொல்லப்பட்டனர். 15000 பேர் பெண்கள், குழந்தைகள் என காயம்பட்டனர். இதில் 1000 பேர் கடுமையான காயமடைந்ததுடன், மிக நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய அளவு ஊணமாக்கப்பட்டனர்.

பாலஸ்தீனர்களின் கிராமங்களைச் சுற்றி வளைத்து, இஸ்ரேல் இராணுவம் இந்த அக்கிரமத்தைப் புரிந்தது. சிகிச்சை பெறுதவற்குக் கூட யாரையும் அது வெளியே விட அனுமதிக்கவில்லை.

இவையெல்லாம் பாலஸ்தீனத்தில் அகதிகளாக வந்தேரியக் கூட்டம், மண்ணின் மைந்தர்கள் மீது நடத்தியவை. இது போன்ற எண்ணற்ற அடக்குமுறைகளை இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியுடன் செய்துள்ளது. உலக நாடுகளால் இஸ்ரேலுக்கு எதிராக் கொண்டு வரப்பட்ட ஐ.நா.தீர்மானங்களில் பலவற்றை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா தடுத்துள்ளதோடு இஸ்ரேலிய அராஜகங்களை ஆதரித்தும் உள்ளது என்றால் அமெரிக்காவின் செல்லப்/கள்ளப்பிள்ளைதான் இஸ்ரேல் என்றால் மிகையில்லை.

பாலஸ்தீன மக்கள் தயாகமொன்று இன்றி தவித்தவர்கள் அல்லர். அடுத்தவரின் சொத்தை அபகரித்து தன் சொர்க்கபுரியை அமைத்துக் கொள்ள போராடியவர்களும் அல்லர். அவர்களுக்குத் தொன்மை மிக்க வரலாறொன்று இருக்கின்றது. அந்த வரலாறு பலருக்கு தெரியாததால் யூத சியோனிஸவாதிகள் பலஸ்தீனை தனதாக்கிக் கொள்ள பின்கதவு ஊடாக பிரவேசித்து அக்கிரமம் புரிந்து வருகின்றனர்.

பாலஸ்தீன மண்ணில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸின் பெருமைகள் மற்றும் அதன் புனிதத் தன்மை பற்றி திருமறைக் குர்ஆனிலும், இன்னும் ஏராளமான நபிமொழிகளிலும் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளன. அறிஞர் பெருமக்களான இப்னு கதீர், அல் குர்தூபி, இப்னு ஜவ்ஸிய்யா மற்றும் பலர் "சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்" என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கும் பொழுது, ஷாம் என்றழைக்கப்படக் கூடிய இன்றைய சிரியாவும் பாலஸ்தீனப் பூமியுடன் உள்ளடங்கும் என்றும், அதுவும் அருள் செய்யப்பட்ட பூமி என்றும் விளக்கமளிக்கின்றார்கள்.

இந்த பூமியானது ஆன்மீகம், உலகாதாயம் மற்றும் அருட்கொடைகள் என்று அனைத்து வித அருட்கொடைகளையும் கொண்ட தளமாக, இறைவனால் அருட்செய்யப்பட்ட பூமியாகத் திகழ்கின்றது. இந்த அருட்கொடைகளானது பாலஸ்தீனர்களுக்கு மட்டும் உரித்தானதன்று, மாறாக பாலஸ்தீனர்கள், அரபுக்கள், முஸ்லிம்கள் என்று இந்த முழு உலக மனித வர்க்கத்திற்குமே அது அருட்கொடையாக விளங்குகின்றது என்பதை திருமறைக் குர்ஆன் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றது.

மேற்கு ஆசியாவிற்கும், ஆப்ரிக்காவிற்கும் இடைப்பட்ட மேற்கு வாசலாக இருப்பதோடு, இன்னும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கும் இது வாசலாக அமைவதோடு, நைல் நதிப் பரப்பிலிருந்து யூப்ரடிஸ் நதி வரைக்கும் இது பரவி இருப்பதன் மூலம், இயற்கை வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதோடு, உலகின் பல பாகங்களில் வாழும் மக்கள் இந்த வளமான பூமியில் வந்து தங்கி வாழ விரும்புவதன் காரணமாக, உலகின் பன்முகச் சமுதாயத்தை இந்தப் பூமி தன்னுள் தோற்றுவித்துள்ளதன் காரணமாக, இந்தப் பூமிக்கு "Fertile Crescent" என்றழைக்கப்படுவதும் உண்டு. இதுவே உலகில் தோன்றிய ஏராளமான இறைத்தூதர்கள் இங்கு தோன்றியிருப்பதும், அவர்கள் இறைவனது தூதுச் செய்தியை இங்கிருந்து பரப்பியதற்குமான சில குறிப்பிட்ட காரணங்களாகச் சொல்ல முடியும்.

பாலஸ்தீன மக்களின் மூதாதையர்கள் யபூஸியர் என அழைக்கப்படுகின்றனர். கி.மு. 4000 ஆண்டளவில் வாழ்ந்த அவர்கள் குத்ஸ் நகரை நிர்மாணித்தவர்களாவர். பலஸ்தீனின் பூர்வீக சொந்தக்காரர்களான அவர்கள் பலஸ்தீனின் பூர்வீக சொந்தக்காரர்களான அவர்கள் உருவாக்கிப் பின்பற்றிய பரம்பரை ஒழுங்கு அவர்களின், பின் சந்ததியினரான பலஸ்தீன் அரபுக்களால் கூட மிகச் சிறப்பாகப் பின்பற்றியதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

அந்த ஒழுங்கை சிதைந்து சின்னாபின்னமாக்கும் வகையில் கி.மு.1300 அளவில் யூதர்கள் (மூஸா நபியின் சமூகம்) முதன் முதலாக பலஸ்தீனுள் பிரவேசிக்கின்றார்கள். சுமார் 200 வருட காலம் பல சர்ச்சைகளில் ஈடுபட்ட அவர்கள் இறுதியில் அங்கு வாழ்வதற்கான வழியை அமைத்துக் கொள்கிறார்கள்.

எனினும் அவர்களது அந்த வாழ்வு வெகுகாலம் நீடிக்கவில்லை. கி.மு.8 ஆம் நூற்றாண்டில் அங்கு பிரவேசித்த அஸீரியப் படைகளும், கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் அங்கு வந்த பாபிலோனிய மன்னான நஸ்ஸரின் படைகளும் முறையே யூதர்களை விரட்டியடித்து விட்டு அரபு மக்களை மீளக் குடியேறச் செய்கின்றன. நஸ்ஸரின் படைகள் ஒரு படி முன்னே சென்று பைத்துல் முகத்தஸை உடைத்து விட்டு. சுலைமான் (அலை) அவர்கள் நிர்மாணித்த ஹைக்கல் சுலைமானி எனும் கோயிலையும் தரைமட்டமாக்கினர்.

பின்னர் ஈரானிய ஆட்சி வியாபித்த போது யூதர்கள் மீண்டும் பலஸ்தீனில் வந்து குடியேறினர். அத்துடன் ஹைக்கல் சுலைமானி எனும் கோயிலையும் நிர்மாணித்தனர்.

ஆனால் அவர்களது துரதிஷ்டம் அந்தப் புதுவாழ்வு சுமார் 300 அல்லது 400 வருடங்களுக்கு மேல் நிலைக்கவில்லை. அதற்குக் காரணமானோர் அவர்களே. அதாவது பலஸ்தீனில் வந்து குடியமர்ந்த யூதர்கள் கி.பி.70 ல் ரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இதன் விளைவாக பைத்துல் முகத்திஸும், சுலைமான் கோயிலும் அழிக்கப்பட்டன. யூதர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மீண்டும் அங்கு வாழ்ந்த அரபியர் மீளமர்த்தப்பட்டனர்.

பின்னர் பலஸ்தீனை ரோமர்களிடமிருந்து கலீபா உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மீட்டெடுக்கப்பட்ட போது ரோம பைஸாந்திய படையினர் ஜெரூஸலத்தின் திறவுகோளை உமர் (ரலி) அவர்களிடம் கையளித்த முறை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் இடையிடையே கிறிஸ்தவ ஊடுருவல்கள் இடம் பெற்றன. சிலுவை யுத்தங்களும் நிகழ்ந்தன. முடிவில் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் பலஸ்தீனை முழமையாக விடுவித்துக் கொண்டார்கள்.

இடைக்காலத்தில் பலரது இடையூறுகளுக்கு மத்தியில் இஸ்லாமிய வட்டத்தை தாண்டாத பலஸ்தீன், துருக்கிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக கடைசி கலீபா சுல்தான் அப்துல் ஹமீத் கான் அவர்களின் ஆட்சியினுள் அமையப் பெற்றிருந்தது.

இதே சம காலத்தில் யூதர்கள் தமக்கென ஒரு நாடு, தலைவன், சமூக அமைப்பு எதுவும் இல்லாமல் உலகெங்கும் சிதறி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கூட அவர்களால் அமைதியாக வாழ முடிந்தது முஸ்லிம்களின் ஆட்சிப் பகுதியில் மாத்திரமே. குறிப்பாக ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி இருந்த 800 வருட காலமம் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

யூதர்கள் மிகவும் புனிதமான சின்னமாக கருதும் அழும் சுவர் (The Wailing Wall) கூட முஸ்லிம்களது நல்லெண்ணம் காரணமாகவே மீண்டும் கிடைத்தது.அழும் சுவர் ஆரம்பத்தில் பாரிய குப்பை கூழங்களால் சிக்குண்டிருந்தது. எவருக்கும் அது பற்றிய அடையாளம் கூட தெரிந்திருக்கவில்லை. கி.பி.16 ம் நூற்றாண்டில் சுல்தான் ஸலீம் உஸ்மான் அவர்களுக்கு தற்செயலாக இச்சுவர் பற்றிய எண்ணம் ஏற்பட்டது. எனவே அவ்விடத்தை சுத்தம் செய்து யூதர்களுக்கு அதனைத் தரிசிப்பதற்கு அனுமதியும் வழங்கினர்.

இப்படி முஸ்லிம்களின் ஆட்சியில் அமைதியாக இருந்த பாலஸ்தீனம் எப்படி இன்றைய வல்லரசுகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி அமைதியற்ற தேசமானது? சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்கள் தீவிரவாதிகளா? என்றும் பார்ப்போம்

http://athusari.blogspot.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.