Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்லரசுகளின் பிடியில் பாலஸ்தீனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசுகளின் பிடியில் பாலஸ்தீனம்

Pathivu Toolbar ©2005thamizmanam.com

உலகமெங்கும் அலைக்கழிக்கப்பட்டு சுற்றித் திரிந்த யூதர்கள், சுமார் 2000 ஆண்டுகள் வரை கிறிஸ்தவரின் கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஜெர்மனியில் 1933 - 1945 காலப் பகுதியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் சுமார் 60 லட்சம் பேர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். இது மட்டுமல்ல, உலகில் சிதறி வாழ்ந்த அவர்களுக்கு எம் நாட்டில் இடமளித்து வாழச் செய்வோம் என எந்த மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. இதற்கு யூதர்களின் இயற்கையான போக்கும் ஒரு காரணமே.

இவர்களது நிலை இப்படி தொடரும் போது கி.பி.1896 ல் தியோடர் ஹெர்ஸ்ல் (Theodor Herzl 1860-1904) என்றொரு நாடக எழுத்தாளர் யூத மக்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்பதை விவரித்து Der Judenstaat (யூத நாடு) என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். கி.பி.1897 ல் முதலில் 6 யூத தனவந்தர்கள் இவரது நூலின் கருத்துக்களை ஆராய்ந்தனர். பின்னர் சுவிட்சர்லாந்தில் 29-31/8/1897 ல் கூடிய யூத அறிஞர்கள் மற்றும் தனவந்தர்கள் 204 பேர் தங்களுக்கு பலஸ்தீனில் ஒரு தாயகம் அமைய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

உலக யூத காங்கிரஸ் (The World Jewish Congress) என அழைத்துக் கொண்ட அவர்கள் இத்திட்டத்தை ஐந்து வருடத்தில் நிறைவேற்றுதவதாக முடிவெடுத்தனர். எப்படியும் 50 வருடங்களை மீறாத இதன் கால எல்லை என்பது அவர்களது திடமான முடிவு.

இதைத் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பணம் வேண்டும். அதற்காக யூதர்களின் தேசிய நிதி (Jewish National Fund) என்றொரு நிதியத்தை ஆரம்பித்தனர். வட்டி வழியின் மூலமும் உடனடிக் காசு கொடுப்பதன் மூலமும் நிலம் வாங்கவென நில வங்கி (Land Bank) ஒன்றை ஆரம்பித்தனர். அதோடு தமக்கென ஹீப்று மொழியிலான தேசிய கீதமொன்றையும் உருவாக்கினர். தமிழில் நம்பிக்கை என்ற கருத்தை தரும் அதன் ஹீப்ரு பெயர் Hatikvah என்பதாகும். இவையனைத்தையும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தியோடர் ஹர்ஸ்ல் என்பவரே ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடாந்து உலக நாடுகளிலிருந்து பலஸ்தீன் நோக்கி யூதர்கள் வரலாயினர். அதன்படி 1917 ல் பலஸ்தீனின் சனத்தொகை முஸ்லிம்கள் 567,000, யூதர்கள் 70,000 மற்றும் கிறிஸ்தவர்கள் 63,000 என்றாயிற்று. அதே வேளை உலக மகா யுத்தம் முடிவுற்று 1917 ல் பலஸ்தீன் பிரிட்டனின் கீழ் அமைந்த நாடாக மாறியதுடன் அவர்களது படையும் அங்கு வந்து குவிந்தது.

அப்பொழுது பிரிட்டனின் வெளிநாட்டுச் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் என்பவர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அது 1917 நவம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பிரகடனத்தை வெளியிட பிரிட்டிஷ் அரசுக்குத் தொடர்ந்து தூண்டுதல் வழங்கவியவர் செயிம் வெய்ஸ்மேன் (1874-1952) என்ற ரஷ்ய யூதராவார். இவர் யூத–சியனிஸ அமைப்பின் 1948-1952 காலப் பிரிவின் தலைவராவார். இஸ்ரேல் உருவான பின ஜெரூஸலம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் கடமையாற்றினார்.

இந்த பெல்ஃபர் பிரகடனத்தின் முக்கிய பகுதி இவ்வாறு பேசுகிறது :

யூதர்களுக்கு பலஸ்தீனில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு மிகவும் பரிவுடன் கவனிக்கிறது. இதனை ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் இங்கிலாந்து மேற்கொள்ளும். அதேவேளை இப்போது அங்கே குடியிருக்கும் யூதர்களல்லாத மக்களுடைய பொதுவான உரிமைகளுக்கோ, மத உரிமைகளுக்கோ பங்கம் வராது பார்த்துக் கொள்ளும்!.

இந்தப் பிரகடனம் பலஸ்தீனில் பிறந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்களை இரண்டாம் தர பிரஜை என்ற நிலைமைக்குத் தள்ளுகிறது. அத்துடன் இன்னும் ஆட்சியோ, நாடோ, சமூக அமைப்போ பெறாத யூதர்கள் முதல் நிலைக்குக் கொண்டு வரப்படுவதை அங்கீகரிக்கிறது.

இதைத் தொடர்ந்து பிரிட்டனின் எல்லா வகையான உதவி ஒத்தாசைகளுடனும், அவர்களது படைபலத்துடனும் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வந்து குடியேறலாயினர். ஆரம்பத்தில் அவர்கள் அமைதி காப்பவர்கள் போல் வந்தாலும், வெகு சீக்கித்தில் அவர்கள் பயங்கரவாதிகளாயினர். அவர்களுள் தோற்றுவிக்கப்பட்ட இரு பயங்கரவாத அமைப்புகளான இர்கம், ஹகானாத் என்பவை முஸ்லிம்களை கொலை செய்வதை தமது இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டன.

1948 ஜனவரி ஆகும் போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான 400க்கும் அதிகமான கிராமங்கள் யூத சியோனிஸவாதிகள் வசமாயின. அவற்றில் வாழ்ந்த முஸ்லிம்களும் பெரும்பாலோர் கொலை செய்யப்பட்டதுடன் எஞ்சியவர்கள் அகதிகளாயினர்.

இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்து வரும் போது மறுபக்கம் யூத நாடு உருவாக்கப்படுவதற்கான அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அரங்கேற்றப்பட்டன.

கி.பி.1922 ல் அமெரிக்கா அதன் இரு சபைகளிலும் யூதர்களுக்கான ஒரு நாடு பலஸ்தீன் மண்ணில் அமைவதற்கு ஆதரவான கூட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றியது. அப்போது அமெரிக்கா பன்னாட்டுச் சபையில் அங்கத்துவ நாடாக இருக்கவில்லை. அந்தநிலையில் அந்த தீர்மானங்களை கி.பி.1924 ல் நடைபெற்ற ஆங்கிலோ அமெரிக்கா மாநாடு ஒன்றில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டது.

1939-5-17 ல் பிரிட்டனின் காலனித்துவ நாடுகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பதிகாரியான மெல்கம் மெக்டொனால்ட் என்பவர் சமர்ப்பித்த வெள்ளையறிக்கை ஒன்றில் இன்னும் 10 ஆண்டுகளுள் தமது நாடு யூதர்களையும் பலஸ்தீன அரபு மக்களையும் கொண்ட சுதந்திர பலஸ்தீன் நாடொன்றை அமைக்கும் ஆவல் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது உண்மையில் பலஸ்தீனைக் கூறு போடும் திட்டமாகும். முழுக்க முழுக்க பலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பலஸ்தீன், வந்தேறு குடிகளான யூதர்களுக்கும் பங்கு வைக்கும் நிலை இதன் மூலம் உருவாகிறது. இவ்வறிக்கை வெளியிடப்பட்ட போது பலஸ்தீனில் குடியேறியிருந்த வெளிநாட்டு யூதர்கள் எண்ணிக்கை 445,000 ஆகும்.

உண்மையில் பலஸ்தீன் துண்டாடப்படுவதில் ஆரம்பம் முதல் இறுதிவரை முழு மூச்சாக யூதர்கள் சார்பாக ஈடுபாடு கொண்ட நாடு பிரிட்டன் என்பதை எவரும் மறுக்க முடியாது. உலகின் பல நாடுகளில் பிரச்சினைகள் பல தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் பிரிட்டனே!

ஐக்கிய நாடுகள் சபை அதன் பொதுச் சபையில் நிறைவேற்றிய எண் 181(II) தீர்மானத்திற்கொப்ப 1947 நவம்பர் 29 ம் நாள் பலஸ்தீன பூமி அதன் பூர்வீகக் குடிகளான பலஸ்தீனருக்கும் (45.53%) நிலம், எங்கோ இருந்து வந்த யூதர்களுக்கும் (56.47% நிலம்) இடையில் பிரித்துக் கொடுக்கப்படுவதை அங்கீகரித்தது. அத்துடன் ஜெரூஸலம் நகர் சர்வதேசமயமாய் அமைய வேண்டும் என்றும் அத்தீர்மானம் கூறிற்று.

இது ஐநா சபையின் அப்பட்டமான துரோகமாகும். அது அதன் அங்கத்துவ நாடுகள் மத்தியில் நியாயமாக நடக்க வேண்டியிருக்க பலஸ்தீன் விவகாரத்தில் படுமோசமாக நடந்து கொண்டுள்ளது. காஷ்மீர், கிழக்கு திமோர் மற்றும் நாடுகளிலும் இஸ்ரேல் உருவான பின் இன்று வரையிலும் ஐ.நா. சபையின் போக்கு நியாயம் தவறிய வழியிலேயே அமைந்துள்ளது. இதனை முஸ்லிம்களின் நம்பிக்கைக்குரிய சபையெனக் கொள்வது விஷப் பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு உயிராபத்து வராது என நினைப்பதற்கு ஒப்பான செயலாகும்.

இவ்வாறு பலஸ்தீனை துண்டாட கபட நாடகங்கள் அரங்கேறி வரும் வேளை, பலஸ்தீனில் நிலைகொண்டு அக்கிரமம் புரிந்து வந்த பிரிட்டிஷ் படைகள் வாபஸ் பெற்றுச் செல்லும் காலம் நெருங்கி வந்தது. அவர்கள் செல்ல வேண்டிய காலம் 1948 ஜனவரி மாதமாகும். எனினும் சிற்சில காரணங்களைக் காட்டி அந்த கால எல்லையை பிற்போட்டு 1948-5-14 ல் செல்வதற்கு ஆயத்தமானது.

அதன்படி அந்தத் தினத்தில் பிரிட்டிஷ் படை வாபஸ் பெறப்பட்டது. அன்று வரை பிரிட்டிஷ் தூதுவராக பலஸ்தீனில் கடமையாற்றிய சர்.அலன் கன்னின்கம் (Sir Alam Canningham) என்பவரும் தன் தாய்நாடு திரும்பினார். அன்றிரவு 10 மணியளவில் யூத தேசிய சபை இரண்டும் இணைந்து இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்கப்பட்டது என்பதை உலகுக்கு அறிவித்தன. அன்று அதன் ஜனாதிபதியாக ஸாயிம் வெய்ஸ்மேன்னும், பிரதமராக டேவிட் பென் குரியனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இப்படி பலஸ்தீன் துண்டாடப்படுவதை அன்று 56 நாடுகளின் நலன்களை கவனிக்கவென உருவாக்கப்பட்ட ஐ.நா. சபை 33 ஆதரவு வாக்குகளுடன் அங்கீகரித்து 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இஸ்ரேல் உருவாகி சில நிமிடங்களில் அதை அங்கீகரித்து ஆசிர்வதித்தார் அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி ட்ரூமென். அடுத்து அதை அங்கீகரித்த நாடு சோவியத் யூனியனாகும். அது 18-5-1948 ல் நடைபெற்றது. அதையடுத்து 25-01-1949 ல் இஸ்ரேலிய தேர்தல் இடம் பெற்று ஓர் அரசு உருவானவுடன், அதே மாதம் 31 ல் அமெரிக்க அரசு அதற்கு முறையான அங்கீகாரம் வழங்கியது.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்கு நெஸ்ஸட் எனப் பெயரிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான சர்வதேச பொருளாதார மற்றும் அமைப்புக்களில் ஐ.நா. சபை, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவ்றின் சிபாரிசுடன் அங்கத்துவம் வழங்கப்பட்டது. அடுத்து 10 ஆண்டுகளுக்குள் 63 நாடுகள் அதற்கு அங்கீகாரம் வழங்கின.

இன்று இஸ்ரேல் உலகின் பலம் வாய்ந்த நாடொன்றாக பரிணமித்துள்ளது. அந்த நிலைக்கு அதைக் கொண்டு வருவதில் அமெரிக்க அரசு அதிக சிரத்தை எடுத்துக் கொண்டது. உள்@ர அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் தனது நிலையான ஆதிக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் பிரதான காரணியாகும்.

...தொடரும் (இன்ஷா அல்லாஹ்

http://athusari.blogspot.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.