Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

diplomatis-750x375.jpg

தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கடக்கமான தொகையினரை அவர் திண்ணை விருந்தினர் விடுதியில் சந்தித்தார்.சந்திப்பு முடிந்து வெளியே வரும் பொழுது சிவாஜிலிங்கம் என்னிடம் கேட்டார்…. “அடுத்த கிழமை இதுதான் கட்டுரையா?” என்று. நான் சொன்னேன் “இல்லை இது பகிரங்கச் சந்திப்பு அல்ல. மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பு. இங்கு நான் ஒரு ரிப்போர்ட்டராக வரவில்லை. ராஜதந்திரிகளுடனான சந்திப்பு மூடிய அறைக்குள் நடக்கின்றது என்றால் அதன் பொருள் எல்லாவற்றையும் வெளியே கதைப்பதற்கு அவர்கள் தயாரில்லை என்பதுதான்” என்று.

ஏற்கனவே விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலத்தில், கனேடியத் தூதுவரோடு நடந்த உரையாடலை ஊடகம் ஒன்றுக்கு வெளிப்படுத்தியதாக ஒரு விமர்சனம் வந்தது. தமிழ் அரசியல்வாதிகளில் சிலர் மூடிய அறைகளுக்குள் தாங்கள் கதைப்பவற்றை வெளியே கூறுகிறார்கள் என்ற ஒரு விமர்சனம் ஒருபகுதி ராஜதந்திரிகள் மத்தியில் உண்டு.

ஒரு சிறிய அரசற்ற இனத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் விடையங்கள் தொடர்பில்,ரிப்போர்ட்டிங் செய்யும்போது அதிகம் நிதானம் வேண்டும். ஊடகத்தின் பார்வையாளர் தொகையை அதிகப்படுத்துவதற்காக;சுடச்சுடச் செய்திகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக;பரபரப்பிற்காக ச்செய்திகளை அறிக்கையிடுவது வேறு.ஒரு தேசத்தைக் கட்டி யெழுப்புவதற்கான செய்தி அறிக்கையிடல் வேறு.

ஒரு கட்சியை அல்லது ஓர் அரசியல்வாதியை அல்லது ஒரு நிதி அனுசரணையாளரை மகிழ்விப்பதற்காக அல்லது பார்வையாளர்களை கவர்வதற்காக செய்தியை அறிக்கையிடுவது வேறு.தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அறிக்கையிடுவது வேறு.

அதிலும் குறிப்பாக இது யுடியூப்பர்கள் காலம். வாசிப்பதற்கான பொறுமை குறைந்து வருகின்றது. கேட்பதற்கான தாகம் அதிகரித்து வரும் ஒர் ஊடகச் சூழல்.யுடியூப்பர்கள் எத்தனை பேர் தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்? தான் பரப்புவது வதந்தியா செய்தியா என்று எத்தனை யுடியூப்பர்களுக்குத் தெரியும்?எத்தனை யுடியூப்பர்கள் தமிழுக்கு வெளியே போய் வாசிக்கின்றார்கள்?எத்தனை யுடியூப்பர்கள் தாங்கள் வெளியிடும் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறார்கள்?இதை இன்னும் கூர்மையாகக் கேட்டால் ஒரு யுடியூப்பருக்கு என்ன தகைமை இருக்க வேண்டும்?ஒரு நல்ல கமராவும் வேகமான இன்டர்நெற்றும் இருந்தால் மட்டும் போதுமா?
தாங்கள் கூறும் விடயத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு எத்தனை யுடியூப்பர்களுக்கு உண்டு? கடந்த சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணம், பழைய பூங்கா வீதியில் காரில் வந்த ஒருவர் போலீசாரோடு முரண்படுகிறார்.அது தொடர்பாக ஒரு யுடியூப்பர் செய்தி வெளியிடுகையில் “காரில் வந்த இந்தியர்,பார்த்து மிரண்ட இலங்கை போலீஸ்” என்று தலைபிடுகிறார்.அக்காணொளி ஆறு லட்சத்து எட்டாயிரம் பேர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.ஆனால் பொலிசாரைக் கேள்வி கேட்கும் நபர் ஒர் இந்தியர் அல்ல. சுயாதீன திருச்சபை ஒன்றின் பாஸ்டர்.ஆயின்,ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் அந்தப் பொய் சென்று சேர்ந்திருக்கின்றதா?

அது ஒரு தகவல் பிழை.ஆனால் மற்றொரு தொகுதி யுடியூப்பர்கள் அரசியல் விமர்சனம் என்று கூறி கற்பனைகளையும் ஊகங்களையும் பரப்புகிறார்கள். தான் கூற வரும் கருத்தைக் குறித்து ஆழமான வாசிப்போ கிரகிப்போ ஆய்வு ஒழுக்கமோ இல்லாத ஒரு யுடியூப் தலைமுறை உருவாகிவிட்டது. அவர்களில் அநேகரிடம் தேசத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பொறுப்புணர்ச்சி கிடையாது.இவ்வாறு விளக்கம் குறைந்த அல்லது பொறுப்பு குறைந்த அல்லது விவகார ஞானம் இல்லாத யுடியூப்பர்களின் காலத்தில் ஒரு தேசமாகத் திரள்வது எப்படி?

அண்மையில் கொழும்புக்கான புதிய இந்தியத் தூதர் யாழ்ப்பாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறு தொகையினரைச் சந்தித்தார்.அதில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழகப் பிரமுகர்கள் கருத்துருவாக்கிகள் போன்றவர்கள் அடங்குவர்.சந்திப்பின் போது அதில் அழைக்கப்பட்டவர்கள் ஐந்துக்கும் குறையாத மேசைகளை சுற்றி அமர்ந்திருந்தார்கள். தூதுவர் ஒவ்வொரு மேசையாகச் சென்று அவர்களோடு உரையாடினார்.அதில் ஒவ்வொரு மேசையிலும் என்ன உரையாடப்பட்டது என்பது அடுத்த மேசையில் இருந்த எல்லாருக்கும் தெரியாது. சந்திப்பு முடிந்ததும் ஊடகங்களுக்கு சில அரசியல்வாதிகள் தெரிவித்த தகவல்களை வைத்து ஊடகங்களும் ஊடகங்களும் யுடியூப்பர்களும் வியாக்கியானங்களை முன் வைத்தார்கள்.

கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் பிரதிநிதிகளை அல்லது குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் தூதரக அதிகாரிகளும் ராஜதந்திரிகளும் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரப்புகளைத்தான் சந்திப்பார்கள்.

இவ்வாறான சந்திப்புகளில் கலந்து கொள்ளும் அரசியல் செயற்பாட்டாளர்கள் அல்லது மதத் தலைவர்கள் அல்லது சிவில் சமூகப் பிரதிநிதிகள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொதுவாக மூன்று விதமான போக்குகளைப் பிரதிபலிப்பார்கள். முதலாவது போக்கு முறையிடுவது.அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை முன் வைப்பது. இரண்டாவது,உதவி கேட்பது. அதாவது தமிழ் மக்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது என்று கூறி உதவி கேட்பது.மூன்றாவது வெளித் தரப்புகள் அரசாங்கத்தோடு நிற்கின்றன அல்லது தமிழ் மக்களுக்குப் பொருத்தமான விதங்களில் உதவவில்லை என்று கூறி வெளிநாடுகளின் மீது விமர்சனங்களை முன் வைப்பது.

இதில் முதல் இரண்டு போக்குகளும்தான் தூக்கலாக இருக்கும். குறிப்பாக அபிவிருத்தி மைய அரசியலை ஏற்றுக் கொள்பவர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றவர்கள் அநேகமாக உதவிகளைக் கேட்பார்கள். என்னென்ன விடயங்களில் குறிப்பிட்ட நாடு தமிழ் மக்களுக்கு உதவலாம் என்று கோரிக்கைகள் அடங்கிய பட்டியலோடும் வருவார்கள். அவர்கள் பெரும்பாலும் உரிமை மைய அரசியலை முன்வைக்கும் குடிமக்கள் சமூகங்கள் தங்களுடைய உரையாடலை திசை திருப்புகிறார்கள் என்று எரிச்சல் அடைவதுண்டு.

இதில் மூன்றாவது வகை அதாவது வெளிநாடுகளை விமர்சிக்கும் தரப்பு மிகவும் குறைவு.குறிப்பிட்ட வெளிநாடு அரசாங்கத்தோடு நிற்கின்றது அல்லது தமிழ் மக்களுக்கு உதவவில்லை போன்ற கருத்துக்களை முன்வைத்து அந்த நாட்டின் மீது விமர்சனங்களை வைப்பவர்கள் அநேகமாகக் குறைவு.ராஜதந்திரம் எனப்படுவது என்கேஜ் பண்ணுவது.ராஜதந்திரிகளுடன் முரண்பட்டால் சில சமயம் அடுத்தமுறை சந்திக்கமாட்டார்கள்.அதாவது தொடர்ந்து என்கேஜ் பண்ண முடியாது.எனினும்,சில அரசியல்வாதிகளும் சில சிவில் சமூகப் பிரதிநிதிகளும் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்திக்கும்பொழுது நாசுக்காகவும் சில சமயங்களில் நேரடியாகவும் அப்படிப்பட்ட விமர்சனங்களை வைப்பதுண்டு.

எனினும் பொதுப் போக்கு முறையிடுவதும் உதவி கேட்பதுந்தான்.அதைத் தொகுத்துச் சொன்னால் தமிழ் மக்கள் மத்தியில் வெளியாருக்காகக் காத்திருப்பவர்கள்தான் அதிகம் என்ற ஓர் உணர்வே வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ஏற்படும்.

இவ்வாறு தீர்வுக்காக அல்லது உதவிகளுக்காக அல்லது மீட்சிக்காக வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியல் போக்கை அரசியல்வாதிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பிரதிபலிக்கும் ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில், அண்மையில் கொழும்பில் நடந்த ஒரு சந்திப்பில்,புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதுவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் சர்ச்சைகளுக்குள்ளாக்கியது.

இந்தியா ஈழத் தமிழர்களைக் கைவிட்டு விட்டது என்ற பொருள்பட செய்திகள் வெளிவந்தன.ஏனெனில் இந்திய தூதுவர் இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகிப்பதில் தங்களுக்குள்ள வரையறைகளை உணர்த்தும் விதத்தில் சந்திப்பின்போது பேசியிருக்கிறார் என்று தெரிகிறது.இந்தியா ஏதோ ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது.அதனால், ஈழத் தமிழர்கள் இந்தியாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று அண்மையில் மனோ கணேசன் மின்னல் நிகழ்ச்சியின்போது தெரிவித்திருந்தார்.

இந்திய தூதர் அப்படிச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை.எந்த ஒரு வெளிநாடும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தங்கத் தட்டில் வைத்துத் தராது. தமிழ் மக்கள் அதற்காகப் போராட வேண்டும். தமிழ் மக்கள் தங்கள் பேரபலத்தை அதிகப்படுத்தும் போது வெளிநாடுகள் தமிழ் மக்களை நோக்கி வரும். ஜேவிபிக்கு பேரபலம் அதிகரித்திருக்கிறது. என்பதனால் தான் இந்தியா ஜேவிபியை புதுடெல்லிக்கு அழைத்தது.

ரணில் விக்கிரமசிங்க, எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைக்கக் கூடியவர்.எனவே அவரைக் கையாள்வதில் உள்ள நெருக்கடிகளை இந்தியா உணர்ந்திருக்கிறது. அதனால் கையாள இலகுவான ஒரு கூட்டை உருவாக்க இந்தியா விரும்பலாம். அவ்வாறு ரணிலுக்கு எதிராக ஏற்படக்கூடிய ஒரு கூட்டுக்குள் எதிர்காலத்தில் இணையக்கூடிய ஜேவிபியை இந்தியா அங்கீகரித்துப் பேச அழைத்திருக்கலாம்.

இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவோ,சீனாவோ எந்த ஒரு பேரரசாக இருந்தாலும், ஏன் சிற்றரசாக இருந்தாலும், அரசியலரங்கில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகளைத்தான் ஆர்வத்தோடு பார்ப்பார்கள். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன.துணிந்து புகுந்து விளையாடும் போது தான் பேரமும் அதிகரிக்கும். எனவே தமிழ் மக்கள் வெளியாருக்காகக் காத்திருப்பதை விடுத்து வெளியார் தங்களை நோக்கி வரக்கூடிய விதத்தில் போராட வேண்டும். காய்களை நகர்த்த வேண்டும். பிராந்திய மற்றும் பூகோள சூழலை வெற்றிகரமாகக் கையாள வேண்டும். தமிழ் மக்களுக்காகக் கொழும்பைப் பகைக்கலாம் என்ற நம்பிக்கையை வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

எந்த ஒரு வெளிநாடும் எந்த ஒரு சிறிய அரசற்ற மக்கள் கூட்டத்திற்கும் தீர்வைத் தங்கத் தட்டில் வைத்துக் கொடுப்பதில்லை. இந்த பூமியிலே போராட்டத்துக்கு உதவினாலும் சரி சமாதானத்துக்கு உதவினாலும் சரி தீர்வுகளுக்காக உழைத்தாலும் சரி எல்லாவற்றிற்கும் பின்னால் அரசியல் உள்நோக்கங்கள் இருக்கும்.ராணுவ பொருளாதார நலன்கள் இருக்கும்.

எனவே தமிழ் மக்கள் தங்களுடைய பேரபலத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். இந்தியா எங்களை கைவிட்டு விட்டது; அமெரிக்கா கைவிட்டு விட்டது; ஐநா கைவிட்டுவிட்டது;சீனா தொடர்பான இந்தியாவின் சந்தேகங்களையும் அச்சங்களையும் அதிகப்படுத்துவதன்மூலம் இந்தியாவை நெருங்கி செல்லலாம்…..என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு காத்திருப்பதற்குப் பதிலாக அரசியல் களத்தில் செயல்படும் ஒரு தரப்பாக தமிழ் மக்கள் தங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். அப்படிக் கட்டியெழுப்பும் போது தங்களைச் சந்திக்க வரும் ராஜ தந்திரிகளிடம் முறைப்பாடுகளையும் வேண்டுகோள்களையும் முன்வைப்பதற்குப் பதிலாக நிபந்தனைகளை முன் வைக்கலாம்; பேரம் பேசலாம்.

https://athavannews.com/2024/1371208

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு பிரசர் ஏறப்போகுது  😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

 

சீனா தொடர்பான இந்தியாவின் சந்தேகங்களையும் அச்சங்களையும் அதிகப்படுத்துவதன்மூலம் இந்தியாவை நெருங்கி செல்லலாம்…..என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு காத்திருப்பதற்குப் பதிலாக அரசியல் களத்தில் செயல்படும் ஒரு தரப்பாக தமிழ் மக்கள் தங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.

https://athavannews.com/2024/1371208

கடந்த வாரம் மின்னல் நிகழ்ச்சியை பார்த்தேன். இந்தியாதான் எமது தெய்வம் என்பதுபோல அடைக்கலநாதன் பேசி கொண்டிருந்தார். இன்னும் சீனாவை காட்டி , இவர்கள் வடக்கு கிழக்கில்  பலமடைந்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்பது போலவும் பேசினார். இவருடைய சொத்துக்கள் எல்லாம் அங்குதான் இருக்கின்றது. இந்த லூசு  கூடடம்தான் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள். இந்த கட்டுரைகளை எல்லாம் அரசியல் வாதிகள் வாசிக்கிறார்களா என்பதும் கேள்விக்குறிதான். வாசிக்க தெரிந்தால்தானே . 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2024 at 19:40, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள் அதற்காகப் போராட வேண்டும். தமிழ் மக்கள் தங்கள் பேரபலத்தை அதிகப்படுத்தும் போது வெளிநாடுகள் தமிழ் மக்களை நோக்கி வரும்

முன்பெல்லாம் நான் நினைப்பதுண்டு,  தமிழர்களாகிய எங்களுக்கு, நாங்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும், எந்தவித பயமுன்றி, எங்களது நிலத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உள்ளது என்று.. ஆனால் நிலமை/எண்ணம் அப்படி இல்லை என்பதைத்தான் இப்பொழுதுதெல்லாம் உணர்கிறேன். 

நாங்கள் இலங்கை பெளத்த நாடு என்பதை பிழையென கூறும் நாங்கள் இந்து/கிறிஸ்தவம் என பிரிந்து போகிறோம்.  ஒரே மதம் என்ற காரணத்திற்காக பிழையானவர்களையும் ஆதரிக்கிறோம். ஊரில் ஏற்கனவே கோயில்கள் இருக்க வீதிக்கொரு கோயிலை கட்டுகிறோம். அதே நேரம் கிளிநொச்சியில் உள்ள பின் தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு ஒரு கட்டிடத்தைக் கட்ட நிறைய யோசிக்கிறோம். 

புலம்பெயர்ந்த தேசங்களில் பல்வேறு சங்கங்கள். தென்னிந்திய நடிகர்களின் நிகழ்ச்சிகளையும், அவர்களது படங்களை விநியோகிக்கும் உரிமையை அனேகமாக செய்வது ஈழத்தமிழர், ஆனால் ஊரில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்க quality சரியில்லை, ticket விற்க முடியாது என பல காரணங்களை அடுக்குவோம். 

ஊரில் சமூக சீர்கேடுகளை(சிறுவர் துஷ்பிரயோகம் தொடக்கம் பல) ஒரு சாதாரன விடயமாக கடந்து போகிறோம். அதற்கு எதிரான நடவடிக்கைகளை கூட சேர்ந்து எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளோம். நாங்கள் ஊரில் வளர்ந்த காலத்தில் இப்படி நடைபெற்றதா? இல்லை. அந்த காலப்பகுதியில் இளமை வயதில் இருந்தவர்களின்(பெரும்பாலானோர்) பிள்ளைகள்தான் இன்றுள்ள இளைய சமூதாயம் என நினைக்கிறேன். அவர்கள்தான் இன்று சோம்பேறிகளாகவும் போதைக்கும் அடிமையாகி வருகிறார்கள். 

இன்று தமிழர்களாகிய எங்களது எண்ணங்கள் வேறு என்றே தோன்றுகிறது. 

எங்களிடம் அரசியல் பலமும் இல்லை ஆயுதபலமும் இல்லை, பொருளாதார பலமும்(?) இல்லை, மக்கள் பலமும் இல்லை. நிலமை இப்படி இருக்கையில் நிலாந்தன் தமிழ் மக்கள் தங்களது பேரம் செய்யும் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பேராசைப்படுகிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2024 at 09:40, தமிழ் சிறி said:

“காரில் வந்த இந்தியர்,பார்த்து மிரண்ட இலங்கை போலீஸ்” என்று தலைபிடுகிறார்.

பத்திரிகைகளில் மட்டும் நல்ல நல்ல தலைப்பிடுகிறார்கள் என்ற நினைப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.