Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 FEB, 2024 | 04:11 PM
image

தேராவில் குளத்து மேலதிக நீரினால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக முல்லைத்தீவில் வெள்ளநீர் முகாமைத்துவ செயற்றிட்டம் மாவட்ட அரசாங்க அதிபரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்றுவதற்கான செயற்றிட்டம் லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது தேராவில் குளத்து மேலதிக நீரினை வெளியேற்றும் இத்திட்டத்துக்கான பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து கனரக இயந்திரம் கொண்டு நீரை வெட்டி அகற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

தேராவில் குளத்து நீர் நிரம்பி மேலதிக நீரினால் குளத்துக்கு அருகில் இருந்த 17 குடும்பங்களும் பாதிக்கப்பட்டு, சுமார் இரண்டு மாதங்களாக இடைத்தங்கல் முகாமில் தங்கிவரும் நிலையில், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தன், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் உபதலைவரும் முன்னாள் அரசாங்க அதிபருமான சு.அருமைநாயகம், கமநல சேவை திணைக்கள உதவிப் பணிப்பாளர் பரணிதரன், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் க.அரங்கன், வனவள திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் என பலர்  கலந்துகொண்டனர்.

PXL_20240225_033657590.jpg

received_700170885664852.jpeg

received_346955148319488.jpeg

received_7547908191915568.jpeg

received_1066177101329119.jpeg

received_1586605202187509.jpeg

received_1086840739200460.jpeg

received_1444369569622663.jpeg

https://www.virakesari.lk/article/177261

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.