Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU    29 FEB, 2024 | 01:54 AM

image

இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய மீனவர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

“இலங்கையிலுள்ள நீதிமன்றத்தினால் அரசியல் அமைப்பில் உள்ள சட்டத்திற்கு ஏதுவாகவே வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக இந்திய மீனவர்கள் இரண்டு, மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அச்செயலானது எவ்வித அடாவடித்தனமான செயலாக தென்படவில்லை. எல்லைக்குள் அத்துமீறி வந்தமையாலேயே அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய தேவை வந்துள்ளது,”  யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகந்தவேள் புனிதப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை மீறும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை கடல் எல்லையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 4) கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்தாக யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஏக மனதாக தீர்மானித்துள்ளதாக அவர் இந்த ஊடக சந்திப்பில் அறிவித்தார்.

எல்லை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்தை கோரும் இந்திய அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஸ்ரீகந்தவேள் புனிதப்பிரகாஷ் இந்த ஊடக சந்திப்பில் வலியுறுத்தினார்.

“சில இந்திய அரசியல் தரப்புகள் எமது அரசாங்கத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார்கள். இது எந்த வகையிலும் நியாயமான செயற்பாடாக தென்படவில்லை.  இதுபோல செயற்பாடுகள் இங்கு இடம்பெறுமானால் எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகவே போய்க்கொண்டிருக்கும் என்பதை எமது இலங்கை அரசாங்கமும் கணக்கில் எடுக்க வேண்டும்.”

இலங்கை மீனவர்களை காப்பாற்ற வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு இலங்கை கடற்படை மற்றும் நீதித்துறைக்கு காணப்படுவதாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகந்தவேள் புனிதப்பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று மீனவர்களுக்கு சிறை

இலங்கை கடல் பரப்பில் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட, இரண்டு படகுகளையும் அதிலிருந்து 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினரால் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது  23 மீனவர்களில் 20 மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், இரண்டு விசைப் படகு ஓட்டுநர்களுக்கு தலா ஆறு மாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதேபோல் இலங்கை கடற்படையால் 2019ஆம் ஆண்டு எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர் ஒருவர், அதேத் தவறை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

இலங்கை கடற்படை கைது செய்யும் தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த இராமேஸ்வரம் மீனவர்கள், இந்த  வருட கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்தனர்.

மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதை கண்டித்தும், மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடமையாக்குவதை  கண்டித்தும், 700ற்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 18ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மேலும் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்குச் சென்ற, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மீனவர்களுக்கு சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் நேற்றைய தினம் (பெப்ரவரி 25) முடிவுக்கு வந்தது.

முற்றுகைப் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகள் எல்லைமீறி இலங்கையின் வடக்கு கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து, வடக்கு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை முற்கையிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுத்தன.

இந்திய துணை உயர்ஸ்தானிகரிடம் தமது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்திய மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கைகள் அடங்கிய மஜரையும் கையளித்தனர்.

"நாங்கள் இந்திய இழுவைப் படகால் சாகப்போகின்றோம். இது தொடர் போராட்டமாகத்தான் மாறப்போகிறது. ஒரு சில நாட்களில் முடிவு தரவேண்டும். தராத பட்சத்தில் தொடர் போராட்டம் ஒன்று நடக்கும். கடலில் அசம்பாவிதங்களும் நடக்கும்" என யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அத்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் இதன்போது எச்சரித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/177561

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவில் மீனவ சங்க தலைவர்  ஒருவர் பேசும்போது இலங்கைக்கு பணம் கொடுப்பதாகவும், சாப்பாடு கொடுப்பதாகவும் , லட்ச்ச கணக்கில் தமிழர்களை இந்தியாவில்  வைத்து பராமரிக்கிறோம் என்றும். இவை எல்லாம் தமது வரிப்பணத்தில் செய்வதாகவும் கூறியிருக்கின்றார். அது உண்மைதான். அதாவது இலங்கை  கடலில் வந்து அள்ளிக்கொண்டு போவதில் என்ன தவறு என்பதுதான் அவரது ஆதங்கம்.

சில தமிழர்கள் இங்கு உதவி செய்வதை சுட்டிக்காட்டுவது போல இருந்தது அவருடைய பேச்சு இருந்தது.

இலங்கை தமிழரலாகிய எமக்குஅவமானம்தான். மறுப்பதட்கில்லை.

எப்படியோ இப்போது வெளி நாடடவராகிய மாறிய தமிழர்களுக்கு அதெல்லாம் சிரிப்பாக இருக்கும்.  

Posted

பாகிஸ்தானிய மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கும் போதும் இது தான் நடக்கிறது.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.  வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.