Jump to content

பெங்களூரு உணவகத்தில் நடந்த வெடிப்பு - முதல்வர் சித்தராமையா சொன்னது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1 மார்ச் 2024
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகத்தில் பயங்கர வெடிச்சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது.

பெங்களூருவின் ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இன்று மதியம் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது.

இது குண்டுவெடிப்பா அல்லது சிலிண்டர் வெடிப்பா என போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நடந்தது IED குண்டுவெடிப்பு எனக் கூறப்படுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டி அளித்துள்ளார்.

சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் உணவகத்திற்கு வந்த ஒருவர் விட்டுச் சென்ற பையில் இருந்து வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்ததாக கர்நாடக டிஜிபி அலோக் மோகன் தெரிவித்தார். சம்பவம் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஒயிட் பீல்டு பகுதி தீயணைப்பு துறையினர் கூறுகையில், தங்களுக்கு சிலிண்டர் வெடித்ததாக அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த வெடிகுண்டு கண்டறிதல் குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

092ceb20-d7e7-11ee-908e-43ce8c45f0a5.jpg

https://www.bbc.com/tamil/articles/cd14deeyel8o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய சந்தேக நபர்

02 MAR, 2024 | 10:39 AM
image

பெங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உணவகமொன்றில்  மர்ம நபர் ஒருவர் பையை எடுத்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் மிகவும் பிரபலமான உணவமாக ‘ராமேஸ்வரம் கபே’ கடை திகழ்கிறது.  திவ்யா ராகவேந்திர ராவ்-ராகவேந்திர ராவ் தம்பதி இந்த கடைகளை நடத்தி வருகிறார்கள்.  பெங்களூருவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கபே மூலம் மாதம் ரூ.4½ கோடி வருமானம் வருவதாக கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர அப்துல்கலாமின் நினைவாக அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரம் பெயரை கொண்டு ‘ராமேஸ்வரம் கபே’ என்ற பெயரில் திவ்யா-ராகவேந்தர் தம்பதி உணவகங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பெங்களூர் குந்தலஹள்ளியில் உள்ள புரூக்பீல்டிலும் ராமேசுவரம் கபே  இயங்கி வருகிறது. அந்த  உணவகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். சரியாக மதியம் 1 மணி 5 நிமிடத்தில் ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது.

இதனால் உணவகம் மொத்தமும் புகை மண்டலமாக மாறியது.   இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.  தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சேதமாகின.  ல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள்,  குண்டுகள் வெடித்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள்.  உடனடியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்த உணவுப்பொருட்களை அப்படியே போட்டுவிட்டு,  பதறி அடித்து வெளியே ஓடிவிட்டார்கள்.  சிலிண்டர் வெடித்ததாக பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.  ஆனால் வெடித்து குண்டு என்பது அதன்பின்னரே அவர்களுக்கு தெரிந்தது.  இந்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.  காயமடைந்த பெண் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.

சாப்பிட வருவது போல வந்த வாடிக்கையாளர் ஒருவர்,  தான் கையோடு கொண்டு வந்த பையை வைத்து விட்டு சென்றதாகவும்,  அவர் விட்டு சென்ற பை ஒன்றில் இருந்த பொருள்தான் வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவியில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.

வெடித்தது மிக வீரியமிக்க IED வெடிகுண்டு என போலீசார் கூறுகின்றனர்.  தீவிர விசாரணை நடந்து வருகின்றது என்று துணை முதல்வர் டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.  பையில் இருந்ததைத் தவிர,  வளாகத்தில் ஐஇடி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று  காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 28 முதல் 30 வயதுடையவர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்தது போலீஸ்.  வாடிக்கையாளர்போல் வந்து வெடிகுண்டு வைத்தது யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கைதானவர் யார் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் வெளியாகவில்லை.

சந்தேக நபர்,  முகமூடி, கண்ணாடி மற்றும் தலைக்கு மேல் தொப்பியால் முகத்தை மறைத்து,  இட்லி தட்டை எடுத்துச் செல்வது ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் சிக்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/177729

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்புக்கும், கோவை கார் வெடிப்புக்கும் தொடர்பா? சந்தேக நபரின் படம் வெளியீடு

பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்பு

பட மூலாதாரம்,CCTV

கட்டுரை தகவல்
  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக பெங்களூருவில் இருந்து
  • 2 மார்ச் 2024

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் வெள்ளிக்கிழமை பிற்பகல் குண்டுவெடிப்பு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரின் சிசிடிவி வீடியோவை கர்நாடக காவல்துறை வெளியிட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர் அல்லது சந்தேக நபர்களை கைது செய்ய 10 குழுக்களை போலீசார் அமைத்துள்ளனர்.

பெங்களூரு வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் குறைந்த தீவிரம் கொண்ட ஐஇடி குண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

அந்தப் பெண் 40 சதவீதம் தீக்காயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் ஐந்து வினாடிகள் இடைவெளியில் நிகழ்ந்தன. முதல் குண்டுவெடிப்பு மதியம் 12:55:32 மணிக்கும், இரண்டாவது குண்டுவெடிப்பு 12:55:37 மணிக்கும் நிகழ்ந்துள்ளது.

பெங்களூருவின் தகவல் தொழில்நுட்ப மையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. ஐடி துறையில் பணிபுரியும் இளைஞர்கள் இந்த இடத்திற்குச் சாப்பிட வருவது வழக்கம்.

பெங்களூரு குண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,CCTV FOOTAGE/POLICE SOURCES

இந்த வெடிவிபத்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படவில்லை, ஆனால் வாஷ்பேசின் பகுதியில் அதிக அளவில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான ஆணிகள், நட்டுகள், போல்ட்கள் சிதறிக் கிடந்தன.

குண்டுவெடிப்பு நடத்திய நபர் முதலில் ராமேஸ்வரம் கஃபேவில் ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு வாஷ் பேசின் அருகே உள்ள மரத்தடியில் பையை வைத்துவிட்டுச் சென்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஐஇடி குண்டுவெடிப்பு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தரமையா தான் முதலில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். குண்டுவெடிப்பை நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பின்போது உணவகத்தில் இருந்த ஒரு நபர், "நான் இங்கு மதிய உணவு சாப்பிட வந்தேன். ஒரு மணி இருக்கும். அப்போது எனக்கு பலத்த சத்தம் கேட்டது. வெடிகுண்டு போன்ற சத்தம் கேட்டது. ஆனால் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இது வெடிகுண்டு வெடித்தா அல்லது வேறு ஏதாவதா எனத் தெரியவில்லை," என்றார்.

 
Play video, "பெங்களூரு உணவகத்தில் நடந்த வெடிப்பு குண்டுவெடிப்பா? முதல்வர் சித்தராமையா சொன்னது என்ன? - காணொளி", கால அளவு 1,22
01:22p0hg3vpc.jpg
காணொளிக் குறிப்பு,

 

"இந்தச் சத்தம் கேட்டு வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் சிலர் இதை சிலிண்டர் வெடிப்பு என்றும் அழைக்கிறார்கள். உள்ளே சுமார் 35-40 பேர் இருந்தனர். குண்டு வெடித்ததற்குப் பிறகு நிறைய புகை எழுந்தது," என்றார் அந்த நபர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தொடர்கிறது

இந்த குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் நாற்பது சதவீத தீக்காயங்களுக்கு உள்ளான 45 வயது பெண்ணும் அடங்குவார்.

இந்தப் பெண் புரூக்ஃபீல்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புரூக்ஃபீல்ட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பிரதீப் குமார், செய்தியாளர்களிடம் பேசுகையில், அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலை குறித்து தெரிவித்தார்.

பெங்களூரு: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு - இதுவரை தெரிய வந்த தகவல்கள் என்ன?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

குண்டுவெடிப்பு நடந்த இடத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பார்வையிட்டார்.

"காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மூவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 45 வயது பெண் ஒருவர் 40 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளார். அவர் ஐசியுவில் இருக்கிறார்," என்றார்.

“அந்தப் பெண்ணின் இடது பக்கத்தில் வெட்டுக் காயங்கள் உள்ளன, அதற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவைப்படும். வெடி சத்தத்தால், அவரது செவிப்பறையும் வெடித்துள்ளது,” என விரிவாகக் கூறினார்.

இருப்பினும், இது மிகவும் தீவிரமான வெடிப்பாக இருந்திருந்தால், நோயாளிகள் இன்னும் கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருப்பார்கள் என்று டாக்டர் பிரதீப் குமார் கூறினார்.

பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்புக்கும், கோவை கார் வெடிப்புக்கும் தொடர்பா?

பெங்களூரு குண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,CCTV FOOTAGE/POLICE SOURCES

இது தொடர்பாக கர்நாடக அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சிலிண்டர் வெடி விபத்துடனும் தொடர்புப்படுத்திப் பேசப்பட்டது.

ஆனால், அந்த உணவகத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யா ராகவேந்திரா, எந்த சிலிண்டராலும் வெடிப்பு ஏற்படவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் தடயவியல் ஆய்வுக்காக சம்பந்தப்பட்ட குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கர்நாடக டிஜிபி அலோக் மோகன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.

அவர் செய்தி முகமையான பிடிஐக்கு அளித்த பேட்டியில், உணவகத்தில் நடந்த விபத்து வெடிகுண்டு வெடிப்பு என்பதை உறுதிப்படுத்தினார்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு மற்றும் 2022 செப்டம்பர் 23 ஆம் தேதி ஷிவமோகாவில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய இந்த குண்டுவெடிப்பையும் ஆய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

IED இல் பயன்படுத்தப்பட்ட டைமர் அந்த குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட டைமரைப் போன்றது என்று போலீஸ் வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.

ஷிவமோகா குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கும் கோவை சிலிண்டர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளது. இந்த வெடிப்பு அக்டோபர் 2022 இல் நடந்தது.

மைசூரில் இருந்து பெங்களூரு வந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், "இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் யாரோ ஒருவரா அல்லது ஏதேனும் ஒரு கும்பல் உள்ளதா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை." என்றார்.

வெளியிடப்பட்ட சந்தேக நபரின் படங்கள் மற்றும் வீடியோக்களில், அவர் தொப்பி மற்றும் அறுவை சிகிச்சை முகமூடியை அணிந்துள்ளார். இந்த சந்தேக நபர் ஓட்டலுக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி வேகமாக ஓட்டலை நோக்கி செல்கிறார்.

பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்பு

பட மூலாதாரம்,CCTV

சித்தராமையா கூறுகையில், “ஒரு நபர் முகமூடி மற்றும் தொப்பி அணிந்து பேருந்தில் வந்து ரவா இட்லியை வாங்கி சாப்பிட்டு பையை வைத்திருந்தார்.

இந்த பை வாஷ்பேசின் பகுதியில் உள்ள மரத்தின் அருகே வைக்கப்பட்டு இருந்தது.

பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டபோது, விசாரணை இன்னும் நடந்து வருகிறது என்றார்.

நவம்பர் 19, 2022 அன்று மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பில், வெடிக்கும் பொருட்கள் அடங்கிய எரிந்த பிரஷர் குக்கரை கர்நாடக போலீசார் மீட்டனர். இது தவிர, ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து எரிவாயுவை எரிக்கும் இயந்திரத்தின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன.

இந்த குண்டுவெடிப்பில் டிரைவர் மற்றும் பயணி காயமடைந்தனர். குக்கரில் எரிந்த பேட்டரிகளும் பொருத்தப்பட்டிருந்தன. இது டைமர் மூலம் இயக்கப்படும் சாதனமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவையில் மாருதி 800 ரக கார் வெடித்தது. சங்கமேஸ்வரர் கோவில் அருகே எல்பிஜி சிலிண்டர் வெடித்தது. மேலும், அந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர்.

பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்பு

பட மூலாதாரம்,CCTV FOOTAGE/POLICE SOURCES

இந்த மூன்று சம்பவங்களிலும், வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் ஷாரிக் என்ற நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தனஹள்ளியில் உள்ள குளத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கோயம்புத்தூர், மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஷாரிக் சென்றிருந்தார். இந்த மூன்று வழக்குகளையும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரித்து வருகிறது.

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் ராமேஸ்வரம் கஃபே வழக்கில் மற்றொரு பொதுவான அம்சம் என்னவென்றால், டைமர் டிஜிட்டல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா என்ன சொன்னார்?

கர்நாடக முதல்வர் சித்தராமையா

பட மூலாதாரம்,ANI

கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரில் போலீஸ் அதிகாரியின் விசாரணையை மேற்கோள் காட்டி, இது ஐஇடி குண்டுவெடிப்பு என செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். யாரோ அந்தப் பையை அங்கு வைத்திருந்தனர். ஐஇடி குண்டுவெடிப்பு என்று கூறுகிறார்கள், இது தீவிரவாத தாக்குதலா இல்லையா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. எனக்கு கிடைத்த தகவலைத் தெரிவித்தேன். சம்பவ இடத்தில், போலீஸ் இருக்கிறார்கள்."

இந்த விவகாரத்தில் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பை நடத்தியது யார், என்ன வகையான குண்டுவெடிப்பு என அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐஇடி வெடிகுண்டுதானா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "ராமேஸ்வரம் உணவகத்தில் மதியம் ஒரு மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அது குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு. சுமார் பத்து பேர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என்றார்.

 

பாஜக என்ன சொல்கிறது?

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா

பட மூலாதாரம்,X/@TEJASVI_SURYA

இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான ஆர்.அசோக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, இந்த வழக்கில் விசாரணை அமைப்புகளுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முதலில் சிலிண்டர் வெடிப்பு பற்றிய கதையை உருவாக்க முயன்றார்கள். இப்போது வியாபாரப் போட்டி என்ற கதையை உருவாக்குகிறார்கள்.

விசாரணை அமைப்புகளைத் தங்கள் வேலையைச் செய்ய காங்கிரஸ் அரசால் ஏன் அனுமதிக்க முடியவில்லை? வாக்கு வங்கியின் கட்டாயம் என்ன? விசாரணை நடத்த சுதந்திரம் வழங்க வேண்டும், பெங்களூரு மக்களுக்குத் தெளிவான பதில் அளிக்க வேண்டும்,” என அவர் பதிவிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cv2yeyqn2peo

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய இரு சந்தேக நபர்கள் கைது

இந்தியாவில்(India) பெங்களூர்(Bengaluru) -  ராமேஸ்வரம் கஃபே(Rameswaram Cafe) குண்டுவெடிப்பு சம்பவத்தின் இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மார்ச் 1ஆம் திகதி பெங்களூரில்(Bengaluru) உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேயில்(Rameswaram Cafe) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்பதுடன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பத்து பேர் காயமடைந்தனர்.

குண்டு வைக்கப்பட்ட இடத்தில் குறைந்த கூட்டம் மற்றும் வெடிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்திய பெரிய தூண் அருகில் இருந்ததன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்படவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கை

இந்த நிலையில், கடந்த மாதம் பெங்களூரில்(Bengaluru) உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேயில்(Rameswaram Cafe) குண்டு வைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று(12) அறிவித்துள்ளது.

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய இரு சந்தேக நபர்கள் கைது | Rameshwaram Cafe Blast Two Suspects Arrested

முஸ்ஸாவிர் ஹுசைன் ஷாஸெப்(Mussavir Hussain Shazeb) மற்றும் அப்துல் மத்தீன் தாஹா(Abdul Matheen Taha) ஆகியோர் கிழக்கு மித்னாபூர்(Midnapore) மாவட்டத்தின் Kanthi பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், அவர்கள் மேற்கு வங்காளத்துக்குள் பிரவேசித்த இரண்டு மணி நேரத்துக்குள் மாநில பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய இரு சந்தேக நபர்கள் கைது | Rameshwaram Cafe Blast Two Suspects Arrested

தேசிய புலனாய்வு முகமை, மத்திய உளவுத்துறை அமைப்புகள் மற்றும் மேற்கு வங்காளம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா பொலிஸ் அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை (NIA)விசாரணையில், ஷாஸெப் தான் ராமேஸ்வரம் கஃபேவில் வெடிபொருளை வைத்ததாகவும், தாஹா தாக்குதலை திட்டமிட்டு தப்பி ஓடுவதற்கு உதவியாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த வழக்கில் இது 2ஆவது மற்றும் மூன்றாவது கைது நடவடிக்கை ஆகும். கடந்த மாதம், இவர்களுக்கு உதவி புரிந்ததாக கூறப்படும் முஸம்மில் ஷரீப் (Muzammil Shareef) கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய இரு சந்தேக நபர்கள் கைது | Rameshwaram Cafe Blast Two Suspects Arrested

கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 18 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னரே ஷாஸெப்பையும், தாஹாவையும் மேற்கு வங்காளத்தில் (NIA) அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று(12) கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

https://tamilwin.com/article/rameshwaram-cafe-blast-two-suspects-arrested-1712928306

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.