Jump to content

பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஸை அதன் சொந்தமண்ணில் 3 ஓட்டங்களால் திறில் வெற்றி கொண்டது இலங்கை!

Published By: RAJEEBAN   04 MAR, 2024 | 11:01 PM

image

(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.


குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகள் என்பன இலங்கை வெற்றி அடைவதற்கு உதவின.

குறிப்பாக தசுன் ஷானக்க கடைசி ஓவரை சிறப்பாக வீசி 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியமை அணியின் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்தது.அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.


மொத்த எண்ணிக்கை 4 ஓட்டங்களாக இருந்தபோது அவிஷ்க பெர்னாண்டோ (4), 37 ஓட்டங்களாக இருந்தபோது கமிந்து மெண்டிஸ் (19) ஆகிய இருவரும் களம் விட்டகழ இலங்கை ஆட்டம் கண்டது.


ஆனால், குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தினர்.


குசல் மெண்டிஸ் 36 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.


அவர் ஆட்டம் இழந்த பின்னர் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரமவும் அணித் தலைவர் சரித் அசலன்கவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 32 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.


சதீர சமரவிக்ரம 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 61 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 21 பந்தகளில் 6 சிக்ஸ்கள் உட்பட 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.


207 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.


பங்களாதேஷ் ஒரு கட்டத்தில் 8.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.


ஆனால், 17 மாதங்களின் பின்னர் ரி20 அணிக்கு மீளழைக்கப்பட்ட மஹ்முதுல்லாவும் தனது 5ஆவது ரி20 போட்டியில் விளையாடும் ஜாக்கர் அலியும் 5ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.


மஹ்முதுல்லா 31 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார்.


அவர் ஆட்டம் இழந்தபின்னர் ஜாக்கர் அலி, மஹேதி ஹசன் (16) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர். (180 - 6 விக்.)கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் ஜாக்கர் அலி 68 ஓட்டங்களுடன் பங்களாதேஷுக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார்.


ஆனால் அவர் பந்துவீச்சு எல்லையில் இருந்ததால் இலங்கைக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
கடைசி ஓவரை வீசிய தசுன் ஷானக்க முதல் பந்தில் ரிஷாத் ஹொசெய்னின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.


ஆனால், தசுன் ஷானக்கவின் அடுத்த பந்து வைடானது. 2ஆவது பந்தில் ஒரு ஓட்டத்தை ஷானக்க கொடுக்க, ஜாக்கர் அலி துடுப்பாட்ட எல்லைக்கு வந்தார். ஆனால், அவரது விக்கெட்டை அடுத்த பந்தில் தசுன் ஷானக்க கைப்பற்றினார். ஜாக்கர் அலி 68 ஓட்டங்களுடன் வெளியேறினார்.அடுத்து களம் புகுந்த ஷொரிபுல் இஸ்லாம் பவண்டறி ஒன்றை விளாசினார்.
இந் நிலையில் கடைசி 2 பந்துகளில் பங்களாதேஷின் வெற்றிக்கு ஒரு சிக்ஸ் தேவைப்பட்டது.

ஆனால் தசுன் ஷானக்க அடுத்து இரண்டு பந்துகளையும் சரியான இலக்குகளில் வீசி லெக் பை ஒன்றையும் ஒரு ஓட்டத்தையும் மாத்திரம் கொடுத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.


பந்துவீச்சில் ஏஞ்சலோ மெத்யூஸ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


ஆட்டநாயகன்: சரித் அசலன்க

https://www.virakesari.lk/article/177913

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

34 பந்துகளில் 68 ஓட்டங்களை எடுத்து அதிரடி காட்டிய பங்களாதேஸ் வீரர் - அவரை பேட்டி கண்ட ஊடகவியலாளரான சகோதரி - ஒரு சுவாரஸ்ய சம்பவம்

Published By: RAJEEBAN   05 MAR, 2024 | 10:35 AM

image

பங்களாதேசிற்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை மூன்று ஓட்டங்களால் வெற்றிபெற்ற பின்னர் இடம்பெற்றசெய்தியாளர் மாநாட்டில் 34 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்று பங்களாதேசிற்கு ஒரு தருணத்தில் வெற்றிவாய்ப்பை வழங்கிய ஜாகெர் அலியிடம் ஊடகவியலாளர் சஹீலா பொபி கேள்வியொன்றை கேட்டார்.

சிலேட்டில் உங்கள் சொந்த மைதானத்தில் முதல் தடவை விளையாடியிருக்கின்றீர்கள் ரசிகர்கள் உங்கள் பெயரை  சொல்லி கோசம் எழுப்பிக்கொண்டிருந்தார்கள் அது எப்படியிருந்தது என சஹீலா பொபி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜாகெர் அலி சகோதரி இந்த மைதானத்தில் விளையாடுவது எனக்கு எப்போதும் பிடித்த விடயம்,இந்த மைதானத்திலேயே நான் எனது முதலாவது முதல்தரப்போட்டியை விளையாடினேன்  ஆடுகளமும் சூழலும் எப்படியிருக்கும்  என்பது எனக்கு தெரியும் அது சிறந்த விடயம் நாங்கள் வெற்றிபெற்றிருந்தால் இன்னமும் சிறப்பாகயிருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சகோதரியா?

shakila_bobby.jpg

ஜாகெர்அலியும் அவரை  பேட்டி கண்ட சஹீலா பொபியும் சகோதரர்கள் என்பது அங்கிருந்த பலருக்கு தெரியாது.

மைதானத்திற்கு வந்திருந்த பல டாக்காவை தளமாக கொண்ட பத்திரிகையாளர்களுக்கும்  அது தெரியாது.

ஆனால் தற்போது ஆர்வம் தொற்றிக்கொண்டிருந்தது.

சகோதரி கேள்வி கேட்டது எப்படியிருந்தது என ஒரு பத்திரிகையாளர் ஜாகெர் அலியிடம் கேட்டார்.

என்னால்அவர்  பெருமையடைந்திருந்திருப்பார்  அவர் மகிழ்ச்சியாக காணப்பட்டார் என பங்களாதேஸ் வீரர் தெரிவித்தார்.

பங்களாதேசின் கோபோர் கஜாஜ் நாளேட்டின் செய்தியாளர் ஷகீலா பொபி,அவரது கணவர் அந்த நாளேட்டின் புகைப்படப்பிடிப்பாளர் அவர்கள் தங்கள் கைக்குழந்தையையும் கொண்டுவந்தனர்,ஜாகெர் சிக்சர்கள் அடித்தவேளை அவர்கள் அதனை கொண்டாடினர். ரசிகர்களும்  அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.

செய்தியாளர் மாநாட்டில் ஜாகெர் அலி தனது சகோதரியுடன் காணப்பட்டார்,அதன் பின்னர் ஷகீலா ஏனைய பத்திரிகையாளர்களிடம் பேசினார்,செய்தியாளர்மாநாட்டில் ஜாகெர்அலியிடம் கேள்வி கேட்பது எனக்கு ஒரு பெரும்கனவு  என அவர் தெரிவித்தார்.

அது சாத்தியமாகும் என நான் கனவுகாணவில்லை என அவர் தெரிவித்தார்.

எங்கள் முழுக்குடும்பத்திற்கும்  விளையாட்டுகளுடன் தொடர்புள்ளது என தெரிவித்த சஹீலா  நான் மாவட்ட அணியின் முன்னாள் தலைவி என தெரிவித்தார்.2017 இல் உயிரிழந்த அவரது தந்தை ஒரு இராணுவீரர் அவரும் ஒரு விளையாட்டு வீரர்.

https://www.virakesari.lk/article/177924

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது ரி20இல் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் தொடரை சமப்படுத்தியது

Published By: VISHNU   06 MAR, 2024 | 11:39 PM

image

(நெவில் அன்தனி)

சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (06) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த பங்களாதேஷ் 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்தியது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 16.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எனினும் இந்தப் போட்டியில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்று இலங்கைக்கு பாதகமாக அமைந்தது.

போட்டியின் 4ஆவது ஓவரில் பினுர பெர்னாண்டோ வீசிய முதல் பந்தில் சௌம்ய சர்க்கார், விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்ததாக கள மத்தியஸ்தர் ஷர்புதவ்லா தீர்பளித்தார்.

ஆனால், 14 ஓட்டங்களைப் பெற்றிருந்த சௌம்யா சர்க்கார் உடனடியாக அந்தத் தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்தினார்.

அதனை மூன்றாவது மத்தியஸ்தர் மீளாய்வு செய்தபோது மைதானத்தில் உள்ள அகலத்திரையில் பந்து துடுப்பைக் கடந்தபோது கூரிய உராய்வுக்கான கோடுகள் தெளிவாக வீழ்ந்தன. இதனை அடுத்து சௌம்ய சர்க்கார் மைதானத்தை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தார்.\

0603_umpires_decision_bang_vs_sl_...png

ஆனால், என்னே ஆச்சரியம், மூன்றாவது மத்தியஸ்தர் ரஹ்மான், ஓசை வேறு எங்கிருந்தோ வந்ததாக நம்பினார் போலும். துடுப்புக்கும் பந்துக்கும் இடையில்  தெளிவான இடைவெளி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டி, சர்க்கார் ஆட்டம் இழக்கவில்லை என கள மத்தியஸ்தரிடம் தீர்ப்பை மாற்றுமாறு அறிவித்தார்.

இதனை அடுத்து சர்க்கார் ஆட்டம் இழந்ததாக தான் வழங்கிய முன்னைய தீர்ப்பை கள மத்தியஸ்தர் மாற்றி வழங்கினார். இதனால் இலங்கை அணியினர்  பெரும் ஆச்சரியத்துக்கும் குழப்பத்துக்கும் உள்ளாகினர். ஆனால், வெறு வழியின்றி மத்தியஸ்தரின் தீர்ப்புக்கு தலைவணங்கி ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

லிட்டன் தாஸ், சௌம்ய சர்க்கார் ஆகிய இருவரும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சௌம்ய சர்க்கார் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஒன்பதாவது ஓவரின் கடைசிப் பந்தில் மொத்த எண்ணிக்கை 83 ஓட்டங்களாக இருந்தபோது லிட்டன் தாஸ் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் தௌஹித் ரிதோயும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 55 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

நஜ்முல் ஹொசெயன் ஷன்டோ 24 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 53 ஓட்டங்களுடனும் தௌஹித் ரிதோய் 25 பந்துகளில் 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மதீஷ பத்திரண 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆனால், அவர் தனது கடைசி ஓவரை வீசியபோது 4ஆவது பந்துடன் இடதுகாலின் பின் தொடையில் ஏற்பட்ட உபாதையுடன் ஓய்வறைக்கு திரும்பினார். அவரது  ஓவரை   ஏஞ்சலோ மெத்யூஸ் பூர்த்திசெய்தார்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ இந்தப் போட்டியில்  கவனக்குறைவான ஆட்டத் தெரிவின் மூலம் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். முதல் போட்டியிலும் அவர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

குசல் மெண்டிஸும் கமிந்து மெண்டிஸும் ஜோடி சேர்ந்து 42 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட முயற்சித்தனர்.

குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (67 - 2 விக்)

மொத்த எண்ணிக்கை 77 ஓட்டங்களாக இருந்தபோது துரதிர்ஷ்டவசமாக கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரம 7 ஓட்டங்களுடன் வெளியேறினார். (92 - 4 விக்.)

அணித் தலைவர் சரித் அசலன்க 14 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 28 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பந்தை விசுக்கி அடிக்க விளைந்து ஆட்டம் இழந்தார்.

0603_angelo_mathews_sl_vs_bang_2nd_t20.p

முன்னாள் அணித் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் இலங்கை கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. ஆனால், அந்த மொத்த எண்ணிக்கை வெற்றிபெறுவதற்கு போதுமானதாக அமையவில்லை.

ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 21 பந்துகளில் 4 பவுண்டறிகள் உட்பட 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தசுன் ஷானக்க ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டறியுடன் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத், மஹெதி ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான், சௌம்யா சர்க்கார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/178121

Link to comment
Share on other sites

நுவான் துஷார ஹெட்ரிக்கை பெற்றுக்கொண்டார்!

நுவான் துஷார ஹெட்ரிக்கை பெற்றுக்கொண்டார்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான 3 ஆவது மற்றும் கடைசி 20 -20 கிரிக்கெட் போட்டி தற்போது சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, சற்றுமுன்னர் வரை 5 விக்கெட் இழப்புக்கு 25 ஓட்டங்களை எடுத்துள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=184965

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசல் மெண்டிஸ் அதிரடி, நுவன் துஷார ஹெட் - ட்ரிக்: இலங்கைக்கு தொடர் வெற்றி

09 MAR, 2024 | 09:50 PM
image

(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (09) நடைபெற்ற 3ஆவது கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் குசல் மெண்டிஸ் குவித்த அரைச் சதம், நுவன் துஷாரவின் ஹட்-ட்ரிக் அடங்கலான 5 விக்கெட் குவியல் என்பன இலங்கைக்கு 28 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.


இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை கைப்பற்றியது.


பங்களாதேஷ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது நான்காவது ஓவரை வீச அழைக்கப்பட்ட நுவன் துஷார தனது முதல் ஓவரிலேயே ஹட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை திக்குமுக்காட வைத்தார்.


சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக ஹட்ரிக் முறையில் விக்கெட்களைக் கைப்பற்றிய 5ஆவது வீரரானார் நுவன் துஷார. ஆனால், அது இலங்கை சார்பாக பதிவான 6ஆவது ஹட்ரிக் ஆகும்.


இதற்கு முன்னர் திசர பெரேரா, லசித் மாலிங்க (2 தடவைகள்), தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க ஆகிய இலங்கை வீரர்கள் சர்வதேச ரி20 போட்டிகளில் ஹட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.


எவ்வாறாயினும் ரிஷாத் ஹொசெய்ன் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து பங்களாதேஷுக்கு ஆறுதலைக் கொடுத்தார்.
நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, தௌஹித் ரிதோய், மஹ்முதுல்லா ஆகிய முன்வரிசை வீரர்களையே நுவன் துஷார தனது முதலாவது ஓவரின் 2ஆவது, 3ஆவது, 4ஆவது பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்திருந்தார்.


தனது அடுத்த ஓவரில் சௌம்யா சர்க்காரை ஆட்டம் இழக்கச் செய்த துஷார, தனது கடைசி ஓவரில் ஷொரிபுல் இஸ்லாமை வெளியேற்றியிருந்தார்.


இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 175 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், துஷாரவின் பந்துவீச்சில் ஆட்டம் கண்டதுடன் 14ஆவது ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

ஆனால், ரிஷாத் ஹொசெய்ன் 7 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களையும் தஸ்கின் அஹ்மத் 31 ஓட்டங்களையும் பெற்று அணியை மோசமான வீழ்ச்சியிலிருந்து மீட்டபோதிலும் அணியின் தோல்வியைத் அவர்களால் தடுக்க முடியாமல் போனது.

பந்துவீச்சில் நுவன் துஷார ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தடைக்குப் பின்னர் அணிக்கு மீள திரும்பிய அணித் தலைவர் வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


ஏஞ்சலோ மெத்யூஸ் தனது 2ஆவது ஓவரின் முதலாவது பந்தை வீசியதுடன் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார். அவரது ஓவரை தனஞ்சய டி சில்வா வீசி முடித்தார்.


இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைக் குவித்தது.


ஆரம்ப வீரராக களம் இறங்கிய தனஞ்சய டி சில்வா 8 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
மொத்த எண்ணிக்கை 52 ஓட்டங்களாக இருந்தபோது கமிந்து மெண்டிஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.


ஆனால், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் 3ஆவது விக்கெட்டில் வனிந்து ஹசரங்கவுடன் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.


வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் சரித் அசலன்க (3) குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினார்.


மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 56 பந்துகளில் 6 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 86 ஓட்டங்களைக் குவித்தார்.


மத்திய வரிசையில் ஏஞ்சலோ மெத்யூஸ் 10 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 19 ஓட்டங்களையும் பெற்றனர்.
துடுப்பாட்ட வரிசையில் 8ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.


பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


ஆட்டநாயகன்: நுவன் துஷார. தொடர்நாயகன்: குசல் மெண்டிஸ்.

Player_of_the_Match__3rd_T20I__-_Nuwan_T

Player_of_the_Series_-_Kusal_Mendis.JPG

 Kusal_Mendis.JPGNuwan_Thushara.JPG

https://www.virakesari.lk/article/178331

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்க‌ளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌ஸ்ர‌ம்

இல‌ங்கை வென்று விட்ட‌து..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராக ஷன்டோவின் சதமும் ரஹிமின் அரைச் சதமும் பங்களாதேஷின் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் வெற்றியை இலகுவாக்கின

13 MAR, 2024 | 10:18 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக சட்டோக்ரம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (12) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ குவித்த அபார சதம் பங்களாதேஷுக்கு  இலகுவான  6 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 44.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, முஷ்பிக்குர் ரஹிம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த பெறுமதிமிக்க 165 ஓட்ட இணைப்பாட்டம் பங்களாதேஷின் வெற்றியை இலகுபடுத்தியது.

பங்களாதேஷ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது டில்ஷான் மதுஷன்கவின் முதலாவது பந்திலேயே ஆரம்ப வீரர் லிட்டன் தாஸை இழந்தது. 

டில்ஷான் மதுஷன்க தனது இரண்டாவது ஓவரில் சௌம்யா சர்க்காரின் (3) விக்கெட்கடையும் வீழ்த்தினார். (14 - 2 விக்.)

மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது தௌஹித் ரிதோயின் (3) விக்கெட்டை ப்ரமோத் மதுஷான் கைப்பற்ற பங்களாதேஷ் நெருக்கடியை எதிர்கொண்டது.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த ஷன்டோவும் மஹ்முதுல்லாவும் 4ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு உயிரூட்டினர்.

மஹ்முதுல்லா 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஷன்டோவும் முஷ்பிக்குர் ரஹிமும் ஜோடி சேர்ந்து மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 32 பந்துகள் மீதம் இருக்க பங்காளேதேஷின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அணித் தலைவருக்கே உரிய பொறுப்புணர்வுடன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 129 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 122 ஓட்டங்களுடனும் முஷ்பிக்குர் ரஹிம் 84 பந்துகளில் 4 பவுண்டறிகள் உட்பட 73 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் குசல் மெண்டிஸ், ஜனித் லியனவே ஆகிய இருவரின் அரைச் சதங்களும் பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் நிதானம் கலந்த துடுப்பாட்டங்களுமே இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கைக்கு கைகொடுத்தன.

ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

ஆப்கானிஸ்தானுடனான கடைசி ரி20 கிரிக்கெட் போட்டியின்போது உபாதைக்குள்ளானதால் பங்ளாதேஷுக்கு எதிரான ரி20 தொடரில் இடம்பெறாமல் ஒய்வுபெற்றுவந்த பெத்தும் நிஸ்ஸன்க, ஒருநாள் தொடரில் மீண்டும் இடம்பெறுகிறார்.

இன்றைய போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்கவும் அவிஷ்க பெர்னாண்டோவும் 59 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

அவிஷ்க பெர்னாண்டோ 33 ஓட்டங்களுடனும் பெத்தும் நிஸ்ஸன்க 36 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (72 - 2 விக்.)

சதீர சமரவிக்ரம களம் புகுந்த சொற்ப நேரத்தில் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

குசல் மென்டிஸும் உதவி அணித் தலைவர் சரித் அசலன்கவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

அசலன்க 18 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

தொடர்ந்து குசல் மெண்டிஸும் ஜனித் லியனகேயும் 5ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 75 பந்துகளை எதிர்கொண்டு 59 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் வனிந்து ஹசரங்க 13 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே 69 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பெற்று 8ஆவதாக ஆட்டம் இழந்தார். பின்வரிசையில் எவரும் இரட்டை இலக்கை எண்ணிக்கையை எட்டவில்லை.

பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: நஜ்முல் ஹொசெயன் ஷன்டோ.

https://www.virakesari.lk/article/178674

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த் ஆர‌ம்ப‌ வீர‌ர்க‌ள்

 

அவ‌ர்க‌ளும் அவுட் ஆக‌

ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளால் பெரிய‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடிய‌ வில்லை.............அது தான் தோல்விக்கு காரண‌ம்

 

இல‌ங்கை வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர் அவ‌ரின் முத‌ல் ஓவ‌ரில் 12வ‌யிட்க்கு மேல் போட்டு கொடுத்தார்.............அவ‌ரின் வேக‌மான‌ ஓட்ட‌த்தால் ப‌ந்தை ச‌ரியா போட‌ முடிய‌ வில்லை....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஸ்ஸன்க, அசலன்க துடுப்பாட்டத்தில் அபாரம்; இலங்கை வெற்றிபெற்று தொடரை (1-1) சமப்படுத்தியது

Published By: VISHNU    15 MAR, 2024 | 10:30 PM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதம், உதவி அணித் தலைவர் சரித் அசலன்க பெற்ற அரைச் சதம் மற்றும் அவர்கள் பகிர்ந்த சாதனைமிகு 4ஆவது விக்கெட் இணைப்பாட்டம், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே ஆகியோர் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 34 ஓட்டங்கள் என்பன இலங்கையை வெற்றிபெறச் செய்தன.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 47.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பங்களாதேஷைப் போன்று இலங்கையும் ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோவை (0) முதலாவது ஓவரிலேய இழந்தது. (1 - 1 விக்.)

பெத்தும் நிஸ்ஸன்க,  அணித் தலைவர்  குசல் மெண்டிஸ் (18) ஆகிய இருவரும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய உற்சாகத்தைக் கொடுத்தனர்.

குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம (1) ஆகிய இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை அழுத்தத்தை எதிர்கொண்டது.

எனினும், பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 185 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

அவர்கள் இருவரும் பகிர்ந்த 185 ஓட்டங்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சகல நாடுகளுக்கும் எதிராக இலங்கையினால் பகிரப்பட்ட அதிசிறந்த 4ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக அமைந்தது.

ஆனால், அவர்கள் இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தமை இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. (235 - 5 விக்.)

பெத்தும் நிஸ்ஸன்க 113 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 114 ஓட்டங்களைக் குவித்தார். இது அவர் பெற்ற 6ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதமாகும்.

மறுபக்கத்தில் அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க, 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார்.

முதலாவது போட்டியில் அரைச் சதம் குவித்த ஜனித் லியனகே இந்தப் போட்டியில் வெறும் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (251 - 6 விக்.)

ஆனால், வனிந்து ஹசரங்கவும் துனித் வெல்லாலகேயும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க இலங்கைக்கு உதவினர்.

வனிந்து ஹசரங்க 16 பந்துகளில் 2 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் ஷொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத் ஆகிய இருவரும் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தத் தொடரில் இரண்டாவது தடவையாக லிட்டன் தாஸின் விக்கெட்டை முதலாவது ஓவரிலேயே டில்ஷான் மதுஷன்க வீழ்த்தினார்.

ஆனால், சௌம்யா சர்க்கார், அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

ஷன்டோ 6 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து சர்க்கார், தௌஹித் ரிதோய் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.

சர்க்கார் 11 பவுண்டறிகள், ஒரு சிச்ஸுடன் 68 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். (130 - 3 விக்)

அதே மொத்த எண்ணிக்கையில் மஹ்முதுல்லா ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினார்.

ஆனால், முஷ்பிக்குர் ரஹிம் (25), மெஹிதி ஹசன் மிராஸ் (12), தன்ஸிம் ஹசன் சக்கிப் (18) ஆகியோர் தௌஹித் ரிதோய்க்கு சிறப்பான பங்களிப்பு வழங்கினர்.

ஒரு பக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தௌஹித் ரிதோய், பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் தஸ்கின் அஹ்மதுடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணியின் மொத்த எண்ணிக்கையை 286 ஓட்டங்களாக உயர்த்தினார்.

தௌஹித் ரிதோய் 102 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 96 ஓட்டங்களுடனும் தஸ்கின் அஹ்மத் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் தனது ஏழாவது ஓவரில் உபாதைக்குள்ளாகி ஒய்வு பெற்ற டில்ஷான் மதுஷன்க 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க.

https://www.virakesari.lk/article/178828

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி; ஒருநாள் தொடரை கைப்பற்றியது

Published By: VISHNU   18 MAR, 2024 | 05:21 PM

image

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியது.

இன்றைய (18) போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 50 ஓவர்கள் நிறைவில் 235 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார்.

அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களையும் சரித் நசங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் 03 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்கள் 40.2 ஓவர்களில் வெற்றி பெற்றது.

அங்கு தன்சித் ஹசன் 84 ஓட்டங்களையும், முஸ்பிகுர் ரஹிம் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

ரிஷாத் ஹொசைன் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 04 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/179059

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவ‌து ஒரு நாள் போட்டி ப‌க‌ல் போட்டி என்றால் ர‌ன் அடிப்ப‌து சிர‌ம‌ம்..........இல‌ங்கை க‌ப்ட‌ன் குசால் மெடின்ஸ் நான‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்தால் தோல்வி அடைந்தார்க‌ள்...............குமார் ச‌ங்க‌க்கார‌ ஜெவ‌த்தான‌விட‌ம் இப்ப‌ இருக்கும் இல‌ங்கை க‌ப்ட‌ன் மார் தெரிந்து கொள்ள‌ நிறைய‌ இருக்கு.............உந்த‌ தொட‌க்க‌ வீர‌ர் பேனான்டோ தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனஞ்சய, கமிந்துவின் சதங்கள் கைகொடுக்க இலங்கை சிறந்த நிலையில் : முதல் நாளில் 13 விக்கெட்கள் சரிவு

22 MAR, 2024 | 08:32 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் குவித்த சதங்களினால் இலங்கை சிறந்த நிலையை அடைந்துள்ளது. 

கமிந்து மெண்டிஸ் தனது கன்னி டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தமை விசேட அம்சமாகும்.

இரண்டு போட்டிகளைக் கொண்ட ஐசிசி டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் ஆரம்பத் தினமான இன்றைய தினம் 13 விக்கெட்கள் சரிந்த போதிலும் ஆட்ட நேர முடிவில் இலங்கை 248 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

அப் பொட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 280 ஓட்டங்ளைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது.

ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து திமுத் கருணாரட்னவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 43 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால், குசல் மெண்டிஸ் (16), திமுத் கருணாரட்ன (17), ஏஞ்சலோ மெத்யூஸ் (5), தினேஷ் சந்திமால் (9) ஆகிய நால்வரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இலங்கை 5 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.

இதன் காரணமாக இலங்கை அணி குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சகல விக்கெட்களையும் இழந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

எனினும், தனஞ்சய டி சில்வா, 20 மாதங்களின் பின்னர் டெஸ்ட் அணிக்கு மீளழைக்கப்பட்ட கமிந்த மெண்டிஸ் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்து சிறப்பான நிலையில் இட்டனர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 6ஆவது விக்கெட்டில் பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை சார்பாக பகிரப்பட்ட அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.

தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் மிகுந்த அனுபவசாலிபோல் துடுப்பெடுத்தாடி 127 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 102 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தனஞ்சய டி சில்வா 131 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 102 ஓட்டங்களைப் பெற்றனர்.

அவர்கள் இருவரும் கூட்டாக 204 ஓட்டங்களைப் பெற்றிராவிட்டால் இலங்கையின் நிலை தர்மசங்கடமாகியிருக்கும்.

அவர்கள் இருவரும் சதங்கள் குவித்த பின்னர் தொடர்ந்து பொறுமையுடன் துடுப்பெடுத்தாடியிருந்தால் அணிக்கு இன்னும் நலமாக     அமைந்திருக்கும்.

அவர்கள் இருவர் உட்பட இலங்கையின் கடைசி 5 விக்கெட்கள் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன.

பந்துவீச்சில் காலித் அஹ்மத் 72 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நஹித் ரானா 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கசுன் ரஜித்த 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இன்றைய தினம் சரிந்த13 விக்கெட்களில் ஒன்றைத் தவிர்ந்த மற்றைய 12 விக்கெட்களையும் வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியிருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் சனிக்கிழமை (23) தொடரும்போது விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜித்த ஆகியோரும் லஹிரு குமாரவும் சரியான இலக்குளை நோக்கி பந்துவீசி பங்களாதேஷை நெருக்கடிக்குள்ளாக்குவது இலங்கைக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தும். 

https://www.virakesari.lk/article/179466

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்துவீச்சில் விஷ்வா, லஹிரு, ராஜித்த அபாரம் : 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மீதமிருக்க 211 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை

23 MAR, 2024 | 08:00 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சில்ஹெட் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் 2ஆவது  இன்னிங்ஸில்  5 விக்கெட்கள் மீதம் இருக்க இலங்கை 211 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டியில் விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, கசுன் ராஜித்த ஆகிய மூவரும் மிகச் சிறப்பாக பந்துவிசியதன் பலனாகவே இலங்கை முன்னிலையில் இருக்கிறது.

சுமாரான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட இப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை இன்று சனிக்கிழமை (23) 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இப் போட்டியில் 3 நாட்கள் மீதம் இருப்பதால் எந்த அணியும் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையினால் தனது மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 150 ஓட்டங்களை சேர்த்தால் இப் போட்டியில் வெற்றி பெற்று முதலாவது ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெறக்கூடியதாக இருக்கும்.

எனவே, நாளைய மூன்றாம் நாள் ஆட்டம் தொடரும்போது தனஞ்சய டி சில்வாவும் இராக்காப்பாளன் விஷ்வா பெர்னாண்டோவும் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் துடுப்பெடுத்தாடி குறைந்தது ஒரு மணித்தியாலம் விக்கெட்களைத் தக்கவைத்துக்கொண்டு ஓட்டங்களைப் பெற முயற்சிக்கவேண்டும்.

வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது.

தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் தலா 102 ஓட்டங்களைப் பெற்றதுடன் 6ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையைப் பலப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்து முதல்  இன்னிங்ஸில்  துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இன்று காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி சகல விக்கெட்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

 

 

துடுப்பாட்டத்தில் தய்ஜுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், காலித் அஹ்மத் ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, லஹிரு குமார ஆகியோர் 10 விக்கெட்களையும் பகிர்ந்துகொண்டனர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 92 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இலங்கை, 2ஆவது இன்னிங்ஸில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பிரகாசிக்கவில்லை.

நிஷான் மதுஷ்க (10), குசல் மெண்டிஸ் (3), ஏஞ்சலோ மெத்யூஸ் (22) ஆகியோர் குறைந்த எண்ணிக்கைகளுடனும் தினேஷ்  சந்திமால் ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழந்தனர். (64 - 4 விக்.)

 

 

மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரட்ன 101 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார். தனது 36ஆவது டெஸ்ட் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த சொற்ப நேரத்தில் திமுத் கருணாரடன, தலை உயர பந்தை அடிக்க விளைந்து பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

திமுத் கருணாரட்னவும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஆட்ட நேர முடிவில் தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களுடனும் விஷ்வா பெர்னாண்டோ 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

 

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 280 (தனஞ்சய டி சில்வா 102, கமிந்து மெண்டிஸ் 102, காலித் அஹ்மத் 72 - 3 விக்., நஹித் ரானா 87 - 3 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 188 (தய்ஜுல் இஸ்லாம் 47, லிட்டன் தாஸ் 25, காலித் அஹ்மத் 22, விஷ்வா பெர்னாண்டோ 48 - 4 விக்., லஹிரு குமார 31 - 3 விக்., கசுன் ராஜித்த 56 - 3 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 119 - 5 விக். (திமுத் கருணாரட்ன 52, தனஞ்சய டி சில்வா 23 ஆ.இ., ஏஞ்சலோ மெத்யூஸ் 22, நஹித் ரானா 42 - 2 விக்., மெஹிதி ஹசன் மிராஸ் 5 - 1 விக்.)

https://www.virakesari.lk/article/179540

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத‌லாவ‌து போட்டியில் இல‌ங்கை வீர‌ர்க‌ள் 2 பேர் 4செஞ்ச‌ரி அடிச்சு இருக்கின‌ம்..........இல‌ங்கை வெற்றி உறுதி..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Sri Lanka FlagSri Lanka         280 & 418
Bangladesh FlagBangladesh     (13 ov, T:511) 188 & 47/5

Day 3 - Bangladesh need 464 runs.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனஞ்சய, கமிந்து 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து சாதனை; வெற்றியின் விளிம்பில் இலங்கை

Published By: VISHNU   24 MAR, 2024 | 09:53 PM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் சதங்கள் குவித்து சாதனை படைக்க, இலங்கை வெற்றியை அண்மித்துள்ளது.

2403_dananjaya_de_silva.png

அதேவேளை, பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, கசுன் ராஜித்த ஆகியோர் தங்களாலான அதிசிறந்த பங்களிப்பை வழங்கி பங்காதேஷை திணறச் செய்துள்ளனர்.

தனஞ்சய  டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்ததன் பலனாக பங்களாதேஷின் வெற்றி இலக்கு மிகவும் கடினமான 511 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

2403_kanindu_mendis.png

இந்த வெற்றி இலக்கை நோக்கி மூன்றாம் நாள் கடைசி ஆட்டநேர பகுதியில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வியை எதிர்கொண்டுள்ளது.

viswa.png

விஷ்வா பெர்னாண்டோ 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கசுன் ராஜித்த, லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

போட்டியில் மேலும் இரண்டு நாட்கள் மீதம் இருப்பதால் இலங்கை இலகுவாக வெற்றிபெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும்  போட்டியின் நான்காம் நாளான திங்கட்கிழமை (25) பகல் வேளையில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் பங்களாதேஷின் எஞ்சிய 5 விக்கெட்களை இலங்கை வீழ்த்தி வெற்றி ஈட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்களிலிருந்து இலங்கை தொடர்ந்தது.

மொத்த எண்ணிக்கை 126 ஓட்டங்களாக இருந்தபோது இராகாப்பாளன் விஷ்வா பெர்னாண்டோ 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இந் நிலையில் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த முதலாவது இன்னிங்ஸ் ஹீரோக்களான தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் 173 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

முதலாவது இன்னிங்ஸில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 202 ஓட்டங்களைப் பகிரந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் தலா 102 ஓட்டங்களைப் பெற்ற தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது இன்னிங்ஸில் முறையே 108 ஓட்டங்களையும் 164 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கையின் 42 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் அணித் தலைவர் ஒருவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்ததும் இரண்டு வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்ததும் இதுவே முதல் தடவையாகும்.

அவுஸ்திரேலியாவின் செப்பல் சகோதரர்களான இயன், க்றெக் ஆகியோர் நியூஸிலாந்துக்கு எதிரான 1974இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து 50 வருடங்களின் பின்னர் இந்த அரிய சாதணையை தனஞ்சயவும் கமிந்துவும் நிலைநாட்டியுள்ளனர்.

பங்களாதேஷுக்கு எதிராக சட்டக்ரோம் விளையாட்டரங்கில் குமார் சங்கக்கார இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் (319, 105) குவித்து பத்து வருடங்களின் பின்னர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இலங்கை வீரர் அல்லது வீரர்கள் சதங்கள் குவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

டுலீப் மெண்டிஸ், அசன்க குருசிங்க, அரவிந்த டி சில்வா (2 தடவைகள்), திலக்கரட்ன டில்ஷான், குமார் சங்கக்கார (2 தடவைகள்) ஆகியோரே இதற்கு முன்னர் ஒரே டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த இலங்கை வீரர்களாவர்.

இரண்டாவது இன்னிங்ஸில் 179 பந்துகளை எதிர்கொண்ட தனஞ்சய டி சில்வா  9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 108 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மிகக் கவனக் குறைவான அடி மூலம் ஆட்டம் இழந்தார்.

அவர் 94 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது அவரது கையுறையை உராய்ந்து சென்ற பந்தை விக்கெட் காப்பாளர் லிட்டன் தாஸ் பிடித்தார். ஆனால், அதற்கான கேள்வியை பங்களாதேஷ் வீரர்கள் எழுப்பாததால் தனஞ்சயவுக்கு சதம் குவிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 8ஆவது விக்கெட்டில் ப்ரபாத் ஜயசூரியவுடன் 67 ஓட்டங்களையும் கடைசி விக்கெட்டில் கசுன் ராஜித்தவுடன் 52 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

எட்டாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 237 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 164 ஓட்டங்களைக் குவித்தார்.

இலங்கை சார்பாக 8ஆம் இலக்க வீரர் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குவித்த அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

அவருக்கு பக்கபலமாக 8ஆவது விக்கெட்டில் ஜோடியாக துடுப்பெடுத்தாடிய ப்ரபாத் ஜயசூரிய 25 ஓட்டங்களைப் பெற்றார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அது அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக பதிவாகியது.

கடைசி விக்கெட்டில் பகிரப்பட்ட 52 ஓட்டங்களில் கசுன் ராஜித்தவின் பங்களிப்பு ஆட்டமிழக்காத 4 ஓட்டங்களாக இருந்தது.

பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்களையும் தய்ஜுல் இஸ்லாம், நஹித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 280 (தனஞ்சய டி சில்வா 102, கமிந்து மெண்டிஸ் 102, காலித் அஹ்மத் 72 - 3 விக்., நஹித் ரானா 87 - 3 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 188 (தய்ஜுல் இஸ்லாம் 47, லிட்டன் தாஸ் 25, காலித் அஹ்மத் 22, விஷ்வா பெர்னாண்டோ 48 - 4 விக்., லஹிரு குமார 31 - 3 விக்., கசுன் ராஜித்த 56 - 3 விக்.)

இலங்கை 2ஆவது இன்:  சகலரும்  ஆட்டம் இழந்து 418 (கமிந்து மெண்டிஸ் 164, தனஞ்சய டி சில்வா 108, திமுத் கருணாரட்ன 52, ப்ரபாத் ஜயசூரிய 25, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெஹிதி ஹசன் மிராஸ் 74 - 4 விக்., தய்ஜுல் இஸ்லாம் 75 - 2 விக்., நஹித் ரானா 128 - 2 விக்.)

பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 511 ஓட்டங்கள்) 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 47 - 5 விக். (ஸக்கிர் ஹசன் 19, விஷ்வா பெர்னாண்டோ 13 - 3 விக், லஹிரு குமார 6 - 1 விக்., கசுன் ராஜித்த 19 - 1 விக்.)

https://www.virakesari.lk/article/179606

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்க‌ளாதேஸ் இர‌ண்டாவ‌து இனிங்சில் 5விக்கேட்டை ப‌றி கொடுத்து விட்ட‌து நாளையோட‌ முத‌லாவ‌து ரெஸ் விளையாட்டு முடிந்து விடும்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

338ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் இல‌ங்கை வெற்றி.............20ஓவ‌ர் விளையாட்டும் ஜ‌பிஎல் போன்ற‌ ப‌ண‌ ம‌ழையால் ஜ‌ந்து நாள் விளையாட்டு மூன்றர‌ நாளில் முடிந்து விடுது மிஞ்சி போனால் நாளு நாளில் அனைத்து ரெஸ் போட்டிக‌ளும் முடிந்து விடுது..............ஜ‌ந்து நாள் விளையாட்டில் நிலைத்து நின்று ஆட‌ முய‌ற்ச்சி ப‌ண்ண‌னும்............தோல்வி நிலை வரும் போது ப‌ந்தை மெது மெதுவாய் த‌ட்டி விளையாட்டை ச‌ம‌ நிலையில் முடிக்க‌ பார்க்க‌னும்
328ர‌ன்ஸ்சில் தோப்ப‌து வெக்க‌க் கேடு😁😁😁😁😁😁😁😁..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை 328 ஓட்டங்களால் வென்ற இலங்கை, முதலாவது ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளையும் பெற்றது

25 MAR, 2024 | 02:37 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 328 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

இதன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இலங்கை முதலாவது வெற்றிப் புள்ளிகளைப் (12) பெற்றுக்கொண்டது.

ஓட்டங்கள் ரீதியாக இலங்கை ஈட்டிய இரண்டாவது மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

இதற்கு முன்னர் பங்களாதேஷுக்கு எதிராகவே மிகப் பெரிய வெற்றியை இலங்கை ஈட்டியிருந்தது. சட்டோக்ரோமில் 2009இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 465 ஓட்டங்களால் பங்களாதேஷை இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

2503_kasun_rajitha_sl_vs_bang.png

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 2 இன்னிங்ஸ்களிலும் குவித்த சாதனைமிகு சதங்கள், கசுன் ராஜித்தவின் 8 விக்கெட் குவியல், விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோரின் மிகத் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கையை இலகுவாக வெற்றி அடையச் செய்தது.

இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கையின் வேகப் பந்துவீச்சாளர்கள் மூவரும் பங்களாதேஷின் 20 விக்கெட்களையும் கைப்பற்றியமை விசேட அம்சமாகும்.

நினைத்துப் பார்க்க முடியாததும் கடினமானதுமான 511 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 4ஆம் நாளான இன்று திங்கட்கிழமை (25) மதிய போசன இடைவேளைக்கு சற்று பின்னர் சகல விக்கெட்களையும் இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

போட்டியின் மூன்றாம் நாள் பிற்பகல் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டு அடுத்தடுத்து விக்கெட்களை தாரைவார்த்தது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையிலிருந்த பங்களாதேஷ், நான்காம் நாளான இன்று காலை ஆட்டத்தைத் தொடர்ந்தது.

மொமினுள் ஹக் 7 ஓட்டங்களுடனும் தய்ஜுல் இஸ்லாம் 6 ஓட்டங்களுடனும் தங்களது துடுப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

தய்ஜுல் இஸ்லாம் அதே எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தார். (51 - 6 விக்.)

அதனைத் தொடர்ந்து மொமினுள் ஹக், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 7 ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மிராஸ் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து மொமினுள் ஹக், ஷொரிபுல் இஸ்லாம் ஆகிய இருவரும்  8ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை சற்று தாமதித்தனர்.

ஆனால், ஷொரிபுல் இஸ்லாம் (12) உட்பட கடைசி 3 விக்கெட்கள் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிய இலங்கையின் வெற்றி உறுதியாயிற்று.

மொமினுள் ஹக் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 148 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 87 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

2503_mominul_haq_bang_vs_sl.png

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 280 (தனஞ்சய டி சில்வா 102, கமிந்து மெண்டிஸ் 102, காலித் அஹ்மத் 72 - 3 விக்., நஹித் ரானா 87 - 3 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 188 (தய்ஜுல் இஸ்லாம் 47, லிட்டன் தாஸ் 25, காலித் அஹ்மத் 22, விஷ்வா பெர்னாண்டோ 48 - 4 விக்., லஹிரு குமார 31 - 3 விக்., கசுன் ராஜித்த 56 - 3 விக்.)

இலங்கை 2ஆவது இன்:  சகலரும்  ஆட்டம் இழந்து 418 (கமிந்து மெண்டிஸ் 164, தனஞ்சய டி சில்வா 108, திமுத் கருணாரட்ன 52, ப்ரபாத் ஜயசூரிய 25, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெஹிதி ஹசன் மிராஸ் 74 - 4 விக்., தய்ஜுல் இஸ்லாம் 75 - 2 விக்., நஹித் ரானா 128 - 2 விக்.)

பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 511 ஓட்டங்கள்) சகலரும் ஆட்டம் இழந்து 182 (மொமினுள் ஹக் 87 ஆ.இ., மெஹிதி ஹசன் மிராஸ் 33, ஸக்கிர் ஹசன் 19, ஷொரிபுல் இஸ்லாம் 12, கசுன் ராஜித்த 56 - 5 விக்., விஷ்வா பெர்னாண்டோ 36 - 3 விக்., லஹிரு குமார 39 - 2 விக்.)

ஆட்டநாயகன்: தனஞ்சய டி சில்வா

https://www.virakesari.lk/article/179662

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்தார் கமிந்து மெண்டிஸ்

25 MAR, 2024 | 04:05 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கமிந்து மெண்டிஸ், 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

ஏழாவது அல்லது அதைவிட கீழ் வரிசை  இலக்கத்தில் துடுப்பெடுத்தாடி ஒரே டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமைக்குரிய சாதனையையே கமிந்து மெண்டிஸ் நிலைநாட்டினார்.

பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (25) நிறைவுக்கு வந்து முதலாவது டெஸ்ட் போட்டியில் 328 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.

kamindu-medis-record.gif

இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றிபெறுவதற்கு முக்கிய பங்காற்றிய ஐவரில் கமிந்து மெண்டிஸும் ஒருவராவார்.

போட்டியின் முதலாம் நாளான கடந்த வெள்ளிக்கிழமை (22) இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று திணறிக்கொண்டிருந்தபோது அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் 7ஆம் இலக்க வீரராக இணைந்த கமிந்து மெண்டிஸ், 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அவர்கள் இருவரும் தலா 102 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தனர். இதன் பலனாக இலங்கை 280 ஓட்டங்ளைப் பெற்றது.

பங்ளாதேஷை 188 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய பின்னர் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

அன்றைய தினம் 5ஆவது விக்கெட் வீழ்ந்தபோது தனஞ்சய டி சில்வாவுடன் இராகாப்பாளராக விஷ்வா பெர்னாண்டோ இணைந்து அன்றைய நாளை மேலதிக விக்கெட் இழப்பின்றி முடிவுக்கு கொண்டுவந்தார்.

ஆனால், போட்டியின் மூன்றாம் நாள் காலை விஷ்வா பெர்னாண்டோ ஆட்டம் இழந்ததும் 8ஆம் இலக்க வீரராக களம் நுழைந்த கமிந்து மெண்டிஸ், மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி இலங்கை அணியை மீட்டெடுத்தார்.

இதனிடையே தனஞ்சய டி சில்வா 108 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவருடன் 7ஆவது விக்கெட்டில் 173 ஓட்டங்களைப் பகிர்ந்த கமிந்து மெண்டிஸ் சதம் குவித்ததன் மூலம் கீழ் வரிசையில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது வீரர் என்ற அற்புதமான சாதனையை நிலைநாட்டினார்.

இதேவேளை,  இலங்கை சார்பாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது அணித் தலைவர் என்ற அரிய சாதனையை தனஞ்சய டி சில்வா நிலைநாட்டினார்.

அதேவேளை தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது இலங்கை ஜோடி என்ற மற்றொரு சாதனையை நிலைநாட்டினர்.

அவர்களது சதங்களின் உதவியுடன் 2ஆவது இன்னிங்ஸில் இலங்கை 418 ஓட்டங்களைக் குவித்தது.

டெஸ்ட் போட்டி ஒன்றில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த மூன்றாவது ஜோடி

கடந்த 50 வருடங்களில் டெஸ்ட் போட்டி ஒன்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையை தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் 1974இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் செப்பெல் சகோதரர்களான இயன் (145, 121) மற்றும் க்றெக் (247, 133) ஆகியோரே முதன் முதலில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது ஜோடி என்ற சாதனையை நிலைநாட்டினர்.

thadata-f.gif

40 வருடங்கள் கழித்து அவுஸ்திரேலியாவுக்கு எதராக நடுநிலையான அபு தாபியில் 2014இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தானின் அஸார் அலி (109, 100 ஆ.இ.), மிஸ்பா உல் ஹக் (101, 101 ஆ.இ.) ஆகிய இருவரும் சதங்கள் குவித்திருந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து அந்த சாதனைக்கான ஏடுகளில் இப்போது தனஞ்சய டி சில்வாவும், கமிந்து மெண்டிஸும் இணைந்துகொண்டுள்ளனர்.

இதில் ஒரு விசேடம் என்னவென்றால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மூலம் காலியில் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான கமிந்து மெண்டிஸ் அதன் பின்னர் இப்போதுதான் மீளழைக்கப்பட்டுள்ளார்.

தனது மீள்வருகையில் ஒரே போட்டியில் முதலிரண்டு சதங்களைக் குவித்தன் மூலம் கமிந்து மெண்டிஸ் பெரும் பாராட்டைப் பெற்றார்.

பங்களாதேஷ் 2ஆவது இன்னிங்ஸில் 182 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.

https://www.virakesari.lk/article/179677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடும்போக்குக்கு கடும்போக்கு, அமைத்திக்கு அமைதி; பங்களாதேஷ் ஊடகத்திற்கு தனஞ்சய பதில்

Published By: VISHNU   30 MAR, 2024 | 01:21 AM

image

(நெவில் அன்தனி)

அவர்கள் (பங்களாதேஷ்) கடும்போக்கைக் கடைப்பிடித்தால் நாங்களும் கடும்போக்கை கையாள்வோம். அவர்கள் அமைதியைக் கடைப்பிடித்தால் நாங்களும் அமைதியைப் பேணுவோம் என ஊடகவியலாளர்களிடம் இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.

சட்டோக்ராமில் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டிக்கு முன்னர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்களாதேஷ் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் தனஞ்சய டி சில்வா இதனைக் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஷக்கிப் அல் ஹசனுக்கென ஏதாவது திட்டம் உள்ளதா? அவரைப்பற்றி என்ன கருதுகிறீர்கள்? என தனஞ்சய டி சில்வாவிடம் கேட்கப்பட்டபோது, 'திட்டங்கள் பற்றி இப்போது என்னால் கூறமுடியாது. அத்துடன் அவர் எனது அணியில் இல்லாததால் அவர் பற்றி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவரைப் பற்றி பங்களாதேஷ் அணியிடம் தான் கெட்கவேண்டும். எனக்கு அது பொருத்தமான கேள்வி அல்ல. தவறாக என்னிடம் கேட்கிறீர்கள்' என பதிலளித்தார்.

கசுன் ராஜித்த உபாதைக்குள்ளானதால் அசித்த பெர்னாண்டோ குழாத்தில் இணைந்துள்ளதுபற்றி என்ன நினைக்கிறீரர்கள் என அவரிடம் கேட்கப்பட்டதற்கு,

'நான் ஏற்கனவே கூறியதுபோல் வேகப்பந்துவீச்சாளர்களில் 1, 2, 3 என யாரையும் தரப்படுத்த மாட்டேன். யார் அணிக்குள் வந்தாலும் அவரது கடமையை நிறைவேற்றுவதற்கு அவர் தெரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அசித்த சிறப்பாக விளையாடியிருந்தார். அவர் இங்கும் சிறந்த பங்களிப்பை வழங்குவார் என நான் நினைக்கிறேன்' என பதிலளித்தார்.

சட்டோக்ராம் ஆடுகளம் பற்றி கருத்து வெளியிட்ட அவர்,

'சட்டோக்ராம் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமையும் என கருதுகிறேன். ஆனால், கடைசி நாட்களில் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்ப வாய்ப்பு உள்ளது. ஒரே நேரத்தில் எல்லா துடுப்பாட்ட வீரர்களும்   பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. எமது முன்வரிசை வீரர்கள் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் திறமையாகத் துடுப்பெடுத்தாடியிருந்தனர். கடந்த போட்டியில் அவர்கள் பிரகாசிக்கவில்லை. ஆனால் இந்த டெஸ்டில் எமது முன்வரிசை வீரர்கள் பிரகாசிப்பார்கள் என நம்புகிறேன். அவர்கள் பிரகாசித்தால் எனக்கும் கமிந்துக்கும் துடுப்பெடுத்தாட வேண்டிய அவசியம் ஏற்படாது என நான் கருதுகிறேன்' என்றார்.

இது இவ்வாறிருக்க, பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 328 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இலங்கை, சட்டோக்ராமில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது.

அதேவேளை, தொடரை சமப்படுத்த பங்களாதேஷ் முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த மைதானத்தில் இலங்கையும் பங்களாதேஷும் சந்தித்துக்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகளில் 2இல் இலங்கை வெற்றி பெற்றதுடன் மற்றைய 3 டெஸ்ட் போட்டிகளும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

சில்ஹெட் மைதானத்தில் இலங்கையின் வேகபந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி 20 விக்கெட்களையும் பகிர்ந்துகொண்டிருந்தனர். ஆனால், சட்டோக்ராம் ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு உகந்ததாகும்.

இதன் காரணமாக இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஒருவருக்குப் பதிலாக சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸ் அணியில் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இது இவ்வாறிருக்க, இலங்கையின் முன்வரிசை வீரர்கள், குறிப்பாக சிரேஷ்ட வீரர்கள் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுவது அவசியமாகும்.

அணிகள்

இரண்டாவது டெஸ்டுக்கான இலங்கை அணியில் பெரும்பாலும் நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், ப்ரபாத் ஜயசூரிய, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார அல்லது அசித்த பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெறுவர்.

பங்களாதேஷ் அணியில் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் அணித் தலைவர் சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் மீண்டும் இணைந்துள்ளதுடன் அவர் இறுதி அணியில் இடம்பெறுவது உறுதி.

பங்களாதேஷ் அணியில் மஹ்முதுல் ஹசன் ஜோய், ஸக்கிர் ஹசன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), மொமினுள் ஹக், ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தய்ஜுல் இஸ்லாம், ஷொரிபுல் இஸ்லாம், காலித் அஹ்மத், நஹித் ரானா அல்லது ஹசன் மஹ்முத் ஆகியோர் இடம்பெறுவர்.

https://www.virakesari.lk/article/179991

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மேலும் 3 வீரர்கள் அரைச் சதங்கள் குவித்து அசத்தல்; கடைசி 4 விக்கெட்களில் கமிந்து 120 ஓட்டங்கள் பகிர்வு

Published By: VISHNU   31 MAR, 2024 | 08:34 PM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராமில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் மேலும் 3 வீரர்கள் அரைச் சதங்களைப் பெற்றதன் பலனாக இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 531 ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையில் இருக்கிறது.

3103_kaminidu_mendis__sl_vs_bang.png

இந்த எண்ணிக்கையானது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் சதம் குவிக்கப்படமலே பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

நியூஸிலாந்துக்கு எதிராக 1976இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 9 விக்கெட்களை இழந்து பெற்ற 524 ஓட்டங்களே சதம் குவிக்கப்படாமல் பெறப்பட்ட அதிகூடிய முந்தைய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

3103_dananjaya_de_silva.png

நேற்று சனிக்கிழமை (30) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ் ஆகியோர் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 4 விக்கெட்களை இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கமிந்து மெண்டிஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி கடைசி நால்வருடன் 120 விக்கெட்களைப் பகிர்ந்து துரதிர்ஷ்டவசமாக 92 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவர் தனது முதல் 4 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் முறையே 61 (எதிர் அவுஸ்திரேலியா 2022), 102 மற்றும் 164 (எதிர் பங்களாதேஷ் - 1ஆவது டெஸ்ட் 2024), 92 ஆ.இ. (எதிர் பங்களாதேஷ் - 2ஆவது டெஸ்ட் 2024) என்ற எண்ணிக்கைகளுடன் மொத்தமாக 419 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் ஜாவேட் மியண்டாடின் முதல் 4 இன்னிங்ஸ்களுக்கான மொத்த எண்ணிக்கைக்குரிய சாதனையை  கமிந்து    மெண்டிஸ் சமப்படுத்தியுள்ளார்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை, மேலும் மூவரின் அரைச் சதங்களின் உதவியுடன் மொத்த எண்ணிக்கையை 531 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது.

சில்ஹெட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ், இந்தப் போட்டியிலும் சதம் குவித்து அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி வீரர் அசித்த பெர்னாண்டோ ரன் அவுட் ஆனதால் அவரது சதம் குவிக்கும் எதிர்ப்பார்ப்பு தவிடுபொடியானது.

இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை இலங்கை தொடர்ந்தபோது தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

தினேஷ் சந்திமால் 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த முதல் டெஸ்ட் நாயகர்களான தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் நிதனாத்துடன் துடுப்பெடுத்தாடினர். ஆனால், முதல் டெஸ்டில் போன்று அவர்களால் சாதிக்க முடியாமல் போனது.

தனஞ்சய டி சில்வா 70 ஓட்டங்களுடன் 6ஆவதாக ஆட்டம் இழந்தபோது இலங்கையின் மொத்த எண்ணிக்கை 411 ஓட்டங்களாக இருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் கமிந்து மெண்டிஸ் 17 ஓட்டங்களுடன் மறுபக்கத்தில் இருந்தார்.

அதன் பின்னர் பொறுப்புணர்வுடனும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் கடைசி 4 விக்கெட்களில் 120 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மேலும் பலம் சேர்த்தார்.

ப்ரபாத் ஜயசூரியவுடன் 7ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்த கமிந்து மெண்டிஸ், தொடர்ந்து விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ ஆகியோருடன் கடைசி 3 விக்கெட்களில் மேலும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

சுமார் 4 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 167 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 92 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ஷக்கிப் அல் ஹசன் 3 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் பிரகாரம் இலங்கை அணி 476 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 531 (குசல் மெண்டிஸ் 93, கமிந்து மெண்டிஸ் 92 ஆ.இ., திமுத் கருணாரட்ன 86, தனஞ்சய டி சில்வா 70, தினேஷ் சந்திமால் 59, நிஷான் மதுஷ்க 57, ப்ரபாத் ஜயசூரிய 28, ஏஞ்சலோ மெத்யூஸ் 23, ஷக்கப் அல் ஹசன் 110 - 3 விக்., ஹசன் மஹ்முத் 92 - 2 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 55 - 1 விக். (ஸக்கிர் கான் 29 ஆ.இ., மஹ்முதுல் ஹசன் ஜோய் 21, லஹிரு குமார 4 - 1 விக்.)

https://www.virakesari.lk/article/180088

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்துக்கு மத்தியில் பலமான நிலையில் இலங்கை

Published By: VISHNU   01 APR, 2024 | 07:32 PM

image

(நெவில் அன்தனி)

சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் பங்களாதேஷுக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 455 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.

0104_asitha_fdo_sl_vs_bang.png

முதலாவது இன்னிங்கில் 6 துடுப்பாட்ட வீரர்கள் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் 531 ஓட்டங்களைக் குவித்த இலங்கை, பங்களாதேஷை அதன் முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.

0104_angelo_mathews__sl_vs_bang.png

பங்களாதேஷை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக 190 ஓட்டங்களுக்குள் இலங்கை கட்டுப்படுத்தியமை குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். முதலாவது போட்டியில் பங்களாதேஷ் 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 188 ஓட்டங்களையும் 182 ஓட்டங்களையும் பெற்றது.

அசித்த பெர்னாண்டோ, லிஹரு குமார, விஷ்வா பெர்னாண்டோ, ப்ரபாத் ஜயசூரிய ஆகியோர் திறமையாக பந்துவீசி பங்களாதேஷுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 353 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இலங்கை, இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்தை  எதிர்கொண்டது.

பங்களாதேஷின் அறிமுக வீரர் ஹசன் மஹ்முத், தனது 14ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் காலித் அஹ்மத் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி 6 விக்கெட்களைப் பகிர இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

திமுத் கருணாரட்ன (4), குசல் மெண்டிஸ் (2) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இலங்கை 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

இந் நிலையில் நிஷான் மதுஷ்கவும் ஏஞ்சலோ மெத்யூஸும் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியைத் தற்காலிகமாக தடுத்தனர்.

எனினும் நிஷான் மதுஷ்க (34) உட்பட வீரர்கள் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தங்களது விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

தினேஷ் சந்திமால் (9), தனஞ்சய டி சில்வா (1), கமிந்து மெண்டிஸ் (9) ஆகியோர் கவனக்குறைவால் ஆட்டம் இழந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ் 39 ஓட்டங்களுடனும் ப்ரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் காலித் அஹ்மத் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று திங்கட்கிழமை (01) காலை தனது முதலாவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஒரு கட்டத்தில் 96 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து நல்ல நிலையில் இருந்த பங்களாதேஷ், எஞ்சிய 9 விக்கெட்களை 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

துடுப்பாட்டத்தில் ஸக்கிர் ஹசன் (54), மொமினுள் ஹக் (33), தய்ஜுல் இஸ்லாம் (22) மஹ்முதுல் ஹசன் ஜோய் (21) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லஹிரு குமார 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் பங்களாதேஷ் அணி அதிசயம் நிகழ்த்தினாலன்றி இலங்கையின் வெற்றியையும் தொடர் வெற்றியையும் தடுக்க முடியாமல் போகும்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 531 (குசல் மெண்டிஸ் 93, கமிந்து மெண்டிஸ் 92 ஆ.இ., திமுத் கருணாரட்ன 86, தனஞ்சய டி சில்வா 70, தினேஷ் சந்திமால் 59, நிஷான் மதுஷ்க 57, ப்ரபாத் ஜயசூரிய 28, ஏஞ்சலோ மெத்யூஸ் 23, ஷக்கிப் அல் ஹசன் 110 - 3 விக்., ஹசன் மஹ்முத் 92 - 2 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 178 (ஸக்கிர் கான் 54, மொமினுள் ஹக் 33, தய்ஜுல் இஸ்லாம் 22, மஹ்முதுல் ஹசன் ஜோய் 21, அசித்த பெர்னாண்டோ 34 - 4 விக்., லஹிரு குமார 19 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 38 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 65 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 102 - 6 விக். (ஏஞ்சலோ மெத்யூஸ் 39 ஆ.இ., நிஷான் மதுஷ்க 34, ஹசன் மஹ்முத் 51 - 4 விக்., காலித் அஹ்மத் 29 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/180187

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்ரபாத், கமிந்துவின் சுழல்பந்துவீச்சு ஆற்றல்களால் தொடர் வெற்றியை அண்மித்துள்ளது இலங்கை

Published By: VISHNU   02 APR, 2024 | 07:56 PM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்களான ப்ரபாத் ஜயசூரிய, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியதன் பலனாக 2 - 0 என்ற தொடர் வெற்றியை இலங்கை அண்மித்துள்ளது.

0204_sl_vs_bang.jpg

இந்தத் தொடரில் இலங்கையினால் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக நிர்ணயிக்கப்பட்ட 511 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய இலங்கையின் வெற்றிக்கு 3 விக்கெட்கள் தேவைப்படுவதுடன் பங்களாதேஷின் வெற்றிக்கு மேலும் 243 ஓட்டங்கள் தெவைப்படுகிறது.

0204_angelo_mathews.png

இந்த வெற்றி இலக்கை பங்களாதேஷ் அடையுமா என்பது நினைத்துப்பார்க்கக் கூடிய ஒன்றல்ல. ஆனால், விசித்திரமான விளையாட்டான கிரிக்கெட்டில் சாதனைமிகு வெற்றி இலக்குகள் கடக்கப்பட்டுள்ளதை மறக்கலாகாது.

போட்டியின் கடைசி நாளான நாளைய தினம் பங்களாதேஷ் தடுத்தாடும் உத்தியைக் கையாளும் என்பதால் அவ்வணி பெரும் அழுதத்தை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

முதலாவது டெஸ்டிலும் பங்களாதேஷுக்கு 511 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் நிர்ணயித்த இலங்கை 328 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

இந்தத் தொடரில் முதல் தடவையாக இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தி வருவதால் கடைசி தினத்தன்று அவர்கள் பங்களாதேஷை 300 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழக்கச் செய்து விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய கமிந்து மெண்டிஸ் இந்தப் போட்டியில் ஒவ் ஸ்பின் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ள போதிலும் கடைசி நாளன்று அவர் இடது கையாளும் பந்துவீசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சொந்த நாட்டில் மிகவும் இக்கட்டான நிலையில் தனது 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் சார்பாக முன்வரிசை வீரர்கள் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடியபோதிலும் நீண்ட நேரம் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அந்த மூவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவுடன் 3ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்த மொமினுள் ஹக் அரைச் சதத்தைப் பூர்த்திசெய்த சூட்டோடு ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

எனினும் ஆறாவது பந்துவீச்சாளராக அறிமுகமான கமிந்து  மெண்டிஸ் தனது 4ஆவது ஓவரில் அனுபவசாலியான ஷக்கிப் அல் ஹசனின் விக்கெட்டைக் கைப்பற்றி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

இந்த டெஸ்ட் தொடரில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிவந்த கமிந்து மெண்டிஸ் தனக்கு பந்து வீச கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது முதலாவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றி சக வீரர்களின் பலத்த பாராட்டைப் பெற்றார்.

ஷக்கிப் அல் ஹசன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் லிட்டன் தாஸை லஹிரு குமார களம் விட்டு வெளியேற்றினார்.

அதன் பின்னர் ஷஹாடத் ஹொசெய்னை எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழக்கச் செய்த கமிந்து மெண்டிஸ் தனது 2ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் மெஹிதி ஹசன் மிராஸ் 44 ஓட்டங்களுடனும் தய்ஜுல் இஸ்லாம் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

நான்காம் நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டு பங்களாதேஷுக்கு 511 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஏஞ்சலோ மெத்யூஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் அவருக்கு ப்ரபாத் ஜயசூரிய சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.

அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 531 (குசல் மெண்டிஸ் 93, கமிந்து மெண்டிஸ் 92 ஆ.இ., திமுத் கருணாரட்ன 86, தனஞ்சய டி சில்வா 70, தினேஷ் சந்திமால் 59, நிஷான் மதுஷ்க 57, ப்ரபாத் ஜயசூரிய 28, ஏஞ்சலோ மெத்யூஸ் 23, ஷக்கப் அல் ஹசன் 110 - 3 விக்., ஹசன் மஹ்முத் 92 - 2 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: சலரும் ஆட்டம் இழந்து 178 (ஸக்கிர் கான் 54, மொமினுள் ஹக் 33, தய்ஜுல் இஸ்லாம் 22, மஹ்முதுல் ஹசன் ஜோய் 21, அசித்த பெர்னாண்டோ 34 - 4 விக்., லஹிரு குமார 19 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 38 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 65 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 157 - 7 விக். டிக்ளயார்ட் (ஏஞ்சலோ மெத்யூஸ் 56, நிஷான் மதுஷ்க 34, ப்ரபாத் ஜயசூரிய 28 ஆ.இ., ஹசன் மஹ்முத் 65 - 4 விக்., காலித் அஹ்மத் 34 - 2 விக்.)

பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 511 ஓட்டங்கள்) 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 268 - 7 விக். (மொமினுள் ஹக் 50, மெஹிதி ஹசன் மிராஸ் 44 ஆ.இ., லிட்டன் தாஸ் 38, ஷக்கிப் அல் ஹசன் 36, கமிந்து மெண்டிஸ் 22 - 2 விக்., லஹிரு குமார 41 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 79 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/180278

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷுடனான தொடர் வெற்றியை அடுத்து ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை பின்தள்ளியது இலங்கை

Published By: VISHNU

03 APR, 2024 | 07:21 PM
image
 

(நெவில் அன்தனி)

சட்டோக்ராமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை 192 ஓட்டங்களால் வெற்றிகொண்டு தொடரை 2 - 0 என முழுமையாக கைப்பற்றிய  இலங்கை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான அணிகள் நிலையில் பாகிஸ்தானை பின்தள்ளி 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மேலும் 12 வெற்றிப் புள்ளிகளை ஈட்டிய இலங்கை, இதுவரை 2 வெற்றிகளுடன் 24 வெற்றிப் புள்ளிகளை ஈட்டி 50.00 சதவீத புள்ளிகளுடன் 3 இடங்கள் தாவி 4ஆம் இடத்தை அடைந்துள்ளது.

இதனை அடுத்து 2025இல் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இலங்கை சற்று அதிரித்துக்கொண்டுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இந்தியா (68.15%), அவுஸ்திரேலியா (62.50%), நியூஸிலாந்து (50.00%) முதல் 3 இடங்களில் இருக்கின்றன.

2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் தற்போதைய வெற்றியுடன் பெரு உற்சாகம் அடைந்துள்ள இலங்கை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட  தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.

இந்த சுழற்சியில் சொந்த மண்ணில் இலங்கைக்கு இரண்டு தொடர்கள் நடைபெறவுள்ளன. 

இந்த வருட இறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ள இலங்கை, அடுத்த வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவை வரவேற்கவுள்ளது.

இந்த இரண்டு தொடர்களிலும் தலா 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த மூன்று தொடர்களிலும் இலங்கை முழுமையான வெற்றிகளை ஈட்டினால் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியனஷிப் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

https://www.virakesari.lk/article/180364

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.