Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈ.பி.டி.பி அமைப்பில் இருந்து சுயமாக வெளியேறுவது என்பது கரணம் தப்பினால் மரணம் தான்,

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டி.பி அமைப்பில் இருந்து சுயமாக வெளியேறுவது என்பது கரணம் தப்பினால் மரணம் தான், தப்பிஓட முற்படுவோர் டக்ளஸ் குழுவினரால் கொல்லபட்டு பின்னர் புலிகள் கொலை செய்ததாக பிரச்சாரம் செய்யப்படும் - முன்னால் முக்கியஸ்தர் சங்கர் தரும் தகவல்.

ஜ சனிக்கிழமைஇ 29 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் தவராசாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் 2002ம் ஆண்டில் முறுகல்கள் ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இதனால் 2002ல் இவர் இலங்கையை விட்டு வெளியேறி அவுஸரேலியாவில் அகதி தஞ்சம் கோரிய போதும் அது மறுக்கபட்டது. அனைத்து கட்சி குழுவின் உருவாக்கத்தை தீவிரமாக எதிர்த்ததினாலும் அதற்கு எதிராக அறிக்கை விட்டமையால் மகிந்த அரசாங்கத்தால் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக கண்டிக்கபட்டவர். இதனைவிடவும் மகிந்த அரசின் கொலைகள் மனித உரிமை மீறல் தொடர்பாக குரல் கொடுத்தபோது டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தவறாஜாவிற்கும் இடையில் முறுகல் தீவிரமடைந்திருந்தது. இதனை விடவும் டக்ளஸ் சொல்லும் புலிகளின் டபிள் ஏஜன்ராக தவறாஜா செயற்படுவதை இராணுவ உளவுத்துறைகள் ஊடாக டக்ளசிற்கு தெரியவந்ததும் தவறாஜா ஆகஸ்ட் மாதம் 30 திகதி அவருடைய வீசா காலவதியாகும்போது லண்டன் வந்து அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். டாக்டர் விக்னேஸ்வரனின் பிரிவு தொடர்பாக தற்போது மனந்துறந்துள்ள டக்ளஸ் மிக விரைவில் தவறாஜா தொடர்பாகவும் மனந்துறந்து கூறுவார் என்று ஈ.பி. வட்டாரங்கள் தெரிவித்தன. அகதியாக லண்டனில் பதிந்துள்ள தவறாஜா மருத்தவதத்திற்கு சென்றதாக டக்ளஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது. தற்போது லண்டனில் ஈ.பி.டி.பி எற்பாட்டளாராக செயற்படும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் என்ற வன்னி அசோக் தினமுரசு ஆசிரியர் றமேசின் கொலையை அடுத்து லண்டன் வந்து அங்கு உள்ள மிகவும் பிரபலமான ஊடகவியலாளர் ஒருவர் ஊடாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். ஈ.பி.டி.பிக்குள் இருந்த உட்கட்சி விடயங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பாக தொலைபேசியிலும் நேரடியாக சிலரையும் சந்தித்து உரையாடி இருந்தார். இருந்தபோதும் நீண்டநாட்களாக ஈ.பி.டி.பியுடன் தொடர்புகள் இல்லாமல் இருந்தார். இருப்பினும் அண்மைகாலமாக ஈ.பி.டி.பியுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நாட்டிற்கு வந்து செயற்பட கேட்டபோதும் டக்ளஸ் தேவானந்தா புலிகளின் டபிள் ஏஜென்ற் என்ற பயம் காரணமாக லண்டனில் இருந்து செயற்படுமாறு தெரிவித்ததாக சந்திரகுமார் தெரிவித்திருந்தார். இவை இன்றும் கதைத்தவர்களிடம் ஒலிப்பதிவில் உள்ளதாக தகவல்.

இவை சங்கரால் டக்ளசிற்கு சொல்லும் தகவல்.

இலங்கை போன்ற நாட்டில், புரட்சிகர போராட்ட அரசியலிருந்து விலகியிருப்பது சாதாரண விடயமல்ல அது சிங்கள தமிழ் புரட்சிகர அரசியலில் காணப்பட்ட பொதுவான விடயமாகும். பொதுவாகச் சொல்வதானால், தற்போதைய அரசியல் இயக்கப் போக்குகளில் தாம் விரும்பும் பட்சத்தில், இணைந்து செயல்பட வாய்ப்பிருந்தாலும் முரண்பாடு ஏற்படும் பட்சத்தில் சுயமாக பிரிந்து செல்வது அல்லது வெளியேறுவது என்பது தனக்குதானே சவக்குழி தோன்றுவதற்கு ஒப்பானது அல்லது சாதாரணமாகவே துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவது வழக்கமானது. அதுவும் ஈபிடிபி போன்ற அமைப்பில் இருந்து முரண்பாடு எற்படும் பட்சத்தில் சுயமாக வெளியேறுவது என்பது கரணம் தப்பினால் மரணம் தான்.

இதற்கு உதாரணமாக இராமமூர்த்தி என அழைக்கப்படும் சீலன் (முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்) தவறான தகவலின் அடிப்படையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையாகியதையும், ஈபிடிபிக்குள் ஐனநாயகத்தை கொண்டு வருவதற்காக பாடுபட்ட நடராஐh அற்புதராஐh என அழைக்கப்படும் ரமேஸ் (தினமுரசு ஆசிரியரும், பாராளுமன்ற உறுப்பினரும்) சுட்டு கொல்லப்பட்டதையும் குறிப்பிடலாம்.

பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு காலத்திற்கு காலம் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது வழமையானதே. இந்தவகையில் இயக்க தலைவர்களும் வெளிநாடுகளில் தங்கி வாழ்ந்தவர்கள் தான். டக்ளஸ் தேவானாந்தாவும் வருடக்கணக்கில் வெளிநாட்டில் வாழ்ந்தவரே.

இது இவ்வாறிருக்க அரசியலில் அமைதியைப் பேணி வந்த எனது பெயரையும் நான் வசிக்கும் நாட்டையும் காட்டிக் கொடுப்பது இங்கும் எனக்கு ஆபத்தை உண்டு பண்ணும் கபடமான தீயநோக்கத்துடனேயே.. ஓரு கட்சி தலைவராக இருந்து கொண்டு காட்டிக் கொடுப்பது கீழ்த்தரமான துரோகமல்லவா? இப்படி ஐனநாயகம் பன்முகத்தன்மை பற்றி வாய்கிழிய கத்திக் கொண்டு வெளிநாடு சென்று வாழ்பவனையும் பழிதீர்க்க காட்டி கொடுப்பது எவ்வளவு துரோகத்தனமானது. இந்நிலையில் பத்து வருடங்கள் ஈபிடிபி கட்சியுடன் இணைந்து செயற்பட்டதையிட்டு வெட்கப்படுகின்றேன்.

டேவிட் தவராசா எனது உறவினர். அரசாங்க உத்தியோகித்தராக கொழும்பில் கடமை புரிகிறார். டேவிட் தவராசா புலிகளுக்கு உதவினார் எனின் குற்றப்புலனாய்வுத் துறையினர் அவரை அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ கைது செய்திருக்கலாம் அதைவிடுத்து ஈபிடிபி காரியாலயத்திற்கு ஏன் சென்று விசாரிக்க வேண்டும்? அந்தளவுக்கு இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையினர் திறமையற்றவர்களா?

சின்னத்துரை தவராசா புலிகளுக்கு உதவினாரா? என்பது எனது தேவைகளுக்கு அப்பாற்பட்ட விடயம், ஆனால் பத்திரிகை செய்திகளின்படி திரு.தவராசா அவர்களை பொலிசார் தேட ஆரம்பித்து இரண்டாவது நாள் தான் லண்டனுக்கு சென்றார் என்பது உறுதியாகியுள்ள அதேதருணத்தில் அவர் சிகிச்சைக்குத் தானா? சென்றார் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.. காரணம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சிகிச்சைக்காக செல்லும் இத்தருணத்தில் இலங்கையில் இருந்து சிகிச்சைக்காக லண்டன் சென்றார் எனும் கூற்று சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்துள்ளது.

இது இவ்வாறிருக்க எந்தவொரு அரசியல் சார்புமற்ற பொதுமகனான டேவிட் தவராசா மீது இந்த பொய் குற்றச்சாட்டை சுமத்துவதன் நோக்கம் என்ன?

தென்பகுதி இனவாதிகளிடம் புலிஎதிர்ப்பை மையமாக வைத்து புலிகள் சுடுகிறார்கள், வெட்டுகிறார்கள், குத்துகிறார்கள், கிள்ளுகிறார்கள் என கூறிக்கொண்டு தமிழ் மக்கள் சார்பாக எவ்வித அரசியல் கருத்தையும் முன்வைக்காமல் புலியெதிர்ப்பைக் காட்டி தென்பகுதி இனவாதிகளிடம் அரசியல் பிழைப்பு நடத்தி வரும் நீங்கள் தற்போது உங்கள் நகமும் சதையுமான தவராசாவே புலிகளுக்கு உதவினார் என்றவுடன் தென்பகுதி இனவாதிகளை சமாதானப்படுத்துவதற்காக ஓர் அப்பாவிப் பொதுமகனைக் காட்டிக் கொடுக்க முயல்வது எவ்வளவு கேவலமானது.. மக்களையும் கட்சி உறுப்பனர்களையும் காட்டி கொடுப்பது தானே உங்களின் அரசியல் வியாபாரம்.

சங்கர் குணசேகரம் தான் டேவிட் தவராசாவை அறிமுகப்படுத்தினரென என்மீது புலிச்சாயம் பூச முயற்சிக்கும் நீங்கள் கடந்த காலத்தை திரும்பிப் பாருங்கள்

1 ஈபிடிபி உறுப்பினரும் உங்களின் மெய்பாதுகாவலருமாக இருந்த பிரதாப் (களுத்துறையில் நீங்கள் தாக்கப்பட்டு சிங்கப்பூருக்கு சிசிச்சைக்காக சென்றிருந்த போது அங்கும் கூட உங்கள் பாதுகாப்புக்காக வந்திருந்தவர்) புலிகளுக்கு தகவல் வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

2. அமைச்சு அலுவலகத்திற்கு தற்கொலையாளியை அழைத்து வந்தவர் யாழ்ப்பாண ஈபிடிபி காரியாலயத்தில் கடமையாற்றிய பெண் . .

3. உங்கள் காரியாலய அறையில் தொலைபேசி இயக்குனராக இருந்தவர் ரொனால்ட் என்றழைக்கப்படும் புலிகளுக்கெதிராக தீவிரமாக செயல்பட்டு வந்த ஈபிடிபி உறுப்பினர் குண்டுவெடிப்பில் சிக்கிய மறுகணமே தப்பிச் சென்று விட்டார். அவர் தான் புலிகளுக்கு தகவல்களை வழங்கி வந்தார் என்றும் அவர் ஏன் உங்களை இலக்கு வைக்கவில்லை என்கின்ற சந்தேகம் படைத்தரப்பினர் மத்தியில் இன்றும் நிலவுகிறது.

4. திரு. சிவதாசன் முன்னால் பா.உ உங்களது அமைச்சு காரியாலயத்திற்கு வந்து விட்டு திரும்பி செல்லும் வழியில் அவரது வாகனத்திலிருந்து குண்டு வெடித்ததாக பத்திரிகை செய்தி கூறுகிறது.

இவை எதனையும் வெளிக்காட்டாமல் என்னையும் ஒரு பொதுமகனையும் காட்டிக் கொடுத்து பழி தீர்க்க முனைவது எவ்வளவு அயோக்கியத்தனமானது.

தாங்களும் சின்னத்துரை தவராசா நகமும் சதையும் என கூறுகின்றீர்கள் உண்மையில் ஐயெலலிதாவுக்கு சசிகலா என்பது தான் அதன் கருத்து என நான் நம்புகின்றேன்..

மருத்துவர் விக்னேவரனின் தலைவர் சங்கர் தான் என ஏளனமாக தெரிவித்துள்ளீர்கள் இங்கு சங்கர் கிழக்கைச் சேர்ந்தவன் என்பதும் மருத்துவர் விக்னேஸ்வரன் வடக்கை சேர்ந்தவன் என்பதும் கிழக்கை சேர்ந்த ஓருவனின் தலைமையில் தான் இவர் அரசியல் நடத்த முடியும் என்கின்ற தங்களது கபடத்தனமான கீழ்த்தரமான பிரச்சாரங்களை மக்கள் நன்குணர்வர்.

எமது கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாகும். அகில இலங்கை தமிழர் கூட்டணி கட்சியின் பெயராகும். கட்சியில் சில கசப்பான சம்பவங்கள் நடந்தது உண்மையே. இவை தொடர்பாக விக்னேஸ்வரனுடனும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி ஐயாவுடனும் ஈ.பி.ஆர.;எல்.எப் (நாபா) பொதுச் செயலாளர் தோழர் சிறிதரன் (சுகு) அவர்களுடனும் பேசியிருக்கின்றேன். புலிகள் சார்பில்லாத அதேநேரம் அரசசார்பற்று வடகிழக்கு மக்களின் அபிலாசைகளையும் எண்ணங்களையும் புரிந்து கொண்டு அதை வென்றெடுப்பதற்கு உழைக்கும் கட்சியாகவே அகில இலங்கை தமிழர் கூட்டணி செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். மிகவிரைவில் கட்சிக்காக உழைத்த பதிவு செய்வதற்கு பலவழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கியவர்களிடம் கட்சி செல்வதே சிறந்தது இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

பல மேற்குலக நாடுகளில் வாழும் ஈபிடிபி உறுப்பினர்களுக்கு விசா மறுக்கப்பட்டு வருவதாலும், கட்சியை வளர்க்க பாடுபட்டோரில் பலர் கட்சியில் இருந்து ஓதுங்கி வரும் நிலையில் சர்வதேச மன்னிப்பு சபையின் குற்றச்சாட்டுகளால் கலக்கம் அடைந்துள்ள நீங்கள் இவ்வாறு செயற்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல.!!!!

இப்படிக்கு - குணசேகரம் சங்கர்.

http://nitharsanam.com/?art=24476

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.