Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹட்ச் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புறங்களுக்கு மின்சார சைக்கிள்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கல்வி அல்லது தொழில் பயிற்சியை பின்பற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த சாதாரண தரத்திற்கு பிறகும் பாடசாலையில் கல்வி கற்க அமைச்சு அனுமதியளிக்கும் என்றார்.

அதன்படி, குழந்தைகள் தங்கள் பாடசாலைகளை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்களின் கல்வி அல்லது தொழில் பயிற்சியுடன் மேலும் இரண்டு ஆண்டுகள் தொடரலாம். பின்னர், அவர்கள் தொழில் பயிற்சி திட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

“பெரும்பாலான திட்டங்களை நாங்கள் புதுப்பித்துள்ளோம். மொத்தம் 4.3 மில்லியன் மாணவர்கள் தற்போது 10,126 அரசுப் பாடசாலைகளிலும், 300க்கும் மேற்பட்ட சர்வதேசப் பாடசாலைகளிலும், 110க்கும் மேற்பட்ட தனியார் பாடசாலைகளிலும் படித்து வருகின்றனர். இப்போது நாங்கள் கல்வி திட்டத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 75 ஆண்டுகளாக, நாங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததால், நாங்கள் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றினோம்,” என்று அமைச்சர் கூறினார்.

பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியில் இருந்து நடைமுறைக்கு மாறுவதற்கு அல்லது தொகுதிகளை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் விரும்புகிறோம் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/295117

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சிறந்த கல்வி அமைச்சராக திரு ரிச்சட் பதிரணவுக்குப் பின் சுசில் பிரேமஜெயந்தை காண்கின்றேன்.

சென்னை IIT ஐ கண்டியில் ஸ்தாபிப்பது, இப்போது கல்வி அமைச்சு கொண்டு வரும் மாற்றங்களை அவதானிக்கையில் அது தெரிகிறது.

எனினும் Out of box யோசிக்கும் தன்மை, critical thinking எமது கல்வி அமைப்பில் இல்லை என்பது துரதிஷ்டமானது.

Out of box யோசிக்கும் தகமையை எங்கள் கல்வி ஊக்குவிக்க வில்லை. சீனா சிங்கப்பூர் இந்தியா போன்ற நாடுகளிலும் அதுவே நிலைமை. ஆனால் இங்கே கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள கல்வியை நல்ல கல்வி இல்லை என்று சொல்லும் பல இந்தியர்களையும் எங்கள் தமிழர்களையும் காண்கின்றேன்.

சீனா, சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் கணித பாட, விஞ்ஞான பாட அறிவு மட்டமானது அதே வயதுடைய கனேடிய மாணவனை விட அதிகம் என்பது மேற்படி வாதத்தை வைக்கும் நம்மவர் நோக்கு

ஆனால் நோபல் பரிசில் வெற்றி பெற்றோரில் அமெரிக்கரோ அல்லது சீனரோ அதிகம் என்று பார்த்தால் அதில் அமெரிக்கரே அதிகம்

நீங்கள் உங்கள் பிள்ளையை பத்தில் ஒரு மருத்துவராகவோ, பத்தில் ஒரு பொறியியல் ஆளராகவோ உருவாக்க விரும்பினால் சில வேளைகளில் நாம் கற்ற கல்வி முறை உதவலாம். சில வேளை என்று சொல்லக் காரணம் இன்று இது போன்ற வேலைகளுக்கு critical Thinking தேவைப்படுகின்றது. அதை critical thinking ஐ எப்படி வளர்ப்பது என்று புத்தகம் படித்து தேற முடியாது.

ஆனால் உங்கள் பிள்ளை தான் தேர்ந்து எடுத்த துறையில் அதி உச்ச நிலைக்கு வர வேண்டும் எனில் தற்போதைய வெறுமனே மனனம் செய்யும் கல்வி முறை உதவாது.

தவிர இனி வரும் காலங்களில் University education என்பது வேலைவாய்ப்புக்கு உதாரவாதமாக இல்லை. விரும்பிய பாடத்தில் university degree பெற்றுக்கொள்ளலாம் ஆனால் வேலை எடுக்க Skill இருக்க வேண்டும். Anthropology யில் degree வைத்துக்கொண்டு electrician ஆக வேலை செய்யும் ஒருவரை எனக்குத் தெரியும் 

இங்கே 25-35 வயதுக்குள் புலம் பெயர்ந்த ஆப்பிரிக்கா, சீனா,அரேபிய, இந்தியா இலங்கை நாடுகளில் பட்டம் பெற்று வந்த பலரில் நான் கண்டது இது தான்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

இங்கே 25-35 வயதுக்குள் புலம் பெயர்ந்த ஆப்பிரிக்கா, சீனா,அரேபிய, இந்தியா இலங்கை நாடுகளில் பட்டம் பெற்று வந்த பலரில் நான் கண்டது இது தான்

உண்மை ....மாற்றங்கள் தேவை ...ஆனால் அரசியல் தலையீடு கல்வி துறையில் இருக்க கூடாது ..சிறிமா கொண்டு வந்த பாடத்திட்டம் இரண்டு வருடங்களின் பின்பு மாற்றப்பட்டுவிட்டது...தற்பொழுது நாட்டில் யார் அமைச்சர் யார் ஜனாதிபதி என்ற இழுபறி ...தேர்தலின் பின்பு வேறு அமைச்சர் பதவிக்கு வந்தால் சில சமயம் இதை மாற்றி விடுவார் ...

3 hours ago, பகிடி said:

எனினும் Out of box யோசிக்கும் தன்மை, critical thinking எமது கல்வி அமைப்பில் இல்லை என்பது துரதிஷ்டமானது.

இது தனிநபர் திறமையா?கல்வி அறிவின் ஊடாக வருவதா...out of box ,critical thinking

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

உண்மை ....மாற்றங்கள் தேவை ...ஆனால் அரசியல் தலையீடு கல்வி துறையில் இருக்க கூடாது ..சிறிமா கொண்டு வந்த பாடத்திட்டம் இரண்டு வருடங்களின் பின்பு மாற்றப்பட்டுவிட்டது...தற்பொழுது நாட்டில் யார் அமைச்சர் யார் ஜனாதிபதி என்ற இழுபறி ...தேர்தலின் பின்பு வேறு அமைச்சர் பதவிக்கு வந்தால் சில சமயம் இதை மாற்றி விடுவார் ...

இது தனிநபர் திறமையா?கல்வி அறிவின் ஊடாக வருவதா...out of box ,critical thinking

வேறு பலரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது

இதில் எனக்குத் தெரிந்த பதில் இது தான்.

Comfort zone னை விட்டு வெளியே வராத பிள்ளைகள், வாழ்வியல் அனுபவங்கள் குறைந்த பிள்ளைகள் அல்லது அப்படிப்பட்ட பெற்றோற்கு பிள்ளைகளாக வாய்க்கப் பெற்றவர்கள், பாடசாலைகளில் extra curricular activities இல் பங்கு பற்றாத, leadership ability குறைந்த பிள்ளைகள், இலக்கிய நாட்டம், புத்தக வாசிப்பு குறைந்த பிள்ளைகள் critical thinking இல் சாதிக்கவே மாட்டார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு படித்தாலும் கடினமான enterrence exam இல் 67% தை தாண்ட முடியாது.

இலங்கையில் இதைக் கவனித்து இருக்கின்றேன். வெறுமனே யாழ்ப்பாணத்தக்குள் மட்டுமே முதல் 20 வருடம் இருந்த ஒரு மாணவனையும்,சில வருடம் யாழ்ப்பாணம் பின்னர் வவுனியா கண்டி அனுராதாபுரம் என்று மாறி மாறி படித்த மாணவனையும் ஒப்பிட்டுப் பாருங்கள். முதல் மாணவர் சில வேளைகளில் உயர்தரத்தில் நன்கு சித்தி பெற்று இருக்கலாம், ஆனால் வாழ்வில் வெற்றி பெற்றவர் பின் சொன்ன மாணவராகவே இருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பகிடி said:

உண்மை ... ..

புலம் பெயர் பிரதேசங்களில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற பலர் ஆளுமையுள்ளவர்களாக திகழ்கின்றனர் ..மருத்துவ  துறை, ஏனைய விஞ்ஞான விவசாய துறை ஆராச்சிகள் போன்ற வற்றில் சிறப்பாக செயல் படுகின்றனர்...

மகிந்தா தொழினுட்ப கூடம் என்ற ஒன்றை  மகிந்தா அரசு சகல தேசிய பாடசலைகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தது .....இன்று அந்த கட்டிட தொகுதியில் ஆங்கிலம்.தமிழ் போன்ற பாடங்கள் தான் பயிற்று விக்கப்படுகிறது ....தொழிநுட்பம் இல்லை...

15 hours ago, பகிடி said:

ஆனால் வாழ்வில் வெற்றி பெற்றவர் பின் சொன்ன மாணவராகவே இருப்பார். 

வாழ்வில் வெற்றி என்பதற்கு வரைவிலக்கணம்? எதை வைத்து இதை எடை போடலாம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.