Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
தலை நிறைய முடி இருந்தாலும் பிரச்சனை. இல்லையென்றாலும் ஒரு சின்னக் கவலை.
 
*****
 
விழல்

-----------
சிவாஜியும் எம்ஜிஆரும்
வைத்திருப்பது
அவர்களின் தலைமுடி அல்ல என்று
அன்று தெரியாது
 
முடி நெற்றிக்கு மேல 
ஒரு சின்ன மலையாக ஏறி
நெற்றியில் சுருண்டு விழ
என்ன என்ன செய்ய வேண்டும் என்று
அப்படி தலைமுடி இருந்தவர்களிடம்
ஆலோசனை கேட்டேன்
 
இரும்புக் கம்பி ஒன்றை
மெதுவாக சூடாக்கி
அப்படியே சுற்று என்றும்
ஒருவன் கொடுத்தான் யோசனை
பள்ளிக்கூடத்தில்
 
சூடு அதிகமாகி
புரதம் கருகி மணந்தது தான் மிச்சம்
 
படும் பாட்டைப் பார்த்து
அம்மா சொன்னார்
உனக்கு வாழைக்காய் பட்டை முடி
வளையவே வளையாது என்று
 
இது தான் வடிவு
என்றும் அவர் சொன்னார்
 
நாய்க்கு மட்டும்
வால் எப்படி 
சுருண்டே நிற்குதே என்று
மெதுவாக ஒரு நாள் 
இழுத்துப் பார்க்க
அது திரும்பிக் கடித்தது
 
வயிற்றில் போட்டார்கள் 
ஊசிகளை
 
இந்தக் குறையுடனேயே வளர்ந்து
இன்னொரு ஊருக்கு போய் வாழ
அங்கே ஒரு சலூன் இருக்குது
அங்கே சுருட்டி விடுவார்கள் என்று
நண்பன் ஒருவன் கூட்டிப் போனான்
 
என்ன எனக்கு வேண்டும் என்று 
நான் சொல்ல வாயெடுக்க
சிகை அலங்காரம் செய்பவர் வாயில் விரலை வைத்தார்
அவர் வாயில் தான்
 
நான் ஒன்றும் சொல்லக் கூடாதாம்
 
ஒன்றும் சொல்லாமல் நான் ஏறி இருக்க
அவரும் ஒன்றும் சொல்லவில்லை
வெட்டிக் கொட்டி
ஏதோ தலையில் பூசி
முடிந்தது என்று சைகை காட்டினார்
 
இவருக்கு பேச்சு வராதோ
அய்யோ பாவம் என்று நான் நினைக்க
'காசு' என்று தெளிவாக கேட்டார்
 
அங்கே கொடுத்த காசில்
வெளியே இரண்டு வருடம் வெட்டியிருக்கலாம்
 
முடி சுருளவும் இல்லை
 
வெளியே வந்து 
கடையின் பெயர் என்னவென்று பார்த்தால்
அது ஒரு பிரபல நகைக்கடையின் பெயர்
 
பின்னர்
கல்யாணம் காட்சி எல்லாம்
வாழைக்காய் பட்டையுடனேயே
 
தலையில் முடி 
இருக்குதா இல்லையா என்று தெரியாமலும் 
அதற்கு தேவை ஒன்றும் இல்லாமலும்
வாழ்க்கை வைத்திருந்தது
 
சில வருடங்களின் பின்
என்னை நகை கடைக்கு
முடி வெட்ட கூட்டிப் போன
நண்பனை பார்த்தேன்
 
தொப்பி போட்டிருந்தான்
கேட்கவும் தயக்கமாக இருந்தது
பொறுத்து பொறுத்து இருந்தேன்
அவன் கடைசி வரை கழட்டவே இல்லை
 
இப்ப தொப்பி நானும் வாங்க வேண்டும்
இந்த தடவை
கடையின் பெயர் என்ன என்று பார்த்தே
உள்ளுக்குள் காலை வைக்க வேண்டும்.
  • Like 3
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

என்ன இது, யாராவது இரும்புக்கம்பியைக் சூடாக்கி முடியில் வைத்தால் முடி பொசுங்கும்தானே......நான் ஒன்றும் அவ்வளவுக்கு விவரமில்லாத ஆள் கிடையாது.........கிளுவம் கதியாலில் மோதிரவிரல் அளவு தடிமனான தடியை ஒரு முழம் அளவு பிசிறில்லாமல் வெட்டி அடுப்புத் தணலுக்குள் (சுடருக்குள் அல்ல) வைத்து விட்டு தலையை பட்டையாய் வாரி வைத்துக் கொண்டு திருவிழாவில் வாங்கிய சதுரக் கண்ணாடியை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் அந்தத் தணலுக்குள் இருந்த தடியை எடுத்து இரண்டு விரற்கடை இடைவெளியில் தலையில் தலையில் அழுத்தி அழுத்தி வைத்து எடுக்க வேண்டும். கொஞ்சம் சுடும்தான் பொறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த சனி முழுகிறவரை அழகாய் இருக்கும் பின் பனிபோல் மறைந்திடும்......!  😁

எச்சரிக்கை: அப்பா , சித்தப்பா , மாமா உள்ளவர்கள் வீட்டில் இருக்கும்போது முயற்சிக்கக் கூடாது.....முயற்சித்தால் முதுகில் உதை கிடைப்பது உறுதி.......!  😴

Edited by suvy
எ .பிழை திருத்தம்.....!
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, suvy said:

குடைக்கம்பி நல்ல சாமான் கடைசி மாமா இதை  சூடாக்கி வச்சு இழுப்பார். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, நந்தன் said:

குடைக்கம்பி நல்ல சாமான் கடைசி மாமா இதை  சூடாக்கி வச்சு இழுப்பார். 

இந்த மாதிரியே தான் எனக்கு கிடைத்த ஆலோசனையும். என்ன, மெல்லிய கம்பிக்கு பதிலாக கொஞ்சம் மொத்த கம்பி ஒன்றை சூடாக்கி விட்டிட்டேன்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரசோதரன்  உங்கள்   இளமைக் கால நினைவுகள் எல்லாம் மீட்டப் படுகிறன. நன்று தொடருங்கள்.  

  • Thanks 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.