Jump to content

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
kks.jpg

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இடையிலான சந்திப்பொன்று அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாரிய அளவிலான கப்பல்கள் மற்றும் படகுகள் உள்நுழைவதற்கு ஏற்ற வகையில் துறைமுகம் 30 மீற்றர் ஆழப்படுத்தப்படவுள்ளதுடன், புதிய அலைதாங்கியை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அதிக அளவிலான இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரவும் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 600 மில்லியன் ரூபா செலவில் காங்கேசன்துறை துறைமுகத்தில் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் கடந்த 9 மாதங்களில் பாரிய அளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இந்தியா வழங்கவுள்ள 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பயன்படுத்தி, காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/296344

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் நிதி உதவியில் துறைமுகம் கட்டி வேலைமுடிய சீனா ஆராச்சிகப்பல் வந்து நிற்க சரியாயிருக்கும்..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

இந்தியன் நிதி உதவியில் துறைமுகம் கட்டி வேலைமுடிய சீனா ஆராச்சிகப்பல் வந்து நிற்க சரியாயிருக்கும்..

சீ சீ ....சிறிலங்கா இப்ப ....இரண்டும் கெட்டான் நிலை....வடக்கு இந்தியாவுக்கு தெற்கு சீனாவுக்கு ,மேற்கு அமெரிக்காவுக்கு ......கிழக்கு எல்லோருக்கும் என்ற நிலை  சிங்களவனின்ட அரசியல் சாணக்கியம் என சிலர் புலம்புவினம் ,,, 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

சீ சீ ....சிறிலங்கா இப்ப ....இரண்டும் கெட்டான் நிலை....வடக்கு இந்தியாவுக்கு தெற்கு சீனாவுக்கு ,மேற்கு அமெரிக்காவுக்கு ......கிழக்கு எல்லோருக்கும் என்ற நிலை  சிங்களவனின்ட அரசியல் சாணக்கியம் என சிலர் புலம்புவினம் ,,, 

யார் குத்தினாலும்..அரிசி ஆமால் சரி....இருக்கவே இருக்குது..புலப்பெயர்வுக்கு கனடா...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, alvayan said:

யார் குத்தினாலும்..அரிசி ஆமால் சரி....இருக்கவே இருக்குது..புலப்பெயர்வுக்கு கனடா...

கனடாவுக்கு போகாதையுங்கோ என ஊரில இருக்கிற ஒரு கோஸ்டி,கனடாவிலிருந்து ஊருக்கு போன சில கோஸ்டிகள் கனடாவுக்கு வராதையுங்கோ என பிரச்சாரம் செய்யினம் ....

நீங்கள் இப்படி சொல்லுறீங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

கனடாவுக்கு போகாதையுங்கோ என ஊரில இருக்கிற ஒரு கோஸ்டி,கனடாவிலிருந்து ஊருக்கு போன சில கோஸ்டிகள் கனடாவுக்கு வராதையுங்கோ என பிரச்சாரம் செய்யினம் ....

நீங்கள் இப்படி சொல்லுறீங்கள்

வாருங்கோ வந்து பாருங்கோ...பிடிச்சால் இருங்கோ...பிடிக்காட்டில் போங்கோ...இப்ப கனடாவுக்கு ..இலகுவாக வரவழி பிறந்திருக்கு...அதை யே...பாவியுங்கோ என்றேன்...நாலு நாட்டுக்காரர் வந்து அட்டூழியம் புரியும் நாட்டில் இருப்பதைவிட...இடம்பெயர்ந்து  நன்றாக இருக்கட்டுமே...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அது....50 வருடமா இந்த வெளிநாட்டு மோகத்தில் பலர் வெற்றி கண்டுள்ளனர் ... அதை தடுப்பதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயல் படுகிறது...அதிக பணத்தை கொடுத்து ஏறாமல் தகுந்த விசா எடுத்து நாடுகளுக்கு வந்து உழைக்கலாம்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, putthan said:

அது....50 வருடமா இந்த வெளிநாட்டு மோகத்தில் பலர் வெற்றி கண்டுள்ளனர் ... அதை தடுப்பதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயல் படுகிறது...அதிக பணத்தை கொடுத்து ஏறாமல் தகுந்த விசா எடுத்து நாடுகளுக்கு வந்து உழைக்கலாம்

அட நீங்கள் வேறை......
ஊரிலை நல்ல சம்பளத்திலை வாத்தி வேலை செய்யிற ஒருத்தர்  கேக்கிறார் ஒரு சேஞ்சுக்காக லண்டனுக்கு போய் ........ஒரு அஞ்சு வருசம் வேலை செய்யலாமோவாம். அப்ப நான் சொன்னன் நிச்சயமாய் வாத்தி வேலை செய்யேலாது எண்டு......யோசிச்சு சொல்லுறன் எண்டு சொன்னார். 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, குமாரசாமி said:

அட நீங்கள் வேறை......
ஊரிலை நல்ல சம்பளத்திலை வாத்தி வேலை செய்யிற ஒருத்தர்  கேக்கிறார் ஒரு சேஞ்சுக்காக லண்டனுக்கு போய் ........ஒரு அஞ்சு வருசம் வேலை செய்யலாமோவாம். அப்ப நான் சொன்னன் நிச்சயமாய் வாத்தி வேலை செய்யேலாது எண்டு......யோசிச்சு சொல்லுறன் எண்டு சொன்னார். 🤣

நோகாமல் நுங்கு குடிக்கலாம் என சில பேர் வருயினம் அவையள் தான் வெளிநாடு சரியில்லை என போய் யூ டியூப் காரர்களுக்கு பேட்டி கொடுக்கினம் .... உலகத்தில் மூலைமுடக்கில்  எல்லாம் இருந்து அடிபட்டு கொண்டு உழைக்க வாராங்கள் .....சிறிலங்காவில் இருக்கிற சிலருக்கு ....மட்டும் ....கொழு.......

Edited by putthan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

நோகாமல் நுங்கு குடிக்கலாம் என சில பேர் வருயினம் அவையள் தான் வெளிநாடு சரியில்லை என போய் யூ டியூப் காரர்களுக்கு பேட்டி கொடுக்கினம் .... உலகத்தில்  முடக்கில் எல்லாம் இருந்து அடிபட்டு கொண்டு உழைக்க வாராங்கள் .....சிறிலங்காவில் இருக்கிற சிலருக்கு ....மட்டும் ....கொழு.......

உண்மை...படங்காட்ட நம்ம சனம் நாடுமிடம்..யூ  டியூப்பெர்ஸ்...அவைக்கு வருவாயே புலம் பெயர்ஸ்தான்...ஆனால் அடிக்கிற நக்கல்... எக்கச்சக்கம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, alvayan said:

உண்மை...படங்காட்ட நம்ம சனம் நாடுமிடம்..யூ  டியூப்பெர்ஸ்...அவைக்கு வருவாயே புலம் பெயர்ஸ்தான்...ஆனால் அடிக்கிற நக்கல்... எக்கச்சக்கம்..

பாவம் மன்னித்து விடுவம் பிழைத்து கொள்ளட்டும் ....கமரா ,பறந்து படமெடுக்கும் கமரா போன்றவற்றையும் புலம் பெயர் உறவுகள் சிலர் வாங்கி கொடுத்திருக்கினம்,

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.