Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 MAR, 2024 | 01:28 PM
image
 

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு ஆசிரியர்களும் மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 

கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி தளத்தில் கார்த்திகைப்பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/180061

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைப் பூ இல்லை காந்தள் பூ : ஆசிரியர்களுக்கு "சப்றைஸ்" கொடுக்கவே செய்தோம் - பொலிஸாருக்கு மாணவர்கள் விளக்கம்

Published By: DIGITAL DESK 3   01 APR, 2024 | 09:27 AM

image

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகைப் பூ மற்றும் இராணுவ வாகனத்தை ஒத்த அலங்காரங்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் சில  மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக  பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்தனர்.

விசாரணைக்காக மூன்று மாணவர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் விசாரணையில்  நீங்கள் இல்ல அலங்காரம் செய்தது கார்த்திகைப் பூவைத் தானே இதற்கான ஆலோசனைகளை ஆசிரியர்கள் தானே வழங்கினார்கள் என கேள்வி எழுப்பினார்.

இதன் போது பதில் வழங்கிய மாணவர்கள்  நீங்கள் கூறுவதைப் போல குறித்த பூ கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை காந்தள் மலர் என அறிந்துள்ளோம் எமது பாடப்புத்தகத்தில் அவ்வாறே உள்ளது.

அது மட்டுமல்லாது வருடத்தில் ஒரு முறை பூக்கும் அரிய மலர் அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே காட்சிப்படுத்தினோம்.

இதன் போது கேள்வி எழுப்பிய பொலிஸார் உங்கள் இல்ல அலங்காரத்திற்கான ஆலோசனையை ஆசிரியர்கள் தானே வழங்கினார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

இதன் போது பதிலளித்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் காந்தள் பூ இல்ல அலங்காரத்திற்கும் தொடர்பு இல்லை நாங்கள் இவ்வாறு அமைக்கப் போகிறோம் என அவர்களுக்கு தெரியப்படுத்தவும் இல்லை "சப்றைஸ் " வழங்க வேண்டும் என்பதற்காக தெரியாமல் வைத்தோம்  என்றனராம்.

இதன் போது பல்வேறு வழிகளில் குறித்த இல்ல அலங்காரத்திற்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் முடிச்சுப் போட பொலிஸார் முனைந்த நிலையிலும் மாணவர்கள் ஒரே பதிலையை மீண்டும் மீண்டும் கூறினர் 

இந் நிலையில் பாடசாலை அதிபரும் பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் வழங்க  அழைக்கப்பட்ட நிலையில் தனது வாக்குமூலத்தில் ஏற்கனவே இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பாடசாலை ஆசிரியர்கள் கூட்டத்தில் தெளிவாக கூறினேன்.

 ஏற்கனவே கிளிநொச்சியில் இடம்பெற்ற இல்ல அலங்காரம் அது தொடர்பில் எழுந்த சர்ச்சை தொடர்பில் கூட்டத்தில் தெரிவித்தேன்.

இவ்வாறான அலங்காரம் தொடர்பில் தானும் அறிந்திருக்கவில்லை என வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/180103

  • கருத்துக்கள உறவுகள்

IMG_4634-720x375.jpg

கல்லூரி கார்த்திகை பூ விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை.

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் தீலீசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் தீபன் திலீசன் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நடைபெற்றுவரும் இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் அலங்கரிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக – குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் , அரச புலனாய்வாளர்களினதும் அச்சுறுத்தல் இடம்பெற்றுவருவது தனிமனித சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரங்களை நசுக்கும் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும்.

இலங்கை அரசின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் – கலை ரீதியாகவும் – குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் – சமூகம் சார் பிரக்ஞைகளை வெளிப்படுத்தும் போது, அதனை அரச இயந்திரங்களால் நசுக்கும் செயற்பாடுகள் நடைபெறுவதற்கு அனுமதிக்க முடியாது.

இதற்கு கல்வி திணைக்களங்களும் துணைபோகுமானால், கல்விக்குள் இராணுவ மற்றும் பொலிஸ் தலையீடுகளை ஆதரிக்கும் செயற்பாடுகளாகவே இவை அமையும்.

அண்மையில் நடைபெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வன்மை போட்டியின், இல்ல அலங்காரங்களில் மாணவர்கள் வெளிப்படுத்திய வெளிப்பாடுகள், இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரத்துக்கு உட்பட்டதாகும்.

இந்த விடயங்களில் பொலிசாரோடு இணைந்து வடமாகாண கல்வி அமைச்சும் தலையீடு செய்வதென்பது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடு எனபதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடாகும்.

இவ்விடயம் தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளோம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொருத்தமான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IMG_4633-600x400.jpg

IMG_4634-600x400.jpg

https://athavannews.com/2024/1376048

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைப் பூ விடுதலைப்புலிகளின் இலச்சினை அல்ல

497769362.jpg

அது தமிழ்த் தேசியஇனத்தின் தாயகச்சூழலின் அடையாளம் -பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!!

(மாதவன்)

கார்த்திகைப்பூவை சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் இலச்சினையாகவே பார்க்கிறது. இதனாலேயே தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்றை அழகுபடுத்துவதற்காகக் கார்த்திகைப்பூவை வடிவமைத்த மாணவர்கள் காவல்துறையினால் அறிவிலித்தனமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

கார்த்திகைப்பூவை விடுதலைப்புலிகள் தேசிய மலராகத் தெரிவு செய்திருந்தார்கள் என்பதற்காக அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ அல்ல. அது தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்று கார்த்தகைப்பூவின் உருவத்தை உருவாக்கி வைத்திருந்தமையால் மாணவர்கள் சிலரும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே   இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்கள் சுற்றுச்சூழலைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாக வகுத்து இயற்கையோடு இசைந்த  வாழ்வை மேற்கொண்டு வந்தவர்கள், சங்கத் தமிழர்களால் காந்தள் என அழைக்கப்பட்ட கார்த்திகைப்பூ இப்போதும் தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. 

சங்கக்கவி கபிலர் தொடங்கி தாயகக்கவி புதுவை இரத்தினதுரை வரை கார்த்திகைப் பூவைப் பற்றிப்பாடாத புலவர்களே இல்லையென்னும் அளவுக்குத் தமிழ் வாழ்வியலில் கார்த்திகைப்பூ மிகுந்த   முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் தமிழ்நாடு கார்த்திகைப்பூவைத் தனது மாநில மலராகத் தேர்வு செய்துள்ளது. 

சிறிலங்கா அரசு தனது பௌத்த பண்பாட்டுச் சூழலுக்கு அமைவாகத் தேசிய மலராக நீலோற்பலத்தையும் தேசிய மரமாக மெசுவா எனப்படும் நாகமரத்தையும்  தெரிவு செய்துள்ளது. இலங்கைக் காடுகளில் ஒருபோதும் காணப்படாத சிங்கத்தைத் தேசியக் கொடியில் வாளேந்த வைத்த பின்னர் அதனால் இதுவரையில் இலங்கைக்குரிய தேசிய விலங்கொன்றைத் தெரிவு செய்ய முடியவில்லை.

இலங்கைத் தேசிய அடையாளங்கள் தமிழ் மக்களை உள்வாங்காது பௌத்த, சிங்களப் பெரும் தேசியவாதத்தின் குறியீடுகளாக அமைந்ததன் விளைவாகவே விடுதலைப்புலிகள் தேசிய மலராக ஈழத்தமிழ்ச் சூழலின் அடையாளமாக விளங்கும் கார்த்திகைப்பூவைத் தெரிவுசெய்ய நேர்ந்தது. 

கார்த்திகைப்பூச்செடியிலுள்ள கொல்கிசின் என்னும் நச்சு இரசாயனம்  அருமருந்துகளின் தயாரிப்பில்  பயன்படுகிறது. இதன் பொருட்டுத் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்படும் கார்த்திகைப் பூச்செடியால்  பலகோடி ரூபாய்கள் அந்நியச் செலாவணியாகக் கிடைத்து வருகிறது.

ஆனால், கார்த்திகைப் பூச்செடியின் சிறப்புகளை  சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதாலேயே கார்த்திகைப்பூவுக்கு உத்தியோகப்பற்றற்ற தடையைப் பேணிவருகிறது. இயற்கை அதன் பரிணாமப்பாதைக்குக் குறுக்காக நிற்கும் எதனையும் தூக்கியெறிந்து தன் பல்லினத்தை நிலைநிறுத்தும் பேராற்றல் பெற்றது என்பதை சிறிலங்கா அரசு நினைவிற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். (ஏ)

 

https://newuthayan.com/article/கார்த்திகைப்_பூ_விடுதலைப்புலிகளின்_இலச்சினை_அல்ல; 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைப்பூ விவகாரம் : தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை !

Published By: DIGITAL DESK 3

04 APR, 2024 | 10:43 AM
image
 

யாழ். தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில்  ஆஜராகி விளக்கமளிக்குமாறு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை 5 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி தொடர்பில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கான விசாரணைக்கு தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில்  ஆஜராகி விளக்கமளிக்குமாறு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழப்பாண அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/180392

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காந்தள் மலர் இல்லம் குறித்து பொலிஸார் கேள்வி எழுப்புவது 'இனவெறி அடக்குமுறை'

Published By: DIGITAL DESK 3   10 APR, 2024 | 12:49 PM

image

வடக்கில் பாடசாலையொன்றின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பியமை இனவாத அடக்குமுறை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய மலராக கருதப்படும் காந்தள் (கார்த்திகை பூ) மலரின் வடிவில் இல்லம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பொலிஸாரின் நடவடிக்கையினால் பாடசாலை மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தது.

பாடசாலைப் பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள பூக்களின் வடிவத்தை பயன்படுத்தி மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்த முடியாத வகையில் நெருக்கடியை ஏற்படுத்துவது இனவாதக் கோணத்தில் செயற்பபடுவதையே காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த மார்ச் 30ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், அங்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் கவச வாகனம் மற்றும் காந்தள் மலர் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த இல்லங்கள் குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் இவ்விடயம் தொடர்பில் விசாரிப்பதற்காக கடந்த மார்ச் 31 ஆம் திகதி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குறித்த இல்லங்களின் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.

கடந்த மார்ச் 31ஆம் திகதி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் மாணவர்களிடம், அந்த மாதிரிகளை வைத்து இல்லங்களை அமைக்குமாறு ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதா என பொலிஸார் வினவியுள்ளனர், எனினும் மாணவர்கள், தாம் அன்றாடம் காண்கின்ற விடயங்களையும், தமது பாடப் புத்தகங்களில் பார்த்த விடயங்களையும் வைத்தே இல்லங்களை உருவாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

மேலும், மாணவர்கள் கூறுகையில், தாங்கள் உருவாக்கும் இல்லங்களில் அலங்காரங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கவில்லை எனவும், வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே பூக்கும் காந்தள் மலரை ஏனையவர்களும் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இவ்வாறு இல்லத்தை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி பாடசாலையின் அதிபரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்ததாகவும் தெல்லிப்பளை பொலிஸார் அவரிடம் மாணவர்கள் உருவாக்கிய மாதிரிகள் தொடர்பில் வினவியதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காக, ஏப்ரல் 5ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு, தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாக மனித உரிமைகள் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவிக்கின்றார்.

அன்றைய தினம், தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வரவில்லை எனவும், அவர் சார்பில் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் வந்ததாகவும், பொறுப்பதிகாரி விடுமுறையில் இருந்ததால் தான் முன்னிலையானதாக அந்த அதிகாரி கூறியதாகவும்  ரி.கனகராஜ் பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தெல்லிப்பளை பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பிரகாரம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண இணைப்பாளர் ரி.கனகராஜ் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் வடக்கில் நடைபெற்று வரும் இனவாத அடக்குமுறையை காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீஷன் ஏப்ரல் 2ஆம் திகதி ஊடகங்களுக்கு வலியுறுத்தியிருந்தார்.

“அரசியலமைப்புக்கு எதிரான விடயங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டாலோ அல்லது தடைசெய்யப்பட்ட விடயங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டாலோ அதனை சட்ட வரையறைக்குள்  கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொள்வது வேறு விடயம். எந்த வகையிலும் அரசியல் சாசனத்தில் தடை செய்யப்படாத, அதுபோல் எமது பாடப்புத்தகங்களில் காணப்படுகின்ற காந்தள் மலர் தொடர்பில் மாணவர்கள் தமது திறமையை வெளிப்படுத்த முடியாதளவுக்க நெருக்கடியும் அடக்குமுறையும் இங்கு நடக்கிறதென்றால், இது முழுமையாக இனவாத கோணத்திலேயே இடம்பெறுகிறது. எங்களால் இதனை அனுமதிக்க முடியாது.”

https://www.virakesari.lk/article/180901

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.