Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்கள் உட்பட 7 பணியாளர்கள் இஸ்ரேலின் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

முற்றான முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு, செயற்கையான பட்டினிச்சாவினை எதிர்நோக்கியிருக்கும் மில்லியன் கணக்கான பாலஸ்த்தீனர்களுக்கு நிவாரணம் வழங்கவென வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சென் (World Central Kitchen) எனும் நிவாரண அமைப்பு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் பகுதியில் இயங்கி வருகிறது. அடைபட்டிருக்கும் பலஸ்த்தீனர்களின் வெறும் 30 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் அனுமதித்திருக்கும் இவ்வேளையில், இப்பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணியிலேயே  இப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரு வாகனங்களில் புறப்பட்ட இப்பணியாளர்கள், தமது வாகன விபரங்கள், அடையாளங்கள், செல்லுமிடம் போன்ற அனைத்து விபரங்களையும் இஸ்ரேலிய இராணுவத்திடம் அறிவித்த பின்னரே தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். 

ஆனால், தமக்கு வழங்கப்பட்ட வாகன அடையாளங்களை வைத்தே இஸ்ரேலிய விமானப்படை இவ்வாகனங்களை யுத்த சூனிய வலயம் என்று இஸ்ரேலினால் அறிவிக்கப்பட்ட பகுதியில் வைத்துத் தாக்கியழித்திருக்கிறது. இத்தாக்குதலில் 4 மேற்குநாட்டு பணியாளர்கள் உட்பட ஏழு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.    

கொல்லப்பட்டவர்களில் அமெரிக்க கனேடிய பிரஜாவுரிமை பெற்ற ஒருவர், அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் போலந்து நாட்டவர் என சிலர் அடக்கம். 

இந்த நிவாரணப் பணியகத்தின் நடத்துனர் இத்தாக்குதல் குறித்துப் பேசுகையில், நாம் வழங்கிய வாகன விபரங்களைக் கொண்டே எமது பணியாளர்களை இலக்குவைத்து இஸ்ரேல் படுகொலை செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.   வழமை போல இத்தாக்குதல் குறித்து தகவல் ஏதும் இல்லை, வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் கூறியிருக்கிறார். 

சுமார் 2.2 மில்லியன் பாலஸ்த்தீனர்களை செயற்கையான பட்டினிச் சாவிற்கு தள்ளிச் சென்றிருக்கும் இஸ்ரேல், வேண்டுமென்றே இம்மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களின் அளவை குறைத்து அனுமதித்து வருவதுடன், அத்தியவசியமாகத் தேவைப்படும் மருந்துப் பொருட்களையும் தடை செய்திருக்கிறது.

2008 - 2009 இல் வன்னியில் சிங்கள மிருகங்களால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த 420,000 தமிழர்களுக்கு வெறும் 25 வீதமான உணவுப்பொருட்களை மட்டுமே அனுமதித்து, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வைத்தியசாலைகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்ட புவியியல் அமைவிடப் புள்ளிகளைப் பயன்படுத்தியே அவ்வைத்தியசாலைகள் மீது இலக்குவைத்து தாக்கி பல நூற்றுக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்ட, சிங்கள இராணுவம் நடத்திய அட்டூழியங்களை ஒத்தவை இத்தாக்குதல்கள்.

பாலஸ்த்தீன மக்கள் மீதான அப்பட்டமான இனக்கொலையில் இதுவரை இஸ்ரேலிய மிருகங்கள் 33,000 அப்பாவிகளைப் படுகொலை செய்திருக்கின்றன.

இஸ்ரேலிய இனக்கொலையினை ஆதரிக்கும் அன்பர்களுக்கு இது சமர்ப்பணம். 

https://edition.cnn.com/2024/04/01/middleeast/world-central-kitchen-killed-gaza-intl-hnk/index.html

Edited by ரஞ்சித்

  • ரஞ்சித் changed the title to மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்களின் வாகனத்தை இலக்குவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு - 7 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சனைக்குள் வன்னியை இழுத்து ஒப்பீடு செய்யவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

அயல்நாடுகளின் உதவியுடன் கமாஸ் போல வன்னியிலிருந்து ஒரேநாளில் 5000 ரொக்கட்டுகளை ஏவியபடி சிங்களவன் தேசத்திற்குள் நுழைந்து 1300 பேரை பாலினம் வயசு பாராமல் வகை தொகையின்றி கொன்று குவிக்கவில்லை, இசை நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்த எந்த வகையிலும் யுத்தத்திற்கு சம்பந்தமில்லாத மக்களை ஓட ஓட கொல்லவுமில்லை.

அப்பாவி சிங்கள பெண் ஒருவரை நிர்வாணபடுத்தி என்னை கொல்லாதீர்கள் என்று கெஞ்ச கெஞ்ச கொன்று உடல்மேல் எச்சி துப்பி அவள் உடல்மேல் உக்கார்ந்து இருந்து சுற்றி வர நின்று கொண்டாடவுமில்லை.

தள்ளாடும் முதியவர்களிலிருந்து தளிர்கள் வரை பயணகைதிகளாக பிடித்து வந்து இன்றுவரை கொடூரமாக அடைத்து வைக்கவுமில்லை, 

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் இருந்து மேற்குலகில் நடத்தப்படும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளை பாலஸ் தீனர்கள் பண்ணுவதுபோல் கொடிகளை கைகளில் ஏந்தியபடி பெண்கள்ள் சிறுவர்கள் அனைவரும் உற்சாக கோசமெழுப்பியபடி கொண்டாடியதும் இல்லை.

எம் மண்ணை அபகரிக்க முனைந்தவர்களுடன் இறுதிவரை போரிட்டோம் அதுதான் வரலாறு,அதேபோல் தம் மண்ணை அபகரித்த இஸ்ரேல் ராணுவத்துடன் எவ்வளவு கொடூரமாக கமாஸ் மோதியிருந்தாலும் பிடிக்குதோ பிடிக்கலையோ அவர்கள் வீரத்தை பாராட்டியே தீருவோம்.

அதைவிட்டு  கிழடு கட்டைகளிலிருந்து பச்சிளம் குழந்தைகள்வரை ஒரேநாளில் கொன்று பணயகைதிகளாக்கி வீரம் காட்டினால் வலிமையுள்ள எதிரி நிச்சயமாக போர் தொடுத்தே ஆவான், 

ஆனால் இஸ்ரேல் எல்லை தாண்டி ருத்ரதாண்டவம் ஆடுகிறது அதை  மறுப்பதிற்கில்லை ஆனால் எம் பிரதேச பிரச்சனைகளை இவர்களுடன் ஒப்பிட வேண்டியதில்லை.

இவர்களுக்கான அநீதியை  கேட்க, அத்தியாவசிய பொருட்கள் வழங்க, பேச்சு வார்த்தைக்கு ஒழுங்கு பண்ண, இவர்களுக்காக போர் தொடுக்க, ஆயுதங்கள்  , நிதி மருத்துவம் வழங்க  மேற்குலகிலிருந்து அரபுநாடுகள்வரை தோள் நிற்கின்றன,

ஆனால் நாம் எவரும் இல்லாமல் உரிமை மட்டும் கேட்ட ஒரே காரணத்துக்காக பூட்டிய அறையினுள் வைத்து   கொல்லப்பட்ட மூட்டை பூச்சிபோல் நசுக்கி கொல்லப்பட்டோம் இன்றுவரை எவரும் பெரிதாக ஏனென்று கேட்கவில்லை, அப்பப்போ மனித உரிமை ஐநா பொறுப்புகூறல் என்பதோடு எம் கொலைகள் கணக்கிலெடுக்கப்படாது விடப்பட்டுவிட்டது.

ஆனால் போர் ஆரம்பித்தநாளிலிருந்து அவர்களைபற்றி பேச அவர்களுக்காக வாதிட ஒட்டுமொத்த  சர்வ வல்லமை பொருந்திய உலகநாடுகளும்  போர் ஆரம்பித்த அடுத்த நாளிலிருந்தே அணியில் நிற்கின்றன, அதை இஸ்ரேல் செவிமடுக்கிறதா இல்லையா என்பது வேறு பிரச்சனை எங்கள் பிரச்சனை அல்ல,

ஏனென்றால் எந்த துணை  வலிமையும் இல்லாமையினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் நாங்கள். அதனால் வலிமையுள்லவர்களுக்கிடையிலான பிரச்சனைபற்றி நமது கருத்துக்கள் சபையினில் எடுபடாது.

ஆனால் எமது பிரச்சனையும் அவர்கள் பிரச்சனையும் ஒன்றல்ல என்பதுபற்றி மட்டும் வாதிட முடியும். அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை எந்த வகையிலும் சக மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் அப்பாவி வன்னி மக்கள் கொல்லப்பட்டதை இறுதி போருக்கு வாழ்த்து சொல்லி சிங்களத்துடன் கை குலுக்கிய வரலாறு பாலஸ்தீனத்துக்கு உண்டு.

சொல்லபோனால் மூன்று மாதத்தில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் தொகையைவிட மூன்றேநாளில் கொன்றொழிக்கப்பட்ட எம்மக்கள் தொகை இரண்டு மூன்று மடங்கு அதிகம், 

1 hour ago, ரஞ்சித் said:

இஸ்ரேலிய இனக்கொலையினை ஆதரிக்கும் அன்பர்களுக்கு இது சமர்ப்பணம். 

இஸ்ரேலிய இனகொலைகளை எவரும் ஆதரிக்க போவதில்லை, ஆனால் எம்மீதான இனகொலையை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சேர்ந்து வாழ்த்தியது என்பதே கடந்தகாலம், கணப்பொழுதில் கடந்தவைகளை மறந்துபோகும் எமக்கு இதுவும் பத்தோடு பதினொன்றுதான்.

மறுபடியும் உரக்க சொல்வதானால் மக்கள் கொலைகள் கண்டிக்கப்பட வேண்டியது, ஆனால் மீண்டும் ஒருமுறை எம் மக்கள்மீது ஒரு படுகொலை நடத்தப்பட்டால் பாலஸ்தீனம் ஒருபோதும் எமக்காக குரல் கொடுக்காது,

அவர்கள் மதத்தை சார்ந்தவர்களுக்கு ஏதும் என்றால் மட்டுமே குரல் கொடுப்பார்கள், அநியாயம் அக்கிரமம் என்பார்கள், பிறருக்கு வரும் வலிகளை சிரித்துக்கொண்டே கடந்துவிடுவார்கள் இது அவர்களின் சுயரூபம் என்பதை உலகமே பார்த்திருக்கிறது இனியும் பார்க்கும்

கேட்க நாதியின்றி அழிந்துபோன நாம் ,கேட்க பலர் இருக்கும் இவர்கள் போரை  மெளனமாக கடந்து போவதை தவிர நம்மால் ஆவது ஒன்றுமில்லை ,

நாம் வழமைபோல வன்னியையும் பாலஸ்தீனத்தையும் ஒப்பிட்டு சிறந்த மனிதாபிமானிகளாக தொடர்ந்து செல்வோம்.

கொல்லப்பட்ட அனைத்து தரப்பு அப்பாவிகளுக்கும் கொல்லப்பட்டுவிட்ட  ஒரு இனத்தின் சார்பில் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் பலி

Published By: SETHU   02 APR, 2024 | 12:53 PM

image

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர்கள் உட்பட  தனது ஊழியர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் எனும் தொண்டு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. 

இதையடுத்து காஸாவில் தனது பணிகளை இடைநிறுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சைப்பிரஸிலிருந்து கடல்வழியாக அனுப்பப்பட்ட உணவுப்பொருட்களை களஞ்சியமொன்றில் இறக்கிவிட்டு வாகனங்களில் சென்றுகொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக  வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அவுஸ்திரேலியா, போலந்து, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களுடன்; அமெரிக்க கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் மற்றும் பலஸ்தீனியர் ஒருவர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/180226

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் மனிதாபிமான பணியாளரும் பலி

Published By: RAJEEBAN   02 APR, 2024 | 01:08 PM

image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண் மனிதாபிமான பணியாளர் லால்சாவ்மி பிராங்கோம் தான் மிகவும் நேசித்த பணியில் ஈடுபட்டிருந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எங்களின் துணிச்சலான நேசத்திற்குரிய  ஜோமி தான் மிகவும் நேசித்த காசா மக்களிற்கு உணவை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை கொல்லப்பட்டார் என்பதை அறிந்து மிகவும் துயரத்தில் சிக்குண்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

GKJLNnaWEAAz_uS.jpg

அவள் தனது இரக்கம் தைரியம் மற்றும் அன்பின் பாரம்பரியத்தை விட்டுச்செல்வாள் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மெல்பேர்னை சேர்ந்த 43 வயதான அந்த மனிதாபிமான பணியாளர் உலகம் முழுவதிற்கும் சென்று உதவிகள் தேவைப்படும் நேரத்தில் அதனை வழங்குவதில் ஆர்வம் காட்டியவர் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் அவர் காசாவிற்கு உணவுகளை எடுத்துச்செல்லும் வீடியோவில் தோன்றியிருந்தார்.

இஸ்ரேலின் தாக்குதல் உலகநாடுகளை சேர்ந்த ஏழு மனிதாபிமான பணியாளர்கள் பலி

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக  அவுஸ்திரேலியா பிரிட்டன் அமெரிக்கா உட்பட பலநாடுகளை சேர்ந்த ஏழு மனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

புட்எயிட் சரிட்டி என்ற அமைப்பின் மனிதாபிமான பணியாளர்கள் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் கொல்லப்பட்டுள்ளனர் வேர்ல்ட் சென்ரல் கிச்சன் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்;டன் அவுஸ்திரேலியா போலாந்து பாலஸ்தீனத்தை சேர்ந்த மனிதாபிமான பணியாளர்களும் அமெரிக்கா கனடாவை சேர்ந்த இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தபோதிலும் அவர்களின் வாகனத்தொடரணி தாக்கப்பட்டது அவர்கள் காசாவிற்குள 100 தொன் மனிதாபிமான பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலை தொடர்ந்து தனது பணிகளை இடைநிறுத்தியுள்ளதாக மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.

அல்அக்சா மருத்துவமனையில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/180230

  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் மனிதாபிமானப் பணியாளர்கள் கொலை: இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோருகிறார்

Published By: SETHU   03 APR, 2024 | 02:17 PM

image

காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளை, இத்தாக்குதல்  ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் திங்கட்கிழமை (01) நடத்திய தாக்குதலால் தனது  ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் எனும் தொண்டு நிறுவனம் நேற்று தெரிவித்தது. 

இதையடுத்து காஸாவில் தனது பணிகளை இடைநிறுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா, போலந்து, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களுடன்; அமெரிக்க கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் மற்றும் பலஸ்தீனியர் ஒருவர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஹேர்ஸி ஹலேவி தெரிவித்துள்ளார்.

'இச்சம்பவம் ஒரு கடுமையான தவறு. அது நடந்திருக்கக் கூடாது' என அவர் கூறியுள்ளார். 

இதேவேளை, இத்தாக்குதல் தொடர்பான தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்கும் மன்னிப்பு கோருவதற்காகவும் வேர்;ல்ட் சென்ட்ரல் கிச்சன் நிறுவனத்தின் தலைவர் ஜோஸ் அன்;ரெஸுடன் தான் உரையாடியதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹேர்ஸோக் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதல்ல என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளார். எனினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. இது ஒரு துயர சம்பவம் எனக் கூறியுள்ள அவர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளார். பொதுமக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொண்டு நிவாரண ஊழியர்களை பாதுகாப்பதற்கான போதிய நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்ளவில்லை எனவும் பைடன் கூறியுள்ளார்.  

இச்சம்பவத்தை கண்டித்துள்ள ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ், இந்த யுத்தத்தில் மனிதாபிமானப் பணியாளர்கள் 196 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தின் அவசியத்தை இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/180334

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான பணியாளர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் எதிரொலி; தங்கள் நடவடிக்கைகளை இடைநிறுத்திய தொண்டு அமைப்புகள் - காசா பெரும் மனிதாபிமான நெருக்கடியில் சிக்கும் அபாயம்

Published By: RAJEEBAN    03 APR, 2024 | 03:31 PM

image
 

காசாவில் மனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தொண்டு நிறுவனங்கள் தங்கள் மனிதாபிமான பணிகளை இடைநிறுத்தியுள்ளதை தொடர்ந்து மனிதாபிமான நெருக்கடி தீவிரமடையும் ஆபத்து உருவாகியுள்ளது.

வேர்ல்ட் சென்ரல் கிச்சனின் வாகனத்தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏழு மனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவில் மனிதாபிமான பணியி;ல் ஈடுபட்டுள்ள பல அமைப்புகள் தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தங்கள் பணிகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன.

gaza_aid_attack.jpg

இது முன்னர் ஒருபோதும் இடம்பெறாத விடயம் என தெரிவித்துள்ள அனெரா என்ற தொண்டு நிறுவனம் பல மனிதாபிமான பணியாளர்களும்  அவர்களது குடும்பத்தினரும் கொல்லப்பட்ட நிலையில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது பாதுகாப்பான நடவடிக்கை இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவிகள் இடைநிறுத்தம் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய மோசமான பாதிப்புகளை நாங்கள் புரிந்துகொள்கின்றோம் எனினும் மனிதாபிமா உதவி விநியோகத்தின் போது அதிகரிக்கும் ஆபத்துகள் எங்கள் பணியாளர்கள் தாங்கள் மீண்டும் பாதுகாப்பாக பணியாற்ற முடியும் என கருதும்வரை எங்கள் பணிகளை இடைநிறுத்தவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது என அனரா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் பட்டினியும் வறுமையும் எந்த நேரத்திலும் உருவாகலாம் என கடந்த மாதம் ஐநா தெரிவித்திருந்தது.

பாலஸ்தீன பகுதியில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பட்டினியை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது என ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

பட்டினி நிலைமை காரணமாக 27 குழந்தைகள் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என ஹமாசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் எல்லைகளில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து தடைகளின் மத்தியில் அவசரமாக உணவுதேவைப்படுபவர்களிற்கான உணவை வழங்குவதற்காக சைப்பிரசிலிருந்து கடல்வழி மார்க்கமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் வேர்ல்ட் சென்ரல் கிச்சன் ஈடுபட்டிருந்தது.

இந்த சூழ்நிலையிலேயே திங்கட்கிழமை அதன் வாகனத்தொடரணி மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் பிரிட்டனை சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர் ஜோன் சப்மன் ஜேம்ஸ் ஹென்டர்சன் ஜோம்ஸ் கேர்பி மூவரும் தொண்டர் அமைப்பின் பாதுகாப்பு குழுவில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர்.

இந்த குழுவின் தலைவரான அவுஸ்திரேலிய பெண் ஜோமி பிரான்கோமும் கனடா போலந்து பிரஜைகளும் பாலஸ்தீன பிரஜையொருவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய பெண்மணி உலகின் பல நாடுகளில் பணியாற்றியவர்.

gaza_aid_workers_killed.jpg

வேர்ல்ட் சென்ரல் கிச்சன் ஏற்பாடு செய்த மனிதாபிமான கப்பல்கள் அன்றைய தினம் 400 மெட்ரிக்தொன் உணவுப்பொருட்களுடன் வந்து சேர்ந்தன இதற்கான நிதியை ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கியிருந்தது.

எனினும் 100 தொன் உணவு இறக்கப்பட்ட நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து கப்பலை மீண்டும் சைப்பிரசிற்கு திரும்புமாறு வேர்ல்ட் சென்ரல் கிச்சன் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை மனிதாபிமான வாகனத்தொடரணி மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டமை குறித்த பல விபரங்களை இஸ்ரேலில் இருந்து வெளியாகும் ஹரெட்ஸ் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

gaza_aid_attack23.jpg

வேர்ல்ட் சென்ரல் கிச்சன் அமைப்பின் இலச்சினையுடன் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தொடரணி மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

https://www.virakesari.lk/article/180346

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மனிதாபிமான பணியாளர்களின் வாகனங்களை இலக்கு வைத்து தாக்கியது - வேல்ட் சென்ரல் கிச்சன் அமைப்பின் ஸ்தாபகர் குற்றச்சாட்டு

Published By: RAJEEBAN

04 APR, 2024 | 10:42 AM
image
 

இஸ்ரேலின் தாக்குதலில்  மனிதாபிமான பணியாளர்களை இழந்த வேல்ட் சென்ரல் கிச்சன் அமைப்பின் தலைவர் ஜோசே அன்ரெஸ் இஸ்ரேல் தனது பணியாளர்கள் பயணம் செய்துகொண்டிருந்த வாகனங்களை இலக்குவைத்து தாக்கியது என குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு காரையும் இலக்குவைத்து இஸ்ரேல் தாக்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

நான் ஸ்தாபித்த வேல்ட் சென்ரல் கிச்சன்  இஸ்ரேலிய படையினருடன் தெளிவான தொடர்பாடல்களை கொண்டிருந்தது எனது பணியாளர்கள் பயணிக்கின்றனர் என்பது இஸ்ரேலிற்கு தெரிந்திருந்தது என அவர் ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இது குண்டு தவறான இடத்தில் விழுந்த துரதிஸ்டவசமான சம்பவம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

jose_andres.jpg

எங்கள் வாகனங்களின்  மேற்பகுதியில் இலச்சினைகள் தெளிவாக பதிக்கப்பட்டிருந்தன இதன் மூலம் நாங்கள் யார் என்பதையும் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதையும் தெளிவாக தெரிவித்திருந்தோம் எனவும் ஜோசே அன்ரஸ் தெரிவித்துள்ளார்.

எங்கள் வாகனத் தொடரணி எங்கு நிற்கின்றது என்பது இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு தெரிந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவும் கொல்லப்பட்ட பணியாளர்களின் நாடுகளும் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்த சூன்ய பிரதேசத்தில் அவர்கள் எங்களை இலக்குவைத்தனர். அந்த பகுதி இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. மூன்று வாகனங்களில் எங்கள் அணியினர் பயணிக்கின்றனர் என்பது அவர்களுக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180391

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2024 at 22:09, valavan said:

இந்த பிரச்சனைக்குள் வன்னியை இழுத்து ஒப்பீடு செய்யவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

2009 இல் வன்னியில் நடத்தப்பட்ட மனிதப் பேரவலமும், இன்று காசாவில் நடத்தப்படும் பேரவலமும் ஒப்பிடப்படுதலுக்கான காரணங்கள்,

1. ஆக்கிரமிப்பாளனினால் முற்றான முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு, தம்மிடமிருக்கும் அனைத்துக் கனரக ஆயுதங்களாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டனர்.


2. உணவும், அத்தியாவசிய மருந்துப்பொருட்களும் ஆக்கிரமிப்பாளனினால் அடைபட்டுப்போயிருந்த மக்களுக்கு வழங்கப்படுவது தடுக்கப்பட்டது. ஐ.நா உட்பட சர்வதேச நிவாரண அமைப்புக்களால் வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் கூட, ஆக்கிரமிப்பாளனினால் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடப்பட்டே அனுமதிக்கப்பட்டது. வன்னியில் வெறும் 25 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான உணவும், காசாவில் வெறும் 30 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான உணவும் உள்ளே அனுமதிக்கப்பட்டது.


3.  முற்றுகைக்குள்ளான மக்கள் மீது தாம் கட்டவிழ்த்து விடும் அட்டூழியங்கள் வெளித்தெரியாதவாறு இருக்க முதலில் செய்தியாளர்கள் தடுக்கப்பட்டனர் அல்லது குறிவைத்துக் கொல்லப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டுக் காணமலாக்கப்பட்டனர். 


4. ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மீது நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அச்சுருத்தல் விடுக்கப்பட்டு கொலைக்களத்திலிருந்து அவர்கள் அகற்றப்பட்டனர்.  வன்னியில் இயங்கிய சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திற்கோ ஐ.நா வுக்கோ, சர்வதேச மருத்துவர் குழுவிற்கோ எம்மால் பாதுகாப்புத் தரமுடியாதென்று கூறியும், ஐ.நா அதிகாரிகள் தங்கியிருந்த பகுதிக்கு அண்மையாக குண்டுவீசியும் அவர்களை வன்னியில் இருந்து அப்புறப்படுத்தியது சிங்களம். காசாவில் வேண்டுமென்றே ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் பணியாளர்களும், பத்திரிக்கையாளர்களும் இஸ்ரேலிய இனக்கொலையாளிகளால் இலக்குவைத்துக் கொல்லப்பட்டார்கள்.


5. ஐ.நா வினாலும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினாலும் அகதி முகாம்கள், பவைத்தியசாலைகள், யுத்த சூனிய வலயங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் மீது தாக்குதலை நடத்தவேண்டாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, அந்த அடையாளங்களைக் கொண்டே வைத்தியசாலைகள் மீதும், அகதிகள் முகாம்ம்கள் மீதும், யுத்த சூனிய வலயம் மீதும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கி பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். காசாவில் சர்வதேச நிவாரணப் பணியாளர்கள் தமது வாகன விபரங்களை இஸ்ரேலிய இனக்கொலையாளிகளிடம் கொடுத்துவிட்டு கிளம்பியபோதே அவர்களது வாகன‌ங்கள் அதே அடையாளங்களைக் கொண்டு இலக்குவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. காசாவில் இயங்கும் அனைத்து வைத்தியசாலைகளும் ஒன்றில் முற்றாகவோ அல்லது பாதியாகவோ அழிக்கப்பட்டிருப்பதுடன், பல நூற்றுக்கணக்காணோர் அங்கு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். யுத்த சூனிய வலயத்தில் வைத்தே சர்வதேச நிவாரணப் பணியாளர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொன்றிருக்கிறார்கள். 


6. வன்னி யுத்தத்திலும், காசா யுத்தத்திலும் பாலியல் வன்புணர்வுகள் யுத்தத்தில் ஒரு ஆயுதமாகப் பாவிக்கப்பட்டிருக்கின்றது. 


7. மனிதாபிமான யுத்தம் என்கிற பெயரில் வன்னியில் நடந்தேறியது இனக்கொலை. காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவை அழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அப்பாவிகளை ஆயிரக்கணக்கில் கொன்றுவருகிறது இஸ்ரேல். 

8. வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்களை அருகிலிருந்தே சுட்டுக்கொன்றது சிங்களப் பேரினவாதம். காசாவிலும் இதுவே இன்று நடக்கிறது. வெள்ளைக்கொடியுடன் அருகே வாருங்கள் என்று கூறிவிட்டு வயோதிபப் பெண்கள், சிறுவர்கள் என்று பாரபட்சம் இன்றிச் சுட்டுக் கொல்கிறது இஸ்ரேலிய ராணுவம்.

எங்களைப்போன்ற, விடுதலை வேண்டிப் போராடும் ஒரு இனத்திற்கு நடக்கும் அவலத்தைக் கண்டும் காணாதது போல கடந்து சென்றுவிட வேண்டும் என்று கேட்பவர்கள், தமக்கு நடந்த கொடூரங்கள் குறித்துப் பேசும் தகுதியை இழந்து விடுகின்றனர். 

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2024 at 22:09, valavan said:

ஆனால் எம்மீதான இனகொலையை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சேர்ந்து வாழ்த்தியது

பலஸ்த்தீனத்தையும், இஸ்ரேலையும் உங்களால் எப்படி ஒரே தராசில் சமமாகப் பார்க்க முடிகிறது?

மகிந்தவுக்கு வாழ்த்துச் செய்தியனுப்பியதும், அவனின் பெயரை தமது உள்ளூர் வீதியொன்றிற்கு இட்டதையும் தவிர உங்களுக்கு பலஸ்த்தீனர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கெடுதிகள் என்ன? ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பாலஸ்த்தீனத்திற்கு எதற்காக எமது போராளிகள் சென்று வந்தார்கள்? சரி, அது ஒருபுறம் இருக்கட்டும்.

இஸ்ரேல் எமக்கெதிரான இனக்கொலையில் ஆற்றிய, ஆற்றிவரும் பங்கென்ன? 1980 களின் ஆரம்பத்தைலிருந்தே இஸ்ரேல் எமக்கெதிரான இனவழிப்பில் நேரடியாகப் பங்குபற்றி வருவது உங்களுக்குத் தெரியுமா? சிங்களக் காட்டேறிகளான விசேட அதிரடிப்படையினை உருவாக்க இஸ்ரேல் வழங்கிய உதவி தெரியுமா? பத்துத் தமிழர்களைக் கொல்லுங்கள், அதில் ஒரு புலி இருப்பான் என்கிற கொள்கையினை சிங்களத்திற்குச் சொல்லிக் கொடுத்தது யார்? ஒவ்வொரு இராணுவத்தினனின் மரணத்திற்கும் பத்துத் தமிழர்களை பழிவாங்குங்கள் என்கிற கொள்கையினை இலங்கைக்குச் சொல்லிக் கொடுத்தது யார்?

தமிழர்களின் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, அவற்றிற்குக் காவலாக இராணுவ முகாம்களை அமையுங்கள், சிங்கள் குடியேற்றக்காரர்களை ஆயுததாரிகளாக்குங்கள் என்று அறிவுரை கொடுத்தது யார்? இன்று காசாவிலும் மேற்குக்கரையிலும் நடக்கும் திட்டமிட்ட யூதக் குடியேற்றங்களும், ஆயுதமயமாக்கப்பட்ட யூதர்களும் உங்களுக்கு நினைவுபடுத்துவது எதனை? 

இன்றுவரை தமிழர்களுக்கெதிரான யுத்தத்தில் கிபிர், டோரா, கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், பயிற்சிகள் என்று சிங்கள ஆக்கிரமிப்பாளனுக்கு உதவுவது யார்? 

இந்த உதவிகளும், பலஸ்த்தீனன் மகிந்தவைப் பாராட்டியதும் சமனாகத் தெரிகிறதா உங்களுக்கு?

புலிகள் கொடூரமானவர்கள் இல்லை. ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். பெண்களை மதிப்பவர்கள். ஆகவே ஹமாசின் கொடூரங்களுடன் புலிகளை ஒப்பிட முடியாது.

ஆனால், சிங்களக்குடியேற்றங்களைக் கலைப்பதற்கு அவற்றின் மீது புலிகளும் தாக்குதல் நடத்தினார்கள். ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக்காரர்களைக் கொன்றார்கள். பதின்ம வயது பெளத்த பிக்குகளும்ம் புலிகளால் இலக்கு வைக்கப்பட்டார்கள். இவைகூட பழிவாங்கலுக்காகவும், சிங்களக் குடியேற்றங்களைக் கலைப்பதற்காகவும் நடத்தப்பட்டவைதான். 

கமாஸ் அக்டோபர் 7 ஆம் திக தி தாக்குதல் நடத்தியதும் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியேற்றமாக மாற்றப்பட்ட, ஆயுதமயமாக்கப்பட்ட குடியேற்றக் காரர்கள் மீது தான். ஆனால், அவர்களின் மதமும், வெறியும் ஆயுதமயமாக்கப்பட்ட யூதர்கள்மீது அட்டூழியங்களைப் புரிய தூண்டியது. 

கமாசும், புலிகளும் ஒன்றல்ல. ஆனால், குடியேற்றங்கள் மீதான தாக்குதல்களின் நோக்கங்கள் ஒன்றுதான். 

கமாசைப் பழிவாங்கவும், அழிக்கவும் பலமான இஸ்ரேல் செய்துவரும் இனவழிப்புச் சரியென்று நாம் வாதாடினால், எம்மீது நடத்தப்பட்டதைச் சிங்களவன் சரியென்று வாதாடும்போது நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விடும். 

  • கருத்துக்கள உறவுகள்

a

2 hours ago, ரஞ்சித் said:

பலஸ்த்தீனத்தையும், இஸ்ரேலையும் உங்களால் எப்படி ஒரே தராசில் சமமாகப் பார்க்க முடிகிறது?

எமது அழிவுக்கு நேரடியாக உதவியவனுக்கும் மறைமுகமாக வாழ்த்தியவனுக்கும் என்ன வித்தியாசத்தை உங்களால் உணர முடிகிறது?

2 hours ago, ரஞ்சித் said:

கமாசைப் பழிவாங்கவும், அழிக்கவும் பலமான இஸ்ரேல் செய்துவரும் இனவழிப்புச் சரியென்று நாம் வாதாடினால், எம்மீது நடத்தப்பட்டதைச் சிங்களவன் சரியென்று வாதாடும்போது நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விடும். 

இனவழிப்பு சரியென்று எந்த இடத்திலும் நான் கூறவீல்லை, 

ஆனால் எமது இன அழிப்பை எதிரியுடன் கை குலுக்கி கொண்டாடியவர்களின்  மோதலை அவர்கள் பிரச்சனை என்றுவிட்டு கடந்து செல்வேன். அது பெரிய குற்றம் என்று நான் கருதவில்லை.

 நோர்வேயின் அனுசரணை பேச்சுவார்த்தை ஒன்றிற்கு அப்புறம் ஒரு மாவீரர்நாள் உரையில் திருவாளர் அன்ரன் பாலசிங்கம் ஒரு கருத்தை சொன்னார்,
''இந்த உலகம் நான் உனக்கு மூஞ்சையை பொத்தி அடிப்பேன் நீ என்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடு என்று சொல்ல வருகிறது, அதை எம் இனம் ஏற்காது''

பலமான சிங்களவன் பலவீனமான எம்மீது நடத்திய அழித்தொழிப்பு தாக்குதலை சரியென்று சொல்லி பலவீனமான பாலஸ்தீனம் எப்போதோ வாழ்த்து தெரிவித்துவிட்டது . 
ஆனால் எமது இனம் பலவீனமான பாலஸ்தீனமக்கள்  அழிவது சரியென்று எவர்கூடவும் கை குலுக்கவும் இல்லை கொண்டாடவும் இல்லை, மெளனமாக கடந்து செல்ல எமக்கு உரிமை இருக்கிறது ஏனென்றால்  நாம் அழுதபோது ஊர் வரவில்லை, ஊர்  அழுகிறபோது எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை, அவ்வளவுதான்.

ரஞ்சித்தின் பல கருத்துக்களுடன் எப்போதுமே எனக்கு உடன்பாடு உண்டு , ஆனால் நிச்சயமாக இந்த விசயத்தில் உங்கள கருத்துடன் ஒருபோதும் மனம் ஒன்றி போகாது.

இதற்குமேல் நாங்கள் விவாதித்தால் அது கருத்து மோதலாகிவிடும். கருத்து மோதல்களில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லாததால்தான் தனியே புலம்புறமாதிரி பொதுவாக கருத்தெழுதிவிட்டு செல்வது வழமை.

எனது தனிப்பட்ட கருத்தாய் ஒன்றை  கூறி முடிக்கிறேன்,  முஸ்லீம்கள் என்பவர்கள் தமது மதத்தவரை தவிர உலகில் எவன் செத்தாலும் அழிந்தாலும் ஒருபோதும் அவர்களுக்காக அனுதாபபடவோ கவலைபடவோ மாட்டார்கள், 

அவர்கள்போல் நாம் இருக்கவேண்டிய அவசியமில்லை, அதனால் கொல்லப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் மீண்டும் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வடக்கு காசாவுக்கான கடவை உணவு பொருட்களை கொண்டுவர இஸ்ரேல் அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நிவாரணப் பணியாளர்கள் கொலை: இஸ்­ரே­லிய கேணல், மேஜர் பணி நீக்கம்

Published By: SETHU   08 APR, 2024 | 10:06 AM

image
 

காஸாவில் தொண்டு நிறு­வன ஊழி­யர்கள் 7 பேர் கொல்­லப்­பட்ட தாக்­கு­த­லுக்கு உத்­த­ர­விட்ட தனது படை அதி­கா­ரிகள் இருவரை பணி­நீக்கம் செய்­துள்­ள­தாக இஸ்ரேல் அறி­வித்­துள்­ளது.

காஸாவில் உணவுப் பொருட்­கள் விநி­யோ­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த, 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' எனும் அமெ­ரிக்க தொண்டு நிறு­வ­னத்தைச் சேர்ந்த ஊழி­யர்கள் பயணம் செய்த வாக­னத்தின் மீது கடந்த திங்­கட்­கி­ழமை (01) இரவு  இஸ்ரேல் நடத்­திய தாக்­கு­தலால் 7 பேர் உயி­ரி­ழந்­தமை கடும் கண்­ட­னங்­க­ளுக்கு வழி­வ­குத்­துள்­ளது.

இத்­தாக்­குதல் தவ­று­த­லாக இடம்­பெற்­றது என இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெத்­தன்­யாஹு கூறினார். அதே­வேளை இத்­தாக்­கு­த­லுக்கு தான் மன்­னிப்பு கோரு­வ­தாக இஸ்­ரே­லிய ஜனா­தி­பதி ஐசக் ஹேர்ஸாக் தெரி­வித்­தி­ருந்தார். 

இந்­நி­லையில், இச்­சம்­ப­வத்தில் பல்­வேறு தவ­று­களும்  விதி­மு­றை­ மீறல்­களும் இடம்­பெற்­றுள்­ள­தாக இஸ்­ரே­லிய பாது­காப்புப்படை தெரி­வித்­துள்­ளது.

ஹமாஸ் உறுப்­பி­னர்­களையே இலக்­கு­வைப்­ப­தாக  தாம் நம்­பி­ய­தாக இஸ்­ரே­லிய இரா­ணுவம் கூறு­கி­றது.

மேற்­படி ட்ரோன் தாக்­கு­த­லுக்கு உத்­த­ர­விட்ட கேணல் ஒரு­வரும் மேஜர் ஒரு­வரும் பணி­யி­லி­ருந்து  நீக்­கக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் தென் பிராந்­திய தள­பதி உட்­பட சிரேஷ்ட அதி­கா­ரிகள் பலர் முறை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் இஸ்­ரே­லிய பாது­காப்புப் படை அறிக்­கை­யொன்றின் மூலம்  தெரி­வித்­துள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் குற்­ற­வியல் விசா­ரணை நடத்­து­வது குறித்து ஆராயும் பொறுப்பு இரா­ணுவ அட்­வகேட் ஜென­ர­லிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது எனவும் இஸ்­ரே­லிய பாது­காப்புப் படை தெரி­வித்­துள்­ளது.

3 பிரித்­தா­னி­யர்கள், ஒரு அவுஸ்­தி­ரே­லியர், போலந்து பிர­ஜை­யொ­ருவர், பலஸ்­தீனர் ஒருவர், அமெ­ரிக்க–- கனே­டிய இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை கொண்ட ஒருவர் மேற்­படி சம்­ப­வத்தில் கொல்­லப்­பட்­டனர்.

இன்­றுடன் 6 மாதங்கள் பூர்த்­தி­யாகும் காஸா யுத்­தத்தில் தனது தவ­றுகள் தொடர்­பாக இஸ்ரேல் மன்­னிப்பு கோரி­யமை அரி­தாகும். இந்த யுத்­தத்­தினால் காஸாவில் 33,000 இற்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் பெரும்­பா­லானோர் பொது­மக்கள் ஆவர்.

அமெ­ரிக்கா வர­வேற்பு

இதே­வேளை, தொண்டு நிறு­வன ஊழி­யர்கள் 7 பேர் கொல்­லப்­பட்­ட­மைக்கு இஸ்ரேல் முழு­மை­யாக பொறுப்­பேற்­பதை அமெ­ரிக்கா வர­வேற்­றுள்­ளது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் பெல்­ஜி­யத்தில்  செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கையில், 'இஸ்ரேல் இச்­சம்­ப­வத்­துக்கு முழு­மை­யாக பொறுப்­பேற்­கின்­றமை முக்­கி­ய­மானது. இச்­சம்­ப­வத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களை பொறுப்­பா­ளி­க­ளாக்­கு­வ­தற்கு இஸ்ரேல்  நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தாக  தென்­ப­டு­வதும் முக்­கி­ய­மா­னது' என்றார்.

விசா­ர­ணைக்கு வலி­யு­றுத்தல்

மேற்­படி சம்­பவம் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்கு சுயா­தீன விசா­ரணை ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்டும் என வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் கிரி­மினல் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என போலந்து வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இக்­கொ­லைகள் தொடர்பில் இஸ்ரேல் வழங்­கிய தக­வல்கள் போது­மா­ன­வை­யாக இல்லை என அவுஸ்­தி­ரே­லியா தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் வெளிப்­ப­டை­யான, சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என பிரித்­தா­னிய அர­சாங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 

காஸாவில் பொது­மக்கள் பாதிக்­கப்­ப­டு­வதை தடுப்­ப­தற்கும் தொண்­டர்­களின் பாது­காப்­புக்கும் இஸ்ரேல் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் கடந்த வியா­ழக்­கி­ழமை பிர­தமர் நெதன்­யா­ஹு­வுடன் தொலை­பேசி மூலம் உரை­யா­டி­ய­போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். காஸா­வுக்கு மேலும் அதிக நிவா­ர­ணங்­களை இஸ்ரேல் அனு­ம­திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதன்பின், காஸாவுக்கு தனது எல்லைகள் ஊடான விநியோக நடவடிக்கைகளை தற்காலிகமாக அனுமதிப்பதாக இஸ்ரேல் நேற்றுமுன்தினம் அறிவித்தது.

இதேவேளை, காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் நடைபெறவுள்ளன. அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளும் இதற்காக கெய்ரோ செல்வர்  என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/180665

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான பணியாளர்களிற்கு தொடர்ந்தும் ஆபத்தானதாக காணப்படும் காசா – மயிரிழையில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய மனிதாபிமான பணியாளர்

Published By: RAJEEBAN   13 APR, 2024 | 11:38 AM

image
 

காசாவில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்தவேளை தன்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மனிதாபிமான பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் உட்பட ஏழுமனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்ட சில வாரங்களிற்குள் இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுனிசெவ் பணியாளரும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளருமான டெஸ் இன்கிராம் காசாவில் உள்ள சோதனை சாவடிக்கு அருகில் தனது வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார்.

நான் உண்மையில் அதிஸ்டசாலி உயிர் தப்பினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் குடிநீர் விநியோகத்திற்கான ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைக்காக வாகனத்தொடரணியில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

காசாவின் வடி சோதனை சாவடியில் வாகனத்தொடரணி நிறுத்தப்பட்டவேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

நாங்கள் அந்த பகுதியில் காத்திருந்தவேளை துப்பாக்கி பிரயோகம் ஆரம்பமானது பொதுமக்கள் காணப்பட்ட சோதனைசாவடியிலிருந்தே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது அவர்கள் சிதறியோடினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சன்னங்கள் எனது காரை தாக்கின, நான் அமர்ந்திருந்த பகுதிகளின் கண்ணாடிகளை தாக்கின என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பயணித்தது கவசவாகனம் என்பதால் உயிர்பிழைத்தோம், இல்லாவிட்டால் துப்பாக்கி சன்னங்கள் துளைத்திருக்கும் மோசமான விடயங்கள் இடம்பெற்றிருக்கலாம் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் எங்களது பணி நாங்கள் பயணிப்பது குறித்து நன்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதாபிமான பணியாளர்களாக பணியாற்றுவது எவ்வளவு கடினமானது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181047

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.