Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை" / பகுதி: 01
 
காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி  போரிட்டார்
நெல்சன் மண்டேலா  நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார்
மார்ட்டின் லூதர் கிங்  சமூக உரிமைக்காக போரிட்டார்
 
இவர்களில் இருந்தும் 
 
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக போராடினார் பாரதியார்
சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார்
தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை செல்வா 
 
இவர்களில் இருந்தும், மற்றும் இதனுடன் தொர்புடைய மற்றும் பலரிடம் இருந்தும், அதேவேளை வரலாற்று செய்திகளிலும் இருந்தும் 
 
உதாரணமாக சமயத்தை எடுத்துக் கொண்டால், 
 
மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய்வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பபட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப்ப ட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப்பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வு தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப்போக்கில்- அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப- விட்டுக்கொடுப்பு களுடன் விரிவுபடுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப்பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த கால, சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்கவேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறுபட்ட வையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது.
 
உலகின் சமாதானத்திற்கு எதிரான போர், முதல் முதலில் அதிகமாக தமது சமயங்களை, நம்பிக்கைகளை  பரப்புவதற்கான போராகவே ஆரம்பித்ததாக உள்ளது. அது இன்றுவரை பலவழிகளில் தொடர்கிறது. இன்று அது போராக இல்லாவிட்டாலும், பரப்புரை, சிலவேளை பொய்களும் கலந்து மற்றும் உதவி போன்றவற்றால் தொடர்கிறது. ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால்
 
போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி,பின் கிறிஸ்தவ மதப் போதகர்,உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல,இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை.- பைபிளுடன் தொடங்கு,அது வெற்றி தரவில்லை என்றால்,வாளை பாவி என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள்.விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை.முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. இது மேலும் மேலும் பிளவையே வளர்த்தது. சமாதான வாழ்வு சுக்கு நூறாகியது சமயத்தின் அல்லது ஆண்டவனின் பெயரால்!!
 
இன்னும் ஒரு உதாரணமாக,  நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக்கொண்டால், சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் அல்லது பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும்.  எனவே தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். அதாவது தமிழர் என்ற ஒரு இனமே அங்கு சாக்கடிக்கப் பட்டது.  இவர்கள் இனமாற்றம் செய்வதற்கு தமிழர் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல மத மாற்றத்தால் இழந்ததும், மற்றும் தமிழர் பெருவாரியாக உள்ள நிலத்தை விட்டு அகன்றதும் ஒரு முக்கிய இலகுவான காரணமாக அமைகிறது ? இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese]
 
ஆகவே சமயத்தை, சாதியை, நிறத்தை, இனத்தை, பொருளாதாரம்  /  வசதி அல்லது ஆண் பெண் வேற்றுமைகள் கடந்தால் தான் சமாதானம் கிடைக்க வழிவரும் என்று நம்புகிறேன். அதேவேளை எம் குழந்தை / இளைஞர் பாட திட்டம் கட்டாயம் இவைகளை கடந்ததாக உதாரணங்கள் மூலம் கற்பிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக் கொண்டால்,  இன்னும் புராணக் கதையான, உண்மைக்கு புறம்பான மகாவம்சத்தின் அடிப்படையிலேயே இலங்கை வரலாற்றை போதிக்கிறார்கள். அது தான் இன்னும் இலங்கையில் உள்நாட்டு சமாதானம் ஏற்படாததற்கு ஒரே ஒரு காரணமாகும்.     
 
எனவே, நாம் இன்று அறிவியலில் மிக மிக முன்னேறி இருந்தாலும் சமாதானம் ஒரு கேள்வி குறியாகவே உள்ளது. எனவே பொருள்முதல்வாத வளர்ச்சி [materialistic development] மனிதனுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாலும், சமாதானம் அதனால் வந்துவிடும் என்று சொல்லமுடியாது. அதற்க்கு கலாச்சார ஞானம் / அறிவு உள்ளத்தில் முழுமையாக வரவேண்டும். இங்கு தான் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும்  இலக்கியங்கள் துணை நிற்கின்றன என்று நம்புகிறேன் 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
தொடரும் பகுதி : 02   
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை"  / பகுதி: 02
 
நாம் எம்  பண்டைய அனுபவங்கள் மற்றும்  இலக்கியங்ககளை  கவனத்தில் எடுத்தால், உதாரணமாக 
 
'அன்பே சிவம்' அதாவது அன்புதான் கடவுள் என்று பறைசாற்றுகிறது 
 
'எம்மதமும் சம்மதம்', அதாவது எல்லா சமயமும் எமக்கு ஒன்றே என்கிறது
 
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' , அதாவது  அனைத்து மக்களும் நமது உறவினர்களே
 
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு'
'உண்பது நாழி, உடுப்பவை இரண்டே'
 
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் [உதாரணம்: செல்வத்தை நியாயமான அளவில் பிரி, ஆயுத விற்பனையை கட்டுப்படுத்து, 
உண்மையை சரியாக, ஆராந்து  புரியாமல், நாங்கள் நம்பும் உண்மையே உண்மை என அடம்பிடிப்பது ... இப்படி பல. 
 
உதாரணமாக ஒரு நாள் அரசன் ஒருவன் மூன்று அறிஞர்களை, தன் அரசவைக்கு கூப்பிட்டு, பாண் [ரொட்டி] என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு முதலாவது அறிஞர் ரொட்டி என்பது ஜீவனாம்சம் கொடுக்கும் ஒரு உணவு என்றான், இரண்டாவது அறிஞன் ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்து, நெருப்பின் வெப்பத்தில் சுட்ட ஒன்று என்றான், மூன்றாவது அறிஞனோ ஆணடவனின் கொடை என்றான் . இப்படி ஒரு சாதாரண உணவுக்கே கருத்து வேறுபாடு இருப்பதை இங்கு காண்கிறோம். இங்கு தான் எம் கல்வி / அறிவு / நம்பிக்கைகள் சரியாக ஒழுங்கு படுத்தப் படவேண்டும். இல்லாவிட்டால் முரண்பாடுகள் அதிகரித்து சமாதானத்தை குழப்பலாம்? ]
 
இன்றைய சூழலை உற்று நோக்கின் பலர்  
 
'மதக் கருத்தை உணராமல், மதம் தோற்றிவித்தவனை வணங்க ஆரம்பிக்கிறார்கள் / ஆரம்பித்துள்ளார்கள் ' [உதாரணம் புத்த சமயம், தமிழர் வரலாற்று நிலங்களில் அத்துமீறி புத்தரை ஒரு பட்டாளத்துடன் குடியேறிக்கொண்டு, சமாதானத்துக்கு எதிராக புத்தரை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்]  
 
புதிது புதிதாக மதம் / மத பிரிவு  வந்து கொண்டே இருக்கிறது  சமாதானம் வேண்டுமாயின் திட்டம் வகுக்கலாம். ஆனால் அதற்க்கு , அதை ஒரு சமயமாக / 
நம்பிக்கையாக பெயரிடும் பொழுதே , அது சமாதானத்துக்கு ஆப்பு வைக்கிறது.  பிறகு அதை வளர்க்க, பரப்ப, முன்பே இருந்த சமயங்களுக்குள் நுழைந்து மக்களை பிரித்து எடுக்கிறார்கள்.  அங்கு தான் பிரச்சனை எழுகிறது. 
 
உதாரணமாக, அண்மையில் , 1844  ஆண்டில் தொடங்கிய பஹாய் நம்பிக்கையை / Baha’i Faith எடுத்தால், அதன் முக்கிய கோட்பாடுகள் 
 
கடவுள் ஒருவரே. மனிதர்கள் அவரை எப்பெயரிட்டு அழைத்தபோதிலும், அவர் ஒருவரே
 
சமயங்கள் ஒன்றே. மனிதகுலத்தைப் படைத்த கடவுள், அவர்களுக்குக் காலம் காலமாக தமது அவதராங்களின் மூலமாக வழிகாட்டி வந்துள்ளார். மனிதர்கள் வாழும் காலம் மற்றும் சூழ்நிலையைப் பொருத்து இந்த அவதராங்கள் போதனைகளை வழங்கி வந்துள்ளனர். சமயங்கள் அனைத்துமே ஒரே புத்தகத்தின் தொடர்ந்துவரும் அத்தியாயங்களே.
 
மனிதகுலம் ஒன்றே மனித குலத்தைப் படைத்தவர் ஒரே கடவுள். மனிதர்கள் அவரிடமிருந்தே தோன்றியுள்ளனர். மனித ஆன்மா இறைவனிடமிருந்தே தோன்றியுள்ளது மற்றும் எல்லாருக்குள்ளும் ஒரே விதமாகவே படைக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள், ஒரே குடும்பத்தினர்
என்கிறது 
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  தமிழர் சமயம் / தமிழரின் சைவ தத்துவத்தை  மற்றும் இலக்கியத்தை எடுத்தால் 
 
'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற பொன்னான வாக்கியத்தை காண்கிறோம்
 
'வாழு வாழவிடு'  என்ற தோரணையில், மணிமேகலையில் ஒரு காட்சி அமைகிறது.   அதில் தமிழரின் அன்றைய மனப்பான்மையை,  சில முக்கிய வரிகள் எமக்கு இன்றும் எடுத்து காட்டுகிறது. 
 
“ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்
பற்ற மாக்கள் தம்முட னாயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யா தகலுமின்”
(மணிமேகலை,1. விழாவறை காதை -  60-63)
 
யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து பல்வேறு சமயங்களை சாரந்தவர்கள் சொற் போரில் வென்று நிலை நாட்ட  ஆங்காங்குள்ள பட்டிமண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; விவாதம் செய்யும்பொழுது மற்றவருடைய சமயக்கருத்தை ஏற்க முடியவில்லை யென்றால் பகைமையும் பூசலும் கொள்ளாமல் விலகிச் செல்லுங்கள் எனவும் கூறுகிறது. அதாவது எம் மதமும் சம்மதம் என்ற பெருந் தன்மையுடன் தமிழர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற தோரணையில், அறிவு பூர்வமாக பட்டி மன்றத்தில் விவாதித்து அதன் பெறுபேறுகளை கொண்டு ஏற்றுக்கொண்டதுடன், எல்லோரையும், எல்லா மத பிரிவினரையும் சமஉரிமை கொடுத்து அனைத்து வாழ்ந்தனர் என்பதை மணிமேகலையில் காண்கிறோம். சகிப்புத்தன்மையின் இலட்சியத்தை இங்கு காண்கிறோம்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
தொடரும் பகுதி : 03    
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை"  / பகுதி: 03
 
 
நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன?உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன?ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க, வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது. மக்களின் சுதந்திரம், விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இடமில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடைய வர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்த வர்களாகவும் இருந்தார்கள். "அன்பே  சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு  இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என புறநானுறு கூறுகின்றது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று எம்மை அது வழி காட்டுகின்றது. 
 
ஆகவே சமாதான வழிகள் அன்றே ஆரம்பித்துவிட்டன, ஆனால் இன்று வரை அவை திருப்ப திருப்ப எதிரொலிக்கின்றன ஒழிய  இன்னும் நிறைவேறியதாக காணவில்லை?  
 
எனவே, முதலில் மனித மனம் மாறவேண்டும் / பக்குவமடைய வேண்டும்.  அதை கலந்து, அலசி ஆராய்ந்து யாரையும் தாழ்த்தாமல்,  பக்குவமாக உரையாடுதன் மூலம் அறிவை / சிந்தனையை பரவலாக்கவேண்டும் என்று நம்புகிறேன்!  
 
இப்ப இவை தொடர்பாக எனக்கு ஞாபகம் வரும் ஆறு  பாடல்கள் கிழே தருகிறேன். அவை பொருத்தமான பாடல்களாக எனக்கு தோன்றுகிறது  
 
"When there is righteousness in the heart, there is beauty in the character;
When there is beauty in character, there is harmony in the home;
When there is harmony in the home there is order in the nation;
When there is order in the nation, there is peace in the world."
[A.P.J. Abdul Kalam]
 
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
[கணியன் பூங்குன்றனார்]
 
"'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்'என்பது, புணர்ந்தாரை பிரியாமை;
'பண்பு'எனப்படுவது, பாடு ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை;
'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்;
'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை;
'நிறை'எனப்படுவது, மறை பிறர் அறியாமை;
'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்;
'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல்."
[கலித்தொகை 133]
 
"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் குமே
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே , தப்புந பலவே"
[மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்]
 
Imagine there is no heaven
no hell below us
[Above us, only sky]
all men are even
and God is with us
[Imagine there's no countries
It isn't hard to do]
 
Imagine there are no boundaries
One is a human
not a countrymen
And all people are living life in peace.
 
[You may say I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will be as one]
 
[Imagine no possessions
I wonder if you can
No need for greed or hunger
A brotherhood of man]
 
[Imagine all the people
Sharing all the world]
 
I am a poet and i write
but i hope someday
everybody will come together as one
and the world will change forever 
[John Lennon]
 
"I many times thought Peace had come
When Peace was far away —
As Wrecked Men — deem they sight the Land —
At Centre of the Sea —
And struggle slacker — but to prove
As hopelessly as I —
How many the fictitious Shores —
Before the Harbor be" —
[Emily Dickinson ]
 
அதே நேரத்தில் சமயம், காலம் கடந்த திருக்குறளில் இருந்து ஒரு சில உதாரணத்தை சான்றாக தருகிறேன். 
 
குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
 
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
 
குறள் 851:.
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் 
பண்பின்மை பாரிக்கும் நோய்.
 
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.
 
குறள் 853:.
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் 
தாவில் விளக்கம் தரும்.
 
மனமாறுபாடு என்னும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.
 
குறள் 856:.
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை 
தவலும் கெடலும் நணித்து.
 
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.
 
இது என் சிறிய சிந்தனை 
 
இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம் 
 
இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன்.  உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
  • நியானி changed the title to "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.