Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மணி நேரங்களுக்கு முன்னர்

பூண்டு ஜலதோஷத்தை குணப்படுத்தும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், கொழுப்பைக் கட்டுப்படுத்தும்.

ஆனால், இந்த அனுமானங்கள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளனவா? உணவில் பூண்டு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?

பூண்டு ஜலதோஷத்திற்கு மட்டுமல்ல, பல நோய்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.. ஆனால் இந்த விஷயங்கள் உண்மையா என்பதைப் பார்ப்போம்.

பூண்டு ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதா?

"பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் அதிகம் உள்ளது. மிதமான அளவில் மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து உள்ளது. இதுவொரு அற்புதமான உணவு மூலப்பொருள்," என்கிறார், குழந்தைகளுக்கான உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவுக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான பாஹி வான் டி போயர்.

பச்சைப் பூண்டில் அல்லிசின் அதிகம் உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கந்தக கலவை.

இது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு நல்லது. இது ஊட்டச்சத்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்ப்பது முக்கியம்.

"குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்களுக்கு செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் சரியாகவும் வைத்திருக்க நார்ச்சத்து தேவை."

கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை பூண்டு குறைக்குமா?

இரானில் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பங்கேற்பாளர்கள் 20 கிராம் பூண்டு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றின் கலவையை 8 வாரங்களுக்கு தினமும் எடுத்துக் கொண்டனர். முடிவுகள் நேர்மறையாக இருந்தன. இந்தப் பரிசோதனையில் கொழுப்பு, ரத்த அழுத்தம் இரண்டும் குறைவதாகக் காட்டப்பட்டுள்ளது.

அதே ஆண்டில் வெளியிடப்பட்ட மற்றோர் ஆய்வில், பூண்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வைப் பார்த்தால், நமக்கு நேர் எதிரான பதில் கிடைக்கிறது. இந்தப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூண்டு கொழுப்பைக் குறைக்கிறது என்பது கட்டுக்கதை எனக் கூறி 2007இல் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.

"லேசான கொழுப்பு கொண்ட 200 ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு பூண்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களின் ரத்தத்தில் கொழுப்பு குறையவில்லை.”

தனக்கு ஒரு நாளைக்கு ஒரு பல் பூண்டு கொடுக்கப்பட்டதாக பேராசிரியர் கார்ட்னர் விளக்கினார்.

பேராசிரியர் கார்ட்னர் இந்த ஆய்வில் முக்கியப் பங்கு வகித்தார்.

"எங்கள் ஆய்வு 200 பேரை உள்ளடக்கியது. இது ஆறு மாத ஆய்வு. இந்த ஆய்வு தேசிய சுகாதார நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டது," என்கிறார் கார்ட்னர்.

"எங்கள் ஆய்வு மிகவும் துல்லியமானது. இருப்பினும், இந்தக் கட்டுக்கதைகள் உண்மையா என்பதை அறிவது சுவாரஸ்யமானது,” என்கிறார் கர்ட்னர்.

பூண்டு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்தவொரு பெரிய அளவிலான ஆய்வின் மூலமும் அவற்றை உறுதிப்படுத்துவது ஒரு பெரிய சவால் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோய்க்கு எதிராக பூண்டு பயனுள்ளதா?

நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மரிட் ஓட்டர்லி மற்றும் அவரது சகாக்கள், தங்கள் புற்றுநோய் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பூண்டு குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர்.

அவர் கூறுகையில், "இந்த ஆய்வில், பசுமையான, புதிய பூண்டின் கூறுகள் செல்லுலார் அழுத்த வழிமுறைகளைத் தூண்டுவதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தோம். புரத உற்பத்தி அல்லது புரதத்தைப் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ள செல்களை கொல்வது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்கிறார்.

மரிட் ஓட்டர்லியின் குழு, பசுமையான பூண்டு மற்றும் எத்தனாலை பயன்படுத்தி பூண்டு சாற்றை உருவாக்கியது. சில வகையான புற்றுநோய்களில் இது பயனுள்ளதாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

"பூண்டு பெருங்குடல், மலக்குடல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய் பாதிப்புகளில் நன்மை பயக்கும் என்பதை நிரூபித்துள்ள பல அறிவியல் ஆய்வுகள் உள்ளன. நாங்கள் எலிகளில் பூண்டு சாற்றைச் சோதித்தோம். இந்தச் சாறு புற்றுநோய் எதிர்ப்பு விளைவைக் காட்டியது."

இருப்பினும், இந்த முடிவுகளுக்கும் சில நிபந்தனைகள் பொருந்தும். பூண்டு கலவையைப் போலவே, இது திரவ வடிவில் இருக்க வேண்டும். இந்த பூண்டு சாறு உறைந்தாலோ அல்லது காய்ந்தாலோ, அது விளைவை ஏற்படுத்தாது.

இரண்டாவதாக, இந்த ஆய்வு விலங்குகள் மீது நடத்தப்பட்டது, மனிதர்கள் மீது அல்ல. ஆனால் இதே போன்ற முடிவுகளை மனிதர்களிடமும் பெற முடியும் என்று ஓட்டர்லி உறுதியாக நம்புகிறார்.

பச்சைப் பூண்டு, பூண்டு சாறு அல்லது அல்லிசின் பயன்படுத்தி, மனிதர்கள் மீது 83 சோதனைகள் நடைபெற்றுள்ளன. அதில், பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய் உட்படப் பல பிரச்னைகளில் நன்மை பயக்கும் விளைவுகளைக் காட்டியது.

"வாரத்திற்கு இரண்டு பல் பச்சைப் பூண்டுக்கு மேல் சாப்பிடுபவர்கள் மீதும் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய உணவுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது."

சளி குணமாகுமா?

சில நிபுணர்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால், சில ஆய்வுகள் பூண்டு சளியைக் குணப்படுத்துவதாகக் கூறுகின்றன. வெஸ்டர்ன் சிட்னி பல்கலைகழகப் பேராசிரியர் மார்க் கோஹன் இதை ஆய்வு செய்துள்ளார்.

இந்த முடிவை நிரூபிப்பதற்கு அல்லது நிராகரிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பூண்டு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

குளிர்கால நோய்த் தொற்றுகளைத் தடுக்க பூண்டு பயன்படுத்துவதை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. பூண்டில் ஆன்டிபயாடிக், ஆன்டிவைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பூண்டின் ஆன்டிவைரல் பண்புகள் பற்றிய ஆய்வுகள், பூண்டில் பல வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகவும், செல்களுக்குள் வைரஸ்கள் நுழைவதைத் தடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

உணவில் பூண்டு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?

வாரத்திற்கு ஒரு முறையாவது பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வான் டி போயர் பரிந்துரைக்கிறார். உணவில் பூண்டை எப்படி அதிகம் பயன்படுத்துவது என்பது குறித்து சமையல் கலை நிபுணர் லின்ஃபோர்ட் கூறினார்.

உங்கள் விருப்பப்படி பூண்டை உணவில் பயன்படுத்தலாம் என்றார். நீங்கள் பூண்டின் சுவையை விரும்பினால், உங்கள் சமையலில் பூண்டு விழுதைப் பயன்படுத்தலாம்.

ஆனால் நீங்கள் பூண்டின் மணத்தை மட்டும் விரும்பினால், பூண்டு பற்களை ஆலிவ் எண்ணெயில் வறுத்து பின்னர் அதை வடிகட்டி, அந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

உங்கள் சாலட்டில் பூண்டு சுவையை நீங்கள் விரும்பினால், சாலட் கிண்ணத்தின் உட்புறத்தில் பூண்டு பற்களைத் தேய்க்கலாம்.

பூண்டு அறையின் வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும். பூண்டு மென்மையாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ மாறினால், அது கெட்டுப் போனதாக அர்த்தம். அதை சமையலில் பயன்படுத்த வேண்டாம்.

பூண்டு அனைவருக்கும் நல்லதா?

பூண்டு சாப்பிடுவதால் சிலருக்கு வயிற்றில் பிரச்னை ஏற்படும்.

துரதிருஷ்டவசமாக, பூண்டு சிலருக்கு தொந்தரவாக இருக்கும். குறிப்பாக குடல் எரிச்சல் (IBS) கொண்டவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என வான் டி போயர் கூறுகிறார்.

எனவே, இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்கள் உணவில் பூண்டு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பூண்டின் சுவையை அதிகரிக்க சமைக்கும்போது பூண்டு கலந்த எண்ணெயைப் பயன்படுத்துவது ஒரு நல்ல வழி. இந்த முறையில் பயன்படுத்துவது, குடல் எரிச்சல் உள்ளவர்களைக் குறைவாகவே பாதிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c13d3kg3155o

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

👍....

பூண்டு குழம்பு, பூண்டு ரசம் என்று நம்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள், இது கொழுப்பை குறைத்து விடும் என்று. Stanford University இப்படி ஒன்றுமேயில்லை என்று ஒரு முடிவை சொல்லி விட்டார்களே....😀

சமீபத்தில் இந்தியாவில் பூண்டிற்கு பெரும் தட்டுப்பாடாகி, விலை பொன் விலை ஆகியது.

'அமலாக்கத்துறையா, சார், இங்க ஒருத்தன் அவன் வீட்ல பூண்டு குழம்பு வைச்சு சாப்பிட்றான். நீங்க உடனே வாறீங்களா?...' என்று ஒரு வடிவேலு மீம்ஸ் கூட சுற்றித் திரிந்தது..😀 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

பூண்டு குழம்பு, பூண்டு ரசம் என்று நம்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள், இது கொழுப்பை குறைத்து விடும் என்று. Stanford University இப்படி ஒன்றுமேயில்லை என்று ஒரு முடிவை சொல்லி விட்டார்களே....😀

கொழுப்பைத் தான் குறைக்கமாட்டுது, ஆனால் வேறு நன்மைகள் உண்டாமே!

பூண்டு ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதா?

"பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் அதிகம் உள்ளது. மிதமான அளவில் மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து உள்ளது. இதுவொரு அற்புதமான உணவு மூலப்பொருள்," என்கிறார், குழந்தைகளுக்கான உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவுக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான பாஹி வான் டி போயர்.

பச்சைப் பூண்டில் அல்லிசின் அதிகம் உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கந்தக கலவை.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு நல்லது. இது ஊட்டச்சத்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்ப்பது முக்கியம்.

"குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்களுக்கு செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் சரியாகவும் வைத்திருக்க நார்ச்சத்து தேவை."

புற்றுநோய்க்கு எதிராக பூண்டு பயனுள்ளதா?

நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மரிட் ஓட்டர்லி மற்றும் அவரது சகாக்கள், தங்கள் புற்றுநோய் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பூண்டு குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர்.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர் கூறுகையில், "இந்த ஆய்வில், பசுமையான, புதிய பூண்டின் கூறுகள் செல்லுலார் அழுத்த வழிமுறைகளைத் தூண்டுவதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தோம். புரத உற்பத்தி அல்லது புரதத்தைப் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ள செல்களை கொல்வது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்கிறார்.

மரிட் ஓட்டர்லியின் குழு, பசுமையான பூண்டு மற்றும் எத்தனாலை பயன்படுத்தி பூண்டு சாற்றை உருவாக்கியது. சில வகையான புற்றுநோய்களில் இது பயனுள்ளதாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

"பூண்டு பெருங்குடல், மலக்குடல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய் பாதிப்புகளில் நன்மை பயக்கும் என்பதை நிரூபித்துள்ள பல அறிவியல் ஆய்வுகள் உள்ளன. நாங்கள் எலிகளில் பூண்டு சாற்றைச் சோதித்தோம். இந்தச் சாறு புற்றுநோய் எதிர்ப்பு விளைவைக் காட்டியது."

இருப்பினும், இந்த முடிவுகளுக்கும் சில நிபந்தனைகள் பொருந்தும். பூண்டு கலவையைப் போலவே, இது திரவ வடிவில் இருக்க வேண்டும். இந்த பூண்டு சாறு உறைந்தாலோ அல்லது காய்ந்தாலோ, அது விளைவை ஏற்படுத்தாது.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டாவதாக, இந்த ஆய்வு விலங்குகள் மீது நடத்தப்பட்டது, மனிதர்கள் மீது அல்ல. ஆனால் இதே போன்ற முடிவுகளை மனிதர்களிடமும் பெற முடியும் என்று ஓட்டர்லி உறுதியாக நம்புகிறார்.

பச்சைப் பூண்டு, பூண்டு சாறு அல்லது அல்லிசின் பயன்படுத்தி, மனிதர்கள் மீது 83 சோதனைகள் நடைபெற்றுள்ளன. அதில், பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய் உட்படப் பல பிரச்னைகளில் நன்மை பயக்கும் விளைவுகளைக் காட்டியது.

"வாரத்திற்கு இரண்டு பல் பச்சைப் பூண்டுக்கு மேல் சாப்பிடுபவர்கள் மீதும் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய உணவுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது."

சளி குணமாகுமா?

சில நிபுணர்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால், சில ஆய்வுகள் பூண்டு சளியைக் குணப்படுத்துவதாகக் கூறுகின்றன. வெஸ்டர்ன் சிட்னி பல்கலைகழகப் பேராசிரியர் மார்க் கோஹன் இதை ஆய்வு செய்துள்ளார்.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த முடிவை நிரூபிப்பதற்கு அல்லது நிராகரிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பூண்டு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

குளிர்கால நோய்த் தொற்றுகளைத் தடுக்க பூண்டு பயன்படுத்துவதை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. பூண்டில் ஆன்டிபயாடிக், ஆன்டிவைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பூண்டின் ஆன்டிவைரல் பண்புகள் பற்றிய ஆய்வுகள், பூண்டில் பல வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகவும், செல்களுக்குள் வைரஸ்கள் நுழைவதைத் தடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

வாரத்திற்கு ஒரு முறையாவது பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வான் டி போயர் பரிந்துரைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரத்தத்தில் சர்க்கரை கொழுப்பை கட்டுப்படுத்தவும் ரத்த குளாய்களில் ஏற்படும் அடைப்பினை சீர் செய்யவும் , மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றிற்கும் சிறந்த நிவாரணி அப்பிள் வினீகர் எங்கிறார்கள்.
தினமும் ஒரு தேய்க்கரண்டி அப்பிள் வினீகரை தண்ணீருடன் கலந்து அருந்துவது சிறப்பானது என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் மிக பெரும் கொடுமையான விஷயம் என்னவென்றால் எந்த மருத்துவ தகவல்கள் வந்தாலும் , பிறிதொருநாளில் அது தவறு இது தவறு , இது உண்மையில்லை என்று மற்றொரு ஆய்வு தகவலையும் வெளியிடுகிறார்கள்.
அதேபோல்தான் இந்த பூண்டு பற்றிய ஆய்வுமோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

அப்பிள் வினிகர், உள்ளி, வெந்தயம், வெங்காயம் - இவை தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய செய்திகளை "மருத்துவ தகவல்கள்" என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், இவற்றின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்கள் சிறிதும் மருத்துவ அறிவியலில் பயிற்சியோ, அனுபவமோ இல்லாத தரப்பிடமிருந்து தான் பெரும்பாலும் வெளிவருகின்றன. மிக அரிதாக சில சந்தர்ப்பங்களில், போசணையியலில் தகுதி பெற்ற (dietician) சிலரிடமிருந்து வருகின்றன. இந்த போசணையியல் தகுதி கூட இரு வருடங்களில் மேலோட்டமாகக் கற்ற பின்னர் கிடைக்கும் BS தகுதியேயொழிய, ஆழமான மருத்துவ, உயிரியல் அறிவினால் கிடைக்கும் தகுதி அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.

எனவே, இவை "மருத்துவ தகவல்கள்" என்பதை விட quack களால் இணையத்தில் வெளியிடப் படும் "போலி மருத்துவத் துணுக்குகள்" என்ற வகைக்குள் அடங்கும்.

மேலே பிபிசி தந்திருப்பது போன்ற ஆக்கங்களில் தான் இந்த "துணுக்குகள்" தகுதி பெற்ற நிபுணர்களால் சீர் தூக்கிப் பார்க்கப் படும். அவர்கள் கூட "தெரியாது" என்று தான் சொல்ல முடியும், ஏனெனில் இவை பற்றி முறையான ஆய்வுகள் மருத்துவ உலகில் செய்யப் படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

நீங்கள் சொல்வதும் உண்மைதான் , அதேநேரம் சில டாக்டர்களும் அப்பிள் சைடர் வினீகரை பரிந்துரை செய்கின்றனர் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

கொழுப்பைத் தான் குறைக்கமாட்டுது, ஆனால் வேறு நன்மைகள் உண்டாமே!

பூண்டு ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதா?

"பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் அதிகம் உள்ளது. மிதமான அளவில் மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து உள்ளது. இதுவொரு அற்புதமான உணவு மூலப்பொருள்," என்கிறார், குழந்தைகளுக்கான உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவுக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான பாஹி வான் டி போயர்.

பச்சைப் பூண்டில் அல்லிசின் அதிகம் உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கந்தக கலவை.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு நல்லது. இது ஊட்டச்சத்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்ப்பது முக்கியம்.

"குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்களுக்கு செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் சரியாகவும் வைத்திருக்க நார்ச்சத்து தேவை."

புற்றுநோய்க்கு எதிராக பூண்டு பயனுள்ளதா?

நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மரிட் ஓட்டர்லி மற்றும் அவரது சகாக்கள், தங்கள் புற்றுநோய் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பூண்டு குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர்.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர் கூறுகையில், "இந்த ஆய்வில், பசுமையான, புதிய பூண்டின் கூறுகள் செல்லுலார் அழுத்த வழிமுறைகளைத் தூண்டுவதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தோம். புரத உற்பத்தி அல்லது புரதத்தைப் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ள செல்களை கொல்வது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்கிறார்.

மரிட் ஓட்டர்லியின் குழு, பசுமையான பூண்டு மற்றும் எத்தனாலை பயன்படுத்தி பூண்டு சாற்றை உருவாக்கியது. சில வகையான புற்றுநோய்களில் இது பயனுள்ளதாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

"பூண்டு பெருங்குடல், மலக்குடல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய் பாதிப்புகளில் நன்மை பயக்கும் என்பதை நிரூபித்துள்ள பல அறிவியல் ஆய்வுகள் உள்ளன. நாங்கள் எலிகளில் பூண்டு சாற்றைச் சோதித்தோம். இந்தச் சாறு புற்றுநோய் எதிர்ப்பு விளைவைக் காட்டியது."

இருப்பினும், இந்த முடிவுகளுக்கும் சில நிபந்தனைகள் பொருந்தும். பூண்டு கலவையைப் போலவே, இது திரவ வடிவில் இருக்க வேண்டும். இந்த பூண்டு சாறு உறைந்தாலோ அல்லது காய்ந்தாலோ, அது விளைவை ஏற்படுத்தாது.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டாவதாக, இந்த ஆய்வு விலங்குகள் மீது நடத்தப்பட்டது, மனிதர்கள் மீது அல்ல. ஆனால் இதே போன்ற முடிவுகளை மனிதர்களிடமும் பெற முடியும் என்று ஓட்டர்லி உறுதியாக நம்புகிறார்.

பச்சைப் பூண்டு, பூண்டு சாறு அல்லது அல்லிசின் பயன்படுத்தி, மனிதர்கள் மீது 83 சோதனைகள் நடைபெற்றுள்ளன. அதில், பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய் உட்படப் பல பிரச்னைகளில் நன்மை பயக்கும் விளைவுகளைக் காட்டியது.

"வாரத்திற்கு இரண்டு பல் பச்சைப் பூண்டுக்கு மேல் சாப்பிடுபவர்கள் மீதும் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய உணவுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது."

சளி குணமாகுமா?

சில நிபுணர்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால், சில ஆய்வுகள் பூண்டு சளியைக் குணப்படுத்துவதாகக் கூறுகின்றன. வெஸ்டர்ன் சிட்னி பல்கலைகழகப் பேராசிரியர் மார்க் கோஹன் இதை ஆய்வு செய்துள்ளார்.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த முடிவை நிரூபிப்பதற்கு அல்லது நிராகரிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பூண்டு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

குளிர்கால நோய்த் தொற்றுகளைத் தடுக்க பூண்டு பயன்படுத்துவதை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. பூண்டில் ஆன்டிபயாடிக், ஆன்டிவைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பூண்டின் ஆன்டிவைரல் பண்புகள் பற்றிய ஆய்வுகள், பூண்டில் பல வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகவும், செல்களுக்குள் வைரஸ்கள் நுழைவதைத் தடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

வாரத்திற்கு ஒரு முறையாவது பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வான் டி போயர் பரிந்துரைக்கிறார்.

👍....

பொதுவாகவே பல மரக்கறிகளும், இலை தழைகளும் நல்லவையே என்பது என் அபிப்பிராயமும் கூட. அவை ஒரு நிவாரணி என்று சொல்லபடும் போது தான், ஏற்றுக் கொள்ள ஒரு தயக்கம்.

வீட்டில் வாரத்திற்கு ஒரு தடவை வெந்தயம், பூண்டுக் குழம்பு செய்வார் எனது மனைவி. அருமையாக இருக்கும், இது கேள்வி - பதில் - விளக்கம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி என்பதால், நான் அங்கு விளக்கம் எதுவும் கேட்பதில்லை.......😀  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

நீங்கள் சொல்வதும் உண்மைதான் , அதேநேரம் சில டாக்டர்களும் அப்பிள் சைடர் வினீகரை பரிந்துரை செய்கின்றனர் என்று நினைக்கிறேன்.

இருக்கலாம், ஆனால் நீங்கள் இணைத்த வீடியோவில் இருக்கும் "டாக்டர் மன்டெல்" உண்மையான டாக்டர் அல்ல😂! Chiropractor எனும் வகையைச் சேர்ந்த போலி டாக்டர்.  Chiropractors மருந்தியல், அடிப்படை உடற்றொழிலியல், என்று எதையும் படித்துப் பட்டம் பெறுவதில்லை. இவர் போல பலர், "Dr. என்றால் டாக்டர் தான்" என்று நம்பும் அப்பாவி மக்களை ஏமாற்றியபடி இருக்கின்றனர் என்பது உண்மையே.👇

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

"டாக்டர் மன்டெல்" உண்மையான டாக்டர் அல்ல😂! Chiropractor எனும் வகையைச் சேர்ந்த போலி டாக்டர்.

அட பாவிங்களா ,
ஜஸ்டின் நீங்கள் அறிந்து வைத்திருப்பவை ஏராளம்.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் 8 நன்மைகள் | 8 garlic health benefits | Dr karthikeyan

Email: karthikspm@gmail.com Website: https://www.doctorkarthikeyan.com Supporting Studies: https://pubmed.ncbi.nlm.nih.gov/23039....

https://pubmed.ncbi.nlm.nih.gov/15881....

https://pubmed.ncbi.nlm.nih.gov/22280...

. https://pubmed.ncbi.nlm.nih.gov/23590....

https://pubmed.ncbi.nlm.nih.gov/24035....

Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

டாக்டர் கார்த்திகேயன்  MBBS டாக்டர் தான், ஆனால் பூண்டு மருத்துவம் பற்றிய அவரது கருத்துக்கள் மனிதர்களில் நிகழ்த்தப் பட்ட ஆய்வு ஆதாரங்கள் அற்றவை. Cochrane library என்ற ஒரு தளம் இருக்கிறது. இது வரை பூண்டின் ஆரோக்கிய குணங்கள் பற்றி செய்த ஆய்வுகளை மீள ஆய்ந்து (systemic review) தந்த முடிவுகள் கீழே இருக்கின்றன. ஆர்வமுள்ளோர் கண்டு பயனடைக:

https://www.cochranelibrary.com/cdsr/doi/10.1002/14651858.CD007653.pub2/full (இதய நலன் - ஆதாரம் இல்லை)

https://www.cochranelibrary.com/cdsr/doi/10.1002/14651858.CD006206.pub3/full (சளிக் காய்ச்சல் - ஆதாரம் இல்லை)

எனவே, யூ ரியூப் வியாபாரத்திற்காக நிஜ டாக்டர் வந்து நீங்கள் கேட்க விரும்புவதைச் சொன்னாலும் நம்ப வேண்டிய அவசியமில்லை, நீங்களே தேடிப் பார்க்கலாம், தரவு சரி பார்க்கலாம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.