Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"மூன்று அந்தாதிக் கவிதைகள்" 

"விமானம்" 


"விமானம் பறந்தது இராவணன் வீற்றிருக்க 
வீற்றிருந்த கோலம் வீரத்தை செப்பியது  
செப்பிய வார்த்தைகள் உண்மை பேசின  
பேசிய திசையில் பறந்தது விமானம்!"

..............................................

"அறுவடை"


"அறுவடை கொடுத்த விளைச்சல் பணமாக 
பணம் சேர்ந்து திருமணம் கைகூட 
கைகூடிய நன்னாள் கொட்டிய மகிழ்ச்சியில் 
மகிழ்ந்த வாழ்வில் குழந்தையே அறுவடை!"

..............................................     

"அன்பு"


"அன்பு கொண்டு மழலைகள் ஒன்றாய் 
ஒன்று கூடி இன்பம் பொழிய 
பொழிந்த மகிழ்வு உள்ளத்தை நிரப்புதே!


நிரப்பிய மதுவை கிண்ணத்தில் ஏந்தி 
ஏந்திய காதலை அவளில் கொட்டி  
கொட்டிய ஆசையில் தெரிந்ததே அன்பு!"    


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தையிட்டியில் பதற்றம்! பொலிஸார் – முன்னணி முறுகல் December 14, 2024 தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்தக் கட்சியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் போக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அத்தோடு, பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இன்று சனிக்கிழமை மாலை வரை போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையிலேயே இன்று மாலை முன்னணியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்தபோது உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.   https://eelanadu.lk/தையிட்டியில்-பதற்றம்-பொ/    
    • யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் இடையூறு adminDecember 14, 2024     யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அலுவலக அறையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவு செய்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.  குறித்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் சனிக்கிழமை  கீதநாத் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி எனும் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நடைமுறைகள் குறித்து ஆரம்பம் முதலே கரிசனை கொண்டுள்ளேன். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இதற்கு முன்பு செயற்பட்டவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் தமக்காக தேர்வு செய்த நிர்வாக/ அலுவலக அறை மற்றும் இன்னபிற விவகாரங்கள் தொடர்பாக எனது நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் அழுத்தமாக வெளியிட்டுள்ளேன். அந்த வகையில், மாற்றம் எனும் எண்ணக்கருவுடன் மக்கள் ஆணையை பெற்ற தேசிய மக்கள் கட்சியில் இருந்து புதிதாக யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகர், பழைய தலைவர்கள் சிலரைப் போலவே மாவட்ட நிர்வாக கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், மாவட்ட செயலகத்தின் மையத்தில் தனக்கான அலுவலக மையத்தைப் பெற்றிருப்பது மக்களும் நானும் அவர்களிடம் எதிர்பாராத ஒரு செயற்பாடு ஆகும். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமக்கான அலுவலக மையத்தை அவர்கள் தேர்வு செய்வதற்கான இடம் சட்டத்தில் உண்டு என்றாலும், யாழ் மாவட்ட செயலகத்தின் வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடம் ஒன்றை தேர்வு செய்ய முன்வருவார் என எதிர்பார்க்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைக்கப்படவிருக்கும் SLPP ஆட்சியில் இந்த முறைமை முழுமையாக மாற்றப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அரசியல் தலையீடுகளில் இருந்து முழு சுதந்திரம் வழங்கப்பட்டு , அதிகாரிகள் கௌரவமாகவும், பாரபட்சம் இன்றியும் அனைவருக்கும் சமனான சேவைகளை செயலகத்தினூடாக வளங்கப்பட ஆவண செய்வதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்காக வலுகட்டாயமாக ஓதுக்கப்பட்ட அந்த காரியாலம், மேலதிக அரசாங்க அரசாங்க அதிபருக்கான காரியாலயமாக காணப்படும் நிலையில், சிறீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்காலத்தில் குறித்த காரியாலயம் அந்தப் பதவியில் இருப்பவருக்கு மீள வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.     https://globaltamilnews.net/2024/209271/
    • பிறகென்ன…நேரில் சந்திக்கும் அளவு பழக்கம் எண்டால் போன் நம்பரும் இருக்கும்…. ஒரு கோலை போட்டு வாய்யா என கேட்பதுதானே? உண்மையில் அவருக்கு ஏதும் இடர்பாடோ என்னமோ என நான் கவலைபடுவதும் உண்டு. தொடர்புகள் இருந்தால் ஒருக்கா சுகம் விசாரிக்கவும். கோஷானும் மிஸ் பண்ணுகிறார் வாங்கோ எண்டும் சொல்லி விடவும். பிகு அப்ப நாதம் பற்றிய என் “பாய்” சந்தேகம் பிழை எண்டுறியள்?🤣
    • உங்கள் கருத்தை கவனித்தில் எடுக்கிறேன். எனக்கு அருச்சுனா மீது காழ்புணர்ச்சி ஏதும் இல்லை. ஆனால் ஆஸ்பத்திரி தமிழ் செக்கூரிட்டியை சி ஐ டி யிடம் பிடித்து கொடுப்பேன் என அவர் மிரட்டிய வீடியோ பார்த்தேன். அதில் அகங்காரத்தை தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை.
    • காதலா கட்சியா என்று ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரமிது. சுமந்திரனை பின்பற்றி சிங்கள சம்பந்தி என விக்கினேஸ்வரனை விளித்தவர்கள், இப்போ அவரொருவர் சிங்கள சம்பந்தியாகிவிட்டார், அதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. இதைத்தான் சொல்வது, "பழிப்பு படலேக்கை, சிரிப்பு சேலேய்க்கை," என்று.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.