Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
(குறுங்கதை - அறிவியல் புனைவு)
 
சிவப்புக்கல்
--------------------
'அம்மா.....'
 
'என்ன பிள்ளை.... போக வேணுமா?'
 
அம்மா கண்களை முழிக்காமலேயே கேட்டார். அது அமாவாசையை அண்மித்த நாள், ஆதலால் கும்மென்ற இருட்டு சுற்றி வரவும். பெரிய காணியில் அவர்களின் வீடு காணியின் முன் பக்கமும், கழிவறை காணியின் அடிப்பக்கமும் இருந்தன. அமாவாசை நாளாக இல்லாமல் பூரண சந்திரன் தான் மேலே நடு வானத்தில் நின்றாலும், ஊர் உறங்கும் இரவில், தனித்து கழிவறைக்கு போகும் துணிவு அவனுக்கு அறவே கிடையாது. 
 
'ம்ம்.......' என்று இழுத்தான் அவன்.
 
வீட்டிற்கு ஒரே பிள்ளை அவன். போன மாதம் அவனுக்கு பத்து வயதுகள் ஆகியிருந்தது. அன்றைய இரவும் அவன் படுக்கையை ஈரமாக்கியிருந்தான். இதுவரை அவனின் அம்மா எதற்கும் சிறிதளவும் முகம் சுழித்தது இல்லை. ஒரே பிள்ளை, நீண்ட நாட்கள் காத்திருந்து கிடைத்தவன் என்று தங்கள் பிள்ளையை ஒரு தாம்பாளத்தில் தாங்கிக் கொண்டிருந்தார்கள் அவனின் அம்மாவும், அப்பாவும்.
 
அவனின் படுக்கையை ஈரமாக்கும் பழக்கம் பற்றி அம்மாவோ அல்லது அப்பாவோ உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு எட்டு வயது இருக்கும் போது வேறொரு ஊரில் இருக்கும் ஒரு வைத்தியரிடம் அவனைக் கூட்டிச் சென்றனர். அந்த வைத்தியர் இது ஒன்றும் பெரிய பிரச்சனையே இல்லை, இந்தப் பழக்கம் இன்னும் ஓரிரு வருடங்களில் அதுவாகவே நின்று விடும் என்று சொன்னார். இரவு நித்திரைக்கு போகும் முன் ஒரு தடவை கழிவறைக்கு போய் வருவது, இரவில் நேரம் பிந்தி எதையும் குடிப்பதை தவிர்ப்பது என்று சில ஆலோசனைகளையும் அம்மாவிடமும், அப்பாவிடமும் சொன்னார் அந்த மருத்துவர். மருந்துகளோ அல்லது வேறு சிகிச்சைகளோ வேண்டவே வேண்டாம் என்று சொல்லியும் விட்டார்.
 
முக்கியமாக இந்த விடயம் அவன் மனதில் ஒரு குற்றமாக பதிந்து, அதனால் எதிர்காலத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையோ அல்லது வேறு எதுவும் உளச் சிக்கல்களோ வருவது போல நடந்து கொள்ளக் கூடாது என்ற ஆலோசனையையும் சொல்லியிருந்தார். அம்மாவும், அப்பாவும் வேறு எவருடனும் இதைப் பற்றி கதைக்காமல் இருந்ததற்கு அயலூர் வைத்தியரின் இந்த அறிவுரையும் ஒரு காரணம்.
 
ஊரில் பலருக்கும், கிட்டத்தட்ட எல்லோருக்கும், ஏதோ ஒரு பட்டபெயர் இருந்தது. ஒருவர் இல்லாத நேரத்தில் அந்த நபரைப் பற்றிய கதை ஏதும் வந்தால், அவரின் பட்டப் பெயரை சொல்லிக் கதைப்பதே இங்குள்ளவர்களின் வழக்கம். பல பட்டப் பெயர்கள் அந்தந்த ஆட்களின் உடலில் இருக்கும் குறைபாடுகளை குறிப்பன. இது பிழையென்று கருதும் அளவிற்கு இதை ஒரு பெரிய விடயமாக அவர்கள் பார்க்க ஆரம்பித்திருக்கவில்லை. வேறு சில பட்டப் பெயர்கள், அதன் பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்தவுடன், சிரிப்பை உண்டாக்கும். ஒருவரின் பட்டப் பெயர் - 11 மணி. அந்த நபர் இரவு 11 மணிக்கு இன்னும் ஒரு வீட்டின் கதவை அடிக்கடி தட்டினாராம், அதனால் அவரை '11 மணி' என்றே எல்லோரும் சொல்லிக் கொள்வார்கள். அவனின் பெற்றோர்கள் இப்படியான ஒரு பட்டப் பெயர் தங்களின் ஒரே மகனுக்கு வந்து விடக் கூடாது என்ற இன்னொரு காரணத்திற்காகவும் இந்த விடயம் பற்றி எவருடனும் கதைப்பதில்லை.      
 
ஆனாலும்  அந்த வைத்தியர் சொன்னதிற்கு அடுத்த வருடமும், அவனின் ஒன்பது வயதில், அவனிடமிருந்து அந்தப் பழக்கம் போய் விடவில்லை. இன்னொரு ஊரில் ஒரு கோவில் இருக்கிறது என்றும், அங்கே போய் ஒரு நேர்த்திக் கடன் வைத்தால் நினைப்பது கிட்டும் என்றும் யாரோ வேறு ஏதோ ஒரு விடயத்தில் சொன்னதைக் கேட்டு, அவனின் அம்மாவும், அப்பாவும் அவனை அங்கு கூட்டிச் சென்றனர். 
 
அந்தக் கோவில் ஒரு பெரும் ஆலமரத்தின் உள்ளே இருந்தது. ஓங்கி அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த அந்த மரத்தின் சில கிளைகள் பூமியை தொட்டும் தொடாமலும் நீண்டு வளர்ந்திருந்தன. அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளே கோவிலுக்குள் செல்லும் வாசல்கள்.
 
கோவில் என்பது தகரத்தால் கூரை போடப்பட்ட ஒரு சிறு மேடை மட்டுமே. மேடையின் நடுவில் கடும் சிவப்பு நிறத்திலான சிலை ஒன்று இருந்தது. அந்த சிலையின் தலை ஒரு பாம்பின் தலை போன்றும், உடல் பல கைகள் உடைய ஒரு மனித உடல் போன்றும் இருந்தது. அதை ஒரு பாம்பு தெய்வம் என்றே அங்கே உள்ளவர்கள் சொன்னார்கள். அவர்கள் மூவரும் கும்பிட்டு, சில தடவைகள் அந்தச் சிறு மேடையை சுற்றி வந்த பின், அங்கு பூசாரி போன்று இருந்த ஒருவர் அவனின் அம்மாவிடமும், அப்பாவிடமும் ஒரு சிவப்பு நிற துணித் துண்டைக் கொடுத்தார். அதை அவர்கள் ஆல மரத்தின் ஒரு சிறு கிளையில் சுற்றி, இறுக்கமான ஒரு முடிச்சு போட்டனர்.
 
பாம்புக் கோவிலில் நேர்த்தி வைத்து இப்பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. சில நாட்களில் நடு இரவில் முழித்து எழுந்து அம்மாவை கூட்டிச் செல்லும் அவன், வேறு பல நாட்களில், இன்னும் அவனை அறியாமல், பழைய பழக்கத்தையே தொடர்ந்து கொண்டிருந்தான்.  சில காலை வேளைகளில் அடுத்து என்ன செய்வது என்ற கவலை அம்மாவின் முகத்தில் வந்து போவதை அவன் பார்த்தான். தன்னாலும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவனுக்குள்ளும் இருந்தது. 
 
பின்னர், திடீரென சில நாட்களாக அவன் நடு இரவில் எழும்புவது இல்லை, அவனின் பழக்கமும் முற்றாக நின்று போனது.
 
'பிள்ளை, நீ இப்ப இரவில் எழும்புவதில்லை...' என்றார் அம்மா ஒரு நாள் காலையில்.
 
'நீங்கள் அன்று கொடுத்த கல்லை நான் என்னுடனேயே வைச்சிருக்கிறன், அம்மா.'
 
முகத்தில் திகைப்புடன், 'நான் எப்ப உனக்கு கல்லு கொடுத்தேன்...?' என்று அவனையே கூர்ந்து பார்த்தார் அவனின் அம்மா.
 
'அது தான், சரியாக இரண்டு கிழமைக்கு முன், இரவு நீங்கள் என்னை கூட்டிக் கொண்டு போனீர்கள். அன்று இரவு ஒரே வெளிச்சமாக இருந்தது. சந்திரன் எங்கட வீட்டிற்கு கொஞ்சம் கிட்ட வந்து பெரிதாக இருந்தது.'
 
இரண்டு கிழமைக்கு முன் முழு அமாவாசை நாளே என்று அவனின் அம்மா திடுக்கிட்டார். 
 
'அன்று கல்லை கொடுத்து நான் என்ன சொன்னேன், பிள்ளை?'
 
'இந்தக் கல்லை என்னுடன் வைத்திருக்கச் சொன்னீர்கள். இது என்னோட இருந்தால் என் பயமும், பழக்கமும் போயிடும் என்றும் சொன்னீர்கள்.'
 
அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக அவனின் அம்மாவிற்கு நினைவில் இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்கவும் முடியாது என்றவர், 'எங்க, அந்தக் கல்லை எடு பார்ப்பம்...' என்றார்.
 
அவனுடைய காற்சாட்டைப் பையிலிருந்து அவன் ஒரு கல்லை எடுத்தான்.
 
அழுத்தமான, உருண்டையான அந்தக் கல் கடும் சிவப்பு நிறத்தில் இருந்தது.
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்தக் கல் எப்படி வந்ததோ தெரியாது ஆனால் அதை வைத்திருந்ததும் மனசுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது......கையில் நூல், தாயத்து மாதிரி.......!  😁

நல்லாயிருக்கு கதை.......!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

அந்தக் கல் எப்படி வந்ததோ தெரியாது ஆனால் அதை வைத்திருந்ததும் மனசுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது......கையில் நூல், தாயத்து மாதிரி.......!  😁

நல்லாயிருக்கு கதை.......!

👍...

இந்த வகை புனைவுகளில் சில விடயங்கள் சொல்லப்படாமல் அப்படியே விடப்பட்டிருக்கும். அப்படியே நானும் முயன்றேன்.....😀

'கடவுள்கள்' என்று கருதப்படும் சில ஒரு காலத்தில் பூமிக்கு வந்து போன சில ஏலியன்கள்/வேற்றுக் கிரகவாசிகள் என்ற ஒரு கருதுகோளும் உண்டு....

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும். அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.  
    • 12 DEC, 2024 | 03:42 PM ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.  இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயர்ஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.  இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் (அரசியல்) பெட்ரிக் பிகரிங் (Patrick Pickering) அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.  https://www.virakesari.lk/article/201089
    • ஐசிசியிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சலசலப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஐசிசியிடமிருந்து எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை கோரியுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதியிலிருந்து மார்ச் 9 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து வருகிறது. மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும், ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை ‘ஹைபிரிட்’ மாடலிலேயே நடத்த வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை ஐசிசி எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி இதை கொடுக்கும் பட்சத்தில், இனி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி தொடர்கள் என்றுமே ஹைபிரிட் மாடலில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஹெரிபை சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் வழிமுறைகளை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பின்பற்றும் என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/313493
    • 'எனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குங்கள் அல்லது இலங்கைக்கு திருப்பிஅனுப்புங்கள்" - தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மன்றாட்டமாக வேண்டுகோள் 12 DEC, 2024 | 03:18 PM இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தனக்கு  இந்திய பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் அல்லது தன்னை இலங்கைக்கு திரும்பி அனுவேண்டும் என மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்கள்தெரிவித்துள்ளன. இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம்  முன்பாக இலங்கை தமிழ் இளைஞர் முழந்தாளிட்டு தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குமாறும் அல்லது இலங்கைக்கு அனுப்புமாறும் கோரும் வீடியோவை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இராமநாதபுரம் ஆட்சியர் இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்பு மறுக்கின்றார் அதேவேளை தனக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பிலான ஆவணங்களையும் வழங்க மறுக்கின்றார் என ஜொய் என்ற அந்த இளைஞன் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னாள் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது. இராமநாதபுரம் ஆட்சியரிடம் நான் பத்திற்கும்  மேற்பட்ட ஆவணங்களை கையளித்துவிட்டேன்,என யாழ்ப்பாண இளைஞன் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது. தான் பல வருடகாலமாக இந்த விடயத்துடன் போராடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார். https://www.virakesari.lk/article/201095
    • பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கணேசன் பெண் பயணியிடம் 10 பவுன் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி தனது தந்தையை மகனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், புதன் கிழமையன்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்துள்ளது. "நம்மை நம்பி வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்கிறார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் மகன். பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை சொல்வது என்ன? ஆட்டோவில் திரையை வைத்து மறைத்து வேறு இடத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் திருச்சி மாவட்டம் குண்டூரில் வசித்து வரும் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு, தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 11) விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து தாம்பரம் சென்று திருச்சி செல்வதாக அவரது பயணத் திட்டம் இருந்தது. இதன்பிறகு நடந்த சம்பவங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன். "காலை 9.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வசந்தா மாரிக்கண்ணு, அங்கு நின்றிருந்த ஆட்டோ மூலம் தாம்பரம் செல்வதற்காக ஏறியுள்ளார். வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டோவில் இரண்டு பக்கமும் இருந்த ஸ்க்ரீனை டிரைவர் இறக்கிவிட்டுள்ளார்." ஆனால், ஆட்டோ தாம்பரம் செல்லாமல் குரோம்பேட்டை அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே திரும்பி, பச்சை மலை வழியாகச் சென்றுள்ளது," என்று தெரிவித்தார் உதவி ஆணையர் நெல்சன். அங்கு ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, வசந்தா மாரிக்கண்ணு அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை அந்த நபர் மிரட்டிப் பறித்ததோடு, அதன்பிறகு வசந்தாவை கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறினார். சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அரபு நாடுகள் என்ன சொல்கின்றன?11 டிசம்பர் 2024 குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 தந்தையை போலீஸில் ஒப்படைத்த மகன் பட மூலாதாரம்,HANDOUT இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வசந்தா மாரிக்கண்ணு, தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கணேசன் என்ற ஆட்டோ டிரைவரை அழைத்துக் கொண்டு அவரது மகன் ராமச்சந்திரன் வந்துள்ளார். இதுதொடர்பாக, தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தான் திருடிய நகைகளை விற்று குடும்பச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தனது மகளிடம் கணேசன் கூறியதாகவும், இதை அறிந்த அவரது மகன் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தனது தந்தையை ஆஜர் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வசந்தாவிடம் இருந்து திருடப்பட்டதாகச் சொல்லப்படும் பத்து பவுன் நகை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!8 மணி நேரங்களுக்கு முன்னர் தனது தந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமச்சந்திரன், "புதன்கிழமை காலையில வீட்டுக்கு வந்ததும் என் அப்பா நகைகளைக் காட்டினார். 'இந்த நகை எப்படி வந்தது?' எனக் கேட்டபோது, வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்ததாகச் சொன்னார். 'நம்மை நம்பி ஆட்டோவில் ஏறும் ஒருவரிடம் இப்படியெல்லாம் செய்வது தவறு" எனக் கூறி வீட்டைவிட்டு வெளியே போகுமாறு சத்தம் போட்டேன். அவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்" என்றார். இதன்பிறகு கணேசனை பின்தொடர்ந்து சென்ற ராமச்சந்திரன், அவரை தாம்பரம் காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார். "காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாமென்று என் தந்தை கெஞ்சினார். அதைப் பொருட்படுத்தாமல் நான் கூட்டிப் போனேன்" என்றார், ராமச்சந்திரன், மேலும், குடிபோதையில் இப்படித் தொடர்ந்து செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், "தவறுக்கு எப்போதும் உடன்பட மாட்டேன். அவர் செய்தது மிகத் தவறான காரியம் என்பதால் போலீசில் ஒப்படைத்தேன். அது என் தம்பி, தங்கையாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன்" என்றார். யுக்ரேன் போரில் காயமடைந்த வீரர்களின் மறுவாழ்வுக்கு உதவும் பெண்5 மணி நேரங்களுக்கு முன்னர் அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, திருடப்பட்ட நகை கஞ்சா விற்றதாக தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கணேசன் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார் காவல் உதவி ஆணையர் நெல்வன். அதுகுறித்துப் பேசியவர், "கஞ்சாவை புகைத்துவிட்டுப் பலமுறை கணேசன் தகராறு செய்துள்ளதால், மறுவாழ்வு மையத்திலும் அவரைச் சேர்த்துள்ளோம். ஆனால், அங்கு முறையாக சிகிச்சை பெறாமல் திரும்பிவிட்டார்" என்றார். கணேசனின் மனைவி சிங்கப்பூரில் வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைப்பதற்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. "கணேசனின் மனைவியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு இந்த நகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது" என்கிறார் நெல்சன். ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இதை பிபிசி தமிழிடம் தெரிவித்த ராமச்சந்திரன், "உண்மைதான். இதற்காக நானும் கடன்களை வாங்கி ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். அதற்காக திருடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?" என்கிறார். இந்த வழக்கில் கணேசன் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 304(2)இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் நெல்சன், "பொதுவெளியில் பயணிக்கும்போது வசந்தா மாரிக்கண்ணு எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளதாகக் கூறினார். ஆனால், சம்பவம் நடந்த அன்று மழை பெய்ததால் அவர் கோட் அணிந்துள்ளார். 'இதனால் நகைகள் அணிந்திருப்பது வெளியில் தெரியாது' எனத் தான் அலட்சியமாக இருந்துவிட்டதாக" கூறுகிறார். விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் இருந்து வெளியே வரும் பயணிகள், மொபைல் செயலி மூலம் பதிவு செய்துவிட்டு வெளி வாகனங்களில் பயணித்தால் ஆட்டோ டிரைவரின் பெயர், வாகனம் ஆகியவற்றை அறிய முடியும். "அவ்வாறு இல்லாமல் தெருவில் செல்லும் எதாவது ஒரு வாகனத்தைத் தேர்வு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். தங்களது உறவினர்களுக்கு வாகனத்தின் எண், டிரைவரின் அடையாளம் ஆகியவற்றைத் தெரிவித்துவிட்டுப் பயணிப்பது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்வன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cm2exyp63j0o
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.