Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது"
[ஒரு குழந்தை பாட்டு]
 
 
"கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது
காலை வேளையில் வடை சுடுறாள்
காத்து இருக்குது பூவரசம் வேலியில்
கானா பாட்டு பாடி ஆடுறாள் !"
 
"கார்த்திக் கார்த்திக் பூனை பாயுது
காரிருளில் இரு கண்கள் மிளுருது
காரை கொஞ்சம் விரைவா செலுத்து
காத தூரம் போக வேண்டும் !"
 
"கார்த்திக் கார்த்திக் பட்டம் மிதக்குது
காடை கோழி எட்டி பார்க்குது
காளான் பூஞ்சையை கொத்தி சாப்பிடுது
காட்டுப் பக்கம் அறுந்து போகுது !"
 
"கார்த்திக் கார்த்திக் அம்புலி தெரியுது
காங்கேயம் காளை துள்ளி வருகுது
காவற் கடவுளை கூவி கூப்பிடு
கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் !"
 
"கார்த்திக் கார்த்திக் பிறந்தநாள் இன்று
காலம் போனது எமக்கு புரியலை ?
காய் பழங்கள் துள்ளி பிடுங்கிறாய்
காலால் பாய்ந்து ஒலிம்பிக் பார்க்கிறாய் !"
 
"கார்த்திக் கார்த்திக் தாத்தாவின் பாராட்டு
காதோரம் சொல்லும் அகவை வாழ்த்து
காற்று வெளியில் பறந்து வருவேன்
கார்த்திக் குட்டியை தூக்க வருவேன் !"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

கார்த்திக் கார்த்திக்

கார்த்திக் எனும் பெயரில் எனக்கும் ஒரு பேரன் இருக்கிறான்.

வடைப் பாட்டு அருமை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் பேரனுக்கு வாழ்த்துவதுடன் உங்களுக்கும் நன்றி 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.