Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்

யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்.

யாழ். நகரத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றை தூய்மையாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.

புது வருடப் பிறப்பு தினமான இன்று காலை யாழ். நகரத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, யாழ். நகரின் மையப்பகுதி மற்றும் புதிய மாநகரசபை கட்டட வளாகம் அதனை அண்டிய சுற்றுவட்டத்தின் நீர் வடிந்தோடும் வடிகால்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

இதனையடுத்து, அவற்றை தூய்மையாக்குவது குறித்து அமைச்சர் அவதானம் செலுத்தியதாக குறிப்பிடத்தக்கது.

யாழ். நகரின் தூய்மை பராமரிப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாடுக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையிலேயே, அது தொடர்பில் ஆராய்வதற்காகவே அமைச்சர் இந்த கள விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240414-WA0033-1-600x450.jpg

IMG-20240414-WA0039-600x322.jpg

IMG-20240414-WA0037-600x450.jpg

IMG-20240414-WA0035-600x450.jpg

https://athavannews.com/2024/1378007

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவர் தன்னை ஒரு ரவுடிகளின் ஏக தலைவர் என்ற நிலையில் வைச்சிருக்கப் பார்க்கிறரோ..?!

இவரின் அமைச்சு கடற்தொழில்.

இவர் பார்க்கிற வேலைகள்..

மாநகரின் வேலை..

விளையாட்டுத்துறையின் வேலை..

நீர் முகாமைத்துவத்தின் வேலை..

கல்வி அமைச்சின்/திணைக்களத்தின் வேலை..

இவர் தான் ஒரு அசகாயசூரன் என்ற நினைப்பில் இப்பவும் இருக்கிறார்..

இந்த நினைப்பு தான் வடமாகாணத்தில் தீவகம் மிகவும் பிந்தங்கிய பிரதேசமாக இருக்க முக்கிய காரணம். தனக்கு வாக்குப் போட்ட மக்களின் அடிப்படை தேவைகளை கூட.. பூர்த்தி செய்ய முடியவில்லை. யாழ் - ஊர்காவற்றுறை 779 பேரூந்துச் சாலை இன்னும் முழுமையடையவில்லை. இச்சாலையில் தான் பிரதான திணைக்களங்களும் பள்ளிகளும் அரச தனியார் மற்றும் விவசாயிகளும் தமது தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்கின்றனர். அந்த வீதி இன்று வரை முழுமை அடையாமக்கு.. காரணம்.. இவருக்கு சரியான கமிசன் கொடுக்கக் கூடிய கொத்தராக்கர் வராமையாம். 

தீவகத்தில் இருக்கும் பல பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. குறிப்பாக தொலைபேசி வசதி இல்லை. ஒலிபெருக்கி.. ஒலி வாங்கி வசதி இல்லை.. சரியான தொடர் குடிநீர் விநியோகம் இல்லை.. மதிய உணவு கூட இல்லை. காலையில் உணவருந்தாமல்.. 10 க்கு குறைந்தது 5 பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள். இவரின் வாக்கு வங்கிக்கான களமாக இருக்கும் தீவகம் கூட இவரால்... முன்னேற்றம் அடைய முடியவில்லை.. இவர் யாழ் நகரை துப்பரவாக்குவாராம். சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பாராம்.

தீவகம் சர்வதேச கிரிக்கெட் மற்றும் விமான நிலையத்திற்கு தகுந்த இடம். உல்லாசப் பயணிகளை கவரக் கூடிய இடம். இருந்தும் ஒரு திட்டமும் அங்கு இல்லை.

பெரும் கூச்சலில் ஆரம்பித்த.. வேலணை நகரத்திட்டத்தை.. வங்களாவடிச் சந்தியில் போய் பார்த்தால் தெரியும். இவர் ஆரம்பித்த எதுவுமே.. உருப்படியாக இல்லை. கமிசனை.. வாங்கி பொக்கட்டிக்குள் போட்டதோடு.. சில நாலு தாடிக்காரர்களை கூட்டிக் கொண்டு.. ஊடகக் கமராக்களுக்கு ஓசி விளம்பரம் கொடுப்பதே இவரின் இப்போதைய பணியாக இருக்கிறது. 

உருப்படியில்லாத தமிழ் தேசியக் கட்சிகளின் நடவடிக்கையால்.. இவரின் தில்லு முல்லு அரசியல் இன்னும்.. நீடித்து நிலைக்கிறது. இவர் உண்மையில் சிங்கள பேரினவாத அரச ஏஜெனட்.. அதாவது ஒற்றர். அதையே அவர் அன்றில் இருந்து இன்று வரை செய்கிறார்.

Edited by nedukkalapoovan
  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.