Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 16
 
 
தன்னுடைய புகழ்மிக்க வெற்றியைப் பற்றி எண்ணமிட்ட துஷ்ட காமனி, அது மகத்தான தாயினும் மனதுக்கு மகிழ்வளிக்க வில்லை என்பதைக் கண்டான். அதன் மூலம் லட்சக்கணக்கானவர்கள் அழிய நேரிட்டது என்பதை அவன் மறக்கவில்லை. பியாங்கு தீபத்திலுள்ள தேரர்கள் [arahants in Piyahgudipa] இவனுடைய மனதில் உள்ளதை அறிந்ததும், அரசனைத் தேற்றுவதற்கு எட்டு தேரர்களை அனுப்பி வைத்தனர்
 
" ..... எனக்கு எப்படி ஆறுதல் ஏற்பட முடியும்? வணக்கத்துக்கு உரியவர்களே!" என்று துஷ்ட காமனி கேட்டான், அதற்கு தேரர்கள்
 
"இந்தச் செய்கையின் காரணமாக நீ சுவர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத் தடையும் ஏற்படாது. ஒன்றரை மனிதர்கள் மட்டுமே உன்னால் இங்கு கொல்லப்பட்டார்கள். ஒருவர் மும்மணிகளில், அதாவது புத்தம், தர்மம், சங்கம் ஆகிய திரிசரணத்தில் [three jewels] சரணடைந்து விட்டார். மற்றவர் புத்தமதத்தின் அடிப்படை கோட் பாடானா "பொய், காமம், களவு, மது, கொலை" ஆகிய ஐந்து தீய ஒழுக்கங்களை தவிர்க்கும் பஞ்சசீலங்களை மேற் கொண்டு விட்டார். மற்றவர்கள் எல்லாம் நமது மார்க்கத்தை நம்பாதவர்கள். ஆகவே தீய வாழ்வை மேற்கொண்டவர்கள், எனவே மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள்" என்று கூறினார்கள்
 
['From this deed arises no hindrance in thy way to heaven. Only one and a half human beings have been slain here by thee, O lord of men. The one had come unto the (three) refuges, the other had taken on himself the five precepts. Unbelievers and men of evil life were the rest, not more to be esteemed than beasts].
 
"ஆனால் நீயோ புத்தருடைய போதனைகளுக்குப் பலவிதத்திலும் பெருமை தேடப் போகிறவன், எனவே உன் மனதிலிருந்து கவலையை அகற்று அரசனே " என்று மேலும் அவர்கள் ஆறுதல் கூறினர்.
 
மகாவம்சத்தில் காணப்பட்ட துட்ட கைமுனு, எல்லாளன் கதையை கொஞ்சம் நடுநிலையாக அறிவு பூர்வமாக மற்றும் புத்தர் உண்மையில் போதித்த தர்மத்தினூடாக பாருங்கள்.
 
எல்லாளன் செய்த தவறு என்ன ? நீதியாக, நிதானமாக, எல்லோருக்கும் ஐந்தறிவு படைத்த மிருகங்களுக்கும் கூட எந்த பேதமும் இல்லாமல், தன் ஒரே ஒரு மகனை கூட, தற்செயலாக நடந்த செயலாக இருந்தும் மரண தண்டனை கொடுத்த ஒரு நடுநிலை மன்னன். என்றாலும் சிவனை வழிபடும் சைவ மதத்தான் என்ற ஒரே ஒரு காரணத்தால் மட்டும் அவன் கொல்லப் படுகிறான்.
 
உண்மையில் இது தமிழர், சிங்களவர் யுத்தம் அல்ல, ஏனென்றால் அப்ப சிங்கள இனம் என்று ஒன்றுமே இல்லை. ஆக புத்த மதத்தை பின்பற்றுபவன், சிவனை வழிபாடுபவன் என்ற மத வழிபாடே இருந்தது. மேலும் சிவனை வழிபடுபவர்கள் கட்டாயம் தமிழனாய் அல்லது இலங்கையின் தொல்குடிகளான நாகர்களாக இருந்தனர். அதனால் தான் தமிழர்கள் மேல் போர் தொடுக்கப்படுகிறது.
 
அதாவது துட்ட கைமுனு அநீதிக்கு எதிராக போர் செய்யவில்லை, உன்னத நீதிக்கு எதிராக, புத்தசமயத்தை நிலை நாட்ட, புத்தரின் கொள்கைகளை முற்றிலும் மீறி கையான்ட ஒரு செயல் பாடாகும்.
 
மகாவம்சத்தில் புத்தரின் முதலாவது வருகையே, புத்தர் தன் கொள்கைகளின் மகிமைகளை, இலங்கையில் நிலை நாட்டி, பிரகாசிக்க வைப்பதற்காக, இயக்கர்களின் மனதில் பயத்தை உண்டாக்கி, அவர்களை அவர்களின் சொந்த வாழ்விடத்தில் இருந்து, அதாவது தாய் நாட்டில் இருந்து துரத்துகிறார். இது தான் துட்ட கைமுனுவிக்கு, மகாவம்ச ஆசிரியர் புத்தரின் கதாபாத்திரம் ஊடாக வன்முறை பாவிக்க கொடுத்த ஆணைப்பத்திரம் எனலாம் [by, so that his doctrine should eventually "shine in glory", has been described as providing the warrant for the use of violence for the sake of Buddhism]
 
ஆனால் புத்தர் இதை செய்திருப்பாரா அல்லது ஆதரித்து தான் இருப்பாரா நீங்களே முடிவு செய்யுங்கள்?
 
இப்படியான கதாபாத்திரங்களின் தாக்கம் தான், கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பக்திப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பந்த நாயனாரை, ஈழத்தின் மன்னாரில் உள்ள மாதோட்டத்தின் பாலாவி ஆற்றங்கரையில் அமைந்த திருக்கேதஸ்வர தலத்தை நோக்கி பாடும் பொழுது,
 
"புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர்"
 
என ஆலோசனை அல்லது அறிவுரை கூற அவரை தூண்டியதோ யான் அறியேன்?
 
மேலும் ஈழத்தில் தமிழ் மக்களின் மிக முக்கியமான தொல்லியல் ஆதாரங்களாக, தொன்மைகளாக கிழக்கில் திருக்கோணேஸ்வரர் ஆலயமும் வடக்கில் திருக்கேதீஸ்வரர் ஆலயமும் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
"புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், புறன் உரைச்
சமண் ஆதர்,
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை
கேளேன்மின்!
மத்தயானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர்,
மாதோட்டத்து
அத்தர், மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம்
அடைமி(ன்)னே!"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 17 தொடரும்
313019394_10221818043583057_1071092816601457102_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=wh0CvU_JLJoQ7kNvgHlxaO1&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAeGOuj968ewU7nEDcKFYuwgtO4ilbYls897TYFR8xypw&oe=6635825C 313092720_10221818052023268_2081403973253957141_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ZVB2SUkNk2MQ7kNvgFqUnJR&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAMuZYFNPxXTROJGkAdfIPkkaVnxw1YAQIN_hgRaJEL5g&oe=6635953B
311471171_10221818052623283_2864549303455677541_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ZxQSb7KqTjQQ7kNvgE8-2Qz&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDms9TzRzZEm75Y22SO750f1zpBg4ABbLkTGVxkZJ-RkA&oe=66357B94 312929142_10221818047183147_1800820308886274517_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Wfqcd7Bm4mUQ7kNvgEnrwqD&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDz1dAY3NxKkPz60C5gWAu46Gyi3hEYekMx1qeIo-OCsQ&oe=66358A9E
 
 
  • Replies 53
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 17
 
 
கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. உதாரணமாக, எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப் பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டு கால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டு உள்ளமைக்கு சிறந்த சான்று ஆகும்.
 
ஒரு உண்மையான தேரர் அல்லது புத்த பிக்கு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக, உபகுப்தர் (Upagupta) என்ற கி மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த பிக்கு ஒருவரை சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அசோகவதனம் (Ashokavadana) எனும் வரலாற்று நூலில் காண்கிறோம். இந்தியாவில் போர் வெறியுடன் பல போர்களைப் புரிந்த, சக்கரவர்த்தி அசோகர் (கி.மு 273 - 232), கொடிய கலிங்க போர்க் களக் காட்சியைக் கண்டு மனம் பதைத்தார், அந்த மாமன்னனின் ஈரநெஞ்சு, துஷ்ட காமனி போலவே, போரின் சேதத்தைக் கண்டும், பலியான உயிர்களை எண்ணியும், சிந்தப்பட்ட இரத்தத்தை நினைத்தும் அமைதியாக அழுதது, அப்பொழுது சக்கரவர்த்திக்கு நேர் நெறியைக் காட்டி ஆற்றுப்படுத்தியவர் தான் ‘உபகுப்தர்’ என்னும் இந்த உண்மையான பிக்கு ஆகும்.
 
என்றாலும் மகாவம்சம் / அத்தியாயம் 5 / 'மூன்றாவது மகாசபை' / 189 ஆம் பாடல், அசோகனின் கொடுஞ்செயல்களின் காரணமாக முன்பு அவனைச் சண்டாள அசோகன் என்று அழைத்தனர் என்கிறது. அதை உறுதிப் படுத்துவது போல, விவேகானந்தரின் ஒரு கூற்றும், இளவயதில் அவ்வளவு நல்லவராக இல்லாத அசோகர் தனது சகோதரருடன் சண்டையிட்டார் என்கிறது. அதில் தோற்கடிக்கப்பட்ட அசோகர், பழிவாங்குவதற்காக சகோதரனை கொல்ல எண்ணினார். அந்த சகோதரன் ஒரு புத்த பிக்குவிடம் தஞ்சம் புகுந்ததால், அசோகர் அந்த புத்த பிக்குவிடம் சென்று தனது தம்பியை ஒப்படைக்கக் கூறினார். அன்பால் பகைமையை நீக்கச் சொன்ன புத்த பிக்குவிடம், கோபத்தால் தனது தம்பிக்கு பதில் உயிர் துறக்க அவருக்கு சம்மதமா என்று கேட்டதற்கு சிறு சலனமும் இல்லாமல் அந்த புத்த பிக்கு உயிர் விட சம்மதித்து வெளியே வந்தார் என்கிறார்.
 
ஆனால் மகாவம்சத்தில் இதற்கு எதிர்மாறான செயலை காண்கிறோம், இங்கு துஷ்ட காமனிக்கு தேரர்கள், இவர்கள் எல்லோரும் நமது மார்க்கத்தை நம்பாதவர்கள், எனவே மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள், ஆகவே இது அதர்மம் அல்ல, எனவே நீ சுவர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத் தடையும் இல்லை என்கின்றனர்?
 
அப்படி என்றால் புத்தர் மாற்று கருத்து உள்ளவர்களை, அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக, நேர்மையானவர்களாக, ஒழுங்கானவர்களாக, மற்ற உயிர்களிடமும் மக்களிடமும் அன்பு செலுத்துபவர்களாக இருந்தாலும் கொல்லலாம் என்கிறாரா?, எல்லாமே குழப்பமாக உள்ளது?? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா ?
 
அசோகனின் பாறை ஆணை-2, [The Edicts of King Asoka] மன்னர் ஆண்டியோகாஸ் பற்றியும், மற்ற கிரேக்கப் பகுதி நாடுகள் பற்றியும், சத்தியபுத்திரர் [இன்றைய தர்மபுரி பகுதியான, தகடூர் பகுதியை ஆட்சிபுரிந்த சத்தியபுத்திரர் அதியமான் மரபினரை கொண்டவர்களாகும். சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன], சேர [கேரளபுத்திரர்], சோழ, பாண்டியர்கள், பற்றியும் குறிப்பிடுகிறது. [Everywhere within Beloved-of-the-Gods, King Piyadasi's domain, and among the people beyond the borders, the Cholas, the Pandyas, the Satiyaputras [Satyaputras ruled parts of the Kongu country and were surrounded by the Cheras to the west and the Pandyas and Cholas to the east./ ], the Keralaputras [Cera dynasty], as far as Tamraparni and where the Greek king Antiochos rules, and among the kings who are neighbors of Antiochos,..]
 
இப் பகுதிகளுக்கு எல்லாம் தூதுக் குழுக்கள் பௌத்த சமயப் பணிக்கு அனுப்பப்பட்டன. இந்தத் தூதுக் குழுக்கள் அனுப்பப் பட்ட காலம் கி.மு. 258 என்று நம்ப இடமுள்ளது என்கிறார் வின்சென்ட் ஷ்மித். இது மகாவம்சத்திற்கு குறைந்தது 800 ஆண்டுகளுக்கு முன் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் அசோகர் எந்தெந்த நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பினார் என்பது குறித்த இலங்கை புத்த பிக்குகளால் பல நுறு ஆண்டுகளின் பின் எழுதப்பட்ட குறிப்புகளில், அசோகன் தூதரகங்கள் தொடர்பாக ஒரு முரண்பாடு காணப்படுகிறது. உதாரணமாக, அசோகனின் தலைநகரான, பாடலிபுத்திரத்தில் இருந்து தெற்கிற்கு வனவாசி, மஹிஷமண்டல மற்றும் இலங்கை போன்ற இடங்களுக்கு தூதர்கள் அனுப்பியதாக [taking Asoka’s capital Pāṭaliputta as the centre of the radius, we can see that the Missions went, for example further south to Vanavāsī [dwelling in the forest / According to Dr. Buhler, it was situated between the Ghats, Tungabhadra and Barodā] and Mahisamaṇḍala [modern Mysore] and on to Sri Laṅkā] பாளி நூலான மகாவம்சத்தில் [Mahāvaṁsa ] குறிக்கப்பட்டுள்ளது.
 
இங்கு தமிழர்களின் நாடுகளான, சத்தியபுத்திர தேசம், கேரளபுத்திரர், சோழ, பாண்டிய நாடுகள் என நேரடியாக அசோகனின் பாறையில் குறிக்கப்பட்டது விடப்பட்டுள்ளன. இதன் நோக்கம் ஏதாவது உங்களுக்கு புரிகிறதா ?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 18 தொடரும்
312264012_10221918190046656_618331627826023897_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6gGTNn0Inf8Q7kNvgGn4JQB&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDO588_8Vr946EISJA-E1yRpcR-BDIf_5UKHsfOHgKWAw&oe=6636F132 312185356_10221918189446641_2688514357948599742_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=uifP7yysEP0Q7kNvgFACfG0&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCIpKELLnyFeD3mTVr0mOPExhV6GDatfy1K_9X9hZCyhw&oe=6636E061 312123062_10221918189886652_3250885119866738273_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Gx0Py3ZPKFkQ7kNvgF8sgRf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBreaveeOKwJOub3MHXo7VzO9M6_CeMAd3-jsUcNXVe3g&oe=6636CF75 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 18
 
 
 
அசோகனின் பாறை ஆணை-7 இல், எல்லா மதங்களும் எல்லா இடங்களிலும் வசிக்க வேண்டும் [King Piyadasi, desires that all religions should reside everywhere,] என்று அசோகன் கூறுகிறார். அதே போல அசோகனின் பாறை ஆணை-12 இல், 'சந்நியாசிகள் மற்றும் வீட்டில் வசிப்பவர்கள் இருவரையும், அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் மதிக்கிறோம்' .. 'என் மதத்தை மகிமைப்படுத்த விடுங்கள் என்பது உண்மையில் அவரின் மதத்தையே தீங்கு விளைவிக்கும்' என்கிறது [King Piyadasi, honors both ascetics and the householders of all religions, ... "Let me glorify my own religion," only harms his own religion. ].
 
மீண்டும் அசோகனின் பாறை ஆணை-13 இல், தெற்கில் சோழ, பாண்டியர் என உறுதிப்படுத்தப் படுகிறது [ beyond there where the four kings named Ptolemy, Antigonos, Magas and Alexander rule, likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamraparni.]. மேலும் அந்த பாறையில், என்னால், இந்த தரும அல்லது அறநெறி கட்டளை எழுதப்பட்டது ஏன் என்றால், என் மகன்களோ இல்லை பேரன்களோ புதிய வெற்றிகளை போரிட்டு பெறக் கருதக்கூடாது என்பதாலாகும் என்கிறார் [I have had this Dhamma edict written so that my sons and great-grandsons may not consider making new conquests,].
 
ஆனால் எந்த பாறையிலும் தன் மகனை, மகளை புத்த மதம் பரப்ப அனுப்பியது எழுதப்படவில்லை? மற்றும் 'எல்லா மதமும் சம்மதம்' என்பதையும் எல்லாளன் - துட்டகாமினி தொடங்கி, இன்று வரை காணமுடியவில்லை ?
 
புத்தரின் முதலாவது வருகையில் அவர் கடும் மலையையும் புயலையும் தோற்றுவித்து, இயக்கர்களின் மனதில் பீதியையும் திகிலையும் உண்டாக்கி, அதன் மூலம் அவர்களை தன் வழிப்படுத்தி இலங்கையில் இருந்து அகற்றினார் என்னும் நடவடிக்கை ஒருக்காலும் புத்தர் செய்யமாட்டார்?
 
என்றாலும் இந்த யோசனையை மகாவம்சம் எழுதிய மகாநாம தேரர் [Mahānāma] கட்டாயம் இந்து வேதத்தில் இருந்து பெற்றிருப்பார் போல் தெரிகிறது. அங்கு "நான் இடிமுழக்கத்தையும் மின்னலையும் அனுப்பும் பொழுது தான் நீ என்னில் நம்பிக்கை வைப்பாய்" [“Yes, when I send thunder and lightning” says Indra “then you believe, in me.”] என இந்திரன் சொல்வதாக அறிகிறோம்.
 
அது மட்டும் அல்ல மகாவம்சத்தின் பல செய்திகள், காட்சிகள் சமஸ்கிரத இதிகாசங்களில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவைகள் எல்லாம் புத்தரின் கொள்கைக்கும் அவரின் இயல்புக்கு ஒவ்வாதவையாகும்?
 
தீக நிகாயம் [Digha Nikāya], அறிவுரை 11 இல், கேவத்த [Kevaddha] என்ற ஒரு சாதாரண மனிதனின் கேள்வி ஒன்றிற்கு புத்தர் பதிலளிக்கும் பொழுது “ஒரு மனிதன் பல மனிதர்கள் ஆகலாம்; மலைகள், சுவர்கள் ஊடே நுழைந்து செல்லலாம்; தண்ணீர் மீது நடந்து செல்லலாம்; காற்றின் மீது சம்மணம் போட்டவாறு பறக்கலாம்; நிலவையும் கதிரவனையும் தொடலாம்; பிரம்ம லோகம் வரை மானுட உடலில் செல்லலாம்.” [Miracles of psychic power; multiplying ones body; passing through walls, mountains etc.; walking on water; flying through the air cross-legged; touching the sun and moon; and traveling as far as the Brahma Realms.]
 
என்றாலும் இதை பார்க்கும் ஒருவர், அதை, இந்த சம்பவத்தை, சந்தேகப் படுபவர்களிடமும், நம்பாதவர்களிடமும் முறையிட்டால், அவர்கள் இது ஒருவித மந்திர வசீகரமே காரணம் என்பார் [But if one were to see this kind of miracle and report it to someone skeptical and unbelieving they would think it was due to some kind of magic charm.],
 
ஆகவே புத்தர் திட்ட வட்டமாக "அதனால் தான். நான் அவைகளை விரும்பவில்லை, நிராகரிக்கிறேன், வெறுக்கிறேன்" என்று சொல்கிறார் [That is why, seeing the danger of such miracles, I dislike, reject and despise them].
 
உலகளாவிய அன்பு மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் [universal love and compassion for all living beings] என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் புத்தரின் போதனைகள் பொதுவாக உருவாக்கப் பட்டவையாகும்.
 
தீக நிகாயம், அறிவுரை 30 இல், ததாகதர் [துறவு நிலை அடைந்தவர்] என்பவர் எப்பவும் ஒரு கடுமையான பேச்சை நிராகரிப்பவர், அப்படியானவற்றில் இருந்து விலகுபவர், குற்றமற்ற பேச்சு பேசுபவர், காதுக்கு மகிழ்ச்சி தரக் கூடியவற்றையும், ஏற்றுக்கொள்ளக் கூடியவற்றையும், இதயத்தை அடையக் கூடியவற்றையும், நாகரிகமானவற்றையும், மற்றும் மக்களின் கூட்டத்திற்கு மகிழ்ச்சி தரக் கூடியவற்றையும் கவரக்கூடியவற்றையும் பேசுபவர் என்று வர்ணிக்கிறார் [“the Tathagata rejects harsh speech, abstains from it, spoke what was blameless, pleasing to the ear, agreeable, reaching the heart, urbane, pleasing and attractive to the multitude”]
 
இலங்கையில், குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ததாகவும், அதில் தேரவாத பௌத்தர்கள் மற்றும் மஹாயான பௌத்தர்கள் ஆகிய இருபிரிவினரும் உள்ளடக்கம் என்பதும் தமிழ் பௌத்தம் பற்றி ஆராய்ந்தவர்களுடைய கருத்தாகும். அதாவது, இலங்கையில், எங்கு நாகர்கள், இயக்கர்களை விட பெரும்பான்மையாக காணப்பட்டார்களோ, அங்கு தமிழ் மொழி மேம்பட்டது அல்லது நிலவியது எனலாம் [In Sri Lanka, wherever the Nagas were concentrated in larger numbers than the Yakkhas, the Tamil language prevailed].
 
ஆகவே, தென்னிந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, தமிழ் பௌத்தர்கள் இருந்தமையை எவராலும் மறுக்க முடியாது. ஆனால், இந்த வரலாறு இலங்கையில் பெரிதாக தேடப்படவில்லை; பாடசாலைகளில் கற்பிக்கப்படவில்லை. ஒருவகையில் பார்த்தால் இது மறக்கப்பட்டிருக்கிறது அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
 
இலங்கையில், ‘தமிழ் பௌத்தம்’ எப்போது இல்லாது போனது என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இந்த இடத்தில், ‘சிங்கள-பௌத்தம்’ என்ற அடையாளம் எப்போது உருவானது என்ற கேள்விதான் முக்கியம் பெறுகிறது. ஏனெனில், பௌத்தர்கள் என்பவர்கள் சிங்களவர்கள்தான் என்ற கருதுகோள் முன்வைக்கப்படும் போது, இந்த அடையாளத்தின் வரலாறு முக்கியமாகிறது. இலங்கையின் வரலாறே பெருங்குழப்பம் மிக்கது என்றே தோன்றுகிறது, உங்களுக்கு எப்படியோ ?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 19 தொடரும்
314784311_10221991431717652_3635862385884407312_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=EzeM-mcF-0YQ7kNvgF_ifIt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDmLzLm-k9qRuGqqqv4EARZQc_lkUKk_bFOHC8yhaNfnw&oe=66381244 315025988_10221991431997659_2536276205367447696_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xDEh5FC45sUQ7kNvgFhA1li&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDb0z4KTLIIS5BOwwuP7Pg3WncSUm146gZG08iB8F0WVA&oe=66381F26 315080630_10221991433357693_9141498049809145050_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6CtCKIBS6XMQ7kNvgFDiQD3&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCnZoFQI8d72x0cE7K6ES09eLq4AAtMbEaSGoyp6wJZ2Q&oe=663829DC 314955617_10221991432557673_1235697582836129457_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=E1-0_E5amxMQ7kNvgEs8jZr&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDq29UaSlQnTTxAeQWfeStYj-wCDC4vqsi6_TXZR2Z8dg&oe=66380E9C 314971120_10221991432797679_5280919523106509395_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=BAlf7N9h8A0Q7kNvgGP9PKK&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAWSJ98gdp6I_oDJS2z21_WPul2Pu9684vOqaw0c01u0g&oe=663824B4
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 19
 
 
 
பண்டித ஹிஸ்ஸெல்லே தம்மரத்தன மகா தேரர் [Pandit Hisselle Dharmaratana mahathera], தனது 'தென் இந்தியாவில் புத்தமதம்' [Buddhism in South India], என்ற புத்தகத்தில், புத்த மதகுரு மகிந்தன் அல்லது மகிந்தர் அல்லது மஹிந்த (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), அவர்களே தமிழ் நாட்டிலும் புத்த மதம் பரப்பியதற்கு சான்றுகள் உள்ளதாக குறிப்பிடுகிறார். மகாவம்சம், அவர் இயற்கையை கடந்த சக்தி மூலம் [supernatural powers] இலங்கையை அடைந்தார் என புராண கதைகள் போல் குறிப்பிட்டாலும், உண்மையில் அவர் கடல் மூலம் பயணித்ததாகவும், அப்படி இலங்கைக்கு போகும் வழியில், காவேரி பட்டணம் வந்து அங்கு முதலில் புத்த மதம் பரப்பியதாகவும் அறிஞர்கள் கருதுவதாக கூறுகிறார் [The Mahathera states "although the chronicles say he arrived through his supernatural powers, scholars are of the opinion that he travelled by sea and called at Kaveripattinam on the east coast of Tamil Nadu on his way to Sri Lanka"].
 
டாக்டர் ஷூ ஹிகோசகே [Dr Shu Hikosake Director Professor of Buddhism, Institute of Asian Studies in Madras] தனது 'தமிழ் நாட்டில் புத்தமதம்' [Buddhism in Tamil Nadu] என்ற புத்தகத்திலும் இந்த கருத்தையே கூறுகிறார். கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மஹிந்தரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist].
 
அசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய "அசோகரின் கதை") மற்றும் கி பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு இலங்கை நூலாகிய மகாவம்சம் ஆகிய புனைவுகள் மட்டுமே இன்று உள்ளன. கல்வெட்டுகளில் அசோக மன்னனின் மகன் திவாலா ['திவாரா'] மட்டுமே, அவரது தாய் ராணியுடன் பதியப் பட்டுள்ளது [Tivala [or Tivara ], the son of Ashoka and Karuvaki, is the only of Ashoka's sons to be mentioned by name in the inscriptions along with his mother, in the Queen Edict / S. N. Sen (1999). Ancient Indian History And Civilization. New Age International. p. 151.].
 
வட இந்தியா பாரம்பரியம் படி, அசோகனுக்கு குணாலா [Kunala ] என்ற மகன் இருந்து உள்ளார். மேலும் இது, திவ்வியவதனம் அல்லது தெய்வீக வரலாறுகள் (Divyāvadāna or "Divine narratives") என்ற சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்ட நூலில் குணாலா அவதானம் என்ற பகுதியில் குறிக்கப்பட்டு உள்ளது. இலங்கை மகாவம்சத்தில் மட்டுமே அசோகனின் மகனாக மஹிந்த கூறப்பட்டுள்ளது.
 
என்றாலும் அசோகன் பிறந்த வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் 'மஹிந்த' கூறப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அதே போல மகாவம்சத்தில் கூறப்படட சங்கமித்தையும் வட இந்தியா பாரம்பரியத்தில் எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்றாசிரியர்களின் ஒரு பகுதியினரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, இந்திய வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் (Romila Thapar) பல காரணங்களை சுட்டிக்காட்டி இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
"Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society 1922-24 Vol.29" இல், பக்கம் 243 இல், துட்ட காமனி பற்றி குறிப்பிடுகையில், ‘Like most Ceylon Kings he, (Dutugemunu), was more of a Hindu than a Buddhist. An ancient MS of Ridi Vihara, which he built and endowed, states that on the occasion of its consecration he was accompanied thither by 500 Bhikkus (Buddhist monks) and 1,500 Brahmins versed in the Veddas (Paper read at the R. A. S. Ceylon Branch in June 1923 on “Palm leaf MSS. in Ridi Vihara). Throughout Ceylon History the Court religion was Hinduism and its ritual and worship largely alloyed and affected the popular Buddhism and made it unlike the religion of Buddha’ என்று கூறப்படுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
 
அதாவது பெரும்பாலான இலங்கை அரசர்களை போல, துட்ட காமனியும் கூடுதலாக பௌத்தனாக இருப்பதிலும் பார்க்க ஒரு இந்துவாகவே இருந்தார் என்பதை, ரிதி விகாரையை (வெள்ளிக் கோயிலை / රිදී විහාරය), அனுராதபுரத்தின் மன்னனாக இருந்த துட்டகாமினி, தெய்வத்தைக் கோயிலில் வைக்கும் ஆகமச் சடங்கின் [பிரதிஷ்டை செய்யும்] பொழுது, 500 புத்த பிக்குகளும், ஆனால் 1,500 வேதத்தில் தேர்ச்சி பெற்ற இந்து பிராமணர்களும் ஒன்று கூட அந்த நிகழ்வை நடத்தியதில் இருந்து புரிகிறது என்கிறது.
 
சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர்களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலப்பதிகாரம். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு ஆட்சி மகாவம்சம் 35 ஆம் அத்தியாயத்தில் உள்ளது. மேலும் சிங்களவரும் தமிழரும் இரத்தத் தொடர்புடையவர்கள் என்பது சிவன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் நாகன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் தெளிவாகிறது. எனவே இவைகளைப்பற்றி ஒரு விரிவான பக்கச்சார்பு அற்ற ஆய்வு கட்டாயம் தேவை என்று எண்ணுகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 20 தொடரும்
315709780_10222027682903909_5886347206494693031_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=W7qyw68LSo4Q7kNvgEbniIs&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDJvzlmM_8_frCK-bes2lJu0ZN-dIYC21L87UErO0L8ug&oe=6638A05F 315665482_10222027682863908_6524643912050753869_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=I3hYS_KgoREQ7kNvgHzTIpf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDaoDHCifZMA1rYwQ7vi8Phui61NyQAm5_5T_VOihjrug&oe=6638BD32 315542428_10222027682663903_119581499600503497_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=w39vATpugkgQ7kNvgGFhVzG&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAZ_xqJESWMZF4gMi4Q_au8SijNHcN2Sjj9oSkE8FXlTg&oe=6638BE9A 315874544_10222027683103914_8217672410561383169_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1E3NjG7ilTAQ7kNvgHIwiRt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAGk-a5e_dAirsrSA5SCRTzVgqH8lrbXwh8xkVlKMWcwg&oe=6638CC03 May be an image of text that says 'Wheel Publication No. 124/125 Buddhism in South India Pandit Hisselle Dhammaratana Mahathera' May be an image of text that says 'NCBA ANCIENT INDIAN HISTORY and CIVILIZATION Sailendra Nath Sen' 
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 20
 
 
 
அனுராதபுரத்தில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்த எல்லாளனை அடைவதற்கு 31 தமிழ் மன்னர்களை வென்று அதன் பின் தான் 32 ஆவதாக எல்லாளனை துட்ட கைமுனு வென்றதாக மகாவம்சம் விவரிக்கிறது. அது மட்டும் அல்ல அவன் தனது போரில் இலட்ச கணக்கானவர்களை கொன்றதாக கூறுகிறது. இந்த தரவை வைத்து பார்க்கும் பொழுது அனுராத புரத்தையும் அதை சுற்றியும் பெரும் அளவான தமிழ் கிராமங்களும் தமிழர்களும் வாழ்ந்தது அத்தாட்சி படுத்தப்படுகிறது. அவர்கள் சிவனை வழிபட்டார்கள் என்பதும் தெரிகிறது.
 
கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதியீடாக ஹெள அல்லது எலு மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. என்றாலும் எலு அல்லது ஹெல என்னும் மொழியின் தோற்றம் குறித்துத் தெளிவு இல்லை. ஆனாலும், இது இலங்கையிலேயே தோற்றம் பெற்ற ஒரு மொழி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எலு மொழிக்கும், சமஸ்கிருதம், பாளி முதலிய இந்திய-ஆரிய மொழிகளுக்கும் இடையே பல ஒப்புமைகள் காணப்படுகின்றன.
 
அத்துடன், இலங்கைப் பூர்வீக குடிகளின் மொழியுடன் பல்வேறு கால கட்டங்களில் இலங்கையில் வந்து குடியேறிய இந்திய இனத்தவரின் மொழிகளும் கலந்து உருவானதே ஹெலமொழி என்று கருதப்படுகிறது. இம்மொழிகளுள் ஆரிய மொழிகளும், தமிழும் அடங்கும். அதன் பின் கி பி ஆறாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின், இதில் இருந்து சிங்கள மொழி மற்றும் மாலைதீவுகளில் பேசப்படும் திவெயி மொழி [Elu is ancestral to the Sinhalese and Dhivehi languages] முதல் முதல் வளர்ச்சி அடைந்தது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை ஆகும்.
 
அது மட்டும் அல்ல, வரலாற்று ரீதியாக, அனுராத புரத்தில் தமிழர்கள் பெரும் அளவில் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக, அதன் தொடர்ச்சியை, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் கூட, வர்த்தகரான ரொபெர்ட் நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயனின் "Historical Relation of Ceylon" என்ற அவரின் நூலிலும் காண்கிறோம்.
 
ரொபெர்ட் நொக்ஸ் கண்டி அரசனால் சிறை பிடிக்கப்பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து, அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட் நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்கவில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று எழுதி உள்ளார்.
 
["To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV /page 322-323].
 
வரிசைக்கிரமமான சரித்திரக் குறிப்புகளில் இருந்து, தமிழ் நாட்டில் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம், தூத்துக்குடி மற்றும் இலங்கையில் மாந்தை அல்லது மாதோட்டம் [மன்னர்] போன்ற இடங்களில் இருந்து [From the annals of history we learn that the port of Puhar along the Coromandel coast of Tamil Naadu, the port of Tutucurin along the Southern coast of Tamil Naadu and the port of Mantai (Mannar) along the North-Western coast of Lanka] கிருஸ்துக்கு முன்பும், ஆரம்பகால கிறிஸ்தவ காலங்களிலும் வர்த்தகம் செய்ததிற்கு வரலாற்று சான்றுகள் பல உண்டு. அவர்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்த பொருள்களின் தமிழ் பெயர்களை இன்றும் கிரேக்கத்திலும் ஆங்கிலத்திலும் காணலாம் [Tamil names of the commodities exported and imported are seen in the vocabularies of the Greek and English languages today]. உதாரணமாக கிரேக்கத்தில் அரிசியை, ஒரிசா [oryza] என்றும், இஞ்சியை சிஞ்சிபெர் [zingiber] என்றும், கருவா (பட்டை) யை கர்பியன் [karbion] என்று அழைப்பதை கவனிக்க. இது அங்கு தமிழ் மொழியே பேசப்பட்டதை மேலும் உறுதி படுத்துகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 21 தொடரும்
316661931_10222067421457348_8460099691435305320_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PbS-lDLKXXsQ7kNvgE7qSXf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCH3XXe0TLfFxbV6eTaQruowT71QjP9xa1XibhJfgoprQ&oe=663B55B7 316527097_10222067421697354_6648548844770322818_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=NV0xvN3lKscQ7kNvgGJhkkz&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAlN19R6bwnx_PvTxFqAX2fnSGZdSS9WjeKJG5wp_7oug&oe=663B3F8C 316672096_10222067421257343_6070281922098168634_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=JWJbBqqtgDEQ7kNvgHcWo1M&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB82N9OZa5VgWKgTlSbRWmLNwr1Mug0l7FYnsThMhRf4w&oe=663B48EF 316661182_10222067421857358_7276087610792161512_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=GMrzT8zkioAQ7kNvgHiLGcL&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCAcOSp8dNDK0Hn1RH3yRLtB8Nz6daw9tvZ3eC1QpEceQ&oe=663B60DE 316662502_10222067422257368_8643959497518551882_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=5fqq32RVoOwQ7kNvgFrTdws&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAsD3NmAUbfKjb3eOn79jiqIGrvSQyL_1cR2ZKUfUf1Pg&oe=663B7001
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 21
 
 
 
சிங்கள அறிஞர் முதலியார் குணவர்தன, ஆனந்தா பாடசாலையில், 28.09.1918 , சிங்களத்தின் இலக்கணம் திராவிடம் என்கிறார் [Sinhala scholar Mudliyar Gunawardena at a lecture delivered at Ananda College on 28.09.1918 had stated "....the science of exmination of the structure of a sentence is called its grammar. The grammar of the Sinhala language is Dravidian...] பேராசிரியர் J. B. திஸ்ஸநாயக்க, தனது "சிங்களத்தை புரிந்து கொள்ளுதல் " என்ற புத்தகத்தில், பக்கம் 118 இல், தெற்காசியாவின் மொழிகளில், சிங்களம் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது என்றால் அதற்க்கு காரணம் அது இந்தோ ஆரியன் மற்றும் தமிழுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவு என்கிறார் ["Prof. J. B. Dissanayake in his book "Understanding the Sinhalese" at page 118 states "....Sinhala occupies a unique position among the languages of South Asia because of its close affinity, with two of the major linguistic families of the Indian sub continent Indo-Aryan and Dravidian..."].
 
இதில் இருந்த நாம் இலகுவாக ஊகிக்கலாம், சிங்கள எழுத்து கட்டாயம் ஆரிய மொழியும், திராவிட மொழியும் தெரிந்த ஒருவரோ அல்லது பலராலோ தான் உண்டாக்கப் பட்டு இருக்கும் என்பது. மேலும் அரபு நாட்டில் இருந்து இலங்கைக்கு ஏழாம் நூற்றாண்டில் குடியேறியவர்களின் சந்ததி, இன்று முஸ்லீம் என்றும் சோனகர் என்றும் அழைக்கப் படுபவர்கள், எல்லோரும் வீட்டில் தமிழ் பேசுபவர்களாகவே மாறினார்கள். காரணம் தமிழ் தான் அங்கு பாவனையில் இருந்துள்ளது. சிங்களம் அங்கு பாவனையில் இருந்து இருந்தால், கட்டாயம் சிங்களமே பேசி இருப்பார்கள் ?.
 
மற்றும் விஜயபாகுவின் அரச கட்டளைகள் (A.D. 1056-1111) சிங்களத்திலும் தமிழிலும் இருப்பது குறிப்பிடத் தக்கது [Arab settlers came to Ceylon about 7th century A.D. Their descendants are now called Muslims and Moors. They learned Tamil because that would have been the language in use. Also Royal edicts of Vijayabahu (A.D. 1056-1111) were in Sinhala and Tamil]. இது விஜயபாகுவின் ஆட்சியில் பெரும் தொகையான குடிமக்களாக தமிழர்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.
 
தீபவம்சம், மகாவம்சம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், மகாவம்சம் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி தமிழருக்கு எதிரான போக்கை கையாளுவதைக் காணலாம். உதாரணமாக, கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை ஆட்சி செய்த சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்களையும் தீபவம்சம் ராஜகுமாரர்கள் [princes] என கூறும் அதே வேளையில், அதற்குப் பிறகு எழுதப்பட்ட மகாவம்சம், அவர்கள் இருவரையும் குதிரை வியாபாரியின் மகன்மார்கள் [sons of a horse trader] என்றும், வெளியில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறுகிறது. இது, வரலாற்றில் எந்த பெரிய வேறுபாடு ? உங்களுக்கு தலை சுத்துகிறதா?
 
ஆனால் தீபவம்சம் அவர்கள் சோழநாட்டில் இருந்தோ அல்லது தமிழகத்தில் இருந்தோ வந்தவர்கள் என்று கூறவே இல்லை. அதே போல எல்லாளனை தமிழ் இளவரசன் என்றோ அல்லது சோழநாட்டில் இருந்து வந்தவன் என்றோ தீபவம்சம் கூறாத வேளையில், தீபவம்சத்தை 150 / 200 ஆண்டுகளின் பின் விரிவாக்கிய மகாவம்சம் முரண்பாடான கருத்தை அங்கு பதிவிடுகிறது. தீபவம்சம் தமிழர் விரோத வெறுப்பைக் பொதுவாக எங்கும் கக்கவில்லை. ஆனால் அது புத்த மாதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது.
 
அபய [Abhaya] அல்லது துட்டகைமுனுவின் தந்தையின் பெயர் காக்கவன்ன [Kakkavanna]. அதே போல வன்னியை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின் பெயர் பண்டாரவன்னியன், அவனை காட்டிக்கொடுத்தவனின் பெயர் காக்கவன்னியன். பெயர் காக்கவன்ன குரல் ஒலியில் காக்கவன்னியனுடன் ஒன்றாகிறது [phonetically similar]. அது மட்டும் அல்ல, தீபவம்சம் காக்கவன்னவுக்கும், மூத்தசிவ அல்லது தேவநம்பிய தீசனுக்கும் இடையில் என்ன உறவு என்று கூறவும் இல்லை.
 
மகாவம்சத்தில், சிங்கத்துடன் வங்க நாட்டு இளவரசி புணர்ந்து இரு மனித பிள்ளைகளை பெற்றார் என்றும், அந்த சகோதரங்கள் தங்களுக்குள் திருமணம் செய்து விஜயன் பிறந்தான் என்றும் கூறுகிறது. உங்களில் பலர் அடிப்படை உயிரியல் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு ஆண் சிங்கமும் ஒரு மனித பெண்ணும் புணர்ந்து சந்ததி உண்டாக்கும் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை.
 
உதாரணமாக, சிங்கம் 36 குரோமோசோம்கள் / உடல் அணுக்களில் காணப்படும் மரபுத்திரிகள் கொண்டு உள்ளது , அதேவேளை மனிதன் 46 குரோமோசோம்கள் [Lions have 36 chromosomes and humans have 46 chromosomes.] வைத்திருக்கிறான். அத்துடன் அவைகளின் வகைகளும் முக்கியம் [the types of chromosomes are also important.] எனினும், சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இதற்கு காரணம் இந்த இரு இனத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பதால், மற்றும் அவைகளின் குரோமோசோம்கள் மிகவும் ஒத்த தன்மையாக இருப்பதால் ஆகும், அப்படியே புலிச்சிங்கம் அல்லது வேயரிமா (Tigon) ஆகும். அத்துடன் இவை பெருபாலும் மலட்டுவாகவும் [sterile] இருக்கின்றன. இன்னும் ஒரு உதாரணமாக, குதிரையையும், கழுதையையும் எடுத்தால், அவை முறையே 38, 36 குரோமோசோம்கள் கொண்டுள்ளன. அவைகள் புணர்ந்து கோவேறு கழுதை [mules] பிறக்கிறது. அது எப்பொழுதும் மலடும் ஆகும். சிங்கத்தையும் , மனிதனையும் இனி கருத்தில் கொண்டால், இங்கு குரோமோசோம்கள் வேறுபாடு பத்து ஆகும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் சந்ததி உண்டாகாது.
 
அப்படி என்றால், விஜயன் என்று உண்மையான ஒருவர் இருக்க முடியாது? இது நான் சொல்லவில்லை. அறிவியல் சொல்லுகிறது!
 
கழுதையும் குதிரையும் ஒரே பேரினம் [genus], ஆனால் வெவ்வேறு இனங்கள். குரோமோசோம்கள் சொற்ப வித்தியாசம். எனவே தான் கோவேறு கழுதை முற்றிலும் மலடாகவே பிறக்கிறது. மனிதனும் சிங்கமும் ஒரே பேரினமும் இல்லை [do not even belong to same genus] . எனவே, சாகசப் பெண்ணை [adventurous woman] சிங்கம் உண்பதுதான் இறுதியாக நடந்து இருக்கும்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 22 தொடரும்
317612026_10222106571996087_2430202466594402582_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Kgyay2AhfeoQ7kNvgHBdSpm&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCtan1gwaGD5aF8y_lbAoF7jxkq-JJHUaCtVNN5dO95Og&oe=66403FBE 317505800_10222106572516100_4591536405103709323_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=oX75iOdH0usQ7kNvgHbduZU&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCZ7zW0cxdwzL_uA9YDX9gfiAlpd_A7a5KvgA0TWhM1AA&oe=6640316A
 
317604425_10222106572316095_5737174575133805072_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=0_PIjwE7P0YQ7kNvgErcbjj&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAH1OTOYMSwHy6Kitb5jW1p4Lu4Zyo6bqxH1Ei4ayp17Q&oe=66402C6E 317609124_10222106571756081_6033022436565376234_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Eg8CrMiwzMkQ7kNvgHZj4G4&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBSsQMxuakMcm1w4VE8CyEs-57xrBWVXotGnchSQj7PKg&oe=66405B4F
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/5/2024 at 19:19, kandiah Thillaivinayagalingam said:

அப்படி என்றால், விஜயன் என்று உண்மையான ஒருவர் இருக்க முடியாது? இது நான் சொல்லவில்லை. அறிவியல் சொல்லுகிறது!

 

இது உயிரியல் அறிவு தர்க்க அடிப்படையில் சரி.

அனால், இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு, விஞ்ஞான சமூகத்தின் ஒருமித்த முடிவா என்பது தெரியவில்லை.

எனவே, கலப்பு நடந்து, சந்ததி பிழைத்துள்ளது  என்பதே முடிவு.

ஆனாலும்,  Neanderthals உம் , Sapiens உம் Homo genus  இன் இரு வேறு வர்க்கங்கள் (species) என்ற படியால், பெரிய அளவு தூரம் இல்லாமல், கலந்து சந்ததி உருவாகுவதற்கு சாத்தியக்கூறுகள்  இருந்து இருக்கலாம்.

ஆயினும், வேறு வேறு வர்க்கங்கள்  (species) புணர்ந்து சந்ததியை உருவாக்க முடியாது என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது, உயிரியல் அறிவு தர்க்க அடிப்படையில்.

ஆயினும் சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது.

(நிகழ்தகவு அடிப்படையில் type 1 error, rejecting the null hypothesis, when the null hypothesis is at the least theoretically true)  

மற்றது, மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா என்பதிலும் தெளிவில்லாமல் உள்ளது.

ஏனெனில், மகாவம்சம் அத்தக்கதாவின் பொழிப்பு என்றே (சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும்) சொல்லுகிறார்கள், சிங்கள வரலாற்று ஆசிரியர்கள். 

ஆனால், அத்தக்கதா, பர்மா (இப்பொது மியன்மார்), தாய்லாந்து பௌத்த பீடங்களில், அந்தந்த மொழியில் இருக்கிறது. ஆனாலும், அவை மூலப்பிரதி அல்ல என்றே சொல்லப்படுகிறது.


(18 - 21 ம் நிமிடத்தில் இந்த கலப்பு Homo neanderthalensis, sapiens கலப்பு சொல்லப்படுகிறது)

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு"

ஆம் , அது சரி , ஏனென்றால், 
  
Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding.

Neanderthal-Homo sapiens interbreeding

Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015). 
...............................................................

"சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது"

ஆம், அது முற்றிலும் சரியான வாதம் 
...................................................................
"மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. "

கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது 

ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ] 

"மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]  

"வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]  

என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை 
.....................................................................

மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.]

Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text.

Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?  
...........................................

"சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது'

It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala). 

There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது] 

Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable.

Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life.

ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே?

Tradition regarding the Aṭṭhakathā
[Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka]

The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.

Edited by kandiah Thillaivinayagalingam
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 22
 
 
சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் என்று [A Damila of noble descent, named ELARA, who came hither from the Cola-country to seize on the kingdom], அதாவது வெளியில் இருந்து வந்தான் என்று குறிப்பிட்டு கூறும் மகாவம்சம், அவனுக்கு முதல் ஆட்சி செய்த இரு தமிழரை அப்படி குறிப்பிட்டு கூறவில்லை, அவர்களை "குதிரைகளை இங்கு கொண்டு வந்து வாணிகம் செய்த ஒருவரது பிள்ளைகளான சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்கள் சூரதீசனை வெற்றி கொண்டார்கள். பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இந்த இருவரும் சேர்ந்து இருபத்திரண்டு வருட காலம், கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை நீதி தவருமல் ஆட்சி செய்தனர் [Two Damilas, SENA and GUTTAKA, sons of a freighter who brought horses hither/ conquered the king Suratissa, at the head of a great army and reigned both (together) twenty-two years justly.] என்று மட்டும் கூறுகிறது.
 
மகாவம்சத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இலங்கையில் வாழும் சிங்களவர்கள் புத்தரால் தன் கொள்கைகளை பரப்ப தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் [chosen people] என்ற நம்பிக்கையே ஆகும். புத்தர் காலத்தில் உலகில் எங்கும் சிங்களவர் என்ற ஒரு இனமே இல்லை, சிங்களம் என்ற ஒரு மொழியும் இல்லை. அவர் இறந்து கிட்ட தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தான், மகாவம்சம் கதையும் அத்துடன் சிங்கள இனம் ஒன்றும் தோன்றத் தொடங்கியது என்பது வரலாற்று உண்மையாகும்.
 
எனவே தான் சாதாரண சிங்கள மக்கள், வரலாற்றை, கல்வெட்டு ஆதாரங்களை, மரபணு ஆய்வுகளை மற்றும் சிங்கள மொழியில் ஏராளமாக காணப்படும் தமிழ் சொற்களை கவனத்தில் எடுக்காமல், இன்றைய தமிழர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற தப்பெண்ணம் கொண்டு உள்ளார்கள்.
 
1956 இல் சிங்களம் மட்டும் [sinhala only act] என்ற சட்டம் கொண்டு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா [S.W.R.D. Bandaranaike] உண்மையில் அவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர் ஆகும். பதினாறாம் நூறாண்டில் தென் இந்தியாவில் இருந்து வந்த நீல பெருமாள் [Neela-Perumal], “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் [God Saman] பிரதம குருவாக நியமிக்கப்பட்டு ‘நாயக்க பண்டாரம்’ [‘Nayaka Pandaram’ ] என்ற பெயரை 1454 இல் பெற்றார். அவர்களின் வாரிசே இவர் ஆவார்.
 
அதே போல, 1977, 1981,1983 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் யாழ் நூலக எரிப்பு [anti-Tamil pogroms of 1977, 1981 and 1983 , the burning of the Jaffna public Library] போன்றவற்றின் நாயகன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் [Junius Richard Jayewardene] முப் பாட்டனார் [great-grandfather was called Tambi Mudaliyar] தம்பி முதலியார் ஆகும். இவை சில உதாரணங்களே. இவ்வாறு பிற்காலத்திலும் பல தென் இந்தியர்கள் பல பல சந்தர்ப்பங்களில் இங்கு அழைக்கப்பட்டு அல்லது வந்து சிங்களவர்களுடன் ஒன்றிணைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது [Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese]
 
உதாரணமாக, டச்சு [Dutch] அரசாங்கம் இலங்கையை ஆளும் பொழுது, புகையிலை சாகுபடிக்கு தமிழ் நாட்டில் இருந்து பெருவாரியான தமிழர்களை கொண்டு வந்து இலங்கையின் தென்மாகாணத்தில், மாத்தறையில் குடியேற்றினார்கள். அதே மாதிரி ஒரு 2017 அறிக்கையின் படி, 4,000 ஜிப்சிகள் தீவு முழுவதும் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். கிட்டத் தட்ட அனைவரும் இப்போது சிங்கள மொழி பேசுபவர்களாக மாறி விட்டார்கள். [The Dutch brought South Indian people in large numbers for tobacco cultivation. They were settled mostly in Matara. According to a 2017 government report, Sri Lanka has nearly 4,000 gypsies scattered across the island. Many of their origins can be traced to south India. While almost all of them are now Sinhala speakers] விஜயனும் அவனது கூட்டாளிகளும் மதுரை பாண்டிய மகளீரை திருமணம் செய்ததுடன் ஆரம்பமாகிய தென் இந்தியர் மதம் - இனம் மாற்றம், கடைசியாக அண்மைய வரலாற்றில் வத்தளை, நீர்கொழும்பு முதல் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் "மதம் - இனம்" மாற்றம் வரை நடை பெற்றதை வரலாறு சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் முதலில் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப் பட்டார்கள். எனவே அவர்களது பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும்.
 
வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம் மற்றும் தொழில் நுட்பப்பயன்பாட்டினால், வரலாறு மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே சேர்த்து, ஆயிரம் ஆண்டுகளின் பின், இலங்கையின் பூர்வீக வரலாற்றை எழுதியவர் தான் இந்த மகாநாம தேரர். ஆகவே தான் எமக்கு கிடைத்த வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிட்டு, இந்த மகாவம்சம் என்ற அறிவு வயலில் இருந்து களைகளை, தக்க காரணங்களை சான்றுகளுடன் காட்டி இன்று அகற்ற வேண்டியுள்ளது.
 
[படம் : 01 அல்லது Table 10:  Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphbets were used.  The fact that the Sinhala and Tamil languages share in common 4000+ words also may point to a time where both languages were less divergent. (Please note that the table numbers are as denoted in the original document.)]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
[Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem?
https://www.facebook.com/groups/978753388866632/posts/5137468916328371/?]
 
பகுதி: 23 தொடரும்
318407217_10222145852978087_8260035943206999802_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=CNrPbFckdNAQ7kNvgGXZBcx&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDj8P17vPeO_zHOU8Nj8dmPZchYpblJiH5vaaKH005E6g&oe=6645B3EA  318553868_10222145853858109_1971563706160209240_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=h78zwksOWVYQ7kNvgFyVBR5&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCYsE2Xy98V83Y4iFnLW_PjKmslYcMwRb6pupXFFl5dIw&oe=6645B442 318749116_10222145852858084_3723022658657100025_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=r9nm_9esYXgQ7kNvgH5mngX&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAgNNI5HHqwURUSWPns-KqnsBI_mhH-xX-fiq5QMEIkgQ&oe=6645A271 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 23
 
 
 
மகாவம்சத்தில் எப்படி, மகாபாரத இராமாயண சாயல் தெரிகிறதோ, அப்படியே சில சங்க கால சாயலும் அல்லது அவையை ஒத்திருப்பதையும் காண்கிறோம். உதாரணமாக, அத்தியாயம் 23-ல் வரும் பரணன் துட்டகாமினியின் பத்து உதவியாளர்களில் ஒருவன். அதேபோல அத்தியாயம் 36-ல் மன்னன் ஒகாரிக திச்சனின் [VOHARIKA TISSA] ஒரு அமைச்சர் கபிலன் [Kapila]. இலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். மகாவம்சத்தில் கல்லாட நாகன் என்ற மன்னன் பற்றி சொல்லப்படுகிறது. மற்றும் இலங்கையில் பல “நாகன்” பெயர் கொண்ட மன்னர்களின் பட்டியல் இருக்கிறது. இப்படி இன்னும் சில சொல்லலாம். எனவே, கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன் என்று சங்க காலப் பெயர்கள் எல்லாம் மகாவம்சத்தில் ஒருங்கே வருவதை யாரும் தன்னிச்சையாக நடந்த ஒற்றுமை என்று ஒதுக்க முடியாது என்று நம்புகிறேன்.
 
அத்தியாயம் 21-ல் சோழ நாட்டில் இருந்து வந்த ஏலாரா அல்லது எல்லாளன், இலங்கையை 44 ஆண்டுகளாக சீரும் சிறப்புடனும் ஆண்டான். அதேபோல மனுநீதிச் சோழன் என்ற பெயரில் தமிழ் இலக்கியத்திலும் உள்ளது. இருவரும் சோழ வம்சத்தினர் மட்டும் அல்ல, இருவரும் பசுவின் கன்றைக் கொன்ற குற்றத்துக்காகத் தன் மகன் மீது தேர்க் காலை ஏற்றி சம நீதியை நிலை நாட்டியவர்கள் என்று, ஒரே மாதிரியான கதையை உடையவர்கள்.
 
அத்தியாயம் 5 இல் [THE THIRD COUNCIL], கிளிகள் தினந்தோறும் சந்திர காந்த ஏரியிலிருந்து தொண்ணுறாயிரம் வண்டி பாரம் நெல் மணிகளைக் கொண்டு வந்தன என்றும் [parrots brought daily from the Chaddanta-lake ninety thousand waggon-loads of rice], அத்தியாயம் 11 இல் [THE CONSECRATING OF DEVANAMPIYATISSA], அறுபது தரம் நூறு வண்டிகள் நிறைய கிளி பறவைகளால் கொண்டு வரப் பட்ட. மலையில் விளைந்த அரிசி என்றும் [sixty times one hundred waggon loads of mountain-rice brought thither by parrots, nay, all that was needful for consecrating a king]– அசோகன் மற்றும் தேவநம்பிய தீசன் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இப்படி பறவைகள் அரிசி கொண்டு வந்தன என்பது, புலவர் கபிலர் கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அரிசி கொண்டு வந்தார் என்று சங்க இலக்கியம் கூறுவதுடன் ஒத்து போகின்றன.
 
கபிலர் என்பது சிவப்பு நிறக் கடவுள், சிவனைக் குறிக்கும் என்பர். அவர் குடிகளுக்கும் படைகளுக்கும் உணவு பஞ்சம் ஏற்படாத வாறு ஒரு முறை கிளிகளைப் பழக்கி நெற் கதிர்களை வரவழைத்தார் என்பதை நக்கீரர் மற்றும் ஒளவையார் பாடல்களில் அறியலாம்.
 
 
“புலம் கந்தாக இரவலர் செலினே,
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் 10
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,”
(ஒளவையார், அகநானூறு: 303: 8-14)
 
 
அறிவைத் துணையாகக் கொண்ட இரவலர் சென்றால், மலை போன்ற யானைகளையும், அவற்றில் ஏற்றிய அணிகலன்களையும் வழங்கிப் புகழ் பெற்றவன் பறம்புமலை அரசன் பாரி. மூவேந்தர் முற்றுகை இட்டிருந்த காலத்தில் அவன் வளர்த்த குருவிக் கூட்டம் காலையில் பறந்து சென்று மாலையில் நெல்லங் கதிர்களோடு திரும்பும். அதனை உண்டு அரசுச்சுற்றம் வாழும் என்கிறது இந்த சங்க பாடல்.
 
மேலும் அதிகாரம் 25-ல் கந்துலன் என்னும் யானையை பத்து யானை பலம் கொண்ட நந்தி மித்ரன் அடக்கிய சம்பவம் வருகிறது. விஜித நகரத்தைக் கைப்பற்ற முன்பு அரசன் நந்திமித்திரனைக் சோதித்துப் பார்க்க விரும்பினான். அதற்காக யானை கந்துலனை அவன் மீது ஏவி விட்டான். தன் மீது பாய்ந்து வரும் யானையைக் கண்ட நந்திமித்ரன் அதன் இரு தந்தங்களையும் பிடித்துக் கொண்டு யானையை அடக்கி அது முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தினான் என்கிறது 5ஆம், 6ஆம் நூறாண்டில் எழுதிய மகாவம்சம்.
 
ஆனால் இதே போல சம்பவம் 2ஆம் நூற்றாண்டு சிலப்பதிகாரத்தில் கோவலன் யானையை புஜபலத்தால் அடக்கிய ஒரு சம்பவத்துடன் ஒத்துப்போகிறது. சிலப்பதிகாரம் /மதுரைக் காண்டம் / 5. அடைக்கலக் காதை இல்,
 
 
"தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை;
பாகு கழிந்து, யாங்கணும் பறை பட, வரூஉம்
வேக யானை வெம்மையின் கைக்கொள்;
ஒய் எனத் தெழித்து, ஆங்கு, உயர் பிறப்பாளனைக்
கைஅகத்து ஒழித்து, அதன் கைஅகம் புக்கு,
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி,
மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப,
பிடர்த்தலை இருந்து, பெரும் சினம் பிறழாக்
கடக் களிறு அடக்கிய கருணை மறவ!"
 
 
என்கிறது , அதாவது, முதியவன் ஒருவன் கூனிய உடம்புடன் தடி ஊன்றிக் கொண்டு தானம் பெறத் தளர்ந்து நடந்து வந்தான். அப்போது பாகனின் கட்டுப் பாட்டுக்குள் நிற்காமல் விரைந்து வரும் மதம் பிடித்த யானை ஒன்று அவனைத் துதிக்கையால் வளைத்து எடுத்துக் கொல்லப் பார்த்தது. அந்தக் காட்சியைக் கண்ட கோவலன், உடனே யானை மீது பாய்ந்து அந்தணனைத் துதிக்கையிலிருந்து விடுவித்து அதன் பிடரித் தலை மீதமர்ந்து அடக்கினானாம் என்று கூறுகிறது.
 
மேலும் அத்தியாயம் 35 இல், சந்தமுகசிவனை அரசனின் மனைவி அலங்கரித்து “இவனை யானையிடம் கொண்டு செல். அரசன், சிறையில் இருப்பதால் யானை இடறி இவன் தலை நசுங்கட்டும். எதிரிகளிடம் சிக்குவதைவிட அதுவே மேல்” என்று சொல்லி வேலைக்காரியுடன் அனுப்புகிறாள். யானையின் காலடியில் குழந்தையை வைத்தவுடன் அது அவனைக் கொல்லாமல் கண்ணீர் வடிக்கிறது. திடீரெனக் யானை கோபம் கொண்டு அரண்மனைக் கதவுகளை உடைத்து அரசனை மீட்டு முதுகிலேற்றிக் கொண்டு சென்று, அக்கரைக்குக் கப்பலில் தப்பித்துச் செல்ல உதவுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளை அப்பர் கதையிலும் காண்கிறாம். மஹேந்திர பல்லவ மன்னனின் யானை, அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்து விடுகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 24 தொடரும்
320074714_807372583694875_8883308167948193468_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=yMo8QFrkPqIQ7kNvgHLlZUv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDgOjdBVl4ksUQepKlu_5rxjJ9UR85-mOLCAoqNxufLuQ&oe=66494575 320130872_6017760274908797_111014398791945522_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nbdrkQNBt5oQ7kNvgGKdEgg&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBxOtTldiO2W7Dn1XE4gR3o2_quXQV51m7iBURuwK2JnA&oe=664931AD 319957500_1216166708970378_469603310627210406_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vqMpDPkUdCYQ7kNvgFkI4Ke&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYD9oLIXMK_sX_cyubG7zUAKBFAAZbTgnZ6FaqTg1ORs3A&oe=664926CF
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 24
 
 
 
அரசகுமாரி சிங்கத்துடன் புணர்ந்து ஒரு ஆண் ஒரு பெண் என இரு மானிட பிள்ளைகளை பெற்று, பின் அந்த ஆண், தன் தந்தை சிங்கத்தை கொன்று, அதன் பின் தன் சகோதரி சிம்மசீவலியை மணந்து, அவர்களுக்கு பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளாக, அதுவும் எல்லாம் ஆண்பிள்ளைகளாக பிறந்தது என்பது கற்பனை கூட செய்யமுடியாத ஒரு நிகழ்வு ஆகும்.
 
அந்த முப்பத்திரண்டில் மூத்தவன் தான் விஜயன் ஆகும். இவனைத்தான் சிங்கள இனத்தின் முதல் குடிமகனாக மகாவம்சம் பெருமையுடன் கூறுகிறது. அதுவும் புத்த பெருமான் தேர்ந்து எடுத்த ஒருவன் என்று மகுடம் சூட்டுகிறது!
 
இப்ப என் மனதில் தோன்றுவது, புத்தருக்கு விஜயனிலும் அவனின் கூட்டாளிகளிடமும் ஒரு தனிப்பட்ட ஆர்வம் இருக்குது என்றால், ஏன் அவர்கள் இலங்கையில் அரசாட்சியை ஏற்படுத்திய பொழுது, புத்த மதத்தினராக இருக்கவில்லை? மற்றது, அவர்கள் இலங்கையை அடைந்த கையோடு, இயக்கர்களிடையே தான் அவர்களின் முதல் இலங்கை வாழ்வு தொடங்குகிறது. ஆனால் இந்த இயக்கர்களைத் தான் ஏற்கனவே புத்தர் தன் முதல் வருகையில் பயமுறுத்தி, இங்கு வாழ தகுதி அற்றவர்கள் என துரத்தி விட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
 
அப்படி தகுதி அற்றவர்களை மீண்டும் வரவழைத்து, தான் தேர்ந்து எடுத்த, பெருமைமிக்க விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளை சந்திக்க விடுவாரா? அதுமட்டும் அல்ல, புத்தருடன் மிகவும் நட்பாக ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நாகர்களை ஏன் விஜயனும் கூட்டாளிகளும் சந்திக்கவில்லை. நாகர்களின் வேண்டுகோளை ஏற்று இரண்டாம் தடவையாக நாகர்களை மூன்றாம் வருகையில் பிரத்தியேகமாக சந்தித்தது என்னவாச்சு? அவர்களை மறந்து விட்டாரா ?
 
மற்றது மகாவம்சத்தின் பிந்திய அத்தியாயத்தில் தான், புத்த மதம், விஜயனின் அரசாட்சிக்கு [கி மு 543 - கி மு 505] பிறகு ஏழாவது மன்னனான தேவநம்பிய தீசன் அரசாட்சியில் [கி மு 307 - கி மு 267] இலங்கைக்கு, கிட்ட தட்ட இருநூற்று நாற்பது ஆண்டுகளின் பின், அசோகனின் மகனினுடாக அல்லது தூதுவருக்கூடாக இலங்கைக்கு அறிமுகம் செய்யப் பட்டது என்று கூறுகிறது? அது மட்டும் அல்ல, புத்தமதத்தை உலகெங்கும் பரப்பியதும் அசோகனே! சிங்களம் என்ற இனம் ஒன்று தொடங்குவதற்கு ஒரு ஆரம்ப புள்ளியாக இருந்தான் என்பதைத் தவிர, இதில் விஜயனின் பங்கு என்னவென்று புரியவில்லை?
 
அசோகனின் உற்ற நண்பனான தேவநம்பிய தீசன் அல்லது தீசன் இலங்கையை ஆளும் காலத்தில், புத்த சமயப்பரப்பாளர் குழுவொன்றை [Buddhist monk missionary] தன் மகனின் தலைமையில் அங்கு அனுப்பினான் என்கிறது மகாவம்சம். இந்த தீசன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்றும், இவையனைத்தும் தீசனின் பெருமையால் நிகழ்ந்தவை என்றும், இவ்வற்றை கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து. ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ் விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் அல்ல. எனவே இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்றான் என்றும் பதினோராம் அத்தியாயம், 'தேவநம்பிய தீசன் பட்டாபிஷேகம்' [ Chapter XI / The Consecrating Of Devanampiyatissa] கூறுகிறது.
 
மேலும் பதின்மூன்றாவது அத்தியாயம் 'மஹிந்தர் வருகையில்' [Chapter XIII / The Coming Of Mahinda], இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அதைத் தொடர்ந்து, பதிநான்காவது அத்தியாயம் 'தலைநகர் புகுதலில்' [Chapter XIV / The Entry Into The Capital], அரசனை [தீசனை] சோதிப்பதற்காக மஹிந்த தேரர் அவனை சூட்சுமமான கேள்வி கேட்டார். கேட்கக் கேட்க பல கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தான் என்கிறது.
 
இப்ப நான் உங்களைக் கேட்க விரும்புவது, புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட, விஜயன் வரும் பொழுது, அங்கு ஒரு அதிசயமும் நடைபெறவில்லை, மாறாக உயர்குலம் அற்ற இயக்கர் பெண்ணை மணக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறான். பின் அவன் தன் மனைவியையும் பிள்ளைகளையும், துரத்திவிட்டு, உயர் குல பாண்டிய தமிழ் இளவரசியை இரண்டாம் தாரமாக அல்லது மூன்றாம் தாரமாக மணக்கிறான், என்றாலும் கடைசி தாரத்துக்கு பிள்ளைகள் இல்லாமல் அவன் சந்ததி இலங்கையை ஆளாமல், முற்றுப் பெறுகிறது. முதல் அல்லது குவேனி பிள்ளைகளை கூட அவன் கூப்பிட முயலவில்லை? சிங்க மிருகத்தின் பேரன் ஆளலாம் என்றால், அந்த பேரன் - விஜயன் மற்றும் யட்சினி அல்லது யட்சி (Yakshini) அரசி குவேனிக்கு பிறந்த பிள்ளைகளுக்கு என்ன குறை ? அப்படி என்றால் ஏன் அவனை புத்தர் தேர்ந்தெடுத்தார் ?
 
இரண்டாவதாக, இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அப்படி என்றால் புத்தர் தன் முதல் தெரிவான விஜயனில் தடுமாறி, இரண்டாவது தெரிவை இருநூறுக்கு சற்று மேற்பட்ட ஆண்டுகளின் பின் காலம் தாழ்த்தி செய்தாரா ?
 
மூன்றாவதாக, அசோகன் தீசனின் நட்பிலும், அவன் ஆளும் இலங்கையிலும் மிகவும் அக்கறை கொண்டு மஹிந்த தேரரை அனுப்பினார் என்கிறது, அப்படி என்றால், எதற்காக, மஹிந்தர் வந்து இலங்கையில் இறங்கும் பொழுது, தீசன் சோதிக்கப் பட்டான்?
 
எவராவது இதை வாசிக்கும் பொழுது, அவர்களின் மனதில் கட்டாயம் அசோகன், தீசனின் நட்பிலும், மற்றும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதூரம் புரிந்து வைத்து இருந்தார்கள் என்பதிலும் ஒரு ஐயப்பாடு ஏற்படும் என்றும் தோன்றுகிறது? [When one reads this portion of the Mahavamsa, the question arises how far Asoka and Tissa could be friends and how much Asoka knew of Tissa]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 25 தொடரும்
321125786_482858333983369_4096952031017108866_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=QLlzUXZ_24gQ7kNvgG2oe3X&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYB_W4Q8g_cy6xaW9XYKbo00WPZj8SywcET7XQsBmdYiJQ&oe=664E64C1 321054926_679564497129551_7406480398155523425_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=FIfN9uIuJTMQ7kNvgEY6jGB&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYB17hG_ATLLs9srhWKkHRdGVT9GbgcBZ26KTP1vBerGUQ&oe=664E8338 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 25
 
 
போர்த்துகீசியர்கள் இலங்கையில் 1505 ஆம் ஆண்டு தரையிறங்கிய காலத்திலும் தமிழ் இலங்கையில் ஒரு பிரதான மொழியாக இருந்தது என்பதற்கு பல சான்றுகள் வரலாற்று ரீதியாக இருக்கின்றன. உதாரணமாக, கோட்டை அரசன் ஏழாம் புவனேகபாகு [the king of Kotte, Bhuvanehabahu VII / 1468 – 29 December 1550] போர்த்துகீசியர்களுடன் தமிழில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
 
மேலும் கோட்டை அரசாட்சியில் நீதிமன்ற மொழியாக அன்று தமிழும் இருந்துள்ளது.[Aiyangar, S. Krishnaswami; de Silva, Simon; M. Senaveratna, John (1921). "The Overlordship of Ceylon in the Thirteenth, Fourteenth and Fifteenth Centuries"] . Kotte என்ற சொல்லே தமிழ் சொல் 'கோட்டை' யில் இருந்து பெறப்பட்டதாகும்.[Somaratne, G.P.V. (1984). The Sri Lanka Archives, Volume 2. Department of National Archives. p. 1.]
 
அதே போல, அறிஞர் H L செனிவிரட்ன [H L Seneviratne] பல கண்டி தலைவர்கள் [Kandyan chieftains] 1815 ஆண்டு மாநாட்டு [1815 Convention / treaty with the British] உடன்படிக்கைகள் தமிழில் கையெழுத்திட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மேலும், ஊகங்கள் மற்றும் அனுமானங்களை தவிர்த்து, தொல்பொருள் சான்றுகள் அல்லது கல்வெட்டியல் சான்றுகள் மூலம் [archeological / epigraphic facts / evidence] சிங்கள மொழி கி பி 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததாக எந்த தகவலும் நான் அறிந்த வரையில் இல்லை. சிங்கள மொழியில் ஏறக்குறைய 4000+ தமிழ் சொற்கள் இருப்பதை ஆதார பூர்வமாக எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் [Rev. S. Gnanapiragasam] சுட்டிக் கட்டி, எனவே சிங்கள மொழியில் இருந்து எல்லா தமிழ் சொற்களையும் கழற்றிவிட்டால், அங்கு சிங்கள மொழி என்று ஒன்றுமே இருக்காது என்கிறார். [If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language.] சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி (An Etymological and comparative Lexion of the Tamil Language), இவரால் 1938-இல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
 
1815 இல் கண்டி இராச்சியம் காட்டிக்கொடுப்பினால் வீழ்த்தப்பட்டது. அதன் பின் “கண்டி ஒப்பந்தம்” கண்டி அரச மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4 மணிக்கு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கண்டி திசாவைகள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். அட்டவனை 10, அவர்களின் கையொப்பத்தை காட்டுகிறது. இதில் ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பலரின் கையெழுத்து தமிழும் மற்றும் இன்னும் அப்பொழுது பரிணாமம் அடைந்து வரும் சிங்களமும் கலந்து இருக்கின்றன [Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphabets were used]
 
எல்லா இலங்கை காவியமும் [நாளாகமமும் / chronicles], இலங்கையை புத்தர் தன் கொள்கைகளை பரப்ப தயாராக்கினார் என்றும் இலங்கைக்கு மூன்று தரம் அதற்காக வருகை தந்தார் என்றும் இன்று வரை கூறினாலும், புத்தர் இறக்கும் தருவாயில், புத்த மதத்தினர் கட்டாயம் வருகை தந்து வணங்க வேண்டிய நாலு இடங்களாக லும்பினி [புத்தர் பிறந்த இடம்], புத்தகயை அல்லது புத்த கயா [புத்தர் அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம்], சாரநாத் அல்லது இசிபதனம் [இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்], குசிநகர் அல்லது குஷி நகர் [புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த நகரம்] [The four places are Lumbini, Buddhagaya, Sarnath and Kusinara.] என அடையாளம் காட்டி உள்ளார். ஆனால் புத்தர் தான் பிரத்தியேகமாக தேர்ந்து எடுத்து, மூன்று தரம் வந்து, போதனை செய்து, கால் பதித்த இலங்கையை அடையாளப் படுத்தவில்லை ? ஏன் யாருக்காவது புரிகிறதா ??
 
மேலும் அசோகா காலத்திலும். அசோகன் இன்னும் நான்கு இடங்களை புனித இடங்களாக அடையாளப் படுத்தினான். அவை சவத்தா [சிராவஸ்தி / கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்தின் ஜேடவனத்தில் இருபத்து நான்கு முறை சாதுர்மாஸ்ய விரதங்களை மேற்கொண்டார்], சங்கிசா அல்லது சங்காசியா [கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்காசியா], ராஜகிரகம் [மௌரியர் காலத்திய மகத நாட்டின் தலைநகராக இருந்தது] மற்றும் வைசாலி [கௌதம புத்தர், தான் இறப்பிற்கு முன்னர், கி மு 483இல் தனது இறுதி உபதேசத்தை பிக்குகளுக்கு இந்நகரில் தான் மேற்கொண்டார்.] [Savatthi, Sankasia, Rajagaha and Vesali.] ஆகும். இங்கும் அசோகன் இலங்கையை புனித புத்த பூமி என்று கருதவில்லை. இதில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது ?
 
புத்தருக்கோ அல்லது அசோகனுக்கோ இலங்கை ஒரு பெரும் பொருட்டாக இருக்கவில்லை அல்லது இலங்கையை பற்றி எந்த அறிவும் இல்லை என்பதே உண்மையாகும்! இது மகாவம்சத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படையாகவே உலகத்திற்கு காட்டுகிறது. இதில் நான் ஒன்றும் சொல்லவில்லை. உண்மை என்றும் வெல்லும்!!
 
ஆகவே அந்த அடிப்படையில் நாம் ஆராயும் பொழுது, புத்தர் இலங்கைத் தீவுக்கு மூன்று முறை வந்ததாக மகாவம்சம் சொல்லும் கதை கற்பனை ஆகும் என்பது புலன்படுகிறது. புத்தர் வட இந்திய புலத்தை விட்டு வேறெங்கும் சென்றார் என்பது பாளி நியமன படைப்புகள் [canonical works] ஒன்றிலும் அல்லது வரலாற்று சான்றுகளிலும் காணப் படவில்லை.
 
மற்றது மாயா ஜால வித்தைகள் மூலம் காற்றினூடாக வானத்தில் பயணித்தார் என மகாவம்சம் கூறுவதையும் கட்டாயம் ஏற்க முடியாது, ஏன் என்றால்; புத்தர் மந்திர தந்திர ஜாலங்கள் போன்றவற்றிற்கு எதிரானவரும் ஆவார். மேலும் புத்தர் நிர்வாணம் [enlightenment] அடைந்த நாளில் இருந்து, அவர் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குசிநகரில் [Kusinagar or Kusinara] தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடையும் வரை, புத்தர், வெறும் காலுடன் புத்தகயாவில் [Buddha Gaya] இருந்து குசிநகர் வரை நடந்து சென்றார் என தெரிய வருகிறது.
 
பெலுவ [Beluva] என்ற ஒரு குக்கிராமத்தில், அவர் தனது சீடன் ஆனந்தாவை பார்த்து, "ஆனந்தா நான் இப்ப வயதாகி விட்டேன், உடலும் தளர்ந்து விட்டது, வாழ்க்கை பாதையை கடந்து விட்டேன், நான் வாழ்க்கை காலமான எண்பது வயதைக் கடந்துவிட்டேன் [“Ananda, I am now old, worn out, one who has traversed life’s path, I have reached the term of life which is eighty.”] என்கிறார். எனவே புத்தர் காற்றில் பறந்து வந்தார் என்று மகாவம்சம் கூறுவது ஏற்புடையதாக இல்லை. மற்றும் அது புத்தரின் நம்பிக்கைக்கும் போதனைக்கும் எதிரானதும் ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 26 தொடரும்
323402396_819832205751191_8981214098927704632_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=09o6YWvcHooQ7kNvgFpYztR&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC52cubqRVHIS9EyGIdpViNAoauQLm8fPS0gHpUEpNSFw&oe=6651CB2F 322844593_1220379555579161_3338233973588683599_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=kAvT1HgKvfEQ7kNvgHYeSVx&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBmgpx4vv_Fq3u6e81v0iV5cVJb3BM0vLVUMAE_sNMtSw&oe=6651C11C 323274423_903742013975319_4840771455275672659_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nF6kNauKdrsQ7kNvgHxYHX9&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCDSq1pEDd7S9SJ-6L5umgqL-jbyarN2KuCqqWxV264Sw&oe=6651ED31 322802785_540136151369690_8620904421295297132_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=EuRdHBZAYOwQ7kNvgGO2NC9&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDn8684NAFRYZQ_2G_WipmsQkWMWKq3UfUFicTRvJPwgQ&oe=6651D94E
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 26
 
 
டச்சு காலத்தில், கிபி 1656 முதல் கிபி 1796 வரை, இலங்கையில் அடிமட்ட சமூக உறவுகளில், சிங்களம் தமிழ் என்ற வேறுபாடுகள் காணப்படவில்லை என்றும், ஆனால் பல்வேறு சாதி பிரிவுகளே காணப்பட்டதாகவும் அருட்தந்தை வீ. பெர்னியோலா அடிகள் கூறுகிறார் [Vito Perniola, in observing the social relations at the grassroots level in the Dutch period of SriLanka, did not see "any racial distinction between Sinhala and Tamils," but "rather the division into various castes"].
 
கண்டியைத் தலை நகராகக்கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்த நாயக்கர் அரச மரபு [வம்சம்] எமக்கு எடுத்து கட்டுவது, அரசன் சிங்களவனாக இருக்கவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் அப்பொழுதும் இலங்கையில் இருக்கவில்லை என்றும், ஆனால் புத்த மதத்திற்கு ஆதரவளிக்க மட்டுமே அங்கு வலியுறுத்தப்பட்டது என்பதாகும் [The longevity of the Nayakkar dynasty (1739-1815) in the kingdom of Kandy indicates that there was no requirement for the king to be Sinhalese, while his patronage to Buddhism was insisted upon].
 
இலங்கையில் கண்டு எடுக்கப் பட்ட கல்வெட்டுகள், சிங்களம் என்பது கி மு 500 ஆண்டில் வடமேற்கு வடகிழக்கு இந்தியாவில் இருந்து வந்த குடியேறிகளால் கொண்டு வரப் பட்ட பிராகிருதத்தில் இருந்து மெல்ல மெல்ல வளர்ந்த ஒரு மொழியாகும் என்பதை உறுதிப் படுத்துகிறது. இது இந்திய-ஆரிய மொழிகளில் இருந்து தனிமை படுத்தப் பட்டதால், அதன் வளர்ச்சி ஓரளவு சுயாதீனமாக இருந்தது எனலாம். திராவிட மொழிகளில் மூத்தது தமிழ் என்பதாலும், சிங்கள இனம் என்ற ஒன்றின் தோற்றம் ஆரம்பத்தில் இருந்தே தமிழுடன் தலைமுறைகளாக இணைந்திருந்ததாலும், சிங்கள மொழியின் வளர்ச்சியில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பு பெற்று, சிங்கள மொழியின் ஒலியியல், இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியங்களில் தமிழின் தாக்கத்தை இன்று காணக் கூடியதாக உள்ளது. [Stone inscriptions suggest that Sinhala developed from the Prakrits, brought to Sri Lanka by settlers from Northwestern and Northeastern India in the 5th century BCE. Because of its isolation from the other Indo-Aryan languages of mainland India, Sinhala’s development was somewhat independent. Since Tamil, the oldest of the Dravidian languages, and Sinhala have coexisted for generations, it strongly influenced Sinhala’s phonology, grammar, and vocabulary.]
 
கி மு 300 ஆம் அல்லது கி மு 200 ஆம் ஆண்டில் இருந்து சிங்கள பிரகிருத் அல்லது சிங்கள மொழிக்கு முன்னைய கல்வெட்டுக்கள் [Sinhalese Prakrit inscriptions] காணப்பட்டாலும், சிங்கள கல் வெட்டுக்கள் 6ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே, அதிகமாக 9ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே தான் காணப்படுகின்றன. தொடக்கத்தில் இரண்டு மூன்று வரிகளில் நன்கொடைகளைப் பற்றிய விபரங்களை தந்தன, ஆனால் 10ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கூடுதல் விளக்க முள்ளதாக அமைந்ததாக காணப்படுகிறது [At the beginning the inscriptions had two or three short lines containing the information about donations made to bhikkhus. After the 10th century A.C these have become more descriptive because they contained appreciations made for some kings].
 
தமிழ் மொழியின் செல்வாக்கு இலங்கையில் பரந்து பட்டு இருந்தன என்பதற்கு தமிழ் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன. உதாரணமாக, காலி கல்வெட்டு, பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு, அனுராதபுரத்தில் உள்ள அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு, கேகாலை மாவட்டத்தில் உள்ள கோட்டகமைக் கல்வெட்டு போன்றவை சான்றாகும். இந்த கல்வெட்டுக்கள் எல்லாம் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வெளியே, இலங்கையின் வெவ்வேறு திக்குகளில் கண்டு எடுக்கப் பட்டவையும் ஆகும்.
 
காலி கல்வெட்டு என்பது 1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும். பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு என்பது இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது.
 
அதேபோல, அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது. கோட்டகமைக் கல்வெட்டு என்பது, 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்ச அரசன் ஒருவன் கம்பளை அரசின் மீதான போரொன்றில் பெற்ற வெற்றியைக் குறிக்க எழுதுவிக்கப்பட்டது ஆகும். இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்ட ஒரு பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. இங்கே சொற்களிடையே இடைவெளி இல்லாமலும் அடிகள் முறையாகப் பிரிக்கப்படாமலும் உள்ளது. ஆய்வாளர்கள் இதைப் பின்வருமாறு ஒழுங்குபடுத்தியுள்ளர்கள்.
 
 
"சேது
கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப்
பங்கயக்கை மேற்றிலதம்பாரித்தார் பொங்கொலிநீர்
சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர்
தங்கள்மடமாதர் தாம்"
 
 
இதன் கருத்து "சிங்கையாரியனுக்கு அடங்காத சிங்களத் தலைவர்களுடைய மனைவிமார் கண்ணீர் விட்டுத் தமது நெற்றியில் இருந்த பொட்டை அழித்தனர்" என்பதாகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 27 தொடரும்
 
 
படம் 01: [1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும் / Dutch Reformed Church – Galle / The current Dutch Reformed Church was completed in 1755 and stands at the highest point of the Galle Fort./ One of the most unusual stones in the church was this one, written in Tamil. Unfortunately, it is quite worn and hard to make out, / Apparently this is the grave of the first Tamil convert to Christianity]
 
படம் 02: [பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது / In the 12th Century CE, the Velakkaras set up a Tamil inscription were they promised to protect the Relic of the tooth of the Buddha at Polonnaruwa ]
 
படம் 03: [அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது.]
323687699_906706907022662_5813877653455417533_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=fufvFrwJDY0Q7kNvgE6nmoI&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBbnKMX-Dp0QhA5jW-QuQpvs5ybfXDX0bHGdP_Li46ROA&oe=665BC0D2 324087813_1409353409600421_1013118086317880141_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=4ynTrANzZJoQ7kNvgGMPYre&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC6EOGJz5C79PULhRBr5iLMs4lCSSmzyy9KDYFYalBaeg&oe=665BDDCD 323630338_494615866118294_8128661359406298489_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=8tOwJ6AIZu0Q7kNvgEps-zc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC4ZBjDCRmiw5ULqI46r2NqWJo5Z9N8bnqqVv4ILuAK_A&oe=665BF50E 323619159_715625283569976_1470969706834713504_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=DQgmz6UYPRQQ7kNvgHIzvt8&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAox6mUE2FZWo1pNYu6rpvMmP9p2kmG573bVfgXypcFDw&oe=665BD719
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 27
 
 
இன்று தமிழர்கள் பெரும்பாலும் வாழும் பகுதிகளான இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளில் காணப்படும் புத்த மத வழிபாட்டு தடயங்கள் அல்லது சான்றுகள், அங்கு சிங்களவர்கள் வாழ்ந்ததாக இலங்கை வாழ் பெரும்பான்மையான சிங்களவர்கள் இன்று நம்புகிறார்கள். அவர்கள் எனோ கி பி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி பி ஏழாம் நூற்றாண்டு வரையும் தமிழர் மத்தியில் பௌத்தம் மேலோங்கி இருந்தது என்ற வரலாற்று உண்மையை கவனத்தில் கொள்வதில்லை.
 
இரண்டாவது நூற்றாண்டில் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கஜபாகு என்கிற மன்னனால் கண்ணகி வழிபாடு சிங்கள மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது என சிங்கள வரலாற்று நூல்களில் ஒன்றான இராஜாவளி என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தினி தெய்யோ என இது சிங்கள மக்கள் மத்தியில் வணங்கப்பட்டு வருகிறது, இந்த சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியான மணிமேகலை முழுக்க முழுக்க ஒரு தமிழ் புத்த மத நூலாகும். தமிழர்கள் அந்த காலப் பகுதியில் புத்த மதத்தை தழுவி இருந்ததிற்கு இது ஒரு வரலாற்று சான்றாகும். எனினும் புத்த மதம் சிங்களவர்களுக்கே உரிமையானது என்ற தப்பபிப்பிராயத்தை மகாவம்சம் அவர்களுக்கு ஊட்டியுள்ளதே இந்த மனப்போக்கிற்கு அடிப்படை காரணமாகும்.
 
கி.பி. 3ம் நூற்றாண்டளவில், மகாயான பௌத்தம் என்ற புத்த மத பிரிவு, தென்னிந்தியாவில் உருவாகி, தமிழகத்திற்குள் அறிமுகமாகியதாக அறிகிறோம். புவியியல் சூழ்நிலை காரணமாக தென்னிந்தியாவின் அரசியல் சமூக மாற்றங்கள் இலங்கையையும் பாதித்தன. எனவே இலங்கையிலிருந்த தமிழர்கள் மத்தியிலும் மகாயான பௌத்தம் பரவத் தொடங்கியது. மணிமேகலை, குண்டலகேசி போன்ற தமிழ்ப் பெரும் காப்பியங்கள் பௌத்த தத்துவத்தை வலியுறுத்துபவையாக உருவெடுத்தன. ஆனால் இதன் பழமைவாதிகளான பௌத்தர்கள், தம்மை தேரவாத பௌத்தர்கள் என வரையறுத்துக் கொண்டனர்.
 
இந்தச் சமூகப் பகைப்பலத்தின் பின்னணியில், இதே காலப்பகுதியில் இலங்கை அரசன் தாதுசேனனின் மாமாவான மகாநாம தேரரால் மகாவம்சம் எழுதப்பட்டது. இப்படி இரண்டாக உருவான தேரவாத, மகாயான பௌத்த பிரிவுகள் என்பன சிங்கள மொழியின் உருவாக்கத்திற்கும் காரணமாக அன்று அமைந்திருந்ததுடன், தமிழ் மொழி என்பது மகாயான பௌத்தத்தின் ஊடகமாகக் கருதப்படவும் வழிவகுத்தது எனலாம். இந்த நிலையில், இலங்கையில் இந்து மதத்தால் உள்வாங்கப்பட்ட பௌத்தத்திற்கும், பழமைவாத பௌத்த மதத்திற்கும் எதிரான போராட்டமாகவே மகாவம்சம் அமைந்தது எனலாம்.
 
6ம் நூற்றாண்டில் உருவான புராண இதிகாசங்களின் பாணியிலான மகாவம்சம், சில நூறாண்டுகளுக்கு முற்பட்ட அதிகாரப் போராட்டங்களை, இதிகாசங்களையும் புராணங்களையும் போலவே மக்கள் மயப்படுத்த முற்பட்டது. இதன் ஒரு வடிவமே எல்லாளச் சோழனுக்கும் துட்டகாமினிக்கும் இடையில் நடந்த போராட்டம் தொடர்பான மகாவம்சத்தின் விவரணையாகும். அது மட்டும் அல்ல, இன்று வடக்கு கிழக்கில் தொல் பொருள் ஆய்வில் கிடைக்கும் புத்த மத சான்றுகளும் இவையின் விளைவே, அதாவது தமிழ் மகாயான பௌத்தத்தின் சிதைவுகள், இதற்கும் சிங்களவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை.
 
மகாவம்சத்தில் பாடம் 22 முதல் 32 வரை துட்டகாமினி பற்றி சொல்லப்படுகிறது. 271 பக்கங்கள் கொண்ட மகாவம்சத்தில், 81 பக்கம் இவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 30% ஆகும். ஆனால், மகாவம்சம் சொல்லும் எண்ணூற்று முப்பத்தைந்து ஆண்டு ஆட்சி காலத்தில் இவனின் ஆட்சி இருபத்தி நான்கு ஆண்டுகள் அல்லது 3% க்கு குறைவான காலமே! இந்த தவறான கையாளுதல், எமக்கு மகாவம்சத்தின் நம்பிக்கைக்கு ஒவ்வாத தன்மையையும், அதை எழுதிய நூலாசிரியரின் மனப்போக்கையும் வெளிப்படையாக காட்டுகிறது.
 
சமண சமயம் தமிழ் நாட்டுக்கு கி மு 300 ஆண்டுகளில் வந்திருக்கலாம்? அதை தொடர்ந்து புத்த சமயமும் அங்கு வந்து, கணிசமான காலம் அங்கு நிலைத்து நின்றது. இந்த கால பகுதியில், உதாரணமாக கி பி 300 இல் இருந்து 600 வரை காலத்தை இருண்ட காலம் எனக் கூறப்படுகிறது. ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டில் இல் இருந்து ஏழாம் நூற்றாண்டு வரை, மீண்டும் அங்கு இந்த பிராமண சமயங்களை கடுமையாக எதிர்த்து, சைவமதம் மேல் ஒங்கத் தொடங்கியது. இந்த அலை, பல புத்த பிக்குகளை திரளாக இலங்கைக்கு அனுப்பி இருக்கலாம்?
 
மேலும் இலங்கை வாழ் தமிழர்களும் மீண்டு சைவ சமயத்துக்கு முழுமையாக திரும்பினார்கள். அதனால்த் தான், தீபவம்சத்தில் தமிழருக்கு எதிராக காணாத இனத்துவேசம் மாகாவம்சத்தில் காணப்படுவதற்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம்?
 
மற்றது தேரவாத பௌத்தம் [இலங்கை சிங்களவர்கள் இச்சமயத்தைச் சேர்ந்தவராவர்கள்] மற்றும் மகாயான பௌத்தம் [மகாயான பௌத்தம், கி.பி. முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தியா, இலங்கை தமிழர்கள், மீண்டும் சைவ மதத்திற்கு கி பி ஆறாம் நூற்றாண்டிற்கு பின் மாறமுன், குறிப்பிட்ட காலம் வரை மகாயான பௌத்தத்தில் இருந்தார்கள்] இவைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடும் பகையும் ஆகும்.
 
சமஸ்கிருத பெயர்ச் சொல் " सैंहल " [saiMhala] என்பதன் அர்த்தம் கறுவா அல்லது இலங்கைக்கு உரியது அல்லது அங்கு உற்பத்தி செய்யப் படுவது அல்லது சிங்களவர் [cinnamon / Laurus Cassia - Bot or belonging to or produced in Ceylon or Sinhalese ] ஆகும். இதன் உச்சரிப்பு "சின்ஹல" ஆகும். இலங்கை கறுவா விளையும் நாடாகையால், கறுவாவின் சமஸ்கிருதப் பெயரான "சின்ஹல" என்பதே சிங்களமாக மருவியிருக்கலாம் எனவும் வாதாடலாம் என நம்புகிறேன்.
 
ஏனென்றால் சிங்கத்தின் வம்சாவளியினரே சிங்களவர் என்பது நம்பமுடியாத இயற்கைக்கு மாறான தகவலாக இருப்பதால்?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 28 தொடரும்
324412106_1443130759828249_1449246610470419319_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nu7rC731bO0Q7kNvgHUZMi5&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAd1V_TmYZ81TGaOpTyyAGEagXbChAv-QaNPdH02gQzUQ&oe=665FC1D0 324915769_1160476744581666_7247862459284849275_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_5g00AQJz1IQ7kNvgFCvtyM&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCwIbwyGpuAD-be1_HwnmIuEItH0ciQaV0rmN6slOQrUA&oe=665F9F11
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 28
 
 
புத்தமதம் விஜயன் வந்து கிட்ட தட்ட 240 ஆண்டுகளின் பின் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், சிங்கள மொழி, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளிற்குப் பின்பு தான், அதிகமாக 6ஆம் 7ஆம் நூறாண்டில் தான் ஓரளவு வளர்ச்சி அடைந்த மொழியாக தோற்றம் பெற்றது. இலங்கையில் விஜயன் வரும் முன்பே நாகர்கள் அங்கு இருந்தார்கள் என்றும் அதனால் அதை நாக நாடு அல்லது நாக தீபம் [‘Naga Land’ and ‘Naga Deep’] என்று பண்டைய காலத்தில் அழைத்தனர் எனவும் அறிகிறோம். தீபவம்சம், மகாவம்சம் கதையின் படி, புத்தர் [Lord Buddha] தனது இரண்டாவது வருகையாக கி மு 528 ஆண்டில் இலங்கையின் இரு வெவ்வேறு வட பகுதில் ஆட்சி செய்த இரு இரத்த உறவு கொண்ட நாக அரசர்களின் இடையில் ஏற்பட்ட சர்ச்சைகளை தீர்த்து வைத்தார் என்கிறது.
 
ஆனால் அதே கதையை தமிழ் மணிமேகலையிலும் காண்கிறோம். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான, சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த, அதிகமாக மஹாயான பௌத்த காப்பியமான, சாத்தனாரின் மணிமேகலையும், அதற்கு முந்திய இளங்கோவின் சிலப்பதிகாரமும், கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்று பொதுவாக கருதினாலும் இக் கதையை கி பி 2ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்றே பலர் வாதாடுகின்றனர். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகை குறித்த எந்தக் கதையும் மணிமேகலையிலோ, அல்லது இதர இந்திய பௌத்த நூல்களிலோ காணப்பட வில்லை. மணிமேகலை 8 [மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை] , வரி 54 - 63 இல் :
 
 
"கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி 55
எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார்
தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்
தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்
இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே 60
பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும்
பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்."
 
 
அதாவது, நாக நாட்டை ஆளும் இரு வேறு மன்னர்கள் "இது என்னுடையது" என்று சொல்லிக்கொண்டு அந்தப் பீடிகைக்கு உரிமை கொண்டாடினர். அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. தம் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து உரிமைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பெருந் தவமுனிவன் தோன்றி இது என்னுடையது என்று சொல்லி அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு "போரைக் கைவிடுக" என்று அறநெறி உரைத்தான், மேன்மக்கள் போற்றும் அந்தப் பீடிகை [பீடம் / seat, stool] மணிமேகலை முன் தோன்றியது என்கிறது.
 
ஒரே ஒரு வித்தியாசம் தான், இங்கு புத்தரிற்குப் பதிலாக, துறவி ("பெருந்தவ முனிவன்") என கூறப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.
 
மணிமேகலையில், இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள மகாவம்சம் / பத்தொன்பதாவது அத்தியாயம் போதி விருட்சம் வருகையில், 'மகா தேரருடைய சக்தியால் அரசன் தன் பரிவாரங்களுடனும், இதர தேவர்களுடனும் போதி மரம் கொண்டு அதே தினத்தில் ஜம்பு கோலத்துக்கு வந்து சேர்ந்தான் என்றும் கூறப்படுகிறது. இன்று மணிபல்லவமும் ஜம்பு கோல் பட்டினமும் ஒரே இடம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலே தான் இந்த மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்ததாகிறது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை இதை கூறுகிறது. இது நாக நாட்டைச் சேர்ந்தது என்றும் மணிமேகலை 8 ஆம் காதை கூறுகிறது. நாக நாடு என்பது இலங்கைத் தீவின் வட பகுதிக்கு பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர் ஆகும். மகாவம்சமும், இந்தப் பகுதியை நாக தீபம் என்று கூறுகிறது.
 
சிலப்பதிகாரத்திம், புகார் நகரை , நாக நாட்டில் உள்ள நீண்ட நாக பட்டணத்துடன் ஒப்பிடுகிறது. உதாரணமாக
 
"அதனால்,
நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம் நீள்புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில்"
இதன் கருத்து, அதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது என்கிறது. இலங்கை காப்பியம் அவர்களை மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட அல்லது அரைவாசி பாம்பு, அரைவாசி மனித உயிரினம் என்கிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 29 தொடரும்
326013493_2600621820105912_7074378968651150008_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=knyKDh93nMoQ7kNvgElpzD2&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAdR_LUubRBX0iuKbYS-2UEWVoh2sFnxtD5Rnxc8VKTzw&oe=6663FE03 326119274_1626147941155451_5462318020006355215_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=OK-spnYEHNAQ7kNvgHRJhO8&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYC_zK6wvlSkdZfM_6k6bwMfIKlCejLvL2FOgks_0LFM0g&oe=6663FBF3 326164201_700906101654942_6352031372849511166_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PIGEmb6CNC4Q7kNvgEHCkYr&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAST7hPemGziMS8rytLMm3Oe6luEyts94Ma6yzYt398wA&oe=6663EC44 325660223_1324761144972634_1306368276585776407_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1RtuT-yTjusQ7kNvgHgI3Hb&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDTp1rG-QkR8Uk9czhbLn8R0i8duKNJDBwtCiQeypmHrw&oe=6663FB63
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 29
 
 
தமிழ் காப்பியம் குண்டலகேசி, மணிமேகலை [Kundalakesi and Manimekalai] புத்த சமயம் சார்ந்த இலக்கியமாகும். தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தமிழர் மத்தியில் 1ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் செல்வாக்கு பெற்றிருந்த புத்த மதம், அதன் பின் சைவ நாயனார்களின் வருகையால், முழுமையாக செல்வாக்கு இழந்து விட்டது. எனவே பௌத்தம் என்பது வெறுமனே சிங்களவர்களுக்கு உரித்தான ஒன்று அல்ல.
 
இன்று சிங்களவர்களை தாண்டி பல நாடுகளில் பல மொழி பேசுபவர்களாலும் அனுசரிக்கப்படும் ஒரு மார்க்கம் ஆகும். மேலும் அன்றைய தமிழர்களால் பௌத்தம் பின்பற்றப்பட்ட ஒன்று என்பதையும் தமிழ் காப்பியங்கள் ஊடாகவும் பார்த்தோம். அதன் எச்சங்களே இன்றும் தமிழர் பகுதிகளில் எஞ்சி நிற்கும் சான்றுகள். இவற்றை சிங்கள பௌத்தத்தின் தொடர்ச்சியாக கட்டாயம் எடுத்து கொள்ள முடியாது.
 
லயனல் சரத்தின் "புராதான இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள்" [Ancient Ceylon Sinhala Tamil Coordination - Sri Lanka Paperback – 1 Jan. 2006 by [Translated by S.P.D. Buddhadasa] Lionel Sarath (Author)] என்ற புத்தகம், தமிழ் மக்கள் சக நாட்டினர் என்ற உணர்வுடன் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை தக்க ஆதாரங்களுடனும் மற்றும் பாரம்பரியமாக தமிழ் விரோதத்திற்கு மேற்கோள் காட்டப்பெறும் வரலாற்று மூலங்களையே இந்த உண்மையினை வெளிப்படுத்துவதற்கு தடயங்களாக அவர் பாவித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது. இது 1996 எழுதப் பட்டது. இவர் மேற்கொண்ட முயற்சியைப் போல வேறு சில சிங்கள அறிஞர்களும், உதாரணமாக பேராசிரியர்கள் சிறிவீர, லியன கமகே, லெஸ்லி குணவர்த்தன, சுதர்சன் செனவிரத்ன, குமாரி ஜயவர்த்தன போன்றோர்களும் ஆற்றியுள்ளனர்.
 
கிருஸ்துக்கு முன்னரே இரு தமிழ் மன்னர்கள் சேனன் - குத்திகன் இருபத்து இரண்டு ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்துள்ளார்கள். எவ்வாறு அதற்கு முன்பு நெடுங்காலமாக, ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக, இருந்த அரச குடும்பத்தை இவர்கள் இலகுவாக துரத்தி விட்டது உண்மையில் வியப்பிற்குரியதே. அதற்கு அவர் [லயனல் சரத்] கொடுக்கும் காரணம், அக்காலத்தில் அநுராதபுரத்தில் தமிழ் மக்கள் வசித்து இருக்கலாம், ஏன் என்றால் வடஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக ஆரியர் வருவதை விடவும் தென் இந்தியாவில் இருந்து தமிழர்கள் வருவது எளிதாய் இருந்து இருக்கும் என்பதால் என்கிறர்.
 
மற்றும் அக்காலத்தில் வசித்த தமிழ் மக்களும் பௌத்த மதத்தை தழுவி இருந்தமைக்கான சான்றுகள் இருக்கின்றன என்கிறார். கி பி 9 - 21 இல் ஆட்சி புரிந்த மகாநாகனின், பட்டத்து ராணி தமிழ் இளவரசி என்றும், அவ்வாறே, சிலகாலங்களின் பின், மன்னராய் இருந்த இலநாகனின் மைந்தனாகிய சந்திரமுக சிவனின் ராணியும் தமிழ் இளவரசியே என்கிறார் [மகாநாகன் - பெரிய நாகன், இலநாகன் - இளநாகன் - இளமை பொருந்திய நாகன், / இதே பெயர் ஒத்த மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர், சந்தமுகசிவ - சந்திரமுக சிவ - எல்லாமே தமிழுடன் தொடர்புடைய பெயர்களே].
 
மேலும் தமிழ் வியாபார தலைவர்களால் பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்பட்ட குகைகளில் மூன்று குறிப்புகள் கண்டு எடுக்கப் பட்டுள்ளன என்றும், அதில் இரண்டாம் நூற்றாண்டிற்குரிய சிலாசனமொன்று அநுராதபுரத்தில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது என்றும், மற்றும் இரண்டு சிலாசனங்களும் பெரிய புளியன்குளத்தில் கண்டு எடுக்கப்பட்டன என்றும் கூறுகிறார். பிரசித்தி பெற்ற வல்லிபுரம் சாசனத்திற்கும் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இதுவாகும். அதுமட்டும் அல்ல, மேல் கூறப்பட்ட தமிழ் தலைவர்கள் பௌத்தர்கள் என்கிறார். இக்காலத்தில் தென் இந்தியா தமிழ் இராச்சியங்களிலும் பௌத்த சமயம் செல்வாக்கு பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது என்கிறார். இவ்வாறு பல உதாரணங்களை தமிழ் சிங்கள உறவுகளுக்கு எடுத்து காட்டுகிறார்.
 
ஒரு மரியாதையின் பொருட்டு பல தலைமுறைகளாகவும், வெவ்வேறு இடங்களிலும் நடைமுறையில் இருந்தாலும், மரபுகளின் நம்பிக்கையில் எதையும் நம்ப வேண்டாம். பலர் அதைப் பற்றி பேசுகிறார்கள், என்பதால் அந்த விடயத்தை நம்ப வேண்டாம். கடந்த கால முனிவர்களின் அல்லது ஆசாரியர்களின் மேல் உள்ள விசுவாசத்தால் எதையும் நம்ப வேண்டாம். கடவுள் உத்வேகம் தந்தார் என்று உன்னை இணங்கவைத்து, நீ உன் கற்பனையின் பிரகாரம், எதையும் நம்ப வேண்டாம். உங்கள் எஜமானர்கள் மற்றும் ஆசாரியர்களின் அதிகாரத்தில் மட்டும் எதையும் நம்ப வேண்டாம். நீங்கள் உங்கள் பாட்டில் ஆராய்ந்து அல்லது சோதித்து, நியாயமானதாகக் நீங்கள் கண்டறிந்தவற்றை மட்டும் நம்புங்கள், அதற்குத் தக்க உங்கள் நடத்தையை இணங்க வையுங்கள் என்கிறார் கௌதம புத்தர். [“Believe nothing, in the faith of traditions, even though, they have been held in honour, for many generations, and in diverse places. Do not believe, a thing, because many people speak of it. Do not believe, in the faith, of the sages of the past. Do not believe, what you yourself have imagined, persuading yourself, that a God inspires you. Believe nothing, on the sole authority, of your masters and priests. After examination, believe what you yourself, have tested and found, to be reasonable, and conform your conduct thereto.” - The Buddha ]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 30 தொடரும்
326931247_850964092853999_2929855560479123474_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vc_7a2QtnREQ7kNvgEtweE1&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAUIuE3U8bw7wFf5yutqJYvp98FVEvWsCB1NAxtDPrKyA&oe=666A8902 326797456_870775747531019_1897089059109952966_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=VF8JQbZWgssQ7kNvgGKgNGV&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYD7UGGwi3MHPXlfjqNuyJKtZ3D02wAaMnpOOOBL9s9Rdw&oe=666AA55D 326777901_1852152248457395_5863963044893260266_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Q7_1-BX6MgUQ7kNvgHo9TXa&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBiPzSVpr_LSJNVhC9CatJatac598qmks1GyGfmiDVgcg&oe=666A8C41 326961160_1223673835193248_2486170062269117383_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Sj47A-ZS7JUQ7kNvgHrlbG-&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYB_Mb8TQ6EDLSE9Hexo1HG9edR5gERvPK93v8gvjykzbA&oe=666A70D3
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 30
 
 
வசப மன்னரின் காலத்தில், நாகதீபத்தை [யாழ்ப்பாணம்] ஆட்சிசெய்த 'இசுகிரி' யைப் பற்றி லயனல் சரத் கூறுகையில் [வல்லிபுர தங்க ஓலைச் சுவடி], அவரை சிங்களவர் என்று கூறமுடியாது என்றும், ஏன் என்றால், இசு என்ற பதம் பிராமணரை குறிக்கும் என்றும், கிரி என்னும் சமணர் [நிர்வாணத் துறவி], வலகம்பா மன்னர் தமிழர்களுடன் போரிட்டு தோல்வியடைந்து ஓட்டம் பிடித்த வேளை 'கரிய நிற சிங்களவன்' என்று கூறி நிந்தனை செய்தவர் என்றும், எனவே 'இசுகிரி' சிலவேளை தமிழ் பௌத்த ஆட்சியாளராக இருக்கலாம் என்கிறார்.
 
அதற்கு இன்னும் ஒரு எடுத்து காட்டாக, ஆறாவது பராக்கிரமபாகு மன்னருக்காக 'சபுமல்' என்னும் தமிழ் இளவரசர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி ஆட்சி புரிந்தமையை கூறுகிறார். தற்காலத்தில் ஆங்கில மொழியை கலந்து உரையாடுவதை பெருமைக்குரியதாக கருதுவது போல, அன்றைய காலத்தில் தமிழ் மொழியை கலந்து பேசுவதன் மூலம் தமது உயர் நிலையை வெளிப்படுத்தினர் என்கிறார். இதற்கு சான்றாக, ஐந்நூற்று ஐம்பது ஜாதகம், உம்மங்க ஜாதகம் ஆகிய நூல்களில் சிங்கள அமைப்பில் அமைந்த தமிழ் வசனங்கள் காணப்படுகின்றன என்றும், தமிழ் பகைமைகளை காட்டுகின்ற 'இராஜவலி' யில் கூட முற்று முழுதாக தமிழ் சிங்கள கலப்பு மொழி பாவிக்கப்பட்டுள்ளதை உதாரணம் காட்டலாம் என்கிறார்.
 
இன்னும் ஒரு உதாரணமாக, 'சுபா சித' என்னும் காவியத்தை எழுதிய அகலியவன்ன முகவெடிதுமா அவர்கள், தனது நூலில், 'பிரபல்யம் பெற்ற பழைய முனிவர்களின் வாயால் மனதை கவரும் தமிழ், வடமொழி பாளி ஆகிய மொழிகளைக் கற்காத அறிவு குறைந்த மக்களுக்கு புகழ் பெற்ற நீதி சாஸ்திரம் உள்ள சொற்களின் பொருளினை புரியும் வண்ணம், சிங்கள மொழியில் சுருக்கமாக செய்யுள் வடிவத்தில் [ஐந்தாவது செய்யுளில்] கூறியது இதனாலேயாகும்' என்கிறார் என்று சுட்டி காட்டுகிறார்.
 
பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான “இலங்கைத் தமிழர்வரலாறு - கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV) பின்வருமாறு கூறுகிறார்,
 
“இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர், வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டனர் என்றும் சொல்லக் கூடியகாலம் வந்துள்ளது என்று கூறுகிறார். மற்றும் நாகர், தமிழ் மொழி பேசியவர்கள் என்பதாலும், எந்த வித ஐயப்பாடும் இன்றி, இலங்கையில் தமிழர் குறைந்தது கி மு 500 ஆம் ஆண்டில் இருந்து வாழ்ந்து வந்து இருக்க வேண்டு மென்றாலும், அதன் பின் பண்டைய கேரளா, தமிழ் நாடு போன்றவற்றில் இருந்து வந்த குடியேற்றங்களால் மேலும் பல்கிப் பெருகியது எனலாம். மற்றது பண்டைய கேரளா தமிழ் மொழி பேசும் சேர நாடு என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
இலங்கையை ஆண்ட அரசர்கள் தங்களுக்குள் முரண்பட்டு அரியணைக்குப் போரிட்ட போது அதற்கு வேண்டிய படைகளை தமிழ்நாட்டில் இருந்தே திரட்டி வந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போகவில்லை. இன்று சிங்களவர்கள் மத்தியில் காணப்படும் கரவா, சலாகமுவ, துராவ [Karawa, Salagama, Durawa] போன்ற “சாதிகள்” 16 ஆம் நூற்றாண்டில் கறுவா பட்டை உரிக்கவும் மரமேறவும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கூலித்தொழிலாளர்களே! அதே போல, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில் தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதப் பரவர் அல்லது பரதவர் 20 ஆம் நூற்றாண்டில் இனமாற்றம் செய்யப்பட்டனர். தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். இலங்கையில் சிங்கள – பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு இந்த ஒருமைப்படுத்துதலும் ஒரு காரணம் ஆகும். மேலும் தமிழரின் அன்றைய மனப்பான்மையை, மணிமேகலையின் சில முக்கிய வரிகள் எமக்கு இன்றும் எடுத்து காட்டுகிறது.
 
“ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்
பற்ற மாக்கள் தம்முட னாயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யா தகலுமின்”
(மணிமேகலை,1. விழாவறை காதை - 60-63)
 
யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து பல்வேறு சமயங்களை சாரந்தவர்கள் சொற் போரில் வென்று நிலை நாட்ட ஆங்காங்குள்ள பட்டிமண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; விவாதம் செய்யும்பொழுது மற்றவருடைய சமயக்கருத்தை ஏற்க முடியவில்லை யென்றால் பகைமையும் பூசலும் கொள்ளாமல் விலகிச் செல்லுங்கள் எனவும் கூறுகிறது. அதாவது எம் மதமும் சம்மதம் என்ற பெருந் தன்மையுடன் தமிழர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற தோரணையில், அறிவு பூர்வமாக பட்டி மன்றத்தில் விவாதித்து அதன் பெறுபேறுகளை ஏற்றுக் கொண்டதுடன், எல்லோரையும், எல்லா மத பிரிவினரையும் சமஉரிமை கொடுத்து அணைத்து வாழ்ந்தனர் என்பதை மணிமேகலையில் காண்கிறோம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 31 தொடரும்
327174010_474014024945434_1202399307358762946_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=hsY4oQe6U3sQ7kNvgEVmmkG&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBtTTbYZXQ1cEeHlbdKpICJM0kvpq3FxqjkOJuBdHj2gw&oe=666FAF20 327448575_869996167539725_4632792399039317938_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Y5Z6JslJmKwQ7kNvgH2HWgE&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYChCSfjiVM9i9r06hf2ZgzmzBMBSFms5uicVbI5xEpcNQ&oe=666FBA19 327095582_558957656251279_3079642969990586004_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=8IGirfRsXN8Q7kNvgEKUxT3&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDkhXfRhRmO0o0oAVxpiNSZPoECIbk1hroTJlH8x_KnUA&oe=666FA58E 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 31
 
 
மஹிந்த தேரர் அரசனையும் அவருடைய நாற்பது ஆயிரம் படைகளையும் புத்த மதத்துக்கு மாற்றினார் என்கிறது தீபவம்சம். ஆனால் இது ஓர் சில நாட்களில் ஒரு சொற்பொழிவின் [பிரசங்கம் / sermon] பின் நடைபெறக்கூடிய ஒன்று அல்ல. மத மாற்றம் பொதுவாக வற்புறுத்தல், தூண்டுதல், சர்வாதிகார நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான அதற்கான உழைப்பு தேவை.
 
மஹிந்த தேரர் முதலில், புத்தர் செய்தது போலவே பயத்தை, திகிலை ஏற்படுத்தும் தந்திரங்களை பாவித்தார். அவர் ஒவ்வொரு முறையும் பூக்களை எறியும் பொழுது நிலநடுக்கம் ஏற்பட்டது. வட அல்லது வடமேற்கு இந்தியா நிலநடுக்கம் ஏற்படும் இடங்கள் ஆகும், அந்த நினைவு மரபால் கதையை சோடித்து இருக்கலாம்?
 
மேலும் மஹிந்த தேரர், ஐந்து மாதத்தின் பின், இலங்கையில் புத்தரின் நினைவுச் சின்னம் ஒன்றும் வழிபட இல்லை என்று இந்தியா [ஜம்புதீப] போக விரும்பினார். என்றாலும் தேவநம்பிய தீசன், தான் ஒரு தாது கோபுரம் கட்டுவதாகவும், ஆகவே இங்கேயே வழிபடலாம் என்றும், அதற்கு புத்தரின் உடல் எச்சங்களை அல்லது தாதுப்பொருட்களை தேடும்படி கூறினார்.
 
எனவே மஹிந்த தேரர் சுமணாவை பாடலிபுத்திரத்திற்கு அனுப்பினார். அங்கே அசோகனிடம் அதை பெற்று வரும் படி. அசோகனும் மகிழ்வாக ஒரு அன்னதான கிண்ணம் நிரப்பி அதை வழங்கினார் என்று கூறுகிறது.
 
அசோகன் 84,000 துறவிமடங்கள் புத்தரின் உடல் எச்சங்களை நினைவு சின்னமாக வைத்து இந்தியாவில் காட்டினார் என்று பரவலாக இந்தியா மக்களால் நம்பப்படுகிறது. ஒருவரின் உடல் எச்சங்களை இந்த அளவுக்கு பிரித்து எடுக்கக் கூடிய தொழில் நுட்பம் இன்று கூட கிடையாது. அதன் பிறகு தான் அசோகன் சுமணாவுக்கும் கொடுத்தார் என்பது என்னால் நம்பமுடியவில்லை? அது மட்டும் அல்ல, நாகர்கள் கொண்டு சென்ற புத்தரின் எட்டாவது பகுதி எச்சங்களை, அசோகனால் கண்டு பிடிக்கவோ / பறித்து எடுக்கவோ முடியவில்லை என்றும், ஆனால் துட்டகாமினி அதை நாகர்களின் பாதாள லோகம் [Naga’s underworld] போய் எடுத்து வந்தார் என்று மறைமுகமாக துட்டகாமினியை பெருமைப்படுத்துகிறது.
 
மேலும் இலங்கையிலும் அனுராதபுர காலம் வரை தமிழர்கள் பௌத்தத்துக்கு ஆதரவு கொடுத்து வந்தனர் என்பது தெளிவு. உதாரணமாக கந்தரோடை தலத்தில் அருகருகே அமைந்திருந்த பல தாதுகோபங்கள் தமிழ் பிக்குகள் வாழும் மடங்களாயிருந்து இருக்கலாம் என்பதும், யாழ்பாண தமிழர்கள் மற்றும் பழந்தமிழக மக்களிடையே முதல் சில நூற்றாண்டுகளில் சைவமதம் அல்லது இந்து மதம் மீண்டும் எழுச்சிபெறும் காலத்திற்கு முன்பு வரை தமிழ் வழி மகாயான (உயர்ந்த வழி) பௌத்தம் புகழ்வாய்ந்ததாக செல்வாக்கு செலுத்தி வந்ததற்கு சான்றாக இது அமைகிறது.
 
பொதுவாக, அடித்தளம், அண்டம், தூபி ஆகிய மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டது தாதுகோபம் ஆகும். மற்றது இன்று சிங்களவர்கள் ஆதரிப்பது தேரவாத பௌத்தம் (மூப்பர்களின் வழி) என்பது குறிப்பிடத் தக்கது. இதை ஒரு பழமைவாத தொகுதியாக சிலர் கருதுகின்றனர். இதுவே வடக்கே உள்ள சான்றுகள் சிங்களத்துக்கு சம்பந்தமற்றவை என்பதாகிறது.
 
தேரவாத பௌத்தம் உருவவழிபாட்டை ஏற்காதது. ஆனால் இன்று புத்த மதத்தை பின்பற்றுகிற அல்லது போதிக்கின்ற புத்த துறவிகள், புத்தர் விக்கிரகங்களை எங்கும், எதிலும் சிலவேளை வலுக்கட்டாயமாக, அங்கு வாழும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக, சிலவேளை மக்களின் காணிகளில் அல்லது பிற ஆலய காணிகளில் அத்துமீறி, நிறுவுவதில் கண்ணும் கருத்துமாக மூழ்கிப்போயிருக் கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
மணிமேகலை புத்த மாதத்தில், அறம் என்பது என்ன என்று உரைக்கும் பொழுது:
 
 
"அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையளும் அல்லது
கண்ட தில்லை"
 
 
என்று சுருக்கமாக, எல்லா உயிர்களுக்கும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் பாதுகாப்பாக வாழ இடம் ஆகிய மூன்றினை இன்றியமையாதனவாகக் கூறி, அவற்றின் வைப்பு முறையிலேயே தனித்தனி ஒவ்வொன்றின் இன்றியமையாத் தன்மையினையையும் விளக்கிக் காட்டு கிறார். [“If one should ask what is the supreme form of charity, bear this carefully in mind that it is the maintenance of all living creatures with food and clothing and places to live in safety.”]
 
இவ்வற்றை இன்றைய புத்த பிக்குகளும், பௌத்த அரசுகளும் சரியாக கடைபிடித்தால், கட்டாயம் எங்கும் அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் கூடிய வாழ்க்கை தானாகவே ஏற்படும். அதைத்தான் புத்தரும் உண்மையில் விரும்பினார். தன் சிலைகளை நிறுவி சர்ச்சை, அமைதியின்மை, பேதம் ஏற்படுத்தவல்ல?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 32 தொடரும்
 
329197870_750410953104878_6221384861951889967_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=HGjV_fPQlzcQ7kNvgFhpStw&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCSP15bNFOrrDD_JO8tw0z7QYcvNXQKofE5xRAM6wV-Hg&oe=6674B31E329743352_432534372359326_8021858816264478728_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xm-5dTJLmEkQ7kNvgGfpDST&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDSY-kY3r46UNcdVNpPUiF8TQxKuH8jcypSylUpijU3DA&oe=6674B392
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 32
 
 
வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே, 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவான, இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளை கவர்ந்த ஒரு நாடாகும். மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாகும்.
 
இதனால் தான் பல பயணிகளும், புவியியலாளர்களும், கிருஸ்துக்கு முன்பே இருந்து இலங்கைக்கு வருகை தந்தது காண முடிகிறது. உதாரணமாக, மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் ஒரு தீவை தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களை பட்சிவ்கோணி [Patcvgoni], அதாவது பாளியின் வழித்தோன்றல்கள் [“descendants of the Pali”] என குறிப்பிடுகிறார். தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
 
உதாரணமாக சுமாத்திராவை குறிப்பதாக சிலர் வாதிடுகின்றனர். மாதோட்டமே இலங்கையின் முன்னைய வரலாற்று துறைமுகமாகும். மாதோட்டத்தின் தலைநகராக மாந்தை இருந்தது. கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான பிடோலேமி அல்லது தொலமியின் வரைபடம் [Ptolemy's map], கிருஸ்துக்கு முன், இலங்கையின் சில நகரங்களின் பெயர்களை காட்டுகிறது. உதாரணமாக, அதில் குறிக்கப்பட்ட சில இடங்களின் பெயர்கள் இன்றைய நயினாதீவு, மாந்தை அல்லது மாந்தோட்டை, திருகோணமலை, அனுராதபுரம் [ Nainativu, Manthai, Trincomalee and Anuradhapura,] என அடையாளம் காணக்கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக அவர் மாதோட்டத்தை மாதொட்டு [Modutu] என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளார். அது மட்டுமின்றி மாதொட்டு, [முன்] பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார்.
 
உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட செங்கடல் அல்லது எரித்திரேயன் கடல் செலவு / கடல் வழிப் பயணம் (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற கையேட்டில் தமிழக வட இலங்கை துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இது முத்துக்குளித்தல், மீன் பிடித்தல் ... போன்ற வேலை செய்யும் பரவர் ["Parawa"] என்னும் சமூக குழு, மன்னார் வளைகுடாவின் இந்தியாவின் ஒரு பகுதியான பாண்டியர்களின் இரண்டாவது பெரிய நகரமான கொற்கையில், முத்துக்குளித்தலை விவரிப்பதுடன், பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிடுகிறார் [refers to "Kolkhoi," which was "Korkai"], அதன் இலங்கை பகுதியான மன்னாரை அவர் எபிடோரஸ் [Epidorus] என்று குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல அங்கு பெறப்பட்ட முத்துக்கள் மட்டுமே துளையிடப்பட்டு சந்தைக்கு தயாரிக்கப்பட்டது என்றும் கூறுகிறார் [only the pearls obtained in the fishery at the island of Epidorus (Mannar) are perforated and prepared for the market].
 
எனவே மன்னார் வளைகுடாவின் இரண்டுபக்கமும் பரதவர், பரவர், அல்லது பரதர் கிருஸ்துக்கு முன்னரே இருந்தது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் அந்த இரு பகுதி பரவர்களுக்கும் இடையில் கட்டாயம் தொடர்பு இருந்து இருக்கும் என்பதில் ஐயம் இருக்காது.
 
கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட, கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24 – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக்கொண்டனர்.
 
அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது. சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை [Sandamukha Siva /Chandramukhaseewa / Chandamukha / சந்தமுகன், 44 – 52 AD] அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான் என மகாவம்சத்திலும் கூறப்பட்டு உள்ளது.
 
அதன் பின் அரசன் ரோம் நாட்டிற்கு தூது குழு ஒன்றை அனுப்பினார். அவர்களின் தலைவரை 'ராசியா' என குறிப்பிடுகிறார் [the king despatched to the court of Claudius Caesar an embassy consisting of four persons, the chief of whom the historian Pliny describes as Rachia —“ Legatos qiiattuor misit principe corum Rachia"]. 'ராசியா' வை , ராஜா என்பதன் திரிபாக இருக்கலாம் என்று ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் அவர்களும் [Tennent seems to think that “ Rachia” is a Roman corruption of Rajah ], அது 'இரசையா' வாக இருக்கலாம் என்று "Twentieth Century Impressions Of Ceylon" by Arnold Wright யிலும் (perhaps Rasiah) குறிக்கப்பட்டுள்ளது. 
 
அதே நேரத்தில் சைமன் காசிச்செட்டி அதை ஆராச்சி [தலைவர்] என குறிப்பிடுகிறார். [“ Rachia ” is meant “ Arachchi ” (chieftain)] மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார்.[five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன் ?
 
இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 33 தொடரும்
330818183_848210086279589_1669604503637326150_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=QgHB6MVy5pwQ7kNvgEsuCPv&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYB1OUX5ZMDytKR6jPbVQvRFc1CtnnieOmBu7-o0QdHpeQ&oe=66761232 330827444_1233990757538696_640577843133164528_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=45jdme8jXgQQ7kNvgFNu9wL&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAg87ijd9VhhqyksqxFTeEivoT-nNLvy6-Lvrmh-f0NAg&oe=667612B4  330615637_597549818375185_2019744634522308152_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-bi5EfkMdocQ7kNvgG1yDKX&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAZ5LEN47oBUVjSvv1buUhXPjcJigth_PEPMzCPYiPxYg&oe=667603D5 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 33
 
 
கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த மூத்த பிளினி இலங்கையில் குறிப்பிட்ட பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக, பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon]
 
மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன.
 
உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.
 
"பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு." (குறள்-1015)
 
எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி 494 - 498
 
"நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி,
அன்பும் அறனும் ஒழியாது காத்து,
பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த"
 
என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த[சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல், இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது , மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது.
 
ஆனால், மாகாவம்சத்தில், துட்டகாமினியை எடுத்துக் கொண்டால், தனது ஈட்டியில், புத்தரின் உடல் எச்சத்தை [relic] போட்டு சண்டைக்கு போனான் என்கிறது. எப்படி புத்தரின் எச்சத்தை பெற்றான் என்பது இன்னும் ஒரு ஆச்சரியமான கதை. ஆனால், அன்பே உலகம் என அமைதி விரும்பும் புத்தர் , எப்படி துட்டகாமினிக்கு அதன் மூலம் நீதி தவறாத எல்லாளனை கொல்ல உதவினார் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது.
 
அப்படி என்றால் எப்படியான ஞானம் புத்தருக்கு கிடைத்தது ? அன்பே வடிவான புத்தருக்கு இது அவமதிப்பு இல்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், தமிழ் அரசன் தித்தம்பாவை [Damila Titthamba], நாலு மாதம் ஆகியும் வெல்ல முடியாத சந்தர்ப்பத்தில், தந்திரமான முறையில், தான் தன் தாயை திருமணம் செய்ய தருகிறேன் என தன் தாயை தன்னுடன் யுத்த இடத்தில் வைத்திருந்து ஏமாற்றி அவனை கொல்லுகிறான் என்கிறது.
 
இது வெளிப்படையாக கூறாவிட்டாலும், துணை விளக்கம் [it is stated so in the Tika, the commentary, as per the foot note in the Geiger’s translation.] கொடுக்கப் பட்டுள்ளது. மகாவம்சம் எழுதியவர் எந்த நிலைக்கும் , உதாரணமாக தாயையே எதிரிக்கு கொடுக்கும் அளவுக்கு தயாராக, தாய் இனத்தையே அவமதிக்கும் அளவுக்கு தள்ள பட்டிருப்பது, பத்தினி தெய்வம் வணக்கும் இலங்கையின் காப்பியம் ஒன்றில் எழுதப்பட்டிருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 34 தொடரும்
332465475_2775182299283155_6441562326541233585_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=eIDLLMyMn7gQ7kNvgFmZcqe&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCYvHUPpyOAPIjExdnwfQx3nkUAfLsSu9VKezwn6NDYog&oe=6676230F 332165441_6008060529231628_7629663006569007488_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=FFAtZd-EjPwQ7kNvgHBUXyZ&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBYiIzktpUYQPCvdbDmez0yex5sLFRssvGARKGFncyw-Q&oe=66761FAF 332260929_639392134659087_1857539789181492067_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=k_9gmlQ4yn0Q7kNvgGDT3r9&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBPIJ4vjAZAJ2hxdymD1S52Erb-0U9e9weSj73WRIVZQw&oe=6675F945
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 34
 
 
யாழ்ப்பாண அரசைப்பற்றிய அரிய தகவல் ஒன்றை 8ஆம் நூற்றாண்டு அரபுப் பயணி அல் மசுடி/ மாசுடி [கி பி 896–956] என்பவர் தன் பயணக் குறிப்பில் எமக்கு தருகிறார். இவர் யாழ்ப்பாண துறைமுகத்தை கி பி 912 இல் அடைந்து, அங்கு தாம் கண்டதை விபரிக்கிறார்.[Al-Masudi, the great Mohammedan traveler, reached the Port of Jaffna in 912 A D] அவர் அங்கு ஒரு சைவ [இந்து] அரசனின் இறுதி சடங்கு ஒன்று பார்த்ததாகவும், அங்கு அரசனின் இறந்த உடல் உயரம் குறைந்த ஒரு தேர் மீது வைக்கப்பட்டு, அது வீதியால் இழுக்கப் பட்டது.
 
அப்பொழுது ஒரு பெண் தரையை பெருக்கி, இறந்த ராஜாவின் தலை முடிக்கு தூசி வீசி எறிந்தாள், அத்துடன் அங்கு கூடி இருந்தவர்கள் வாழ்க்கையின் பயனற்ற தன்மையை உணர்ச்சி பொங்கக் கூக்குரலிட்டதுடன், கடவுளை வணங்கி புகழ்ந்து பாடினார்கள் என்றும், உடல் இறுதி சடங்கில் சிதையில் வைக்கும் முன்பு, உடல் முழுவதும் சந்தனம் பூசி, அரசனின் உடல் நாலு பகுதிகளாக வாளால் வெட்டப்பட்டது என்றும் பதிவு செய்து உள்ளார். [Masudi states that the King was placed on a low chariot and while it was being drawn, a woman swept the ground and threw dust on the hair of the dead king, exclaiming the futility of life and extolling the worship of God. Before the body was put on the funeral pyre, it was smeared with sandalwood and cut into four pieces with a sword].
 
இறந்தவர்களுக்காக வருந்தி பாடும் பாடலே ஒப்பாரி ஆகும். மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது எனலாம். இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறியவும் இது உதவுகிறது. இந்த ஒப்பாரிப்பாடலை, “கையறு நிலை “ என்று சங்க இலக்கியங்கள் கூறுவதையும் காணலாம். உதாரணமாக,
 
 
“ வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின்
கற்றோர் உரைப்பது கையறு நிலையே “
 
 
என சிற்றிலக்கியமான [சிறு பிரபந்தம்], பன்னிரு பாட்டியல் கூறுகிறது. அப்படி யாழ்ப்பாண அரசன் ஒருவன் விண்ணகம் அடைந்த நிகழ்வையே இங்கு அல் மசுடி விவரிப்பதை காண்கிறோம்.
 
போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லை (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்கு செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் என புறநானுறு 93, மிக விரிவாக தமிழரின், குறிப்பாக தமிழ் மன்னர்களின் அன்றைய பண்பாட்டை எடுத்து கூறுகிறது.
 
 
"அவர் தீது மருங்கு அறுமார்,
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி,
“மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க” என
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ,"
[புறநானுறு 93]
 
 
இதைத் தான் அல் மசுடி கண்டார் என்பதை நாம் இலகுவாக ஊகிக்கலாம், மற்றது அவர் தலைமுடிக்கு தூசி வீசி எறிந்தனர் என்பது கட்டாயம் திருநீறை குறித்து இருக்கலாம்?அப்படியே, கூக்குரலிட்டனர் என்பது ஒப்பாரிப்பாட்டாக இருக்கலாம் ?
 
அது இன்னும் தொடரும் தமிழர் பண்பாடாகும். எனவே இது கட்டாயம் ஒரு தமிழ் சைவ அரசன் என்பது மிகவும் தெளிவாகிறது. அத்துடன் எட்டாம் நூற்றாண்டிலும் யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி நடந்தது என்பது வரலாற்று சான்றாக இங்கு சாட்சிகளுடன் பதியப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 35 தொடரும்
 
334117797_194398976520826_3507144659908025235_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=bocjtRCV1_kQ7kNvgHgy7WN&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYB4XQWej4p1JTu7daN8wMHc3WVSUWCcP66j22jrZTJoYQ&oe=66771746 333806108_750101206668011_3391431072070237385_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=0to1buwvijcQ7kNvgHQy55X&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYA1wrz0lF2LNPis0yuKWP65ceMFnCIaUxat30ajHmvfTg&oe=6677220C 334247378_229082406133505_6335757908792387190_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zUUsBSyoj7gQ7kNvgH3dCsl&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCDrLIz3FblcWD5rhY_6RGOTpK9N0_3rV3CpciRxdu1sQ&oe=667715C0 334165369_240981814934022_3157536317509733981_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rtzygKC_sF4Q7kNvgGOiwnx&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDuqWdUbsrUS5VvB-AAwLIGW7e0LX1wQUCC8XGFrxU5vA&oe=66772C44
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 35
 
 
இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ (Marco Polo) என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தை சேர்ந்த வர்த்தக பயணி ஆவார். இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் தாம் பயணித்த பாதையில் வட இலங்கை, தென் இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தார். மேலும் பல சுவாரசியமான பல அரிய தகவல்கள் மார்க்கோ போலோவின் குறிப்புகளில் பரவிக் கிடக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
அந்தமானில் இருந்து புறப்பட்டு, ஜைலன் (சிலோன்-இலங்கை) / SEILAN] என்ற இலங்கை தீவின் வட பகுதியை அடைந்தான். அங்கு தமிழ் அரசன் செண்டெமைன் [SENDEMAIN / probably a corruption of the Tamil word ‘Sandamann’ or யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சந்திரபானுவின் மகன் சாவகன்மைந்தன்] அரசாட்சி செய்தான்.
 
அங்குள்ள மக்கள் சிலைகளை வணங்கினர். அது எந்த ஒரு நட்டையும் சாராத சுதந்திர நாடு. ஆடவரும் பெண்டீரும் ஒரே ஒரு துணியை உடலில் சுற்றி இருப்பார்கள். அரிசி மற்றும் எள்ளு அங்கு விளைகின்றன பால், அரிசி, இறைச்சி இவர்களின் உணவு. எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். [பனை] மரங்களில் இருந்து கள்ளு எடுக்கிறார்கள் என்கிறார்.
 
இவைகள் எல்லாம் தமிழும் தமிழரும், சைவமும் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்ததை எடுத்து காட்டுகின்றன.
 
குறைந்தது பதினெட்டிற்கு மேற்படட பயணிகள், உதாரணமாக ஒரு ரோமன், ஒரு கிரேக்கம், இரண்டு சீனர்கள், நான்கு இத்தாலியர்கள். ஒரு வடமேற்கு மொராக்கோவில் உள்ள ஒரு நகரமான டன்கிரில் வசித்த சோனகர், ஒரு போர்த்துகீசிய சிப்பாய்-வரலாற்றாசிரியர், இரண்டு டச்சுக்காரர்கள், ஒரு ஜெர்மன், ஒரு பிரஞ்சு கோமகன், ஒரு டச்சு கடற் படை அதிகாரி, ஐந்து பிரித்தானியர்கள் [a Roman, a Greek, two Chinese, four Italians, a Moor from Tangier, a Portuguese soldier-historian, two Dutchmen , a German, a French Count, a Dutch admiral and five Britons.] ரோமன் காலத்தில் இருந்து பிரிட்டிஷ் காலம் வரை இலங்கைக்கு வந்து, இலங்கையைப் பற்றி தமது குறிப்புகளில் எழுதியுள்ளார்கள். அவர்களில் சிலரை நாம் இங்கு சுட்டிக்காட்டி உள்ளோம்.
 
முதலாவது கண்டியின் அதிகாரி, பிலிமத்தலாவ [The First Adikar of Kandy, Pilimatalava,], பிரிட்டிஷ் காலனி அரசின் பிடியில் இருந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வடக்குக்கு, தனது விசுவாசமான குடிமக்களுடன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பல்லக்கில் அனுராதபுரத்தின் ஊடாக வன்னிக்கு காவிச் சென்றனர். அவர் மிகவும் சோர்வுற்று களைத்துப்போய் இருந்தார். என்றாலும் எல்லாளனின் நினைவு தூபி வந்ததும், பல்லக்கில் இருந்து இறங்கி, நீண்ட தூரம் நடந்து போனார் [He was exhausted and tired, but he got down where he thought that the Elara’s memorial was and started walking for a long distance.] அவரின் விசுவாசமான குடிமக்கள், நினைவு தூபியை கடந்து நீண்ட தூரம் வந்துவிட்டோம் என்று சொல்லியும், இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தே, பல்லக்கில் ஏறினார் என்பது வரலாறு.
 
அந்த பெருமைமிக்க தமிழ் அரசன் தான் எல்லாளன்! நான் இந்த நேரத்தில், இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும். தீபவம்சம், விகாரமகாதேவியின் எந்த கோரமான ஆசைகளையும் [the gory desires of Vihara Mahadevi] சொல்லவில்லை, ஆக மகாவம்சமும் அதன் பின் எழுதப்பட்ட காப்பியங்களும் தான் சொல்லுகின்றன.
 
இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும் இலங்கையின் வட-கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும், ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை / வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை. எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], இந்திய-ஆரிய இனத்தவர்களின் இடப் பெயர்ச்சிக்கு முன்பு, திராவிடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதுமே பரந்து இருந் தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள். [Although in modern times speakers of the various Dravidian languages have mainly occupied the southern portion of India & north & east of Srilanka, nothing definite is known about the ancient domain of the Dravidian parent speech. It is, however, a well-established and well-supported hypothesis that Dravidian speakers must have been widespread throughout the Indian subcontinent before a series of Indo-Aryan migrations].
 
மேல் கூறப்பட்ட பயணிகளின் குறிப்புகளுடனும், புத்தரின் மூன்று இலங்கை வருகையை சித்தரிக்கும் கதைகளுடனும், இதையும் [மேலே கூறியவற்றையும்] நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கருதுகிறேன்.
 
முதலியார் செ இராசநாயகம் 'எலு' என்று இக்காலத்தில் பிழையாக வழங்கப் படும் 'ஈழு' என்னும் நிறைவற்ற மொழியை அங்கு வசித்த நாகரும் இயக்கரும் பேசியதால், இலங்கைக்கு ஈழம், ஈழமண்டலம் போன்ற பெயர்கள் உண்டாயிற்று என்கிறார்.
 
உதாரணமாக, பட்டினப் பாலை "ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும் " என்ற வரியையும், பூநகரியில் கண்டு பிடிக்கப்படட இரண்டு மட்பாண்ட பிராமி சாசனத்தின் முதலாவதின் முதல் இரண்டு எழுத்தும் 'ஈழ' என்றும் இரண்டாவது சாசனம் 'ஈலா' என்றும் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார்.
 
மேலும் இயக்கர், நாகர் இனத்தவர்கள் திராவிடர்கள் என்பது, அதிகமாக, 1] ஈமச் சின்னங்கள், 2] ஆதிப் பிராமிக் கல்வெட்டுகள், 3] ஆதி மக்களது சமய வழிபாடு போன்றவை எடுத்துக் காட்டுகின்றன என கலாநிதி க குணராசா அவர்கள் தனது 'ஈழத்தவர் வரலாறு' என்ற நூலில் கூறுகிறார்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 36 தொடரும்
330467193_166038742902123_8304821991124283146_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=B0n_x71qfocQ7kNvgGt-Fjw&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCYPVlvbsPRW4H3Y_pBgG3l4yLSIuPNtu60ssXr_v0zIg&oe=66772521 No photo description available.No photo description available. 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்'] / பகுதி 36
 
 
இலங்கையின் பழங்குடியினர் எனக்கருதப்படும் வேடர் [வெத்தா எனும் வேடுவ இனத்தவர்] சமூகத்தினர் இலங்கையின் பல பாகங்களில் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆரியரின் வருகைக்கு முன்னரே இலங்கையின் ஆதிக்காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மை கொண்டவர்கள் என்றும் வரலாற்று சான்றுகள் உள்ளன.
 
இலங்கையின் வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மற்றும் தமிழ் இனத்தவருடன் கலந்து தன் அன்றாட வாழ்வியலை கடத்தி வருகின்றனர். மற்றும் நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபின் வழி வந்தவர்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இவர்களை சிங்கள மொழியில் 'வெத்தா' என்று அழைக்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" Wanniyala-Aetto என்று குறிப்பிட்டு கொள்கின்றனர். தங்கள் தெய்வங்களுக்கு காட்டில் கிடைக்கும் காய்கள், கனிகள், தூப வகைகள், தீபங்கள், பூக்கள் என்பவற்றை பயன்படுத்தி வருகின்றனர். தமது பாரம்பரிய ஆயுதங்களான ஈட்டி, வில், அம்பு முதலியவற்றுக்கு வழிபாடுகளின் போது மரியாதையை செலுத்தி வருகின்றனர். இவர்களின் சடங்குகளின் போது மூதாதையர்களுக்கு முதல் மரியாதை செய்யப்பட்ட பின்னைரே தெய்வங்களை அழைத்து வழிபடுகின்றனர்.
 
இவர்களின் நம்பிக்கையில் காகம் கரைதல், கிளி தலை கீழாக தொங்குதல், பறவைகள் ஒலியெழுப்புதல், தும்மல், நாய்கள் பதறி போய் குரைத்தல், மனைவியின் பொட்டு அழித்தல் போன்ற சம்பவங்கள் நிகழும் போது தாம் நினைத்தவைகள் நடைபெறாது என இவர்களால் நம்பப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
 
மகாவம்சம் குறிப்பிடுகின்ற விஜயனின் கதையும் மற்றும் விஜயனின் தம்பி சுமித்தவின் [Sumitta] இளையகுமாரன் பண்டு வாச தேவனின் [Panduwasa Dewa] கதையும் ஐதிகக் கதைகளாகவே தெரிகிறது. முதலாவதாக விஜயனின் தாய் தந்தையரின் பிறப்பும் மற்றும் பல நிகழ்வுகளும் எந்த காரணங்களையும் கொண்டு அறிவியல் ரீதியாக எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இதைப்பற்றி முன்பே விரிவாக கூறிவிட்டோம்.
 
இரண்டாவதாக, பண்டுவாச தேவனைப் பற்றி பார்க்கும் பொழுது, பண்டு வாசதேவ இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் முதலாவது அரச மரபைத் தோற்று வித்தவனும் முதல் அரசனுமான கலிங்க இளவரசன் விஜயனின் உடன் பிறந்தான் மகன் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. ஆனால் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை பண்டுவாசன் [Paṇḍuvāsa] என்று குறிப்பிடுவதைக் கொண்டு இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தான் என்றும் வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர்.
 
உதாரணமாக, பாளி அல்லது பிராகிருதம் மொழியில் பண்டு என்பது பாண்டியனை குறிக்கிறது, வாச என்பது வாசி யின் திரிப்பாகும், எனவே பாண்டியவாசி என்றாகிறது, அதாவது பாண்டியன் ஆகிறது [Deepavamsa calls King Pandu Vasudeva (504-474 BC) as Pandu Vasa (a Pali or Prakrit equivalent of Pandya Vasa meaning one from the Pandyan country i.e., a Pandya by his nationality].
 
விஜயனின் மனைவி ஒரு பாண்டிய இளவரசி என்பதால், மேலும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால், பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர். இது மேலும் ஒரு வலுவான காரணத்தால் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. உதாரணமாக, விஜயன் தனது பட்டத்து ராணியை, தான் பிறந்த கலிங்கத்தில் இருந்து, எதோ பல காரணங்களால் தேடவில்லை, அவன் தென் இந்தியாவில் அமைந்த பாண்டிய நாட்டிலேயே தேடினான். ஆகவே இப்ப அரச வாரிசை எப்படி கலிங்கத்தில், தன் அரச குடும்பத்தில் தேடுவான்?
 
கொஞ்சம் நடு நிலையாக சிந்தியுங்கள். எந்த காரணத்திற்க்காக தனது பட்டத்து மனைவியை கலிங்கத்தில் எடுக்க வில்லையோ, அதே காரணம் இப்பவும் அவனுக்கு இருக்கும். எனவே கட்டாயம் தன் மனைவியின் பாண்டிய அரச குடும்பத்தில் இருந்தே எடுத்திருப்பான், இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதனால் தான் பண்டுவாசனின் வாரிசுகள் கூட அபயன் [Abhaya /பயமில்லாதவன்], பண்டு அபயன் [காபயன்] [Pandukabhaya], மூத்த சிவன், மகா சிவன் இப்படியான பெயர்களை காண்கின்றோம்.
 
இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால் , அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். எனவே பாண்டிய நாட்டுடன் நல்ல நட்பு தொடர்பு இருந்ததிற்கு இதுவே காரணம். இதனால், பாண்டிய நாட்டின் எதிரியான சோழ நாடு அனுராதபுர அரசர்களுக்கும் எதிரியாகவே இருந்தது எனலாம். அதுவே மஹாநாம தேரர் சோழருக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மைக்கு [to be Chola phobic] ஒரு காரணமாகும் என்று நம்புகிறேன்.
 
மற்றது மகாவம்சத்தில் காணப்படும் தமிழருக்கு எதிரான இனத்துவேசத்திற்கு முக்கிய காரணியாக விளங்கியவர், கி.பி 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானியான, காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் [the great commentator Buddhaghosa] ஆவார். இளமையில் இவர் வடமொழி வேதங்களை நன்கு கற்று பிறகு பௌத்த மதத்திற்கு மாறியதால், பாளி மொழியில் நன்கு புலமையும் பெற்றிருந்தார். இலங்கையை மகாநாமன் (கி.பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த புத்தகோசர் “விசுத்தி மார்க்கம்” என்ற பௌத்தமத நூலை பாளி மொழியில் இயற்றினார். மேலும் இலங்கையில் இருந்த பல பௌத்த நூல்களை இவர் பாளி மொழியில் மொழிபெயர்த்தபின், அந்த மூலப்பிரதிகளை எரித்துவிட்டார். காரணம் இவரின் அசல் மொழி கருத்து எண்ணம் ஆகும் [He burnt the originals after translating into Pali, introducing the Mula Bhasha [मूल भाषा {mul bhaSha} = ORIGINAL LANGUAGE] concept.]. இதுவே மஹாநாம வுக்கு கொடுத்த உத்வேகமாக இருக்கலாம்?
 
மகாபாரதத்தில் விதுர நீதி என்ற ஒரு பகுதி உள்ளது. அது " நீ எப்பவும் உண்மை சொல்ல வேண்டும், ஆனால் சொல்லும் உண்மை தீங்கு விளைவிக்கும் என்றால், அதை சொல்லாதே, பொய் உதவும் என்றால், பொய்யை உண்மை போல் சொல்லிவிடு" என்கிறது. [There is a verse in Mahabharata.YOU SHOULD ALWAYS TELL THE TRUTH.IF TELLING TRUTH WOULD HARM THE PEOPLE THEN DON’T TELL THAT.IF TELLING A LIE WILL HELP PEOPLE THEN TELL THAT LIE AS A TRUTH.That is from Vidura niti of Mahabharata].
 
இதைத்தான் மகாவம்சத்தின் ஆசிரியர் தம் இனத்திற்கு என்றும் வரலாறு சாதகமாக இருக்க வேண்டும் என்பதால் மாற்றி சொல்லி இருப்பார் என்றும் எண்ணுகிறேன்.
 
உதாரணமாக இன்று குருந்தூர் மலை விடயத்தை எடுத்துக்கொண்டால், அங்கு காணப்படும் பௌத்த எச்சங்கள், அன்று வாழ்ந்த தமிழ் பௌத்தர்களினதாக இருந்தும், அதை சிங்களவர்கள் வாழ்ந்த இடமாக வரலாற்றை மாற்ற முற்படுவதுடன், மற்றும் சிங்கள மக்கள் வசிக்காத ஒரு இடத்தில் பௌத்தம் சார்ந்த ஒரு அழிபாடுகள் கண்டுபிடிக்கப்படுமானால் அவற்றை மீளக்கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைப்பதை ஏற்பதாக தொல்லியல் சட்டம் கூறவில்லை என்பதையும் மறந்து, நீதிமன்ற உத்தரவையும் மீறி, பௌத்த பிக்குகளும், அரசாங்கமும் பௌத்த விகாரை ஒன்று அங்கு கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட இருப்பது தெளிவாக அவர்களின் நோக்கத்தையும் மனநிலையையும் காட்டுகிறது.
 
அதுமட்டும் அல்ல, அநுராதபுரத்தில் 20 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களின் அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் சைவ ஆலயங்கள், திராவிட கலை மரபில் கட்டப்பட்டவை. அந்த ஆலயங்களின் அழிபாடுகள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாகக் கருத்திற்கொண்டு பார்க்கப்பட்டதே தவிர, அவை மீள அமைக்கப்பட்டு வழிபாட்டுக்குரிய ஆலயங்களாக அமைக்கப்படவில்லை. அவற்றில் ஒரு காளிகோவிலைத் தவிர ஏனையவை எங்கிருந்தன என்பது கூட அடையாளங்காண முடியாதளவுக்கு அதனுடைய நிலைமை காணப்படுகின்றது என்பது கவலைக்குரிய விடயமே!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி 37 தொடரும்  
329966531_9400072123351366_6275420279751507948_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=cUO6HLeFhy0Q7kNvgH_p6w4&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAWLVQ-K0GDUPhKKDuG-GIzAeai9VxSaPir55rt8Ti6TA&oe=667882F9 335324966_591426066370052_3333980355827218737_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=bG1CAj1lTh0Q7kNvgFUHIat&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDbT4Qe0x3bARQzCs86mBqUaoOUKkq-H6tbLk1gUQEZqg&oe=66787578
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 37
 
 
மகாவம்ச ஆசிரியர், இலங்கையில் புத்த சமயத்திற்கு ஒரு கவர்ச்சியை கொடுக்க, புத்தர் தனது கொள்கையை பரப்ப, தேர்ந்து எடுத்த மக்களாக சிங்களவர்களையும், தேர்ந்து எடுத்த நாடாக இலங்கையையும் தனது கதையில் வெளிக் காட்டி, அதற்கு மகுடம் வைத்தாற் போல், விஜயனினதும் அவனது தோழர்களினதும் இலங்கை வருகை நாளை செயற்கையாக, புத்தரின் மரண நாளுடன் ஒத்து போக செய்தது வெளிப்படையாக எந்த நடுநிலையாளருக்கும் கட்டாயம் தெரியும் [The author of Mahavamsa, artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of Buddha in 543 BCE.].
 
உதாரணமாக, இந்த தந்திரத்தால், விஜயனிற்கு பிறகு ஆட்சி அமைத்த சில அரசர்களின் ஆட்சி காலத்தை நீடித்தது தெரிய வருகிறது, குறிப்பாக தந்தையும் மகனுமாக '130' ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என குறிப்பிடுகிறார் ?. மன்னன் பண்டு அபயன் 70 ஆண்டுகளும் அவனுடைய மரணத்துக்குப் பிறகு அவனது மகன் மூத்த சிவன் என்பவன் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்கிறது. [King Pandukhabaya, nephew of Abhayan was supposed to have ruled from 377 BC – 307 BC that is 70 years. Muttasivan, son of Pandukhabaya ruled for 60 years from BC 307 to BC 247],
 
இதில் இன்னும் ஒரு விசேடம் என்னவென்றால், அறிவிற் சிறந்த அரசன் பாண்டுஅபயன் முப்பத்து ஏழு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் என்றும் அதன் பின்பு தான் எழுபது வருடகாலம் சீரும், செல்வமும் மிக்க அனுராதபுரத்திலிருந்து அவனுடைய அரசாட்சியை ஆண்டு வந்தான் என்கிறது மகாவம்சம். அதாவது அவன் 107 ஆண்டுகள் வாழ்ந்துள்ளான்.
 
அதேவேளை, முத்தசிவனின் [மூத்தசிவனின்] பிறப்பு பற்றி எந்த செய்தியும் அங்கு இல்லை. ஆனால், பாண்டுஅபயன் தனது மனைவி, சுவன்னபலியை [Suvannapali] பதினாருக்கும் பதினெட்டு வயதுக்கும் இடையில் சந்தித்து உள்ளான். ஆகவே மூத்த மகன் அதிகமாக இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருக்கலாம் என்று நாம் ஊகித்தால், முத்த சிவன் குறைந்தது அகவை 137 க்கும் 147 க்கும் இடையில் [between 107 - 30 + 60 & 107 - 20 + 60] வாழ்ந்திருப்பான்.
 
அதேபோல முத்தசிவவின் மகன் திஸ்ஸ முத்தசிவவின் அகவை இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருந்தால், திஸ்ஸ [தேவநம்பிய திசா] குறைந்தது அகவை 147 க்கும் 157 க்கும் இடையில் [between 137 - 30 + 40 & 137 - 20 + 40] வாழ்ந்திருப்பான். இவனுக்கு பிறகு இவனின் தம்பி உத்திய 10 ஆண்டுகள், அடுத்த தம்பி மகாசிவ 10 ஆண்டுகள், அடுத்த தம்பி சூரதிச்ச 10 ஆண்டுகள், அதை தொடர்ந்து சேனனும் குத்திகனும் 22 ஆண்டுகள், அதன் பின் கடைசிக்கு முதல் தம்பி அசேல முடி சூடுகிறான். அசேலக்கும் திஸ்ஸவுக்கும் இருபது ஆண்டு வித்தியாசம் என்று ஊகம் செய்தால், குறைந்தது 179 அகவையில் [147 - 20 + 10 + 10 + 10 + 22 = 179] அசேல [Asela] முடி சூடுகிறான். அதன் பின் 10 ஆண்டுகள் ஆள்கிறான். எனவே குறைந்தது 189 ஆண்டுகள் வாழ்ந்து உள்ளான். கௌதம புத்தரே தனது எண்பதாவது அகவையில் இறந்தது குறிப்பிடத் தக்கது.
 
இவை தான் நம்ப முடியாத செய்திகள் ஆகும்.
 
மேலும் மகாவம்சம் 1000 ஆண்டுகளிற்கு பின் எழுத பட்ட கதை ஆகும். இதுவும் நம்ப முடியாத செய்திகளுக்கு ஒரு காரணமாகும்.
 
யார் வரலாற்றை வைத்திருக்கிறார்களோ, அவர்கள் நாட்டை வைத்துள்ளார்கள், ஆட்சி செய்வதற்கான உரிமையை வைத்துள்ளார்கள், மற்றும் இருப்பதற்கான உரிமையையும் வைத்துள்ளார்கள் என்கிறார் ஹெல்மண் -ராஜநாயகம் [“Whoever possesses the history possesses the country, possesses the right to rule, the right to exist” - Hellmann-Rajanayagam].
 
அதனாலேயே மகாநாம தேரர் இவ்வாறு குழப்பி உள்ளார் என்று எண்ணுகிறேன்.
 
இதை இன்றும் இலங்கைவாழ் பல புத்த தேரர்களிடமும், இலங்கை பெரும்பான்மை அரசியல் வாதிகளிடமும், தொல்பொருள் திணைக்களத்திடமும் இன்னும் காணலாம்? அரசபடைகளின் உதவியுடன் நடக்கும் தில்லுமுல்லுகள் இதற்கு சான்று பகிர்கின்றன, உதாரணமாக, அண்மையில் மார்ச் 2023 இல் பறிபோன நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை , யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் இருந்த ஆதிசிவன் ஆலயம், பழமைமிகு கிருஸ்ணன் கோயில், சடையம்மா மடம், கதிர்காமத்துக்கு யாத்திரை ஆரம்பிக்கும் முருகன் கோயில் என்பன இடித்தழிக்கப்பட்டு, அங்கு மாளிகை கட்டப்பட்டது, முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம், அச்சுவேலியில் முளைத்த அதிசய புத்தர், ஊர் மக்களின் எதிர்ப்பால் 'இராணுவத்தினரால்' அகற்றப்பட்டது மற்றும் இந்துக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக போற்றப்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிகள் தற்பொழுது பௌத்த மயமாக்கல் பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது எல்லாம் மகாநாம தேரரின் திட்டம் இன்னும் இன்றுவரை தொடர்வதை எடுத்து காட்டுகிறது.
 
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையில், ஏழு அரசர்கள் 107 க்கும் குறைந்தது 189 க்கும் இடையில் நீண்ட வாழ்வு வாழ்ந்து உள்ளார்கள் ? இது ஒன்றே மகாவம்சத்தை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதற்கு ஒரு உதாரணம் ஆகும்.
 
அது மட்டும் அல்ல, பண்டுவாசுதேவனில் இருந்து துட்டகாமினி வரை, அவர்கள் ஆண்ட காலங்கள் 30, 20, 70, 60, 40, 10, 10, 10, 10 என நேர்த்தியான பத்தின் பெருக்குங்கள் ஆகும், இந்த பரம்பரையில் வராத சேனன் குத்திகன் தவிர. [இவர்கள் 22 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.]
 
இந்த உண்மையின் அடிப்படையில் நோக்கும் பொழுது, இந்த பரம்பரை முழுவதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது? அது மட்டும் அல்ல, எல்லாளன் கூட, மனுநீதி சோழன் மற்றும் சிபி சக்ரவர்த்தி போன்றோர்களின் கதையின் தழுவல் போலவே தெரிகிறது. துட்டகாமினி கூட, இறந்து கொண்டு இருந்த ஒரு புத்த பிக்குவின் அவதாரம் என்கிறது [Dutthagamani who killed Elara must also be an invented person. He is the re-incaranation of a dying monk as per the Mahavamsa,]
 
அதாவது விஹார மகாதேவியின் வயிறில் நேரடியாக அந்த பிக்கு கருவாக அவதரித்தார் என்கிறது. எனவே உயிரியல் தொடர்பு துட்டகாமினிக்கு, தந்தை காவந்தீசனிடம் இல்லை என்றாகிறது. இது கர்ணன் குந்திதேவிக்கு பிறந்ததை நினைவூட்டுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் நான் அவரை இனவெறியாளர் என்றோ அல்லது அவர் தனது கவிதை இலக்கியமான மகாவம்சத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் இது [புத்த சமய] தெய்வ பக்தர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்வுகளுக்காக தொகுக்கப்பட்டது [‘serene joy and emotion of the pious’] என்று வெளிப்படையாக எழுதி இனவெறி கோட்பாட்டை விதைத்தார் என்றோ நான் குற்றம் சாட்ட வில்லை.
 
ஏன் என்றால், அந்த காலப்பகுதியில் புத்த சமயத்திற்கு இந்து, [சைவ] மதத்தில் இருந்து அச்சுறுத்தல்கள் கூடி, புத்த மதத்தின் செல்வாக்கு தென் இந்தியா உட்பட இந்தியா முழுவதிலும் சரிந்து போய்க்கொண்டு இருந்ததுடன், அதன் தாக்கம் இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியிலும் தலை தூக்கி இருந்தது. எனவே மகாநாம தேரருக்கு ஒரு தேவை இருந்தது, எப்படியும் இந்தியாவில் அழிந்து கொண்டு இருக்கும் புத்த மதத்தை இலங்கையிலாவது நிலைநாட்ட வேண்டும் என்று. அதைத்தான் அவர் செய்தார் என்று நம்புகிறேன்.
 
மற்றது எனது இந்த தொடர் கட்டுரை இலங்கை வரலாற்றின் ஆழமான பகுப்பாய்வு அல்ல. அதை கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். எனவே கட்டுக்கதைகள் மற்றும் தவறுகளை முன்னிலைப்படுத்தும் ஒரு கண்ணோட்டம் மட்டுமே என் கட்டுரையாகும்.
 
மகான் புத்தருடைய பொன்மொழிகள் அடங்கிய தம்மபதம் [Dhammapada] என்ற நூலில், உண்மையை உண்மை என்று அறிபவரும், அதேபோல பொய்யை பொய் என்று அறிபவரும் உண்மையை உணர்கிறார் [they who know truth as truth and untruth as untruth arrive at truth] என்ற அவரின் கூற்றை காண்கிறோம்.
 
அதைத்தான் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 38 தொடரும்
337069423_230834639339189_1242780244266619200_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=cfX2_cx2gAoQ7kNvgE2pCzr&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDPjdH28VacYkM9oPfHk82Dz6ryUf4P0rcIiE39PXQpkQ&oe=6679E4F8 337259613_185925534153060_8569848035842457863_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Bjp18-SB1HAQ7kNvgGEjKkl&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBlqxGvrnFHeAZNsIeMktQcw59B4b8VrcBJBTN-BOn6NQ&oe=667A0204 337008686_719433559920661_3626393356623071746_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=eADwU0FEx-QQ7kNvgEpUNTW&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBAJs_rg1tAvpKKd24cjZ5EfzukEqo61hd_eSawOSryBg&oe=6679FF25 337243098_756725062509024_4186538469572655775_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PeGbw1CK-9oQ7kNvgG13Axb&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCbrWonuMgza-roLyURKOTXVWP68EMTRtBmRi8GfKbZqg&oe=6679ED0B
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 38
 
 
உண்மையில் உயரிய வரலாற்றுக் குறிப்பான மகாவம்சம் இலங்கையினதோ அல்லது சிங்களவர்களினதோ வரலாறாக எழுதியது என்பதை விட, அது மகாவிகாரையின் அல்லது தேரவாத பௌத்தத்தின் வரலாறு என்று கூறுவதே பொருத்தம் என்று எண்ணுகிறேன் [The Mahavamsa (Great Chronicle of historical poem) was written not as a history of Sri Lanka (or Sinhalese) but as a history of the Mahavihara (Theravada Buddhists)].
 
உதாரணமாக தீபவம்சம், மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை மட்டுமே சொல்லுகிறது, அப்பொழுது சிங்கள இனம் என்று ஒன்றும் இல்லை, எனவே சிங்கள பௌத்தம் [Sinhala Buddhists] என்ற சொல்லுக்கே இடமில்லை. எனவே உண்மையில் இலங்கையின் சரியான வரலாற்றையும், அதன் மக்களையும் [சிங்களவர், தமிழர்], அதன் பண்டைய மதங்கள் [இந்து [சைவம்], புத்த], அதன் பண்டைய மொழிகள் அல்லது எழுத்து வடிவங்கள் மற்றும் அதன் பண்பாடுகளையும் அறிய வேண்டுமாயின், [To study the history of Sri Lanka and its people (Sinhalese/Tamils), its ancient religions (Buddhism / Hinduism), its languages/scripts and its culture], நாம் வடக்கு தெற்கு இந்தியாவின் வரலாற்றையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
 
ஏனென்றால், இலங்கையின் வரலாற்றின் மூலம் (origin / roots) அங்குதான் ஆரம்பிக்கிறது. அதுமட்டும் அல்ல அந்நியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெரும் மட்டும் இவை இரண்டின் வரலாறும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, தொப்புள் கொடி உறவாகவே இருந்தன எனலாம் [interconnected / umbilical cord].
 
நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது, இந்த பாளி நூல்கள், இலங்கையின் புத்த அரசர்களின் இனப் பின்னணி [ethnic background] பற்றி குறிப்பிடவில்லை. எனவே அவர்களின் பெயர்களிலும் அதன் கருத்து அல்லது அதன் பின்னணியிலுமே நாம் அதைத் தேட வேண்டி உள்ளது.
 
மேலும் வரலாற்று அறிஞர்களின் படி, ஒன்பதாம் நூற்றாண்டில் தான் நாகர் என்ற பதம் அல்லது பெயர், இலங்கை வரலாற்றில் இருந்து, அதாவது கல்வெட்டுகளில் [stone inscriptions] இருந்து வழக்கொழிந்து போயின என்கின்றனர். அதன் பின் தான் மிகவும் தெளிவாக இரண்டு முதன்மை இனக்குழுக்களாக [ethnic groups], அதாவது, ஹெல / சிகல மற்றும் தமிழர் [Hela / Sihala and Demela] என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது எனலாம்.
 
ஆகவே வரலாற்று ஆசிரியர்கள், நாகர்கள் இந்த இரண்டு முதன்மை இனக்குழுக்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்று நம்புகிறார்கள். பேராசிரியர் க இந்திரபாலாவின் [Prof. K. Indrapala] கூற்றின்படி, வரலாற்றுக்கு முந்தைய காலம் [prehistoric times] மற்றும் எழுத்துகள் கண்டுபிடிக்காத, வரலாற்றின் மிகப்பெரிய நாகரிகங்கள் உருவாகாத, மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாகச் சேர்ந்து வாழ்ந்த புரோட்டோ [மூல அல்லது முதனிலை] வரலாற்று காலத்திலும் [proto-historic times], வாழ்ந்த பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் [As per Prof. K. Indrapala, ‘The Sinhalese and Tamils of Sri Lanka are descended from the common ancestors who lived in the country in prehistoric and proto-historic times] இவர்கள் இருவரும் என்றும் இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக வரலாற்றை இலங்கையில் பகிர்ந்துள்ளார்கள் என்றும் கூறுகிறார்.
 
இதை நாம் ஏற்றுக்கொள்வோமாயின், இன்று நாம் சிங்களவர், நாம் தமிழர் என இலங்கையில் கூறுபவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே ஆவார்கள் என்பது கண்கூடு.
 
நாம் மகாவம்சத்தில் விஜயனின் வருகையை பார்க்கும் பொழுது ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம்.
 
உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது.
 
இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது.
 
கி மு 205 க்கும் கி மு 161 க்கும் இடைப்பட்ட துட்ட காமினி, எல்லாளன் [Dutugemunu and Ellalan] பெரும் போரைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. துட்ட காமினியின் பத்து மாபெரும் வீரர்கள் என வர்ணிக்கப்படுபவர்களில், நந்திமித்ரா [Nandhimitta], வேலுசுமணா என்ற இருவர் தமிழர் ஆகும். உதாரணமாக நந்திமித்ரா, எல்லாளனின் தமிழ் சேனாதிபதியான மித்ராவின் [Mitta] சகோதரி மகனாகும் [nephew]. அதே போன்று, எல்லாளனின் படையில் பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்த்தவர்களின் மூதாதைய வீரர்கள் மட்டுமல்ல, சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். உதாரணமாக தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா …. ஆவார்கள். இந்த சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
என்றாலும் அந்த கால பகுதியில் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை, ஆனால் இவர்களின் பவுத்த பரம்பரை பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்தார்கள் என்பது தான் உண்மை. இது இந்த பெரும் யுத்தம், மொழி, இனம் அடிப்படையில் அல்ல, மத அடிப்படை மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது.
 
எனவே, எல்லாளன் – துட்ட கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது. அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம். அந்தப் போர் சைவ மதத்தினருக்கும் – பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர் என்பதே உண்மையாகும்.
 
துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன் [Kavantissa]. காகவண்ண தீசனின் பூட்டன் பெயர் மகாநாகன் ஆகும் [Kavantissa - a great-grandson of King Devanampiyatissa's youngest brother Mahanaga]. மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன் [Mutasiva / மூத்தசிவா]! இது ஒன்றே துட்ட கைமுனு யார் என்று எடுத்து காட்டுகிறது.
 
அது மட்டும் அல்ல, துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள் [Dutugemunu's mother was Viharamahadevi, daughter of Tissa, king of Kalyani.].
 
எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்து விட்டே புறப்படுகிறான். அவனது போர் முழக்கம் “இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ [Chapter XXV of Mahāvaṃsa depicts the story of the “The Victory of Duṭṭhagāmaṇi.” After having a relic placed on his spear, Duṭṭhagāmaṇi takes five hundred bhikkhus with his army to march in conquest across the Tamil occupied territories. He victoriously conquers many kings, but states, “Not for the joy of sovereignty is this toil of mine, my striving (has been) ever to establish the doctrine of the Saṃbuddha. And even as this is truth may the armour on the body of my soldiers take the colour of fire.”] என சூளுரைத்ததாக மகாவம்சம் (அதிகாரம் 25) தெரிவிக்கிறது.
 
“பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள பவுத்த மன்னன், எல்லாளன் என்ற தமிழ் சைவ மன்னனை வென்றான்” என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது என்பது வெள்ளிடை மலையாகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 39 தொடரும்
337408007_173411951799013_3533471520906532139_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6tQf04zbtzcQ7kNvgGMrIjF&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDA9FMx70U1HB4DsHU250cJ23Y1X1t8dzxwDB3_AgMs0w&oe=6679F334 337657505_954129322427561_6027702471325811822_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ycC3VeLLoKQQ7kNvgGiI-F8&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBqw5ityf8s48hn1UIAtS3EOUpxOMtQnjiO9C30i841mQ&oe=6679FD63 337386725_1368376987289608_8331681137858348814_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=bAV_FlYU0GIQ7kNvgGsqybL&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBndZqZv7JoE7AfwMz98yqNVe-FwBMB1Zx6W7USIHl-0g&oe=667A1E2F
 
 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்குள்ளை என்னுடையநண்பன் ஒருவரும் உள்ளார். அத்தான் இங்கைதான் வெலை செய்யிறார் என்னவென்று கேட்டுப்பாப்பம்
    • 👍................ நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............ நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.  
    • 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
    • யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது,  அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது.   சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.   எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் -  இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.