Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

project_itc-colombo_01_1395437077-750x37

ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் திறப்பு!

கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள (ITC ரத்னதீப) அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த திட்டத்திற்கு சுமார் 3,000 கோடி இந்திய ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில் முதல் கட்டிடம் 30 அடுக்கு ஹோட்டலாகவும் இரண்டாவது கட்டிடம் 50 அடுக்குமாடி குடியிருப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் ஒரு பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

https://athavannews.com/2024/1379719

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

fb_img_1693130460102-jpg.5751766

 

itcratnadipa.jpg

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் முதலாவது 'Sky bridge" சொகுசு ஹோட்டல் ‘ITC Ratnadipa Colombo’ 

25 APR, 2024 | 05:00 PM
image
 

( வீ.பிரியதர்சன் )

இலங்கையின் கலை கலாசாரங்களை உள்ளடக்கிய முதலாவது 'Sky bridge" சொகுசு ஹோட்டலான ‘ITC Ratnadipa Colombo’ இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

AO4I9424.JPG

இந்தியாவின் ITC ஹோட்டல் குழுமத்தின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவுக்கு வெளியில் உள்ள நாடுகளில் ITC ஹோட்டல் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட மிகப்பாரிய நிதி முதலீட்டு திட்டமாகும்.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலின் முகப்புப் பகுதியில் இந்து சமுத்திரமும் பின்புறப்பகுதி பேர வாவியும் அமைந்து காணப்படுவது இயற்கை அழகை எடுத்துக்காட்டுகின்றது.

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் கொள்கைக்கு அமைய இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

நிலைபேண்தகு அபிவிருத்தி, மீள் சுழற்சி போன்ற முக்கிய நோக்கங்களை முன்வைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் 352 விருந்தினர் அறைகள், 9 உணவகங்கள்,  வரவேற்பு மண்டபங்கள் காணப்படுகின்றன.

இரு கோபுரங்களைக் கொண்ட ‘ITC Ratnadipa Colombo’ கொழும்பு நகரத்தின் முக்கிய அடையாளமாகவுள்ள நிலையில், அதன் 140 மீற்றர் உயரமான கோபுரம் ஹோட்டலுடன் சேர்ந்தும் 224 மீற்றர் உயரமான கோபுரம் குடியிருப்புத் தொகுதியையும் கொண்டுள்ளது.

இந்த இரண்டு செங்குத்து கோபுரங்களும் நிலத்திலிருந்து 100 மீற்றர் உயரத்தில் ”AHASA ONE - Sky Bridge ” மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ”AHASA ONE - Sky Bridge ”இன் மேல் பகுதியில் நீர் தடாகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை, அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தில் ‘ITC Ratnadipa Colombo’ சொகுசு ஹோட்டல் பெரும் பங்கு வகிக்கும்.

இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்பின் சான்றாக காணப்படுகின்றது.

AO4I9424.JPG

இந்தியாவுடனான பொருளாதார இணைப்பில் இருந்து இலங்கையால் விலக முடியாதென திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

IMG_0683.jpg

இந்திய முதலீடுகள் இலங்கையை பாதுகாப்பான வளர்ச்சியை நோக்கி பயணிக்கச் செய்யுமென திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா குறிப்பிட்டார்.

IMG_0627.jpg

இது இந்தியாவுக்கு வெளியில் இடம்பெற்ற மிகப்பாரிய அளவான முதலீடுஎன்றும் இலங்கையின் கடல்வளங்கள், சுற்றுலாவளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளே இங்கு இவ்வாறானதொரு முதலீடுகளை மேற்கொள்ள காரணமாக அமைந்தது என ITC Ratnadipa Colombo’ இன் தலைவரும் முகாமைத்துவப்பணிப்பாளருமான சஞ்சீவ் பூரி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் தினேஸ்குணவர்தன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ  உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

( படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார் )

439928539_875886074580823_16478006455866

438240982_1034945391323059_4507150377285

439311066_420259370944040_42382703582713

439866559_875885964580834_45000496222645

439849573_875886117914152_27422759693894

439920886_875886217914142_62644316854898

439694984_875853317917432_60570613597587

438240005_1034945591323039_3771057070261

438224518_1034945547989710_7555465895535

438223768_1034945457989719_1001229968452

438216772_1034945434656388_8392049005368

IMG_0457.jpg

IMG_0469.jpg

IMG_0475.jpg

IMG_0523.jpg

IMG_0557.jpg

IMG_0706.jpg

IMG_0756.jpg

IMG_0765.jpg

IMG_0771.jpg

IMG_0781.jpg

IMG_0795.jpg

IMG_0332.jpg

IMG_0368.jpg

https://www.virakesari.lk/article/181953

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.