Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

25 APR, 2024 | 06:17 PM
image
 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டடில் வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

pho_aar__3_.jpeg

இயற்கை வளங்களை அழிக்கும் செயற்திட்டங்கள் தமக்கு வேண்டாம், இறால்பண்ணை, மற்றும் இல்மனைட் கம்பனிகளைத் தடைசெய்ய வேண்டும், எனத் தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

pho_aar__1_.jpeg

இத்திட்டங்கள் தொடர்பில் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளுனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக்கூற வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோசங்களை முன்வைத்தனர்.

வாகரையில் முன்னெடுக்கப்படும் இறால்பண்ணை, இல்மனைட் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டு நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு 

இது புரிந்து கொள்ள கூடியதே.

இறால் பண்ணைக்கு எதுக்கு எதிர்ப்பு ????

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

இறால் பண்ணைக்கு எதுக்கு எதிர்ப்பு ????

இறால்ப் பண்ணைகளினால் சூழல் மாசடைகிறது அண்ணை. அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் அந்த இடத்தில் பாவிக்கப்படும் இரசாயணங்கள், ஊக்கிகள் என்பவற்றால் அந்த நிலம் வேறு தேவைகளுக்காகப் பிற்காலத்தில் பாவிக்கப்படுவதற்கு உகந்ததற்றதாக மாறிவிடுகிறது. இலங்கை போன்ற நாடுகளில் கழிவு அகற்றம், மீளுருவாக்கம், கழிவகற்றப்படுமுன் சுத்திகரித்தல் போன்ற விடயங்களில் நாம் கவனமெடுப்பதில்லை. எந்தவித சூழல் பாதக மதிப்பீடுகளும் இன்றியே அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னர் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளில் முஸ்லீம் வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்ட பல இறால்ப் பண்ணைகள் நாளடைவில் கைவிடப்பட்டபோது அந்த நிலங்கள் எவற்றிற்கும் உதவாத தரிசு நில‌ங்களாக மாறியிருக்கின்றன. 

Destruction of the mangrove resources, declining water quality of waterbodies in the shrimp farming zones, salinization of soil and water, indiscriminate disposal of solid waste, excessive extraction of groundwater and self pollution have contributed to environmental degradation and a decline in natural productivity of the area.

அப்பகுதிகளில் வாழும் சதுப்புநில தாவரங்களின் அழிப்பு, அப்பகுதியில் காணப்படும் நிலத்தடி நன்னீரில் இரசயாணக் கலப்பு அல்லது உவர் நீராக மாற்றம் பெறுதல், திண்மக் கழிவுகள் நீர்நிலைகளுக்குள் கழிவாக விடப்படுதல் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், அப்பகுதி நிலங்கள் வேறு பொருளாதார உற்பத்திகளுக்கு ஏற்ற நலன்களை முற்றாக இழந்து விடுகின்றன. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.