Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ இசைக்குழுவினரின் படிமங்கள்

 

 

 

(இவர்கள் தவிர வேறு யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களின் பெயரை மட்டும் (முதற் பெயர் மட்டும்) தெரிவித்துதவுக, ஆவணப்படுத்துவதற்கு.)

 

 

தகவல் வழங்குநர்: இனந்தெரியாத ஒருவர்

 

இசையமைப்பாளர் S.P ஈஸ்வரநாதன்.jpg

இடது: எஸ். ஜி. சாந்தன் | வலது: எஸ்.பி. ஈஸ்வரநாதன். இவர் தமிழீழ இசைக்குழுவின் பொறுப்பாளராக இருந்தவர் ஆவார். இவர் கருணாவுடன் பிரிந்து சென்ற போது கொல்லப்பட்டார. அவரது குடும்பத்தினரில் சிலர் வஞ்சகன் கருணாவின் ஆதரவாளர்கள் என்பது நானறிந்தது. அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் ஆனையிறவின் மேனி தடவி என்ற பாடலுக்கு இசையமைத்தவர்களில் இவரும் ஒருவராவார். அது மட்டுமன்றி, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் மீது பாடப்பெற்ற "பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார்" என்ற பாடலின் இசைக்குச் சொந்தக்காரருமாவார். தவிபு ஆல் வெளியிடப்பட்ட  ஆனையிறவின் மேனி தடவி பாடல் காட்சியில் இவர் சீருடையில் தோன்றுகிறார்: https://eelam.tv/watch/ஆன-ய-றவ-ல-ம-ன-தடவ-aanaiyiravil-meeni-thadavi-original-version-elephantpass-victory-song_9A1oTREri6Mn2NC.html

 

thaya - Info provided by anonymous

 

thana.jpg

குட்டிக்கண்ணன் = கப்டன் சிலம்பரசன்

 

sivaa.jpg

பெயர்: சிவா

 

paappaa.jpg

பெயர்: பாப்பா

 

sethu.jpg

 

adsa.jpg

 

 

 

 

==============================

 

 

எஸ். பி. ஈஸ்வரநாதனின் இறப்பிற்குப் பிறகு தென் தமிழீழத்தில் மேஜர் கருவேந்தனின் தலைமையில் தமிழீழ இசைக்குழு உருவாக்கப்பட்டு செயற்பட்டது (ஆதாரம்: மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 10).

Edited by நன்னிச் சோழன்

  • Replies 233
  • Views 20.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    ஆ, இல்லை. நான் அதைச் செய்யவில்லை. வேண்டுமென்றால் தாங்கள் இங்கிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்:   கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய - பாடல்களும் உள்ளன.  https://www.eelam

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலின் பாடல்கள்       https://trfswiss.com/songs.php?album=158   ------------------------------------------       இந்த

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலைத் தேடும் பறவைகள்       இது முதலில் வெளியான அட்டை:   இது இரண்டாவதாக வெளியான அட்டை:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

  • நன்னிச் சோழன் changed the title to புலிகள் காலத்திய 216 இயக்கப்பாட்டு இறுவட்டுகள் | திரட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எழுச்சிப் பாடல் புத்தகங்கள்

 

 

  1. "ஒரு தலைவனின் வரவு" எழுச்சிப் பாடல்கள் 
  2. தமிழீழ தேசிய பாடல்கள் (1990)
  3. தமிழீழ எழுச்சி கானங்கள் - 

    இப்புத்தகத்தில் உள்ள "முல்லைப்போர்" பாடல்கள் சிலவற்றில் இசையமைப்பாளர்களைப் பற்றிய விபரங்கள் பிழையாக உள்ளன. உதாரணமாக, "முல்லை மண்" பாடலுக்கு இசையமைத்தவர் யாழ் ரமணன் தான். அதேபோல, "நந்திக்கடலோரம்" பாடலுக்கு இசையமைத்தவர் தமிழீழ இசைக்குழு. அத்துடன், "ஊரில் புகுந்து" பாடலுக்கு இசையமைத்தவர் இசைவாணர் கண்ணன் அவர்கள்.

  4. தமிழீழ எழுச்சிப் பாடல்கள் – பாகம் 1 - 

    இப்புத்தகத்தில் இடம்பெற்ற "குயிலே பாடு" பாடல்வரிகளில் வரும் "கழுத்தில் ஆடுது நஞ்சு" என்று தொடங்கும் வரியை "கழுத்தில் ஆடுது நெஞ்சு" என்று பிழையாக எழுதியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இதேபாடலில் "பகை விரட்டி எடுப்பரே பலிகள்" என்பதற்குப் பதிலாக "பகை விரட்டி எடுப்பரே புலிகள்" என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. 

  5. தமிழீழ எழுச்சிப் பாடல்கள் – பாகம் 4
  6. வெற்றிமுரசு பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்)
  7. போர்ப்பறைப் பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்)

 

எழுச்சிப் பாடல் புத்தகங்கள் அ பாட்டுப் புத்தகங்கள் ஏராளம்.... இறுவட்டுகள் வெளிவந்தவுடன் பாட்டுப் புத்தகங்களும் வெளியாகும். இவ்வாறு வெளிவந்தவற்றுள் மேற்கண்ட 7 மட்டுமே இப்போது வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. பல ஊழியால் அழிந்துவிட்டன.

 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகள் காலத்திய 217 இயக்கப்பாட்டு இறுவட்டுகள் | திரட்டு
  • நன்னிச் சோழன் changed the title to புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 217 இறுவட்டுகள் | திரட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் முதல் பாடல்
 

 

புலிகளால் முதன் முதலில் கவிதை வடிவில் எழுதி எடுக்கப்பட்டு வாய்வழி மெட்டுடன் பாடலாகப் பாடப்பட்டது: "வாருங்கள் புலிகளே தமிழீழம் காப்போம்" 

இக்கவிதையானது புலிகளின் ஆரம்பகாலப் பயிற்சி முகாமான அம்பகாமம் பயிற்சி முகாமில் பாடப்பட்டது ஆகும். இது "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் அவர்களிடமிருந்து எழுதிப் பெறப்பட்டதாகும். இதனை பெரும்பாலும் லெப். செல்லக்கிளி அம்மானே பாடுவாராம். பின்னாளில் இதற்கு இசையமைத்துப் பாடியவர் யாரென்பது தெரியவில்லை.

ஆதாரம்: 'விடுதலைத் தீப்பொறி ' நிகழ்படம்

 

  • பாடல் வரி:

"வாருங்கள் புலிகளே, தமிழீழம் காப்போம்!
வாழ்வா? சாவா? ஒரு கை பார்ப்போம்!

"முந்தை எங்கள் தந்தை வாழ்ந்த முற்றம் அல்லவா?
முடிசுமந்து நாங்கள் ஆண்ட கொற்றமல்லவா?
இந்த மண்ணின் மக்கள் எங்கள் சுற்றமல்லவா? - தமிழ்
ஈழமண்ணை மறந்து வாழ்தல் குற்றமல்லவா?

"ஞாலம் போற்ற வாழ்ந்தோம், இந்தக் கோலம் நல்லதா?
நாலுதிக்கும் நம்மை அடிமை என்று சொல்வதா?
ஈழமண்ணில் எங்கள் கண்ணீர் நாளும் வீழ்வதா? - அட
இன்னும் இன்னும் அந்நியர்கள் எம்மை ஆள்வதா?

"தமிழர் பிள்ளை உடல் தளர்ந்த கூனல் பிள்ளையா? 
தடிமரத்தின் பிள்ளையா? உணர்ச்சி இல்லையா? தமிழா! 
என்னடா, உனக்குப் போர் ஓர் தொல்லையா? - உன்
தாய் முலைப்பால் வீரம் நெஞ்சில் பாயவில்லையா?
வேல் பிடித்து வாழ்ந்த கூட்டம் கால் பிடிக்குமா?
வீழ்ந்த வாழ்வு மீள இன்னும் நாள் பிடிக்குமா?
தோள் நிமிர்த்தித் தமிழர் தானை போர் தொடுக்குமா? - எங்கள்
சோழர், சேரர், பாண்டியர் போல் பேர் எடுக்குமா?"

 
கீழே உள்ளதுவே உண்மையாக புலிகளால் வெளியிடப்பட்ட மூல இசை கொண்ட பாடல் ஆகும். 2009இற்குப் பின்னர் இதே போன்று இன்னொரு பாடலை புலி வணிகர்கள் வெளியிட்டுள்ளனர். அது மூலப் பாடல் அன்று.
 
 
 
 
*****
 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் இசையுடன் கூடிய முதல் பாடல்

 


புலிகளால் இசையும் சேர்த்து முதன் முதலில் முழுமையான பாடலாகப் பாடப்பட்ட பாடல்: நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன், மாத்தையா (பின்னாளில் இந்தியாவுடன் சேர்ந்து தமிழருக்கு வஞ்சகம் செய்தான்), மற்றும் இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்) ஆகியோரை "பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பா அவர்கள் சென்னையில் சந்தித்து நெருங்கிய நண்பரானார். அதன் பின்னர் 1981ம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்த தவிபு மக்கள் முன்னணியின் அப்போதைய தலைவரான அஜித் மாத்தையாவின் அயராத முயற்சியில் திரு செல்லப்பா அவர்களது தமிழீழ விடுதலை பற்றிய பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாவில் வெளியிடப்படலாயிற்று. 

இவ்வாறு இவரால் அப்போது வெளியிடப்பட்டவற்றில், இப்போது அறியப்படும் பாடல்களில், எஞ்சியிருப்பது 1983ம் ஆண்டு வெளியிடப்பட்ட "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற பாடல்தான் தமிழீழத்தின் இசையுடன் கூடிப் பாடப்பட்ட முதல் பாடலாக அறியப்படுகிறது. இது தலைவருக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இதனை எழுதியவர் "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் ஆவார்.

இதற்கு முன்னர் - 1981,1982 ஆண்டுகளில் - ஏதேனும் வெளியிடப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆதாரம்: ஈழநாதம் 22.04.1990

 

 

  • பாடல் வரி:

"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

"பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்
பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்
போரில் வெற்றி முரசு முழங்கும்
புலிகள் கழுத்தில் மாலை துலங்கும்

"கூண்டுபறவை சிறகு விரி்க்கும்
குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும்
மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்

"வானம் நமது கொடியை அழைக்கும்
மாற்றார் முகத்தில் நாணம் முளைக்கும்
மானம் நமக்கோர் மகுடம் வழங்கும்
மண்ணில் நமது பெயரும் விளங்கும்"

 
 
 
*****
 
 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இயக்கமல்லாதோரால் இசையுடன் பாடலாகப் பாடப்பட்ட முதல் பாடல்

 

 தமிழீழ விடுதலைப் போரிற்கு இயக்கமல்லாத குடிமையாளர்களால் (civilians) இசையுடன் பாடலாகப் பாடப்பட்ட முதற் பாடல்: "ஓ! மரணித்த வீரனே"

இப்பாடலானது வியட்னாமியக் கவிதை ஒன்றின் தமிழ் வடிவமாகும். இதற்கு அமரர் யாழ். ரமணன் அவர்கள் தலைமையிலான குழுவினர் இசையமைக்க, அக்குழுவைச் சேர்ந்த எஸ். திவாகர் அவர்கள் பாடினார். இதனை மொழிபெயர்த்ததும் யாழ். ரமணன் அவர்களே ஆவார். 

இது கொண்டு முதன் முதலில் வெளியான இறுவட்டு உதயம் ஆகும். இவ்விறுவட்டிற்கு சேர்ப்பதற்காக இதன் மூல இசையான வேகமான இசையிலிருந்து அதன் வேகம் குறைக்கப்பட்டு மாவீரருகென்று மெள்ளமான இசை சேர்க்கப்பட்டு பாடப்பட்டு அதன் பின்னரே இறுவட்டில் சேர்க்கப்பட்டது. இதை தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப செய்தனர், மூலப் பாடல் பாடியோர். அத்துடன் "மாவீரர் புகழ் பாடுவோம்" என்ற மாவீரர் பாடல் தொகுப்பு இறுவட்டில் இப்பாடல் வெளியாகி உள்ளதென்பது நானறிந்த தகவலாகும்.

 

  • பாடல் வரி:

"ஓ மரணித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத் தா!
உன் பாதணிகளை எனக்குத் தா!
உன் ஆயுதங்களை எனக்குத் தா!

"உன் இறுதிப் பார்வையை, பகையை வெல்லும் உன் துணிவை,
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை,

"தப்பியோடும் உன்விருப்பை, தனித்து நிற்கும் தீர்மானத்தை,
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்..

"உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு...

"உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா!
எஞ்சிய வீடுகளின் பிழைத்தவர்கள் மத்தியிலே!

"உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றி சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு

"வார்த்தைகள் போதவில்லை, வரலாறு பாடுமுன்னே!"

 

மூல இசை வடிவமும் நிகழ்படமும்:

இந் நிகழ்படமானது 1984ம் ஆண்டு தமிழீழத்தில் படம்பிடிக்கப்பட்டு பதிவாக்கப்பட்டது. இதுவே தமிழீழ விடுதலைப் போரிற்கு இரண்டாவதாக இசையுடன் பாடப்பட்ட பாடலாக இருக்குமென்பது அறுதியிடப்படா மெய்யுண்மையான தகவலாகும். 

 

 

ஆதாரம்:

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் தோற்றக் காலத்திற்கு முன்பான இயக்கப்பாடல் 

 


புலிகளின் தோற்றக் காலத்திற்கு முன்பு பாடப்பட்டு பின்னாளில் புலிகளால் இயக்கப்பாடலாக பாவிக்கப்பட்டு வந்த பாடல்: "மறவர் படை தான் தமிழ்ப்படை" 

இப்பாடலானது 1960 களில் "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் அவர்களால் எழுதப்பட்டு "பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பா அவர்களால் தமிழ்நாட்டில் பாடப்பட்ட பாடலாகும். அக்காலத்திலேயே தமிழ்நாட்டில் பரவலறியாக இருந்தது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் பாடகரான தேனிசை செல்லப்பாவின் குரல் தான்.  

பின்னர், 1970களில் இப்பாடல் தமிழீழத்திலும் மெள்ள நுழைந்து பரவலறியானது. தொடர்ந்து தமிழீழத்தின் விடுதலைப் பாடல்களில் ஒன்றாக திகழ்ந்து இன்றுவரை அவ்வாறே உள்ளது.

1972ம் ஆண்டு சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து காசி ஆனந்தன் அவர்கள் தனது பதவியைத் துறந்தார். அதனைத் தொடர்ந்து அரசியல் மேடைகளிலும் மேடைப் பேச்சுகளிற்கான முன்னோடி ஒலிபெருக்கி அறிவித்தல்களிலும் இப்பாடல் இடம்பிடித்துக்கொண்டது.

இப்பாடல் பின்னாளில் இடம்பெற்ற இசை இறுவட்டு எதுவென்பது எனக்குத் தெரியவில்லை.

---> ஆதாரம்: ஈழநாதம் 22.04.1990

 

மற்றொரு வரலாற்றுத் தகவல் என்னவெனில், 1961ம் ஆண்டில் தான் தமிழீழ விடுதலைக்கான முதல் இயக்கம் தோற்றம்பெற்றது. அதன் பெயரும் "புலிப்படை" என்பதாகும். 

---> ஆதாரம்: புலிப்படை (1961) முதல் விடுதலைப்புலிகள் வரை புலிகளின் (1976) வரலாறு! | வர்ணகுலத்தான்
 

 

 

 

  • பாடல்வரி

"மறவர் படைதான் தமிழ்ப்படை - குல
மானமொன்று தான் அடிப்படை
வெறிகொள் தமிழர் புலிப்படை - அவர்
வெல்வார் என்பது வெளிப்படை

"புதிதோ அன்று போர்க்களம் - வரும்
புல்லர் போவார் சாக்களம்
பதறிப்போகும் சிங்களம் - கவி
பாடி முடிப்பார் மங்களம்

"சிரிக்கும் உள்ளம் போர் கண்டு - தமிழ்
சேய்க்கும் சண்டை கற்கண்டு
உரத்து தமிழை போய்முண்டு - என
துள்ளும் நாக்கும் இருதுண்டு

"தமிழன் பண்பில் உருப்படி - அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி
அமையம் தன்னை முதற்படி - பிறர்
அடக்க வந்தால் செருப்படி

"வீரம் வீரம் என்றாடு - நீ
வேங்கை மாற்றான் வெள்ளாடு
சீறும் பாம்பை வென்றாடு - கண் 
சிவந்து நின்று போராடு"

 

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலி வியாபாரிகளால் சிதைக்கப்பட்ட "பூபாளம்" இறுவட்டு

 

https://pulikalinkuralradio.com/archives/album/pooballam

இந்த புலி வியாபார வலைத்தளத்தினிளுள்ள "பூபாளம்" என்ற இவ்விறுவட்டிற்கென்று வழங்கப்பட்டுள்ள 11 பாடல்களும்  இறுவட்டிற்கானவையன்று. அவை காலத்தால் அழிந்துபோனதாக கருதப்படும் கீழ்க்காணப்படும் 4 இறுவட்டுகளில் ஏதோ ஒன்றினதாகும்.

தயவு கூர்ந்து இந்தப் பதினொரு பாடல்களிற்கான மெய்யான இறுவட்டை அடையாளம் காண உதவுங்கள், உறவுகளே. சரியான வரலாற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டும். 

  1. சிவந்த மண்
  2. தமிழ் சொந்தங்கள்
  3. விடுதலைத்தீ
  4. வீழமாட்டோம்

மெய்யான பூபாளம் இறுவட்டிற்கான பாடல்களை கீழ்க்காணும் இவ் ஆவணத்தின் கொழுவியில் சென்று கண்டுகொள்ளவும். 

 

 

நடைமுறையரசின் "புலிகளின் குரல்" நிறுவனத்தின் பெயரால் 2009இற்குப் பிறகு வணிகம் செய்யும் இவ்வலைத்தளம் உவ்விறுவெட்டினை நாசமாக்கியுள்ளது; இதனது அட்டையின் மேல் தன் வணிகத் தளத்தின் முத்திரையை பொறித்தது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடல்களிற்கும் நடுவில் 'www.pulikalinkural.com' என்ற ஒலியை ஒலிக்கவிட்டு அப்பாடல்களை உடனடியாக மீளப் பாவிக்கேலாத நிலமைக்கு ஆக்கியுள்ளது.

இது போன்ற புலி வியாபாரிகளால் தான் எம்மினம் இன்று இந்நிலைக்கு ஆளாகியுள்ளது. தேசத்தின் சொத்தை தனியார் சொத்தாக்குவதோடு மட்டுமின்றி வரலாற்றினையும் திரிக்கின்றனர்!!

 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு
  • நன்னிச் சோழன் changed the title to புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 219 இறுவட்டுகள் | திரட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தவறுதலாக பதியப்பட்டிருந்த 2010 இற்குப் பிறகு வெளியிடப்பட்ட இரு இசை இறுவட்டுகள் நீக்கப்பட்டு புதிதாக கிடைக்கப்பெற்ற 5 இறுவட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால் தற்போது 219 ஆக உயர்ந்துள்ளது, விடுதலைப் போராட்ட கால இசை இறுவட்டுகள்.

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.