Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

எல்லாளன் பெயர் சொல்லி

 

 

இவ்வெறுவெட்டினுள் "எல்லாளன்" திரைப்படத்தில் வெளியான "தாயக மண்ணே" என்ற பாடலும் இணைக்கப்பட்டுள்ளது.

 

எல்லாளன் பெயர் சொல்லி.jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 219 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு
  • Replies 233
  • Views 20.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    ஆ, இல்லை. நான் அதைச் செய்யவில்லை. வேண்டுமென்றால் தாங்கள் இங்கிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்:   கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய - பாடல்களும் உள்ளன.  https://www.eelam

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலின் பாடல்கள்       https://trfswiss.com/songs.php?album=158   ------------------------------------------       இந்த

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலைத் தேடும் பறவைகள்       இது முதலில் வெளியான அட்டை:   இது இரண்டாவதாக வெளியான அட்டை:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

எழு எழு தமிழா

 

 

 

எழு எழு தமிழா.jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 220 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

எழுக தமிழ்

 

 

cd2 (1).jpg

 

cd1.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

ஐயா குமார் ஐயா

 

 

 

ஐயா குமார் ஐயா.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

ஒரு தலைவனின் வரவு

 

 

 

ஒரு தலைவனின் வரவு.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

ஒளிமுகம் தோறும் புலிமுகம்

 

 

 

 

எது முதலாவது அட்டை என்பது தெரியவில்லை!

 

olimukam thoorum pulimukam.jpeg

 

 

olimukam.jpg

 

olimukam thooRum pulimukam.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

ஓயாத இசை அலை

 

 

ஓயாத இசை அலை.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடலிலே காவியம் படைப்போம் 

 

 

இந்த இறுவட்டுத் தயாரிப்பில் தான் தமிழீழத்தில் முதன்முறையாக தொழில்நுட்பம்/கணினிகள் பாவிக்கப்பட்டன.

 

கடலிலே காவியம் படைப்போம்.jpg

 

 

கடலிலே காவியம் படைப்போம்" - மதிப்பீட்டுரை

 

திறனாய்வு: பேராசிரியர் அ. சண்முகதாஸ்
மூலம்: வெளிச்சம் (புரட்டாதி
 1994)
பக்கம்: 44-43

நெய்தல் நில மக்களின் நெஞ்சத்து உணர்வுகளுக்கு மெட்டுக்கட்டி கடற்புலிகளின் வீரத்துக்குப் பாட்டுக்கட்டி, "கடலிலே காவியம் படைப்போம்" என்னும் பாடல் ஒலிப்பதிவு நாடா வெளிவருகின்றது. நெய்தல் நில மக்களுடைய சோகத்தை ஏற்கெனவே தமிழீழ விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடாகிய "நெய்தல்" என்னும் பாடல் ஒலிப்பதிவு நாடா மூலம் நன்கு உணர்ந்தோம். கடற்புலிகளின் வீரமும், அவ்வீரம் தீர்த்துவைத்த சோகமும் பற்றிக் கலை, பண்பாட்டுக் கழகத்தின் இந்த வெளியீடாகிய "கடலிலே காவியம் படைப்போம்" ஒலிப்பதிவு நாடாப் பாடல்கள் விரித்துக் கூறுகின்றன. இந்த ஒலிப்பதிவு நாடாவுக்கு ஒரு சிறப்புண்டு. அது என்னவெனில், இந்த மண்ணிலே முதன்முதலாகக் கணனியைப் பயன்படுத்தி இப்பாடல் ஒலிப்பதிவு நாடா தயாரிக்கப்பட்டமையேயாகும்.

கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் வாஞ்சிநாதன், பண்டிதர் பரந்தாமன் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளனர். பெரும்பாலும் நல்ல கவிதைகள் நல்ல இசைப்பாடல்களாகி விடுகின்றன. நல்ல கவிதையாக அமையாவிட்டால், அது நல்ல பாட்டாகவும் ஆகிவிடமுடியாது. இந்த ஒலிப்பதிவு நாடாவிலே எல்லாப் பாடல்களுமே நன்றாக அமைந்துவிடுகின்றன.

"இந்தக் கடல் ஈழத்தமிழரின் சொந்தக் கடல்

இங்கு ரத்தம் சிந்திச் சிவந்திடும் தந்தைக் கடல்

பொங்கிப் பகை வெல்லக்கடற்புலி போகுங்கடல்

பிரபாகரன் தோன்றிய ஊரைத் தழுவிடும் வீரக்கடல்"

என்று புதுவை இரத்தினதுரை எழுதிய பாடலிலே "பிரபாகரன் தோன்றிய ஊரைத் தழுவிடும் வீரக்கடல்" என்ற அடியும்,

"நிலவற்ற வானத்தில் வெள்ளி சிரிக்கும் - அந்த

நீலக்கடல் இருளினிலே பொங்கிக் கொதிக்கும்

அலை மேலே எங்களின் பயணம் நடக்கும் - வள்ளம்

அக்கரையில் சேருமட்டும் ஆவிதுடிக்கும்"

என்று பண்டிதர் பரந்தாமன் எழுதிய பாடலிலே "வள்ளம் அக்கரையில் சேருமட்டும் ஆவிதுடிக்கும்" என்ற அடியும்,

"சத்தமிட்டு முத்தமிடும் வாடைக்காற்று - வந்து

சுத்திச் சுத்திக் கடல்மீது கோலம்போடும்

தத்தித் தத்திப் படகொன்று பயணம் போகும் - இருள்

நித்தம் நித்தம் விழியோடு கதைகள் பேசும்"

என்று வாஞ்சிநாதன் எழுதிய பாடலிலே "தத்தித் தத்திப் படகொன்று பயணம் போகும்" என்ற அடியும் கவிதை ஓவியங்களாக அமைந்துவிடுகின்றன. இப்படியான பல கவிதை ஓவியங்களைக் கொண்ட பாடல்களுக்குத்தான் இந்த மண்ணிலே மிகச் சிறந்த இசையமைப்பாளராகிய கண்ணன் இசைவழங்கியுள்ளார்.

பாடல்களின் பொருளுக்கேற்றபடி இசை வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடாவின் இரண்டாம் பகுதியிலுள்ள மூன்றாம் பாடல் முதலிற் சோகத்தையும் பின்னர் வீரத்தையும் புலப்படுத்துகின்றது. அதற்கேற்றபடி இசையமைக்கப்பட்டுள்ளது. முதலிலே, கிளாலிக் கடலிலே கடற்படையினரால் மக்கள் பட்ட இன்னல்கள் கூறப்படுகின்றன. மூன்று பாட்டுருக்கள் இவ்வின்னல்களைக் கூறுகின்றன. வாத்தியக் கருவிகளெல்லாம் கசிந்து அழுகின்றன. இச் சோகப் போக்கினை இடைநிறுத்தி வீரமும் பரபரப்புமுள்ள இசை வழங்கப்படுகின்றது. பல படகுகள் வேகமாக வருகின்றன என்ற உணர்வை இசை தோற்றுவிக்கின்றது. மக்களுக்குத் துன்பஞ் செய்தவர்களை விரட்டியடிக்கக் கடற்புலி வருகின்றது. "ஏலேலோ ஏலேலோ" என்ற தருவுடன்

"நாகதேவன்துறை நீங்கள் வந்து ஆளவோ - நாங்கள்

நடுக்கடலில் துடிதுடித்து வெந்துமாளவோ

வேக ஓடம் உங்கள் கையில் இனியும் ஆகுமோ - கடல்

வேங்கைவர எங்கே போனவோ"

என்ற பாடல் ஒலிக்கின்றது. கேட்பவர்கள் உண்மையிலே பரவசம் அடைவார்கள். வீர உணர்வு பொங்க நிமிர்ந்து நிற்பார்கள்.

இந்த ஒலிப்பதிவு நாடாவுக்கு இன்னொரு உயர்பண்பும் உண்டு. அதாவது விடுதலைப் புலிகள் கடலிலே சாதனைகள் செய்ய மழையென்றும் காற்றென்றும் பாராமல், தாய் பிள்ளை தாரமென்று பாராமல் கடலிலே படகுகளை ஓட்டிய ஓட்டிகளுக்கு நன்றி கூறுவதாகப் புதுவை இரத்தினதுரை இயற்றிய பாடல் இதில் சேர்க்கப்பட்டுள்ளமையேயாகும்.

"ஓட்டிகளே படகோட்டிகளே - எங்கள்

உணர்வினிற்கே வழிகாட்டிகளே"

என்று தொடங்கும் பாடல் மனதை உருக்குவதாக அமைகின்றது. தொழில் செய்பவன், தன் தொழிலுக்குரிய கருவிகளுக்கு நன்றிகூறுவதாகப் பல நாட்டார் பாடல்களுண்டு. இந்தப் பாடலும் அந்த வகையைச் சார்ந்ததே.

கண்ணனுடைய இசையமைப்புக் கடற்புலிகளின் வீரத்தையும் நெய்தல் நிலத்தின் சோகத்தினையும், வெற்றியினால் ஏற்படும் களிப்பினையும் புலப்படுத்தும் வகையிலே அமைந்துள்ளது. சிட்டு, சாந்தன், சுகுமார், விஜயலட்சுமி, நிரோஜன், விஜயகுமார், ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர்களுடைய குரல்கள் ஏற்ற வகையிலே இசையுடன் இசைவுறுகின்றன. விஜயலட்சுமி "வெள்ளலையே நில்லலையே வேதனையைக் கேளலையே" என்ற பாடலைப்பாடும் போது அவருடைய குரல் சோகத்துடன் இழைகின்றது. பக்கவாத்தியக் கலைஞர்களெல்லாம் தக்கமுறையிலே இசைக்கு அணிசெய்துள்ளனர்.

இசையும் கவிதையும் இணைகின்ற போது ஏற்படும் கவிக்கோலங்களை இந்த ஒலிப்பதிவு நாடாவிலே தரிசிக்கலாம் நெய்தலின் சோகத்தினை,

"காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்

காற்றுடனே போர்தொடுத்து ஊர் திரும்புகின்றோம்"

"பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை!

பத்துமாதம் போனதையா! ஏன் திரும்பவில்லை?"

என்னும் அடிகள் உணர்த்த, நெய்தலின் அழகினை

"நிலவற்ற வானத்தில் வெள்ளி சிரிக்கும்"

என்னும் அடி உணர்த்துகின்றது. நெய்தலின் உழைப்பும் மனநிறைவும்

"சின்னவலை போட்டுக் கைகள் சிவந்து போகும் - கருங்

கண்ணி படக் கவலையெல்லாம் மறைந்துபோகும்."

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடலின் மடியில்

 

 

வங்கத்திலே ஒரு நாள்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடலோரக்காற்று

 

 

 

கடலோரக்காற்று.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 01

 

 

 

 

கடற்கரும்புலிகள் பாகம்  (11).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 02

 

 

 

கடற்கரும்புலிகள் பாகம்  (10).jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 219 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 03

 

 

கடற்கரும்புலிகள் பாகம் 3.jpg

 

கடற்கரும்புலிகள் பாகம்  (10).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 04

 

 

 

கடற்கரும்புலிகள் பாகம்  (9).jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 219 இயக்கப்பாட்டு இறுவட்டுகள் | திரட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 05

 

 

 

கடற்கரும்புலிகள் பாகம்  (8).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 06

 

 

கடற்கரும்புலிகள் பாகம்  (7).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 07

 

 

 

கடற்கரும்புலிகள் பாகம்  (6).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 08

 

 

 

கடற்கரும்புலிகள் பாகம்  (5).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 09

 

 

 

மூல அட்டை:

Sea Black Tigers part 9.jpg

 

 

 

இரண்டாவது அட்டை:

கடற்கரும்புலிகள் பாகம்  (4).jpg

adsadfasf.jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 10

 

 

 

கடற்கரும்புலிகள் பாகம்  (3).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 11

 

 

கடற்கரும்புலிகள் பாகம்  (2).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 12

 

 

 

கடற்கரும்புலிகள் பாகம்  (1).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கடற்கரும்புலிகள் பாகம் 13

 

 

 

கடற்கரும்புலிகள் பாகம் 13.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கரும்புலிகள் 

 

 

 

இவ் ஒலிநாடாவின் கீழ் போடா தமிழா போடா, கண்ணே கண்ணே கதைகேளு, சாகத்துணிந்தவர் கூட்டம் மற்றும் கரும்புலி என்றொரு பெயர் கொண்டு ஆகிய 4 பாடல்கள் வெளிநாட்டு இணையங்களில் பிழையாக இணைக்கப்பட்டவை.
 

karumpulikal.jpg

 

karumpulikal.jpeg

 

 

  • மூலம்: வெளிச்சம்
  • திகதி1993.07
  • திறனாய்வு: கா.சி.
  • பக்கம்: 27-29

 

'கரும்புலிகள்' நினைவு ஒலிநாடா - "கசெற்" இலக்கியத்தின் இன்னொரு வெளிப்பாடு

- மதிப்பீட்டுரை -

யாழ்ப்பாணத்தின் அண்மைக்கால இலக்கிய வெளிப்பாடுகளின் தன்மை பற்றியும் அவற்றின் மக்கள் நிலை ரசனை பற்றியும் விசாரித்தறிந்த ஓர் இலக்கிய மாணவர் "கசெற் இலக்கியங்கள்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார்.

இது கருத்துள்ள ஒரு சொற்றொடராகும். 1990 முதல் மக்களின் மகிழ்வளிப்புச் சாதனங்களின் பயில்வு முடக்கப்பட்டதன் பின்னர் 'கசெற் இலக்கியங்கள்' சில புதிய பரிமாணங்களை எட்டிப்பிடித்துள்ளன. தமிழ் சினிமா வழியாகக் கடந்த இரு பத்தாண்டுகளுக்கு மேல் ரஞ்சகப்படுத்தப்பட்ட கவிதை - இசை இணைவு 1990 இல் ஏற்பட்ட புதிய சவாலை ஏற்றுக்கொள்வதற்கான கலைவடிவப் பின்புலத்தைத் தந்தது.

முதலில் தமிழகத்து இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தி வெளிவந்த ஒலிநாடாக்கள் போகப் படிப்படியாக உள்ளூர்க் கலைஞர்களையே பயன்படுத்தும் முறைமை தொடங்கிற்று.

அந்த முயற்சியுடன் இன்றைய போராட்ட நிலையினை இசையில் வடித்தெடுக்கும் கலை முயற்சி கோட்பாட்டு முறையிலும் செயல்முறை நிலையிலும் வெற்றிபெறத் தொடங்கியதெனலாம்.

இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது, மூன்று 'தனிமங்களி'ன் இணைவு ஆகும். புதுவை இரத்தினதுரை என்ற கவிஞன், கண்ணன் என்ற இசையமைப்பாளன், சுந்தரலிங்கம் முதல் சாந்தன் வரை என வரும் சாஸ்திரிய - மெல்லிசைக் கலைஞர் ஆகியோரின் இணைவு இந்த 'இலக்கிய இசை'க்குப் பொருளும் வடிவும் கொடுத்தது.

"நெய்தல்" என்னும் ஒலிநாடா இந்தக் கலைக்கோலத்தின் உன்னத உதாரணமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து இப்பொழுது "கரும்புலிகள்" என்ற இந்த ஒலிநாடா (பாடல்கள்) வெளியாகியுள்ளது.

விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஒலிநாடாவில் புதுவை இரத்தினதுரையின் ஒன்பது "இசையாக்கங்கள்" இடம்பெற்றுள்ளன. கரும்புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் எடுத்துக்கூறும் வகையிலமைந்த இந்தப் பாடல்களில் புதுவை - கண்ணன் இணைவின் இன்னொரு கலை உயிர்ப்பினைக் கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது.

இக்கட்டத்தில், புதுவை இரத்தினதுரையினதும், கண்ணனினதும் படைப்புத் திறன்களின் தளங்கள் பற்றி (மிகச்சுருக்கமாக) அறிந்து கொள்வது அவசியமாகும்.

புதுவை இரத்தினதுரையின் கவிதா வன்மை அவர் வாசகர் - கேட்போர் மனதிலெழுப்பும் உணர்ச்சி படிமங்களிலேயே தங்கியுள்ளது.

சொற்களின் ஒலி வீச்சும் அவற்றின் உணர்ச்சி வீச்சும் இணைகின்றபொழுது கேட்போர், வாசிப்போர் உள்ளங்களிலே அந்தச்சொற்கள் சுட்டும் விடயங்கள் "காட்சிகளாக" விரியும். பாரம்பரிய வாழ்க்கை முறையின் உணர்ச்சிக்கட்டங்களை - உணர்வு மையங்களைச் சுட்டுவதன் மூலம், இழக்கப்பட்டவற்றினால் ஏற்படும் சோகத்தை எடுத்துக் கூறுவது, இவரது அண்மைக்காலத்து கவிதைகளின் ஒரு முக்கிய பண்பு. இவர் கவிதைகளிலிருந்து மேற்கிளம்பும் படிமங்கள் வெறுமனே கட்புலக்காட்சிகளாகவோ, செவிப்புலக் கிளர்வுகளாகவோ இருந்து விடாமல், அவற்றுக்கு மேற்சென்று "ஸ்பரிச உணர்வுகளாக" (அதாவது நமது உடலிலே உணரப்படுவனவான "மெய்ப்பாடு"களாக) நம்மைக் கவர்வன.

"வாசலிற் காற்றென வீசுங்கள்";

"காவியச்சந்தன மேனிகளே"

என வரும் வரிகள் நமது புலப்பதிவில் ஏற்படுத்தும் நுண்ணிய தாக்கத்தினை விளங்கிக் கொண்டால் புதுவை இரத்தினதுரையின் 'நதிமூலம்' தெளிவாகிவிடும்.

இந்தக் கவிதையாக்க ஆற்றல் இணையும் இசையுடன் இயைந்து உயிர்ப்புக் கொடுக்கும் குரல்கள் மூலமாக வெளிவரும் பொழுது, இந்தக் காலகட்டத்தின் மானுடதாகங்களும், மனித ஓலங்களும் கலைப்பதிவு பெற்று விடுகின்றன.

புதுவை இரத்தினதுரையின் கவிதையின் உயிர்ப்பை எடுத்துக் காட்டுவதாகவும் அந்தக் கவிதைக்குள்ளிருக்கும் ஒத்திசையின் கருத்துத்தொனிகளை வெளிக்கொணருவதாகவும் அமைவது கண்ணனின் இசை.

கண்ணனின் இசையாக்கத்தில் அவர் 'மெட்டு'க்களை (MELODY) உருவாக்கும் முறைமை முக்கியமானதாகின்றது. அரூபமான ஒலிக்கு ஒரு ஒழுங்கமைதிப்பட்ட 'உருவம்' அமைக்க முனையும் பொழுது 'மெட்டு' உருவாகின்றது. இந்த உருவாக்கத்தின் அழுத்தங்கள், மிடற்றால், வாத்தியங்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. கண்ணன் தனது இசையாக்கத்தின் உயிர்ப்பு மையங்களை அழுத்திக் காட்டுவதற்கு நரம்பு வாத்தியங்களையே பெரும்பாலும் பயன்படுத்துவார். வயலின், சித்தார், 'ஓகனி'ல் வரும் கலப்போசைகள் இவரின் இசையமைப்புக்கான வாத்தியங்களாகவும் ஏற்ற இறக்கக் குறியீடுகளாகவும் அமைகின்றன.

கர்நாடக சங்கீதத்தின் சாஸ்திரிய வளத்துக்குள் நின்றுகொண்டு இந்த உணர்ச்சி நெகிழ்வுகளைக் கண்ணன் ஏற்படுத்துகின்றார்.

கண்ணனின் இந்த இசையாக்க முறைமை, புதுவை இரத்தினதுரையின் அடிநாதமான மானுடதாக வெளிப்பாடு, பண்பாட்டுப் படிமச்சித்திரிப்புடன் இணைகின்ற பொழுது அற்புதமானதோர் இலக்கிய-இசைக்கலவை ஏற்படுகின்றது.

இந்த ஒலிநாடாவில் அந்தக் கலவை ரெண்டு பாடல்களில் அற்புதமாக இணைந்துள்ளது. "இங்குவந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்" என்ற பாடலும், "போரம்மா" என்ற பாடலும் இந்த இசைவைக் காட்டுகின்றன.

இவற்றின் இந்த வெற்றிக்குக் காரணம் இந்தக் கவிதையும், இந்த இசையமைப்பும் வேண்டி நிற்கும் "குரல்" வந்து பொருந்தியுள்ளமைதான்.

மற்றைய பாடல்களில் ஒன்றையொன்று தங்கி நிற்க, இந்த இரண்டு பாடல்களிலும் அந்தக் கலவை (MIXTURE) சேர்வை (COMPOUND) ஆகிறது.

ஆனால் புதுவை - கண்ணனின் இந்த இணைவு ஒட்டுமொத்தமான ஒரு ஒத்திசைவுத் தோற்றத்தினை (ENSEMBLE- அதாவது இன்னொரு நிகழ்வின் இசைப் படிமமாகத் தருதலை) ஏற்படுத்துகின்றன. "போரம்மா" என்ற பாடல் இதனை நன்கு புலப்படுத்தும்.

இத்தகைய இசையமைப்புக்கள் கேட்பதற்கு ரம்மியமானவை. ஆனால் அதைக் கேட்பவர்கள் தங்கள் வாய் விட்டுப்பாட முடியாத அளவுக்கு இசைச்சிக்கலானவை.

ஆனால் வெகுசன நிலையில் வாய்விட்டுப் பாடப்படக்கூடியவையே சமூக ஒருங்கிணைப்புக்கான பாடல் முறையாகும்.

அந்த அம்சம் மிகமுக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

கரும்புலிகள் ஒலிநாடாவின் வெற்றிக்கு ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் பெரிதும் உதவியுள்ளது என்பது அதனைக் கேட்கும்பொழுது நன்கு மனதிற் பதிவாகின்றது.

தனிப்பட்ட கலைத்திறன்கள் இணையும்பொழுது சமூக ஒருங்கிணைப்பினையும் ஒத்தியைபினையும் எடுத்துக்காட்டும், வற்புறுத்தும் கலையாக்கங்கள் தோன்றுகின்றன.

அதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டு "கரும்புலிகள்" ஒலிநாடா.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

கரும்புலிகள் பாகம் 2

 

 

 

இவ்விறுவட்டுத்தான் தமிழீழத்தில் முதன்முதலில் எண்ணிம ஒலிப்பதிவு மூலம் உருவாக்கப்பட்ட இறுவட்டு ஆகும்.

 

karumpulikal 2.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.