Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தீக்குளித்த நேரம்

 

 

 

தீக்குளித்த நேரம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 233
  • Views 20.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    ஆ, இல்லை. நான் அதைச் செய்யவில்லை. வேண்டுமென்றால் தாங்கள் இங்கிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்:   கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய - பாடல்களும் உள்ளன.  https://www.eelam

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலின் பாடல்கள்       https://trfswiss.com/songs.php?album=158   ------------------------------------------       இந்த

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலைத் தேடும் பறவைகள்       இது முதலில் வெளியான அட்டை:   இது இரண்டாவதாக வெளியான அட்டை:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தீயில் எழும் தீரம்

 

 

 

தீயில் எழும் தீரம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

திலீபன் அழைப்பது சாவையா?

 

 

 

தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் உண்ணாநோன்பு மேடையில் பாடப்பட்ட பாடல்கள் இவையாகும். ஒலிவாங்கி பிடித்து பாடிக்கொண்டிருந்த போதே இப்பாடல்கள் பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்விறுவட்டின் மூல அட்டையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கீழுள்ள இனந்தெரியாத அட்டையும் வணிக நோக்கிலான அட்டைகளுமே காணக்கிடைக்கின்றன.

01-Sentamil-Eelaththin-mp3-image.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

துளிர்கள்

 

 

கீழுள்ளது மூல அட்டையாகும். அடுத்துள்ளது இறுவட்டு மேல் உள்ள படிமமாகும்.

துளிர்கள்.jpg

 

thulirkal.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தேசக் காதல்

 

 

https://eelapparavaikal.com/ms_song/thesakkathal/?_msr=1719871526

 

இந்த இறுவட்டில் உள்ள பாடல்களை சேகரித்து வைக்கவும். அரிதான ஒன்று.

இதன் மூல அட்டையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.  இதற்கு வணிக நோக்கில் 2009இற்குப் பிறகு வெளியிடப்பட்ட அட்டைகளும் உண்டு.

இதற்குள் :

01 அறிமுகம் 
02 என்மனதில் கோவில் கொண்ட மாவீர தெய்வங்களே 
03 ஆனையிறவிலே வீரப்புலிகளின் வெற்றிகளின்
04 எங்கு நான் தேடிப்பார்த்தேன் உந்தனின் (பெண்)
05 மண்ணை நினைக்கையிலே கண்கள்
06 காதலே வாழுமே என் தேசக்காதல் வாழும்
07 சோகங்கள் கேட்டு ஆறுதல் சொல்ல
08 தமிழை மறக்கும் தமிழனே நீ உன்னை
09 நாளையே எங்கள் தாயகம் விடியும்
10 வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்
11 எங்கு நான் தேடிப்பார்த்தேன் உந்தனின் (ஆண்)
12 நாளையே எங்கள் தாயகம் (வாத்திய இசை)

என்பன இதிலிருந்த சில அறியப்பட்ட பாடல்களாகும்.

 

இவ்விறுவட்டானது ஏறத்தாழ 15/08/2024 அன்று அழிந்துபோனது. இதன் கடைசிப் படி "https://eelapparavaikal.com/ms_song/thesakkathal/" என்ற வலைத்தளத்தினுள் இருந்தது.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தேசக் காற்று

 

 

தேசக் காற்று.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தேசத்தின் குரல்

 

 

 

தேசத்தின்குரல்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தேசத்தின் புயல்கள்

 

 

தரைக்கரும்புலிகள் "தேசத்தின் புயல்கள்" எனப்பட்டனர். அவர்களின் சின்னத்திலும் இக்கூட்டுச்சொல் பொறிக்கப்பட்டிருக்கும்.
 

தேசத்தின் புயல்கள் பாகம் 01.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தேசத்தின் புயல்கள் பாகம் 02

 

 

 

 

தேசத்தின் புயல்கள் பாகம் 02.jpg

 

Thesaththin puyalkal - 02

 

thesaththin puyalkal.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தேசத்தின் புயல்கள் பாகம் 03

 

 

 

தேசத்தின் புயல்கள் பாகம் 03.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தேசத்தின் புயல்கள் பாகம் 04

 

 

 

தேசத்தின் புயல்கள் பாகம் 04.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தேசத்தின் புயல்கள் பாகம் 05

 

 

 

தேசத்தின் புயல்கள் பாகம் 05.jpg

 

be1a252c0ded5ff1d7af18b39c2f580a.jpeg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தேசம் நோக்கி

 

 

 

இது நோர்வே கலை பண்பாட்டுக் கழகத்தின் இரண்டாவது வெளியீடாகும்.

இதன் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. அதற்கென வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகளே கிடைக்கப்பெற்றுள்ளன.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தேசம் மறவோம்

 

 

 

 

தேசம் மறவோம் 2.jpeg

 

தேசம் மறவோம்.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தேனிசைத் தென்றலும் புயலும்

 

 

 

இவ்விறுவெட்டின் மூல அட்டை எனக்குக் கிடக்கப்பெறவில்லை.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தொலைதூர விடுதலைச் சுவடுகள்

 

 

 

தொலைதூர விடுதலைச் சுவடுகள்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

தோள் கொடுப்போம்

 

 

 

தோள் கொடுப்போம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 216 இயக்கப்பாட்டு இறுவட்டுகள் | திரட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

நல்லை முருகன் பாடல்கள்

 

 

 

 

இது தான் மூல அட்டையா என்பது குறித்து எனக்கு சரியாகத் தெரியவில்லை.

 

asfaf.jpg

 

asfda.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

நினைவாஞ்சலிக்கீதங்கள்

 

 

 

திலீபனின் கீதாஞ்சலி w.jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 215 இயக்கப்பாட்டு இறுவட்டுகள் | திரட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

நெய்தல்

 

 

 

நெய்தல்.jpg

 

 

 

நெய்தல் - ஒரு மதிப்பீடு

 

  • திறனாய்வாளர்: பேராசிரியர் அ.சண்முகதாஸ்
  • வெளியீடு: வெளிச்சம்
  • திகதி: ஆடி-ஆவணி 1992
  • பக்கம்: 58- 59

ஒன்பது பாடல்கள் கொண்ட 'நெய்தல்' ஒலிப்பதிவு நாடா விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தினாலே வெளியிடப்பட்டுள்ளது. கடலும் கடல் சார்ந்த இடம் பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே நெய்தல் என்ற பெயராலே அழைக்கப்பட்டது. இங்கு மதிப்பீட்டுக்கு எடுக்கப்பட்டுள்ள இசைநாடாவிலே அமைந்துள்ள பாடல்கள் யாவும் கடற்கரைப் பிரதேசத்தையும், அப்பிரதேசத்து மக்கள் வாழ்வினையும் வெளிக்காட்டுவனவாக அமைந்துள்ளன.

சங்க இலக்கியங்களிலே நெய்தற் பாடல்களைப் படிப்பவர்கள் இரண்டு வகையான உணர்வுகளை அவற்றின் மூலம் இனங்கண்டு கொள்வர். ஒன்று, கடலிலே மீன்பிடிக்கச் செல்பவர், கப்பல் ஓட்டுபவர் ஆகியோருடைய வீரம்; மற்றையது, நெய்தல் நிலப் பிரதேசத்து மக்களுடைய இரங்கத்தக்க வாழ்வு. இவ்வொலிப்பதிவு நாடாவிலே அமைந்துள்ள பாடல்களிலே இவ்விரு உணர்வுகளும் சிறப்பாகப் புலப்படுத்தப்பட்டுள்ளன,

"ஆழக் கடலெங்கும் சோழமகாராஜன்

ஆட்சி புரிந்தானே அன்று - தமிழ்

ஈழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன்

ஏறி நடக்கின்றான் இன்று

காலை விடிந்ததென்று பாடு - சங்க

காலம் திரும்பியது ஆடு"

என்று ஒலிப்பதிவு நாடாவின் முதற்பாடலே விறுவிறுப்புடன் வீர உணர்வு பொங்கிட அமைந்து விடுகின்றது. கடற்காவியப் பாடல்களுக்கு இது நுழைவாயிலாக அமைந்து விடுகின்றது. இதே போன்று "கடலதை நாங்கள் வெல்லுவோம்" என்ற பாடலும் வீர உணர்வு புலப்படும் பாடலாக அமைகின்றது. இன்னொரு புறத்தில், நெய்தல் நிலத்துக்கேயுரிய சோக உணர்வும் சில பாடல்களாலே புலப்படுத்தப்படுகின்றது. நெய்தல் நில மகளிர் மிகவும் பரிதாபத்துக்குரியவர். "கரைமேற் பிறக்க வைத்தான் எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்" என்பது அவர்களது அனுபவ உணர்வு. இன்று மாலை படகுகளிலே கடலுக்குச் செல்லும் மீனவர், அடுத்த நாள் திரும்பி வரும் வரை என்ன நடக்குமோ என்று வீட்டிலுள்ள மகளிர் ஏங்குவது இயற்கை வாழ்வு. இவ்வித இயற்கையான சோக வாழ்வுடன், தங்கள் இளங் குருத்துகளின் கடல் வீரத்தின் மத்தியிலும் ஏற்படும் சிறு சோகங்களும் கலக்கும் போது ஏற்படும் இரங்கு நிலையை நாம் வார்த்தைகளாலே வடித்துவிட முடியாது. இதற்காகத்தான், வார்த்தைகளுடன் இசையினையும் சேர்த்து நெய்தல் நில மக்களின் இரங்குணர்வை இவ்வொலிப்பதிவு நாடா மூலமாகப் புலப்படுத்துகின்றனர். "வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்" என்னும் பாடல் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

நாட்டார் இசை என்றுமே உயிர்த்துடிப்பும் இனிமையுமுடையது. உயர் இசை, மெல்லிசை என்பனவற்றுடன் நாட்டார் இசை சேருமிடத்து அக்கலவை புதிய தன்மையுடைய இசையினை எமக்கு நல்கும். அது மிகுந்த கவர்ச்சி ஆற்றலுடையதாக அமையும்.

"முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா - கரை

முற்றும் நாங்கள் குடியிருந்த மடியம்மா"

என்ற பாடல் அத்தகைய கவர்ச்சி ஆற்றல் உடையதாக அமைகின்றது. அப்பாடலின் இன்னொரு பகுதி,

"அழுது கொண்டும் தொழுது கொண்டும்

இன்னும் வாழ்வதோ - எங்கள்

அப்பு ஆச்சி வாழ்ந்த மண்ணை

எதிரி ஆள்வதோ"

என அமைகின்றது. அம்பாப் பாடலோசையும் கப்பற்பாட்டிசையும் நன்கு பொருந்த, பாடலைப் பாடிய ஆண்குரலும் பெண்குரலும் நன்கு இசைவுறப் பாடல் அமைகின்றது.

கடல், கடலலை, கடற்கரை வாழ் மக்கள், தமிழர் கடல் வீரவரலாறு இவற்றையெல்லாம் இன்றைய கடற் போராளிகளுடைய அனுபவ உணர்வுகளுடன் இணைத்துப் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. அப்பாடல்கள் புலப்படுத்தும் உணர்வுகளுக்கேற்ற இசை வழங்கப்பட்டுள்ளது. இப்பாடல்களைக் கேட்பவர்கள் நிச்சயமாக உள்ளம் உருகுவார்கள்; புதிய புதிய வீறுடைய உணர்வு பெறுவார்கள். பாடல்களைப் புனைந்த கவிஞர்களும் இசை வழங்கிய இசை வல்லாளனும் பாராட்டுக்குரியவர்கள்.

"காலை விடிந்ததென்று பாடு - சங்க

காலம் திரும்பியதென் றாடு"

என்ற பூரிப்புணர்வினை 'நெய்தல்' ஒலிப்பதிவு நாடா நமக்கு வழங்குகின்றது.

 

 

******

 

 

"நெய்தல்" - ஒரு நெடும் பாய்ச்சல்

 

 

  • திறனாய்வாளர்: நம்பியாரூரன்
  • வெளியீடு: ஈழநாதம்
  • திகதி: 1992.07.10
  • பக்கம்: 5-6

கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்படும். நெய்தலுக்குரிய ஒழுக்கம், இரங்கல், நெய்தல் நிலத்தில் வாழும் மக்களுடைய தொழில் மீன் பிடிப்பதும், உப்பு விளைவித்தலும், முத்துக் குளிப்பதுமாகும். காற்றோடும் அலையோடும் மல்லாடும் இம் மக்கள் கடலுக்கே இரையாகிப் போவதுமுண்டு. கடலுக்குப் போய் மீளாத கணவனையோ, மகனையோ எண்ணி எண்ணி வாயிலும் வயிற்றிலும் அறைந்து கொண்டு பெண்கள் புலம்புவர். இதுவே இரங்கலுக்கான காரணம். இரங்கலைப் புலம்பல் என்றும் கூறலாம்.

இயற்கையின் சீற்றத்துக்கு மீனவர் பலியாவது உலகெங்கும் நிகழ்ந்து வருவதாயினும், அண்மைக் காலங்களில் தமிழ் மீனவர்களை மேலதிகமாக ஓர் ஆபத்து சூழ்ந்துள்ளது. சிறிலங்கா கடற்படையினர் நம் மீனவர்களை வெட்டியும் குத்தியும் சுட்டுக்கொல்வதும், அவர்களுடைய வள்ளம், வலைகளைச் சேதப்படுத்துவதும், மீனவர் குடியிருப்புகளை அழித்து கொலை, கொள்ளை புரிவதும் வழமையாகி வருகின்றது. கொடுங்கோன்மையின் இந்த முகம் இயற்கையின் கொடுமையை விட கோரமானது.

எப்படி எமது பாரம்பரிய நிலப்பரப்பை பிரிக்கப்படாத வட-தென் தமிழீழத்தை நாமே ஆள வேண்டிய அவசியம் இருக்கிறதோ, அதே போலவே தமிழ் மண்ணின் பெரும் பகுதியைச் சூழவுள்ள கடற்பரப்பை நாமே கட்டியாள வேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழருக்கு இது ஒன்றும் புதிய விசயம் அல்ல. இராசராசன், இராசேந்திரன் முதலிய சோழப் பெருமன்னர் பெரிய கடற்படை ஒன்றை வைத்திருந்தது மட்டுமன்றி, ஜாவா, சுமாத்திரா (சிறிவிஜயம்) முதலிய தூரகிழக்கு நாடுகள் வரை சென்று தமது கடலாதிக்கத்தை நிலைநாட்டினார்கள். தமிழ் வணிகர்களுடைய கலங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்தார்கள். பாரம்பரியமான மரக்கலமொன்றில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் சப்தசமுத்திரங்கள் தாண்டிய அண்மைக்கால வரலாறு மெய்சிலிர்க்க வைப்பது.

தமிழீழ விடுதலைப் போரை ஒடுக்கக் கங்கணம்கட்டி நிற்கும் சிறிலங்கா அரசு தரையிலும், கடலிலும், வானிலும் போர் தொடுக்கிறது. கடற்பாதைகளை மூடி எம்மை நசுக்கப் பார்க்கின்றது. எமது மீனவர்களை துன்புறுத்துகின்றது; கொல்கின்றது. இந்நிலையில் உதிர்த்ததுதான் 'கடற்புலி'கள் அமைப்பு. அதன் ஒரு பிரிவு 'கடற்கரும்புலிகள்' உயிரைத் துச்சமாக மதித்து எதிரியின் கப்பல்களையும் சக்திமிக்க படகுகளையும் மோதிச் சிதறடிக்கும் இவர்களுடைய வீரத்துக்கு முன் சிங்களம் திணறுகின்றது.

நடந்து கொண்டிருக்கும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் தமிழீழக் கலைஞர்கள் பெரும் பங்காற்றி வருகிறார்கள். விடுதலைக் கீதங்களைத் தாங்கி இதுவரை தமிழீழத்தில் எட்டு ஒலிப்பதிவு நாடாக்கள் வெளிவந்துள்ளன. அண்மையில் கடற்புலிகள் அமைப்புக் கலைஞர்களை இணைத்து விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக்கழகம் உருவாக்கிய 'நெய்தல்' ஒலிநாடா வெளியிடப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் விடுதலை இயக்கம் பற்றி விமர்சனம் செய்த 'நியூஸ்வீக்' சஞ்சிகை "தமிழர் வரலாற்றில் ஓர் உன்னத இடத்தை வகிக்கின்ற சோழப் பெருமன்னர்களுடைய கொடியைத் தமது கொடியாகக் கொண்டுள்ளார்கள்" என்று குறித்துள்ளது.

"ஆழ்கடலெங்கும் சோழ மகராஜன்

ஆட்சி புரிந்தானே அன்று - தமிழ்

ஈழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன்

ஏறி நடக்கின்றான் இன்று"

என்று எடுப்பாகத் தொடங்குகின்றது நெய்தல். கரிகாலனும் புகழ் பெற்ற ஒரு சோழனே. இமயத்தின் புலி இலச்சினையைப் பொறித்தவன் அவன். இந்தப் பெருமையை எல்லாம் பாடி அதன் வாரிசாக விளங்கும் எங்கள் கரிகாலன் (தலைவர் பிரபாகரன்) புகழ் பேசுகின்றது இவ் இசைப்பா.

"எங்கள் கடல் மீதில் எதிரி வருகின்ற

இன்னல் இனிமேலும் இல்லை"

என்ற நம்பிக்கை தரும் ஒரு முத்தாய்ப்பு.

'கரும்புலிகள்' என்ற யோகியின் பாட்டு பிரபலமானது.

"அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு

ஆனாலும் மண்மீதில் பெரும்பாசமுண்டு

ஆறடி மண்கூட நமக்காகக் கேளோம்"

எனக் கரும்புலிகளின் மன உணர்வுகளை வடித்தது அந்தக் கீதம். ஆறடி மண்ணுக்கு மேல் எதுவும் எதிர்பார்க்காத தரைப்புலிகள். ஆனால் கடற்கரும்புலிகளோ கடலோடு கரைந்து போகின்றவர்கள்.

""ஆறடி மண்ணிலும் அடங்கிடோம்" - எனும்

கரும்புலி உணர்வது கேட்குதா"

"கடலலையே கொஞ்சம் நில்லு - தமிழன்

வீரத்தை உலகெங்கும் சொல்லு"

என்பது யோகி தரும் நெய்தல்.

மீனவர்கள் கரைவலை இழுக்கின்றார்கள். "ஏலேலோ ஐலசா -ஏலேலோ ஐலசா!"

பரம்பரை பரம்பரையாக அவர்கள் இக்கடலலையின் மடியில் தவழ்ந்தவர்கள். ஆசியாவின் கடல் எல்லாம் ஆண்ட தமிழன் அகதியாக உலகெங்கும் அலையும் இழிநிலை கண்டு இரங்குகின்றார்கள்.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே"

என பெருமிதத்தோடு பாடினான் பாரதி.

"அழுது கொண்டும் தொழுது கொண்டும்

இன்னும் வாழ்வதோ - எங்கள்

அப்பு ஆச்சி வாழ்ந்த மண்ணை

எதிரி ஆள்வதோ"

இது புதுவை இரத்தினதுரையின் உணர்ச்சிகரமான பாட்டு.

"எதிரி வருவானா? கரையைத் தொடுவானா?

என்று புயலாகி வென்றோம் - புலி

அதிரும் வெடியோடு கடலில் நடைபோடும்

அணியில் துணையாகி நின்றோம்"

இது புதுவையின் இன்னொரு ஆவேசப்பாட்டு. ஆம்! தன் உடலைச் சிதறடிக்கின்ற வெடியோடு படகில் போகும் கடற்புலிகளின் துணிச்சலை, தியாகத்தை இணைக்கும் போது யார் தான் சிலையாகாதவர். நினைத்துப் பார்க்கின்றோம். சின்னச் சின்னப் பூக்களெல்லாம் புயலாகி போர்க்காலத்தில் நிற்கின்ற பூமியல்லவா இது! கூவியழைக்கின்றார் புதுவை இரத்தினதுரை.

"பூவும் புயலாகிப் பாயும் புலியாகி

போரில் குதித்துள்ள நாடு - தமிழ்

ஈழம் உருவாகும் வேளை இதுவாகும்

என்று களம் நோக்கி ஓடு"

கடற்புலி ஒருத்தி கடமையில் ஈடுபட்டிருக்கின்றாள். ஆடாமல் அசையாமல் இலக்கினை உற்று நோக்கியபடி சிலையாகி கடல் விம்முகிறது. அலைகள் அவள் கண்களை மறைக்கின்றன.

"அலையே நீயும் பொங்காதே -

என் இலக்கினை இனியும் மறைக்காதே"

உண்மையான அனுபவம் கலையாகும் அழகை ரசிக்கிறோம்.

நெய்தலில் புதுவை இரத்தினதுரை எழுதிய நெஞ்சை அள்ளும் மீனவப்பாட்டு ஒன்று வருகின்றது.

"வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் - கடல்

வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்

தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும் - மீன்

அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்."

எல்லாம் இவ்வளவு சுலபமாக முடிவதில்லையே கடலில் நேவிக்காரன் சுட்டுவிட்டால்,

"பேருமின்றி ஊருமின்றி

பெற்றவளின் முத்தமின்றி

ஈர உடல் கரையொதுங்கும் காலை"

மீனவன் வீட்டு வாசலிலும் கோலம் போட்டு இருக்கின்றது. என்ன கோலம்? வறுமையின் வேதனையின் கோலம்.

"வாயிறுக்கி வயிறிறுக்கி

வாழும் கடல் மீனவரின்

வாசலெங்கும் வேதனையின் கோடு"

நெஞ்சைப் பிழியும் சோக பாவத்துடன் ஒலிக்கின்ற இந்தப் பாட்டு நெய்தலின் சிகரம் எனலாம். பாடிய சாந்தனும் சிட்டுவும் பாராட்டுக்குரியவர்கள்.

தமிழீழ விடுதலைப் போரில் நெய்தல் நில மக்களே அதிக இழப்புகளை சந்தித்தவர்கள் எனலாம். மயிலிட்டி, 'தீவகம்', வெற்றிலைக்கேணி, மன்னார், முல்லைத்தீவு இன்னும் பிற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து தொழிலின்றி அலைபவர்களும் மீனவர்களே. இந்த நோக்கில் மீனவர்களுடைய உணர்வுகளை வெளியிடும் 'நெய்தல்' காலத்தின் தேவையாகவும், தமிழினத்தின் நிகழ்கால ஆவணமாகவும் விளங்குகின்றது.

நெய்தலின் இசையமைப்பைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். நவநவமான கற்பனைகள் நடைபேதங்கள் ஒருசில இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு கேட்போரைக் கிறங்க வைக்கும் இசைக் கோலங்கள் பாடகர்களும் சிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். சாந்தன் கூட அடக்கி வாசிக்கின்றார். பார்வதி சிவபாதம் பல்லவியை பாடும் பாணியல் ஒரு புதுமை செய்கிறார்.

"நீலக்கடலே நெடுகன் நிலவே" என்ற கீதம் மழலைக் குரலில் இழைகிறது.

"கடலலையே கொஞ்சம் நில்லு" ஒரு "முல்லை" முத்திரை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இதுவரை வெளிவந்த விடுதலைக் கீதங்களில் ‘நெய்தல்' ஒரு-உச்சத்தாவல்-நெடும் பாய்ச்சல்.

 

******

 

 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புலிகள் காலத்திய 215 இயக்கப்பாட்டு இறுவட்டுகள் | திரட்டு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

நெருப்பலைகள்

 

 

 

நெருப்பலைகள்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

நெருப்பில் நீராடுவோம்

 

 

 

 

நெருப்பில் நீராடுவொம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

நெருப்பின் சலங்கை

 

 

 

நெருப்பின் சலங்கை.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

நெருப்பு நிலவுகள்

 

 

இவ்விறுவட்டின் மூல அட்டை கிடைக்கப்பெறவில்லை.

இவ்விறுவட்டில் வெளியான பாடல்களும் "முன்னேறிப் பாய்வதென்ன அம்மா" என்ற இறுவட்டிலுள்ள பாடல்களும் இனந்தெரியாதோரால் என்னால் அறியமுடியா காரணத்திற்காக ஒன்றாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினனும் இரண்டையும் பிரித்து "நெருப்பு நிலவுகள்" இன் பாடல்களை கீழே கொடுத்துள்ளேன்.

  1. ஆடிப் பாடுவோம், கூடிப் பாடுவோம்
  2. நிலவில் புதிய கவிதை
  3. நீரடித்து நீரிங்கு
  4. ஓ வரும் வரும் மரணம்
  5. நிறைகுடத்தை ஏந்திக்கொண்டு
  6. காலநதி ஓடுகின்ற
  7. எதிரியின் பாசறைகள் எரித்திட
  8. குருவிக் கூட்டம் போல 
  9. கிழக்கு வானம்
  10. ஆகாயம் பூச்சிரிக்க

ஆதாரம்: வெளிச்சம் 1995.09 - பக். 71-73

 

 

 

"நெருப்பு நிலவுகள்" - பாடல் ஒலிப்பேழை மதிப்பீடு

 

  • திறனாய்வு: ச. கலாநிதி
  • மூலம்: வெளிச்சம் 1995.09
  • பக்கம்: 71-73

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தாயக மண்மீட்புப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றுதிரண்டு வடம்பிடிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் "படையணி நகரும் பெண்கள் படையணி நகரும்" என்ற அணிவகுப்பு நகர்வில் ஒரு கட்டாய தேவையை முன்னிட்டு ஒத்துழைப்பு நல்கி உதவவேண்டிய வேளையில் வெறும் காட்சிப் பொருள்களாக, கற்பனைக்குகந்தவர்களாக, வர்ணனைக்குரியவர்களாக மட்டும் இருக்க முடியாதபடி காலமாறுதல்களும் காலத்தின் தேவைகளும் எம்முன் நிற்கையில் தமிழீழப் பெண்கள் குனிந்த தலைகளை நிமிர்த்தி நெருப்பு நிலவுகளாக, நிமிர்ந்த புயல்களாக வெற்றி மகளிராகப் புறப்பட்ட, புறப்பட்டுக் கொண்டிருக்கின்ற, புறப்படவேண்டிய நிலையைச் சித்திரிக்கவேண்டிய தேவையே "நெருப்பு நிலவுகளின்" வெளியீடு என்று கூறலாம்.

விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் இரண்டாவது வெளியீடாகவும் கலை பண்பாட்டுக் கழக மகளிர் பிரிவின் முதலாவது உருவாக்கமாகவும் வெளிவந்திருக்கும் இந்த ஒலிப்பதிவு நாடாவானது புதுவை இரத்தினதுரையின் இரண்டு பாடல்களையும், கணேசமூர்த்தியின் மூன்று பாடல்களையும், ரமணனின் பாடலொன்றையும், இளம்போராளிகளான உதயலட்சுமி, யோகன் (பாதர்), தமிழவள், நெடுஞ்செழியன் ஆகியோரது பாடல்களையும் சேர்த்து பத்து இசைப்பாடல்களைத் தன்னகத்தே அடக்கியுள்ளது. ஒலிப்பதிவு நாடாவில் கவிஞர் தனது பாடலை எத்தகைய உணர்வு நிலையில் நின்று எழுதினாரோ அந்த உணர்வோட்டம் மாறாமல் பாடகர் அதனை உள்வாங்கிப் பாடவேண்டும். பாடற்கருத்துக்கும் பாடல்களின் குரலுக்கும் இசைந்தவாறு இசையமைப்பு அமைய வேண்டும். இந்த மூன்று விடயங்களும் இணையும்போதுதான் ஒலிப்பதிவு நாடாவானது ஒரு முழுமையைப் பெறும்.

நெருப்பு நிலவுகளைப் பொறுத்தவரையில் இசையமைப்பானது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்துள்ளது. போராட்ட வேகம், நம்பிக்கையுணர்வு, சோகம், மகிழ்ச்சி போன்ற உணர்வலைகளில் மிகத் துல்லியமாக இசை இயங்குகின்றது. "ஆடிப்பாடுவோம்" என்ற பாடலில் "ஆடிப்பாடுவோம் கூடிப்பாடுவோம் கவலைகள் மறந்தாச்சு" என்ற பாடலோசையும் அதனோடு இணையும் இசையும் மிகநன்றாக அமைந்துள்ளது.

'பெண்ணாக இருத்தல்' காரணமாக பெண்ணுக்கென்று எமது சமூகமும் இலக்கியங்களும் விதித்துள்ள காலத்துக்கு ஒவ்வாத சில தளைகளை பெண் தாண்டவேண்டும். இந்த ஒலிப்பதிவு நாடாவில் கவிஞர் கேட்கிறார்: இனியும் உனக்குச் சிறையா? இருளில் இருத்தல் முறையா?

"அள்ளிச் சொருகியே மெல்ல நடந்திடும்
கொள்ளை அழகுகள் போதும்!
கண்களில் தீயை மூட்டுங்கள்!
உங்கள் கால்களில் வேகங்கள் பூட்டுங்கள்!
"

"வண்ணக் கனவுகள் தன்னில் மிதந்தொரு
பெண்மை கரைந்தது போதும்!
கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட
விண்ணை விழுத்தலாம் வாரும்!
"

என்று கூறிப் பெண்ணுக்கும் பெண்மைக்கும் புதிய பாதையைக் காட்டி நிற்கிறார்.

"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின் மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே" என்றார் பாரதிதாசன். ஆனால் இன்றைய தமிழீழப் பெண்போராளிகள் தாயக மீட்புக்காகப் போராடும் அதேவேளை பெண்விடுதலைக்காகவும் குரல் கொடுத்து படையணிகளில், பாசறைகளில், மகத்தான சாதனை புரிந்துவரும் வேளையிதில் இப்போராட்ட வரலாற்றில் மகளிர் படையணியின் வெற்றிகள் பெண்களின் ஒருபரிமாணமெனில் மற்றொரு பரிமாணமாக இத்தகைய இலக்கியம்சார் ஆக்கங்களின் வெளிப்பாடுகளைக் கூறலாம். போராளிகளாக, கவிஞர்களாக, பாடகர்களாக இன்னும் பல்வேறு துறைகளில் வல்லவர்களாக செயற்படுவதைப் பார்க்கும்போது

"வளையல் அணியும் இளைய மலர்கள்
கவசம் அணியவே! - பழைய விதிகள்
எரியப் புதிய பரணி எழுதவே!
"

என்ற கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடலடிகளின் நிதர்சனத் தன்மை புரிகின்றது.

"ஓ வரும் வரும் மரணம் வரும் வரும் ..." என்ற கணேசமூர்த்தியின் பாடலில் நிரந்தரமான மான உணர்வின் தன்மையும், அதனோடு கூடிய தமிழர்களின் காவலனாகிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் பெரும்புயலையும் பூகம்பத்தையும் வென்று வெற்றிவாகை சூடும் உறுதி புலப்படும்.

அதேவேளை, "பெற்றவளை ஒருகணமும் மறந்ததில்லை அம்மா! போர்க்களத்தில் மானம் என்றும் இறந்ததில்லை அம்மா" என்ற பாடலடிகள் பெண்போராளியின் பாசமிகு குரலாக ஒலித்து தாய்மண் பற்றையும் தாய்ப்பற்றையும் உணர்த்தி நிற்கிறது.

பெண்போராளிகளின் போராட்டத் திறனைக் கூறும் பாடல்களும், போராட்ட வரலாற்றுக்கு அறைகூவல் விடும் பாடல்களும் உள்ள அதேவேளை பெண்ணினத்துக்கு இருந்துவரும் பாரிய பிரச்சினைகளில் ஒன்றான சீதனத்தைக் கண்டிக்கும் வகையில் போராளி யோகனின் "நிறைகுடத்தை ஏந்திக்கொண்டு..." என்ற பாடலில் வரும்

"மணம்கொடுக்கும் மலருக்குத் தேனின் துளிகள் பாரமோ!
தேடிவரும் வண்டுகளுக்கு சீர்கொடுக்கவும் வேண்டுமோ!
வாழ்க்கைத் துணை தேடிவந்தால் வஞ்சிப்பதுதான் முறையோ
"

என்று வருகின்ற அடிகள் பெண்ணுக்குள்ள பிரச்சினைகளில் ஒன்றை இனங்காட்டி நிற்கிறது என்று கூறலாம்.

"மழைகுளித்த மரங்கள் மீது தளிர்பிறக்குது!
எங்கள் மல்லிகையில் புதியதொரு முகை வெடிக்குது
"

என்ற உதயலட்சுமியின் பாடலடிகளும் குருவிக் கூட்டம் போல இருந்த எங்கள் வாழ்வானது கொடும் பறவைக் கூட்டத்தால் அழிந்து போனதையிட்டுக் கலங்கும் போராளிக் கவிஞர் தமிழவள் "போர்க்களமே விடிவுதரும் மனம் அறிந்தது" என்று கூறும் பாடலடிகளும் பெண்போராளிகள் என்ற வகையில் அனைத்துப் பெண்போராளிகளின் சார்பிலும் ஒலிக்கின்ற உறுதிமிக்க குரலாக ஒலித்து நிற்கின்றது.

ரமணனின் "ஆடிப்பாடுவோம் கூடிப்பாடுவோம்" என்ற பாடலில் "பெண்ணை மிதித்தவர் கண்ணைத் திறந்திடும் காலமும் உருவாச்சு" என்ற செய்தி கூறப்படுகிறது. சந்தோச உணர்வில் காலை விடியும் நேரம் வந்துவிட்டதால் உனது சோகமும் முடியும் என்ற உறுதியைக் கூறி, "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" என்ற பழங்கதையை மாற்றிவிட்ட புதிய கோலத்தைக் கூறுகிறார்.

"எதிரியின் பாசறைகள் பொடிப்பொடியாகும்" என்ற நெடுஞ்செழியனின் (போராளி) பாடலில் சோதனையில் சாதனை படைக்கும் வேகமும் மாவீரர் தியாகத்தால் வெற்றிவாகை சூடிடும் உறுதியும் கூடி கனவுகள் நனவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்ற நம்பிக்கைக் கீற்றும் வெளிப்பட்டு நிற்கிறது. கவிஞர்களது 'பெண்', 'பெண்மை' பற்றிய கருத்தோட்டங்களையும் போராளிகளது உள்ளத்துணர்வுகளையும் தாங்கி நிற்கின்ற பாடல்களை மிக அழகான குரல்வளத்தால் மெருகூட்டி கவிஞனின் உள்ளத்துணர்வுகளைத் தங்கள் குரலூடு எமக்கு அளித்துள்ள பாடகர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். வீரம் மட்டுமல்ல விவேகமும் பல்துறை ஆற்றலும் பல்துறை வளங்களும் உடையவர்கள் நாங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த ஒலிப்பதிவு நாடா மூலம் போராளிகள் நிரூபித்துள்ளார்கள்.

இந்த வகையில் "நெருப்பு நிலவுகள்" என்ற கலைப்பை மேலும் அணிசெய்யும் வகையில் நிலவில் புதிய கவிதை எழுத நிமிர்ந்த புயல்களை அவர்களின் புதிய நகர்வைச் சித்திரிக்கும் அழகிய ஓவியத்தை முகப்பாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இந்த நெருப்பு நிலவுகள் பாடல்களும் உங்கள் ஒவ்வொருவரது உணர்வுகளிலும் உட்காரத்தான் போகின்றது.

 

*****

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பகை வெல்லும் புலிவீரம்

 

 

 

பகை வெல்லும் புலிவீரம்.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.