Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பசுந்தேசம்

 

 

 

பசுந்தேசம்.jpg

 

pasunthesam.jpeg

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 233
  • Views 20.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    ஆ, இல்லை. நான் அதைச் செய்யவில்லை. வேண்டுமென்றால் தாங்கள் இங்கிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்:   கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய - பாடல்களும் உள்ளன.  https://www.eelam

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலின் பாடல்கள்       https://trfswiss.com/songs.php?album=158   ------------------------------------------       இந்த

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலைத் தேடும் பறவைகள்       இது முதலில் வெளியான அட்டை:   இது இரண்டாவதாக வெளியான அட்டை:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பரணி பாடுவோம்

 

 

 

மூல அட்டை:

parani paduvom.png

 

 

இரண்டாவது அட்டை:

பரணி பாடுவோம்.jpg

 

 

 

 

  • திறனாய்வு: -
  • மூலம்: விடுதலைப் புலிகள்: ஆனி 1991
  • பக்கம்: 5

 

விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினரது மூன்றாவது ஒலிப்பதிவு நாடாவாகிய "பரணி பாடுவோம்" வெளியீட்டு விழா அண்மையில் நடந்து முடிந்துள்ளது.

கரும்புலிகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்த ஒலிப்பதிவு நாடாவில் மொத்தம் 10 பாடல்கள் இருக்கின்றன.

இந்த ஒலிப்பதிவு நாடா ஒரு விசேட அம்சத்தைக் கொண்டுள்ளது. இதில் உள்ள எட்டு பாடல்கள் போராளிகளால் இயற்றப்பட்டவை என்பது முக்கியமானதொரு அம்சமாகும். ஒன்று ஒரு தேசபக்தத் தந்தையால் இயற்றப்பட்டிருந்தது.

எமது மூத்த உறுப்பினர் பேபி சுப்பிரமணியம், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணிப் பொதுச் செயலாளர் யோகி, கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, பைப், சகாதேவன் ஆகியோருடன் வன்னி மண்ணைச் சேர்ந்த திரு செல்லக்குட்டி என்பவரும் இப் பாடல்களை இயற்றியுள்ளனர். திரு செல்லக்குட்டியின் இரண்டு புதல்வர்கள் போராட்டத்தில் இணைந்து வீரமரணமடைந்துவிட்டனர். ஒருவரான கமல் இந்தியப்படைச் சண்டையின்போது யாழ்ப்பாணத்திலும், இன்னொருவரான லெப். சங்கர் சிலாபத்துறைத் தாக்குதலிலும் வீரமரணமடைந்துள்ளனர். தற்போது இவரது மகள் ஒருவர் இயக்த்தில் இருக்கின்றார்.

இவ்விதமாக "பரணி பாடுவோம்" ஒலிப்பதிவு நாடா, மற்றைய எல்லா எழுச்சிப் பாடல் நாடாக்களையும் விட தனித்துவமாக இருக்கின்றது.

இந்த ஒலிப்பதிவு நாடா எதிர்காலத்தில் நிகழப்போகும் ஒரு பிரமாண்டமான - சமூக தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் - மாற்றத்தின் குறியீடாக அமைந்துள்ளது எனலாம்.

அதாவது உள்ளார்ந்த ரீதியாக விடுதலை உணர்வால் விழுங்கப்பட்ட போராளிக் கலைஞர்களினால் கலை இலக்கியங்கள் படைக்கப்படுவது அதிகரிக்க இருக்கின்றது.

இது கலை - இலக்கிய - பண்பாட்டு அரங்கிற்கு ஒரு புதுமையையும் செழுமையையும் கொடுக்கும் என்பது உறுதி. இந்த ஒலிப்பதிவு நாடா இதற்கு கட்டியம் கூறுகின்றது.

இந்த ஒலிப்பதிவு நாடாவை வெளிக்கொணர்ந்த கலை, பண்பாட்டுக் கழகத்தினர் பாராட்டுக்குரியவர்கள்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பாசறைப் பாடல்கள்

 

 

 

இது நான்காவது இறுவட்டாகும். தமிழ்நாட்டிலிருந்து வெளியானது. குலை நடுங்கும் கொடூரங்கள் நிரம்பிய இந்தியப் படைக் காலத்தில் வெளிவந்தது.

 

paasaraip paadalkal.jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புதிதாய் பிறக்கின்றோம்

 

 

 

 

புதிதாய்ப் பிறக்கின்றோம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புதிய காற்று

 

 

 

இதிலுள்ள பாடல் வரிகளை கரும்புலி மேஜர் நிலவன் ( தரை) எழுதியுள்ளார். 

புதிய காற்று.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புதியதோர் புறம்

 

 

 

விடியலின் பாடல்கள் இசை இறுவட்டில் வெளியான சில பாடல்கள் புதியதோர் புறம் என்ற இறுவட்டில் தவறுதலான புரிதலால் சில வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

 

புதியதோர் புறம்.jpg

 

puthiyathor puram.jpg

 

 

 

 

 

நெருப்பில் விளைந்த பொறிகள்

 

  • திறனாய்வு: பாபு
  • மூலம்: ஈழநாதம்  10-02-1991
  • பக்கம்:

கடந்த 30-12-90 அன்று மட்டக்களப்பு பாடும் மீன் கலைமன்றத்தினரால் வெளியிடப்பட்ட 'புதியதோர் புறம்' ஒளிப்பதிவு நாடாவின் அறிமுகவிழா நல்லூர் சாதனா பாடசாலையில் நடைபெற்றது. தமிழீழக் களைஞர்களின் வளர்ச்சி வேகங்களின் வெளிப்பாடாக வெளிவந்த "இந்தமண் எங்களின் சொந்தமண்", "பூபாளம்", "வேங்கைகளின் விடுதலை வேதங்கள்" வரிசையில் 'புதியதோர் புறம்' எனும் புதிய வெளியீடான இது மிகவும் தரமானதாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் எமது மக்களின் விடுதலை வேட்கையையும் போராட்ட உணர்வுகளையும் ஆழமான கருத்துகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகின்றது. பாடு மீன் கலைமன்றத்தின் தலைவரான திரு அமிர்தராஜ் அவர்களின் இந்தப் பணியானது போராட்ட வளர்ச்சிக்கு கலைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன், மக்களை தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருப்பதும் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.

ஒலிப்பதிவு நாடாவின் ஆரம்பத்தில் வரும் சில வரிகள் ஒலிப்பதிவு நாடாத் தொகுப்பானது இந்த மண்ணின் விடிவிற்காய் வகிக்கும் பங்கினை விபரிக்க, அதைத் தொடர்ந்து பாடல்கள் ஆரம்பிக்கின்றன. முதல் பாடலே, எம்மை பிரமிக்க வைக்கின்றது. எங்கோ ஒரு தெய்வ சந்நிதானத்தில் அமைதியான ஒரு சூழலில் ஒலிக்கும் தேவகானம் போன்று அந்தக் குரல் ஒலிக்கின்றது.

"எந்தயர் ஆண்டது இந்நாடாகும்!

இதை எதிரிகள் ஆள்வது கேடாகும்!

வந்து நீ களத்தினில் போராடு,

அடிமை வாழ்விலும் சாவது மேலாகும்"

என்று ஆரம்பிக்கும் அந்தப்பாடல், மறைந்த தென் இந்தியப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தமிழீழ மக்களுக்காக பாடிச் சென்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது. கணீரென்ற அவரது தொனியும், இசை அமைப்பும் உண்மையில் ஒரு தேவகானமேதான். அழகான அந்தக் குரலுக்குரியவர் பாராட்டப்பட வேண்டியவரே. அந்தப்பாடலில் விசேட அம்சம் என்னவெனில், தமிழீழத்தின் வளங்களைப் பற்றியும், தமிழீழத் துரோகிகளின் கொடுமைகளையும் சித்தரித்து, இறுதியில்

"தாயகம் மீட்டிட நீ ஓடு - பிரயா

தானையில் சேர்ந்தொரு புலியாகு

போயினித் தெருவினில் விளையாடு – தமிழ்

பூத்திட புதியதோர் புறம் பாடு"

என்று அழகாக விபரித்திருக்கிறார் கவிஞர். அடுத்த பாடலும், எமது விடுதலைப் போராளிகளான புலிகளின் தன்மையை புலிகளின் மன உறுதியை எடுத்துச் சொல்வதைப் போன்று அமைந்த கவிஞரின் பாடலை ஆண்-பெண் குரலிசையால், சோடிப்பாடலாக அழகாகப்பாடி மெருகேற்றியிருக்கின்றார்கள் பாடகர்கள். பெண்குரலின் சங்கீத நயத்துடன் ஆரம்பிக்கும் அப்பாடல்,

"நெருப்பில் விளைந்த பொறிகள் - நாங்கள்

நஞ்சைத் தின்னும் புலிகள்,

இரும்பில் வார்த்த சிலைகள் - தலைவன்

இதயம் கவர்ந்த கணைகள்"

என்று தொடர்கிறது. பெண்குரல் மிகத் தெளிவாகவும், அழகாகவும் ஒலிக்கின்றது.

இதேபோல, இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்திரமற்ற ஒரு வாழ்க்கைப் பயணத்தில் நின்று கொண்டிருக்கும் குழந்தைகளை,

"தம்பிகளே அன்புத் தங்கைகளே நில்லுங்கள்

உங்கள் சரித்திரம் என்ன சொல்லுங்கள்!

போர்க்களம் சென்றிட ஒன்றாய் சேருங்கள்.

புதயுகம் பல படைப்போம் வாருங்கள்"

என கூவி அழைக்கும் கவிஞரின் பாடலை, அழகான குரலில் இனிமையாக சோகமாக பாடி மக்கள் மனதில் தன்னை பதியவைத்துள்ளார் ஒரு பாடகர். ஆண்குரல் மிக இனிமையாக ரசிக்கூடிய வகையில் இருக்கின்றது.

ஒவ்வொரு பாடல்களையும் வித்தியாசமான வகைகளில் இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் அடுத்தபாடலை ஒரு துள்ளிசையாக மெருகூட்டியிருக்கின்றார். காலம் சென்ற மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் கொள்கை விளக்க சீர்திருத்தப் பாடல்கன் போல அமைந்த இந்தப் பாடல் மிகவும் பிரமாதம்.

"போடு போடு வீரநடை போடு!

வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

மானமிருந்தால் தானே வாழ்வு"

என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் கடைசி நிலைகளில் பாடலின் இசையின் சந்தம் மாறி பின்னர் மீண்டும் பழைய ராகத்துடன் சேர்ந்து "போடு போடு வீர நடை போடு" என்று நான்குமுறை சுருதியை அதிகரித்துப் பாடி பாடலை முடித்து வைக்கும் போது எமக்குள்ளேயே ஒரு உத்வேகம் பிறக்கின்றது. குதிரை மீது சென்று கொண்டிருப்பது போல கற்பனை பண்ணி இசை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். நிச்சயமாக இந்தப் பாடல் சிறுவர் - மாணவர் – இளைஞர் - யுவதிகள் - முதியவர் என்ற வேறுபாடின்றி ஒவ்வொருவரின் வாயிலும் வெளிவரும் என்பது திண்ணம். இந்தப் பாடகருக்கு பாராட்டுக்கள் பலமுறை வழங்களாம்.

அதைத் தொடர்ந்து, "மானம் ஒன்றே வாழ்வென கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் பயலென எழுந்து ஓடி வந்தார் புலிவீரர்" என்று பெண்குரல் ஒன்று சோகமாக ஒலிக்கின்றது. குரலில் எந்தவித தள தளப்புகளும் இன்றி இனிமையாக பாடியிருக்கும் இந்தக் குரல் பாராட்டப்பட வேண்டிய குரல்.

போராட்டத்தின் சிந்தனையின்றி தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை தட்டியெழுப்புவது போலவும், வெட்டவெளியில் காவலரண்களில் நின்று போராடும் புலிகளின் நிலை பற்றியும் விளக்கும் வகையில் ஒலிக்கிறது ஓர் ஆண்குரல். "தூக்கமேனடா தமிழா தூக்கமேனடா! நிமிர்ந்து நில்லடா நீயும் துணிந்து செல்லடா" என்று ஆரம்பிக்கின்றது அந்தப் பாடல். உறுதியான குரலில் அழகாகப் பாடியிருக்கிறார் பாடகர். அது போல,

"சிங்களம் எங்களைக் கொன்று குவிக்கும்,

தமிழர் சிந்திய குருதியில் எம் மண் சிவக்கும்!

இங்கிவர் தீமையை தேசம் பொறுக்கும்,

கொடும் எதிரியை குதறிட புலிகள் கறுக்கும்"

என்று ஒருபாடல் ஆண்குரலில் ஒலிக்கிறது. இப்பாடலில் தென் தமிழ் ஈழத்தின் இன்னல்கள் தெரிகிறது. அதற்கேற்ற தொனியில் பாடியிருக்கும் பாடகருக்கு வாழ்த்துக்கள்.

அடுத்ததாக, ஒரு போராளி மாண்டுபோன தனது சக போராளிகளை அழைப்பது போலவும் தாம் ஒன்றாய் கூடித்திரிந்த காலங்களையும், இன்று பிரிந்து நின்று கலங்குவதையும் விவரித்து ஒரு பாடல் ஒலிக்கின்றது.

"மாண்டுபோன மைந்தர்களே என்னை சுமந்து நின்ற நண்பர்களே மீண்டும் இங்கே கூடுங்கள் ஈழம் மீட்போம் இங்கே வாருங்கள்.” என்று ஆரம்பிக்கும் இப்பாடலும் இனிமையாக இருக்கின்றது.

ஒரு வித்தியாசமான வகையில் அமைந்ததும் எமது போராளிகளை காத்து வந்த காடுகளை வரம் வேண்டிப் பாடுகின்றது ஒரு மழலைக் குரல். "காடுகளே காடுகளே கொஞ்சம் கேளுங்கள்! தமிழ் ஈழத்தின் வீரர்களை என்றும் காத்தே வாருங்கள்" என்று மழலையின் செல்லக் குரல் ஒன்று ஒலிக்கின்றது. இந்தக் குரல் மிக விரைவாக வளர்ச்சியடையக் கூடிய வேகம் தெரிகிறது. இந்தக் குரலுக்கு ஒரு பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகட்டும்.

"சத்தியத்தை காப்பதற்கு ராமன் வனவாசம் சென்றான்!

இலட்சியத்தைக் காப்பதற்கு தலைவன் உமை நாடி வந்தான்!

தாய்போல காத்து எங்கள் வீரர்களை ஆளாக்கி,

நீங்காத நினைவாக நெஞ்சமதில் வீற்றிடுவீர்"

என்ற கவிஞரின் கோரிக்கையும் பாடலுக்குரிய மழலைக் குரலும் அற்புதமாக இருக்கின்றது.

இறுதியாக, "வீட்டுக்கொரு மைந்தனே விரைந்து வா, அடிமை விலங்கை உடைத்தெறிய போராடுவோம்" என்று ஆரம்பிக்கின்றது ஒரு ஆண்குரல். மிக உறுதியாக போராட்டத்திற்கு அணிதிரட்டும் நோக்கம் கொண்ட இப் பாடலில்,

"நம்பி நேசம் போனதினால் வந்தவினை!

சொந்த மண்ணில் வாழ்வதற்கே அஞ்சும் நிலை!

கண்ணைக் கட்டி காட்டினிலே விட்டதயர்!

மண்ணை மீட்கப் போராடும் எங்கள் கதை”

என்ற வரிகள் எமது பரிதாபத்தை வெளிப்படுத்துகின்றன. பாடலுக்குரியவர் அழகாக, ஆழமான உணர்வுடன் பாடியுள்ளார். இவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

மொத்தத்தில், 'புதியதோர் புறம்' கொண்ட முத்தான பத்துப் பாடல்களும் மிக நன்றாக அமைந்திருக்கின்றன; இசையமைப்பு பிரமாத அடுத்த வெளியீடுகள் இதை விட சிறந்த இசையில் வெளிவர வாழ்த்துகிறேன். ஒலிப்பதிவு நன்றாக இருக்கின்றது. மொத்தத்தில் கலைஞர்களின் வளர்ச்சியும் "போடுபோடு வீரநடைபோடு" என்று கூறுமளவிற்கு அமைந்திருக்கின்றது.

இப்படியொரு தரமான ஒலிப்பதிவு நாடாத் தொகுப்பை வெளியிட்ட பாடும்மீன் கலைமன்றத்தினருக்கும் அதன் தலைவர் திரு. அமிர்தராஜ் அவர்களுக்கும் தமிழ்மக்கள் சார்பில் நன்றிகள்.

 

*****

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புதுவேட்டு புலிப்பாட்டு

 

 

 

புதுவேட்டு புலிப்பாட்டு.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புயல் அடித்த தேசம்

 

 

புயல் அடித்த தேசம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புயலாகும் புது ராகங்கள்

 

 

 

இவ்விறுவட்டில் சிங்களத்திலும் தமிழிலும் விடுதலைப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதுவும் ஊழியால் அழிந்து போனது.

இதன் மூல அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புலத்திலிருந்து ஓர் தமிழ்க்குயில்

 

 

 

 

புலத்திலிருந்து ஓர் தமிழ்க்குயில்.jpg

 

புலத்திலிருந்து ஓர் தமிழ்க்குயில்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புலத்தில் தமிழர் எழுச்சிப் போராட்ட பாடல்கள்

 

 

 

புலத்தில் தமிழர் எழுட்சிப் போராட்ட பாடல்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புலிகளின் புரட்சி இசை விழா

 

 

இதன் மூல அட்டையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புலிகள் ஓய்வதில்லை

 

 

இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை.  வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

 

pulikal oyvathillai.jpeg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புலிகள் பாடல்

 

 

இதுவும் ஊழியால் அழிந்து போனது; இதன் இசைகொண்ட பாடல்கள் அழிந்துபோய்விட்டன. இருப்பினும் இவ்விறுவட்டினுள்ளிருந்த ஒவ்வொரு பாடலின் வரிகளும் உள.

இதன் மூல அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புனர்வாழ்வு

 

 

 

புனர்வாழ்வு.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பூகம்பப் பொறிகள்

 

 

 

பூகம்பப் பொறிகள்.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பூநகரி நாயகன்

 

 

 

எவ்வட்டை முதலில் வெளியானது என்பது தெரியவில்லை.

poonakari naayakan.jpeg

 

பூநகரி நாயகன்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பூபாளம்

 

 

பூபாளம்.jpg

 

 

 

"பூபாளம்" - இம்மண்ணின் படைப்பு

 

  • திறனாய்வு: லோகன்
  • மூலம்: ஈழநாதம்
  • வெளியீட்டுத் திகதி: 1990.12.17

 

எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான இந்த போரிலே சிங்கள அரசு தமிழ்மக்களின் உரிமையையும் இறைமையையும் நசுக்கி எம்மின மக்களையும் அவர்களுடைய போராட்ட உணர்வுகளையும் நிர்மூலமாக்கி விடுவதில் முழுமூச்சுடன் செயற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எமது மக்களை தாயகப்பற்றுடன்கூடிய போராட்ட உணர்வு ஒருமுகப்படுத்தப்பட்டு கூர்மைப்படுத்தப்பட்டாலன்றி எமது சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொள்ளும் இந்த போரை வென்றெடுப்பதில் பெரும் உணர்வுரீதியான சிக்கல்களை எதிர்நோக்கவேண்டி ஏற்படும்.

இந்த சிக்கல்களை எதிர்நோக்கி சிங்கள அரசின் திட்டமிட்ட சதிகளை நிர்மூலமாக்குவதில் அண்மையில் நிதர்சனம் அலுவலகத்தில் வெளியிடப்பட்ட "பூபாளம்" பாடற் பதிவுநாடா பெருவெற்றி கண்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

மேஜர் காந்தரூபன், கப்ரன் கொலின்ஸ், கப்ரன் வினோத் ஆகிய கடற்புலிகளான கரும்புலிகளின் நினைவாக வெளியிடப்பட்ட இந்த எழுச்சிமிக்க பாடல்களைக் கொண்ட நாடா நிதர்சனம் வெளியீடு செய்த பாடல் வரிசையில் தமிழீழ மக்கள் மத்தியில் வெகுவாக பிரபல்யமாகி வருகிறது.

இவ்வெளியீட்டில் கருத்தாழம்மிக்க கவிதை நடையும் அதனைத் தொடர்ந்து அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. ஈழத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனையும் போராட்டத்திற்கு அறைகூவி அழைப்பதுபோல அமைந்திருக்கும் "பெற்றதாயின் மானம் காக்க புறப்படு மகனே" என்ற முதலாவது பாடல் இனிய இசை அமைப்புடன் அமைவதுடன் தமிழன்னை வாழ்த்துடன் ஆரம்பிப்பது போன்ற ஒரு உணர்வை கொண்டுவரும் என்பதில் ஐயமேதுமில்லை.

தொடர்ந்த பாடல்களான "மக்கள் சக்தி வெல்லும்" என்று ஆரம்பிக்கும் பாடலும் "செந்தமிழ் ஈழம் எமதென்னும் போதிலே" என்ற ஒரு தமிழ் மகனின் மனோநிலை பற்றிய பாடலும் திரும்பத் திரும்ப ஒருமுறை கேட்டவரின் வாய்களிலே வந்து செல்லும்.

எமது தமிழின விடுதலைப் போராட்டததில் ஒரு பகுதி இளைஞர்கள் மண்ணின் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் வீறு கொண்டெழுந்து போராடும் அதேவேளை ஒரு சிலர் தாம் தப்பினால் போதும் என்று உயிருக்கு அஞ்சி வாழ நினைப்பதை எடுத்துச்சொல்லும் வகையில் அமைந்திருக்கும் "இராவணன் ஆண்டால் எனக்கென்னடா!" என்ற பாடல் ஒவ்வொருவருடைய சிந்தையையும் கவரக்கூடியதாக உள்ளதுடன் மிக எளிமையான இசை அமைப்பும் கொண்ட ஒரு கர்நாடக சங்கீதப் பாடலாகும். இது நிச்சயம் இந்த வெளியீட்டில் முதலிடததைப் பிடிக்கும். தொடர்ந்து "மாணிக்கத் தேரினை மண்டியிட்டாடும் காணிக்கையாகவே தந்தாலும் மாணிக்க மண்ணைத் தருவோமா?" என்ற ஐந்தாவது பாடல் மண்ணின் பெருமையை எடுத்துச் சொல்வதாய் உள்ளது.

மேலும் "கரடு முரடு பாதைகளை கடந்து வந்தோம்", "கண்மணி ராஜா நில்லு என் கேள்விக்கு பதிலென்ன சொல்லு", "ரத்தத்திலே சிவந்த மண்ணே முத்தம் கொடுத்தேன் வா" போன்ற பாடல்கள் போராட்ட சூழலுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. தாள நயமும் சுருதி லயமும் இப்பாடல்களுடன் இணைந்து போவது மனதை கொள்ளை கொள்வதாக உள்ளது.

இறுதியாக பாடல் வரிசையில் "இந்த ஆண்டில் இன்றேல் எதிர்வரும் ஆண்டில் இருக்க மாட்டார் எங்கள் தோழர்கள் கூண்டில்" என்ற பாடல் சுதந்திரமான சுயநிர்ணய உரிமையை விரைவில் பெற்றுக்கொள்ளப் போவதை கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது.

இவை தவிர ஒவ்வொரு பாடல்களும் ஆரம்பிக்கும் முன்னர் அந்தப் பாடல் பற்றிய விளக்க உரை மிகவும் சாந்தமான குரலாக அமைந்திருப்பதும் பாடலை தெளிவுபடுத்துவதாக அமைந்திருப்பதும் தயாரிப்பாளர்களது திறமையை எடுத்துச் சொல்வதாக உள்ளது. இததகைய சிறந்து பாடல்களை இயற்றி அதற்கு எமது மண்ணின் மைந்தர்களை கொண்டே இசை அமைத்து அதனுடன் பாடகர்களின் குரலூடாக தேவகானமாக்கப்பட்ட பூபாளத்திற்கு வெறும் அறுபது ரூபா மட்டும் பெறுமதி இட்டிருப்பது மிகக் குறைவானதொன்றாகும்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பொங்குதமிழ் 2008

 

 

 

பொங்குதமிழ் 2008.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

போர் முரசம்/ விடுதலை முரசம்

 

 

 

ஈழத்தின் முன்னணி நாதஸ்வரக் கலைஞர்களான வி.கே. கானமூர்த்தி, வி.கே. பஞ்சமூர்த்தி ஆகியோர் தனித்தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி உதயசங்கர் மற்றும் தவில் வித்துவான் கணேஸ் ஆகியோருடன் இணைந்து வழங்கிய, போர்க் காலப் பாடல்களின் நாதஸ்வர இசை வடிவம்.

 

போர்முரசம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

போர்ப்பறை

 

 

போர்ப்பறை.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

போரிடும் வல்லமை சேர்ப்போம்

 

 

போரிடும் வல்லமை சேர்ப்போம்.jpg

மேல் படத்தில் அந்த அன்ரிக்கு சோதிப்பது லெப். கேணல் காந்தன்... 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

மண்ணுறங்கும் மாவீரம்

 

 

 

இது தான் மெய்யான அட்டையா என்பது குறித்து எனக்குச் சரிவரத் தெரியவில்லை. 

இது நான்காம் ஈழப் போர்க் காலத்தில் வெளிவந்தது.

மண்ணுறங்கும் மாவீரம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

மண்ணே வணக்கம்

 

 

 

மண்ணே வணக்கம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

மண்ணைத் தேடும் இராகங்கள்

 

 

 

மண்ணைத் தேடும் இராகங்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.