Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் – அகிலன்

April 28, 2024

4 1 இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் - அகிலன்

மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் உலகை அதிரவைத்துக் கொண்டிருந்த பின்னணியில்தான் ஈரான் அதிபா் கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தாா். அவரது இந்த விஜயம் இறுதிவரையில் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. போா் ஒன்றில் யாராலும் வெல்லமுடியாத நாடு எனக் கருதப்படும் இஸ்ரேல் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியதன் மூலம், சா்வதேசத்தின் கவனம் இப்ராஹிம் ரைசி மீது திரும்பியிருந்தது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் முதலாவது எதிரியாக அவா் மாறியிருந்தாா். இதனால், அவரது ஒவ்வொரு நகா்வும் அவதானிக்கப்படுகிறது. போா் பதற்ற நிலை தீவிரமடைந்திருந்த நிலையில்தான் அவா் இலங்கை வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

ஈரானின் போா் நகா்வுகளின் பின்னணியில் பிரதான நபராக இப்ராஹிம் ரைசி இருக்கிறாா் என்பது இரகசியமானதல்ல. அதனால் அவரது பயணங்களும் இலகுவானதாக இருக்காது, ஆபத்துக்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதும் எதிா்பாா்க்கப்பட்டதுதான். ஆனாலும், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் கடந்த வார விஜயத்தை திட்டமிட்ட படி முன்னெடுத்தாா். எந்தச் சவாலையும் எதிா்கொள்ளும் திராணி தனக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் அவா் வெளிப்படுத்தியிருக்கின்றாா்.

2 1 இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் - அகிலன்

அமெரிக்காவும், இந்தியாவும் அவரது வருகைகை்கு இராஜதந்திர ரீதயாக எதிா்ப்பை வெளியிட்டதாக செய்திகள் வந்தன. ஜனாதிபதித் தோ்தலை எதிா்கொண்டிருக்கும் ரணில் அதனை எதிா்கொண்டு இப்ராஹிம் ரைசியை வரவேற்றாா். இராஜதந்திர ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் இந்த விஜயம் றிஸ்க்கானது என்பது ரணிலுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால், இந்த விஜயத்தின் மூலம் ரணில் எதிா்பாா்த்த பலன்கள் அவற்றைவிட முக்கியமானது.

பாதுகாப்பு அணிகள்

இப்ராஹிம் ரைசியின் அவரது வருகைக்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே அவரது விஷேட பாதுகாப்பு அணிகள் இலங்கை வந்திருந்தன. அவா் வந்திறங்கிய மத்தள விமான நிலையம் உட்பட, அவா் பயணம் செய்யும் பாதைகள் அனைத்துமே கவனமாகப் பரிசோதிக்கப்பட்டன.

மத்தளவிலிருந்து உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக மலைப்பாதைகள் ஊடாக பதுளைக்கு அவா் செல்ல வேண்டியிருந்தது. இந்தப் பயணத்துக்கு ஹெலிக்கொப்டா் ஏற்பாடு செய்யலாம் என இலங்கை தரப்பு ஆலோசனை முன்வைத்தது. ஆனால், ஈரான் அதிகாரிகள் அதனை நிராகரித்து தரைப் பாதையைத்தான் தெரிவு செய்தாா்கள் என்று சொல்லப்படுகின்றது.

3 1 இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் - அகிலன்

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஈரான் அதிபர் மேற்கொண்ட இந்த விஜயம், பொருளாதார ரீதியாக மட்டுமன்றி அரசியல் இராஜதந்திர ரீதியாகவும் முக்கியமானது. தனித்துவமான எண்ணெய்க்கான தேயிலை ஒப்பந்தத்தால் குறிக்கப்பட்ட இந்த விஜயம், அதன் சாத்தியமான அரசியல் தாக்கங்கள் பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. வெளித்தோற்றத்தில் ஒரு பொருளாதார பரிமாற்றம் என்றாலும், வருகை உடனடி ஆதாயங்களுக்கு அப்பால் பல சா்வதேச பரிமாணங்களைக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு கையிருப்பு குறைதல், சா்வதேசக் கடன்களின் அதிகரிப்பு மற்றும் தவறான பொருளாதார முகாமைத்துவம் போன்ற காரணிகளின் கலவையால் உருவாகிய இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மலிவு விலையில் எண்ணெய்க்கான அவசரத் தேவையை இலங்கைக்கு உருவாக்கியுள்ளது. இதற்கு இலங்கைக்கு கைகொடுத்த முக்கிய நாடுகளில் ஈரான் பிரதானமானது.

பாரம்பரியமாக, எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை இந்தியாவை நம்பியிருந்தது. இருப்பினும், உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், ஈரானின் சலுகை கவர்ச்சிகரமானதாக மாறியது. “எண்ணெய்க்கான தேயிலை ஒப்பந்தமானது, ஈரானுடனான கடனைத் தீர்ப்பதற்கும் எதிர்கால எண்ணெய் இறக்குமதியைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு அதன் மிக மதிப்புமிக்க ஏற்றுமதியான தேயிலையை பண்டமாற்று செய்ய அனுமதிக்கிறது.

1 இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் - அகிலன்

இந்த விஜயம் இரு நாடுகளின் மூலோபாய நகர்வை வெளிப்படுத்துகின்றது. அணுசக்தித் திட்டத் தடைகள் காரணமாக சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஈரானுக்கு, புதிய பொருளாதாரக் கூட்டாண்மைகளை உருவாக்க இது ஒரு வாய்ப்பாகும். இலங்கை, தனது வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்த முயல்கிறது, ஈரானை ஒரு நீண்ட கால ஆற்றல் வழங்குனராக பார்க்கிறது. மேலும், இந்த விஜயமானது வரலாற்று ரீதியாக இலங்கைக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கும் ஒரு தேசத்துடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

குறைந்த விலையில்..

அமெரிக்கா, இந்தியா போன்றவற்றின் அழுத்தங்கள் இஸ்ரேலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கு மத்தியிலும் தன்னை வரவேற்ற ரணில் துணிந்தது ஈரான் அதிபருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. அதற்கும் மேலாக இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டனான உறவைப் பலப்படுத்திக்கொண்டமையும் இன்றைய போா்ச் சூழலில் இப்ராஹிம் ரைசிக்கு அவசியமான ஒன்றாகவே இருந்தது. பாகிஸ்தானின் நிலைதான் இலங்கைக்கும் ஏற்படலாம் என உள்நாட்டில் அரசியல் சக்திகள் தெரிவித்த நிலையில் இப்ராஹிம் ரைசியை வரவேற்க ரணில் தீா்மானித்தமைக்கு சில காரணங்கள் இருந்தன.

இப்ராஹிம் ரைசியுடனான பேச்சுக்களின் போது, சா்வதச சந்தை விலையை விட குறைந்த விலையில் எண்ணையை வழங்க ஈரான் அதிபா் சம்மதித்ததாகத் தெரிகின்றது. இதன் மூலம் இன்னும் சில வாரங்களுக்குள் உள்ளுா் சந்தையில் எரிபொருள் விலை குறையலாம். அதன் விளைவாக அத்தியவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளும் குறைவடையும். ஜனாதிபதித் தோ்தலில் தான் போட்டியிடுவதை அறிவிப்பதற்கு அது அவருக்குப் பொருத்தமான தருணமாக அமையும். ஈரானும் இவ்விடயத்தில் ரணிலுக்கு உதவும் மனப்பான்மையுடன்தான் உள்ளது.

இலங்கையின் நெருங்கிய பிராந்திய பங்காளியான இந்தியா, இந்த நகா்வுகளை கவலையுடன் பார்க்கக்கூடும். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் இந்தியா நீண்டகாலமாக ஒரு மேலாதிக்க நிலையைக் கொண்டுள்ளது. பலப்படுத்தப்படும் இலங்கை  ஈரான் உறவு இந்த நிலையைச் சிக்கலாக்கும். இந்தியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேண முயற்சிப்பதன் மூலம் இலங்கை எச்சரிக்கையுடன் நடந்துகொள்கின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் மிகுந்த இராஜதந்திரத்துடனும், மதிநுட்பத்துடனும் நடந்துகொள்கின்றாா். இந்தியா விரும்பாத ஒன்றைச் செய்யும் அதேவேளையில், இந்தியாவின் தேவைகள் சிலவற்றையும் செய்வதற்கான சமிஞையைக் கொடுக்கின்றாா். இவ்வாறான நகா்வுகளின் மூலம் புதுடில்லியை அவரால் சமாதானப்படுத்த முடிகின்றது.

ரணிலின் எதிா்பாா்ப்பு

பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வைக் கொண்டுவருகிறோம் எனக் கூறிக்கொள்ளும் தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை பாதுகாப்பதாக தன்னை சித்தரிக்க இந்த விஜயத்தை பயன்படுத்திக்கொண்டது. இது அவர்களின் இமேஜை உயர்த்தி, அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஸ்திரப்படுத்தும் என்பது ரணில் தரப்பின் எதிா்பாா்ப்பு.

2 2 இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் - அகிலன்

இருந்த போதிலும் இலங்கை  ஈரான் கூட்டாண்மையின் எதிர்காலத்தை பல சவால்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கைக்கு எண்ணெய் வர்த்தகத்தை கடினமாக்கலாம். இலங்கையில் அரசியல் நிலையற்றதாகவே உள்ளது, மேலும் தலைமையில் ஏற்படக்கூடிய எந்த மாற்றமும் எண்ணெய்க்கான தேயிலை ஒப்பந்தத்தின் தொடர்ச்சியை பாதிக்கலாம்.

ஈரானின் தொழில்நுட்பம்

இவ்வாறான சவால்கள் இருந்தபோதிலும், அதற்கு அப்பால், ஒத்துழைப்புக்கான கதவுககள் சில விடயங்களில் திறந்தே இருக்கின்றது. ஈரான் விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்தத் துறைகளில் அறிவுப் பரிமாற்றம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நீண்டகாலத்தில் நன்மை பயக்கும். அதனை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

4 2 இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் - அகிலன்

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம், முதன்மையாக பொருளாதாரக் கருத்தினால் உந்தப்பட்ட அதேவேளையில், கணிசமான அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது இலங்கையின் புதிய பங்காளிகளைத் தேடுவதையும், பரந்த பொருளாதார உறவுகளுக்கான ஈரானின் விருப்பத்தையும், பிராந்திய புவிசார் அரசியலின் சிக்கல்களையும் குறிக்கிறது.

இந்த உறவின் நீண்ட கால தாக்கத்தை பார்க்க வேண்டும். ஆனால் இந்த விஜயம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. இந்த புதிய அத்தியாயம் எவ்வாறு அமையும் என்பதை சா்வதேச அரசியல், இராஜதந்திர நகா்வுகள்தான் தீா்மானிக்கப்போகின்றன. இதற்குள் இலங்கையும், ஈரானும் எவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

 

https://www.ilakku.org/இலங்கை-வந்த-ஈரான்-அதிபா்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.