Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"வறுமையின் சிறகினை அறுத்தெறி"
 
 
அண்மையில் குண்டு தாக்குதலால் கால் இழந்த தந்தையையும், அயல் வீடுகளுக்கு சென்று துப்பரவு பணிகளில் ஈடுபடும் தாயையும், ஆறு பிள்ளைகளில் மூத்தவனாகவும் இன்று நான் இருக்கிறேன். எனக்கு வயது பதின்நான்கு  எம் குடிசை  "இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்"  போல், உணவின்றி வருந்தி, மாறி மாறித் தோண்டி எலிகள் மடிந்த சுவருடையதாக இருக்கிறது. தாயோ "பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து முலைக்கோள் மறந்த புதல்வனொடு" என்பது போல பால் காணாது, பால் குடிப்பதையே நிறுத்திவிட்ட பிள்ளையுடன், என் கடைசி தம்பியுடன் வாடி நிற்கிறாள். 
 
நான் என் குடிசையின் முன், தெருவிளக்கு வெளிச்சத்தில் பாடசாலையில் தரப்பட்ட வீட்டு வேலையான கணக்கும் தமிழும் செய்து கொண்டு இருக்கிறேன். என்றாலும் என் மனது வறுமை தந்த கொடுமை பற்றியே சிந்திக்கிறது!    
 
"மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;"
 
உலகத்து மக்களைக் காக்கும் உயர்ந்த நிலையில் உள்ள உன் போன்றவர்கள் தங்கள் நிலையைக் கருதாமல், அன்பில்லாமலும், அறத்தோடு பொருந்தாத பார்வையோடும் இருந்தால் என் போன்றவர்கள் இவ்வுலகத்தில் பிறவாமல் இருப்பார்களாக என்று எம் அரசையும் அதில் முதன்மை பதவி வகுக்கும் மந்திரிமார்களையும் உத்தியோகத்தர்களையும் வசை பாடிக்கொண்டே இருந்தது.
 
"பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை
5 நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம்
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்"
 
பயன் பொருந்திய பெரிய மேகம் மழை பெய்யாமல் இருப்பதால், குளங்களில் உள்ள குழம்பிய சேறு வெப்பமாய் இருக்கும் கோடைக் காலத்திலும் துளையுள்ள ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில் ஒளிக்கதிர் போன்ற கூர்மையான கொம்புகளையும் வளைந்த முகமும் உடைய ஆண் நத்தை இளம் பெண் சங்குடன் கூடும் நீர் விளங்கும் வயல்களுள்ள நாட்டையுடைய பெரிய வெற்றியுடையோய் ஆகிய நாட்டின் அரசே,  உன் ஊழலாலும், பாகுபாடு காட்டும் ஆளுகையாலும் இன்று எம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டாயே என்று அழாக் குறையாக ஏசிக்கொண்டும் இருந்தது. 
 
இனி அரசை நம்பி பயனில்லை,  சடாயுவின் சிறகினை வெட்டி வீழ்த்தி, அதன் தொல்லையை இலங்கை வேந்தன் இராவணன் முறியடித்தது போல வறுமையின் சிறகினை அறுத்தெறிய வேண்டும் என்ற துணிவு தானாக எனக்குள் தோன்றவும், அப்பா என்னைக் கூப்பிடவும் சரியாக இருந்தது. அப்பா ஸ்ரீமாவோ ஆட்சி காலமான 1971 இல் ஒரு உணவுப் பஞ்சம் வந்ததாகவும், அப்பொழுது வீட்டுத் தோட்டங்கள் எல்லோரும் செய்ததாகவும், தனக்கு கால் தான் இல்லையே தவிர கைகள் இருக்கின்றன,  தன்னால் முடிந்த ஒத்தாசை செய்வேன் என்றும் கூறினார்.  
 
வறுமை ஒழிப்புக்கு  கல்வி, அடிப்படை சுகாதாரம், குழந்தை பருவத்தில்  ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், எம் வளமான நிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இலகுவாக  உணவு தரும் மாற்றுச் செடிகளை, பயிர்களை நாட்டுதல் கட்டாயம் உதவும் என்று அப்பா தன் அனுபவத்தை மேலும் கூறினார்.  
 
எம் குடிசைக்கு முன்னால் இருந்த சிறு காணியிலும் மற்றும் சாலை ஓரத்திலும் மரவள்ளிக்கிழங்கு, கீரை வகைகள், மற்றும் சிறு தானியங்ககளும், வேலியோடு முருங்கை போன்ற மரங்களும் வைத்து, காலையும் மாலையும் அதைக் கவனிப்பதுடன், என் தங்கை தம்பிக்கு பாடமும் போதித்தேன். அத்துடன் ஒரு ஆடு, மூன்று நாலு கோழியும் வளர்த்தேன். என் படிப்பிலும் கூடக் கவனம் செலுத்தி, பாடசாலைக்கு அருகில் இருந்த நூலகத்தையும் கூடுதலான அறிவு பெற பாவித்தேன். 
 
ஒரு ஆறு மாதத்தில், உணவு பற்றாக்குறை ஓரளவு தீர்ந்ததுடன், அப்பாவும் தெம்பு கொண்டு இருந்த இடத்தில் தன்னால் முடிந்தவற்றை செய்யத் தொடங்கினார். நாலு ஆண்டுகள் கழிய நானும் உயர் வகுப்பில் சித்தியடைந்து , பல்கலைக்கழகம் போனேன். நல்ல காலம் , என் வீட்டில் இருந்த ஐந்து மைல் தூரத்தில் அது இருந்ததால், எனக்கு போய் வருவதும் மற்றும் வீட்டு தோட்டத்தை கவனிப்பதும் பெரும் பிரச்சனையாகவும் இருக்கவில்லை. மேலும் வங்கி தந்த மாணவர் கடன் வசதியும் உதவியது. தம்பி, தங்கைகளும் படிப்பில் சிறந்து விளங்கினார்கள். 
 
மேலும் நாலு ஆண்டுகள் செல்ல, நான் இப்ப எம் கிராம பாடசாலையிலேயே ஆசிரியராகவும் பொறுப்பேற்றேன், அங்கும் மாணவர்களைக் கொண்டு, சிறு தோட்டம் செய்கிறேன். அதன் பலனை மாணவர்களுக்கே பாடசாலை உணவாக கொடுக்கிறேன். மாணவர் வரவும் இப்ப கூடி உள்ளது. படிப்பு, விளையாட்டிலும் அவர்களின் ஆர்வம் பெருகி உள்ளது. நம் கையே நமக்கு உதவும் என்பதின் அர்த்தத்தை உணர்கிறேன்!   
    
"முயற்சி திருவினையாக்கும்" 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]  
314614522_10221974977186299_8602525523087034214_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=cS_R-To68x0Q7kNvgGDNU62&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAh0UDYPvZ-3v9-Gs1tBog535Rdh_CymxJU5MR4uNYVUg&oe=663433A7 No photo description available. No photo description available. 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.