Jump to content

“ யாரொடு நோகேன்...." - T. கோபிசங்கர்


Recommended Posts

“ யாரொடு நோகேன்……..

2015

சனி இரவு 10:30 இருக்கும் சூப்பர் சிங்கர் பாத்துக்கொண்டு இருந்தன் . விளையாடிக் கொண்டிருந்த phoneஐக் கொண்டந்து “அப்பா உங்களுக்கு call “எண்டு தந்தாள் மகள். 

சேர் “இருபத்தி ஐஞ்சு வயசு , கிளிநொச்சீல இருந்து அனுப்பினவை “எண்டு சொல்லத்தொடங்க , சரி நான் வாறன் எண்டு phone ஐ வைச்சிட்டு சாரம் கழற்றி உடுப்பு மாத்தி வெளிக்கிட்டன். அங்க போய் உடனயே operation தொடங்க வேணும் எண்டு யோச்சபடி. 

இண்டையான் on call surgeon னிடசொல்லி அவையின்டை operationஐ நிப்பாட்டி எங்கடை case ஐச் செய்யக் கேக்கோணும், ஆர் anaesthetist எண்டு கேக்க வேணும் ICU bed தேவைப்படும் ,bed இல்லாட்டித்தான் பிரச்சினை எண்டு பல யோசனைகளோடு நான் வெளிக்கிட்டன். Theatre க்கு நான் போக எல்லாம் ரெடியாகி அடிபட்டவனை உள்ள எடுத்து மயக்கம் குடுக்கத் தொடங்கீட்டினம் . வெளீல நிண்ட attendant ரெஜிபோம் பெட்டியோட இரத்தம் எடுக்க ஓடிப்போக நானும் உடுப்பு மாத்தி உள்ள போனன் . X-ray எடுக்க கேட்டனான் தான் duty இல்லை ஆனாலும் வாறன் எண்ட தயாபரன் உடுப்பு மாத்தி உள்ள நிண்டான். nurse மதி எல்லாத்தையும் ஒழுங்கு படித்தீட்டு assist பண்ண ready யா நிண்டான்.

இரண்டு மணித்தியாலத்திக்கு பிறகு வெளீல வந்து யாரும் சொந்த காரர் இருக்கினமோ எண்டு பாக்க ஒருத்தரும் இல்லை. எல்லாம் முடிஞ்சுது எண்டு நானும் வீட்டை வெளிக்கிட்டன்.

அடுத்த நாள் காலமை போக , கைக்குழந்தையோட இன்னொரு பெரிய குழந்தை ICU வாசலில நிண்டது. “Sir இவை தான் இரவு வந்த …” எண்டு Nurse சொல்ல , கையில இருக்கிற அழுற சின்னனை, எப்படி ஒராட்டோணும் எண்டும் தெரியாமல் குறுக்கும் மறுக்குமா ஆட்டி ஆட்டி , “அவருக்கு எப்பிடி “, எண்டு கேக்கத்தான் உறவு முறைகள் விளங்கிச்சு. 

முள்ளிவாய்க்கால் நேரம் கட்டினாக்களை பிடிக்கமாட்டாங்களாம் எண்டு அவசரமாக நடந்த தாலி போடும் விழாவுடன் ஓடத் தொடங்கி ,பெயர்ச்சிகளால் இடம் மாறி ,இலகு நிவாரணங்களுக்காக இப்ப தஞ்சம் புகுந்தது திருவையாறு எண்ட கதையை கேட்டிட்டு, அவருக்கு நடந்ததை எப்படி சொல்லுறது எதை சொல்லாமல் விடுறது , சொன்னால் விளங்குமா எண்டு நானும் குளம்பி, வழமையான டாகுத்தர்மாரின்டை பாசையில, “அம்மா முள்ளந்தண்டு பாதிச்சிட்டுது operation செய்தனாங்கள் , முன்ணாண் , நரம்புகள் எல்லாம் பாதிச்சிட்டுது , எழும்பி நடக்கிறது கஸ்டம் , எண்டு கொஞ்சம் விளங்காத மாதிர சொன்னன். எல்லாம் விளங்கின மாதிரிக் கேட்டுட்டுப் பாவம், “ ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே எண்டு மீண்டும் அப்பாவியாய் கேக்க” , நான் இதுக்கு என்னத்தை சொல்லிறதெண்டு யோசிக்க ,security வந்து “அம்மா நேரமாகீட்டுது இப்ப போட்டு பிறகு வாங்கோ”எண்டு என்னை காப்பாத்தி விட்டான் . 

ரெண்டு நாளால Ward க்கு மாத்தின அவனுக்கு பாக்க ஆக்கள் இல்லாத படியால ஆம்பிளை வாட் எண்டாலும் பரவாயில்லை எண்டு கொஞ்ச நேரம் பகல்ல மனிசியியையும் பிள்ளையோட அவனுக்குப் பக்கத்தில நிக்கவிட்டம். முதல் மூண்டு நாளும் ஒவ்வொரு நாளும் வந்த மனிசி பிறகு விட்டு விட்டுத் தான் வந்திச்சுது . ஒரு கிழமை கழிய திருப்பியும் நான் அவனின் நிலமையை விளங்கப்படுத்தினன். இப்ப நிலமை விளங்க அவரால இனி நடக்க முடியாததை உணர்ந்து “அது நடக்காப்பிணம் நான் நடைபிணம்” எண்டதை அறிந்து நடந்தாள் அவள்.

இளம் பெடியன் இப்படி நடந்திட்டு ,பாவம் எண்டு physiotherapist எல்லாம் கடுமையா உழைக்க , எல்லாருக்கும் குடுக்கும் அதே காருண்யத்தை ward nurses இவனுக்கு கொஞ்சம் கூடக் குடுக்க, அவனுக்குள் ஒரு ஒளிவட்டம் தெரியத்தொடங்கிச்சு. 

அவள் வந்து போறது இன்னும் கொஞ்சம் குறைய , “ என்ன மூண்டு நாளா அவவைக்காணேல்லை”எண்டு வாட்டில கேக்கத்தான் வீட்டு நிலமை விளங்கியது . வீட்டில ஒரு சொந்தங்களும் இல்லை எண்டும், இருக்க இடம் குடுத்தது தூரத்து சொந்தமாம் எண்டும். 2009 க்கு பிறகு ஊரப்பக்கம் முளைத்த கம்பனிகள் ஒண்டில Lease க்கு எடுத்த Auto , ஓடித்திரியேக்க சாப்பிட மட்டும் காணுமான காசு கிடைக்க முதல் முதலா வாழக்கையில் பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்படத்தொடங்கினது எண்டு சொன்னான் . எப்பவாவது ஒரு முன்னேற்றம் வரும் எண்ட நம்பிக்கையில் மட்டுமே வாழுற வாழ்க்கையில் மீள்குடியமர்வு, நிவாரணம் , சமுர்த்தி, வீட்டுத்திட்டங்கள் எண்ட நம்பிக்கைகள் ஏனோ அந்நிய நாடுகளின் அனுசரணை போல இருந்தும் இல்லாமல் இருந்தது. 

ஒரு மாசமா இருந்தவனைப் பாக்க மனிசி வாறதும் குறையத் தொடங்கிச்சுது. கடைசியா வரேக்க கொஞ்சச் சாமாங்களும் Nestomalt ரின் ஒண்டும் கொண்டு மனிசி வந்தது, அதுக்குப் பிறகு காணேல்லை. சரி எண்டு எல்லாம் முடிய அவனை ambulance மூலம் கிளிநொச்சிக்கு திருப்பி அனுப்பி வைச்சம் . 

ஒரு நாள் நான் கிளினிக் முடிச்சு வெளீல வரேக்க பிள்ளையோட அவன்டை மனசி நிண்டுது. ஏனெண்டு கேக்க , இல்லை உங்களை பாக்கத்தான் எண்டு ஒரு form ஒட வந்தவளை கூட்டிக்கொண்டு போய் முள்ளந்தண்டு வடம் பாதிப்பு எண்டு உறுதி செய்து குடுத்து விட ஒரு ஓட்டோவில் ஏறிப் போறதைப் பாக்க வந்த கவலையை call ஒண்டு போக்கியது. 

மூண்டு மாதத்தால வழமை போல கிளினிக்குக்கு ஆஸ்பத்திரிக்கு அந்தப்பெடியன் நடந்து walking stick ஓட நடந்து வந்தான் , எனக்கே என்னை பெருமைப்பட வைச்ச சந்தர்ப்பம் அவன் walking stick ஓட நடந்தது. 

“சேர் வாகனத்தை பொலிசில இருந்து எடுக்க license கேக்கிறாங்கள் , license தரமாட்டாங்களாம் எண்டு சொல்லுறாங்கள் , தாற எண்டா உங்கடை கடிதம் வேணுமாம்” எண்டபடி உள்ள வந்தான். Recommended for modified three wheelers எண்டு குடுத்துப்போட்டூ , அவன்டை மனிசியேயும் பிள்ளையேயும் தேடினா காணேல்லை. அடக்கமுடியாத தமிழனின் விடுப்பு குணத்துடன் , “ எங்க மனிசி பிள்ளையைக் காணேல்லை” எண்டு கேக்க ஒரு சங்கடத்துடன் அவன் பதட்டப்பட , அப்படியே அடுத்த patient உள்ள வர , உள் மனதால் அவனையும் வெளிக்கண்ணால் வந்த நோயாளிகளையும் பார்க்கத் தொடங்கினன். 

கிளினிக் முடிஞ்சு வெளீல வர அவன் car அடீல நிண்டான். எனக்காகத் தான் எண்டு அறிஞ்சு என்னைத் தனிமைப்படுத்தினேன். இல்லைசேர் இப்ப அவ எண்டவன் தன்டை நிலைமையைச் சொன்னான். அண்டைக்கு இரவு டிப்பரோட அடிபட்டு சாக இருந்தவன் , இப்ப உயிர் தப்பினாலும் நானும் படுத்த படுக்கை , செலவளிக்க சொத்துமில்லை, சேர்த்து வைச்ச சொந்தங்கள் உறங்கு நிலை விதைகளாய் முள்ளிவாய்க்காலில போட்டுது. கட்டினதால விழுதாய் வந்த முளை கையில, பஸ்ஸுக்கு நிக்கேக்க பாவப்பட்ட ஒரு ஓட்டோக்காரன் உதவிக்கரம் நீட்ட அவள் பற்றிக்கொண்டால் நீரில் மூழ்கும் போது கிடைத்த துரும்பு மாதிரி எண்டதை அறிஞ்சன். 

ஓடம் கவிண்டு நீரில் மூழ்க , உள்நீச்சலோ எதிர் நீச்சலோ தெரியாமல் தண்ணியில் நிக்க கூட திராணியற்று தத்தளித்து, கைச்சுமையுடன் நிண்டவளுக்கு அந்தக்கை ஓரு அபயக்கையாக அதை இறுக்கவே பற்றிக்கொண்டாள் எண்டதையும் சொன்னான். 

ஓட்டோவில் வந்து கடைசி நாட்களில் ஆஸபத்திரியில் அவனையும் பாத்து தேவையானதை எல்லாம் எனக்கு வாங்கி குடுக்கக காசும், கையில இருந்த பிள்ளைக்கும் பாலும் சாப்பாடும் கிடைக்க , எல்லோர் பசியும் தீரத்தொடங்கினது எண்டது பிறகு தான் வடிவாய் விளங்கிச்சிது. அதுவே சில மாசத்தில நிரந்தரமானது எண்டதை குற்றமாச் சொல்லாமல் யதார்த்தம் அறிந்து சொன்னான்.

“போன கிழமையும் கண்டனான் அவனோட ஓட்டோவில போனவள் பிள்ளையையும் கொண்டு, பிள்ளையும் சிரிச்சுக்கொண்டு இருந்தது . இரண்டு பேரும் ஆளை ஆள் கண்டனாங்கள் , கண்டிட்டு ….”அவன் சொல்லி முடிக்கேல்லை.

“இப்ப நான்கொஞ்சம் பிடிச்சுப் பிடிச்சு நடப்பன், கக்கூசுக்கு தான் குந்தி எழும்ப முடியாது , கதிரையில ஓட்டையை போட்டு சமாளிக்கிறன். சேர் அந்த மூத்திரக்குழாய் மாத்திறது தான் பிரச்சசினை , இதை அப்பிடியே எடுத்தால் என்ன” எண்டு கேட்டவனின் விரக்தியை உணர்ந்து , அதைப்போக்க , தம்பி நடக்கத்தொடங்கின படியால் இதுகும் கொஞ்சம் முன்னேற்றம் வரும் எண்டு ஒரு தெய்வ நம்பிக்கையோடு சொன்னன். “சரி சேர் இப்ப திருப்பியும் ஆட்டோ ஓடுற படியால் காசு வருது , தனி ஆள் தானே செலவில்லை” எண்ட படி கைத் தடியை மெல்லவும் நம்பிக்கையை உறுதியாயும் ஊண்டி நடக்கத் தொடங்கினான்.

அம்புலிமாமாவில வாற வேதாளம் கதைக் கேள்வி எனக்கும் வந்திச்சுது ? “இதில் யார் செய்தது குற்றம்“ எண்டு. விடை தெரியாமல் நான் யோசிக்க , எங்கயோ தூர ஒரு கோயிலில போட்ட loud speaker , “ யாரொடு நோகேன் யார்க்கெடுத்துரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால் “ எண்டு பாடத் தொடங்கிச்சுது

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) மூன்று வருட காலத்திற்கு நாணய மாற்று கருமப்பீடங்களை இயக்குவதற்கான ஏலத்தில் ஐந்து நிறுவனங்கள் வென்றுள்ளன. அவற்றின் மொத்த ஏல மதிப்பு 2.3 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாகும். இதன்படி,  இலங்கை வங்கி 798.028 மில்லியன் ரூபாய்களுடனும், சம்பத் வங்கி 633.662 மில்லியன்களுடனும், கொமர்சல் வங்கி 381.364 மில்லியன்களுடனும், தோமஸ் குக் லங்கா (பிரைவேட்) லிமிடெட் 299.064 மில்லியன்களுடனும், ஹட்டன் நெசனல் வங்கி 225.689 மில்லியன் ரூபாய்களுடனும் ஏலத்தில் வென்று, நாணய மாற்று கருமப்பீடங்களை தக்கவைத்துள்ளன. தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு  துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த பிரேரணைக்கு அமைவாக நேற்று அமைச்சரவை இந்த ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏல ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன. https://tamilwin.com/article/five-entities-win-bia-currency-exchange-counter-1730964676#google_vignette
    • தென்னிந்திய மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து காலவொட்டதில் பிரிந்தன என்றால் எல்லோரும் ஒரே மரபு இன மக்கள்  தானே. இதிலென்ன தமிழ் பெரிய மேளம், தெலுங்கு சின்ன மேளம் என பிரிப்பு என்பது புரியவில்லை. எமக்கு தொடர்பில்லாத பக்கத்து நாட்டில் சாதிப்பிரிவினைகளை ஊக்குவிக்கும் கதையாடல்களை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ள நாம் எமது நாட்டில் இன ஒடுக்குமுறை என்று ஒலமிடுவது முரண்பாடாக தெரியவில்லையா? 
    • அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பிடம் தோற்கும் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை தோற்கடித்து, அமெரிக்க அதிபராக மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைகிறார் டொனால்ட் டிரம்ப். டிரம்புக்கும் ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி, பலர் எதிர்ப்பார்த்தது போல மிக நெருக்கமானதாக இல்லை. 2020-ஆம் ஆண்டு போல் அல்லாமல், ஆரம்பம் முதலே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் டிரம்புக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் கடந்த ஜுலை மாதம் விலகிய பிறகு, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கமலா ஹாரிஸ். 2016-ஆம் ஆண்டு டிரம்ப் அதிபரான போது ஹிலாரி கிளிண்டன் அவரிடம் தோல்வியை தழுவினார். அதன் பிறகு டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆவார், அவர் தோற்றதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள் என்னென்ன?   பொருளாதாரம் வேலையின்மை குறைவாகவும், பங்குச் சந்தை வலுவாகவும் இருந்த போதிலும் கூட அமெரிக்கர்கள் பலர் பணவீக்கத்தின் விளைவுகளை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் அவர்களுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. 1970-களில் இருந்ததை விட பணவீக்கம் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்ப டிரம்புக்கு ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. “நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது செழிப்பாக இருக்கிறீர்களா?” என்ற கேள்வியை அவர் மக்களிடம் முன் வைத்தார். 2024-ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில், ஆட்சியில் இருக்கும் கட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நிலவும் பணவீக்கம் இதற்கு ஒரு காரணமாகும். அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்துக்காக காத்திருந்துள்ளனர். நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே நாட்டின் போக்கு குறித்து திருப்தியாக இருக்கின்றனர். மூன்றில் இரண்டு பேர் நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கைக் கொள்ளவில்லை. “பண வீக்க உயர்வுக்கு பைடனின், பெரிய செலவுகளை உள்ளடக்கிய திட்டங்களும் காரணமாகும். இது மக்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாகவே இருந்தது. பைடனின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகின. இதனால் கமலா ஹாரிஸுக்கு தேர்தல் வெற்றி சவாலானது” என்று வெளியுறவுக் கொள்கைகள் குறித்து எழுதி வரும் மைக்கேல் ஹிர்ஷ் கூறினார். சி.என்.என் ஊடகத்தின் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகளின் படி, பொருளாதாரத்தை கையாள்வதில் ஹாரிஸை விட டிரம்புக்கே தங்கள் ஆதரவு என 50%க்கும் மேலானவர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் தங்களின் பிரதான பிரச்னை என்று 31% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். பைடனின் செல்வாக்கின்மை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைடனின் பொருளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன மாற்றத்துக்கான வேட்பாளர் என்று கமலா ஹாரிஸ் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஜோ பைடன் ஆட்சியின் துணை அதிபராக இருந்து கொண்டு, தனது தலைமையிடமிருந்து தன்னை தனித்துக் காட்டுவதில் அவர் சிரமப்பட்டார். பணவீக்கத்தை கையாள்வதிலும், அமெரிக்கா - மெக்சிகோ எல்லை பிரச்னையை கையாள்வதிலும் அமெரிக்கர்களுக்கு பைடன் மீது அதிருப்தி இருந்த போதிலும், கமலா ஹாரிஸ் பைடனுக்கு விசுவாசமாக இருந்துள்ளார். இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாக, ஏபிசி ஊடகத்தின் தி வியூ என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பங்கேற்ற போது நிகழ்ந்ததை அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தனது பின்புலத்தைப் பற்றி தெரியாத அமெரிக்கர்களுக்கு கமலா ஹாரிஸ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பலர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தனர். ஆனால், பைடனை விட தான் எவ்வாறு மாறுபட்டவராக இருப்பார் என்று கேட்டதற்கு விளக்கமளிக்க கமலா தடுமாறினார். “எனக்கு எதுவும் தோன்றவில்லை” என்று அவர் பதிலளித்தார். இது டிரம்பின் பிரசார விளம்பரத்தில் பின்பு பயன்படுத்தப்பட்டது. இந்த உரையாடல் கமலாவுக்கு ‘நாசகரமானதாக’ அமைந்தது என்று பராக் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகர் டேவிட் எக்செல்ராட் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியில் ஒரு “பிம்பச் சிக்கல்” நிலவுவதாக அந்தக் கட்சியுடன் தொடர்புடையவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒருவர், முதலில் கட்சியில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மேல்தட்டு ஆட்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று பிபிசியின் லோன் வெல்ஸிடம் கூறினார். வேறு சிலர், கட்சியின் பிரசாரத்துக்கான முயற்சிகளை பாராட்டினர். விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, கட்சியின்‘பிம்பச் சிக்கலுக்கு’ காரணம் என்று கருதினர். குடியரசு கட்சி ஆதரவாளருடன் டிரம்பின் பிரசாரக் கூட்டத்தின் போது நடந்த உரையாடல் தனக்கு நினைவுக்கு வருவதாக வெல்ஸ் கூறுகிறார். “குடியரசுக் கட்சியை டிரம்ப் முற்றிலும் ‘மறு உருவாக்கம்’ செய்துள்ளார் என்று அந்த ஆதரவாளர் கூறினார். மேல் தட்டு மக்களின் கட்சி என்ற பிம்பத்திலிருந்து விலகி, உழைக்கும் வர்க்கத்தினரை டிரம்ப் அணுகினார். அதே நேரம் ஜனநாயகக் கட்சியினர் ஹாலிவுட்டின் கட்சியாக மாறிவிட்டதாக அவர் கூறினார்” என்று வெல்ஸ் தெரிவித்தார்.   சமூக பிரச்னைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருத்தடை விவகாரத்தை கமலா ஹாரிஸ் கையில் எடுத்த வேளையில் குடியேற்ற விவகாரத்தை டிரம்ப் பேசினார் பொருளாதாரத்தை தவிர, தேர்தலை தீர்மானிக்கக் கூடியவை உணர்ச்சி மிகுந்த விவகாரங்கள் ஆகும். கருத்தடை விவகாரத்தை ஜனநாயகக் கட்சியினர் கையில் எடுத்த போது, குடியேற்ற விவகாரம் குறித்து டிரம்ப் பேசினார். பைடனின் ஆட்சியில் நடைபெற்ற வரலாறு காணாத எல்லை மோதல்களும், குடியேற்றம் காரணமாக எல்லைக்கு அருகில் இல்லாத மாகாணங்களிலும் ஏற்பட்ட தாக்கங்களும், இந்த விவகாரத்தில் பைடனை விட டிரம்ப் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொள்ள காரணமாக இருந்தன என்று ப்யூ ஆய்வு மையம் நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. எடிசன் ஆய்வு கருத்துக்கணிப்புகளின் படி, கருத்தடை உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த கமலா ஹாரிஸின் தீவிர பிரசாரம், பெண் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு 54% ஆதரவை பெற்றுத் தந்தது. டிரம்புக்கு 44% ஆதரவு மட்டுமே இருந்தது. எனினும், 2020-ஆம் ஆண்டில் தனது போட்டியாளருக்கு 42% பெண் வாக்காளர்களின் ஆதரவு இருந்த போது, பைடனுக்கு 57% பெண்களின் ஆதரவு இருந்தது. தனது போட்டியாளரை விட கமலா பெற்றிருந்த முன்னிலை, பைடன் பெற்றிருந்ததை விட குறைவாகும். டிரம்பின் ஆதரவாளர்களில் 54% ஆண்கள், 44% பெண்கள் ஆவர். இறுதியில், 2022-ஆம் ஆண்டு கருத்தடை விவகாரத்துக்கு இருந்த தாக்கம் இந்த முறை இல்லை. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் ஹூவர் நிறுவனத்தில் உள்ள பிரிட்டன் அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் நியால் ஃபெர்குசன், “அமெரிக்க வாக்காளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி கடந்த நான்கு ஆண்டுகளின் கொள்கைகளை மறுத்துள்ளனர்” என்கிறார். பண வீக்கத்தை உண்டாக்கிய பொருளாதாரக் கொள்கைகள், மத்திய கிழக்கில் போருக்கு இட்டுச் சென்ற வெளியுறவுக் கொள்கை, சமூக கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறுகிறார். “ஜனநாயக கட்சி தனது பல முற்போக்கான முன்னெடுப்புகளில், வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தை மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்கர்களையும், ஹிஸ்பானிக் மக்களையும் அந்நியப்படுத்தியது. நாடு முழுவதிலும் மக்களை அந்நியப்படுத்தியது” என்று அவர் பிபிசி ரேடியோ-4 நிகழ்ச்சியில் பேசிய போது தெரிவித்தார். ஜனநாயகக் கட்சிக்கு தெளிவான செய்தி கிடைத்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு இந்த கொள்கைகள் தேவை இல்லை. அவர்களுக்கு வலிமையின் மூலம் அமைதி வேண்டும். பணவீக்கம் இல்லாத செழிப்பு வேண்டும்.   கருப்பின மற்றும் லத்தீன் வாக்காளர்களிடையே குறைந்த செல்வாக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லத்தீன் அமெரிக்கர்கள், குறிப்பாக ஆண்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றார். பென்சில்வேனியா மாகாணத்தையும் அதன் 19 தேர்வாளர் குழு வாக்குகளையும் டிரம்ப் கைப்பற்றிய போது, அவர் வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழையப் போகிறார் என்பது உறுதியானது. 1988-ஆம் ஆண்டு முதல் அந்த மாகாணத்தை ஜனநாயகக் கட்சி ஒரே ஒரு முறை மட்டுமே, 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் தோற்கடித்த போது மட்டுமே இழந்துள்ளது. அரிசோனா, நெவேடா, ஜார்ஜியா, வட காரோலினா போன்ற முக்கியமான மாகாணங்களில் ஹாரிஸ் தனது பிரசாரத்தின் போது அதீத கவனம் செலுத்தியிருந்தார். டிரம்ப் ஆட்சியின் போது ஏற்பட்ட பிரிவினைகளால் வெறுப்படைந்த, அங்குள்ள ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களையும் தன் பக்கம் ஈர்க்க இந்த முயற்சிகளை ஹாரிஸ் மேற்கொண்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை. கருப்பினத்தவர், லத்தீன் அமெரிக்கர்கள், இளம் வாக்காளர்களிடம் ஜனநாயகக் கட்சிக்கு வழக்கமாக கிடைக்கும் ஆதரவு இந்த முறை சிதறியது. கல்லூரி படிப்பை முடிந்த நகரவாசிகளிடம் கமலா தனது ஆதரவை தக்க வைத்துக் கொண்டாலும், ஜனநாயகக் கட்சியின் கோட்டைக்குள் டிரம்புக்கு கிடைத்த ஆதரவை தோற்கடிக்க அது போதவில்லை. எடிசன் ஆய்வு மையத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, கமலா ஹாரிஸ் கருப்பின மக்களின் 86% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 53% வாக்குகளையும் பெறுவார் என்று கூறியது. எனினும் 2020-ஈல் பைடன் இதை விட அதிக முன்னிலை வகித்திருந்தார். அவர் கருப்பின மக்களின் 87% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 65% வாக்குகளையும் பெற்றிருந்தார். லத்தீன் ஆண் வாக்காளர்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர்களிடம் கமலாவுக்கு 44% வாக்குகளும் டிரம்புக்கு 54% வாக்குகளும் இருந்தன. இதே பிரிவு மக்களிடம் பைடனுக்கு 2020-ஈல் 59% வாக்குகள் இருந்தன. குடியரசுக் கட்சிக்கு ஆதரவான கிராமப்புற பகுதிகளில், 2020-ஆம் ஆண்டு பைடனுக்கு கிடைத்ததை விட, ஹாரிஸுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன. இது 2016-ஆம் ஆண்டு கிளிண்டனுக்கு கிடைத்த ஆதரவுக்கு நிகராக குறைவாகவே இருந்தது.   டிரம்பை மையப்படுத்திய பிரசாரம் பட மூலாதாரம்,GETTY 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் செய்தது போலவே, கமலா ஹாரிஸும் டிரம்பை மையப்படுத்தியே தனது பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த தேர்தலை டிரம்ப் மீதான பொது வாக்கெடுப்பாக அவர் முன்னிறுத்தினார். பிரசாரத்தின் கடைசி வாரங்களில், வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் (chief of staff) ஜான் கெல்லி, டிரம்ப் ஹிட்லரை ஆராதிப்பவர் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, "டிரம்பை பாசிசவாதி, மனநோயாளி, நிலையற்றவர்" என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இந்த தேர்தலை ஜனநாயகத்துக்கான போராட்டம் என்று கமலா ஹாரிஸ் வர்ணித்தார். ஜூலை மாதம் அதிபர் தேர்தலில் இருந்து விலகும் முன் பைடனும் இதையே தான் கூறியிருந்தார். “டொனால்ட் டிரம்பை தாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்திய கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்” என்று தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் கருத்து கணிப்பாளர் ஃப்ராங் லுண்ட்ஸ் பதிவிட்டிருந்தார். “டிரம்பைப் பற்றி வாக்காளர்களுக்கு ஏற்கனவே தெரியும். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவர் முதலாம் ஆண்டில் என்ன செய்வார் என்று தெரிந்துக் கொள்ளவே மக்கள் விரும்பினர்” என்று அவர் கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy9jxzlp0q8o
    • கனடாவில் உள்ள ஒரு   கடற்கரையில்....  மலசலம் கழித்து விட்டு,   மண்ணால்  மூடி விட்டுப் போகும் அளவுக்கு கொஞ்சம் முன்னேறி இருக்கின்றார்கள் என அறிந்தேன். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.