Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
08 MAY, 2024 | 06:39 PM
image

(ஆர்.சேதுராமன்)

போயிங் நிறு­வனம் தயா­ரித்த ஸ்டார்­லைனர் எனும் புதிய விண்­க­லத்தின் மூலம் மனி­தர்­களை விண்­வெ­ளிக்கு அனுப்பும் முதல் பயணமானது, ­விண்­கலம் ஏவப்­ப­டு­வ­தற்கு 2 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் ஒத்­திவைக்­கப்­பட்­டது.

அமெ­ரிக்­காவின் பச் வில்மோர் (61) மற்றும் சுனி வில்­லியம்ஸ் எனும் சுனிதா வில்­லியம்ஸ் (58) ஆகியோர் இவ்­விண்­க­லத்தின் மூலம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு பய­ணிக்­க­வி­ருந்­தனர்.

புளோ­ரிடா மாநி­லத்தின் கேப் கனா­வரால் விண்­வெளி ஏவு­த­ளத்­தி­லி­ருந்து உள்ளூர் நேரப்­படி திங்கள் இரவு 10.34 மணிக்கு (இலங்கை, இந்­திய நேரப்­படி நேற்­று­ செவ்வாய் (07) காலை 8.04 மணிக்கு) யுனைடெட் லோஞ்ச் அலை­யன்ஸின் அட்லஸ் 5 என்.22 ரக ரொக்கெட் மூலம் விண்­வெ­ளிக்கு ஏவப்­ப­ட­வி­ருந்­தது.

எனினும், விண்­வெளி வீரர்­க­ளான பச் வில்மோர், சுனி வில்­லியம்ஸ் ஆகியோர் விண்­க­லத்தில் அவர்­களின் ஆச­னங்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், இப்­ப­யணம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

ஸ்டார்­லைனர் விண்­க­லத்தை விண்­வெ­ளி­க்கு ஏவு­வ­தற்­கான அட்லஸ்-5 ரொக்கெட்டின் திரவ ஒட்­சிசன் குழாய் வால்வு ஒன்றில் சத்­த­மொன்று ஏற்­ப­டு­வதை பொறி­யி­ய­லா­ளர்கள் அவ­தா­னித்­த­தை­ய­டுத்து, இப்­ப­ய­ணத்தை ஒத்­தி­வைப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அனைத்து குறை­பா­டு­களும் நிவர்த்­தி­ செய்­யப்­பட்­டமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் தவிர மேற்படி பயணம் இரத்து செய்­யப்­படும் என ஏற்­கெ­னவே அதி­கா­ரிகள் அறி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அட்லஸ்-5 ரொக்­கெட்டை தயா­ரித்த யுனைடெட் லோஞ்ச் அலையன்ஸ் (யூ.எல்.ஏ) நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி டொரி புரூனோ, உள்ளூர் நேரப்­படி திங்கள் நள்­ளி­ரவு நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் பேசு­கையில், வால்வு பகு­தியில் ஏற்­பட்ட தேய்வு கார­ண­மாக மேற்­படி அசா­தா­ரண அதிர்­வுகள் ஏற்­பட்­டி­ருக்­கலாம் எனக் கூறினார். எனினும், விண்­க­லத்தில் பயணம் செய்­ய­வி­ருந்­த­வர்கள் ஒரு­போதும் ஆபத்தில் இருக்­க­வில்லை எனவும் அவர் கூறினார்.

மேற்­படி தேய்வு குறித்து பொறி­யி­ய­லா­ளர்கள் ஆராய்ந்து, அதே பாகத்தை மீளப் பயன்­ப­டுத்­து­வதா அல்­லது புதிய வால்வை பொருத்­து­வ­தற்­காக ரொக்­கெட்டை தொழிற்­சா­லைக்கு எடுத்துச் செல்­வதா என்­பதை தீர்­மா­னிப்பர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முழு­மை­யான மதிப்­பீட்­டுக்கு மேல­திக நேரம் தேவைப்­படும் எனவும், இந்த விண்­கலம் மே 10ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முன்னர் ஏவு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட மாட்­டாது எனவும் யூ.எல்.ஏ. நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இலோன் மஸ்­குக்கு சொந்­த­மான ஸ்பேஸ் எக்ஸ் நிறு­வனம் தயா­ரித்த 'க்ரூ ட்ரகன்' விண்­க­ல­மானது மனி­தர்­களை சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு ஏற்றிச் சென்ற முத­லா­வது தனியார் நிறு­வன விண்­க­ல­மாக உள்­ளது.

ஸ்டார்­லைனர் விண்­கல சோதனை வெற்­றி­ய­டைந்தால், சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு மனி­தர்கள் பய­ணிக்­கக்­கூ­டிய இரண்­டா­வது விண்­க­ல­மாக அதற்கு நாசா நிறு­வனம் சான்­ற­ளிக்கும்.

பச் வில்மோர், சுனி வில்­லியம்ஸ் இரு­வரும் அமெ­ரிக்க கடற்­ப­டை­யினால் பயிற்­று­விக்­கப்­பட்ட விமா­னி­க­ளாவர். நாசா விண்­வெளி வீரர்­க­ளான இவர்கள் இரு­வரும் தலா இரு தட­வைகள் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்குச் சென்று திரும்­பி­யுள்­ளனர். ஒரு தடவை நாசாவின் 'ஷட்டில்' விண்­கலம் மூலமும் மற்­றொரு தடவை ரஷ்­யாவின் சோயுஸ் விண்­கலம் மூலமும் அவர்கள் இப்­ப­ய­ணங்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

ஸ்டார்­லைனர் விண்­கலம் மூல­மான பய­ணத்தில் அதன் செயற்­பாட்டு ஆற்­றல்­களை இவர்கள் பரி­சோ­திக்­க­வுள்­ளனர்.

ஏற்­கெ­னவே போயிங் ஸ்டார்­லைனர் விண்­க­லத்தின் மனி­தர்கள் அற்ற முதல் பய­ணமும் பல வரு­ட­கால தாம­தத்தின் பின்­னரே 2019ஆம் ஆண்டு நிறை­வே­றி­யது.

பிர­சித்தி பெற்ற விமான தயா­ரிப்பு நிறு­வ­னங்­களில் ஒன்­றான போயிங், தனது 737 மெக்ஸ் ரக விமா­னங்­களின் கோளா­றுகள் தொடர்­பாக கடந்த சில வரு­டங்­க­ளாக சர்ச்­சை­களை எதிர்­கொண்­டி­ருந்­தது. 

ஸ்டார் லைனர் விண்­க­லத்தின் மூலம் மனி­தர்­களை சர்­வ­தேச விண்­வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டம் வெற்றியடைந்தால் அது போயிங் நிறுவனத்துக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது.

மனித விண்வெளிப் பயணங்களுக்கான விண்கலங்களை தயாரிப்பதற்கு 2014ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்துடன் நாசா நிறுவனம் 4.2 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை செய்துகொண்டிருந்தது. அதேவேளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா 2.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை செய்திருந்தது.

https://www.virakesari.lk/article/183006

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனிதா வில்லியம்ஸ்: சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லவிருந்த தனியார் விண்கலம் நிறுத்தப்பட்டது ஏன்?

நாசா, ஸ்டார்லைனர், சர்வதேச விண்வெளி நிலையம், விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/BOEING

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பல்லப் கோஷ்
  • பதவி, அறிவியல் செய்தியாளர்
  • 7 மே 2024

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா-வைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஒரு புதிய விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் (ISS- ஐ.எஸ்.எஸ்) செல்லவிருந்தனர். இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேரி வில்மோர் ஆகியோரே அந்த இரு விண்வெளி வீரர்கள்.

போயிங் நிறுவனத்தின் 'ஸ்டார்லைனர்' விண்கலம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8.04 மணிக்கு புறப்பட இருந்தது.

தனது முதல் சோதனை குழுவைச் சுமந்துகொண்டு விண்ணில் பாய்வதற்கு 90 நிமிடங்களே இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விண்வெளிப் பயணம் நிறுத்தப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்கலம் கட்டமைக்கப்படுவதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இந்தத் திட்டம் பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த நிலையில், இப்போது மீண்டும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால், ஐ.எஸ்.எஸ்-க்கு வீரர்களை அனுப்பி அங்கிருந்து அவர்களை பூமிக்குக் கொண்டுவரும் இரண்டாவது தனியார் நிறுவனமாக போயிங்க் மாறியிருக்கும். முதல் நிறுவனம், எலோன் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்'.

நாசா இதுபோன்ற விண்கலங்களைச் சொந்தமாக வைத்து இயக்க விரும்புவதில்லை, வணிகத் துறையிலிருந்து இந்தச் சேவையை வாங்க விரும்புகிறது.

இந்த ஏவுதல் போயிங்க் நிறுவனத்திற்கு சிக்கலான தருணமாக தான் பார்க்கப்பட்டது. காரணம், சமீபத்தில் நிகழ்ந்த தொடர் விபத்துகளால் அதன் விமான வணிகம் பெரும் அழுத்தத்தில் உள்ளது. ஸ்டார்லைனரை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களைத் தொடர்ந்து நிறுவனத்தின் விண்வெளித் துறையும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

"போயிங்கிற்கு இது மிகவும் முக்கியமான நாள்" என்று ஓபன் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானி முனைவர் சிமியோன் பார்பர் என முன்னர் தெரிவித்திருந்தார்.

"போயிங் நிறுவனம் இவ்வளவு காலமாக இந்த விண்கலத்தின் கட்டுமானத்தில் வேலை செய்து வருகிறது. சோதனை விமானங்களில் அவர்களுக்கு சில சிக்கல்கள் உள்ளன. இந்த விண்கலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது," என்று அவர் கூறியிருந்தார்.

நாசா, ஸ்டார்லைனர், சர்வதேச விண்வெளி நிலையம், விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/BOEING

படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர்

அடுத்தடுத்த சிக்கல்கள்

ஸ்டார்லைனர் விண்கலம் 2015-ஆம் ஆண்டில் தனது முதல் ஆளில்லா சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தது. ஆனால் அது 2019 வரை தாமதமானது, ஏனெனில் அதன் மென்பொருள் குறைபாடுகள் உள்ளிருந்த கடிகாரத்தைச் செயலிழக்கச் செய்தது.

அதன் விளைவாக விண்ணில் பாய்வதற்கான உந்துதல்கள் அதிகமாகச் செலுத்தப்பட்டது. அதனால் விண்கலம் விண்வெளி நிலையத்தை அடைய முடியாத அளவுக்கு எரிபொருள் செலவானது.

இரண்டாவது முயற்சி, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டது. ஆனால் அது மீண்டும் 2022-ஆம் ஆண்டு மே மாதம் வரை தாமதமானது. உந்துவிசை அமைப்பில் ஒரு சிக்கல் ஏற்பட்டதால் இது நடந்தது என்று சொல்லப்பட்டது. ஸ்டார்லைனர் இறுதியாக பூமியிலிருந்து புறப்பட தயாரான போது, அதன் முழுப் பணியையும் முடிக்க முடிந்தது. ஆனால் சில உந்துதல்களின் செயல்திறன் மற்றும் குளிரூட்டும் அமைப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்தக் குறைபாடுகள், வயரிங் மற்றும் பாராசூட்களின் பாதுகாப்பில் இருந்த கூடுதல் சிக்கல்கள் ஆகியவை விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் திட்டத்தை இப்போது வரை தாமதமாக்கி வந்தது.

இந்த அனைத்துச் சிக்கல்களும் சரிசெய்யப்படாமல் நாசாவும் போயிங்கும் விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் இந்தப் பயணத்திற்கு ஒப்புதல் அளித்திருக்க மாட்டார்கள் என நம்பப்பட்டது. ஆனால் விண்கலத்தின் ஆக்சிஜன் வால்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

குடும்பத்தார் பயப்படுகிறார்களா?

இதுகுறித்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், இந்தப் பின்னடைவுகள் விண்கலத்தில் செல்லவிருக்கும் வீரர்களின் நண்பர்களையும் குடும்பத்தாரையும் 'அச்சப்பட வைக்கும்' என்று கூறப்பட்டது.

அதற்கு இந்த விண்கலத்தில் பயணிக்கவிருக்கும் பாரி வில்மோர், இந்தத் தொழில்நுட்பச் சிக்கல்களை 'பின்னடைவுகள்' என்று விவரிப்பது தவறு என்று கூறியிருந்தார்.

"நாங்கள் அவற்றை முன்னேற்றப் படிகள் என்று அழைக்கிறோம். நாங்கள் ஒரு சிக்கலைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்வோம். அதை நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளோம். அதனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள்," என்று அவர் கூறினார்.

விண்கலத்தை இயக்கவிருந்த சுனிதா வில்லியம்ஸ் இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் அனைவரும் தயாராக இருப்பதால் இங்கு வந்துள்ளோம். எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றனர். நாங்கள் அதைப் பற்றி பேசினோம். அவர்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கின்றனர்," என்று கூறியிருந்தார்.

தொழில்நுட்ப கோளாறு இன்று காலை விண்வெளிப் பயணம் ரத்து செய்யப்பட்ட பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

நாசா, ஸ்டார்லைனர், சர்வதேச விண்வெளி நிலையம், விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,BOEING

படக்குறிப்பு,இது அப்பல்லோ பயணங்களில் பயன்படுத்தப்படும் விண்கலத்தை விட அகலமானது

புதிய நிறுவனங்களின் வளர்ச்சி

ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் போயிங் இனி தங்களுக்குச் சேவை வழங்கும் என்று நாசா அறிவித்தபோது, அது இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான ஒப்பந்தத்தை வழங்கியது. இது அவர்களின் விண்கலங்களைச் சேவைக்குக் கொண்டு வந்து அவற்றின் ஆறு திட்டங்களுக்கு நிதி வழங்கும். ஸ்பேஸ்-எக்ஸ் ஒப்பந்தத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.21,705 கோடியாக (2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆக இருந்தது. போயிங் இந்திய மதிப்பில் ரூ.35,062 கோடியைப் (4.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) பெற்றது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2020-ஆம் ஆண்டு வீரர்களைத் தாங்கிய அதன் சோதனையை நடத்தியது. போயிங் நான்கு ஆண்டுகள் பின்தங்கி உள்ளது, மேலும் விஷயங்களைச் சரியாகச் செய்ய போயிங்க் நிறைய பணம் செலவழித்துள்ளது.

ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் பிற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய அணுகுமுறையைக் கொண்டிருப்பதாக முனைவர் பார்பர் கூறினார்.

"ஒருபக்கம் பாரம்பரிய விண்வெளி நிறுவனம் உள்ளது, போயிங்க் அது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வழியில் விஷயங்களைச் செய்கிறது. மறுபக்கம் ஒரு புதிய விண்வெளி நிறுவனம் உள்ளது, இது வேறு வழியில் விஷயங்களைச் செய்துள்ளது. கட்டமைத்தல், சோதனை செய்தல், செயலிழத்தல், கற்றல் ஆகியவை அடங்கிய அவர்களின் கட்டமைப்புச் சுழற்சி மிக வேகமாக உள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

போயிங்கின் வணிகக் குழு திட்ட மேலாளர் மார்க் நாப்பி, ஒரு செய்தியாளர் சந்திப்பில், விண்கலங்களில் தவறுகளைக் கண்டறிதல் புதிய விண்கலத்தை உருவாக்கும் செயல்முறையின் இயல்பான பகுதி என்று கூறினார்.

இங்கிலாந்தின் விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி ஆய்வுத் தலைவரான லிபி ஜாக்சனின் கூற்றுப்படி, போயிங்கின் விண்கலம் சேவைக்கு வருவது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்க்கு போட்டியாக இருக்கும். இந்தப் போட்டியால் செலவுகள் குறையும்.

"இது நாசாவிற்கு மட்டுமல்ல, இங்கிலாந்து விண்வெளி ஏஜென்சி போன்ற பிற விண்வெளி நிறுவனங்களுக்கும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் விண்வெளி வீரர்களை ஐ.எஸ்.எஸ்-க்கு கொண்டு செல்வதற்கு வரி செலுத்துவோரின் பணத்தைச் செலவிடுகிறோம்," என்று அவர் கூறினார்.

நாசா, ஸ்டார்லைனர், சர்வதேச விண்வெளி நிலையம், விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/BOEING

படக்குறிப்பு,போயிங்கின் நீல நிற உடையை வீரர்கள் அணிவார்கள், இது அமெரிக்க விண்வெளி வீரர்கள் அணிந்திருந்த முந்தைய தலைமுறை விண்வெளி உடைகளை விட 40% இலகுவானவை

ஸ்டார்லைனரின் சிறப்பு என்ன?

ஸ்டார்லைனர் 5மீ உயரமும் 4.6மீ அகலமும் கொண்டது (அதாவது 16.5 அடி, 15 அடி). இது அப்பல்லோ பயணங்களில் பயன்படுத்தப்படும் விண்கலத்தை விட அகலமானது. இதில் ஏழு விண்வெளி வீரர்களுக்கு இடம் உள்ளது. இருப்பினும் இது வழக்கமாக நான்கு பேருடன் தான் பறக்கும். இது மீண்டும் பயன்படுத்தக்கூடியது. 10 முறை பறக்கும் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.எஸ்-க்கான பயணத்தின் போது, விண்கலத்தின் குழுவினர் அதனுள்ளிருக்கும் அமைப்புகளை மதிப்பிடுவார்கள். மேலும் புத்தம் புதிய விண்வெளி உடைகளையும் அவர்கள் சோதனை செய்வார்கள்.

வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் போயிங்கின் நீல நிற உடையை அணிவார்கள், இது அமெரிக்க விண்வெளி வீரர்கள் அணிந்திருந்த முந்தைய தலைமுறை விண்வெளி உடைகளை விட 40% இலகுவானவை, நெகிழ்வானவை. உடையில் தொடுதிரை உணர்திறன் கையுறைகள் உள்ளன. எனவே விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் உள்ள டேப்லெட்களை இயக்கலாம்.

அடுத்த முறை வெற்றிகரமாக ஏவப்பட்டால், ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்புவதற்கு முன் சுமார் 10 நாட்களுக்கு ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கு முந்தைய அமெரிக்க விண்கலங்கள் கடலில் விழுந்தன. ஆனால் ஸ்டார்லைனர் தென்மேற்கு அமெரிக்காவில் எங்காவது நிலத்தில் தரையிறங்கும்.

1998-இல் ஐ.எஸ்.எஸ்-இன் கட்டுமானப் பணிகள் தொடங்கியதில் இருந்து, வீரர்களைச் சுமந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட விண்கலங்கள் அங்கு சென்றிருக்கின்றன. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆலோசனை நிறுவனமான 'க்வில்டி'-யைச் சேர்ந்த காலேப் ஹென்றியின் கூற்றுப்படி, ஸ்டார்லைனர் ஏவுதல் விண்வெளிப் பயண வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது.

"நாங்கள் இப்போது மனித ஆய்வுகளின் புதிய சகாப்தத்தில் நுழைகிறோம்," என்று அவர் பிபிசி-யிடம் கூறியிருந்தார்.

"தனியார் துறையின் வளர்ந்து வரும் பங்கு உற்சாகமானது. இது விண்வெளிப் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c3gv2qnwqy4o



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை, ஒரு நல்ல நோக்கிற்கிற்காக உருவாக்கப்பட்ட பொறிமுறையினை அதிகாரத்தினை பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்து மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி அதிகாரத்தினை கைப்பற்ற நினைப்பவருக்கு எப்படி ஒருவரால் தார்மீக ரீதியில் ஆதரவு வழங்க முடியும்? இந்த தேசிய பட்டியல் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பயன்படுத்த முடியாது என சட்ட திருத்தம் கொண்டு வருவதன்  மூலம் தவிர்க்கலாம். ஆனால் நீங்கள் நான் சுமந்திரனின் ஆதரவாளன் என நினைப்பது தொடர்பாக எதுவும் சொல்வதற்கில்லை, அது உங்கள் உரிமை ஆனால் ஒரு மோசமான அரசியல்வாதியினை ஆதரிப்பவனாக இருக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை, ஆரம்ப காலத்தில் இஸ்லாமியர்களை யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றியமைக்கெதிராக குரல் கொடுத்த போது அவர் மக்களை ஒருங்கிணைக்க முற்படுகின்றார் என்பதனடிப்படையில் ஒரு புதிய மாற்றத்திற்கான அரசியல்வாதியாக அவரை ஆதரித்தது உண்மைதான், ஆனால் அவரும் ஒரு மோசமான அரசியல்வாதி என்பதனை நிரூபித்த பின்னர் எல்லோரையும் போல அவரை ஆதரிக்கும் நிலையில் நானும் இல்லை.   
    • கந்தப்பு இந்தக் கேள்வி பில்லியன் டாலர் கேள்வி. எனவே இதற்கு 5 புள்ளிகளாவது வழங்க வேண்டும்.
    • என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 
    • பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் ,  எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது "  பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் "  எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!  
    • தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது.  இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர்.  சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.