Jump to content

முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!

May 18, 2024

97 முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!“உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ”

– லூக்கா

இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும்

இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும்.

அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி.

2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது.

ரசாயனக் குண்டுகள், விஷவாயு குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், ஆட்லெறி குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர்.

விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’.

98 முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு.

மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?.

மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தான்.

சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது.

ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட தேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது. உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

98 1 முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!ஆனால், த.வி.பு இனவிடுதலைப் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர்.

பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் நிலைபெறும்.

முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி.
 

https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-அவர/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வள்ளல்களும் தமிழரசியலும் - நிலாந்தன் இலவசமாகக் கிடைப்பதைப் பெரும்பாலானவர்கள் கைவிடமாட்டார்கள். இது பெரும்பாலான எல்லாச் சமூகங்களிலும் காணப்படும் ஒரியல்பு. அதிலும் குறிப்பாக ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தில்,கூட்டுக் காயங்களிலும் கூட்டு மன வடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தில், உதவிக்காகக் காத்திருப்பவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். கடந்த 15 ஆண்டு கால ஈழத்தமிழ் அரசியலானது அவ்வாறு உதவிக்காக காத்திருப்பவர்களுக்கு பொருத்தமான நிவாரணத் திட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கத் தவறிவிட்டது. 2009இல் காணாமல்போன தனது இளம் கணவனுக்காக போராடிய இளம் மனைவி இப்பொழுது முதுமையின் வாசலை அடைந்து விட்டாள். அவளுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அப்படித்தான் காயப்பட்டவர்கள், அவயங்களை இழந்தவர்கள், மிகக்குறிப்பாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், கழுத்துக்குக் கீழ் இயங்க முடியாதவர்கள், இரு கண்களையும் இழந்தவர்கள்,  இரு கால்களையும் இழந்தவர்கள்… போன்றவர்களுக்கு உதவுவதற்கு ஒரு மையத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட எத்தனை கட்டமைப்புகள் உண்டு? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாக உள்ள பெண்களின் கண்ணீரை வைத்து அரசியல் செய்யும் ஒரு சமூகம், அப்பெண்கள் மத்தியில் காணப்படுகின்ற இளவயதினருக்குப் புதிய வாழ்வைக் கொடுக்கத் தவறிவிட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள ஒரு சமூகத்தில் பிறரிடம் இருந்து கிடைக்கக்கூடிய உதவிக்காக காத்திருப்பவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். தமிழ்ச்சமூகத்தில் பிறர் உதவியில் தங்கியிருக்கும் தொகையினரை கடந்த 15ஆண்டுகளாக அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள தனி நபர்கள், தன்னார்வ அமைப்புக்கள், இவைதவிர நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள வள்ளல்கள், கொடையாளிகள் போன்றவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அரவணைத்து வருகிறார்கள். மேற்சொன்ன ஒவ்வொரு தரப்பும் அவரவர் நோக்கு நிலையில் இருந்துதான் அந்த மக்கள் கூட்டத்தை அரவணைக்கிறார்கள். அதனால் தேவை நாடிகளாக இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு விகிதமளவு நிவாரணம் கிடைக்கிறது. உதவிகள் கிடைக்கின்றன. உளவளத் துணையும் கிடைக்கின்றது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு செய்பவர்கள் தானம் செய்பவர்கள் முதலாவதாக, நல்லதைத்தான் செய்கிறார்கள். ஆனால் தொண்டும் தானமும் மட்டும் ஒரு சமூகத்தை அதன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழ வைக்க உதவாது. அந்த மக்களைக் கையேந்தி மக்களாக வைத்திருப்பதற்கும் அப்பால் அவர்களை வாழ்வில் பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்களாக, விடாமுயற்சி உள்ள உழைப்பாளர்களாக மாற்ற வேண்டும். அது தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாடு. ஆயுத மோதல்களுக்குப்  பின்னரான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாடு.இந்த அடிப்படையில் சிந்தித்தால் தானமும் தொண்டும் கருணையின் பாற்பட்ட செயல்கள் மட்டுமல்ல. அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஒரு பகுதி.அவை தேசியக் கடமைகள். காயத்தில், துக்கத்தில், இழப்பில், தனிமையில் விழுந்து கிடப்பவர்களுக்குக் கைகொடுப்பது, அவர்களைத் தூக்கி நிறுத்துவது, அவர்களின் காயங்களை ஆற்றுவது, போன்றன ஒப்பீட்டளவில் “செட்டில்ட் “ஆன தமிழ் மக்களின் தேசியக் கடமைகள். அதற்கு ஓர் அரசியல் தலைமைத்துவம்தான் முழுமையான பொருளில் வழி நடத்த முடியும். ஓரளவுக்குச் சமூகத் தலைமைத்துவமும் மதத் தலைமைத்துவமும் செயற்பாட்டு அமைப்புக்களும் செய்யலாம். ஆனால் அப்படிப்பட்ட செய்முறைகள் கடந்த 15 ஆண்டுகளாக மிகக்குறைந்த அளவில்தான் நடநதிருக்கின்றன. மிகக் குறைந்த தொகையினர்தான் அவ்வாறு வலுவூட்டப்பட்டிருக்கிறார்கள். பெருந்தொகையானவர்கள் தொடர்ந்தும் கையேந்திகளாகவும் நிவாரணங்களுக்காகக் காத்திருப்பவர்களாகவும் காணப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு சமூகப் பின்னணியை வள்ளல்களும் கொடையாளிகளும் தமக்கு வசதியாகக் கையாளப் பார்க்கிறார்கள். கடந்த வியாழக்கிழமை அப்படி ஒரு சம்பவம் நடந்தது. அன்று கொழும்புக்கான ஐநாவின் இணைப்பாளர், ஐநா அலுவலகம் ஒன்றில் குடிமக்கள் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திப்பதாக இருந்தார். ஆனால் அவருடைய பயணம் சிறிது நேரம் தாமதம் ஆகியது. ஏனென்றால் அவர் வரும் வழியில் நாவலர் வீதியில் ஒரு பல்பொருள் அங்காடியைச் சூழ உள்ள பிரதேசத்தில் அசாதாரணமாக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அங்குள்ள ஒரு பல்பொருள் அங்காடி உரிமையாளரின் பெருமெடுப்பிலான தான நிகழ்வே அந்த நெரிசலுக்குக் காரணம். அங்கே போலீசாரும் படை வீரர்களும் காணப்பட்டார்கள். எனினும் அங்கு பெருகிய மக்களைக் கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. அதனால் ஐநாவின் பிரதிநிதி சிறிது கால தாமதமாக சந்திப்புக்கு வந்தார். மேற்சொன்ன பல்பொருள் அங்காடியின் முதலாளி ஏற்கனவே அதுபோன்ற தான நடவடிக்கைகளுக்காக மிகவும் பிரபல்யமானவர். உதவி தேவைப்படுகிறவர்களுக்கு அவர் காசை அள்ளிவீசுவார். அன்றைய தான நிகழ்வுக்கு வெளியிடங்களில் இருந்து குறிப்பாக தூர இடங்களில் இருந்து மக்கள் முதல்நாளே இரவு பயணம்செய்து அங்கு வந்திருந்தார்கள். வயோதிபர்கள், நோயாளிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என்று பல வகைப்பட்டவர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களைக் கௌரவமான விதத்தில் ஒழுங்குபடுத்தி அதை ஒரு கௌரவமான தான நிகழ்வாகச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருந்திருந்தால், அன்றைக்கு அந்த நெரிசலைத் தவிர்த்து இருந்திருக்கலாம். அல்லது அது ஒரு கட்டுப்படுத்த முடியாத பெரும் விழாவாக வெளியில் தெரிவதை அந்த முதலாளி விரும்பினாரோ தெரியவில்லை. கொடையாளிகள் அல்லது வள்ளல்கள் எல்லாச் சமூகங்களிலுமே போற்றப்படுகின்றார்கள். எல்லா மதங்களிலுமே அவர்களுக்கு உயர்வான இடம் உண்டு. குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் புராண நாயகனாகிய கர்ணன், முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்த மன்னன் பாரி போன்றவர்கள் உதாரணங்களாகக் கூறப்படுவதுண்டு. நவீன வரலாற்றிலும் கோடீஸ்வரர்களும் உலகப் பெரு முதலாளிகளும் தாம் திரட்டிய செல்வத்தின் ஒரு பகுதியைத் தானம் செய்கிறார்கள். அல்லது தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழராகிய ராஜ் ராஜரத்தினம் அவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய்களை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தானம் செய்வதற்கு உழைக்க வேண்டும். உழைத்தால்தான்,செல்வத்தைத் திரட்டினால்தான், தானமாகக் கொடுக்கலாம் என்ற பொருள்பட அவர் தன்னுடைய “சமனற்ற நீதி” என்ற நூலில் எழுதியிருக்கிறார். தொண்டு செய்வது நல்லது. வள்ளல்கள் போற்றுதற்குரியவர்கள். ஆனால் தொண்டர்களும் வள்ளல்களும் அரசியலில் இறங்கலாம் என்று சிந்திக்கும் ஒரு போக்கு எங்கிருந்து வருகிறது ? தமிழகத்தில் எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றவர்கள் வள்ளல்களாக போற்றப்படுகிறார்கள். அதனால் லட்சக்கணக்கான ஆதரவாளர்களை அவர்கள் சம்பாதித்தார்கள். ஈழத்தமிழர்கள் மத்தியில் அவ்வாறு வள்ளல்கள் அரசியலில் ஈடுபடும் ஒரு போக்கு அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. வள்ளல்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று இக்கட்டுரை கூறவரவில்லை. கடந்த 15 ஆண்டுகால தமிழ் அரசியல் போக்கெனப்படுவது வள்ளல்களுக்கும் கொடையாளிகளுக்கும் வசதியான ஒன்றுதான். கொடைகளின்மூலம் வள்ளல்கள் சமூகத்தில் இயல்பாகவே அங்கீகாரத்தையும் அந்தஸ்தையும் பெற்று விடுகிறார்கள். அதை அவர்கள் அரசியலில் முதலீடு செய்வது இலகுவானது. ஏற்கனவே தமது தொழில்சார் திறமைகள் காரணமாக புகழடைந்த,செல்வந்தர்களாகிய சிலர் தமிழரசியலில் இறங்கிவிட்டார்கள். செல்வந்தர்களாகவும் பிரபல்யங்களாகவும் இருக்கும் பலர் இறங்கத் துடிக்கிறார்கள் .இப்படிப்பட்ட ஓர் அரசியல் சூழலில் வள்ளல்கள் இலகுவாக அரசியலில் நுழையலாம். இது அரசியல்வாதியாக இருப்பதற்குரிய தகமை என்ன என்ற தமிழ்ச் சமூகத்தின் அளவுகோல்களைக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? அதுமட்டுமல்ல தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலை முன்னெடுக்கத் தவறிய ஒரு வெற்றிடத்தில்தான் வள்ளல்கள் ஒரு தேசியக் கடமையை தனிப்பட்ட தானமாகவும் கருணையாகவும் கருதி அதன் ஊடாக அரசியலில் பிரவேசிக்க முயற்சிக்கிறார்களா? கூட்டு மனவடுகளோடும் ஆறாத கூட்டுக்காயங்களோடும், அவநம்பிக்கைகளோடும் காணப்படும் ஒரு சமூகத்தை பண்புருமாற்றத்தின் ஊடாகக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு 2009க்குப் பின் வந்த எல்லாத் தலைவர்களுக்கும் இருந்தது. ஆனால் அது பொருத்தமான விதத்தில் முன்னெடுக்கப்படவில்லை. அதன் விளைவாக விழுந்த வெற்றிடத்தில்தான் வள்ளல்கள் தலைவர்களாக வர முயற்சிக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்துக்கு இப்பொழுது தேவையாக இருப்பது 15ஆண்டுகளின் பின்னரும் கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஒரு கூட்டு அரசியல் செயல்பாடுதான். ஆனால் அவ்வாறு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை முன்னெடுக்கவல்ல ஆளுமை மிகுந்த தலைவர்கள் எத்தனை பேர் தமிழ்மக்கள் மத்தியில் உண்டு? மக்களுக்கு நிவாரணம் வேண்டும்.உதவிகள் வேண்டும். நிதிவளம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் காசை என்ன செய்வது என்று தெரியாமல் கோவில்களில் கொண்டு போய்க் கொட்டுகின்றது. அந்தக் காசைப் பயன் பெறுமதி மிக்கதாக மாற்றலாம். அதற்கு 2009க்குப் பின்னரான தமிழ் அரசியலைக் குறித்த பொருத்தமான அரசியல் தரிசனமும் பொருளாதார தரிசனமும் நிவாரண தரிசனமும் இருக்க வேண்டும். வள்ளல்களுக்கு அவ்வாறான தரிசனம் இருக்குமாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் வள்ளல்கள் தங்களை புதிய எம்ஜிஆர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தான நிகழ்வை நாடகத்தனமாக ஒழுங்குபடுத்தி, பாட்டுக்கு எம்ஜிஆர் போல ஆடி, யுடியுப்பர்களுக்குச் செய்தியாக மாறும் போதுதான், அது விவகாரமாகிறது. தொண்டு நல்லது. தானம் நல்லது. ஆனால் தொண்டர்களும் வள்ளல்களும் அரசியல்வாதிகளாக வர விரும்பினால் அதற்குரிய ஒழுக்கமும் தரிசனமும் அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும். தானம் ஒரு அர்ப்பணிப்புத்தான். ஆனால் அது மட்டும் போதாது. பொருத்தமான அரசியல் தரிசனம் இருக்க வேண்டும். அது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அதை ஒரு தேசியக் கடமையாக செய்ய வேண்டும். அற்புதமான ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. ஒரு கை கொடுப்பது மறுகைக்குத் தெரியக்கூடாது என்று. தானம் செய்வதால் தனக்குக் கிடைக்கும் புகழையும் பிரபல்யத்தையுங்கூடத் தானம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மகாபாரதத்தில் கர்ணன் இறக்கும் தறுவாயில்  அவனுடைய தர்மமே அவனுக்குப் பாரமாக இருந்தது. அதனால் கர்ணன் தானம் செய்து தான் சம்பாதித்த புண்ணியத்தையும் தானம் செய்தான். அது புராண கால கர்ணன். அவனுக்குத் தலைகாத்த தர்மம் ஒரு பாரம். நவீன அரசியலில் தர்மம் ஒரு முதலீடா?     https://www.nillanthan.com/6796/
    • எது எப்படியோ முதல் மூன்றும் அமெரிக்காகாரர் வரக் கூடிய மாதிரி செய்யுங்கோ. அப்ப தான் அமெரிக்காவில் கிரிக்கட்டை பிரமோட் பண்ணலாம்.  @goshan_che க்கு ஒரு சக்கை வைத்து ஆளை அனுப்பணும். நந்தி போல இடையில் நிற்கிறாரே.
    • மருத்துவக் கட்டடம் ஒன்று திறப்பு விழாவில் தலைவர் மாமா காலம் & இடம்: அறியில்லை   இடது: அமரர் வைத்தியக் கலாநிதி ஜெயகுலராஜா | வலது: திரு. ரகு எ குண்டப்பா   ???
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.