Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   20 MAY, 2024 | 04:23 PM

image
 

இந்தியாவில் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் குறித்த நால்வரும் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் (ஏடிஎஸ்) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு தீவிர விசாரணைக்காக சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளது.

அகமதாபாத் விமான நிலையத்திற்கு குறித்த நால்வரும் ஏன் வந்தார்கள் என்பதற்கான துல்லியமான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதனால் அந்த விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐ.பி. எல் போட்டிகள் இடம்பெறுவதால் தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களுக்காக மூன்று அணிகள், அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/184049

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ISIS அமைப்பைச் சேர்ந்த 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

ISIS பயங்கரவாதிகள் இந்தியாவில் கைது!

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் 4 ISIS தீவிரவாதிகளை குஜராத் பொலிஸாரால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்று (20) கைது செய்துள்ளனர்.

குறித்த நால்வரும் இலங்கையில் வசிப்பவர்கள் என்றும், இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என்றும் குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட நால்வரும் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் அஹமதாபாத்திற்கு வருகை தந்தமைக்கான நோக்கத்தைக் கண்டறியும் வகையில் முதற்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவர்கள் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அஹமதாபாத்திற்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரம் குறித்த நால்வரின் தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/302080

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தில் இலங்கையர்கள் என கருதப்படும் ஐஎஸ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் - இந்தியாவிடம் மேலதிக விபரங்களை கோரியது இலங்கை

Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 10:08 AM

image
 

ஐஎஸ் அமைப்பபை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும்  இலங்கையை சேர்ந்த நால்வர் குஜராத்திற்கு செல்ல முற்பட்டவேளை அஹமதாபாத்தில் கைதுசெய்யப்பட்டமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த சந்தேகநபர்களின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் அவர்கள் உண்மையிலேயே ஐஎஸ் சந்தேகநபர்களா என விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும்  இந்தியாவின் புலனாய்வு பிரிவினரிடம் இலங்கை புலனாய்வு பிரிவினர் மேலதிக தகவல்களை கோரியுள்ளனர்.

இந்திய அதிகாரிகள் தகவல்களை வழங்கியதும் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளிற்கான அடுத்த கட்ட விசாரணைகள் ஆரம்பமாகும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் சில நாட்களிற்கு முன்னர் கொழும்பிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து குஜராத் சென்றுள்ளனர்.

அவர்களிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை  ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றிருந்த நபருக்காக காத்திருந்தவேளை இவர்கள் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அஹமதாபாத் விமானநிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களின் கையடக்க தொலைபேசிகளில் காணப்பட்ட மறைகுறியாக்கப்பட்ட உரையாடல்கள் செய்திகளை பொலிஸார் மீட்டுள்ளனர் அவர்கள் இலக்கை நோக்கி செல்வதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை தீவிரமாக எடுத்துள்ளோம் சந்தேக நபர்கள்  குறித்த மேலதிக தகவல்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தலை கையாள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/184106

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஐஎஸ் உறுப்பினர்கள் - யூதர்கள் கிறிஸ்தவர்கள் பாஜகவினர் ஆர்எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களிற்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார்கள்- இந்திய ஊடகம்

image
 

ndtv

இந்தியாவின் குஜராத்தின் அஹமதாபாத் விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில நாட்களின் பின்னர் நான்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்தியாவின் குஜராத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுவதற்காக சந்தேகநபர்கள் அஹமதாபாத் வரவுள்ளனர் என்ற தகவல் கிடைத்த பின்னர் இவர்களை கைதுசெய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்களை  ஏற்படுத்தியதாக குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் சென்னையிலிருந்து அஹமதாபாத் புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் புறப்பட்டனர் என குஜராத் பொலிஸ் அதிகாரி விகாஸ் சகாய் தெரிவித்துள்ளார்.

தென்பகுதியிலிருந்து வரும் பயணிகள் பட்டியலை சோதனை செய்த பின்னர் இவர்களை கைதுசெய்தோம் கொழும்பில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இவர்களின் விபரங்களை உறுதி செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் நால்வரும் சமூக ஊடகங்கள் ஊடாக அபு என்ற பாக்கிஸ்தானை சேர்ந்த நபருடன் தொடர்பிலிருந்துள்ளனர்.

இவர்களை இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ளுமாறு அபு தூண்டினார் அவர்கள் மிக அதிகளவிற்கு தீவிரவாதமயப்படுத்தப்பட்டிருந்ததால் தற்கொலை தாக்குதலை மேற்கொள்ள தயாராகயிருந்தனர் என குஜராத்தின் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அபு அவர்களிற்கு பணம் வழங்கியுள்ளார்எனவும் அவர் தெரிவித்துள்ளார்

சந்தேகநபர்களின் கையடக்க தொலைபேசிகளை ஆராய்ந்தவேளை சில ஆயுதங்களின் படங்களை கண்டுபிடித்துள்ளோம்இஅஹமதாபாத்திற்கு அருகில் உள்ள நனச்சிலோடா என்ற இடத்தின் விபரங்களும் காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இவர்களின் கையடக்கதொலைபேசியில் குறிப்பிடப்பட்ட  நனச்சிலோடா என்ற  இடத்தில்  பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளோம் பாக்கிஸ்தானை சேர்ந்த நபரே இந்த ஆயுதங்களை ஏற்பாடுசெய்துள்ளார் என குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புரோட்டன் மெயில் ஊடாக இவர்கள் பாக்கிஸ்தானில் உள்ள அந்த நபருடன் உரையாடியுள்ளனர் எனவும் குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களான முகமட்நஸ்ரட் ( 33) முகமட் பாரிஸ் ( 35) முகமட் நவ்ரான்( 27)முகமட்ரஸ்தீன் ( 47) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர் இவர்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் பாஜகவினர் ஆர்எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களிற்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஐஎஸ் உறுப்பினர்கள் - யூதர்கள் கிறிஸ்தவர்கள் பாஜகவினர் ஆர்எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களிற்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார்கள்- இந்திய ஊடகம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பிழம்பு said:

குஜராத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஐஎஸ் உறுப்பினர்கள் - யூதர்கள் கிறிஸ்தவர்கள் பாஜகவினர் ஆர்எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களிற்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார்கள்- இந்திய ஊடகம்

image
 

ndtv

இந்தியாவின் குஜராத்தின் அஹமதாபாத் விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில நாட்களின் பின்னர் நான்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்தியாவின் குஜராத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுவதற்காக சந்தேகநபர்கள் அஹமதாபாத் வரவுள்ளனர் என்ற தகவல் கிடைத்த பின்னர் இவர்களை கைதுசெய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்களை  ஏற்படுத்தியதாக குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் சென்னையிலிருந்து அஹமதாபாத் புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் புறப்பட்டனர் என குஜராத் பொலிஸ் அதிகாரி விகாஸ் சகாய் தெரிவித்துள்ளார்.

தென்பகுதியிலிருந்து வரும் பயணிகள் பட்டியலை சோதனை செய்த பின்னர் இவர்களை கைதுசெய்தோம் கொழும்பில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இவர்களின் விபரங்களை உறுதி செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் நால்வரும் சமூக ஊடகங்கள் ஊடாக அபு என்ற பாக்கிஸ்தானை சேர்ந்த நபருடன் தொடர்பிலிருந்துள்ளனர்.

இவர்களை இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ளுமாறு அபு தூண்டினார் அவர்கள் மிக அதிகளவிற்கு தீவிரவாதமயப்படுத்தப்பட்டிருந்ததால் தற்கொலை தாக்குதலை மேற்கொள்ள தயாராகயிருந்தனர் என குஜராத்தின் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அபு அவர்களிற்கு பணம் வழங்கியுள்ளார்எனவும் அவர் தெரிவித்துள்ளார்

சந்தேகநபர்களின் கையடக்க தொலைபேசிகளை ஆராய்ந்தவேளை சில ஆயுதங்களின் படங்களை கண்டுபிடித்துள்ளோம்இஅஹமதாபாத்திற்கு அருகில் உள்ள நனச்சிலோடா என்ற இடத்தின் விபரங்களும் காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இவர்களின் கையடக்கதொலைபேசியில் குறிப்பிடப்பட்ட  நனச்சிலோடா என்ற  இடத்தில்  பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளோம் பாக்கிஸ்தானை சேர்ந்த நபரே இந்த ஆயுதங்களை ஏற்பாடுசெய்துள்ளார் என குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புரோட்டன் மெயில் ஊடாக இவர்கள் பாக்கிஸ்தானில் உள்ள அந்த நபருடன் உரையாடியுள்ளனர் எனவும் குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களான முகமட்நஸ்ரட் ( 33) முகமட் பாரிஸ் ( 35) முகமட் நவ்ரான்( 27)முகமட்ரஸ்தீன் ( 47) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர் இவர்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் பாஜகவினர் ஆர்எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களிற்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஐஎஸ் உறுப்பினர்கள் - யூதர்கள் கிறிஸ்தவர்கள் பாஜகவினர் ஆர்எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களிற்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார்கள்- இந்திய ஊடகம் | Virakesari.lk

ஒரு பாடம் 'படிப்பிக்க' வந்திருந்தார்கள் என்று தலைப்பில் போட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாகாவும், பொருத்தமாகவும் இருந்திருக்கும்........😀. ஒருவரும் ஒருவரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த சதி: ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தகவல்

22 MAY, 2024 | 10:34 AM
image
 

அகமதாபாத்: இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத் சென்ற 4 ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நாசவேலைகளில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணை யில் தெரியவந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் குஜராத்தின் அகமதாபாத்துக்கு வருவதாக அந்த மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. விசாரணையில், இலங்கையை சேர்ந்த நுஸ்ரத் கனி, நப்ரான், பரீஸ் பரூக், ரஸ்தீன் ரஹீம் ஆகிய 4 பேர், கொழும்புவில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத்துக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து இலங்கை புலனாய்வு துறை அதிகாரிகளிடம் விசாரித்ததில், “4 பேரும் என்டிஜே என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். தற்போது 4 பேரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்படுகின்றனர்’ என்று தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் சாதாரண உடையில் மறைந்திருந்தனர். அன்றிரவு நுஸ்ரத் கனி, நப்ரான், பரீஸ் பரூக், ரஸ்தீன் ரஹீம் ஆகிய 4 பேர் இண்டிகோ விமானத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து குஜராத் டிஜிபி விகாஸ் சஹாய், குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு உயரதிகாரிகள் ஹரிஷ் உபாத்யாயா, சுனில் ஜோஷி ஆகியோர் கூறியதாவது: பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் அபு பக்கர் உத்தரவின்பேரில் 4 பேரும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ் மட்டுமே பேசுகின்றனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மே 21, 22-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த சூழலில், நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அவர்கள் திட்டம் தீட்டிஇருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் நுபுர் சர்மா, ராஜா சிங், உப்தேஷ் ரானாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. அவர்களது செல்போன்களை ஆய்வு செய்ததில் இதுதொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

ஒரு தீவிரவாதியின் செல்போனில் அகமதாபாத்தின் நர்மதா நதி கால்வாயின் புகைப்படம் இருந்தது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீஸார் ஆய்வு செய்து, 20 தோட்டாக்களுடன் கூடிய, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகள், ஐ.எஸ். தீவிரவாத இயக்க கொடி ஆகியவற்றை கைப்பற்றினர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை: பொதுவாக தீவிரவாத செயல்கள், அதிதீவிர குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை மாநில போலீஸார் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். அதிலும், தமிழக காவல் துறையின் ‘க்யூ’ பிரிவு போலீஸார் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். குறிப்பாக, இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பயணிகள் யார்? அவர்களது பின்னணி என்ன என்பது கவனிக்கப்படும்.

ஆனால், தற்போது சென்னையில் இருந்து நழுவிச் சென்று குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 தீவிரவாதிகளும் சென்னையில் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து வகையாக உளவு பிரிவு போலீஸாரின் பார்வையில் இருந்தும் தப்பியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். க்யூ பிரிவு போலீஸாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துவிட கூடாது என்பதற்காகவே விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/184193

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் சிக்கிய ISIS இலங்கையர்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின

இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து அகமதாபாத் நகருக்கு வந்த இலங்கையை சேர்ந்த நான்கு பேர் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

இவர்களை குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்து நேற்று மதியம் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்நிறுத்தியதுடன், இதில் பல தகவல்கள் வெளியாகின.

இதன்படி, கைது செய்யப்பட்ட  33 வயதான மொஹமட் நுஸ்ரத் என்ற நபர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பை சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான், 43 வயதான மொஹமட் ரஷ்டீன் மற்றும் 35 வயதான மொஹமட் ஃபரிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட ஏனைய பயங்கரவாதிகளாவர்.

இவர்கள் இந் நாட்டிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் நகருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்தும் நான்கு பயங்கரவாதிகளும் மொழி பெயர்ப்பாளர் மூலம் விசாரிக்கப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து கைப்பேசி, இரு நாட்டு நாணயத்தாள்கள் மற்றும் விமானச் சீட்டுக்களும் ஒருவரின் பயணப் பொதியில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுவை கடந்த பெப்ரவரி மாதம் சமூக ஊடகங்கள் மூலம்  இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளதாகவும், பின்னர் இவர்கள் கடும்போக்கு ISIS சித்தாந்தவாதிகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அபுவின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இலங்கை பணத்தில் 4 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு கூட தயாராகி இருந்ததாக தகவல் வௌியாகியுள்ளது.

இவர்களது கைப்பேசிகளை ஆய்வு செய்ததில், அகமதாபாத் நகருக்கு அருகில் உள்ள நானாசிடோலா பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 03 கைத்துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 20 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில், நாட்டின் தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இந்தியாவில்-சிக்கிய-ISIS-இலங்கையர்கள்-குறித்து-அதிர்ச்சி-தகவல்கள்-வெளியாகின/150-337666

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை சேர்ந்த நால்வர் கைது செய்யப்படட விவகாரம் - விசாரணைகளிற்காக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள திட்டம்

Published By: RAJEEBAN   29 MAY, 2024 | 10:49 AM

image
 

குஜராத் விமானநிலையத்தில் ஐஎஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு பேரை கைது செய்துள்ளது, எனினும் ஒஸ்மண்ட் ஜெராட் என்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஜெராட் தேடப்படுகின்றார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், அவரை கைது செய்யபவர்களிற்கு சன்மானத்தை அறிவித்துள்ளது.

மே 20 திகதி குஜராத்தின் அஹமதாபாத் விமானநிலையத்தில் ஐஎஸ் சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வரை கைது செய்ததன் மூலம் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பாரிய தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

மாநிலத்திற்கு வெளியே இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதில் குஜராத் பயங்கரவாத தடுப்புபிரிவின் மூன்று குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் விசாரணைகளின் மூலம் ஒஸ்மன்ட் ஜெராட் என்ற நபர் நான்கு சந்தேக நபர்களிற்கும் நான்கு இலட்சம் ரூபாய்களை வழங்கியமையும், இந்த நபர் அடிக்கடி தனது தோற்றத்தை மாற்றுவதும் தெரியவந்துள்ளது.

இலங்கை அதிகாரிகள் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர் ஒஸ்மன்ட் ஜெராட் தலைமறைவாகியுள்ளார்  என குஜராத்தின் பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் போது இந்தியாவில் சந்தேகநபர்களின் நடவடிக்கைகளிற்கு மேலும் மூவர் உதவியமை தெரியவந்துள்ளது.

குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தற்போது இந்த நபர்கள்  குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/184750

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.