Jump to content

சோழர் கால மருத்துவமனையில் 950 ஆண்டுக்கு முன்பே 'அறுவை சிகிச்சை' - கல்வெட்டு பகிரும் வரலாறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சோழர் ஆட்சியில் 15 படுக்கைகள், 7 பணியாளர்களுடன் செயல்பட்ட மருத்துவமனை - அதிசயிக்க வைக்கும் வரலாறு
படக்குறிப்பு, சோழர் ஆட்சியில் மருத்துவமனை செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 26 மே 2024, 08:43 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள தற்போதைய கால கட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் பல உள்ளன. சாதாரண தலைவலி முதல் இதயம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை மருத்துவத்துறை வெகுவாக முன்னேறிவிட்டது. நகர்ப்புறங்களில் பல மருத்துவமனைகள் 24 மணிநேரமும் இயங்குகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்ட போது என்ன செய்தார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடையாகவே, காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆதுலர் சாலை இருக்கிறது.

சோழர் ஆட்சியில் 950 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தில் மருத்துவமனை செயல்பட்டு வந்திருப்பதாக இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும் துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், அந்த மருத்துவமனை பற்றிய முழு விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

சோழர் ஆட்சியில் 15 படுக்கைகள், 7 பணியாளர்களுடன் செயல்பட்ட மருத்துவமனை - அதிசயிக்க வைக்கும் வரலாறு
படக்குறிப்பு,திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில்

ஆதுலர் சாலை என்பதன் பொருள் என்ன?

"ஆதுலர் சாலையை ஆதுலர் + சாலை என்று பிரித்துப் பொருள் கொண்டால் ஆதுலர் என்பதற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சாலை என்பதற்கு மருத்துவ நிலையம் என்றும் பொருள்படும். அதாவது, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ நிலையம் என்றும் பொருள் சொல்லலாம்" என்றார் அவர்.

"வைத்திய சாலையை நிர்வாகம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும், அங்கே பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கும் வைத்திய விருத்தி, வைத்திய பாகம், வைத்திய போகம், வைத்தியக்காணி, ஆதுலர் சாலைபுரம் போன்ற பெயர்களில் நில தானம் கொடுக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் கூறினார்.

சோழர் ஆட்சியில் 15 படுக்கைகள், 7 பணியாளர்களுடன் செயல்பட்ட மருத்துவமனை - அதிசயிக்க வைக்கும் வரலாறு
படக்குறிப்பு, இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம்  

மூன்று நதிகள் சந்திக்கும் இடம்

தொடர்ந்து திருமுக்கூடலில் செயல்பட்டு வந்த ஆதுலர் சாலை குறித்து அவர் விவரித்தார்.

"காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பாலாற்றின் கரையில் உள்ளது திருமுக்கூடல். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் இடம் என்பதால் இந்த ஊர் திருமுக்கூடல் என பெயர் பெற்றது .

இங்குள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் 950 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை என்று அழைக்கப்படும் மருத்துவமனை செயல்பட்டுள்ளது.

கோவில் முதல் பிரகாரத்தின் கிழக்குப் பக்க சுவரில் ராஜகேசரி வீரராஜேந்திர சோழனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1068) பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஆதுலர் சாலையை பற்றி விரிவாக தெரிவிக்கின்றது" என்று வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சோழர் ஆட்சியில் 15 படுக்கைகள், 7 பணியாளர்களுடன் செயல்பட்ட மருத்துவமனை - அதிசயிக்க வைக்கும் வரலாறு
படக்குறிப்பு, திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கல்வெட்டு  

மருத்துவமனை எவ்வாறு செயல்பட்டது?

அந்த கல்வெட்டின்படி, ராஜேந்திர சோழர் மாவலிவானராசன் என்ற இருக்கை சிம்மாசனத்தில் இருந்து கொண்டு 'வீரசோழன்' என்ற மருத்துவமனையை உருவாக்கி அதை நிர்வாகம் செய்வதற்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

கல்வெட்டின் அடிப்படையில் அந்த ஆதுலர் சாலை செயல்பட்ட விதம் குறித்து அவர் விளக்கினார். அதன்படி, "இந்த மருத்துவமனையில் திருக்கோவில்களில் பணியாற்றியவர்களுக்கும் வேத பாடங்களை பயில்கின்ற மாணவர்களுக்கும் வைத்தியம் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 15 படுக்கைகள் இருந்துள்ளன. இதில் மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், மூலிகை மருந்துகளை தயார் செய்கின்ற மருந்தாளுநர்கள் இரண்டு பேர், செவிலியர் இருவர், பொதுப் பணியாளர் ஒருவர் ஆகிய 7 பேர் பணி செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை மருத்துவம் சல்லியக்கிரியை என்ற பெயரில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், மனித உடலில் ஏற்படும் பெரிய காயங்களை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர்.

மருந்தாளுநர்கள் ஓராண்டு காலத்திற்கு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் அவற்றின் அளவுகளை சரிபார்த்தும் கணக்கிட்டும் வந்துள்ளனர்.

ஏறக்குறைய தற்பொழுது செயல்படும் மருத்துவமனை போலவே இந்த சோழர் கால மருத்துவமனையும் செயல்பட்டு வந்ததை கல்வெட்டு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன" என்று அவர் கூறினார்.

சோழர் ஆட்சியில் 15 படுக்கைகள், 7 பணியாளர்களுடன் செயல்பட்ட மருத்துவமனை - அதிசயிக்க வைக்கும் வரலாறு
படக்குறிப்பு, திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில்  

20 வகை மருந்துகள்

வீரசோழன் மருத்துவமனையில் நாடி பாா்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவர் மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்த விபரமும் அவா்களின் ஊதிய விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு வகை குறித்தும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

கோவிலின் ஒரு பகுதியான “ஜனநாத மண்டபம்” என்ற இடத்தில் மருத்துவனை செயல்பட்டு வந்திருப்பதாக வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கீழ்க்கண்ட மருந்துகளின் பெயா்கள் இந்த கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

1.பிரம்மயம் கடும்பூரி

2.வாஸாரிதகி

3.கோமூத்திர கரிதகை

4.தஸமூல ஹரிதகி

5.பல்லாதக ஹரிதகி

6.கண்டிரம்

7.பலாகேரண்ட தைலம்

8.பஞ்சாக தைலம்

9.லசுநாகயேரண்ட தைலம்

10.உத்தம கரிநாடி தைலம்

11.ஸுக்ல ஸிகிரிதம்

12.பில்வாதி கிரிதம்

13.மண்டுகரவடிகம்

14.த்ரவத்தி

15.விமலை

16.ஸுநோரி

17.தாம்ராதி

18.வஜ்ரகல்பம்

19.கல்யாணலவனம்

20.புராணகிரிதம்

"இந்த மருந்துகளில் ஒன்றிரண்டு நீங்கலாக மீதமுள்ள அனைத்தும் தற்காலத்திலும் பயன்பாட்டில் உள்ளன. இம்மருந்துகளைப் பற்றிய விரிவான குறிப்புகளும் அவை தீா்க்கும் நோய் பற்றிய விபரங்களும் “சரஹா் சம்ஹிதை” என்னும் ஆயுா்வேத நூலில் காணப்படுகின்றது" என்று கூறினார்.

 
சோழர் ஆட்சியில் 15 படுக்கைகள், 7 பணியாளர்களுடன் செயல்பட்ட மருத்துவமனை - அதிசயிக்க வைக்கும் வரலாறு
படக்குறிப்பு,திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கல்வெட்டு

"சோழர் ஆட்சியில் பல இடங்களில் மருத்துவமனைகள்"

இதுபோல், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோழர்கள் மிகச் சிறப்பாக ஆதுலர் சாலை என்று அழைக்கப்படக் கூடிய மருத்துவமனைகளை நடத்தி வருந்திருப்பதாக அவர் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோயில் தேவராயன் பேட்டையில் உள்ள மத்தியபுரீஸ்வரர் திருக்கோவிலிலும், நன்னிலம் அருகே திருப்புகலூரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆதுலர் சாலை செயல்பட்டு வந்திருப்பதாக கல்வெட்டு ஆதாரங்களை சுட்டிக்காட்டி முனைவர் வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/crggkk0z4ndo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣........ அசோசியேட் மெம்பர்ஸை தான் ஹசரங்க அடிப்பார் என்று சொல்லியிருந்தவர்கள்........ அதுவும் சரிதான், ஃபுல் மெம்பர்ஸை அடிச்சா திருப்பி அதிகமா அடிக்கிறாங்களே....
    • "பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்"     "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !"   "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !"   "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !"   "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு முணுப்பை இசையாக்கிறேன் !"   "வாலிப்பதை தூண்டும் சிறு இடையும் வாட்டம் காட்டாத நிலா முகமும் வாசனை கொட்டும் கரும் கூந்தலும் வாக்கியமாய் இங்கே வரைந்து காட்டுகிறேன் !"   "பருவ பெண்ணை முழுதாக ரசிக்க பளிங்கு கன்னத்தில் முத்தம் இட பரவசம் கொஞ்சம் என்னை தழுவ பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      மிதலை - navel, கொப்பூழ், தொப்புள்
    • சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (திங்கட்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, வெடிகுண்டுகள் கண்டறியும் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ச்சியாக வருகிறது. இதுவரை தொலைபேசி மற்றும் இமெயில் மூலமாக 5 முறை மிரட்டல் வந்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகிறது. இதனால் விமான சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றனர். சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் | Bomb threat to Chennai airport - hindutamil.in
    • அன்பு Justin  க்கு  "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன்." உங்கள் வாதத்தை பார்த்து நான் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை ?? ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கு என ஒரு கருத்தும், வரைவிலக்கணமும் , அடிப்படை சொல்லும் [வேர் சொல்லும்] உண்டு . இப்படித்தான் சொல்லை ஏற்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் தான் நான் வாதாடுகிறேன். மற்றும் படி "நீங்க வேற, நாங்க வேற" என்று இல்லை.  marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும்  திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை  உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony  = matri  + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு  [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும்.   அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம்,  ஆண் ஆணுடன் சேருவது அல்லது பெண் பெண்ணுடன் சேருவது மற்றும் ஆண் பெண்ணுடன் சேருவது எல்லாம் ஒன்றா ?? வித்தியாசம் இருப்பது உங்களுக்கு தெரியாதா ? அதனாலதான்  "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்கிறேன், மற்றும் படி அவர்களை தாழ்த்தி அல்லது உயர்த்தி காட்டிட அல்ல  ஆண் பெண் சேர்தலில் ஒரு 'பிள்ளை' பிறக்கிறது அல்லது 'பிள்ளை' பிறக்க பொதுவாக வாய்ப்பு உண்டு  அந்த பிள்ளையை , பிள்ளை என்று மட்டும் கூப்பிடுவதில்லை, அவர்களின் உடல் அமைப்பை வைத்து பொதுவாக ஆண் / மகன் அல்லது பெண் / மகள் என்று வேறு வேறு சொற்களில் கூறுகிறோம் , மற்றும் படி பிள்ளையை  நீங்க வேற, நாங்க வேற" என்று அல்ல.  ஏன் ஆண் , பெண் என்று கூறுகிறோம் ? பொதுவாக மனிதன் என்றே கூறலாமே ?? எல்லாத்துக்கும் காரணம் சொல்லுக்கு என்று கருத்தும் அதிகமாக வேர்ச் சொல்லும் உண்டு,  அப்படித்தான் மனித கூட்டும் ?? வேலைக்கு போகிறவர்கள் எல்லோரும் ஊழியர் அல்லது பணியாளர் என்று கூப்பிடலாம் ?? ஏன் நாம் ஆசிரியர், மருத்துவர், பொறியியலாளர் என்று வேறு வேறாக கூப்பிடுகிறோம் ?? என என்றால் அங்கு அந்த ஊழியர்களின் தொழில் அமைப்பில் வேறுபாடு இருப்பதால்  அப்படியே இதுவும். சிந்தித்தால் இலகுவான ஒன்று !! நன்றி   
    • sptneSdoro9 97i928h8fcf861h091f8g3283294mlh1i05mh9ct041c654l  ·  எழுத்துப்பிழை இல்லாமல் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி தர சில விளக்கங்கள்... தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" , மூன்று சுழி "ண", மற்றும் "ந" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கில் ஒரே மாதிரி தோன்றும். "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்? ஒரு எளிய விளக்கம். "ண" இதன் பெயர் டண்ணகரம், "ன" இதன் பெயர் றன்னகரம், "ந" இதன் பெயர் தந்நகரம். என்பதே சரி. மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ண "கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வருகின்ற உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனாலதான் இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!) தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "ன" கர ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வருகின்ற உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனாலதான் இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!) இவை ரெண்டும் என்றுமே மாறி வராது என்பதை நினைவில் கொள்க.. மண்டபமா? மன்டபமா? எழுதும்போது சந்தேகம் வருகிறதா? பக்கத்துல 'ட' இருப்பதால், இங்க மூன்று சுழி 'ண' தான் வரும். ஏன்னா அது "டண்ணகரம்". கொன்றானா? கொண்றானா? எழுதும்போது சந்தேகம் வருகிறதா? பக்கத்துல 'ற' இருப்பதால், இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும். ஏன்னா அது "றன்னகரம்" என்று புரிந்து கொள்ளலாம். இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும். ஏன்னா இந்த 'ந' எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை). இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த எளிமையான விளக்கம் இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்ததை பலபேருக்கு பகிர்வோம். #shared #post.....!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.