Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

http://irruppu.com/2021/05/30/வடமராட்சி-ஒப்பரேசன்-லிபர/

 

1987ம் ஆண்டு,

மே மாதம் 10 ஆம் தேதி. 

பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த  புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

புலிகள் ஒரு வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக தான் இந்த பயிற்சி நடத்தப்பட்டு கொண்டிருந்தது.  மே 20ஆம் தேதி அன்று இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. இந்த பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான காரணம், சிங்கள ராணுவத்தால் ஒரு பெரிய தாக்குதல் யாழ்குடா நாட்டில் நடத்தப்பட்ட போகிறது என்ற தகவல்  கிடைத்ததால் இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது.

மே 25 

இரவு தேசிய தலைவர் நவிண்டில் பயிற்சி முகாமில் வடமராட்சியில் உள்ள போராளிகளுக்கு கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டம் நடு இரவு 1. 30 மணி வரை நீடித்தது அந்தக் கூட்டத்தில் யாழ்குடா நாட்டில் எதிரிகளின் தாக்குதல் திட்டம் பற்றியும் அதை எதிர்கொள்வது பற்றியும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் தேசிய தலைவர் வழங்கினார். இந்த கூட்டத்தில் தான் முதன்முறையாக தலைவர் அவர்கள் போராளிகளுக்கு  பதவிநிலைக்கான பெயர்களை வழங்கினார். வழக்கமாக அதுவரை வீரச்சாவிற்கு பின்பே போராளிகளுக்கு பதவியின் பெயர்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மே 26 காலை

கூட்டம் முடிந்து போராளிகள் முகாமுக்கு திரும்பினர். அன்று காலை 4. 30 பலாலியில் இருந்து 5க்கும் மேற்பட்ட உலங்குவானூர்திகள் வல்லை வெளியூடாக தாழப்பறந்து, முள்ளி, முள்ளியான், மண்டான் பகுதிகளில் தரையிறக்கப்பட்டு ராணுவ நிலைகளை பலப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக வான் பரப்பு பகுதிகளில் உலங்குவானூர்திகள் பல மாறி மாறி வந்த வண்ணம் இருந்தன.

மே 26 

மணல் காட்டு கடல் பகுதியூடாக சிங்கள கடற்படையினர், வல்லிபுர கோவில் பகுதியில் பெருமளவு ராணுவத்தினரை தரை இறங்கினர்.

மே 26 காலை 5.30

உடுப்பிட்டி யூனியனுக்கு முன் அமைந்த புலிகளின் அந்த பிரதான மெயின்  முகாமில் போராளிகள் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுடன்(50 Caliber ) தயாராகிக் கொண்டிருந்த வேளை, குண்டுவீச்சு விமானம்  புலிகளின் அந்த பிரதான மெயின் முகாமை தாக்கியது. இதில் வீமன், ரம்போ/சிவா, செட்டி, நாகேந்திரன் உட்பட சில போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

வடமராட்சி தொண்டமனாறு இராணுவ முகாம், பலாலி ராணுவ முகாமுடன் நேரடி தொடர்பில் இருந்தது. வல்வெட்டித்துறை இராணுவ முகாம், மற்றும் பருத்தித்துறை இராணுவ முகாமிலிருந்து  மணல்காடு, முள்ளி, முள்ளியான், மண்டானில் இறக்கப்பட்ட ராணுவம் மூலமாக வடமராட்சி பகுதி ராணுவத்தால் முற்றிலும் சுற்றி வளைக்கப்பட்டது.

மே 26 அதிகாலை 6.30 மணி

தொண்டமனாறு மெயின் முகாம் பொறுப்பாளர் கப்டன் அலன், மற்றும் நரேஷ். இருவரும் அதிகாலையில் வல்லை வெளியில் ராணுவம் தரை இறங்கி உள்ளதா என கண்டறிய துவிச்சக்கரவண்டியில் சென்று பார்க்கின்றனர். பார்த்துவிட்டு இரண்டாவது பொறுப்பாளரிடம் வாக்கியில் இங்கு ஆமி இல்லை என்பதை தெரிவிக்கின்றனர். மறுமுனையில் உள்ள இரண்டாவது பொறுப்பாளர் ராணுவம் கிரேசர், காட்டு வைரவர் பகுதியில் பதுங்கியிருப்பதாக அவர்களிடம் தகவல் சொல்கிறார்.  இருவரும் துவிச்சக்கரவண்டியில் மீண்டும் தொண்டமனாறு பகுதிக்கு திரும்பும் வேளையில் அப்பகுதியில் ராணுவத்தினர் பதுங்கி இருப்பதை  அவர்கள் இருவரும் அறியவில்லை. துவிச்சக்கரவண்டியில்  தொண்டமனாறு பகுதிக்கு வரும் அவர்களை ராணுவத்தினர்  மறைந்திருந்து தாக்குகின்றனர். இந்த இராணுவத்தினருடனான நேரடி சமரில் கப்டன் அலன் மற்றும் நரேஷ் இருவரும் வீரச்சாவை தழுவிக் கொள்கின்றனர். இந்த தாக்குதல் மூலமாக ஒப்பரேஷன் லிபரேஷன் முதல் சண்டை ஆரம்பிக்கின்றது.

இந்த சமநேரத்தில் ராணுவம், கடற்படை, விமானப் படையினர் தொண்டமனாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, முகாமிலிருந்து புலிகளின் காவலரணை நோக்கி பாரிய தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பாரிய தாக்குதலில் இரு பகுதியினரும் கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த  ராணுவத் தாக்குதலின் உக்கிரத்தால் புலிகள் தொண்டமனாறு, மயிலியதனை வல்வெட்டிதுறை நிலைகளில் இருந்து பின்வாங்கி உடுப்பிட்டி பகுதிக்கு செல்கின்றனர். இவ்வேளையில் உலங்கு வானூர்தி மூலம் மக்களுக்கு ராணுவம் துண்டு பிரசுரங்களை வீசுகிறது. தாக்குதல் தொடங்குவதை அந்த பிரசுரங்கள் மூலம் அறிவித்த ராணுவம், மக்களை கோயில்கள்,  பள்ளிக் கூடங்களில் தஞ்சமடையும் படி அறிவுறுத்துகிறது. மே 26 மாலை 6 மணி வரை சண்டை நடைபெறுகிறது. பருத்தித்துறை முகாம் ராணுவத்தால் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. மே 26 மாலை 6 மணியுடன் சண்டை ஓய்கிறது. ஆனாலும் இரவு முழுவதும் கடல் விமானம் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் எல்லாம் தாக்கப்படுகின்றன. வல்வெட்டித்துறை முகாம் உடன் தொண்டமனாறு முகாமுக்கு தரை மூலமாக முன்னேறிய போது வல்வெட்டித்துறை ராணுவத்தினரின் எறிகணை வீச்சில், வேம்படியில் லெப்டினன் யூசி வீரச்சாவை தழுவிக் கொண்டார்.

மே 27 அதிகாலை 6 மணி

இரண்டாம் நாள் சண்டை ஆரம்பமாகியது. வடமராட்சி சுற்றியுள்ள ராணுவ முகாம்களில் இருந்து ராணுவம் ஊர் பகுதிக்குள் முன்னேறுவதற்காக கடும் தாக்குதலில் ஈடுபட்டது. ராணுவம் கம்பர்மலை, விறாச்சிக்குளம்  ஊடாக வேதக்கார சுடலை ஊடாக பாரிய தாக்குதலை மேற்கொண்டு உடுப்பிட்டி வல்வெட்டித்துறை பிரதான சாலையை ஊடறுத்து சண்டையை மேற்கொண்டது.  இதில் நம்மாள் தலைமையில் ராணுவத்தினருடன் பாரிய சமர் நடைபெற்றது. இதில் போராளிகள் ஜேபி, குண்டு பாலன், கடாபி, பரமு, குட்டி ஆகியோர் சிறுசிறு அணிகளாக முறியடிப்புச் சமரில் ஈடுபட்டிருந்த வேளையில், உடுப்பிட்டி பத்தர் ஒழுங்கையில்  நிலை கொண்டிருந்த மோட்டார் அணியின் தாக்குதலில் ராணுவம் பாரிய இழப்பை இரண்டாம் நாளில் சந்தித்தது. இரண்டாம் நாளில் நடைபெற்ற இந்த சமரில்  தக்சன், கஜன் என இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவினர்.  மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

பின்னர் அணி பின்னோக்கி நகர்ந்து உடுப்பிட்டி யூனியன், இலந்தை காடு, வெள்ளரோட்டு பகுதியில் நிலைகளை அமைத்தனர். சமகாலத்தில் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதிகளை ராணுவம் கைப்பற்றினர். இத்துடன் இரண்டாம் நாள் சண்டை நிறுத்தப்படுகிறது. ஆனாலும் இரவு முழுவதும் ராணுவம் மக்கள் மத்தியில் Y12  விமானம் மூலம் நேபாம் குண்டு வீச்சு  தாக்குதலிலும்,  பீப்பாய் மலக்கழிவு தாக்குதலிலும், எறிகணைத் தாக்குதலிலும்  ஈடுபடுகிறது.

மே 28 காலை

மீண்டும் சண்டை ஆரம்பிக்கிறது. புறாபொறுக்கி வெள்ளை ரோட்டில், இலந்தைக்காட்டில் பாரிய சண்டை நடைபெறுகிறது. இச்சண்டையில் புலிகள் பின்வாங்கி இரும்பு மதகடியில் நிலைகளை அமைத்து பலப்படுத்தும் வேலையில் ஈடுபடுகின்றனர். இத்தருணத்தில் பெண்புலிகள் கவிதா, மாலதி தலைமையில் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சண்டையில் இணைக்கப்படுகின்றனர்.

மே 29

நெல்லியடிக்கு அருகாமையில் உள்ள இரும்பு மதகடியில் காலை மீண்டும் தாக்குதல் ஆரம்பிக்கிறது. இதனுடன் உலங்குவானூர்தி குண்டுவீச்சு விமானங்கள் சகிதம்  முன்னேறி வரும் ராணுவத்தினருடன் புலிகளின் பாரிய மோதல் நடைபெறுகிறது. இத்தாக்குதல் முனையில் மட்டும் 2500 இராணுவத்தினர் சண்டையில் ஈடுபட்டனர். அவர்களுடன் மொத்தமே ஐம்பது  போராளிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாலி தயாரிப்பான சியாமா செட்டி விமானங்கள் மக்கள் குடியிருப்புகள் மேல் பலத்த தாக்குதலில் ஈடுபட்டது. இச்சண்டையில்  புலிகளும் இராணுவத்தினரும் மிக அருகாமையில் இருந்து பலமாக மோதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலே பெண்புலிகள் நேரடி மோதலில் ஈடுபட்ட முதல் தாக்குதல். உலகிலேயே பெண்கள் மரபுவழி மோதலில் ஈடுபட்டதும் இந்த தாக்குதலே என்ற வீரமிகு பெருமை கொண்டது ஆகும். சண்டை அன்று இரவு வரை நீடித்தது.

இத்தாக்குதலின் போது நெல்லியடி மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த சுக்லா, நிரூபன் அணியினர் வழங்கள் பணிகளிலும், காயப்பட்ட போராளிகளை நகர்த்துதல் பணிகளிலும் ஈடுபட்டனர்.

மே 30

காலை மீண்டும் சிங்களப் படையின் தாக்குதல் தொடங்கியது. விமான, உலங்குவானூர்தி தாக்குதல், மோட்டார் தாக்குதலுடன், நெல்லியடி மாலுசந்தி, மந்திகை ஆகிய இடங்களில் பாரிய தாக்குதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று வடமராட்சி ராணுவத்தினரின் கைகளில் முற்றுமுழுதாக வந்தது. இதனுடன் புலிகள் ஆனைவிழுந்தான் கண்டல் பகுதியூடாக தென் மராட்சி கொடிகாமம் மிருசுவில் பகுதிகளுக்கு  பின்வாங்கி நிலை எடுத்துக் கொண்டனர்.

‘வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்’ 1987 மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம் 5 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்றது. இந்தப் போரில் 817 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15000க்கும் மேற்பட்டமக்கள் தமது இருப்பிடங்களை விட்டுவெளியேறி அகதிகள் ஆக்கப்பட்டனர்.

பிரித்தானியர் ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட முதல் மரபுச்சமராக இந்த இராணுவ நடவடிக்கை அமைந்திருந்தது. இந்தப் பாரிய இராணுவ நடவடிக்கைக்கு பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ, கேணல் விஜய விமலரத்ன ஆகியோரின் தலைமையில் பல்வேறு படையணிகளில் (பற்றாலியன்கள்) இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 8000 படையினரைக்கொண்ட இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோர் இதற்கான அரசியல் தலைமைத்துவத்தையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.

சிறிலங்கா அரசின் கூட்டுப்படை நடவடிக்கைகளில் முதற்கட்டமாக எந்தவிதமான அரச எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்காத அப்பாவித் தமிழ் மக்களை சொந்தவீடுகளில் இருந்து விரட்டி அடித்து அவர்களது நிலங்களைக் கைப்பற்றும் ஒரு இனவாத நடவடிக்கையாக இது அமைந்தது. இந்த இராணுவநடவடிக்கை மூலம் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து வெளிவந்த இராணுவம் வசாவிளான், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் முன்னேறினர். இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம் பெயர்ந்தனர். இதில் பெரும்பாலான தமிழர்களின் வீடுகள் எவ்வித காரணமும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடித்து அழிக்கப்பட்டன.

தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள உடுப்பிட்டி, பொலிகண்டி ஆகிய கிராமங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதே அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் இலக்காகவும் இருந்தது.

இந்தப்படை நடவடிக்கையில்முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த மேஜர் கோத்தபய ராஜபக்ச,மேஜர் சரத்பொன்சேகா, பிரிகேடியர் ஜி.எச்.டி.சில்வா, லெப்டினன்ட் நார்த் விக்கிரமரத்ன போன்ற முக்கியமான இராணுவ உயர் அதிகாரிகள் இத்தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர்.

விமானம், தரைவழி, மற்றும் கடல்வழித் தாக்குதல்கள் என மும்முனைகளிலும் படையினர் முன்னேறிச்சென்றனர். படையினர் வெறிகொண்டவர்களாக முன்னேறிச் சென்றவழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களையும் கைது செய்து கப்பலில்ஏற்றி புதிதாக இதற்காக திறக்கப்பட்டபூசா தடுப்பு முகாமுக்குஏற்றிச் சென்றனர். அங்கே கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இதுவரையில் திரும்பவேயில்லை.

அதேவேளை போகும் வழியெங்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடுகள் இன்றி சுட்டும் எரித்தும் படுகொலைகள் செய்துகொண்டே சென்றனர். இடம்பெயர்ந்து சென்றவர்கள் வதிரி, புற்றளை, அல்வாய் போன்ற கிராமங்களில் சில வீடுகளிலும், ஆலயங்களிலும், பாடசாலைகளிலும் அகதிகளாக தங்கி இருந்தனர். இவ்வாறுஆலயங்களில் தங்கியிருந்தவர்களை அடையாளம் கண்டநிலையில் அல்வாய் முத்துமாரி அம்மன் கோவிலை நோக்கி பலாலி இராணுவ முகாமில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட எறிகணைகள் விழுந்துவெடித்ததால் ஆலயத்தில் தஞ்சம்அடைந்திருந்த சுமார் 200 பேர் வரையான தமிழர்கள் உடல் சிதறிப் பலியாகினர்.

வடமராட்சிஎங்கும் மேற்கொள்ளப்பட்ட ‘ ஒப்பரேசன் லிபரேசன்’ தாக்குதலில் 850பேர் வரை தமிழர்கள் கொல்லப்பட்டதோடு 40,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தமது குடியிருப்புக்களை இழந்து அகதிகளாக்கப்பட்டனர். வடமராட்சி லிபரேசன் நடவடிக்கை தாக்குதலின் இலக்காக இருந்த வடமராட்சியில் முழுப்பிரதேசமும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறிலங்கா அரச படையினர் வடமராட்சியின்  தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, நெல்லியடி பருத்தித்துறை, மந்திகை ஆகியவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒவ்வொரு இடங்களிலும் சிறு சிறுமுகாம்களை அமைத்தனர். வடமராட்சியின் முக்கிய தளமாக நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் 1500இராணுவத்தினரைக் கொண்ட பாரிய முகாம் அமைக்கப்பட்டு வெற்றிவிழா கொண்டாடினார்கள்.

அதேவேளை இந்த இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து தெருக்களில் மனிதர்ளின் உடல்களோடு நூற்றுக்கணக்கான ஆடுகள், மாடுகள், நாய்கள் என்பனவும் இறந்து காணப்பட்டன. பல நாட்கள்வரை தெருவெங்கும் பிணவாடைகள் வீசிக்கொண்டிருந்தன.

 

“தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்”

 

எழுத்துருவாக்கம்: அ.சேரா

உதவி ஒருங்கிணைப்பு: ஆதவன், இரவியப்பா

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையின் புலிகள் முறியடிப்பு சமரின் 37வது ஆண்டு நினைவுகள்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ  அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.