Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தானை விஞ்சிய டெல்லி: நாட்டிலேயே அதிகபட்சமாக 126.1 பாரன்ஹீட் வெப்பம் பதிவு

வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது கட்டுரை தகவல்
  • எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 29 மே 2024, 14:38 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் (120 பாரன்ஹீட்) தாண்டியுள்ளது. தீவிர வெப்ப அலையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் வட இந்திய மற்றும் மத்திய இந்திய பகுதி மக்கள்.

இந்த வாரம், நாட்டின் 37க்கும் மேற்பட்ட நகரங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் (113 F) அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

செவ்வாயன்று, வடமேற்கு டெல்லியில் உள்ள முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையத்தில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

செவ்வாய்க்கிழமை, டெல்லியின் நசாஃப்கர் வானிலை நிலையத்தில் 49.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

ஏசி செய்யப்படாததால், வெப்பமான சூழ்நிலையில் வேலை செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நீதிபதி கூறியதை அடுத்து, டெல்லியில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் வழக்குகளின் விசாரணையை நிறுத்தி வைத்தது.

வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை நிலைகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

நாட்டிலேயே டெல்லியில் அதிக வெப்பநிலை பதிவு

புதன்கிழமை, தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 52.3 டிகிரி செல்சியஸ் (126.1 பாரன்ஹீட்) என்ற வரலாறு காணாத அளவை எட்டியது. இந்திய வானிலை ஆய்வு நிலைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, இந்த வெப்பநிலை பதிவானதை பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

வடமேற்கு டெல்லியில் உள்ள முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையத்தில் புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது டெல்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டெல்லியின் இரண்டு வானிலை நிலையங்களில் (தெற்கு டெல்லியில் ஒன்று, ஆர்யா நகரில் ஒன்று) பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையின் முந்தைய அளவு செவ்வாய்க்கிழமையே முறியடிக்கப்பட்டது. அதையும் விஞ்சும் வகையில் இன்று வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதுவரை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதில்லை. டெல்லி நகரின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராஜஸ்தானில் தகிக்கும் வெப்பம்

ராஜஸ்தானின் சூரூ நகரம் மற்றும் ஹரியாணா மாநிலத்தில் உள்ள சிர்சா நகரம் ஆகியவை நாட்டின் மிகவும் வெப்பமான இடங்களாகும். இங்கு வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கும் (120 பாரன்ஹீட்) அதிகமாக பதிவாகியுள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில், செவ்வாய்க்கிழமை அன்று வெப்பத்தின் தாக்கத்தால் மூன்று பேர் உயிரிழந்தனர்.

வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வட இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது

மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான இந்திய கோடை காலம் பொதுவாக வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் (Humid) இருக்கும்.

ஆனால், இந்த ஆண்டு இந்தியாவில் நீண்ட மற்றும் கடுமையான வெப்ப அலைகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.

இந்த மாதம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 9 முதல் 12 நாட்களுக்கு தொடர்ந்து வெப்ப அலை காணப்பட்டது. வெப்பநிலையும் 45-50 டிகிரி செல்சியஸுக்கு இடையில் இருந்தது.

 
வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜூன் மாதத்தில் அதிக வெப்ப அலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

ஜூன் மாதத்தில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலைய (ஐஎம்டி) தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா இந்த வாரம் தெரிவித்தார்.

வடமேற்கு இந்தியாவில் பொதுவாக மூன்று நாட்களுக்கு தான் வெப்ப அலை நீடிக்கும், ஆனால் இம்முறை நான்கு முதல் ஆறு நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டு இந்தியாவில் சராசரிக்கும் அதிகமாக பருவமழை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.

கேரள கடற்கரையில் மே 31ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cv22nj2ndl7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப அலையின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள் – பீகாரில் ஜூன் 8வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

30 MAY, 2024 | 10:26 AM
image
 

பீகாரில் வெப்ப அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளி மற்றும் பயிற்சி மையங்களுக்கு ஜூன் 8ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் மேற்கு மற்றும் வடமாநிலங்களில் வெப்பம் கொளுத்தி வருகிறது. டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

bihar_heat.jpg

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ளது மன்கவுல் நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற இறைவணக்க நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்தால் அடுத்தடுத்து 7 மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மாணவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தின் எதிரொலியாக மாணவர்களின் நலன் கருதி பீகாரில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும், பயிற்சி மையங்களுக்கும் ஜூன் 8-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/184836

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கடும் வெப்பம் ; 85 பேர் உயிரிழப்பு

01 JUN, 2024 | 10:20 AM
image
 

கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்  85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.

இதேவேளை, பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியசை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 தேர்தல் பணியாளர்கள் உட்பட 16 பேர் வெப்பத் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் வெப்பம் காரணமாக அனைத்து பாடசாலைகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் முன்பள்ளிபாடசாலைகள் வருகிற 8 ஆம் திகதி  வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/185017

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வட மாநிலங்களில் வெப்ப அலை: உ.பி.யில் 33 தேர்தல் பணியாளர்கள் உயிரிழப்பு

03 JUN, 2024 | 11:48 AM
image
 

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 பேர் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதில் ஊர்க் காவல் படையினர் துப்புரவு பணியாளர்களும் அடங்குவர் என்று அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார்.

heat_wave_india1.jpg

வாக்காளர் உயிரிழப்பு: பலியா மக்களவை தொகுதியின் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ளஒரு வாக்குச்சாவடியில் ஓட்டளிப்பதற்காக வரிசையில் நின்ற ராம்பதன் சவுகான் என்பவர் வெயில்தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தியா  முழுவதும் வெப்ப அலையின் காரணமாக கடந்த ஒரே மாதத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில்   இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி பஞ்சாப் ஹரியானா ஒடிசா போன்ற பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெல்லி உட்பட வட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் தட்டுப்பாடும் மின்வெட்டு பாதிப்பும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஒரே மாதத்தில் 46 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வெப்ப அலை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் தொடர்பான தரவுகளை மத்திய அரசு சேகரித்தது.

அதன்படி கடந்த மூன்று மாதங்களில்  முழுவதும் வெப்ப அலை காரணமாக 56 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த மே மாதத்தில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் முழுவதும் வெப்ப அலை காரணமாக 24849 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மே மாதத்தில் மட்டும் 19189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/185185

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள் - காரணம் என்ன?

அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

உத்தரப் பிரதேசம் முழுவதும் தற்போது கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மாநிலத்தின் பல நகரங்களில் வெப்பநிலை 49 டிகிரியை எட்டியுள்ளது. கான்பூரிலும் தொடர்ந்து வெப்பம் அலை நிலவுகிறது.

இங்குள்ள அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு வரப்படும் இறந்த உடல்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கணிசமாக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை அன்று, கான்பூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அங்கித் சுக்லா பிபிசி இந்திக்காக செய்தி சேகரிக்கச் சென்ற போது, அடையாளம் தெரியாத 32 பேரின் உடல்கள் இங்கு கொண்டு வரப்பட்டதாக கூறினார்.

நகரின் பல்வேறு இடங்களில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதேசமயம், 30க்கும் மேற்பட்ட உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அடையாளம் தெரிந்த மற்றும் தெரியாத சடலங்கள் தொடர்ந்து கொண்டு வரப்பட்டதால், பிணவறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. தொடர்ந்து பணிபுரிந்ததால் மருத்துவர் ஒருவரின் உடல்நிலையும் மோசமடைந்தது.

 

அடையாளம் தெரியாத 32 பேரின் உடல்கள்

அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள்

பட மூலாதாரம்,ANKIT SHUKLA

32 அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை தலைமை மருத்துவ அதிகாரியும் மருத்துவருமான அலோக் ரஞ்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

“பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும். இறந்த உடல்களை வைக்க தனி அறையும், ஏ.சி.யும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 மருத்துவர்கள் கொண்ட குழு இன்று (சனிக்கிழமை) பிரேத பரிசோதனைப் பணிகளை கவனித்து வருகிறது. 19 உடல்களின் பிரேத பரிசோதனை முடிந்துவிட்டது. இன்னும் 14 உடல்களுக்கான சோதனை நடந்துவருகிறது. 32 அடையாளம் தெரியாத உடல்களை அடையாளம் காண்பதற்காக குறைந்தது 48 மணிநேரம் இங்கு வைக்கப்படும்." என அலோக் ரஞ்சன் கூறினார்.

கூடுதல் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் கூறுகையில், ''இன்னும் உடல்கள் வரவுள்ளன. அவற்றை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இறந்த உடல்களை ஐஸ்கட்டிகளில் வைக்க ஆலோசனை செய்யப்பட்டது, ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக இதைச் செய்ய முடியவில்லை.” என்றார்.

கான்பூரில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 48.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அன்றைய நாளில் உத்தரப் பிரதேசத்தின் மிகவும் வெப்பமான நகரமாக கான்பூர் இருந்தது. நகரில் உள்ள எல்.எல்.ஆர் மருத்துவமனையில் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த மரணங்கள் வெப்பத்தின் காரணமாக ஏற்பட்டதா இல்லையா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படல்லை, ஆனால் 'இது அதீத வெப்பத்தின் விளைவு தான்' என கான்பூரின் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிஷ்சந்திரா ஒப்புக்கொண்டார்.

பிரேத பரிசோதனைக்கு பின் இறுதிச் சடங்குகளை செய்த தனிராம் பாந்தர் கூறுகையில், “கடந்த ஒரு வாரமாக, தினமும் 10-12 சடலங்கள் வருகின்றன. இங்கு போதிய டீப் ஃப்ரீசர் (Deep freezer) இயந்திரங்கள் மற்றும் ஏ.சி இல்லாததால், சடலங்களை பெற்றுக் கொள்ள வருபவர்களும் அதிக சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். உரிமை கோரப்படாத ஏராளமான சடலங்கள் வெளியில் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

 

ஊர்க்காவல் படையினர் 6 பேர் உயிரிழப்பு

அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள்

பட மூலாதாரம்,@INDIAMETDEPT

பிபிசி இந்திக்காக மிர்சாபூரில் இருந்து ஹரிஷ் சந்திர கேவட்.

உத்தரபிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிர்சாபூர் மற்றும் பல்லியா மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

மிர்சாபூரில் அதீத வெப்பம் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 13 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின் ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நாளான சனிக்கிழமையன்று, கடும் வெயிலில் வாக்களிக்க மிர்சாபூருக்கு வந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வெப்பத்தினால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு உயிரைக் கூட இழந்தனர்.

அதில் 6 ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.

இது தவிர, தேர்தல் பணியில் இல்லாத மேலும் இரண்டு ஊர்க்காவல் படையினரும் உயிரிழந்துள்ளனர்.

 

ஊர்க்காவல் படையினர் கூறியது என்ன?

ஊர்க்காவல் படையினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்பு படம்

வாக்குபதிவு இயந்திரங்களை வைப்பதற்கான ‘ஸ்ட்ராங் ரூம்’ (Strong room) மிர்சாபூரின் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மஜ்வா பிளாக்கின் கட்கா சாவடியில் நிறுத்தப்பட்டுள்ள ஊர்க்காவல் படையினர் பேசுகையில், "நாங்கள் 31ஆம் தேதி இரவு 11 மணிக்கு வந்தோம், ரயிலில் இருந்து இறங்கி, ஸ்ட்ராங் ரூமுக்கு நடந்து சென்றோம், அங்கு எங்களுக்கான பேருந்து மற்றும் சாவடியைத் தேடத் தொடங்கினோம். பேருந்துகள் அங்கும் இங்கும் நின்று கொண்டிருந்தன” என்றார்கள்.

மேலும், “எங்கள் பேருந்தில் நாங்கள் அமர்ந்திருந்தபோது, பேருந்தின் மேற்கூரையிலிருந்து நெருப்பு மழை பொழிவது போல் இருந்தது, நாங்கள் அனைவரும் வியர்வையில் நனைத்திருந்தோம், எங்கள் கண்கள் எரிந்தன.”

“குடிநீர் என்ற பெயரில் இரண்டு டேங்கர்கள் மட்டுமே இருந்தன, நிழலுக்கு ஒதுங்க ஒரு இடமும் இல்லை, பேருந்துகள் ஒரு வரிசையில் நிறுத்தப்படவில்லை. இதனால் நெரிசல் ஏற்பட்டு, மூன்று மணிநேரத்திற்கு மேலாக பேருந்துகளில் இருக்க வேண்டிய நிலை இருந்தது. பின்னர் மதியம் 12 மணிக்குப் பிறகு தான், நாங்கள் வாக்குச் சாவடிக்குக் கிளம்பினோம்." என்று ஊர்க்காவல் படையினர் கூறினார்கள்.

அங்கு வந்திருந்த தேர்தல் அலுவலரிடம் பேசியபோது, 'இதற்கு தான் பொறுப்பல்ல' என்று அவர் திட்டவட்டமாக பதிலளித்தார். வசதிகள் குறித்த கேள்விக்கு, "அன்று காலை மேகமூட்டமாக இருந்தது, அது மட்டுமல்லாது வாக்குச்சாவடிகளில் கூலர் (Cooler) வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது" என்று அவர் பதிலளித்தார்.

வாக்குச்சாவடியில் இருந்த ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில், “வாக்களிப்பு நிலையத்திற்குள் அமர்ந்திருப்பவர்களுக்கு, நிழலும் மின்விசிறிகளும் கிடைப்பதால் சற்று நிம்மதியாக இருக்கும், ஆனால் எங்களுக்கு? நாங்கள் நாள் முழுவதும் வெளியில் வெயிலில் உட்கார்ந்து வேலை செய்கிறோம், எங்களுக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை” என்றார்கள்.

 

சோன்பத்ராவில் 9 தேர்தல் பணியாளர்களும், வாரணாசியில் 3 பேரும் உயிரிழப்பு

வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கௌரவ் குல்மோகர், பிபிசி இந்திக்காக.

வெள்ளிக்கிழமை, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 45.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பதோஹியில் 43.7 டிகிரி செல்சியஸ், வாரணாசியில் 43 டிகிரி செல்சியஸ், மிர்சாபூரில் 42.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதுவரை, சோன்பத்ராவில் மொத்தம் 9 வாக்குச்சாவடி ஊழியர்கள் வெப்ப அலைக்கு இறந்துள்ளனர். சோன்பத்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திர விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராபர்ட்ஸ்கஞ்ச் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து தேர்தல் பணியாளர் குழு புறப்பட இருந்தது. மதியம் 11 முதல் 2 மணிக்குள் சில வாக்குச்சாவடி பணியாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டனர்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு போலீஸ்காரர் உட்பட 3 வாக்குச்சாவடி பணியாளர்கள் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நோயாளிகள் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நித்யானந்த் பாண்டே (குமாஸ்தா) மற்றும் மேலும் ஒருவர் என இரண்டு வாக்குச்சாவடி பணியாளர்கள் வெப்ப அலையால் இறந்துள்ளனர்." என்றார்.

தகவலின்படி, வாரணாசியிலும், 3 வாக்குச்சாவடி ஊழியர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கடுமையான வெப்பத்தால் இறந்துள்ளனர். ஆனால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

பல்லியாவின் சக்பஹவுதீன் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ராம்பச்சன் சவுகான் என்ற எழுபது வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் இருந்த கிராமத் தலைவர் அருண்ஜெய் சவுகான் பிபிசியிடம் பேசுகையில், "ராம்பச்சன் சுமார் 5 நிமிடம் வாக்குப்பதிவு வரிசையில் நின்றிருந்தார். திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால் அவர் ஆரோக்கியமான ஒரு நபர் தான்” என்று கூறினார்.

பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேந்திர குமார் பிபிசியிடம் பேசுகையில், “துணை மாவட்ட மாஜிஸ்திரேட்டின் அறிக்கையின்படி, அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதே சமயம், பல்லியாவில் வெப்பம் காரணமாக வேறு யாரும் இறக்கவில்லை” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/ce553jm44zko

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் வெப்ப அலை தாக்கத்துக்கு வீடு இல்லாதவர்கள் 192 பேர் உயிரிழப்பு

21 JUN, 2024 | 10:33 AM
image
 

புதுடெல்லி:  டெல்லியில் வெப்ப அலையின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வீடற்ற நிலையில் சாலையில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 192 பேர் கடந்த 9 நாட்களில் உயிரிழந்துள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹோலிஸ்டிக் டெலவப்மெண்ட் மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வட மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக, டெல்லியில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

அங்குள்ள வீடற்ற குடும்பங்கள் தற்காலிகமாக சாலை ஓரங்களில் தங்கி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அதுபோன்றவர்களை இந்த வெப்ப அலையின் தாக்கம் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் கடும் வெயிலுக்கு 192 பேர் பலியானது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த 192 மரணங்கள் ஜூன் 11 முதல் 19-க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தவை. இறந்தவர்களின் உரிமை கோரப்படாத உடல்களில் 80 சதவீதம் வீடற்றவர்கள் பிரிவை சேர்ந்ததாக உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வெப்ப அலை தாக்கத்திலிருந்து தப்பிக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் சில ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. அதில், தொடர்ந்து அதிக நீரை பருகுதல், தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல், நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்தல், தொப்பி, குடைகளை பயன்படுத்துதல், நீர்ச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் உள்ளிட்ட பல முக்கிய அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

https://www.virakesari.lk/article/186618

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.