Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்படி இருந்த நான் இப்படி ஆனது ஏன்?

Featured Replies

நேரடியாகவே விடயத்திற்கு வருகிறேன்.

நான் பதினாறு வயது வரை மிகுந்த மத நம்பிக்கை உள்ளவன். கடவுள் பக்தி உள்ளவன். நிறைய தேவாரங்கள், சிவபுராணம், கந்தசஸ்டி என்று மனப்பாடம் செய்து வைத்திருந்துள்ளேன்.

கோவில்களில் பூசாரி தேவாரம் ஓதுக என்று சொன்னதும் தேவாரம் நான்தான் பலமுறை பாடியிருக்கிறேன்.

அப்படி இருந்த நான் இப்படி ஆனது ஏன்?

இந்து மதத்திலும், அது தருகின்ற கடவுள்களிலும், புராணங்களிலும் மிகுந்த நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்த என்னுடைய மாற்றத்திற்கு முதலவாதக வித்திட்ட புத்தகத்தின் பெயர் "தமிழீழம்"

1990களின் ஆரம்பத்தில் அந்தப் புத்தகம் என்னுடைய கையில் கிடைத்தது. பாவலரேறு பெருஞ்சித்தனார் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழீழப் போராட்டம் குறித்து எழுதியவற்றின் தொகுப்பாக அதை வெளியிட்டிருந்தார்கள். அதை வெளிநாடுகளில் வினியோகித்தவர்கள் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளையினர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் நடந்த தேசிய நிகழ்வுகள் அனைத்திலும் அந்தப் புத்தகம் விற்கப்பட்டது.

"தமிழீழம்" புத்தகத்தை நான் வாசிக்க தொடங்கியதும், எனக்குள் நிறையக் கேள்விகள் வந்தன. நான் அறிந்தே இராத பல விடயங்கள் அதற்குள் இருந்தன.

நான் "ஐயா, ஐயா" என்று அழைப்பவர்களை எல்லாம் பாவலரேறு அவர்கள் "பார்ப்பான், பார்ப்பான்" என்று சாடியிருந்தார். புராணங்களை சாடியிருந்தார். ஆரியத்தை மிதித்திருந்தார். நான் மிகவும் விரும்பிப் படிக்கின்ற மகாபாரதத்தை, இராமாயணத்தை எல்லாம் சதி என்பதாக எழுதியிருந்தார்.

தமிழர்களுக்கு எதிராக ஆரியச் சதி என்கின்ற ஒன்று இருப்பதை அந்தப் புத்தகத்தை படித்த போதுதான் எனக்குத் தெரிய வந்தது.

எனக்குள் இருந்த இனப் பற்றிற்கும் மதப் பற்றிற்கும் போர் ஆரம்பமானது இப்படித்தான்.

இந்த நேரத்தில் பாடசாலையில் "சமயம்" அல்லது "தத்துவஞானம்" ஆகிய பாடங்களில் ஒன்றை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. "சமயம்" என்பது ஜேர்மனியில் கிறிஸ்தவ சமய பாடமாகவே அதிகம் இருப்பதால், "இந்து(!)வாகிய" நான் சமய பாடத்தை விடுத்து, "தத்துவஞானத்தை" தேர்வு செய்தேன்.

இந்தப் படிப்பு "கடவுள்" பற்றிய கேள்விகளையும் எனக்குள் எழுப்பி விட்டது. ஏற்கனவே "தமிழீழம்" மதம் பற்றிய என்னுடைய சிந்தனைகளை மாற்றத் தொடங்கியிருந்தது.

பின்பு எரிமலை, ஈழமுரசு போன்றவற்றில் இடம்பெற்ற சில கட்டுரைகள் ஆரியம், பார்ப்பனியம், புராணங்கள் போன்றவற்றை கண்டித்திருப்பதையும் கண்டேன்

என்னுடைய பகுத்தறிவைக் கொண்டு பல விடயங்களை நானே சிந்திக்கத் தொடங்கியருந்தேன். அதுவரை கேள்விகள் எனக்குள் இருந்தாலும், கடவுள் பயத்தில் அப்படி நினைப்பது "பாவம்" என்று நினைத்து பேசாது இருந்தேன். அந்தப் எண்ணம் எனக்குள் விலகி இருந்தது.

தமிழ் தேசிய ஊடகங்கள் என்னுடைய இந்து மதம் பற்றிய சிந்தனையை மாற்றியிருந்தன.

இந்த நேரத்தில் மேலும் இரண்டு புத்தகங்கள் எனக்கு கிடைத்தன. "பெரியார் களஞ்சியம்" என்ற புத்தகங்கள் அவைகள்.

இந்தப் புத்தகங்களால் எனக்கு இன்னும் ஒரு விடயம் தெரிய வந்தது.

அதுவரை எனக்குப் பெரியார் பற்றி பெரிதாக தெரியாது. எமது ஊடகங்களும் பெரியார் பற்றி ஒன்றும் எழுதுவதில்லை. பெரியாரின் புகைப்படத்தை தமிழ்நாட்டு திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். "ஒரு தலைவர்" என்று மட்டும்தான் எனக்கு தெரிந்திருந்தது. மற்றையபடி அவருடைய கொள்கை பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது.

"பெரியார் களஞ்சியம்" மூலம் பெரியாரும் நான் கொண்டிருக்கும் கொள்கைகளையே கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. அத்துடன் பெரியாரின் கேள்விகளில் உள்ள நியாயம் என்னைக் கவர்ந்தது. பெரியார் பற்றி மேலும் அறிந்து கொண்டு அவருடைய தன்னலம் இல்லாத தொண்டினை உணர்ந்து அவரை என்னுடைய மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன்.

ஆனால் இந்து மத எதிர்ப்புச் சிந்தனை தமிழ் தேசிய ஊடகங்களில் இருந்தும், தமிழ் தேசிய ஆதரவு செயற்பாட்டாளர்களிடம் இருந்தும்தான் நான் பெற்றுக் கொண்டேன்.

மதப் பற்றை விட தமிழ் பற்று எனக்கு அதிகம் இருப்பதால், தமிழினத்திற்கு எதிரானவைகளை தூக்கி எறிவது எனக்கு கடினமாக இருக்கவில்லை.

சரி! நண்பர்களே,

அப்படி இருந்த நான் இப்படி ஆன கதையை மிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இங்கே யாழ் களத்தில் இந்து மதத்தை கண்டிக்கின்ற பலர் இருக்கின்றீர்கள்.

நீங்களும் சிறு வயதில் என்னைப் போன்று பக்தியோடுதான் இருந்திருப்பீர்கள். நீங்கள் எப்படி இப்படி மாறினீர்கள்? உங்களுடைய கதையை சொல்லுங்கள்! கேட்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.

அதே போன்று, மிகவும் மத எதிர்ப்போடு இருந்து, பின்பு மிகவும் பக்தியாக மாறிப் போனவர்கள் இருந்தாலும் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.

மதம் சார்ந்த சிந்தனைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் பற்றிய அனுபவங்களை சொல்வதாக இந்தத் தலைப்பு இருக்கட்டும். ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கு இது சிலவேளைகளில் உதவக் கூடும்

அது எனது தாத்தனுக்கு தாத்தன் ஆண்ட கோயில் என்பார்கள்... அதன் வெளிவீதிக்கு அண்மையில்தான் எனது வீடும்... அந்த கோயிலும் சரி வீடும்(வீடு இராணுவ கப்ரன் ஒருவன் தங்ககமாக பாவிப்பதாக அறிந்தேன்) , இப்ப அது எங்களின் கட்டுக்குள் இல்லை..

ஆனால் எனது சொந்தங்களின் கைகளில் இருந்து அ்து தனியான நிர்வாகத்துக்கு மாற்ற பட்டு இருக்கிறது... சொந்தங்கள் ஊரில் சிலர் எண்டு எல்லாரின் உபயங்களும் இருக்கும் கோயில் வைரவர் கோயிலாக இருந்து இன்னும் ஒரு பக்கம் முருகனையும் கொண்ட கோயில்...

ஏனோ அந்த கோயிலுக்கு போகும் போது அது என்னுடைய கோயில் எனும் நினைப்பு வருவதை தடுக்க முடிவதில்லை... நண்பர்களில் அனேகர் சொந்தகாறர்.. விளையாடுவது கூட கோயில் வீதியில்தான்... பாடசாலை ரியூசன் என்பது எல்லாம் முடிந்து நெரே வீட்டுக்கு போவது இல்லை... கோயிலுக்கு போய் வெளிவீதி உள்வீதி எல்லாம் கூட்டி பெருக்கி கிடங்கு கிண்டி குப்பைகள் எல்லாம் தாள்ப்பது வரை எல்லாம் நண்பர்களாக விளையாட்டாக செய்வோம்... சின்னவயதுகளில் புலால் உண்ணும் பழக்கமும் எங்களில் பலருக்கு இருந்ததும் இல்லை... ஆதலால் கோயிலின் (தேவை ஏற்படும் போது எல்லாம்) மூலஸ்தானம், தீர்த்த கிணறுவரை போய்வருவோம்... தட்டம் அடிபது, சங்கு ஊதுவது, தீவட்டி பிடிப்பது எண்று எல்லாமே நண்பர்கள் வட்டத்துக்குள் அடக்கம்..

பிற்காலத்தில் காலத்தின் கட்டாயமாக நாங்கள் நண்பர்கள் எல்லாம் பிரிந்த போதும் அந்த நாட்கள் என்பது மட்டும் மறப்பதில்லை... ஆனால் கோயிலில் நான் கடவுளை தொழுத வேளைகள் என்பது குறைவு என்பது மட்டும் சொல்லலாம்..

எனக்கும் பக்தி என்பது தாயகத்தோடு இருந்த போது இருந்ததுதான்... இந்தியாவுக்கு போனபோதுதான் கோயில் எண்டால் எப்படி இருக்க கூடாது என்பதனை அறிந்து கொண்டேன்... கோயிலுக்கு அதன் பின்னர் போவதும் இல்லை...!

தலையங்கத்தைப் பார்த்துட்டு ஓடிவந்தன் நம்மட கருணா அம்மானின் அண்மைய நகர்வு பற்றி புதிசா ஆய்வு செய்திருக்கினம் ஆக்கும் எண்டு.

சரி பறவாயில் யாராவது செய்யாமலா போகப் போயினம் :)

நானும் கோவிலில பூ பறிச்சு குடுக்கிறது, தண்ணி அள்ளிக் குடுக்கிறது மணி அடிக்கிறது தீவட்டி பிடிக்கிறது சங்கு ஊதுறது சாமரம் வீசுறது சாமி தூக்கிறது இழுக்கிறது எல்லாம் செய்திருக்கிறன். திருவிழா செய்யும் போது அபிசேகத்தில தெர்ப்பை போட்டிருக்கிறன். அதுக்காக விரதம் இருந்திருக்கிறன். எல்லாம் வீட்டுக்காறர் கேட்டதாலை மற்றும் அப்பொழுது ஒது சமூக நிகழ்வாக சாதாரண விடையமாக இருந்தது. நண்பர் உறவினர்கள் செய்கிறார்கள் அப்போ நானும் பங்கெடுப்பம் என்ற உந்துதல் அதில் கிடைக்கும் ஒருவகை திருப்த்தி சந்தேசாம் (இப்பொழுதைய விளக்த்தில் சொல்வதானால் socializing opportunity). திருவெம்பாவைக்கு விடிய எழும்பி தேவாரம் பாடும் ஆக்களோட போயிருக்கிறன். பக்தியால் அல்ல ஒரு பம்பல் என்று. கடசி நாளில் லாண்டமாஸ்ரர் இல சோடிச்சு லைற்றுப் ஸ்பீக்கர் பூட்டிற excitement .

பாடசாலையின் குறைந்த புள்ளிகள் கிடைப்பது சைவசமயத்துக்கு தான். ஆனால் எனது நண்பர்கள் உண்மையில் பக்தியோடு நிகழ்வுகளில் பங்கொடுப்பதை படிப்பதை கவனித்திருக்கிறன். சின்னவயதில் இருந்தே வெள்ளி மற்றும் விசேட நாட்கள் தவிர்த்து மாமிசம் உண்ணும் பழக்கமும் இருந்தது. ஆழமான ஈடுபாடோ பக்தியோ இருந்ததில்லை. ஆனால் நடப்பவை பற்றி கேள்வி கேக்க பயமாக இருந்தது. தெய்வக்குற்றமாகி தண்டிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் பெரியவர்களிடம் இருந்து வந்தும் இருந்தது.

உயர்கல்வி என்று சென்று அதில் உள்ள நுட்பங்களையும் அதன் வரலாற்றுப் பின்னணிகளையும் விளங்கும் பக்குவம் வந்த பின்னர் அது சமூக விடையங்களில் இதுவரை மறுபேச்சு இன்றி ஏற்றுக் கொண்ட விடையங்கள் பற்றியும் சிந்திக்க தூண்டியது. புலம்பெயர்ந்த பிறகு வேற்று இனத்தவர் மதத்தவர்களோடு ஆழமாக பழகும் உரையாடும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. ஏனய இனத்தவர்கள் மதத்தவர்களின் நாடுகளின் வரலாறுகள் நாகரீகங்கள் பற்றி அறியும் ஆவல் ஏற்பட்டது. மதங்களிற்கு இடையே அதிசயத்தக்க வகையில் இருந்த ஒற்றுமைகளை உணரக் கூடியதாக இருந்தது. அவ்வாறு தான் கடவுள் என்று ஒன்று இருக்குமானால் அது எந்தவொரு குறித்த மதம் சொல்லும் விபரங்களிற்கும் அப்பாற்பட்ட சாதாரண மக்களால் விளங்கிக் கொள்ள விபரிக்க முடியாத ஒன்றா இருக்கும் என்ற தன்னம்பிக்கை எனக்குள் பிறந்தது.

இந்து மதத்தில் - சைவ சமயத்தில் இன்றும் பிடித்த விடையங்களாக இருப்பது மதமாற்றம் செய்து பரப்ப முயற்சிப்பதில்லை. உயிர்கொலை மாமிசம் உண்பது தவறாக பார்ப்பது நல்லதாக படுகிறது.

ஆனால் புராணங்கள் ஏனைய சம்பந்தப்பட்ட கதைகள் இதற்கு முரண்படுவதாக இருக்கிறது.

இவ்வாறு இந்து - சைவ மதத்தின் விபரங்களில் நம்பிக்கை அற்றவனாக சுயதெரிவில் மெதுவாக மாறிவிட்டன். நான் சுயமாக தெரிவு செய்தது போல இதை முற்றுமுழுக்க தனிநபர் நம்பிக்கை சார்ந்து அவரவர் தெரிவிற்கு விட்டுவிட வேண்டும் என்று தான் ஆரம்பத்தில் இருந்தனான். பின்னர் புலம்பெயர்ந்த நம்மவர்கள் கேவில்களில் செலவிடும் பணத்தையும் தாயகத்தில் நடப்பவற்றிற்கு அவர்களது நம்பிக்கை சார்ந்து தரும் விளக்கங்களை பெருமளவில் அவதானித்த பிறகு தான் இந்த மதத்தின் எம் இனம்மீதான உண்மையான பாதிப்பையும் அதன் இன்றய காலத்து அவலத்தையும் உணர முடிந்தது. இதிலும் முக்கியமாக ஏனைய இனங்கள் எவ்வாறு பிரச்சனைகளை விளங்குகிறார்கள் நம்மவர்கள் அதற்கு எப்படிய விளக்கங்களை என்ன அடிப்படையல் கொடுத்து எப்படியான சிந்தனை வருகிறது என்னத்தை செய்ய தூண்டுகிறது என்பதை ஒப்பிடத் தொடங்கின பொழுது அதிர்ச்சியாக இருந்தது. இதன் பின்னர் தான் மதத்தின் தோற்றுவாய் வரலாறு என்பவற்றை அரசியல் ரீதியில் பார்த்து விளங்கிக் கொள்ளத் தூண்டியது. அதன் அடிப்படையில் எமது மற்றும் குறிப்பாக இந்திய தொடர்புகளை பார்க்கும் பொழுது ஏனை இனங்களிற்கு நடந்தவை தான் எமக்கு நடந்தது இன்னமும் நடக்கிறது என்பதை உணர முடிந்தது.

எனவே நான் மதங்களில் நம்பிக்கை இழந்தது சுயதெரிவில் அனுபவங்களில். ஆனால் அதை நமது சமூகத்தவர்களும் அவசரமாக அறிய உணர வேண்டிய தேவை இருக்கிறது என்று நினைப்பது எம்மை ஒரு போராடும் இனமாக பார்க்கும் பொழுது. இவை முழுவதும் ஏனை இனங்களின் வரலாற்றின் அடிப்படையில் விளங்கி உணர்ந்தவை. புலிகளின் தரப்பு ஆக்கங்களில் இதுபற்றி அறிய முற்பட்டதில்லை. ஆனால் தலமைப்பீடத்தில் உள்ளவர் இப்படி ஒரு தெளிவு நிலையை எப்பவே பெற்றிருக்கா விட்டால் போராட்டத்தை இந்தளவு வெற்றிகரமாக இவ்வளவு எதிர்ப்புகளிற்கு மத்தியில் காப்பாற்றி வழர்த்திருக்க முடியாது. அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் கூக்குவிக்கும் விழாக்கள் நிகழ்வுகள் இதற்கு வெளிப்படையான உதாரணம். அவர்களிற்கு இது பற்றி வெளிப்படையாக நிலைப்பாடுகள் எடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கு. அங்கீகாரம் வேண்டி போராடும் இனத்தின் தேசிய தலமையாக வெளியக உறவு நிலைகள் பற்றிய கவனம் தேவை. அடுத்து தாயகத்தில் சிங்கள அடக்கு முறையின் யுத்தத்தின் வடுக்கள் பிரதேசவாதம் இஸ்லாமிய தமிழர்களோடான சச்சரவுகள் என்பனவற்றை எல்லாம் எடுத்து நோக்கும் பொழுது அவர்கள் எந்த ஒரு நிலைப்பாட்டையும் கடுமையாக எடுத்து எம்மை நாமே பலவீனமாக்க முடியாது என்ற நிர்ப்பந்தம் இருக்கு.

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு இந்த 2 நிர்ப்பந்தங்கயளும் முற்று முழுக்க இல்லை. இன்று புலம்பெயர்ந்த சமூகத்தின் பலம் அறுவடை செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணங்கள் என்னென்ன என்ற ஆய்வு பல கோணங்களில் செய்வது முக்கியமானது. அதில் ஒன்றாக நம்மவர்களின் மத நம்பிக்கையும் இருக்க வேண்டும். இது பற்றி விபரங்களை கொண்ட ஆய்விற்கு சுயவிசாரணை விமர்சனத்திற்கு யாழ்களத்தில் உள்ளவர்கள் ஒத்துளைத்து பங்களித்தால் நல்லது.

Edited by kurukaalapoovan

புலம்பெயர் நாட்டில் கோயில்களுக்கு பணம் செலவளிக்கிறார்கள் என்பது உண்மைதான்.... ஆனால் யார் செலவளிக்கிறார்கள் எண்டு பார்த்தால்... அது மன நிம்மதியை இளந்தவர்கள்... !

மன நிம்மதி இளந்த மக்கள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்....

நான் பல இளைஞர்களை சந்தித்து இருக்கிறேன் கோயில்களையே பழியாக கிடப்பார்கள்... நாளாந்தம் போவர்களையும் தெரியும்... அவர்களை எல்லாம் கேட்டால் சொல்லும் பதில் என்ன செய்யுறது வாழ்கையே வெறுத்து போச்சுது... அடுத்தது என்ன எண்டே தெரியவில்லை... அப்படி என்ன தான் அவர்களின் பிரச்சினை...??? அது விசா எண்ட ஒரு கோதாரி...!

பல பெடியள் பிள்ளையள் வருவினம் பாப்பம் எண்டும் போறவைதான், அதையும் தாண்டி அது தனக்கு கிடைக்க வேணும் எண்ட ஒரு அப்பிளிகேசன் கடவுளிட்ட போடவும்தான் எண்டு வச்சு கொள்ளுங்கோவன்... (கடவுளை மாமா வேலை செய்விக்கிறாங்கள் எண்டு எனக்கும் கறல் இருக்குது)

உந்த விசா எண்ட கோதாரி (மட்டும்) பெடியளை எப்பிடி எல்லாம் ஆட்டி படைக்குது எண்டதை தெரிஞ்சு கொள்ளவேணும்... சுருக்கமாக விசாவை பற்றி சொல்லுவது எண்டால்... எதுவும் நிரந்தரம் இல்லை எண்டுதான் சொல்ல வேணும்... வங்கியில கணக்கு இல்லை, வெளிப்படையான வேலை இல்லை, சொலிசிட்டருக்கு கட்ட வேண்டிய காசுக்கு கணக்கும் இல்லை, கையெழுத்து போடப்போனால் திரும்பி வாடகை வீட்டுக்கு போவமா இல்லை இலங்கைக்கு அனுப்பி போடுவாங்களோ எண்ட தெளிவும் இல்லை... ! எல்லாம் பய மயம்...!

இதுக்கு எல்லாம் யார் காரணம் எண்டால் , அது எங்கட விசா கிடைச்ச அல்லது இலங்கைக்கு அடிக்கடி போயிட்டு வாற ( இலங்கைகு சுற்றுலாமூலம் வருமானம் குடுக்குற ) எங்கட ஆக்கள்தான்...! இப்ப கோயில்தான் பெடியளை கெடுக்குது எண்டு சொல்லுறவையும் அடக்கம்...

போயிட்டு வரேக்க "ஹீத்துறூ ஏர்போட்டிலை" விசா ஒபிசர் கேப்பார்.. எப்பிடி சுற்றுலா எண்டு அதுக்கு சொல்லுவினம் ஓ சிறப்பாய் இருந்துது... அவர் திரும்பி கேப்பார் பிரச்சினை ஒண்டும் இல்லையே... அதுக்கும் சொல்லுவினம் ... இல்லை இல்லை எல்லாம் நல்லா இருக்குது..! அதாவது ஒரு தமிழன் இலங்கையில் பிரச்சினை இல்லாமல் நடமாட முடியுது எண்ட வாக்குமூலம்தான் அங்கை குடுத்தவை எண்ட அறிவே இல்லாமல் வந்து கொண்டே வெளியிலை சொல்லுவினம்... "இமிக்கிறேசன் ஒபிசர் எவ்வளவு அக்கறையாய் விசாரிக்கிறாங்கள் எண்டு."

இப்படி எங்களுக்கு எதிரிகளாக நாங்கள் இருக்கும் பல சந்தர்ப்பங்கள் இருக்கிறது... ! அதன் விளைவுகளில் அடிபட்டு மனமுடைபவர்கள் கடவுளை நம்ப தள்ளபடுகிறார்கள்...! இதுக்கு காரணம் நாங்கள்( தமிழர்கள்தான்) அதை தடுக்க நடவடிக்கை எடுக்க மாட்டார்களாம் கோயில்களை தடுக்க போகிறார்களாம்...

எங்கட பிரச்சினைக்கு நாங்கள்தான் காரணம் அதுக்கு கடவுளையும், கோயிலையும் வம்புக்கு இழுப்பது பகுத்தறிவு கிடையாது....!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன், உங்க பதிவை பார்த்தவுடன் என் மனதில் தோன்றியது இவை.

பதினாறு வயது வரை மிகுந்த மத நம்பிக்கை உள்ள நீங்க பிறகு புத்தகங்கள் வாசிப்பின் மூலம் மாற்றங்களைக் கண்டவர் நீங்கள். இதே நிலையில் நீங்க 60 வயதாகும் போது புத்தகங்கள், சிந்தனைகள், உங்களை பழைய நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய சந்தர்ப்பம் வரலாம் இல்லையா? அறுபது எழுபது வயதுகளில் ஞானம் பிறக்கும் என்பார்களே அதுதான் கேட்கிறேன்.

அப்படி இருந்த நீங்க இப்படியாகிய நீங்க பழையபடி அப்படியாகிறதுக்கு சந்தர்ப்பங்கள் அமையலாம் இல்லையா?

இந்த நேரத்தில் பாடசாலையில் "சமயம்" அல்லது "தத்துவஞானம்" ஆகிய பாடங்களில் ஒன்றை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. "சமயம்" என்பது ஜேர்மனியில் கிறிஸ்தவ சமய பாடமாகவே அதிகம் இருப்பதால், "இந்து(!)வாகிய" நான் சமய பாடத்தை விடுத்து, "தத்துவஞானத்தை" தேர்வு செய்தேன்.

இந்து என்பதால் தான் கிறிஸ்தவ சமயபாடத்தை தவிர்த்திர்களா? கிறிஸ்தவம் பற்றியும் அறியும் எண்ணம் இருக்கவில்லையா.

  • தொடங்கியவர்

நான் கிறிஸ்தவ சமய பாடத்தை தவிர்த்ததற்கு, ஜேர்மன் மொழியில் பைபிளை வாசிப்பது மிகவும் கடினம் என்பதும் ஒரு காரணம். அத்துடன் என்னுடைய இந்து மத நம்பிக்கையும் ஒரு காரணம்.

நான் 60 வயதில் மீண்டும் மாறுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. என்னுடைய மாற்றத்திற்கு முக்கிய காரணம் தமிழ் பற்றுத்தான்.

அத்துடன் ஒரு மனிதனுக்கு மதம் அவசியம் இல்லை. எப்படி ஒரு மனிதன் ஒரு கட்சியில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையோ, அப்படி ஒரு மதத்திலும் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

மதங்களால் வாழ்க்கைக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை.

ஆகவே ஒரு மதம் தேவை என்று நான் நினைக்க மாட்டேன். அப்படி நினைத்தாலும் இந்து மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

நான் இந்து மதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், இந்து மதம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தன்னிடம் உள்ள நிறைய வேதங்களை, புராணங்களை தூக்கி எறிய வேண்டும். அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். அனைத்து மொழிகளையும் சமனாக கருத வேண்டும்.

இவைகள் நடந்தால், நான் இந்து மதத்தை ஏற்றுக் கொள்கிறேனே இல்லையோ, இந்து மத எதிர்ப்பையாவது கைவிடுவேன்.

இங்கே மதங்களை எதிர்த்து கருத்துச் சொல்கின்ற நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்களும் சிறுவயதில் நல்ல பக்தி உள்ளவர்களாக இருந்திருப்பார்கள். அவர்களுடைய மாற்றத்திற்கு என்ன காரணம் என்று அறிய விரும்புகிறேன்.

யாராவது எழுதுங்களேன்!

சபேசன் உங்கடை இந்துமத எதிர்ப்பில இருந்து தெரியுது அதை நீங்கள் ஒரு காலத்தில வெகு சீரியஸ் ஆக நம்பியிருக்கிறயள் எண்டு :)

நான் இந்து மதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், இந்து மதம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தன்னிடம் உள்ள நிறைய வேதங்களை, புராணங்களை தூக்கி எறிய வேண்டும். அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். அனைத்து மொழிகளையும் சமனாக கருத வேண்டும்.

இந்து மதம் என்பது சைவதையும் உள் அடக்கியது... நீங்கள் வேண்டுமானால் ஒரு சைவனாக மட்டும் உங்களை மாற்றி கொள்ளுங்களேன்....!

சைவர்கள் எல்லாம் இந்து தர்மங்களை அதாவது சாஸ்திரங்கலை கடைப்பிடிக்கிறார்களா எண்டால் இல்லை எண்றுதான் சொல்ல வேண்டும்... அர்த்த சாஸ்திரம் எழுதப்பட்டது வடக்கதியர்களுக்காக... எழுதிய அந்த வேளைகளில் தென்னகம் குப்தர்கள் எனப்படுக் மௌரியர்கள், தெற்கை கையக படுத்தவே இல்லை... அப்போதும் தென்னகத்தில் சைவம் இருந்தது...! அதுக்கும் சமாந்தரமான காலங்களில் அதே குப்தர்களால் மனுஸ்ருதி (மனு தர்மம்) இயற்ற பட்ட போதும், அதுக்கு பிரகும் தெற்கை மௌரியர்கள் கையக படுத்த இல்லை...

இப்போ அந்த கொடுமையான் சாஸ்திரங்களை எல்லாம் யார் இங்கே கொண்டு வந்தார்கள்...?? அப்படி பார்த்தீர்கள் எண்டால் அது உங்களை ஆட்ச்சி செய்த மன்னர்களும், நிலசுவாந்தாரர்களும் தான்...! அதைதான் பெரியார் கூட பார்பணியம், முதலாளித்துவ சுறண்டல் என்கிறார்...

இங்கே பெரியார் கூட சமயதை வெறுக்க வேண்டி வந்ததுக்கு காரண்ணமே சுறண்டுபவர்கள் சமயத்தின் பெயரால் சுறண்டுவதுதான்...! ஆனாலும் ஒரு கோயில் நிர்வாகியாய் பெரியார் தனக்கு கோயிலில் இருந்த உரிமையை கூட அவர் கடைசி வரைவிட்டு கொடுக்கவில்லை... என்பதையும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள்...

பிரச்சினை என்பது கோயில்களோ, மதமோ அல்ல சிலர் தங்களின்(கௌடில்யர் போண்றோர்) தேவைகளுக்காக தோற்று வித்த சில நம்பிக்கைகள்... அதை தகர்ப்பதுதான் காலத்தின் தேவை...!

Edited by தயா

  • 1 month later...

என்னுடைய இந்து மத நம்பிக்கையும் ஒரு காரணம்.

நான் 60 வயதில் மீண்டும் மாறுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. என்னுடைய மாற்றத்திற்கு முக்கிய காரணம் தமிழ் பற்றுத்தான்.

அத்துடன் ஒரு மனிதனுக்கு மதம் அவசியம் இல்லை. எப்படி ஒரு மனிதன் ஒரு கட்சியில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையோ, அப்படி ஒரு மதத்திலும் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

மதங்களால் வாழ்க்கைக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை.

ஆகவே ஒரு மதம் தேவை என்று நான் நினைக்க மாட்டேன். அப்படி நினைத்தாலும் இந்து மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

நான் இந்து மதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், இந்து மதம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தன்னிடம் உள்ள நிறைய வேதங்களை, புராணங்களை தூக்கி எறிய வேண்டும். அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். அனைத்து மொழிகளையும் சமனாக கருத வேண்டும்.

இவைகள் நடந்தால், நான் இந்து மதத்தை ஏற்றுக் கொள்கிறேனே இல்லையோ, இந்து மத எதிர்ப்பையாவது கைவிடுவேன்.

சபேசனுக்கு

உங்கள் சுயவிமர்சனம் வாசித்தேன். என்னுடைய கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்

மேலே உள்ளவை உங்கள் ஆக்கத்திலிருந்து நான் தொகுத்தவை

நீங்கள் பிறப்பால் இந்துவாக இருக்கலாம். தேவாரங்கள், திருவாசகங்கள் பாடமாக்கி இருக்கலாம்.

இதைவிட இந்து மதத்தின் தத்துவங்கள், தனித்துவங்கள் பற்றி முழுவதுமாக அறிந்து கொண்டீர்களா??

(பெரியாரின் வரலாறு, கொள்கை விளக்கங்கள் தேடித்தேடி வாசித்து அறிந்தது மாதிரி).

அரசியல் கட்சி என்பது உங்கள் கொள்கைகள் சம்பந்தப்பட்டது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் சேரலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.

மதம் என்பது வாழ்க்கை முறை சம்பந்தப்பட்டது. அது பிறப்பால் வருவது. உங்களுக்கு பிடிக்குமோ இல்லையோ (நீங்களாக மதம் மாறாவிட்டால்) கடைசிவரைக்கும் நீங்கள் இந்துதான்.

மொழிப்பற்று இருப்பதாக எழுதி இருக்கிறீர்கள். மொழியும் மதமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பதை அறிவீர்களா?

எல்லா மதமும் போதிப்பது ஒன்றைத்தான். எல்லா மதத்திலும் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. நாம் எல்லோரும் அன்னப் பறவை போலிருந்தால் மதம் தானாக வளரும்.

இது முடிவல்ல...................... ஆரம்பம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம் அவதாரம்,

நீங்கள் எழுதியிருப்பதை இன்றுதான் கவனித்தேன்.

மதம் என்பது ஒரு கொள்கை. அந்தக் கொள்கை தவறு என்று அறிகின்ற போது, அதை கைவிடுவதில் தவறு இல்லை.

இந்து மதம் பற்றி நிறைய ஆராய்ந்திருக்கின்றேன். அதிலே அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை.

நீங்கள் இந்துத் தத்துவம் என்று நம்புவது, உண்மையான இந்துத் தத்துவம் இல்லை. அது இந்தியத் தத்துவம். இந்து மதம் அழுக்காறுகள் குவிந்து கிடக்கும் ஒரு மதம்

புத்தர், மகாவீரர், சித்தர்கள் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட இந்தியத் தத்துவம்தான் இன்றைக்கு சிலரால் இந்துத் தத்துவமாக சித்தரிக்கப்படுகிறது.

கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" படித்தால் இது புரியும். மக்களுடைய மதம் சாராத நல்ல பண்பாடுகளை (உ-ம்: விருந்தோம்பல்) மதம் சார்ந்த பண்பாடுகளாக திரித்திருப்பார்.

இந்து மதத்திற்கு என்று சொந்தமாக இருப்பது எல்லாம் வர்ணாச்சிரமும், ஆபாச புராணங்களும், பார்ப்பனியமும்தான். இவைகளை நீக்கி விட்டால் இந்து மதமே இல்லாமல் போய்விடும். அதனால்தான் இந்து மதத்திற்குள் இருந்து கொண்டே இவைகளுக்கு எதிராக போரடியவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.