Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 09:58 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

இதேவேளை,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மறுபுறம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் வரும் புதன்கிழமை ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மறுபுறம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். இந்த கூட்டத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்பாடு செய்கின்றார். அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/185092



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.