Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

The-User-Experience-of-Social-Media-Webs

பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். அதை செய்யக்கூடாது. அந்த பரீட்சை எண்ணில் இருந்து வேறு ஒருவரின் விண்ணப்பம் அல்லது தேசிய அடையாள அட்டையின் எண் யாருக்காவது தெரிந்தால், அந்த விண்ணப்பத்தை நிரப்பினால், மீள்பாிசீலணை செய்யும் மாணவருக்கு அதை மீண்டும் நிரப்ப இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது.

அது நடந்தால், நீண்ட காலத்திற்குப் பிறகு, முழு கணினி செயல்முறையையும் மாற்றிய பின்னரே சட்டப்பூர்வ உரிமையாளரால் இந்த அணுகலைப் பெற முடியும். அப்படி நடந்தால், அந்த மாணவர்களை ஆணைக்குழு பார்த்துக்கொள்ளும்.

ஆனால் தயவு செய்து உங்களது பரீட்சை எண்ணை து சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்கவும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://athavannews.com/2024/1385960

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரீட்சை முடிவுகள்.. பிரத்தியேகமானவை.. எதிர்கால தேவைக்கு என்றது போய்..  சமூக ஊடகத்தில்.. தம்மைப் பெரிசாகக் காட்ட போடும் வேடமாகிவிட்டது. உங்கள் பரீட்சை வெற்றிகளை உங்கள் சொந்தங்களோடு உங்கள் வெற்றியில் பங்களித்தவர்களோடு நன்றி செலுத்தி கொண்டாடி மகிழ்வது வேறு.. சமூக ஊடகத்தில் பொதுவெளியில் விளம்பரப்படுத்துவது தவறு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்: பேராசிரியர் அமரதுங்க

2023 (2024) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை முடிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (யுஜிசி) தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களையும் பெற்றோர்களையும் வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை இனந்தெரியாத நபர்கள் தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“பரீட்சை பெறுபேறுகள் மாணவர்களின் தனிப்பட்ட அடையாளத்திற்கான வழிமுறையாக செயல்படும் தனித்துவமான ஆவணங்கள். குறியீட்டு எண் உட்பட இந்த ஆவணங்களின் நகல்களைப் பகிர்வது சிலவேளை பாதிப்பாக அமையலாம். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது, உதவித்தொகை பெறுவது போன்ற தனிப்பட்ட நலன்களுக்காக பலர் இந்தத் தகவலைத் தவறாகப் பயன்படுத்தலாம். உண்மையான உரிமையாளர்களின் தகவல்கள் பிறரால் மாற்றியமைக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.

எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பேராசிரியர் அமரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

https://thinakkural.lk/article/303122



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.