Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தக பிணக்குகளைத் தீர்ப்பதற்கான மாற்று வழிகளினூடாக முதலீட்டுச் சூழலை மேம்படுத்த இலங்கைக்கு உதவுகிறது USAID

08 JUN, 2024 | 11:42 AM
image
 

ர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக வர்த்தக பிணக்குகளைத் தீர்ப்பதற்கான மாற்று வழிகளுக்கான (ADR) அணுகலை மேம்படுத்துவதன் மூலம் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவி செய்கிறது. 

அமெரிக்க அனுசரணையுடன் இலங்கையிலுள்ள 23 சர்வதேச வர்த்தக மத்தியஸ்தர்கள் பயிற்சியினையும் அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்வதற்கு இம்முன்முயற்சி வழிவகுத்துள்ளது.

Image_1.jpeg

கடந்த மே 29ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஒரு வைபவத்தில், கைகுலுக்கி ஒரு உதாரண மத்தியஸ்த செயற்பாட்டினை ஆரம்பிக்கும் புதிதாக அங்கீகாரம் பெற்ற வர்த்தக மத்தியஸ்தர்களின் குழு. அம்மத்தியஸ்தர்கள் USAIDஇன் வினைத்திறன் மற்றும் செயற்றிறனுடைய நீதி எனும் செயற்றிட்டத்தின் உதவியுடன் தமது பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்ததை இந்நிகழ்வு கொண்டாடுகிறது.

வணிக நிறுவனங்கள் தமது பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடரும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக விரைவான மற்றும் செலவு குறைந்த ஒரு மாற்றீட்டை வழங்கக்கூடிய இலங்கையிலுள்ள தகுதிவாய்ந்த மத்தியஸ்தர்களின் எண்ணிக்கையை இது இரட்டிப்பாக்கியுள்ளது.

இந்த 23 மத்தியஸ்தர்களும் USAIDஇன் வினைத்திறன் மற்றும் செயற்திறனுடைய நீதி (Efficient and Effective Justice -EEJ) எனும் செயற்றிட்டத்தின் கீழ், தகவல் தொடர்பு, சிக்கலைத் தீர்த்தல், உணர்வுகளை முகாமை செய்தல் மற்றும் தடைகளை வெல்லல் போன்ற முக்கிய பரப்புகளில் விரிவான பயிற்சியினைப் பெற்றுள்ளனர்.  

ADR மற்றும் ADR பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற, லாப நோக்கற்ற, புகழ்பெற்ற சுயாதீன நிறுவனமான சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த மத்தியநிலையம் (SIMC) இந்தப் பயிற்சியை நடத்தியது. ஒரு நான்கு மாத வழிகாட்டல் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் பின்னர், இந்த மத்தியஸ்தர்கள் 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் இலங்கையில் சுமார் 100 வர்த்தக பிணக்குகளில் மத்தியஸ்தம் செய்வதற்கு தமது புதிய திறன்களைப் பயன்படுத்துவார்கள்.

வணிகங்களுக்கும் வணிகங்களுக்குமிடையே அல்லது வணிகங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையே அல்லது வணிகங்களுக்கும் நுகர்வோருக்கும் இடையேயான பிணக்குகளுக்கு ஒரு விரைவான தீர்வினை ADRஇன் ஒரு முக்கிய வடிவமான வர்த்தக மத்தியஸ்தம் வழங்குகிறது. இம்முறையானது செலவு குறைந்ததாக இருப்பதுடன், வணிக உறவுகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், சர்வதேச தீர்வு ஒப்பந்தங்கள் மிகவும் செயற்றிறனுடன் அமுலாக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் சர்வதேச வர்த்தகத்துக்கும் அது உதவி செய்கிறது.

புதிதாக பயிற்சியளிக்கப்பட்ட வர்த்தக மத்தியஸ்தர்களை கௌரவிப்பதற்கான ஒரு நிகழ்வில், உரையாற்றிய அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக் சொனெக், “சர்வதேச சிறந்த நடைமுறைகளைத் தழுவி ஒரு சாதகமான முதலீட்டுச் சூழலை உருவாக்குவதற்கு இலங்கையுடன் ஒத்துழைப்பதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.

இப்பங்காண்மையானது செலவு நிறைந்த வழக்குகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான திறன்களை மத்தியஸ்தர்களுக்கு வழங்குவது மட்டுமன்றி, அவர்களின் திறன்களின் தொடரான விருத்திக்கும் உதவி செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதார ரீதியிலான மீண்டெழும் தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்குப் பங்களிப்பு செய்கிறது. 

Image_2.jpeg

புதிதாகப் பயிற்சி பெற்ற வர்த்தக மத்தியஸ்தர்களை கௌரவிக்கும் ஒரு வைபவத்தில் கலந்துகொண்ட அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக் சொனெக் (நடுவில்). USAIDஇன் வினைத்திறன் மற்றும் செயற்றிறனுடைய நீதி எனும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மத்தியஸ்தர்கள் தங்கள் பயிற்சியைப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையில் ADRக்கு விரிவான உதவிகளை USAID வழங்குகிறது. வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள், ADR மத்திய நிலையங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வர்த்தக மத்தியஸ்தம், பேச்சுவார்த்தை மற்றும் ADR சிறந்த நடைமுறைகள் ஆகிய விடயங்களில் பயிற்சியளிப்பதற்காக உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் EEJ செயற்றிட்டம் ஒத்துழைப்புடன் பணியாற்றுகிறது.

மேலும், சர்ச்சைகளை விரைவாகத் தீர்த்தல் மற்றும் நீதி அமைப்பில் உள்ள தாமதங்களையும் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்குவதையும் குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் EEJஆனது, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் வர்த்தக மேல் நீதிமன்றங்களின் பங்காண்மையுடன் நீதித்துறை மற்றும் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்படும் மத்தியஸ்தத்துக்கான முன்னோடி நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. 

இந்த விரிவான முன்முயற்சிகளூடாக இலங்கையில் நீதித்துறைச் செயன்முறையின் ஒட்டுமொத்த வினைத்திறனை EEJ மேம்படுத்துகிறது.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சிக்கான அமெரிக்காவின் உதவி பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு https://www.usaid.gov/srilanka எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடுவதுடன் சமூகஊடகங்களில் @USEmbassySL மற்றும் @USAIDSriLanka ஆகியவற்றைப் பின்தொடரவும்.

https://www.virakesari.lk/article/185590

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.