Jump to content

"வெள்ளந்தி மனிதர்கள்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"வெள்ளந்தி மனிதர்கள்"
 
 
கள்ளங்கபடமற்ற அப்பாவியாக, வெள்ளந்தியாக அல்லது காலத்திற்கு ஏற்ற புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத, பழைய சம்பிரதாயங்களைக் கைவிடாத பழம்போக்கு கொண்டவர்களாக, பத்தாம்பசலியாக, அதிகமாக கிராம புறங்களில் வாழும் மக்கள் இருப்பதாக பலர் கூறுவதை கேள்விப்பட்டுள்ளேன். இன்றைய தொழில் நுட்ப வசதிகள் மற்றும் நவீன போக்குவரத்து வாய்ப்புகள் நிறைந்த உலகிலும் உண்மை நிலை இன்றும் இதுதானா? என்னை சிலநாளாக வாட்டும் கேள்வி இது!
 
நான் பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கேயே இப்ப வேலையும் செய்கிறேன். எனவே ஒரு சில நாளாவது கிராமத்தில் இருந்து உண்மையை அறிய வேண்டும் என்ற அவா உந்த, ஒருவாறு தற்காலிக இடமாற்றம் பெற்று இன்று, அந்த குக்கிராமத்துக்கு, பேரூந்தில் செல்கிறேன். எனக்கு பக்கத்திலும் , பின்னாலும் ஒரு தாயும் இரு மகளும் அவர்களின் பாட்டி, தாத்தாவுடன் அதே கிராமத்துக்கு பயணம் செய்தார்கள். எனக்கு பக்கத்தில் தாத்தாவும் பாட்டியும் , பின்னால் மற்ற மூவரும் வந்து அமர்ந்தார்கள். அவர்களின் கதைகளில் இருந்து அவர்கள் எல்லோருமே நெடுங்காலமாக பட்டண வாசிகள் என்று தெரிய வந்தது.
 
இது நீண்ட தூர பயணம் என்பதால், நான் அவர்களின் தாத்தா பாட்டிக்கு ஒரு அறிமுகத்துக்காக, 'வணக்கம்' கூறினேன், பின் திருப்பி தாயையும் இரு மகளையும் பார்த்தேன், அக்காவும் தங்கையும் தமக்குள் எதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கும் 'வணக்கம்' என்றேன். அவர்களின் தாத்தா ஆங்கிலத்தில், 'தம்பி நீங்க என்ன செய்கிறீர்கள், உங்க ஊர் அந்த குக்கிராமமா?' என்று கேட்டார், நான் மறுமொழி சொல்ல முன்பே தாம் பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்ததாகவும், தாமுண்டு தமது வாழ்வுண்டு என்று எல்லா வசதிகளுடனும் வாழ்வதாக கதையை ஆரம்பித்தார்.
 
நான் தமிழில், 'நான் ஒரு பொறியியலாளர், அதே பட்டணத்தில் தான் பிறந்து வளர்ந்தவன், இப்ப ஒரு தற்காலிக இடமாற்றத்தில் சில மாதங்களுக்கு அந்த கிராமத்துக்கு போகிறேன். எனக்கு அரச விடுதியும் ஒரு வாகனமும் ஒதுக்கி உள்ளார்கள். ஆகவே எனக்கு அங்கு ஒருவரையும் தெரியாது என்றாலும், பிரச்சனை இருக்காது' என்றேன்.
 
அதன் பின் பாட்டி, தாம் அங்கு ஒரு கல்யாண வீட்டுக்கு போவதாகவும், அவர்களை முன்பு ஒருமுறை பட்டணத்தில் தமது கடையில் உடுப்புக்கள் வாங்கும் பொழுது சந்தித்ததாகவும், அதன் பின் நண்பர்களாகி விட்டார்கள் என்றும், இந்த கல்யாணத்துக்கான உடுப்புகள், நகைகள் எல்லாம் தம்மிடமே வாங்கியதாகவும் பெருமையாக கூறினார். அப்ப தான் அவர்கள் ஒரு பெரும் கடைக்காரர்கள் என்று தெரிய வந்தது.
 
'வரிகள் எல்லாம் அரசாங்கம் கூட்டி இருக்கிறார்களே, உங்களை பாதிக்கவில்லையா?' என்று தாத்தாவிடம் கேட்டேன். அதற்கு தாத்தா , தனக்கு தெரியாது முகாமையாளரைத்தான் கேட்க வேண்டும் என்றார். 'நீங்க எந்த கட்சிக்கு வாக்கு போட்டீர்கள்?' என்று கதையை தொடங்கி 'தேர்தல் வரப்போகிறது, உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள். உங்கள் கோரிக்கை எதாவது உண்டா ?, இந்த வரிகளில் இருந்து தப்பிப்பிழைக்க' என்று முடித்தேன்.
 
அப்ப பாட்டி, 'நம்மை மதித்து வாக்கு கேட்கிறார்கள், அவர்களிடம் நாம் என்ன கேட்க முடியும். நம்மை மதித்து வருகிறார்களே அதுவே போதும். நமக்கு அவர்களாக பார்த்து ஏதாவது செய்வாங்க', 'எமக்கு எம் சாமி உண்டு, அவன் எல்லாம் கவனிப்பான், கைவிடமாடடான்' என்று கூறி, தன் தலையில் இரு குட்டும் குட்டினார். அதற்குள் தாத்தா குறட்டை விட தொடங்கிவிட்டார். அதை பார்த்த பின்னல் இருந்த தாய், 'அந்த பையன் பாவம், நீங்க இருவரும் பின்னல் வாங்க, பிள்ளைகள் முன்னால் போகட்டும்' என்று கூறி அவர்களை இடம் மாற்றினார்.
 
இப்ப தான் அவர்களின் இரு மகளையும் முழுமையாக பார்த்தேன். பெரியவளுக்கும் சின்னவளுக்கும் நல்ல வயது வித்தியாசம். சின்னவள் இன்னும் பாடசாலை மாணவி போலவே தெரிந்தது. எனவே பெரியவளை பார்த்து 'ஹலோ' என்றேன். உண்மையில் அவள் மிக அழகாக அமைதியாக இருந்தாள், சின்னவளும் அழகு என்றாலும் இன்னும் சின்னபிள்ளைத்தனம் மாறவில்லை. எதோ அக்காவுடன் குறும்பு செய்து கொண்டு இருந்தாள். நான் மீண்டும் 'வணக்கம்' என்றேன். பதிலுக்கு இருவருமே 'தேங்க்ஸ்' என்றனர். அதன் பின் அக்கா ஒரு புன்சிரிப்புடன், பின்னுக்கு தாயைப் பார்த்துவிட்டு - அவர்கள் மூவரும் அப்பொழுது தூங்கிவிட்டார்கள் - 'ஹாய்' என்றார். 'நீங்க என்ன செய்கிறீர்கள்' என்று கதையை தொடங்கினேன்.
 
இப்ப சின்னவளும் அக்காவின் மடியில் தலை சாய்ந்து படுத்துவிட்டார், நானும் அவளும் தான் முழிப்பு. எனக்கு அவளை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும், கதைக்க வேண்டும் என்ற ஒரு ஆசை தூக்கத்தை தடுத்துவிட்டது. அவளுக்கு எப்படியோ எனக்கு தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக இப்ப அவள் மெல்ல மெல்ல தாராளமாக கதைக்க தொடங்கினாள். அதில் பல அப்பாவித்தனத்தையும் நிறைய மூட நம்பிக்கைகளையும் காணக்கூடியதாக இருந்தது. கிராமப்புற மக்கள் என்றால் கள்ளம் கபடமற்றவர்கள். எளிதில் யாரிடமும் ஏமாந்து விடுவார்கள் என்று தமிழ் திரைப்படங்களில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக, பட்டணத்து வாசியான இவள் அதே குணஇயல்பில் இருப்பதைக் கண்டு ஆச்சிரியப் பட்டேன்!
 
சாடிக்கு ஏற்ற மூடி மாதிரி, பாட்டிக்கு ஏற்ற பேத்தி என்று எண்ணினேன். ஆமாம் பாட்டியின் முன்னைய பதில் அப்படித்தான் எண்ண வைத்தது.
பழைய கள்ளங் கபடம் இன்னும் கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற நினைப்பில் வெள்ளந்தி மக்கள் கிராமத்தினர் மட்டுமே என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம். ஆனால் இந்த நகர்ப்புற குடும்பத்தை பார்த்ததும் அது முற்றிலும் பிழை என்று எனக்குத் தோன்றியது.  அவர்கள் எங்கும் இருக்கலாம்? அப்படி என்றால் தேவை இல்லாமல் மாற்றத்தை கேட்டு பெற்றுள்ளேன் என்று என்னையே நான் நொந்தேன். பரவாயில்லை, இந்த பயணம் தானே ஒரு அழகிய, ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை அப்படியே பேசும் இவளை அறிமுகப் படுத்தியது என்று சமாதானம் செய்து கொண்டு, மேலும் அவளின் சுவாரஸ்யமான [கவர்ச்சியான] பேச்சுக்களை கேட்க சில தனிப்பட்ட கேள்விகளை கேட்ப்போம் என்று முடிவு எடுத்தேன், அதற்கு சாதகமாக எல்லோரும் உறக்கத்தில் இருப்பதும் துணை புரிந்தது.
 
உங்களுக்கு ஆண் நண்பர் [பாய் பிரின்ட்] உண்டா என்ற கேள்வியுடன் மீண்டும் ஆரம்பித்தேன். அவள் அதெல்லாம் இல்லை என்று கண் மூடிய படியே பதில் சொன்னாள். அப்படி என்றால் எப்படியானவரை காதலிக்க அல்லது கல்யாணம் கட்டிட விருப்பம் என்று தொடர்ந்தேன். அதெல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வான். படைத்தவனுக்கு படி அளக்க தெரியாதா? என்று என்னை பார்த்து குறும்பாய் சிரித்தாள். உங்களுக்கு என்று ஒரு விருப்பமும் இல்லையாடா என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்டேன். என்னை படைத்தவனுக்கு அதெல்லாம் தெரியும் தானே? பின் எதற்க்காக நான் கவலைப்பட வேண்டும் என்று எள்ளிநகை யாடினாள். இவளுடன் கதைப்பதில், நான் தான் இறுதியில் முட்டாள் ஆகிவிடுவேனோ என்று எனக்குத் தோன்றியது.
 
என்றாலும் கடைசியாக, நீங்க திருமணம் செய்த பின், எத்தனை பிள்ளைகள், எப்படி வேண்டும் என்ற திட்டமாவது ஒன்று உங்களிடம் உண்டா என்று கேட்டேன். கொஞ்சம் பின்னுக்கும் , தங்கையையும் இன்னும் எல்லோரும் உறக்கமா என்று பார்த்துவிட்டு, பிள்ளை பெறுவது எம் கையில் இல்லை, எல்லாம் அவன் செயலே! அவன் எதை தருகிறானோ, அதுவே என் விருப்பம் , இதற்கு எல்லாம் திட்டம் எதற்கு என்று என்னைப் பார்த்து கேட்டாள். நான் அதற்குப் பின் தனிப்பட்ட கேள்விகளை நிறுத்திவிட்டேன். அவளும் கொஞ்ச நேரத்தால் கண் அயர்ந்துவிட்டாள். எனக்கு நித்திரை வரவில்லை அவளின் முகத்தை, அழகை ரசித்தபடியே மிகுதி பயணத்தை தொடர்ந்தேன்.
 
 
"சயனகோலம் அவளின் அழகு கோலம்
சரிந்த படுக்கையில் தேவதை கோலம்
சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து
சங்கடம் தருகிறது அவளின் பார்வை!"
 
"சயந்தி அவள் இந்திரன் மகள்
சந்திரன் போன்ற அழகு நிலா
சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்
சற்று நானும் என்னை மறந்தேன்!"
 
"சக்கர தோடு கழுத்தை தொட
சடை பின்னல் அவிழ்ந்து விழ
சலங்கை கால் இசை எழுப்ப
சங்காரம் செய்யுது இள நகை!"
 
"சகுனம் பார்த்தே காரியம் செய்வாளாம்
சஞ்சலம் தந்து என்னை வருத்துகிறாள்
சகிதமாய் குடும்பம் சூழ பயணிக்கிறாள்
சந்தோசம் பொங்க நானும் ரசிக்கிறேன்! "
 
"சங்கீதம் பொழியும் அவள் குரல்
சந்தனம் மணக்கும் அவள் உடல்
சச்சரவு தரா அவள் நடத்தை
சம்மதம் கேட்க இதயம் ஏங்குது!"
 
"சதாசிவன் மகிழ்ந்த நடன மகள்
சரஸ்வதி ரசித்த இசை மகள்
சந்திக்க எனக்கும் சந்தர்ப்பம் வந்ததே
சத்த மின்றி அவள் ஒதுங்குகிறாளே! "
 
 
அந்த அவளின் முகம் எனக்கு பல கதைகள் சொல்லிக்கொண்டு இருந்தது மட்டும் அல்ல, கிராமத்தினர் மட்டுமே வெள்ளந்தியாக இருப்பர் என்ற கதாசிரியர்கள், திரைப்பட ஆசிரியர்களின் சுவை தரும் எண்ணங்களுக்கு ஆப்பு வைப்பது போல இருந்தது. என்னை அறியாமலே அவள் மேல் ஒரு இரக்கமும் அதே நேரம் காதலும் இருந்தது. அவள் தன் பெயர் சயந்தி என்று, தொடக்கத்தில் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்குது. சயந்தி என்றால் இந்திரன் மகள் என்று எப்போதோ படித்தது நினைவில் வந்தது. அவள் உறங்கி இப்ப ஒரு மணித்தியாலம் இருக்கும். நான் மீண்டும் அவள் முகத்தை பார்த்தேன். அவள் மெல்ல கண்விழித்தது தெரிந்தது, 'ம்ம் நல்ல நித்திரை ஆக்கும்' என்று கதையை ஆரம்பித்தேன். அவள் ஒன்றும் பேசவில்லை. கண் வெட்டாமல் என்னையே , பாத்தாள், பின் மெல்ல குனிந்து 'ஐ லவ் யு' என்று சொன்னாள். எனக்கு ஒரே ஆச்சரியம், என்ன நடந்தது என்று வியப்பில் இருக்கும் பொழுதே, 'ஆண்டவன் உறக்கத்தில் வந்து, நீங்க தான் இனி என் வருங்கால கணவன்' என்று சொல்லிவிட்டு போனார் என்று ஒரு போடு போட்டாள். எனக்கு உள்ளுக்குள் விருப்பம் இருந்தாலும், வெளியில் அதைக் காட்டவில்லை. எல்லோரும் உறக்கத்தில் இருப்பதால், பட் என்று கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் அப்படியே மலைத்துப் போய் இருந்தாள்!
 
மீண்டும் அவள் என் கண்ணை உற்றுப் பார்த்தாள், எனக்கு நல்ல சந்தோசம், நீங்களும் ஆம் என்பதால் தானே முத்தம் தந்தீர்கள் என்று கொஞ்சம் வெட்கத்துடன் தலை குனிந்து சொன்னாள். நான் இல்லை, என் கனவில் அப்படி ஆண்டவன் சொல்லவில்லை, ஆக முத்தம் கொடு என்று மட்டுமே சொன்னார் என்று ஒரு பொய் கூறினேன். ஆண்டவன் அப்படி செய்யார். எனக்கு நம்பிக்கை உண்டு, நீங்க பொய் சொல்லுகிறீர்கள் என்று கொஞ்சம் கோபத்துடன் கண்ணீர் துளி ஒன்று இரண்டு விழ, என்னைப் பார்த்தபடி சொன்னார். நான் அப்படி வந்து சொன்னால் சொல்கிறேன் என்று சொல்லவும் சின்னவள் உறக்கத்தில் இருந்து எழும்பவும் சரியாக இருந்தது.
 
அவள் கொஞ்ச நேரம் என்னையே பார்த்தபடி இருந்தாள். அவள் கண் மௌனத்தில் பல கேள்விகள் என்னைக் கேட்டுக் கொண்டு இருந்தன. பின் ஒரு சிறுதாளில் தன் தொலை பேசி இலக்கத்தை எழுதி 'மூன்று நாட்களுக்குள் சொல்லவேண்டும், எனக்கு வந்த ஆண்டவன் கட்டாயம் உங்களுக்கும் வருவார். சொல்லுவார். முத்தம் கொடு என்று ஆண்டவன் சொன்னது, நான் இனி உங்களுடையவளே என்பதால் தானே? ஆண்டவன் என்றும் பிழைவிடார் , காத்து இருப்பேன். மறுமொழி இல்லை என்றால், நான் இனி இப்படியே காலம் கழிப்பேன், இது சத்தியம்' என்று அதில் இருந்தது.
 
அவள் எழுதியதை வாசித்து முடிக்கவும், பேரூந்து அந்த கிராமத்து பேரூந்து தரிப்பிடத்துக்கு வரவும் சரியாக இருந்தது. அவள் என்னைத் திருப்பி கூட பார்க்கவில்லை, சின்னவளும் மற்றவர்களும் கை அசைத்து, மீண்டும் சந்திப்போம் என்று இறங்கி போனார்கள். நான் அங்கிருந்து வாடகை மோட்டார் வண்டியில், எனக்கு என தரப்பட்ட விடுதிக்கும் போனேன். என்றாலும் என்னால் அவளின் அந்த கடைசி நேர வாடிய முகத்தை மறக்க முடியவில்லை. அவள் தந்த தொலைபேசி இலக்கத்தை திருப்ப திருப்ப பார்த்தேன். பாவம் அவள் என்ற நினைப்புத்தான் மனதில் விடாமல் தோன்றிக்கொண்டு இருந்தது.
 
நான் புது வேலையை பாரம் எடுத்து, அதில் மும்மரமாக போனதால் அவளை ஓரளவு மறந்தே விட்டேன். மூன்றாம் நாள் , நான் வேலை முடித்து, அருகில் இருந்த பொது விடுதியில், கொஞ்சம் களைப்பு ஆற பீர் [beer] அருந்தும் பொழுது, அங்கு சில சோடிகள் வயலில் ஒன்றாக மகிழ்வாக வேலை முடித்துக் கொண்டு வரம்பில் இருந்து கதைப்பதை பார்க்கும் பொழுது தான் அவளின் ஞாபகம் மீண்டும் வந்தது. ஏன் நீ அவளுக்கு அவசரப்பட்டு முத்தம் கொடுத்தாய்? என்று உள்மனம் என்னைத் திட்டுவது போல இருந்தது. நேரத்தை பார்த்தேன் ஐந்து மணி ஆகிறது. அவள் அன்று ஆறுமணி அளவில், மூன்று நாளுக்கு முன் தொலை பேசி இலக்கம் குறித்த    தாள் தந்தது ஞாபகம் வந்தது. இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள் நான் விடை கொடுக்க வேண்டும். உடனே என் தொலை பேசியில், அவள் தந்த இலக்கத்துக்கு அழைப்பு விட்டேன். அது ஒலித்துக்கொண்டு இருந்தது, ஆனால் அவளோ அல்லது யாரோ எடுக்கவில்லை
 
எனக்கு ஒன்றும் புரியவில்லை, மீண்டும் மீண்டும் அழைப்புவிட்டேன். கடைசியாக சின்னவள் எடுத்து யார் என்றார். நான் பேரூந்தில் சந்தித்த அண்ணா, அக்கா எங்கே என்றேன் ?. சின்னவள் அக்கா சாமி கும்பிடுகிறார். இன்று எனோ சில மணித்தியாளமாக சாமி அறையிலேயே இருக்கிறார் என்றார். நான் விறைத்தே போய்விட்டேன். நான் அதில் 'சாமி வந்தார். சம்மதம் சொல்ல சொன்னார்' என்று சிறு செய்தி அனுப்பி அக்காவிடம் கொண்டுபோய் உடன் கொடுக்கும் படி கூறினேன். அவர் ஆம் கட்டாயம் என்றார். சிலவேளை பொய் ஒருவருக்கு சந்தோசம் கொடுக்கும் என்றால் சொல்லலாம் என்று நினைக்கிறன். இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது. ஆனால் அதன் பின்பும் ஒரு பதிலும் அவளிடம் இருந்து வரவில்லை. இன்னும் ஒரு அழைப்பு விடுவதா இல்லையா என்று எனக்குப் புரியவில்லை.
 
நான் இனி நடப்பது நடக்கட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டு, இரவு சாப்பாடு சாப்பிட தொடங்கினேன். மணி பத்தாகி விட்டது. நான் சாப்பிட்டு விட்டு உறங்கிவிடேன். அடுத்த நாள் வழமை போல வேலைக்கு போக ஆயுத்தமாகிக்கொண்டு இருந்தேன், அப்பொழுது என் தொலை பேசி விடாமல் அலறத் தொடங்கியது. எடுத்துக் பார்த்தேன். அது அவள் தான். நான் எடுத்து 'ஹாய் சயந்தி' என்று சொல்லவும் அவள் 'ஐ லவ் யு' சொல்லவும் சரியாக இருந்தது. 'ஏன் நேற்று பேசவில்லை?' என்று என் அவாவை கேள்வியாக கேட்டேன் . அவள் ஒரு புன்முறுவலுடன் , 'நான் நல்ல நேரத்துக்கு காத்திருந்தேன்' என்று மகிழ்வாக சொன்னார். நானும் உடன் 'ஐ லவ் யு' என்றேன்.
 
அவளின் அழகுடன் அவளின் வெள்ளந்தியான பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. மெத்தப் படித்த குடும்பம் தான். அவளின் பேச்சில் உண்மை இருந்தது. அதனால் கள்ளம் கபடம் அங்கு காணவில்லை. இப்போது படிக்காதவர்கள் கூட வெள்ளந்தி மனிதர்கள் என்று என் முடிவை மாற்றவேண்டி இருந்தது?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
319521589_10222169098719216_5151083105954620446_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ZRzKSvAEDrYQ7kNvgHcpiuM&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDVXtMaAk2W0gAqFUJUJr7C4SCD_VWzvmIVbKH6NK3z-A&oe=666E0C78 318764117_10222169101119276_3391450231364127970_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_9xX0mkk80kQ7kNvgGywyQg&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBTQkq0wFBZQoEcxl1QlLfD8C2kDvj37xX6xYX3FUOaCQ&oe=666E1297 319082279_10222169099439234_2763491470020776741_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=YJYxbgMHNd0Q7kNvgFKIE5n&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCIuIuMp7tybFv7zwQ8h6AGV--RZdYIYlHBs9xBCMjAXQ&oe=666DF9FA 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளந்தி மனிதர்கள் எங்கும் இருக்கலாம்.
பேரூந்துக் காதல் கதைக்கு நன்றி ஐயா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வந்த அந்த நிலா இன்று எங்கே .......!  😍

நன்றி ஐயா ......!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா!!"

 

 

எல்லோருக்கும் நன்றிகள் 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.