Jump to content

இலஞ்சம் பெற்ற நீர்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் சாரதியும் விளக்கமறியலில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

15 JUN, 2024 | 04:30 PM
image
 

அம்பாறை, அக்கரைப்பற்றில் காணி ஒன்றில் மண் நிரப்புவதற்கு அனுமதி வழங்க 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற நீர்பாசன திணைக்கள எந்திரியும், அவரின் வாகன சாரதியும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  இருவரையும் எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டார்.

காணி ஒன்றுக்கு மண் நிரப்புவதற்கு அனுமதி வழங்க அக்கரைப்பற்று நீர்ப்பாசன திணைக்களத்தில் கடமையாற்றிவரும் எந்திரி இலஞ்சம் கோரியதாக நபரொருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவதினமான கடந்த புதன்கிழமை (12) அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள நீர்பாசன காரியாலயத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மாறு வேடத்தில் காத்திருந்தனர்.

அங்கு இலஞ்சமாக கோரிய பணத்துடன் முறைப்பாடு செய்த நபர் எந்திரியின் வாகன சாரதியுடன் சென்று 2 இலட்சம் ரூபா பணத்தை எந்திரியிடம் வழங்கியுள்ளார்.  இதன்போது, அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் வாகன சாரதியையும், எந்திரியையும் பணத்துடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது இவர்களை எதிர்வரும் 27 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/186148

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.