Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 

16 JUN, 2024 | 02:22 PM
image
 

ன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதி ரணில் மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மன்னார் விஜயத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல இடங்களிலும் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

WhatsApp_Image_2024-06-16_at_12.43.26_PM

WhatsApp_Image_2024-06-16_at_12.43.27_PM

WhatsApp_Image_2024-06-16_at_12.43.29_PM

WhatsApp_Image_2024-06-16_at_12.43.28_PM

WhatsApp_Image_2024-06-16_at_12.43.29_PM

https://www.virakesari.lk/article/186185

Edited by ஏராளன்
தலையங்கம் மாற்றம்

  • ஏராளன் changed the title to மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் 442 காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி 

16 JUN, 2024 | 02:25 PM
image
 

நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான "உறுமய" தேசிய செயற்றிட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்று முன்னர் மன்னார் நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.   

இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்துக்கு 5000 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிப்பத்திரங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. 

இதன்போது விவசாயிகளுக்கான கடன் திட்டம் மற்றும் காப்புறுதிக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

8.jpg

அதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் தலைவர் காதர் மஸ்தான், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், றிசாட் பதியூதின், திலீபன், அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் உட்பட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். 

இந்த அமர்வில் மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வு, மின் காற்றாலை அமைத்தல், மடு பெருவிழாவை முன்னிட்டு மடு வீதியிலிருந்து மடு தேவாலயம் வரை யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வீதியின் ஓரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் துப்பரவு செய்யும்போது, அதை வன இலாகா பகுதியினர் தடை செய்து தொழிலாளர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது மற்றும் விவசாயம் முதலான விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

1.jpg

2.jpg

9.jpg

https://www.virakesari.lk/article/186190

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு முகங்கொடுத்த மன்னார் இன்று புனரமைக்கப்படுகிறது; இதன் அபிவிருத்தி நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பு - ஜனாதிபதி ரணில் 

16 JUN, 2024 | 07:07 PM
image
 

மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு முகம் கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று புனரமைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்க முடியும். இம்மாவட்டத்தில் சுற்றுலாத்துறை, மீன்பிடி தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (16) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

மடு தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தற்போது உள்ள மடு வீதியை உடனடியாக செப்பனிடுமாறு இராணுவத்தினருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, மன்னார் ஆயர், வன பாதுகாப்பு திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் காவல்துறையை தொடர்புகொள்ள வேண்டும்.

மடு தேவாலயத்தில் நடைபெறவுள்ள வருடாந்த திருவிழாவுக்கு முன்னதாக இந்த சுத்திகரிப்பு பணிகளை முடிக்குமாறு ஜனாதிபதி மேலும் பணித்தார்.

மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் கூட்டப்பட்ட இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மாவட்டத்தில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம் உள்ளிட்ட சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்கப்பட்டதுடன், இவற்றில் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

மன்னார் வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக பற்றாக்குறையாக உள்ள CT ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்குமாறு வைத்தியசாலை பணிப்பாளரின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதை உடனடியாக நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டம் இழந்த அபிவிருத்தியை மீண்டும் பெற்றுக் கொடுத்து இந்த ஆண்டு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படும் என மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஐந்து தசாப்தங்களில் மாறிவரும் கால நிலைக்கேற்ப இலங்கையில் அமுல்படுத்தக்கூடிய தீர்வுகளை காணவேண்டியதன் அவசியத்தையும் விளக்கிய ஜனாதிபதி, அடுத்த ஐம்பது வருடங்களில் ஈரமான பிரதேசங்களில் அதிக மழை மற்றும் வறண்ட பிரதேசங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

மழை பெறாது, மாறிவரும் உலகுக்கு ஏற்ற வகையில் பொருளாதார, சமூக, கல்வி மற்றும் விவசாயத்துறையில் புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு முகங்கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று புனரமைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்க முடியும். இம்மாவட்டத்தில் சுற்றுலாத் தொழில், மீன்பிடி தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இப்பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். காற்றாலை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு விற்கும் முறை குறித்து இந்திய அரசுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

வட மாகாணமானது பசுமை ஆற்றலை உற்பத்தி செய்வதில் விசேட ஆற்றலைக் கொண்டுள்ளது. 

ஏரிகள் மற்றும் காற்றாலைகளில் சோலார் பேனல் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதன் மூலம் அதிகளவில் மின் உற்பத்தி செய்ய முடியும். 

அந்த சக்தியை இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் விற்பனை செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும். பசுமை ஆற்றல் மற்றும் பச்சை ஐதரசன் ஆகியவை பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

மன்னாரில் நிர்மாணிக்கப்படும் புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தேவையான நிதி எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும். புத்தளம் ஊடாக மன்னாருக்கான வீதி திறப்பது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடி பதில் வழங்க முடியும். 

மன்னார் வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நவீன விவசாயத்தை உருவாக்குவதற்கான முறையான திட்டத்தை முன்வைத்துள்ளோம். 

அதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அபிவிருத்திக் குழுவைக் கூட்டி கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்குமாறு தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள ஏரிகள் பாதுகாப்பதற்கும் மல்வத்து ஓயா திட்டத்தில் இருந்து மன்னாருக்கு வரும் நீரை பாதுகாப்பதற்கான முறையான செயற்றிட்டம் தேவை.

அடுத்த ஐந்து தசாப்தங்களுக்கு ஈரமான பிரதேசங்களில் மழை அதிகரிப்பு மற்றும் வறண்ட பகுதிகளில் மழை பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமைக்கு தீர்வு காண இப்போதிலிருந்தே செயல்பட வேண்டும்.

மடு தேவாலயத்துக்கு செல்லும் பாதை அந்த யாத்திரிகர்களுக்கானது. ஸ்ரீ பாதத்துக்கு செல்லும் பாதை ஸ்ரீ பாதஸ்தானத்துக்கு வரும் யாத்திரிகர்களுக்கானது. எனவே, யாத்திரிகர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முப்பது லட்சம் அபராதம் விதித்தால், அதை நான் நியாயமான விஷயமாக பார்க்கவில்லை.

எனவே, மன்னார் மறைமாவட்ட பிரதிநிதி, வனப் பாதுகாப்புத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த வீதியைச் சுத்தப்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு முன்னதாக நிறைவு பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள காவலரண்களை ஒரே நேரத்தில் அகற்ற முடியாது. பாதுகாப்புப் படையினருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பேன் என நம்புகிறேன். மன்னார் மாவட்டத்துக்கு தேவையான அபிவிருத்திகளை வழங்குவோம். இந்த ஆண்டு அதற்கான அடிப்படை அடித்தளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னாரைச் சுற்றி நடைபெறும் இந்த விரிவான அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன். அதனால் யாரிடமும் சிக்கிக்கொள்ள வேண்டியதில்லை. இப்பிரதேசத்தில் விரிவான அபிவிருத்திகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் மாவட்டமாக மன்னார் மாவட்டத்தை உருவாக்குவோம்.

பாராளுமன்ற உறுப்பினர்   ரிஷாத் பதியுதீன்

"ஜனாதிபதி மன்னாருக்கு வந்து அங்குள்ள மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கினார். அத்துடன், மன்னார் மாவட்டத்தை முழுமையான அபிவிருத்தியாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை அவர் வகுத்துள்ளார்.

அதற்காக மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நல்லாட்சி அரசாங்கத்தின்போது மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்கப்பட்டது. ஆனால், வளர்ச்சிப் பணிகள் செயற்படுத்தப்படாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. 

மேலும், கடந்த 4 ஆண்டுகளாக மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்த பணமும் ஒதுக்கப்படவில்லை. மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தி இவ்வருடம் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பெருமளவு நிதியை ஒதுக்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாகாணத்தின் பொது பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/186217

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.