Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி சாதனை

K800_IMG-20240608-WA01371-300x200.jpg

கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதி ஆட்டம் கடந்த 08.06.2024 சனிக்கிழமை நோர்வேயின் Bodø நகரில் நடைபெற்றது.சப்மி நாட்டு அணியினை எதிர்த்து தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி மோதியது.மிகவும் பலம் பொருந்தியதும் 2022 ஆம் ஆண்டின் உலககிண்ண வெற்றியாளருமாகிய சப்மி அணியினரை எதிர்த்து ஏழு நாடுகளில் இருந்து விண்ணப்பித்த 89 வீராங்கனைகளில் 22 பேரை நோர்வேயின் ஒஸ்லோவில் ஒன்றிணைத்து ஒரு வாரம் பயிற்சிகள் வழங்கி அணிக்கான பிணைப்பினை ஏற்படுத்தி எமது போராட்டம், தேசியத்தலைவர்,மாவீரர்கள் தொடர்பில் விசேட பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வீராங்கனைகளுக்கு உணர்வூட்டப்பட்டு அணியினை தயார்ப்படுத்தி Bodø வில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

பிற்பகல் 14.00 மணிக்கு ஆட்டம் கொடிவணக்கத்துடன் ஆரம்பமானது.ஆட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொனீபாவின் அனுமதியுடன் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் இனவழிப்புக்கு உள்ளன அனைவரையும் நினைவுகூர்ந்து ஆட்டத்தினை ஆரம்பித்தனர். தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி எதிரணிக்கு அச்சத்தினை ஏற்படுத்தினர்.எதிரணியினால் அடிக்கப்பட்ட பந்துகளை தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் பந்துகாப்பாளர் சாரா தடுத்தாடினாள்.எமது வீராங்கனைகள் வேகம்,மதிநுட்பமான ஆட்டத்தினூடாக 13 வது நிமிடத்தில் பிறீத்தி கொடுத்த அழகான பந்தினை டிலக்‌ஷிகா. சப்மி பந்து காப்பாளரின் தலைக்கு மேலால் வலைக்குள் அனுப்பினார்.இதன் மூலம் 1:0 என்னும் 75 வது நிமிடம்வரை முன்னணியில் நின்ற அணி நடுவரின் தவறான முடிவினால் தண்டனை உதை மூலம் ஒரு இலக்கினை எதிரணி பெற்று சமநிலையில் நின்றது.பின்னர் ஆட்டம் முடிவடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது கிடைத்த மூலை உதையினைப் பயன்படுத்தி சப்மி அணி இன்னொரு இலக்கினை அடித்து வெற்றிக்கிண்ணத்தினை தமதாக்கிக்கொண்டது. தாம் பங்கேற்ற முதல் உலகக்கிண்ண போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகி உலகத்தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடத்தினைப்பெற்று தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி இரண்டாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது.

2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி கலந்து கொண்ட முதலாவது உலகக்கிண்ணப் போட்டியில் இறுதியாட்டத்திற்கு தெரிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சிறப்பாக கூறவேண்டுமெனில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகைதந்த வீராங்கனைகளை ஒரு வார காலத்திற்குள் உலகக்கிண்ண போட்டிக்கு தயார்ப்படுத்திய பயிற்சியாளர்திரு தீபன் ,உதவிப்பயிற்சியாளர்கள் திரு எழில்,திரு சுஜன் அணி மேலாளர் திருமதி சங்கரி,உதவி அணி மேலாளர் அஜனி , அணி மருத்துவ மேலாளர் அபிராமி, மகளிர் அணி மீடியா மேலாளர் சௌம்யா அணியின் வெற்றியினை தங்கள் ஒவ்வொருவரின் வெற்றியாக எண்ணி உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
விளையாட்டின் மூலம் பலமான அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தலாம் என்பதற்கு கடந்த காலங்களிலும் பல முன்னுதாரணங்கள் இருந்திருக்கின்றன 1968 இல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் ஆபிரிக்க அமெரிக்க வீரர்களான தொமி சுமித்,ஜோன் கார்லோஸ் ஆகியோர் “Black power Salute” மூலம் அமெரிக்காவில் இருந்த இனத்துவேசத்துக்கு தமது பலமான எதிர்ப்பை உலக அரங்கில் வெளிப்படுத்தினர்.

அது போல உலகக் கிண்ண போட்டி ஒன்றில் தமிழீழ தேசிய கீதம் இசைக்கப்படும் போது தமிழீழ தேசியக்கொடியை ஏந்தியவாறு வீரர்கள் மைதானத்துக்குள் நுழைவதைப் பார்க்கின்ற உலகத்தமிழ் மக்களின் மனங்களில் தமிழீழ தேசம் மீதான பற்றுறுதி மேலும் வலுப்பெறும். அதுபோல உலகெல்லாம் வாழும்,ஏனைய விளையாட்டுக்களில் ஆர்வமும் திறமையும் கொண்ட தமிழீழ வீரர்களுக்கும் தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணி முன்னோடியாக இருக்கும்.

கலை,கலாச்சாரம்,விளையாட்டு போன்றவை ஒரு தேசத்தின் ஆத்மாவை வெளிப்படுத்தும்,வளப்படுத்தும் விடயங்கள் ஆகும் . அந்த வகையில் விளையாட்டின் மூலம் தமிழீழத்தின் ஆத்மாவை உலக அளவில் வெளிப்படுத்த கொனீபா மிகப்பெரிய இடத்தை தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணிக்கு வழங்கியிருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் உலகமெல்லாம் பரவி வாழும் எம் தமிழ் உறவுகள் உங்களால் முடிந்த பொருளாதார பலத்தினை வழங்கி ஊக்கப்படுத்துமாறு அன்புரிமையுடன் வேண்டுகிறோம் எமது அணியின் சீருடைகளை வாங்கவும் எமது அணிக்கு உங்கள் அன்பளிப்புகளை வழங்கவும் https://tamileelamfa.net/donate/ என்ற எமது இணையதளத்தினை பார்வையிடவும்.

ஊடகப்பிரிவு
தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.