Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"கலங்காதே மகனே"
 
 
கவலைப்படாதே / கலங்காதே நாம் அடிக்கடி கேட்கும் ஒரு ஆறுதல் வார்த்தை. எமது மனதை அறியக்கூடிய ஒரு கருவி இருக்குமாயின், எம் வாழ்வில் பலதடவை கட்டாயம் இந்த வார்த்தை எதிர் ஒலித்து இருக்கும். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மிக மகிழ்வாக இருந்த என் மகன் இன்று கவலையுடன் கணனியில் இருப்பதைக் கண்டேன். எனக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. எது எப்படியாகினும் அவன் அருகில் சென்று, முதுகில் தட்டி ஆறுதல் படுத்தி 'கலங்காதே மகனே' என அவனுக்கு ஒரு தெம்பு கொடுத்தேன். அது நாம் முதல் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்று!
 
இரு ஆண்டுக்கு முன்பு, அவன் உயிருக்கு உயிராய் காதலித்த அவனின் சக மாணவி, இறுதி ஆண்டில் மிக திறமையாக சித்தியடைந்தாள். அதுவரை அவளும் என் மகனையே விரும்பி, அன்னியோன்னியமாக நெருக்கமாக இருந்தவள், இப்ப அதே பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பதவி பெற்றதும், என் மகனில் இருந்து ஒரேயடியாக விலக தொடங்கினாள். மகன் சந்திக்கப் போனால், யாரோ தெரியாதவன் போல. கண்டும் காணாமல் விலகி விலகிப் போனாள். பிறகு தான் மகனுக்கு தெரிய வந்தது, அவள் ஒரு மூத்த விரிவுரையாளர் ஒருவரை இப்ப காதலிக்க தொடங்கி விட்டாள் என்று!
 
தாய் இல்லாமல் வளர்ந்தவன் என்பதால், நான் செல்லமாகவே அவனை வளர்த்து விட்டேன். அது தான் அவனால் எந்த சோகங்களையும் தாங்கும் வல்லமை குறைவாக காணப்பட்டது. அவன் அன்று வீட்டிற்கு வந்து கட்டிலின் ஒரு மூலையில் முடங்கி கிடந்துவிட்டான். காதலையே பணத்துக்கும் பதவிக்கும் மாற்றும் இப்படியானவளை கல்யாணம் கட்டி வாழ்வதை விட, அவளை மறந்து ஒரு புது வாழ்வை ஆரம்பிப்பதே நல்லது என்று ஆறுதல் கூறி, அவனை ஒரு பொழுதுபோக்காக, நடந்தவற்றை மறக்கவும் வெளியே கூட்டிச் சென்றேன்.
 
நான் பொதுவாக சமயத்திலோ ஆண்டவனிலோ நம்பிக்கை இல்லை. ஆனால் என் மனைவி அதற்கு எதிர் மாறு. அவள் எதாவது துக்கம் அல்லது மகிழ்வு நடந்தால், நயினாதீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் போய் வழிபடுவது வழமை. அவள் எப்பவும் தன் மகனையும் அங்கு கூட்டிப் போவார். ஆகவே மகனுக்கும் அந்தப் பழக்கம், தாயின் மேல் உள்ள அதி உயர் மதிப்பினால் தானாகவே வந்துவிட்டது. நான் அதை தடுக்கவில்லை. அவன் இப்ப தான் அங்கேதான் தான் போகவேண்டும் என்று கூறினான். நானும் சம்மதித்து அங்கு சென்றோம்.
 
அப்படி அன்று போகும் பொழுதுதான் தனது இன்றைய நண்பியை ஒரு ஆண்டுக்கு முன் சந்தித்தான். அவள் பாலர் பாடசாலை இளம் ஆசிரியை. உயர் வகுப்பு வரையும் தான் படித்து இருந்தாலும், மிகவும் பண்பாக மரியாதையாக காணப்பட்டாள். அவள் அந்த ஊரையே சேர்ந்தவளும், அந்த ஆலயத்துக்கு அண்மையில் வாழ்பவளும் ஆவாள். அவளின் தந்தை ஒரு போலீஸ் உத்தியோகத்தர் என்றாலும், ஒரு விபத்தில் அவர் இறந்துவிட்டார் என்று அறிந்தோம். அவள் தாய் சகோதரர்களுடன் வாழ்ந்து வந்தாள். அவளின் பெயர் கூட நாகபூசணி அம்மனின் பெயரையே பிரதிபலித்தது. அன்று தற்செயலாக ஆலயத்தில் சந்தித்த இருவரும், நாம் கொழும்பு திரும்பிய பிற்பாடு முகநூலிலும் தொலை பேசியிலும் தமது நட்பை வளர்த்தார்கள். எனக்கு மகன் மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதாலும், அவளை நேரடியாக பார்த்தத்தாலும் அவர்களின் நட்பிற்கு நான் எந்த இடையூறும் கொடுக்கவில்லை.
 
ஆனால் அவன் மீண்டும் சோர்ந்து இருப்பது எனக்கு புதிராக இருந்தது. திறந்து இருந்த கணணியை பார்த்தேன், அது அவளின் முகநூல் பக்கம் தான். அவன் மீண்டும் மீண்டும் ஹாய் / ஹலோ என அவளுக்கு அழைப்பு விட்டிருப்பது அதில் பதியப் பட்டிருந்தது. ஆனால் எந்த மறுமொழியையும் காணவில்லை. மகனிடம் இனி இல்லை என்ற அளவுக்கு நண்பியாக தினம் கதைத்துக் கொண்டு இருந்தவள், ஒரு ஆண்டு முடிந்து சில மாதங்களிலேயே மாறி விட்டாள் என்பது புரியாத புதிராக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குள் மகனின் வாழ்வில் இரண்டாவது தோல்வி. அதுவும் இது ஆண்டவன் சன்னதியில் ஏற்பட்ட காதல்! அவள் இப்ப மகனை தவிர்ப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஏன் ? எதற்கு என மகன் அறிய விரும்பினாலும் நான் ஆராய விரும்பவில்லை.
 
புவனமுழுதாடுகின்ற புவனேஸ்வரி.. புறமிருந்தோர் புறமிருக்கும் பரமேஸ்வரி.. நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி.. ஆமாம் புதுமை புதுமையாய் உருவெடுக்கும் அவள், இன்று என்ன உருவத்தில் எங்கே, யாருடன் ... அது எமக்கு அப்பாற்பட்டது!
 
நான் மகனைப் பார்த்தேன். அவன் அந்த முகநூலை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் நான் பின்னால் நிற்பதை கவனிக்கவில்லை. நான் அவனின் முதுகில் தட்டி ஆறுதல் படுத்தும் பொழுது தான் அவனுக்கு உணர்வே வந்தது. அவனின் கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தது. அது என்னை பார்த்ததும் ஆறாக பெருகியது. அவன் என்னை பார்த்து, 'இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?, ஏன் இப்படி செய்கிறாள்? என் நட்பு , காதல் தேவை இல்லை என்றால், வெளிப்படையாக கூறலாம் தானே? நான் அவளின் புது நட்பு யார் என்று கேட்கப்போவதில்லை ?, உண்மையை கூறி ஒதுங்கலாம் தானே?' என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டான்.
 
எனக்கு என்ன சொல்வது என்று புரியவே இல்லை. இன்று இவை எல்லாம் சகயமாக வந்துவிட்டது. நான் அவனுடன் கதைத்ததில், இதற்கு என்ன செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை என்பதை அறிந்தேன். நான் அவனை பார்த்தேன், இதற்கு தீர்வு உன்னிடமே என்றேன். அவன் உடனே என்னைப் பார்த்து, என்னிடமே விடை இருக்கு என்றால், நான் ஏன் கவலைப் படுகிறேன் என்றான்!
 
'மகனே எல்லாவற்றுக்கும் மறுமொழியோ அல்லது தீர்வோ காணமுடியாது. சிலவேளை அதை கைகழுவி விடுவதே தீர்வாக இருக்கும். உன்னால் இனி ஒன்றும் செய்யமுடியாது என் நீ நம்பும் பொழுது அல்லது எண்ணும் பொழுது, எப்படி நீ மட்டும் தீர்வு காண கவலைப்பட முடியும், கொஞ்சம் சிந்தி , கலங்காதே மகனே!' நான் மகனிடம் உருக்கமாக கேட்டேன்.
 
மகன் கொஞ்ச நேரம் என் முகத்தையும், தாயின் படத்தையும் உற்றுப் பார்த்தான், பின் அவளின் முகநூலை எடுத்து தன் நட்பை அதில் இருந்து அகற்றினான். இனிமேல் தனக்கு ஒரு காதலும் வேண்டாம், பெண் நட்பும் வேண்டாம். நீங்கள் பார்த்து தெரிந்து எடுக்கும் பெண்ணே உங்கள் மருமகள் ஆகட்டும்! என்று கூறிவிட்டு தன் படுக்கைக்கு சென்றுவிட்டான்!
 
ஒன்றை கவனத்தில் வையுங்கள், நீங்கள் எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி இருந்தீர்கள் என்றால், ' இதற்க்கு என்னால் தீர்வு காண முடியுமா ?' உங்களை நீங்களே கேளுங்கள், இல்லை என்றால், அதை உங்கள் மனதில் இருந்து அகற்றி விடுங்கள். அது உங்களுக்கு நிம்மதி கொடுக்கும்!
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
326528495_709252520858232_6003204535240609168_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=55EdW-sDJWYQ7kNvgEehAJb&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCL4lTKoMCiSxviZOfdJJR8OScehuhaouKLSKj61kR2Mg&oe=667C70F2 326226100_1249216009276347_8458117013040270592_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=B70ZvvMhUwIQ7kNvgHWhg-9&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYBKXJJYJzmQ5bNVzVrCctKsGbDwzVwhatgrob2oGL9dFg&oe=667C7CF3
 
326474498_3842723662620746_2498150883262959879_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=57IlZJAsS4MQ7kNvgFlgf56&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBKgWLT0dsSUiRLs9toqLjieidKg6AZ9fFHQAI0m6Iemg&oe=667C9995 
 
 
 

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி எல்லோருக்கும் 
 

அருமயானதொரு கருப்பொருள். நாம் இழந்ததை அல்லது தோல்வியை இழப்பை நினைத்து வருந்துகிறோம். அதைக் கடந்து வர வேண்டும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.