Jump to content

ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை - உக்ரைனில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

26 JUN, 2024 | 01:09 PM
image
 

உக்ரைனில் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்காக ரஸ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்போதைய  இராணுவ பிரதானிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பின் போது உக்ரைனின் சிவில் உட்கட்டமைப்பு மற்றும் மின்நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்காகவே ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி சொய்குவும்  மற்றும் பாதுகாப்பு பிரதானி வலெரி ஜெராசிமோவும் பொதுமக்கள் இலக்குகளை தாக்கியமை, பொதுமக்களிற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியமை, சேதப்படுத்தியமை மூலம் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என ஐசிசி தெரிவித்துள்ளது.

அவர்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் எனவும் சர்வதேச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

ஹேக் நீதிமன்றம் அவர்களிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ள போதிலும் அவர்கள் ரஸ்யாவில் இருப்பதால் கைதுசெய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன. ரஸ்யா ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை என  கார்டியன் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/186999

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

உக்ரைனில் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்காக ரஸ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்போதைய  இராணுவ பிரதானிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

அப்படியாகின் இப்போது உக்ரேன் நடத்தும் ரஷ்ய நாட்டின் எல்லை மீறிய தாக்குதல்கள் எந்த வரையறைகளுக்குள் வரும்? 🤣

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.