Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
japan-sri-lanka-flag-300x200.jpg

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் தொடர்ந்தும் நீடித்துள்ளது.

அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 301 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நிதியை வழங்கும் உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி நேற்று முன்தினம் கைச்சாத்திட்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் பாரிய நன்கொடைகளை வழங்கி வருவதுடன், இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 45 மில்லியன் டொலருக்கும் அதிகம் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

கண்ணிவெடி பாதிப்பற்ற இலங்கையை உருவாக்குவதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேகி இதன்போது தெரிவித்ததாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் 215.605 மில்லியன் சதுரமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக்க குமார தெரிவித்துள்ளார்.

23.23 மில்லியன் சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/304789

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதநேய செயற்பாடுகளுக்கு ஜப்பான் ஆதரவு 

22 AUG, 2024 | 05:26 PM
image

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேயகி, Skavita Humanitarian Assistance and Relief (SHARP)இன் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமதி ரஞ்ஜன் பாலசூரிய மற்றும் Delvon Assistance for Social Harmony (DASH) அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி ஆகியோருடன் இணைந்து இன்று (22) கைச்சாத்திட்டார். 

இலங்கையின் வட மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை விரிவுபடுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் இந்த இரண்டு திட்டங்களுக்காக மொத்தம் 1,007,194 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூபா. 300 மில்லியன்) வழங்கியுள்ளது. 2002ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் ஒரு பிரதான நன்கொடையாளராக உள்ளதுடன், மொத்த உதவித் தொகை 46 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

22.08.2024_GGP-14.jpg

SHARP மற்றும் DASHஇன் இந்தத் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 6,304 பயனாளிகளுக்கு மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உதவிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தியானது இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக் கொள்கையின் முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாகும்.

22.08.2024_GGP-10.jpg

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் முன்னணி நன்கொடையாளராக ஜப்பான் அரசாங்கம் தனது பங்களிப்பை ஆற்றி வருவதாகவும், கண்ணிவெடி பாதிப்பு இல்லாத இலங்கையை அடைவதற்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் தூதுவர் MIZUKOSHI உறுதியாக வலியுறுத்தினார்.

22.08.2024_GGP-19.jpg

இந்த உதவித்தொகை வழங்குவது குறித்து  SHARPஇன் பணிப்பாளர் சுமதி ரஞ்ஜன் பாலசூரிய கருத்து தெரிவிக்கையில்,

2016ஆம் ஆண்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து இன்று வரை SHARP மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக ஜப்பானிய தூதரகத்துக்கு SHARP மிகவும் நன்றியுள்ளதாகவும் ஆழ்ந்த பாராட்டுதலுடனும் உள்ளது.

2024 ஜூலை நிலவரப்படி, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவிகளினூடாக, SHARP மொத்தம் 2,846,650m 2 நிலங்களை கண்ணிவெடி அகற்றி விடுவித்து மற்றும் 11,889 நபர்களை தாக்கும் கண்ணிவெடிகள், 169 தாங்கி தகர்ப்பு கண்ணிவெடிகள், 4,666 வெடிக்காத வெடிபொருட்கள் மற்றும் 57,773க்கும் மேற்பட்ட சிறிய ஆயுத வெடிமருந்துகளை மீட்டுள்ளது.

இதில் 3,318க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்துள்ளன.

SHARP நிறுவனத்தால் துப்புரவு செய்யப்பட்ட மொத்த நிலங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை ஜப்பானின் உதவியாகும். கண்ணியத்துடன், வினைத்திறனான வகையில் ஜப்பானிய தூதரகத்தின் முழு ஆதரவுடன் தமது செயற்பாடுகளை SHARP முன்னெடுக்கும். வழங்கப்படும் நிதிக்கு முழுமையாக பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தி, எமது அனுசரணையாளர்களின் எதிர்பார்ப்புகளை  நிறைவேற்றும் வகையில் செயலாற்றுவோம்.

SHARPஇன் அங்கத்தவர்களின் மனமார்ந்த நன்றியை ஜப்பானிய மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

முக்கியமாக, நாட்டில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் ஜப்பானிய தூதரகத்தின் செயற்பாடுகளுக்கும், நாட்டு மக்களின் நலனில் அக்கறை காண்பிக்கின்றமைக்காகவும் நன்றி தெரிவிக்கின்றோம்” என்றார்.

இந்த நன்கொடையை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆனந்த சந்திரசிறி குறிப்பிடுகையில்,

7 தசாப்தங்களுக்கும் மேலாக ஜப்பான் இலங்கைக்கு அரிய உதவிகளை வழங்கிவந்துள்ளது. 

2002ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஜப்பான் பிரதான ஆதரவாளராக இருந்து வந்துள்ளதுடன், ஜப்பானின் நிதி உதவியுடன் எமது நிறுவனமான DASH 2010ஆம் ஆண்டில் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்தது.

ஜப்பானுக்கும் அதன் மக்களுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.

2024 ஆகஸ்ட் நிலவரப்படி, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவிகளினூடாக, DASH மொத்தம் 7,546,16m 2 நிலங்களை கண்ணிவெடி அகற்றிவிடுவித்து மற்றும் 55,907 நபர்களை தாக்கும் கண்ணிவெடிகள், 113 தாங்கி தகர்ப்பு கண்ணிவெடிகள், 14,073 வெடிக்காத வெடிபொருட்கள் மற்றும் 77,004க்கும் மேற்பட்ட சிறிய ஆயுத வெடிமருந்துகளை மீட்டுள்ளது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 110,842 பேர் பயனடைந்துள்ளனர்.

download__2_.jfif

1983ஆம் ஆண்டு முதல் இலங்கையின் 26 ஆண்டுகால நீண்டகால உள்நாட்டு மோதலின் விளைவாக அதிகம் அறியப்படாத ஒரு சோகம் வடக்கு பகுதிகளில் காணப்படும் கண்ணிவெடி மற்றும் போரின் வெடிக்கும் எச்சங்கள் (Explosive Remnants of War - ERW) ஆகும். அதன் பெரும்பகுதி தற்போது அகற்றப்பட்டிருந்தாலும், இலங்கையை கண்ணிவெடி மற்றும் ERW இல்லாத நாடாக மாற்ற இன்னும் சில ஆண்டுகள் ஆகும். 

ஜப்பான் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட DASHஇன் கருத்திட்டங்கள், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான பாதுகாப்புக்கும் நிலையான பொருளாதாரத்தை மீள ஸ்தாபிப்பதற்கும் அவர்களின் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் வலுவாக பங்களிப்பு செய்துள்ளது’’ என்றார்.

https://www.virakesari.lk/article/191725

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.