Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 03ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை நடத்தாதிருக்கவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

நாளை (02) விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த தீர்மானம் பற்றிய விவாதத்தை நடத்தாதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி அஞ்சலிக்காக நாளைமறுதினம் (03) பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவருவதற்கும், அன்றையதினம் பாராளுமன்ற அமர்வை முன்னெடுக்காதிருப்பதற்கும் இன்று (01) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஆளும்-எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சம்பந்தனின் பூதவுடல் நாளைமறுதினம் (03) பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக பாராளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

https://thinakkural.lk/article/304977

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இன்று சம்பந்தனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைப்பு

Published By: DIGITAL DESK 3   02 JUL, 2024 | 10:29 AM

image
 

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் 2 மணிக்கு சம்பந்தனிக் பூதவுடல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயக்கர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  மற்றும் உறுப்பினர்கள்  மரியாதை செலுத்தவுள்ளனர். அங்கு 4 மணிவரையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது.

449435122_10160121473881016_674202524762

https://www.virakesari.lk/article/187451

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார் எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Published By: DIGITAL DESK 3   02 JUL, 2024 | 01:23 PM

image
 

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02)  பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சம்பந்தனின் பூதவுடலுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/187479

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் இறுதிக்கிரியை 7 ஆம் திகதி திருமலையில் : பாராளுமன்றிலும் இன்று பலர் அஞ்சலி!

Published By: DIGITAL DESK 3   03 JUL, 2024 | 03:21 PM

image
 

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, சம்பந்தனின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை (02) காலை முதல் புதன்கிழமை (3) மதியம் வரை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 2.30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

f2aff5e1-1e69-49fb-aec3-c46cc8b77db4.jpg

அன்னாரது பூதவுடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல்வாதிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, சம்பந்தன் படித்த பாடசாலைகளில் ஒன்றான யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

24183f56-45a2-498d-acfd-e89ebc75872c.jpg

a8adcdda-5055-4fdb-be17-a766ceb0d5dd.jpg

இந்நிலையில், அன்னாரது பூதவுடல் 04 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. 

வெள்ளிக்கிழமை (5) முதல் ஞாயிற்றுக்கிழமை (7) வரை அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது பூதவுடல் தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/187594

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் பூதவுடலுக்கு யாழில் நாளை அஞ்சலி

Published By: VISHNU   03 JUL, 2024 | 08:20 PM

image
 

மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் 04ஆம் திகதி வியாழக்கிழமை யாழில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் காலை ஒன்பது மணி முதல் மாலை 4மணி வரையில் அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதற்காக அன்னாரது பூதவுடல் விமானம் மூலம் கொழும்பில் இருந்து கொண்டு வரப்படவுள்ளதோடு இன்று மலையில் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகளுக்காக மீண்டும் விமானம் ஊடாக கொண்டு செல்லப்படவுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைவராக அடையாளம் காட்டப்பட்ட அரசியல் பெருந்தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா.சம்பந்தனின் புகழுடலை கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் அவரது புகழுடன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் 04, 05ஆம் திகதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/187624

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கொண்டுசெல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி

Published By: DIGITAL DESK 3    04 JUL, 2024 | 01:02 PM

image
 

மறைந்த  இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று வியாழக்கிழமை (04) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல், யாழில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் இன்று வியாழக்கிழமை (04) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_8391.jpg

IMG_8383.jpg

IMG_8389.jpg

IMG_8376.jpg

IMG_8382.jpg

449477958_1008908597221516_3758025506891

449048862_1005741304557230_6583684248057

https://www.virakesari.lk/article/187649

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது

Published By: DIGITAL DESK 3   05 JUL, 2024 | 09:48 AM

image
 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) விமானம் மூலம் திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை (04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்து பூதவுடல் அங்கேயே வைக்கப்பட்டது.

தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்றைய தினம் காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளது.

IMG-20240705-WA0009.jpg

IMG-20240705-WA0016.jpg

IMG-20240705-WA0018.jpg

https://www.virakesari.lk/article/187719

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் இறுதிக்கிரியை தினத்தன்று கிழக்கில் வெள்ளைக்கொடி பறக்கவிட்டு துக்கதினமாக பிரகடனப்படுத்த மக்கள் முன்வரவேண்டும் : ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

Published By: DIGITAL DESK 3   06 JUL, 2024 | 11:33 AM

image

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சட்டத்தரணி இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதில் இலங்கையின் அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவரது இறுதிக்கிரியை நடைபெறும் நாளை ஞாயிற்றுக்கிழமை கிழக்கின் சகல பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த இலங்கையர்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் அறிக்கை யொன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, 

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையிலான உறவின் இணைப்பு பாலமாக விளங்கிய மூத்த அரசியல் ஆளுமை இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப் பிரச்சினையில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் உச்சபட்ச அரசியல்  தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக  தனது வாழ்நாள் பூராவும்  அயராது பாடுபட்ட அரசியல் ஆளுமையான சம்பந்தனுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்த இலங்கையர்களான நாம் கடமைப்பட்டுள்ளோம். 

அன்னாரின் பிரிவுத் துயரால் வருந்தும் குடும்பத்தினருக்கும் திருகோணமலை மக்களுக்கும் தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் அவரது மக்கள் பணியயையும், அரசியல் சேவைகளையும் கௌரவிக்கும் விதமாக நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக அவரது இறுதிக்கிரியை இடம்பெறும் நாளை ஞாயிற்றுக்கிழமை கிழக்கின் சகல பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த இலங்கையர்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/187814

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் இறுதி அஞ்சலியில் ஜனாதிபதி ரணில், பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை உட்பட்டோர் பங்கேற்பர்

07 JUL, 2024 | 10:55 AM
image

(ஆர்.ராம்)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த ராஜவரோதயம் சம்பந்தனுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (07)  இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 

திருகோணமலை தபால் கந்தோர் வீதியில் உள்ள அன்னாரது பூர்வீக இல்லத்தில் நண்பகல் 12 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து சமயக் கிரியைகள் நடைபெறவுள்ளதோடு பிற்பகல் 1.30 மணிக்கு அஞ்சலி உரைகள் இடம்பெறவுள்ளன. அஞ்சலி உரைகளைத் தொடர்ந்து பூதவுடல் தகனத்துக்காக பிற்பகல் 3 மணிக்கு இந்து மயானம் நோக்கி பேரணியாக கொண்டு செல்லப்படவுள்ளது. 

இதேவேளை,  அவருடைய இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதோடு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவுள்ளார். 

மேலும் தமிழக முதலமைச்சரின் சார்பில் பிரதிநிதியொருவரும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தென்னிலங்கையைச் சேர்ந்த ஏனைய அரசியல் தலைவர்களும் பங்கேற்கவுள்ள வடக்கு, கிழக்கு,   மலையகத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், மலையக பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். 

இதனைவிடவும், வடக்கு, கிழக்கில் இருந்து பெருமளவான பொதுமக்களும் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது. 

91 வயதாகும் இராஜவரோதயம் சம்பந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் குன்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/187874

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2024 at 12:24, ஏராளன் said:

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது.

large.IMG_6838.jpeg.cfe1491c1b0492c01c46

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6838.jpeg.cfe1491c1b0492c01c46

ஆம் ஆம் மறுபடியும் ஈழத்தில் பிறக்க வேண்டாம் என்று கடவுளிடம் பிரார்திக்கிறேன் வடகிழக்கு தமிழர்களுக்கு முதுகில் ஏற்றிய கத்திகளின் வலி இன்னும் போகவில்லை .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.