Jump to content

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
02 JUL, 2024 | 04:12 PM
image

சென்னை: “தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையானஇ உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றுஇந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று (ஜூலை 1) இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்திஇ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை2) கடிதம் எழுதியுள்ளார்.

stalin_main.jpg

அந்த கடிதத்தில் சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரா தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும் இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் ஜூலை 1 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

1974 ஆம் ஆண்டிலிருந்தே அப்போதைய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஜூன் 27 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ளதமிழக முதல்வர் திமுக தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும் தனது எதிர்ப்பை தமிழக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இது சம்பந்தமாக மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் இந்திய மீனவர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய அரசுதான் என்று தனது கடிதத்தில் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது தலைவரும் அப்போதைய திமுக தலைவருமான கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து அதில் “மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கும்போதுஇ கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதல்வர் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.

பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும் இந்தப் பிரச்சினையை தேர்தல் நேர முழக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர்  தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் என முதல்வர் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/187506

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதை சுடாலின் உறுதி செய்ய வேண்டும். அப்போது பிரச்சனை தானாகவே தீரும். 

😏

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியாயம், மேலே உள்ள செய்திகள் வீரகேசரி, உதயன் மற்றும் தினக்குரல் செய்தித் தளங்களிலிருந்து இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் குறிப்பிட்டதுபோல் தமிழ்வின் செய்தியை யாரும் நிரூபிக்கத் தேவையில்லை.  செய்தியின் பிரகாரம் இதற்குப் பொறுப்பான ஆறுதிருமுருகனும் அவர் சார்ந்த சிவபூமியுமே இங்கு கண்டனத்துக்கு உள்ளாகியதே தவிர சிறுவர் விடுதியின் அவசியம் பற்றியதல்ல. சிவபூமி பற்றிய விமர்சனங்களில் எதுவித மாற்றமுமில்லை. அது தவிர உங்கள் இரு கருத்துக்களிலும், நடைபெற்ற சம்பவத்தை - அது சட்டப்படி குற்றம் என்று தீர்க்கப்படாவிட்டாலும் கூட, இம்மியளவும் கண்டிக்கவில்லை என்பதையும் கவனியுங்கள். நன்றி.
    • இதைத்தானே கால காலமாய் சொல்கிரம் ஆனால் இங்கு என்ன நடக்குது என்றால் பெருமாள் சம்பந்தனை புகழ்ந்து எழுதினாலும் உடனே அதுக்கு எதிர்கருத்து போடுகிறேன் என்று கருத்தை படிக்காமல் எதிர்கருத்து போடுகிரம் எனும் போர்வையில் குப்பைகளை எழுதி கொட்டுவது வழமையானது . மற்றது இவ்வாளவு வயதாகியும் பதவியை வீட்டுகொடுக்காமல் இருந்தது அவர்களின் ஆதரவாளர்களின் உசுபேத்தல் சம்பந்தன் ஐயாவை விட்டால் திருகோனமலையில் வேறு யாரும் கிடையாது எனும் உசுப்பேத்தல் இனி யாருக்கு குத்துவார்கள் ? அதே போலத்தான் சுமத்திரன் விசுவாசிகளும் அவர் பிழை விடுகிறார் என்று தெரிந்தும் அவருக்கு ஆலவட்டம் பிடிப்பது . உண்மையில் எங்களின் உண்மையான அரசியல் பின்னடைவுக்கு முழுகாரணம் இந்த சம்பந்தன் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு விசுவாசாமான கூட்டம் தான் . இந்த திரியிலும் ஏன் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ஒருவர் கோதாவில் இறங்கியதுதான் பிரச்சனை தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருகிறேன் என்று சொல்லி தான் பாரளுமன்றம் செல்கிறார்கள் சென்றபின் வழமை போல் சிங்கள அரசுக்கு சேவகம் செய்கிறார்கள் இதை சுட்டிகாட்டினால் உடனே அவர்களின் அடிவருடிகளுக்கு கோபம் பொத்து கொண்டு வருகிறது அதற்க்கு பதிலாக தேசிய தலைவர் மேல் பாய்வதும் புலிகளை இல்லாத பொல்லாத செயல்களை செய்ததாக மீண்டும் மீண்டும் இதே யாழில் எழுதுவது . முதலில் புலிகள் இல்லா விட்டால் தீர்வு கிடைக்கும் சொன்னவர்களை தேடிபிடித்து நாலு கேள்வி கேட்க தெரியாத வக்கற்ற ஜடம்கள் புலிகளை பற்றி விமர்சிக்கினமாம். இல்லை உங்கள் அரசியல் தலைவர்கள் சொன்னபடி நடக்கவில்லை ஏன் கேளுங்கள் மற்றபடி இந்த திரி 1௦௦ பக்கம் தாண்டினாலும் யானை  யானை தான் முயலுக்கு மூன்று கால்தான்.  
    • புலம்பெயர் போராளிகளை சம்பந்தன் கணக்கெடுக்கவே இல்லை. அந்த கோவம் இருக்கும்தானே!
    • தமிழ்வின் செய்தி தளத்தில் இந்த செய்தி உள்ளது. ஆனால், இது துர்க்காபுரத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதியாக கூறப்படவில்லை. செய்தியை இணைத்தவர்கள் முடியுமானால் செய்தியின் உண்மை தன்மையை தெளிவுபடுத்தவும்.  இங்கு பொதுவான ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன்.  இலங்கையில் க.பொ.த சாதாரணம் கற்றுவிட்டு க.பொ.த உயர்தரம் கற்கச்செல்லும் மாணவர்கட்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன.  குறிப்பாக நன்றாக படிக்கக்கூடிய பல மாணவிகள் உயர்தரத்திற்கு இடம்/பாடசாலை மாறவேண்டி உள்ளது.  வீட்டு சூழ்நிலை இடம்கொடுக்காத நிலையில் (தங்கும் இடம் வாடகை, உணவு செலவு, ரியூசன் செலவு: ஒரு பாடம் கிட்டத்தட்ட மாதம் 1,250 ரூபா கட்டணம், போக்குவரத்து செலவு) இலவச விடுதிகளில் விலை குறைவான இடங்களில் சென்று தங்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.